இரண்டே செகன்ட் ,ஒன்னே முக்கா லட்சம். சென்னையில் ஈசியாக சம்பாதிக்கலாம்.


உங்களுக்கு வயது 22 , கல்லுக்குதிரை போல உடம்பை வைத்து இருக்கின்றீர்கள்..
திடகாத்திரமாக  இருக்கின்றீர்கள்... உங்களால் இரண்டு செகன்ட்டில்  ஒன்னே முக்கா லட்சம் சம்பாதிக்க முடியுமா? முடியும்... என்று தினமும்  சென்னையில் இருக்கும் ஒரு சில இளைஞர்கள் நிரூபிக்கின்றார்கள்... 

சென்னையில் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று நடந்து கொண்டு இருந்த விஷயம் இப்போது  சென்னையில்  அனுதினமும் எல்லா தெருக்களிலும் மிக மிக சர்வசாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டது.


நேற்று   நான் குடும்பத்தோடு பைக்கில் வேளச்சேரியில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன்... கிண்டி மேம்பாலம்... தில்லை கங்கா நகர் சப்வே போய் அதே ரோட்டில் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனை நோக்கி வண்டி விரைந்து கொண்டு இருந்தது...


வேளச்சேரி ஸ்டேஷனுக்கு கால் கிலோ மீட்டருக்கு முன்னால்...  இரவு ஆறே முக்கா  மணிக்கு, அதாவது புதிய ரயில்வே  பாலம் மேலே எழத் தொடங்கும் இடம்...இரண்டு பெண்கள் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்... 

ஒருவர் திடிர் என்று ஊமை போல ஓஷ்ஷ்ஷ ஊஷ் என்று  கத்தினார்... முதலில் இரண்டு பெண்களில் ஒருவர் சண்டை போட்டு விட்டார்... அவர் ஊமை போலும் அதனால்  அப்படி கத்துகின்றார் என்றுதான் நான்  நினைத்தேன்.. அந்த இடத்தில் ஸ்டிரீட் லைட் வேறு இல்லை.  இரண்டு பேரும் 40வயதை கடந்த பெண்கள் ... இருவரும் மாமிகள்...வாங்கிங் வந்து இருக்கின்றார்கள்.... ஒரு பெண்மணி மட்டும்தான் கத்தினார்.. மற்றவர்  நெட்டையாக இருந்தார் கத்த யோசித்தார்....



“என் செயினை புடுங்கிகிட்டு ஓடுறான் செத்த புடிங்க என்று கத்தினார்.... ”

திரும்பினால் ....


ஒரு வண்டி  பதட்டமில்லாமல் சென்று  திடும்மென்று வேகம் எடுக்கின்றது.. அவன்  போலிஸ் கட்டிங் அடித்து இருந்தான்.. வாகனம்  என்ன ரகம்  என்று சன்ன வெளிச்சத்தில் அறிய முடியவில்லை .... 

நான் உடனே சூழ்நிலை அறிந்து வாகனத்தை திருப்பி யாழினி என் மனைவியோடு  அவனை துரத்தினேன்...  அவன் புயலாய் பறந்தான்...சன்ஷைன் பள்ளி  அருகே லெப்ட் எடுத்தான்...ஒரு லாரி குறுக்கே போனது... திரும்ப யூ டேர்ன் அடித்து  பள்ளிக்கரனை பக்கம் போனானா? அல்லது புழுதி வாக்கம் பக்கம் நுழைந்தானா? அல்லது ஆதம்பாக்கம் பக்கம் நுழைந்தானா? என்று  புரியவில்லை...  கடலில் பெருங்காயம் கரைத்து விட்டு தேடுவது போல இந்த சென்னையின் வாகன ஜனத்திரளில்  தேடுவது இயலாத காரியம்இரண்டு கிலோமீட்டர் அலைந்து விட்டு எ திரும்பினேன்


யாழினி , மனைவியை வைத்துக்கொண்டு  டூவீலரில் ஒரு திருட்டு பயலை சேஸ் செய்வது எல்லாம் முடியாத காரியம்.. நான் என்ன ரஜினி,அஜித் , விஜயா?எங்கயாவது விழுந்து தொலைத்தால்...“ பச் ”என்று சொல்லி வருத்தப்பட கூட ஆட்கள் இந்த ஊரில் இல்லை...

  பொண்டாட்டி புள்ளையை வச்சிக்கிட்டு இப்படியா வண்டி ஓட்டறது... நல்லா வேணும் என்று வலியில் துடிக்கும் போது  டயலாக் பேசி விட்டு போவார்கள்.. திரும்ப  வண்டியை திருப்பிக்கொண்டு செயின் பறிகொடுத்த இடத்தை வந்து பார்த்தேன்...  அந்த இடத்தில் அந்த பெண்கள் இல்லை....


சரி அவனை  ஆட்டோ பிடித்து ஒரு வேளை பிடித்து விடலாம் என்று சென்று இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு... நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டேன்....ஆனாலும் மனது கேட்கவில்லை.. நண்பருக்கு ஸ்டேஷன் அருகில்தான் வீடு.... ஒரு அரைமணி  நேரம் பேசிவிட்டு  நானும் நண்பரும் வாங்கிங் கிளம்பினோம்... செயின் பறிப்பை சொன்னேன்.. அந்த இடம் வரை போகலாம் என்று நடக்க ஆரம்பிக்க  ,எதிரில்  அந்த இரண்டு பெண்மணிகள்  வேர்த்து விறு விறுக்க நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்....


என்னங்க அவனை பிடிச்சிட்டிங்களா? என்றேன்.. 

நான் யார் என்று அவர்களுக்கு  தெரியவில்லை... நானதாங்க பைக்ல பேமலியோட போய் அவனை துரத்தினேன்.. திரும்ப வந்து உங்களை பார்த்தேன்... நீங்க இல்லை என்றேன்...

நாங்க ஒரு ஆட்டோ பிடிச்சி மன திருப்திக்கு போனேன் என்று  அவர்கள் சொன்னார்...

எங்க இருக்கிங்க??

விஜய் நகர்லங்க...

 எத்தனை பவுனுமா?

எழு பவுனுங்க...(இரண்டு செகன்ட்.. பவுன் விக்கற  விலையில ஒன்னேமுக்கா லட்சம். அவனுக்கு கிடைச்சிடுச்சி    என்று என்  மனது கணக்கு போட்டது..)

நெட்டை பெண்மணி பேசினார்....தினமும் இரண்டு பேரும் வாங்கிங் போவோம். 5 மணிக்கு போவாம்.. இன்னைக்கு இவுங்க லேட்... பொதுவா லேட் ஆனா இவங்க வரமாட்டங்க.. ஸ்கிப் பண்ணிடுவாங்க... பட் இன்னைக்கு வந்தாங்க...


 செயின்  பறி கொடுத்த பெண்மணி பேசினார்...“என்னங்க பண்ணறது.. உடம்புல சுகர்.. நடக்கலைன்னா ஏறி தொலைச்சி உயிரை வாங்குது...”

சரிங்க ஒரு போலிஸ் கம்ளெயின்ட் கொடுத்துடுங்க...

கொடுத்தா செயின் கிடைச்சிடுமா? சார்...

என்னைக்காவது அவனை லபக்கினா உங்க செயின் திரும்ப உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு என்றேன்...

   நெட்டை  பெண்மணி ஆர்வமானார்.. அது எப்படிங்க.. செயினை அறுக்க முடியும்?- கையில் எதாவது கத்தி எல்லாம் இருக்குமா-?

எங்க தங்க செயின் ஒன்னும் தாம்பு கயிறு இல்லை பிடிச்சி இழுந்தா அறுக்காமா இருக்க என்றேன்..

எப்படிங்க தங்கசெயினை அறுக்கமுடியும் என்று திரும்ப கேள்வி எழுப்பினார்.

டென்ஷன் ஆனேன்... 
யாராவது தங்க தாலி செயினை எடுத்து பலம் கொண்ட மட்டும் இழுத்து அறுத்து பார்த்து இருக்கிங்களா?- இல்லையில்லை அதான் இந்த கேள்வி கேட்கறிங்க.....தங்க செயின் கயிறு  இல்லை அறுக்காம முரண்டு பிடிக்க..
தங்க செயின் பொடி வைச்சி  பத்த வைக்கிறது ஓரே இழுப்பு இழுத்தா அறுத்துக்கிட்டு போயிடும் என்றேன்.

தாலி பறிகொடுத்த பெண்மணி அவநம்பிக்கையாக இருந்தார்.. அவர் போலிசில் புகார் கொடுக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்.

நெட்டை பெண்மணி பேசினார்... நீங்க உங்க பொண்டாட்டி புள்ளையை இறக்கி விட்டு விட்டு  அவனை பைக்ல துரத்தி இருந்தா அவனை புடிச்சி இருக்கலாம்...என்றார்.. 

செயின் பறிகொடுத்த பெண்மணி.... பதட்டத்தில் நாய் ஊளை இடுவது போல கத்திக்கொண்டு இருந்தார்... பக்கத்தில்  வந்த நெட்டை  பெண்மணி   திருடன் திருடன் பிடிக்க பிடிக்க  செயின் அறுத்து போறான்னு  அந்த நெட்டை பெண்மணி கத்தி இருந்தாலே  நானே அவனை பிடித்து இருக்க முடியும்... என்ன எதுன்னு விசாரிச்சி அவனை திரும்பி பார்த்து என் வண்டியை இரண்டு வண்டிகள் மேல் மோதாமல் இருக்க வழிவிட்டு, திரும்பிக்கொண்டு போவதற்குள் அவன் பறந்து விட்டான்...

இதில் கொடுமை  என்னவென்றால்.... திருடன் திருடன் ஹெல்ப், உதவின்னு எதையும்  அந்த நெட்ட பெண்மணி கத்தாமல், அந்த இருட்டலயும் டீசன்சி பார்த்துட்டு , அந்தம்மா என்னை சொல்லறாங்க..  சார்.. நீங்க உங்க பொண்டாட்டி புள்ளையையும் இறக்கி விட்டு அவனை  வண்டியை எடுத்துக்கிட்டு போய் இருந்தா அவனை பிடிச்சி இருக்கலாம் என்று  அந்த நெட்டை பெண்மணி சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது... அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள்...இரண்டு கிலோமீட்டர் துரத்திய என்னிடத்தில்  ஒரு நன்றியை கூட தெரிவிக்காமல் கிளம்பினார்கள்...

இவர்களுக்காக துரத்தி போய் விழுந்து வாரி இருந்தால்... நானா உங்களை துரத்திக்கிட்டு போவ சொன்னேன் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்...

சரி அதை விடுங்க...

80களில் கயிற்றில் குண்டுமணி எல்லாம்  கோத்து இருந்தாலும், பணக்காரர்கள் மட்டும்  செயினில் தாலியை கோர்த்துக்கொண்டார்கள்..90களில் பெண்கள் முக்கியமாக வேலைக்கு போகும் பெண்களிடம்  தாலியை தங்க  செயினில் மாட்டிக்கொள்ளும் பழக்கம் வந்து இப்போது எல்லோரும் அப்படி அணிவது பேஷனாகி விட்டது.

என்னதான் பீட் போட்டு போலிஸ்  கண்காணித்தாலும், தெருவுக்கு தெரு முக்குக்கு  எல்லாம் போலிசை நிறுத்த முடியாது... நாம்தான் விழிப்பாக இருக்கவேண்டும்...

 எல்லா பெண்களின் கழுத்திலும் கண்டிப்பாக இரண்டு பவுன்  செயினில் இருந்து வசதிக்கு ஏற்றது போல வெயிட் இருக்கும்.. பெண்பிள்ளை வெறும் கழுத்தோட போக கூடாதுன்னு நினைக்கறதான் நம்ம  வாழ்க்கை முறைதான்.

அதே போல  தாலி செயின் தடியா போட்டாதான் அதில் தாலி தவிற குண்டுமணி மற்ற அம்சங்கள் மாட்டி வெயிட்டை நல்லா தாங்கும் என்பதால் சென்னையில் வசிக்கும் நிறைய தென்மாவட்ட பெண்கள்  வெயிட்டான தாலி அணிகின்றார்கள்... அது இன்னும் திருடர்களுக்கு வசதியாக போய் விடுகின்றது...

 செயின் திருடர்களிடம் இருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய வழிகள்..

வயது பெண்கள் இருந்து கிழவிவரை கழுத்தில் கை வைத்தால் ஒரு பவுனாவது செயின் நிச்சயம் என்பதால் யார் கழுத்திலும் கை வைக்க  அவர்கள் யோசிக்க மாட்டார்கள்...அதனால் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று புரிந்துகொள்ளுங்கள்..ஒரு மாதத்திக்கு முன்  காலையில் வேலைக்கு போன  பெண்ணின் கழுத்தில்  செயின்  பறித்த கதையை எழுதி இருந்தேன்...

எனக்கு நடக்காது என்று இறுமாப்பு வேண்டாம்.


வாங்கிங் போகும் போது  சோனியா காந்தி போல கழுத்து தெரியாமல் போர்த்திக்கொண்டு நடந்து செல்லுங்கள்...

ஆள் நடமாட்டம் குறைவு என்றால் நிச்சயம் எச்சரிக்கை தேவை...

வயது  பெண்கள் சுடிதார் ஷாலை தனியாக நடக்கும் போது, கழுத்தை சுற்றிபோட்டுக்கொண்டு செல்லுங்கள். அல்லது பூலான் தேவி போல வண்டியில்  போகும் போது கட்டிக்கொண்டு போகின்றிர்களே அது போல கட்டிக்கொண்டு திருட வந்த திருடனையே பயமுறுத்துங்கள்.

செயின் வெயிட்டை போட்டு  உங்கள் மன உளைச்சலை அதிகபடுத்திக்கொள்ளாதீர்கள்...

இரண்டே செகன்ட் ,ஒன்னே முக்கா லட்சம்.  என்றால்  அடுத்து அவன் திருட கண்டிப்பாக அவன் மனம் கணக்கு போடும்.. அதனால் செயின் திருடர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்...

இப்படி அடிப்பது  அதிக அளவில் கல்லூரி மாணவர்கள்தான்.... இப்போது புற்றிசல் போல அதிக அளவில் களத்தில் இறங்கிவிட்டார்கள்.... இதில் கொடுமை பல பேர் போலிஸ் நிலையத்தில் போய் புகார் கொடுப்பதில்லை.....

ஒரு  செயின் அறுத்தால்  குறைந்த பட்சம் 50 ஆயிரம் கிடைக்கின்றது என்ற போது பசங்க ஈசியா இதை செய்யறாங்க....ஒரு மாசம் ஜாலியாக இருக்கலாம் என்று இருக்கும் போது இந்த செயலை அவர்கள்  எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்கின்றார்கள்... நாம்தான் விழிப்புனர்வுடன்  இருக்கவேண்டும்.

கற்றது தமிழ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் ஒரு பர்க்கருக்கு கூட  இந்த நகரத்தில் கொலை நடக்கும்.. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.





இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவனுக்கு சாமரம் வீச   இந்த சென்னை மாநகரம் மாறி வெகுநாள் ஆகி விட்டது...சாமரம் வீசும் காற்றில் தானும் உட்கார  அப்பாவி பெண்கள் கழுத்தில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் இன்றைய தலைமுறை.



============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 

நிரூபிப்பதே நீ....
EVER YOURS...

20 comments:

  1. இதை பத்தி எவ்வளவு சொன்னாலும் வீட்ல கேக்கமாற்றங்க, என்ன பண்றது ?

    ReplyDelete
  2. திருடர்கள் நகரமாகிவிட்ட சென்னையில் நடமாடும் நகை கடையாய் செல்வது தவறு என்று இவர்களுக்கு உரைக்கவில்லையே! திருந்த மாட்டார்கள்!

    ReplyDelete
  3. Anna...
    How are u...
    Here all are fine..

    Ingeyum intha mathiri nadakkuthunna... ana inga yarum periya chain use panna mattanganna (functionkku koda).. neenga solluramathiri oru pavun kidachalum pothumthane...

    ungaloda 2008 muthal ulla ellathyum time kidaikkum pothu one by one padichittu irukkirenna. Kadanthupona visayangal padikkumpothu interestingathan irukku..

    Anni, Pappa rendu perayum kettatha sollunganna..

    ReplyDelete
  4. யாரையாவது திட்டுவதற்கு "தாலியறுத்தான்" என்று சொல்வது தற்காலத்தில் உண்மையாகி வருகிறது.

    ReplyDelete
  5. Excellent Description. As you said Ladies must be aware of these type of incidents & reduce the gold ornaments while on the road

    ReplyDelete
  6. நகைகளைக் குறையுங்கள் என்றால் வீட்டில் பெண்கள் கேட்பதில்லையே...

    ReplyDelete
  7. \\இதை பத்தி எவ்வளவு சொன்னாலும் வீட்ல கேக்கமாற்றங்க, என்ன பண்றது ?//

    \\திருடர்கள் நகரமாகிவிட்ட சென்னையில் நடமாடும் நகை கடையாய் செல்வது தவறு என்று இவர்களுக்கு உரைக்கவில்லையே! திருந்த மாட்டார்கள்!//

    \\என்னதான் பீட் போட்டு போலிஸ் கண்காணித்தாலும், தெருவுக்கு தெரு முக்குக்கு எல்லாம் போலிசை நிறுத்த முடியாது... நாம்தான் விழிப்பாக இருக்கவேண்டும்...\\

    WELL SAID JAKI-G
    AND WE SHOULD NOT ANY RESPONSE AND THANKS FORM LOOSER.

    ReplyDelete
  8. நீங்க சொன்னது மாதிரி நாம ஜாக்கிரதையாக இருப்பதுதான் நல்லது போலீஸ் எல்லா இடத்திலும் பாதுகாப்பு கொடுப்பது முடியாது மேலும் நம்மிடையே சில கருப்பு ஆடுகளும் உள்ளன

    ReplyDelete
  9. I am proud of you for being a socially responsible citizen. Too bad that those ladies were not grateful for your effort.

    ReplyDelete
  10. இவர்களுக்காக துரத்தி போய் விழுந்து வாரி இருந்தால்... நானா உங்களை துரத்திக்கிட்டு போவ சொன்னேன் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்...//

    yes jackie its true.வெள்ளந்திய நீங்க அவங்களுக்கு உதவ போனீங்க. ஆனா அவுங்க.ச். சோகமா இருக்கு ஜாக்கி....நிலை கெட்ட இந்த மனிதர்களை நினைத்தால்

    ReplyDelete
  11. Last Para is true na.. Words are showing your experience...Also those ladies not showed their gratitude to you..

    ReplyDelete
  12. ஜாக்கி சார் இது ஒரு முக்கியமான பதிவு, நிகழ்காலத்தின் பதிவு.ஒரு கற்பழிப்பு நடந்தால் பெண்களை ஒழுங்காக உடை அணிய சொல்கிறோம், ஒரு நகை திருட்டு நடந்தால் நம் பெண்களை ஜாக்கிரதையாக இருக்க சொல்கிறோம், அது சரி துஷ்டனை கண்டால் தூர போக வேண்டுமாச்சே அது நமது கலாச்சாரமச்சே அதுவுமில்லாமல் ரோட்ல பீயொ , சாக்கடையோ, கண்ணாடியோ இருந்தா நம்ப தானே ஜாக்கிரதையா நடக்கணும். ஆனால் இன்னொரு பக்கம் நமது சமூகம் சாக்கடையாய் ஆகி கொண்டிருக்கிறது, எங்கிருந்து தொடங்குவது, எப்படி சரி செய்வது என்று தீவிரமாய் யோசிக்க வேண்டிய நேரம் இது. இது தானாகவே சரியாகலாம், அனால் அதற்க்கு இன்னும் பல காலமும் , பல பெண்களின் பாவமும் கூடும்.

    ReplyDelete
  13. சென்னைங்கறது ஒரு மாநிலத்தின் தலை நகரம். ஆனால் தில்லி நம் தேசத்துக்கே தலை நகரம். அங்கேயே இப்படி அடிக்கடி நடக்குது. பஸ்ஸில் போனால் நம்ம சட்டைப் பை காலி. தெருவிலே நடந்துபோனா பெண்களின் கழுத்திலிருக்கும் செயின் அம்பேல். இரவு நடு நிசியில் ஒருவன் தனியாக நடந்துபோனா, அவனிடம் இருவர் வந்து ஏதாவது இருக்கான்னு பார்ப்பான். இல்லைன்னா அந்த நடந்து வந்த ஆளின் உயிரே அவுட்டு. இப்படியெல்லாம், எப்பவாவது இல்லே, ஏறக்குறைய தினம்தினம் நடக்குது. அட இது என்னங்க, நம்ம நியூஸ்பேப்பரெல்லாம் இப்ப க்ரைம் பேஜ்ஜுன்னே தனியா போட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால, இப்ப இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமாயிட்டுது ஐயா.......முத்துஐயர்

    ReplyDelete
  14. neengal antha nettai pennai nanraaka thitti irukka vendum

    ReplyDelete
  15. they did not thank you. instead they have found fault with you. ungrateful creatures.

    ReplyDelete
  16. I thought they would have said it is fake gold chain:-)))

    ReplyDelete
  17. //இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவனுக்கு சாமரம் வீச இந்த சென்னை மாநகரம் மாறி வெகுநாள் ஆகி விட்டது...சாமரம் வீசும் காற்றில் தானும் உட்கார அப்பாவி பெண்கள் கழுத்தில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் இன்றைய தலைமுறை.//

    மிக அருமை அண்ணா..

    ReplyDelete
  18. Please see Oka 'Romantik Crime Katha' Telugu movie

    ReplyDelete
  19. நீங்கள் உதவியதற்கு நன்றி கூட சொல்லத் தெரியவில்லை என்ன மனிதர்கள்.

    எங்கள் நாட்டில் செயின்அறுப்பது தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் பலரும் வெற்றுக் கழுத்தே அழகு என செல்லுகின்றோம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner