Transit (2012)பரபரப்பான ஆக்ஷன் பேக்.
பெங்களுர் போறேன்னு சொன்னா போதும்...
முக்கியமா உங்க மக அங்க வாழ்க்கை பட்டு இருக்கான்னு வச்சிக்கோங்க...புளி, உப்பு, பருப்பு, ரேஷன் சக்கரை, கோதுமை மாவு.. திநகர்ல  சலிசா கிடைக்கற நைட்டி,  துவட்டிக்கற துண்டு, புக்ஸ், இப்படி ஒரு பெரிய மூட்டை நம்ம கூட சேர்ந்து அதுவும் கிளம்பி தொலைக்கும்... 

ஒன்னும் செய்ய முடியாது... கடனேன்னு எடுத்துக்கிட்டுதான் போவனும்....பட் இப்படி எடுத்துக்கிட்டு போறதுக்கு காரணம் ஒன்னு அன்பு..... ரெண்டாவது எடுத்துக்கிட்ட போவ சொல்லிட்டாங்க வேற வழியில்லை அதனால் எடுத்துக்கிட்டே போயாகனும்... நோ அதர் கோ......

பட்... உங்களுக்கு  சம்பந்தமே இல்லாம உங்க கிட்ட  கொள்ளை அடிக்கற கும்பல் ஒன்னு, ரோட்டுல போலிஸ் செக்கிங் இருக்கு,.  அதனால் இந்த  பண பேகை உங்க வண்டியில வச்சிக்கோங்க..

 போலிஸ் செக்கிங் முடிஞ்சதும் வாங்கிக்கறோம்ன்னு சொன்னா நீங்க கேட்பிங்களா? ஆசை தோசை அப்பள வடைக்கு கூவ மாட்டிங்க..? ஆனா தெரியாம நீங்க உங்க குடும்பத்தோட மோட்டல்ல  உச்சா போற நேரமா பார்த்து  உங்க கார்ல  கொள்ளை அடிச்ச பணத்தை  மூட்டையோட மூட்டையா சேர்த்து வச்சிட்டா-?  என்ன  செய்விங்க..? அதைதான் இந்த படம் பரபர ஆக்ஷன் பேக் மூலம் விளக்குகின்றது.============
Transit (2012) படத்தின்  ஒன்லைன்.


சனியன் எதிர்பாராத விதமா.. ஒரு அப்பாவி குடும்பத்தோட  பனியன்ல வந்து ,வாண்டேடா  ஏறிக்கிட்டா ??என்னவாகும் என்பதுதான்  படத்தின் ஒன்லைன்.

================

Transit (2012) படத்தோட கதை என்ன?

 நேட் ருபின்  தம்பதிகள்  தங்களோட இரண்டு ஆண் பிள்ளைகளோடு தாத்தா வீட்டுக்கு போகின்றார்கள்..அதுக்கு முதல் நாள் அந்த ஏரியாவில் 4 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்கப்பட்டு பரபரபாய் போலிசார் திருட்டு பசங்களை தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்...  

ஏனென்றால் வழியெல்லாம் போலிஸ் செக்கிங்....போலிசிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன  செய்யலாம்   என்று ஒரு மோட்டல் வாசலில் திருட்டு பசங்க காரில் உட்கார்ந்து கொண்டு  யோசிக்கும் போது, நேட் தம்பதிகள் கார் ரேஸ்ட் ரூம் யூயஸ் பண்ண  அந்த மோட்டலுக்கு வருகின்றார்கள்... 

அவர்கள் குடும்பத்தோடு டாய்லட்போகும் போது கொள்ளையடித்து  பணம் இருக்கும் லக்கேஜை நேட் குடும்ப காரில் கலந்து விடுகின்றார்கள்... போலிஸ் செக்கிங்கில் பேமிலி  எனபதால் விட்டு விடுகின்றார்கள்..அதே போல  கொள்ளையர் காரில் எதுவும் இல்லை என்பதால் அவர்களையும் விட்டு விடுகின்றார்கள்.. 

பட்  உடனே போய்  காரை மறித்து பணத்தைஎடுத்துக்கொள்ளலாமே என்று  முந்திரிக்கொட்டை போல நீங்கள் கேட்கலாம்....  அதான் இல்லை..? அது அவ்வளவு லேசு பட்ட  காரியம் இல்லை என்பதை படம்  விறு விறுப்பாய் மிச்ச மீதியை சொல்கின்றது..
=================
படத்தின் சுவாரஸ்யங்கள்


... டிக்கெட் வாங்கிட்டு உள்ளே வந்துட்டா நீ படத்தோட டைரக்டரா? என்று கேள்வி கேட்டு விட்டு யூகிக்க முடியாதது, போல படம் எடுத்து இருக்கின்றார் இயக்குனர் Antonio Negret.


கழுவி கழுவி  ஊத்தி கவிச்ச நாத்தம் போகாத கதையை கையில எடுக்கறோமே ??ஓடுமா ?ஓடாதா ?என்று  இயக்குனர் யோசிக்க வில்லை  தன் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றார்...போலிஸ் செக்கிங்கில் கொள்ளையர்  மாட்டிக்கொள்ள திருட்டு பசங்களான உங்க கிட்ட எதுக்குடா வாங்கி டாக்கி?  என்று கேட்பது.. 

வேகத்தினால் நேட் பேமிலி போலிசில் மாட்டிக்கொள்வது,  இரவு போலிஸ் நிலையத்தில் அரேஸட் செய்து வைப்பது... அன்றைய இரவு பணத்தை திருட வந்து  ரூபினை பீதிக்குள்ளாக்குவது, பணத்தோடு கணவனை இறக்கி விட்டு போவது.. வைத்த பணத்தை காணமல் திகைப்பது என்று கதை நிறைய டுவிஸ்ட்டுகளுடன் பரபரக்கின்றது.


திருடர்கள் நாலு பேருக்குள் சண்டை வர அந்த பெண்ணை சுடுவது செமை டூவிஸ்ட்..காரணம் அவள்தான் அனைத்துக்கும் காரணம் என்று சொல்லாமல் சொல்ல இப்ப என்ன அவளை முடிச்சிட்டா.... ? அதேதான்.. பணம் பழகியவளை கொலை கூட செய்ய வைக்கும்.


டிரன்சிட் என்றால் எடுத்து போதல், அல்லது  கொண்டு போதல் என்று அர்த்தம்.

=================
படத்தின் டிரைலர்.

==================
படக்குழுவினர் விபரம்

 irected by Antonio Negret
Produced by Courtney Solomon
Moshe Diamant
Written by Michael Gilvary
Starring Jim Caviezel
James Frain
Diora Baird
Elisabeth Röhm
Harold Perrineau
Music by Christopher Westlake
Cinematography Yaron Levy
Editing by William Yeh
Joe Binford Jr.
Distributed by After Dark Films
Release date(s)
May 11, 2012
Running time 91 Mins
Country United States
Language English

=================
பைனல் கிக்..


இந்த படம் அவசியம் பார்க்கவேண்டிய படம்.. நல்ல திரில்லர்... எதிர்பார்க்காத டுவிஸ்ட்டுகளோடு நகர்த்தி செல்லும் திரைக்கதை படத்துக்கு கூடுதல் பலம்.  டோண்ட் மிஸ் இட்.
====

படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஆறு..=================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

 1. Jackie....Nice review though....I have watched this some time back...Nice movie and it goes the way you have narrated...

  ReplyDelete
 2. சனியன் எதிர்பாராத விதமா.. ஒரு அப்பாவி குடும்பத்தோட பனியன்ல வந்து ,வாண்டேடா ஏறிக்கிட்டா ??என்னவாகும் \\\\\\\

  அருமை நச்சுன்னு சொல்லிடிங்க

  ReplyDelete
 3. இது மாதிரி திரிலிங் படத்தைதான் எதிர்பார்த்தேன்.வாங்கி பார்த்துவிட்டு சொல்கிறேன்.
  அன்னே சரியான மூடுல இருக்கீங்க போல வரிசையா பட விமர்சனமாக இருக்கு.

  ஜாக்கி அன்னே நைட்டு படம் பார்த்தாலே பயப்புடுகிற மாதிரி ஒரு படத்தே சொல்லுங்கன்னே. நீங்கலே பயபட்டு இருக்கனும்.

  அப்பறம் என்னமா படம் எடுத்துருக்கான்னு கொய்யால அப்படினு நினைச்சு(பொதுவாக ) பார்த்த படம் வேறு ஏதேனும் இருக்கா?

  ReplyDelete
 4. நன்றி வெங்கட்.

  நன்றி குமார்..

  நன்றி சக்கரகட்டி

  நன்றி கவிதா.

  நன்றி ஆரிப்.

  ReplyDelete
 5. pls post good monster films list in your point of view

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner