மைதிலிக்கான கல்வி உதவிதொகை.(கல்வி ஆண்டு/2013-2014)


முதல் வருடம், இரண்டாம் வருடம் முடிந்து 
இதோ மூன்றாம் வருடத்தில்  தட்டு  தடுமாறி அடி எடுத்து வைத்து இருக்கின்றேன்...மைதிலியின் முன்றாம் வருடத்துக்கான கட்டண  தொகையை அறிவித்து இருக்கின்றது கல்லூரி நிர்வாகம்.

இன்னும்  சில நாட்கள் மட்டுமே நேரம் இருப்பதால் முடிந்தவர்கள்  விரைந்து உதவ கேட்டுக்கொள்கின்றேன்.

Respected sir,
                      i am Mythili doing BE 3rd yr. i am very sorry to inform you at the last minute.i hav attached my fees details for this year for your favourable consideration.my extra fees amout was increased to 30,500. my last date for paying fees is july 29th.so,please arrange me the  fees as soon as possible.
 .i am very sory for inconvienience.please grand me dis time sir.


my last year fees
  government fees=   14,500
 extra fees           =   24,500
  total                =    39,000
 
my present year fees
 government fees=    14,500
 extra fees          =   30,500
  total                =    45,000


 with regards,
mythili.

==============================
போன வருடத்துக்கு இந்த வருடத்துக்கும்  கட்டணத்தை  6000 ரூபாய்க்கு ஏற்றி இருக்கின்றார்கள்.  கல்லூரி நிர்வாகத்தினர்.

மொத்தம் 45,000ரூபாய்  இந்த வருடத்துக்கு கட்ட வேண்டும்...

=================
போன வருடம் பீஸ்  கட்டியது போக   மீதம்  உள்ள தொகை...
8642+3500=     12,142 ரூபாய்...

போனவருடத்துக்கான கல்வி செலவு  மற்றும் உடைக்கான செலவு மொத்தம் 8,500 ரூபாய். மீதம் 3,642 ரூபாய் இருக்கின்றது....

ஆகவே நண்பர்கள் உதவி   விரைந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்... எனக்கு  ஒரு வாரத்துக்கு முன் சொல் என்று சொன்னேன்... அவள் மெயில் அனுப்பி   விட்டாள்.. சில வேலை காரணமாக உடனே பதிவிட முடியவில்லை...

==============
போனவருடத்தில் உதவிய நண்பர்கள்.. மற்றும் பண விபரம்...

Amount received for mythili’s education…Mr.Dinesh Babu (UAE)
20000.00
Mr.X(does not want to reveal his name (UAE)
7642.00
Mr.Krishna (Singapore)
20000.00


============
Total
47642.00


=============
Given to Mythili


College Donation Fees
24500


Fees  regular
14500
paid amount
===========================
39000


==========
Balance
8642.00


===============================
Amount received for Mythili's Dress

Mr.Bhaskar (Bangalore)
1000.00


Mr.Mohan (Baroda)
500.00


Mr.Krishna(signapore)
2000.00
==================


3500.00


==============

போன உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி  நண்பர்களே..............

இந்த வருடமும் அப்படியான உதவியை உங்களிடத்தில் எதிர்பார்த்து  காத்து இருக்கின்றேன்...

பணம் கொடுக்கின்றேன்.. அவள்  நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்.... நன்றாக படிக்க  வேண்டும்....80 விழுக்காடுக்கு  மேல்   கண்டிப்பாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று உத்தரவு போடாமல் ,  அவள் ஏழ்மையில்  அவளால் என்ன படிக்க முடியுமோ? அது படித்தால் போதும் என்றும் என் மேல் உள்ள நம்பிக்கையில் பணம் அனுப்பிய நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..

ஏழ்மை சூழலில் பணம் என்பது ஒரு பெரிய மன உளைச்சல் செய்யும் காரியம் என்பதை நான் அறிவேன்..  அந்த பெரிய பிரச்சனையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊர் கூடி தேர் இழுத்த கதையாக  அந்த பிரச்சனையை களைந்து விட்ட காரணத்தால்.. அவள் போன வருடத்தல்  எடுத்த மதிப்பெண்   மொத்த விழுக்காடு 84 சதவீதம்...

நான்.... உதவுகின்றேன் என்ற கர்வத்தோடு எல்லாம்  பேசி  அட்வைஸ் செய்யவில்லை.

தோ பாரும்மா... இங்க உதவினவாங்க யாருக்கும்  உன்னை நேரில் சந்திச்சது இல்லை... எல்லோரும்  என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையில்  பணத்தை அனுப்பி இருக்கின்றார்கள்...  அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க முடிந்தவரை  நீ நன்றாக படிக்க வேண்டும் என்றேன்...கண்டிப்பாக நம்பிக்கையை காப்பாற்றுவேன் சார் என்றாள் மைதிலி...

அதன் பின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டு ,அவளிடம் இருந்து போன் எனக்கு வந்தது. சார் இந்த வருடம் ரிசல்ட் வந்துடுச்சி...84 பர்சென்ட் எடுத்து இருக்கேன் என்றார்.... இது போதும்...


நம்மை போல விசாலமான வீட்டில் வசிக்க வில்லை... ஏசி அறையில் துயில் கொள்ளவில்லை... பத்துக்கு பத்து ஆஸ்பெட்டாஸ்  ஷீட்  போட்ட வீட்டில்  வசிக்கும் மைதிலி....  போன வருடத்தில் 60 விழுக்காடு மதிப்பெண் எடுத்து இருந்தாலும் எனக்கு சந்தோஷமே....

 மைதிலிக்கு உதவி செய்ய ஆரம்பித்ததில்   இருந்து நான் சந்திக்க ஆரம்பித்த பிரச்சனைகள் நிறைய... எதிர்பாராத முட்டுக்கடைகள்,ஏமாற்றங்கள்,  என நிறைய சந்தித்து வருகின்றேன்... இது போன்ற  பிரச்சனைகளை எதிர்கொள்வது இன்று நேற்று நான் சந்திப்பது  அல்ல..என் சிறுவயது முதலே இப்படித்தான்....எனக்கு மிக பழக்கமான ஒன்றுதான்...இது எனக்கு தேவையில்லாத ஒன்று  என்று என்னால் விட்டு விலகிவிட முடியாது...இப்படியான பிரச்சனைகளை சந்தித்துதான் ஒரு பிற்படுத்தப்பட்ட பெண் வாழ்வில் கல்வி முன்னேற்றம் காண  முடியும் என்றால்....நான் எதையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன்.============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

13 comments:

 1. good jackie.great job.ullam ulla idathil pallam illamal malayaka ulleerrkal.valthukkal.uthavi seivatharkku panam athigam vendam.manam ondru irundhale pothum allava?
  ?

  ReplyDelete
 2. Dear Jackie,

  I can send some amount after 30 Jul 13 only. Though it is not on time i believe that would be helpful for her in any other ways.
  Kindly provide the bank details to send the amount.

  Regards
  Vetriselvan

  ReplyDelete
 3. அன்புள்ள ஜாக்கி
  நல்ல முயற்சி. இனிதாக அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete
 4. அன்புள்ள ஜாக்கி
  நல்ல முயற்சி. இனிதாக அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete
 5. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. Dear Brother,

  How are you doing? Been quite some time since I messaged you. Hope you anni and yazhini are in good health.
  Please confirm your bank account number again. I will try to find in my email as well.
  Will send you the money latest by monday.

  Krishna

  ReplyDelete
 7. Dear Brother,

  Hope you got my reply but I didnt see it in your comments page. however, I have arranged money to sent for mythili tuition fees.Please help to know the bank details as it been quite long since I spoke to you.

  Thanks
  Krishna

  ReplyDelete
 8. Dear Jackie

  pls send me the bank a/c details immd

  Senthil, Doha

  ReplyDelete
 9. Dear Jackie

  pls send me the bank details immd
  Senthil, Doha

  ReplyDelete
 10. ஜாக்கி சார், இந்த பிளாக் இப்ப தான் பார்த்தேன். எனக்கு ஒரு உதவி தேவை. செய்வீங்க என நினக்கற.( Living at Vellore district Tamilnadu)1)எங்கள் பள்ளியில் 11வது வகுப்பு படிக்க 10 வது மார்க் சீட் வாங்க ரூ5000/- கொடுத்து (10/-கந்துவட்டி வாங்கி) 29/7 இன்று தான் சேர்ந்தான். அவன் படித்த பள்ளியில் 418/500 எடுத்து முதல் மாணவன்.அவனுக்கு நாங்களே கஷ்ட்த்தை உணர்ந்து பணம் கட்டி சேர்த்தேன். ஆனால் சீருடை வாங்க பணமில்லை. உதவ முடியுமா?
  2) தாய், தந்தை இழந்து தவிக்கும் 11வ்து படிக்கும் மாணவிக்கு நானே முன்னின்று பள்ளியில் சேர்த்தேன். சுட்டி அவள். குடிசை வீட்டில் வயதான பாட்டியுட்ன் வறுமையால் கூலி வேலைக்கு செல்ல உள்ள அவள் 410/500 மார்க் எடுத்தாள். அம் மாணவிக்கு தாங்களால் புதிய துணிமனிகள் எடுத்து கொள்ள உதவ முடியுமா/
  மெயில்:abradvt07@gmail.com

  ReplyDelete
 11. Dear Jackie,
  Pls send the bank details.
  Srinivasan, chennai.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner