THE KING'S SPEECH-2010/ உலகசினிமா/இங்கிலாந்து/ திக்குவாய் ராஜா.எனக்கு நெருங்கிய  நண்பர்  சங்கருக்கு திக்குவாய்.....
நிறைய திரைப்படங்கள் இருவரும் பாண்டியில் பார்த்து இருக்கின்றோம்.. பாரில்  சரக்கு அடித்து விட்டு உணர்ச்சி ததும்ப பேசி இருக்கின்றோம்... முன்பு அவர் பேசும் போது  நிறைய திக்கும் இப்போது அப்படி அல்ல...ஒரு பெண் குழந்தை சென்னை  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேன் பணி.

சாதாரணமாக திக்காமல் பேசுவார்... கோபம் வந்தாலோ... அல்லது உணர்ச்சி வசப்பட்டு விட்டாலோ ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கு  ஐந்தில் இருந்து பத்து வினாடிகள் எடுத்துக்கொள்ளுவார்... ஆனால் திடிர் என்று ஒரு நாள் நன்றாக பேச ஆரம்பித்தார்... அதற்கு காரணம் அவர் எடுத்துக்கொண்ட பயிற்சிகள்.

 திக்குவாய் படங்கள் நிறைய இருந்தாலும், எனக்கு நினைவில் தற்சமயம் இருப்பது நம்மவர் திரைப்படம்தான்...திக்குவாயை ஒரு பெரிய  பிரச்சனையாக  காட்டிய படம்... நம்மவர் அதில் ஒரு மாணவனுக்கு திக்குவாய்... கரண் கோஷ்ட்டி அவரை தீ தீ  திக்காதே என்று வெறுப்பு ஏற்றி போதை மருந்தை ஏற்றி விடுவார்கள்... சாதரண மனிதனுக்கு திக்குவாய் என்றால் அது   பிரச்சனையே இல்லை.. ஆனால் ஒரு தொகுதியின் எம்எல்ஏவுக்கு அல்லது ஒரு ஆசிரியருக்கு,ஒரு முதல்வருக்கு, ஒரு பிரமருக்கு , ஒரு நாட்டின் அதிபருக்கு திக்குவாய் என்றால் அவன் என்ன செய்வான்..?

திக்கு வாய் ராஜா... இதான் கான்  செப்ட். நாம இருந்தா  எப்படி  கதை பண்ணி இருப்போம்...?

அவன் அரச குடும்பத்தை சேர்ந்தவன். திக்குவாய்.... அவனுக்கு  திக்கி திக்கி வாய்   ஓரம் எச்சி வழியும்...  ஒரு வார்த்தை பேச  நிறைய  நேரம் எடுத்துக்குவான்...அவனை எல்லோரும் சின்ன வயசில அவமானப்படுத்துவாங்க..... அந்தராஜா குடும்பத்துல ஒரு வேலைக்கார பொண்ணு ஒன்னு செம அழகா இருக்கும், அந்த பெண்ணு இளவரசன் ராஜா படற கஷ்டத்தை பார்த்து என் கிட்டு நீ பேசு ... என்று சொல்லும், ராஜாவும் அந்த வேலைக்கார பொண்ணுக்கிட்ட திக்கி திக்கி பேசுவாரு.. கடைசியில காதல்ல போய் முடியும்... ராஜ துரோகத்துக்கு அந்த பொண்ணுக்கு மரணதண்டனை கொடுக்க போகும் போது, நீதிமன்றத்துல மக்கள் முன்னால ராஜா திக்காம பேசி அவளுக்கு விடுதலை வாங்கி கொடுத்து அந்த பொண்ணையே கட்டிக்குவாரு.. அல்லது அந்த பெண்ணை ராஜ துரோகக் குற்றத்தை செஞ்ச   காரணத்தால் அவளை தூங்கில் போட்டு விடுவாங்க.,. விஷயம் தெரிஞ்சி ராஜா ஓடி வந்து தூக்குல தொங்கிகிட்டு இருக்கற அவ காலை பிடிச்சி, திக்கம  பேச கதறி அழுவார்... ராஜாவை ஒரு தலையாக காதலித்த முறைப்பெண்  திக்குவாய் ராஜாவின் தலையை தடவி  அவனை அழைச்சிக்கிட்டு போவா... இப்படி எப்படி வேண்டுமானாலும் கதை பண்ணலாம்.

ஆனால் உண்மையில் இது நடந்த கதை... பிரிட்டிஷ் அரசரான ஆறாம் ஜார்ஜ்க்கு திக்குவாய் பிரச்சனை இருந்தது... அந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கின்றார்கள்.. அதுவும் மிக நெகிழ்ச்சியாக,எந்த சினிமா தனமும்  இல்லாமல்  The King's Speech  திரைப்படத்தை  உருவாக்கி இருக்கின்றார்கள்....


===================
The King's Speech படத்தின் ஒன்லைன்...


திக்குவாய் பிரச்சனை உள்ள  இங்கிலாந்தின் மன்னன் ஆறாம் ஜார்ஜ்  எப்படி அந்த பிரச்சனையை முறியடித்தான் இமதன் படத்தின் ஒன்லைன்.

=====================
The King's Speech படத்தின் கதை என்ன?


1925 ஆம் ஆண்டு ....ஆறாம் ஜார்ஜ்  இளவரசன் ரேடியோவில்  இங்கிலாந்து மக்களுக்கு பிரிட்டிஷ்எக்சிபிஷன் பற்றிய உரைகொடுக்க வருகின்றார். எதிரில் பொதுமக்கள் குவிந்து இருக்கின்றார்கள்.. அந்த உரை நேரில் குவிந்து இருக்கும் மக்களுக்கும், ரேடியோ மூலம்  கேட்க இருக்கும் மக்களுக்கான உரை... ஆனால் இளவரசனால் பேச முடியவில்லை.. அவருக்கு  திக்கு வாய்...பெரிய அவமானம்... ஆனால் சூழ்நிலை  காரணமாக பஙம்மு வருடம் கழித்து இங்கிலாந்து அரசராக மகுடம் சூட்டிக்கொள்ளுகின்றார்.... அவர் பொறுப்பேற்ற  வேலை இரண்டாம் உலக போர் நடைபெறுகின்றது... மக்களுக்கு ரேடியோ மூலம் நம்பிக்கை உரை நிகழ்த்த வேண்டும்... திக்குவாய் ராஜா எப்படி உணர்ச்சிகரமாக  உரை  நிகழ்த்தினார் என்பதை  நெகிழ்ச்சியாக வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்.

===========================
படத்தின் சுவாரஸ்யங்கயில் சில..

மக்கள் மீது நேர்மையாக வரி போட்டு, குற்றங்கள் குறைத்து, உள்கட்டமைப்பை சீர்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை, சிறப்பாக நடத்துவது ஒரு அரசனின் கடமை என்றாலும் உணர்ச்சிகரமாக  பேசுவதும் ஒரு அரசனின் கடமை... ஆனால் அப்படி பேச முடியாத ராஜாவை மக்கள் எப்படி  எளனாமாக நினைக்கமாட்டார்கள்?? அது எவ்வளவு  வலி,  வேதனையை ஒரு  அரசனுக்கு கொடுக்கும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கின்றார்.. அரசனாக நடித்து இருக்கும் Colin Firth அசத்தி இருக்கின்றார்... என்ன மாதிரியான நடிப்பு.?


அதே  அளவுக்கு ஆஸ்திரேலியாவின் தெரப்பிஸ் டாக்டராக நடித்து இருக்கும் Geoffrey Rush  பின்னி இருக்கின்றார்.... இளவரசியிடம் யார் என்று தெரியாமல் பேசுவதில் இருந்து... பிரச்சனை இளவரசனுக்கு என்று தெரிந்த உடன் நம்மில் பலர் என்ன செய்வோம்.. ???நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அரண்மனைக்கு வந்து விடுகின்றேன்  என்று சொல்லுவோம்...  நீங்கள் இளவரசருக்கு சிகிச்சை என்றாலும் என் வீட்டுக்கு வர வேண்டும் என்று சொல்வது தன் உழைப்பின் நம்பிக்கை மீதான  தடிப்பு.. அதே போல இளவரசர் முதல் முறையாக தன் வீட்டுக்கு வரும் போது காட்டும் அந்த பணிவு...

கடைசிவரை தன் மனைவியிடம் கூட யார் தன் வீட்டுக்கு சிகிச்சைக்கு வர போகின்றார்கள்  என்று  சொல்லாமல் தவிர்ப்பது.... பக்கா புரொபஷனல்தனம்.

தந்தை எதிரில்  பேச முடியாமல் அவதிப்படுவது... அவரை பார்த்தாலே பயப்படுவது என்று மிக அழகாகன நடிப்பை ஆறாம் ஜார்ஜ் கேரக்டர்... சூப்பர்.
1925 ஆம்  ஆண்டின் காட்சிகளை அற்புதமாக படமாக்கி  இருக்கின்றார்கள் விளம்பரத்தில் இருந்து சாலைகளில் இருந்து ரொம்ப அற்புதமான டீடெயில்..

அண்ணன் ராஜா ஒரு அட்டு பிகர் பின்னால் சுற்றிக்கொண்டு இருப்பதைதான் என்னால் இந்த படத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இளவரசர் சார்லஸ், கமிலா பின்னால் சுற்றியது போல..

நட்பாக இருந்தால்தான் சிகிச்சை தொடங்கு முடியும் என்று டாக்டர் நட்பாக அவரை ஏற்றுக்கொள்ள... ஆனால் தான் ராஜா என்ற நினைப்பில் பழகுவதும்...கடைசி பேச்சை ராஜா  முடித்தவுடன் டாக்டரை  நண்பர் என்று அழைப்பதும், டாக்டர்அரசனை த மெஜஸ்ட்டி என்று அழைப்பதும் கவிதையான காட்சிகள்...

அவர்கள் இருவருக்கும் இருக்கும் அழகான, நட்பை, ஊடலை, மரியாதையை அழகாக காட்சி படுத்தி இருப்பார்கள்.


எனக்கு இந்த படத்தில் ராஜாவின் மனைவியாக  குயின் எலிசெபத்தாக நடித்து இருக்கும் Helena Bonham Carter அசத்தி இருக்கின்றார்... அதே போல அவர் பேசும் அந்த ஆங்கில ஆக்சன்ட்டுக்கு அடிமையாகி விட்டேன்...

இந்த திரைப்படத்தின்  திரைக்கதையை எழுதியவர். David Seidler முதலில்  இங்கிலாந்து அரசகுடும்பத்தில் அனுமதி வாங்க காத்து இருந்து..2002 ஆம் ஆண்டு குயின் எலிசெபத் மதர் இறந்து பிறகுதான் அனுமதி கிடைத்ததாம்.

நெகிழ்ச்சியான படத்தை இயக்கி நம் மனதை பிசைய வைத்த  Tom Hooperக்கு மிக்க  நன்றி...


தமிழ் பதிவுலகில்  இரண்டு பேருக்கு எனக்கு தெரிந்து இந்த  பிரச்சனை இருக்கின்றது  என்பது எனக்கு தெரிந்தாலும்... தானே முன் வந்து தான்   இந்த பிரச்சனையில் இருந்து வெளி வந்த கதையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட நண்பர் பாலபாரதிக்கு நன்றி..

 இந்தியர்களாகிய நாம் அனைவருமே திக்குவாய் பிரச்சனையுள்ள அந்த அரசனின் கீழ் நாமும் வாழ்ந்து இருக்கின்றோம். நாம் அப்போது அடிமைப்பட்டு கிடந்தோம் அல்லவா?

சென்னை வாசிகளுக்கு ஒரு சிறப்பு செய்தி... திக்குவாய் அரசரை திட்டிய ஐந்தாம் ஜார்ஜ் அரசன்...  இந்தியா அவர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த அந்த காலத்தில் த எம்பரர் ஆப் இந்தியா என்று தடிப்போடு  ஒரு ஸ்டைல் லுக்கில்  இன்றும் சென்னையில் நின்றுக்கொண்டு இருக்கின்றார்..... ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த  சிலை   சென்னை எக்மோர் மியூசியத்தின் பின்னால் இப்போதும் மழையில் நனைந்து நின்றுக்கொண்டு இருக்கின்றார்..
(சென்னை எக்மோர் மியூசியத்துக்கு பின் புறம்  ஜார்ஜ் அரசர் ) 
===============
படம் வாங்கிய விருதுகள்.


 At the 83rd Academy Awards, The King's Speech won the Academy Award for Best Picture, Best Director (Hooper), Best Actor (Firth), and Best Original Screenplay (Seidler). The film had received 12 Oscar nominations, more than any other film in that year. Besides the four categories it won, the film received nominations for Best Cinematography (Danny Cohen) and two for the supporting actors (Bonham Carter and Rush), as well as two for its mise-en-scène: Art Direction and Costumes.At the 64th British Academy Film Awards, it won seven awards, including Best Film, Outstanding British Film, Best Actor for Firth, Best Supporting Actor for Rush, Best Supporting Actress for Bonham Carter, Best Original Screenplay for Seidler, and Best Music for Alexandre Desplat. The film had been nominated for 14 BAFTAs, more than any other film. At the 68th Golden Globe Awards, Firth won for Best Actor. The film won no other Golden Globes, despite earning seven nominations, more than any other film.
It is also the first Weinstein film to win the Oscar for best Picture.


At the 17th Screen Actors Guild Awards, Firth won the Best Actor award and the entire cast won Best Ensemble, meaning Firth went home with two acting awards in one evening.Hooper won the Directors Guild of America Awards 2010 for Best Director.The film won the Darryl F. Zanuck Award for Best Theatrical Motion Picture at the Producers Guild of America Awards 2010.


The King's Speech won the People's Choice Award at the 2010 Toronto International Film Festival, Best British Independent Film at the 2010 British Independent Film Awards,and the 2011 Goya Award for Best European Film from the Academia de las Artes y las Ciencias Cinematográficas de España (Spanish Academy of Cinematic Art and Science)


===========
படத்தின் டிரைலர்.


==========
படக்குழுவினர் விபரம்.


Directed by Tom Hooper
Produced by
Iain Canning
Emile Sherman
Gareth Unwin
Screenplay by David Seidler
Starring
Colin Firth
Geoffrey Rush
Helena Bonham Carter
Guy Pearce
Timothy Spall
Derek Jacobi
Jennifer Ehle
Michael Gambon
Music by Alexandre Desplat
Cinematography Danny Cohen, BSC
Editing by Tariq Anwar
Studio
UK Film Council
See-Saw Films
Bedlam Productions
Distributed by Momentum Pictures
The Weinstein Company
Release date(s)
6 September 2010 (Telluride Film Festival)
7 January 2011 (United Kingdom)
Running time 118 minutes
Country United Kingdom
Language English
Budget £8 million ($15 million)[3]
Box office $414,211,549
============
படத்தில் ஒரு அற்புதமான காட்சி.
============
பைனல்கிக்.
இந்த படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம். அவசியம் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நெகிழ்ச்சியான திரைப்படம்...  அந்த திக்குவாய் நடினுக்கும் தடிப்பான டாக்டருக்கும் இந்த படத்தை பார்க்கவேண்டும்.


==============
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு.
========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

 1. மிக முக்கியமான படத்தை எல்லோருக்கும் ரொம்ப நல்லா அறிமுகம் செய்தீங்கண்ணா

  ReplyDelete
 2. பத்துக்கு எட்டு பலமான படம் போல பார்த்து விட வேண்டியதுதான்.

  ReplyDelete
 3. mmm we can see soon. do the dvd available in ali bai shop or need to download and see?

  ReplyDelete
 4. கருத்திட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner