Me and You (Io e te)உலகசினிமா/ இத்தாலி/ நிலவறையில் அக்காவும் தம்பியும்.


மார்ச்  மாசம் 16 ஆம் தேதி...
1940 ஆம் வருஷம்  இத்தாலியில் பொறந்த  பெர்னார்டோ பெர்ட்டிலுசிக்கு இன்னைக்கு எல்லாம் பார்த்தா ,எழுப்பத்தி மூன்று வயசாகுது...

1962 இல் ஆரம்பித்த கலைப்பயணத்தில்  இதுவரை  24 படம் டைரக்ட் பண்ணி இருக்கார்… இப்பயும் முடியாத போதும், சக்கர நாற்க்காலியில் உட்கார்ந்து கொண்டு படத்தினை இயக்குகின்றார்.


 இங்கே கலைஞரை சக்கர நாற்க்காலியில் உட்கார்ந்து இருப்பதை நக்கல் விடுவதை போன்று யாரும்  இத்தாலியில் அவரை அங்கே நக்கல் விடுவதில்லை… 
டைரக்ட் பண்ணது போதும் வீட்டுக்கு போயா என்று  ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்வதில்லை. 

ஒரு கலைஞனை சும்மா இருய்யா என்பது போன்ற  கொடுமை உலகில்  எதுவும் இல்லை… அது மரணதண்டனையை விட கொடியது.. முகேஷ் விளம்பாரத்தில் வருவது போல, இது மிகவும் கொடியது எனலாம்...

80 வயதை தாண்டிய கலைஞரை  வீட்டுக்கு போய் ஓய்வெடுங்கள்…. திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதாதீர்கள் என்று மெத்த படித்தவர்களே அட்வைஸ் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்…


கைதட்டல்  மற்றும்  அங்கீகாரம்தான் கலைஞனை வாழவைக்கும் ஒரு கருவி…சமீபத்தில் இயக்குனர் வசந்தபாலன் ஒரு நிலைத்தகவலை பேஸ்புக்கில் பதிந்து இருந்தார்…

83 வயதில் client eastwood ..
oscar தரத்தில் படங்களை தருகிறார்.
Born: Clinton Eastwood is an American film actor, director, producer,
May 31, 1930 in San Francisco, California, USA

Academy Awards
Year Award Film Result
1992 Best Director Unforgiven Won
Best Picture Unforgiven Won
Best Actor Unforgiven Nominated
1994 Irving G. Thalberg Memorial Award Won
2003 Best Director Mystic River Nominated
Best Picture Mystic River Nominated
2004 Best Director Million Dollar Baby Won
Best Picture Million Dollar Baby Won
Best Actor Million Dollar Baby Nominated
2006 Best Director Letters from Iwo Jima Nominated
Best Picture Letters from Iwo Jima Nominated
////////////////////////////////////////////////////////////////

72 வயதில் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸி
முதிர்ச்சியான,மிக அருமையான,அதீத தொழில் நுட்பம் வாய்ந்த ,கதையம்சமுள்ள படத்தை தருகிறார்
Martin Scorsese,Born: Martin Scorsese,November 17, 1942 in Queens, New York City, New York, USA
best films
2013 The Wolf of Wall Street (post-production) 2011 Hugo
2010 Shutter Island 2006 The Departed 2004 The Aviator 2003 Michael Jackson: Number Ones (video) (video "Bad") 2002 Gangs of New York
1997 Kundun 1995 Casino 1995 Michael Jackson: Video Greatest Hits - HIStory (video documentary) video "Bad") 1993 The Age of Innocence
1991 Cape Fear 1990 Goodfellas 1988 The Last Temptation of Christ
1980 Raging Bull 1976 Taxi Driver 1973 Mean Streets

அதாவது  நல்ல விஷயங்களை செய்ய, திறம்பட ஒரு படைப்பை உருவாக்க....வயது ஒரு தடை அல்ல ,என்பதைதான் இயக்குனர் மேலே குறிப்பிட்டு இருக்கின்றார்.,..

83வயதாகின்றது... கிளின்ட ஈஸ்ட்வுட்டுக்கு இன்னும் சிறப்பான படைப்பை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்... அந்த வகையில் பெர்னேட்டோவும் இதில்  அடக்கம்.. 

தி லாஸ்ட் எம்பரர் படம் குறித்து நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த போது....  அப்படி  நினைத்து 4 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது..இன்னும் எழுதுகின்றேன்.. அதனால் எந்த எல்லையும் வைத்துக்கொள்லாமல் ,பார்த்த படத்தை உடனே எழுத   வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

போன வருடம் (2012)பெர்னாட்டோ இயக்கி வெளி வந்த மீ அன்டு யூ திரைப்படத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

=============

Me and You (Io e te)உலகசினிமா/ இத்தாலி படத்தின் ஒன்லைன்..


ஒரே அப்பா ஆனால் அம்மா  வேறு வேறானவர்களை கொண்ட அக்காவும் தம்பியும்  சந்தர்ப்பவசத்தால் யாருக்கும் தெரியாமல் ஒரே அறையில் தங்குகின்றார்கள்...அவர்கள் புரிதல் பற்றி  விவரித்தாலே இந்த படத்தின் ஒன்லைன்.

=============
Me and You (Io e te)உலகசினிமா/ இத்தாலி படத்தின் கதை என்ன?

லோரன்சோ தனிமையில் இருக்கும் 14 வயசு டீன் ஏஜ் பையன்....கிறுக்குதனமாய் குசும்புதனமாய் ஏதாவது செய்வதில் வல்லவன். 

அவன்  பள்ளியில் ஒரு வாரத்துக்கு பனிசறுக்கு சுற்றுலா அழைத்து செல்லுகின்றார்கள்...ஆனால் இந்த பய.... ஒரு வாரத்துக்கு ஜங் புட் வாங்கி கிட்டு, டூர் போகாம  அவன்  வீட்டுக்கு கீழ இருக்கற பேஸ்மென்ட் அறையில் யாருக்கும் தெரியாம போய் தங்கிடறான்...

ஒரு வாரம் தின்னறது பேலறதுன்னு கதையை ஓட்டிடலாம்ன்னு நினைக்கும் போது  ,அவனோட அப்பாவுக்கு முதல் சம்சாரத்துக்கு பிறந்த 25 வயசு  ஒவியா அதாவது முறைப்படி அவனுடைய அக்கா  ...அந்த அறைக்கு வரா.. 

அது கஞ்சா ஹெராயின் அடிச்சிக்கிட்டு மனம் போன  வாழ்க்கை வாழும் ஒரு பெண்.... ஒரு வாரத்துல இந்த நகரத்தை விட்டு அவ காதலன் கூட போகப்போறா...அதுவரை தங்கி கொள்ள அந்த பேஸ்மன்ட் அறையில் தங்க முடிவெடுக்கின்றாள்... இந்த பயலுக்கு  நான் தங்க விடமாட்டேன்,.. என் சுதந்திரம் பறிபோவுதுன்னு கத்தறான்...


பட் என்ன தங்கவிடலைன்னா ஊரைக்கூட்டி விடுவேன் சொல்ல சம்மிதிக்கறான்..ஒரு வாரம்  இரண்டு பேரும் ஓரே அறையில் இருக்கின்றார்கள்... பெரியவர்கள் யாருக்கும் தெரிந்ததா? அவர்கள் ரிலேஷன் ஷிப்  என்னவாயிற்று? வெண்திரையில் பாருங்கள்.

=====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

பொதுவாய் பெர்னாட்டோ ஒரு தடலடியான ஆளு....   காட்சிகளை எடுக்க எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்..  அதே போல செக்ஸ் காட்சிகள் அவரை போல எடுத்து  தள்ளியவர்கள் யாரும் இல்லை என்பேன்.. டக்குன்னு மூன்று டைரக்டர் பேரை சொல்லி இவுங்களை போல எடுக்க முடியுமான்னு வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வராதிங்க... ஒரு பேச்சுக்கு  சொன்னேன். போதுமா..?

பெர்னாட்டோ மேல இருக்கற பிம்பத்தை வச்சிக்கிட்டு  இந்த படத்தை பார்க்கபோனா ஏமாந்து  போவிங்க.... காரணம் நான்தான் சொன்னேனே அந்த ஆளு ஒரு தாடாலடியான ஆளுன்னு...

எந்த கலைஞனுக்கு பார்வையாளன் ஊகிப்பதை எடுக்க அவன் எதுக்கு? அதே போல என்னை ஜட்ஜ் பண்ண நீயார் என்று எல்லா படைப்பாளிக்கும் ஒரு  கோவம் இருக்கும்.... அதைதான் இந்த படத்தில் பெர்னாட்டோ செஞ்சி  இருக்கார்..

 இத்தாலியின் பிரபைலமாக நாவலின் திரைவடிவம் இந்த திரைப்படம்.

லோரன்சோவுக்கும் அவனுடைய பாட்டிக்கும் மருத்துவமைனையில் நடக்கும் கான்வர்சேஷன் அசத்தல்...

இரண்டே பிரதான கேரக்டர்கள்... ஒரு அறை.... ஒரு மணி நேரம் 40 நிமிடம் சுவரஸ்யமாகத்தான் இருக்கின்றது.

தன்  அப்பா அம்மா நல்லவங்கன்னு லோரோ நினைக்கும் போது ஓவியா தன் அம்மாவுக்கு செஞ்ச கொடுமைகளை சொல்லும் காட்சியில் யாரும் இந்த உலகில் புனிதம் இல்லை என்ற வரி நியாபகத்துக்கு வந்து தொலைகின்றது.

ஒரு பாடலை பாடிக்கொண்டு சரக்கு  அடித்து விட்டு ஆடும் பாடலில் எத்தனை வலி??


முதலில் அவள் அக்கா உடலின் மீது ஈர்ப்பு மட்டுமே இருக்கின்றது..  அவனுக்கு காமம் இல்லை .... எப்படி சொல்கின்றேன் என்றால் படத்தை பார்த்து புரிந்துகொள்ளுங்கள்..

ஒரு வாரத்தில் இரண்டு பேருக்கும் ஏற்ப்பட்ட புரிதல்... இரண்டு பேருமே செய்து கொண்ட சந்தியங்கள்.. அவர்களின் பிரிதலின் போது அந்த சத்தியம் ஜெயிப்பதாக கவித்துவமாக முடித்து இருக்கின்றார்.. இத்தாலி யின் தவிர்க்க முடியாத இயக்குனர் Bernardo Bertolucci

===========
படத்தின் டிரைலர்.



===============
படக்குழுவினர் விபரம்.

Directed by Bernardo Bertolucci
Produced by Mario Gianani
Lorenzo Mieli
Written by Niccolò Ammaniti
Bernardo Bertolucci
Starring Tea Falco
Cinematography Fabio Cianchetti
Release date(s)
22 May 2012 (Cannes)
26 October 2012 (Italy)
Running time 103 minutes
Country Italy
Language Italian

==============
பைனல்கிக்.


இந்த படம் பார்க்கவேண்டிய படம்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படம் பார்த்தால் நன்றாகவே இருக்கின்றது...
================
படத்தோட ரேட்டிங்.


பத்துக்கு ஐந்து.


================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

2 comments:

  1. //இங்கே கலைஞரை சக்கர நாற்க்காலியில் உட்கார்ந்து இருப்பதை நக்கல் விடுவதை போன்று யாரும் இத்தாலியில் அவரை அங்கே நக்கல் விடுவதில்லை… டைரக்ட் பண்ணது போதும் வீட்டுக்கு போயா என்று ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்வதில்லை. //

    // 83 வயதில் client eastwood .. oscar தரத்தில் படங்களை தருகிறார்.//

    கலைஞருக்கு ஏன் அப்படி அட்வைஸ் பன்றாங்கன்றதுக்கு உங்க Clint Eastwood பற்றிய வரி தான் பதில் ஜாக்கி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner