Warriors of the Rainbow: Seediq Bale-2011 part-1&2 /உலகசினிமா/தைவான்/ த ரியல் மேன்.



என் வீடு

என் மனைவி

என் பிள்ளை

என் தாய் தகப்பன்

என் குடும்பம்

என் வீடு

எனது சுற்றம்

 எனது குடியிருப்பு

என் மண்

என் மக்கள்

என் தேசம்

 என் வாழ்வாதாரம்

இப்படி உங்கள்  அல்லது  நீங்கள் அதிகம் நேசிக்கும் பகுதியில் மாற்றன்  ஒருவன் வந்து உங்களை பின்னந்தலையில் அடித்து  உங்களை மற்றவர்கள் எதிரில் காயப்படுத்தினாலோ அல்லது  உங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கையில் இறங்கினாலோ, அல்லது உங்களை புறக்கணித்தாலோ? உங்கள் சுற்றத்தையும், குடும்பத்தையும் துன்புறுத்தினால்? அல்லது உங்கள் மக்களை நாயை விட கேவலமாக  நடத்தினாலோ உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

 ஓத்தா நானா அவன்களான்னு ஒரு கை  பார்த்திடலாம்டான்னு ஒரு கோபம் பொத்துக்கொண்டு வந்தால் நீங்களும் வீரனே...



எங்கெல்லாம் மக்களுக்கு எதிரான அடுக்கமுறை நடக்கின்றதோ ?அங்கெல்லாம் உங்கள் குரல் ஓங்கி ஒலித்தால் நீயும் என் தோழனே என்று சொன்னவர் புரட்சியாளர் சே...  

அது போல தன் நாட்டு மக்களுக்காக போராடிய தைவான்  மாவீரனின் கதைதான் Warriors of the Rainbow: Seediq Bale-2011 திரைப்படம்.... தைவானின்( epic story )  வீரகாவியம் .

தமிழர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்கையில்   தமிழீழ விடுதலைப் புலிகள்  தலைவர் பிரபாகரன் நினைவு  வந்து போகும் என்பதை மறுக்க முடியாது.. 

ஈழப்போரில் நடந்த துரோகங்கள்... கூடவே இருந்த துரோகி  கருணா விலகி  இலங்கை அரசுடன் கைகோர்க்க....இலங்கை அரசு  விடுதலைபுலிகளின் கையை  வைத்தே  அவர்கள்  கண்ணை குத்த வைத்த, அத்தனை சம்பவங்களும் , சகோதர யுத்தங்களும்,  இந்த படத்தில் உண்மை சம்பவங்களாக சித்தரிக்கின்றன.

1930 ஆம் ஆண்டு தைவானின் காட்டில் பூர்வ பழங்குடி மக்களுக்கு  ஜப்பானுக்கு எதிரான ஒரு  வாழ்வாதார யுத்த பேராட்டம் ஒன்று   நடந்து இருக்கின்றது என்பதும் .அதே பிரச்சனையை  அடுத்த நூற்றாண்டில் ஈழப்போரும் சந்தித்து இருக்கின்றது என்பதும் கொடுமைதான்...

===============
Warriors of the Rainbow: Seediq Bale-2011  படத்தின் ஒன்லைன்.


தைவானின் பூர்வபழங்குடி மக்களுக்கும், ஜப்பானுக்கும் நடக்கும் ஆயுத போராட்டம்தான் இந்த இரண்டு பாகங்களின் கதையும்.

=====================
 Warriors of the Rainbow: Seediq Bale-2011 படத்தின் கதை என்ன?


தைவானின்  பூர்வ பழங்குடி மக்கள் இயற்க்கையோடு இணைந்து வாழ்கின்றார்கள்... அவர்களுக்கு  Mona Rudao என்ற தலைவன் இருக்கின்றான்..  அவர்களுக்குள் சகோதர யுத்தமும் உண்டு.....அவ்களின் வீரத்துக்கும் தீரத்துக்கும்  ஈடு இணையில்லை....  சீனாவும் ஜப்பானும்  காலனி ஆதிக்கத்தை நிலை நாட்ட 1895 இல் பங்கு பிரிக்கும் போது ,  ஜப்பான் காலனிஆதிக்கதிற்கு கீழ்   மத்திய தைவான் மாட்டிக்கொள்ளுகின்றது... இயற்கையை அழித்து ,பழங்குடி  மக்களுக்கு நாகரீகமானவர்களாக மாற்றி, ரயில் போக்குவரத்து போன்றவற்றை தொடங்கி அங்கே இருக்கும் கனிவளங்களை ஜப்பான் சுவாக செய்ய உத்தேசிக்கும் போது, தலைவலி Mona Rudao உருவில் உருவாகின்றது...


 முதலில் பழங்குடியினர் வேறு வழியில்லாமல் ஜப்பானியர்களோடு  இணக்கமாக சென்றாலும், ஜப்பானியர்களில் ஒரு சில அதிகாரிகள் மிக கேவலமாக  பூர்வகுடி மக்களை  நடத்துகின்றார்கள்..  Mona Rudao தலைமையில் அங்கே இருக்கும் பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து  தங்கள் பலம் என்ன என்பதையும், அதிக பலம் பொருந்திய ஜப்பான் ராணுவத்தை  எப்படி தீரத்தோடு எதிர்க்கின்றார்கள்  என்பதையும் போரின் முடிவு என்ன என்பதை இரண்டு பாகங்களையும் இணைத்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

தைவன் திரைப்பட சரித்திரத்தில் மிக அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்ட ஒரே திரைப்படம்  இந்த திரைப்படம்தான்...

 அதே போல இந்த திரைப்படத்தை எடுக்க இயக்குனர் Wei Te-Sheng தலையால் தண்ணி குடித்து இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றார்.... இந்த  திரைப்படத்தை எடுத்த கதையை தன் அந்திம காலத்தில் ஒரு எபிக் நாவலுக்கான சாகசங்களையும், வேதனைகளையும் ஒரு வேளை  எழுதலாம்.. அவ்வளவு சுவாரஸ்யங்கள்  அதில்  புதைந்து கிடக்கின்றன..

கமல்ஹாசன் மருதநாயகத்தை தன் கனவு படைப்பு என்று சொல்லி  பல கோடியை செலவு செய்து, 15 நிமிட பிலிம் சுருளாக மாற்றி பெட்டியில் எப்படி அந்த படம் இன்னமும்  தூங்குகின்றதோ? அது போல இந்த படத்தின்  கதியும் ஆகி இருக்கவேண்டியது... ஆனால் நல்ல வேளை அதிக பொருட்செலவை விழுங்கி வெளிவந்தது பெரிய அதிசயம்தான்

1930 ஆம ஆண்டு மத்திய தைவானின் Wushe   என்ற இடத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தினை  அடிப்படையாக கொண்டு  எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த திரைப்படம்.

முதல் பாதியில்  பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் சகோதர யுத்தம் என்று  நீளும் இந்திரைப்படத்தில்  ஜப்பானியர்கள் வருகையும் அவர்களை அடித்து விரட்டுவதோடு முதல் பாகம் நிறைவு பெறுகின்றது... ஆனால் முதல் பாகத்தில் அடிபட்டது சாதாரண புலியா? ஜப்பான் புலியாச்சே...? சும்மா விடுமா?  இரண்டாம் பாகத்தில் இரண்டு தரப்புக்கு நடக்கும்   சண்டைதான் இந்த  இரண்டு பாகங்களும்.

பொண்ணுகொடுத்து பெண் எடுத்து மனவாழ்க்கை வாழும் வரை இரண்டு தரப்பிலும் மாறிக்கொண்டு வரும் போதுதான், இந்த பிரச்சனை வெடிக்கின்றது... பொருத்து  பொருத்து கடைசியில்தான் பொங்கி எழுகின்றார்கள் பூர்வ குடிகள்...

தங்கள் பிள்ளைகளை போர் முனைக்கு அனுப்பி விட்டு, தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள்.... கல்யாண நாள் அதுவுமாக  குடும்பத்தோடு வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் தம்பதிகள்...

  போர் என்று வந்த உடன் இரண்டு பக்கமும் இழப்புகள் எவ்வளவு இருக்கின்றன என்பதும் அது எந்தளவுக்கு உளவியல் ரீதியாக  பாதிக்கின்றது என்பதையும் மிக  அழகாக காட்சி  படுத்தி இருக்கின்றார்கள்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் பவன் என்ற சிறுவன் கேரக்டர்.. இந்த சின்ன பையன்  தலைமையில், வீழ்ந்த ஜப்பான் ராணுவ வீரர்களின் ஆயுதங்களை சேகரித்து போராட்ட குழுவுக்கு கொடுப்பதுதான்  இவனுடைய  தலைமையிலான பணி. ஜில்லாகத்திரியாக பம்பரம் போல சுழன்று அடித்து பின்னுகின்றான்.


ஜப்பான் ராணுவ ஜெனரல், “தைவான்” மேப் எதிரே உட்கார்ந்து கர்ஜிக்கின்றார் .. பழங்குடியினர் 300 பேர் .... நாம  ஆயிரத்துக்கும் மேல நம்மக்கிட்ட, பிளேன், பிரங்கி, மெஷின்கன்,கிரானைட், ராக்கெட், கையெறி குண்டு எல்லாம் இருக்கு... ஆனா ஒரு மயிரையும் புடுங்க வக்கில்லை என்று கோபாவேசப்பட..  அவருக்கு கீழே இருக்கும் அதிகாரி.. அதே மேப்பை காட்டி... இந்த காடு அவர்களுக்கு அத்துப்படி எல்லா  வழியும் மிக எளிதாக குறுக்கி வழியில் அடைகின்றார்கள்.. ஆனால் எங்களால்  அப்படி செல்ல முடியவில்லை... முக்கியமாக பவான் என்ற சிறுவன்.. மூன்று வேவ்வேறு இடங்களில் அவனை பார்க்கின்றேன்.. எல்லாமே  நெடுந்தூரம் கொண்டவை என்று சொல்லும் காட்சி சபாஷ்.

ஆயுதபோர் என்பது  நெடுங்காலம் தொடர்ந்து நடத்த முடியாத ஒரு நிலை  என்பதை  அந்த சிறுவன் மூலம்  வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர்..  போர் தொடங்கி ஓடி ஓடி டயர்ட் ஆகி என்னைக்கு இந்த போர்நிற்கும் என்று கேட்பதும் அல்லது ஒரே  நாளில்  நேருக்கு நேர் போய் அடித்து காலி பண்ணி விடுவோம்... தொடர்ந்து உயிர் பயத்துடன் ஓடிக்கொண்டு இருக்க முடியாது என்று சொல்லும் காட்சிகள் சிறப்பு.

கடைசி வரை  Mona Rudao வை ஜப்பானியர்களால்  பிடிக்கவில்லை இருந்தாலும், 1933 ஆம் வருடம்  காட்டில் யாரும் செல்ல முடியாத இடத்தில் அவருடைய எலும்புக்கூட்டை கண்டு பிடித்து அதனை ஜப்பான் அரசு மீயூசியத்தில் வைத்து  எதிர்கால புரட்சியாளர்கள் இதனை பார்த்து  பயப்படவேண்டும் என்று நினைத்தது..

ஆனால் தைவானின் இளைஞர்களுக்கு Mona Rudao  இன்றும் அவர்களின் ஹீரோவாக போற்றுகின்றார்கள். கொண்டாடுகின்றார்கள்.. தைவானின் ரூபாய் நோட்டுகளில் Mona Rudao உருவம் இடம் பெற்று இருப்பதே அதற்கு சாட்சி….

400 ஜப்பான் டெக்னிஷியன்கள்….1500 ஆட்களை வைத்துக்கொண்டு, அக்டோபர் 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்து செப்டம்பர் 2010 இல் முழுபடத்தை அதாவது  பத்து மாதத்தில் இந்த திரைப்படத்தை எடுத்து முடித்து விட்டார்கள்… இன்னும் விரைவாக படத்தை எடுத்து முடித்து இருக்கலாம்…பணம் வர வர படபிடிப்பை நடத்தி  இருக்கின்றார்கள்…

நிறைய பேருக்கு படபிடிப்பின் போது காய்ப்பட்டு அடிப்பட்டு,  ரத்தகாவு எல்லாம் கொடுத்து இந்த திரைப்படத்தை  எடுத்து முடித்து இருக்கின்றார்கள். முக்கியமாக ஒளிப்பதிவாளர்  Chin Ting-Chang பணி மகத்தானது… இவர் இயக்குனரோடு பல படங்கள் இணைந்து பணிபுரிந்து இருக்கின்றார்…


13 வருடங்கள் இலங்கையில் ஆட்சி புரிந்த பிரபாகரன் பற்றிய வரலாற்றை தமிழ்நாட்டில் யாரும் எடுக்க முடியாது.. அப்படி எடுத்தாலும்  சென்சாரில் சிக்கி டைட்டில் மற்றும்  என்ட் கார்டு மட்டுமே வெளியே வரும் அதுவே சந்தேகம்தான்....ஒரு வேளை பிரபாகரனின் வீர வரலாற்று திரைப் படத்தை  ஒரு சீனனோ  அல்லது ஒரு ஜப்பானியனோ? அல்லது இரு ஹாங்காங்காரனோ எதிர்காலத்தில் பிரபாகரன் பற்றிய படத்தை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.
================
 படத்தின் டிரைலர்




=============
படக்குழுவினர் விபரம்.


Directed by Wei Te-Sheng
Produced by John Woo
Jimmy Huang
Terence Chang
Written by Wei Te-Sheng
Starring Umin Boya
Masanobu Ando
Landy Wen
Irene Luo
Vivian Hsu
Music by Ricky Ho
Cinematography Chin Ting-Chang
Editing by Chen Po-Wen and Milk Su
Distributed by The ARS Film Production
VIE VISION PICTURES
Fortissimo Films
Huaxia Film Distribution Company (China)
Release date(s) Part 1:
September 9, 2011Part 2:
September 30, 2011 (Taiwan)
Part 1:
November 17, 2011Part 2:
December 1, 2011 (Hong Kong)
Single version:
April 14, 2012 (United Kingdom)
April 27, 2012 (United States)
May 10, 2012 (China)
Running time Part 1: 144 minutes
Part 2: 132 minutes
Both: 276 minutes
Single version: 150 minutes
Country Taiwan
Language Seediq, Japanese, Taiwanese
Budget NT$ 700 - 750 million
(US$ 23 - 25 million)[1][2]
Box office Taiwan:
NT$ 880 million

(US$29 million, both parts

=======
பைனல்கிக்.

இந்த திரைப்படத்தின்  தயாரிப்பாளர் பிரபல ஆக்ஷன் பட இயக்குனர்  ஜான் வூ  இரண்டு பாகங்களும்  சேர்த்து நாலரை மணி  நேரம் ஓடும்..


படம் முழக்க…ரத்தகளரி ரணக்களரிதான் படம்நெடுகிலும்.. அதனால் வயதுக்கு வந்தவர்கள்  மட்டுமே இந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ள படுகின்றார்கள். இந்த திரைப்படத்தை பார்த்து பிரம்மை பிடித்து உட்கார்ந்து இருந்தேன்… இந்த படத்தை பார்க்கும்  போது ஈழப்போர் நம் மனத்திரையில்  வந்து போவதை தடுக்க முடியாது… இந்த படம்  அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம். அந்த கானகத்தில்  படப்பிடிப்பு நடத்திய உழைப்பு இருக்கின்றதே.. அந்த உழைப்புக்காக எழுந்து நின்று படத்தில் பங்கு பெற்ற அத்தனை பெருக்கும்  ஒரு ராயல் மிலிட்ரி சல்யூட்.

இந்த படத்தை நான் பார்த்தே  தீர வேண்டும்  என்று படுத்தி எடுத்த தம்பி ரமேஷூ சீனிவாசனுக்கு என் நன்றிகள். டவுண்லோட் லிங்க் அனுப்பியமைக்கு  ஸ்பெஷல் நன்றிகள்.

================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

10 comments:

  1. It was possible to make a film on Mona Rudao and it is impossible to make film on parabakaran, because Mona Rudao did not kill Rajiv Gandhi.

    ReplyDelete
  2. "தலையால் தண்ணி குடித்து"// why this idiom is used in tamil? to know the reason im asking jackie..

    ReplyDelete
  3. இந்த படத்தை பார்க்கும் போது ஈழப்போர் நம் மனத்திரையில் வந்து போவதை தடுக்க முடியாது..

    படம் குறித்த தங்கள் விமர்சனம் அருமை.

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம் .எங்கிருந்து சார்?

    ReplyDelete
  5. எம் வலியையும் பதிவு செய்ததற்காகவும் நன்றிகள் ..

    ReplyDelete
  6. கடைசியில் என்னையும் கத்தி தூக்க வச்சிட்டிங்களேடான்னு தேவர்மகன் கிளைமாக்ஸ்ல கமல் சொல்லறது போல நானும் படங்களை டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பிச்சிட்டேன்....இதுவரை டவுன்லோட் பண்ணாம இருந்ததுக்கு முக்கியகாரணம் ஒரு நண்பர் லேப்டாப்ல ரொம்ப மோசமான பிரின்ட்ல ஒரு படத்தை டவுன்லோட் பண்ணி பார்த்தேன் சொன்னார்...

    எல்லா படமும் அப்படித்தான் இருக்கும்ன்னு ஒரு நினைப்பு. அதனால எந்த படத்தையும் இதுவரை டவுன்லோட் பண்ணறதில்லை... சமீபத்துல டவுன்லோட் பண்ணி நண்பர் எச்டி குவாலிட்டியில சப் டைட்டிலோட படங்கள் பார்த்த உடன் அசந்து விட்டேன்... அதனால் டவுன்லோட் பண்ணி படம் பார்ப்பதில்லை என்ற சபதத்தில் இருந்து தவம் கலைந்து விட்டேன்.

    நான் முதன் முதலில் டவுன்லோட் செய்து பார்த்த படம் அன்னாவும் ரசூலும்... அதே போல எல்லாருக்கும் டவுன் லிங்க் கொடுக்கவும் முடியாது... படம் அறிமுகப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்... தேடி பார்ப்பது உங்கள் சமத்து... நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner