என் அம்மா என் வால்தனத்தை பார்த்து விட்டு
மிரண்டு போய் இருக்கின்றாள்.
அதனால் என்
எதிர்காலம் குறித்து அதிக கவலை... தன் கழுத்து புருஷனை விட வயிற்று புருஷன்
ஜூட்டிகையாக இருக்க வேண்டும் என்பதே அவளின் எதிர்கால ஆசையாக இருந்தது. அதனாலே
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் வரை
எப்போதாவது பள்ளி பக்கம் வந்து நான் எப்படி படிக்கின்றேன்..? வால்தனம் குறைந்து
இருக்கின்றதா? மற்றவர்களிடம் பணிவாக நடந்து கொள்கின்றானா? போன்ற பொதுவான கேள்விகளை
கேட்டு விட்டு போய் இருக்கின்றார்...
என்
அப்பா எங்கள் படிப்பு பற்றி எல்லாம் பெரியதாய்
அலட்டிக்கொண்டதில்லை.. படிக்கற
புள்ளை எங்க வேணா படிக்கும் என்பது
அவருடைய ஆழமான சித்தாந்தம். கடைசிவரை என் அப்பா எங்கள் ஐவர் படிப்பை பற்றி பெரியதாய்
கவலை கொண்டதில்லை... என்ன படித்தோம் என்பது கூட அவருக்கு தெரியாது.
ஆனால் என் அம்மா, ஒரு பிள்ளை நன்றாக படிக்க நல்ல பள்ளி என்பதை விட சொல்லிக்கொடுக்கும்
பள்ளி அவசியம் என்பதை உணர்ந்தார் ... காரணம் என் பள்ளி அப்படி ஒன்றும் பெரியதாய்
சொல்லி கொடுத்தது இல்லை... என் பெரியதங்கை திருப்பாபூலியூரில் இருக்கும் அரசினர்
மேல்நிலைபள்ளியல் சேர்த்தார்கள்...பத்தாவது கடைசி வரை தாண்டவேயில்லை...
300 குடும்பங்கள் இருந்த குடிசைபகுதியில்தான்
நாங்கள் வசித்தோம்... அங்கே இருந்த
யாருக்குமே அதிகம் படிக்க தெரியாது... என் அம்மா ஒருவர் மட்டுமே அங்கே படித்தவர்..
கடிதம் எழுதுவதில் இருந்து... கடிதம் வந்தால் எங்கள் பகுதி மக்களுக்கு வாசித்து காட்டுவது வரை
எல்லாம் என் அம்மாதான்... இவ்வளவு ஏன் ஆங்கிலம் படிக்க தெரிந்தவர், எழுத
தெரிந்தவர் என் அம்மா ஒருவரே.. அதனால் எந்த மாத்திரை எப்போது கொடுக்க வேண்டும்
..?? எந்த டானிக் எந்தவேளையில் கொடுக்க வேண்டும் என்று அம்மாவிடம்தான் கேட்பார்கள்..அம்மாவின் முயற்சி.... படிப்பின்
அவசியத்தை என் அம்மா உணர்ந்து இருந்தார்....அதனால் என் அடுத்த மூன்று தங்கைகளையும், கடலூர் புதுப்பாளைத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் சேர்த்தார்கள்.. அவர்கள் மூன்று பேரில்
இரண்டு பேர் இன்று அரசு உத்யோகத்தில் இருக்கின்றார்கள்.... எல்லாம்
அம்மாவின் முயற்சி.
என்னை சின்ன வயதிலேயே சொல்லிக்கொடுக்கும்
பள்ளியில் சேர்க்கவில்லை என்று அம்மாவுக்கு பெரிய பெருங்குறை. பத்தாவது பரிட்சையில் நான்
277 டோட்டல் எடுத்த போது.. என் அம்மாவுக்கு
நான் பாஸ் பண்ணியதே பேரதிர்ச்சியாக இருந்தது...
பேரன்ட் டீச்சர்ஸ் மீட்டிங் இதுவரை என் பரம்பரையில் யாரும் அட்டென்ட்
செய்தது இல்லை. என் அப்பா அம்மாவுக்கு அப்படி ஒரு அனுபவமே இருந்தது இல்லை...
பெற்றோர்கள் டீச்சர்களிடம் நட்பு பாராட்டி அப்போதெல்லாம்
பழகியதும் இல்லை...
ஆனால் இன்று....... இன்னும் சில மணி நேரங்களில் யாழினி படிக்கும் டே கேர்
பள்ளியில், பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்.. நடக்க இருக்கின்றது.. கண்டிப்பாக வர
வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்...
சோழ பரம்பரையில் முதன் முதலாக பேரன்ட்ஸ்
டீச்சர் மீட்டிங் அட்டென்ட் செய்ய போகும்
ஜாக்கிசேகர்.
நான் கழுத்து வியர்வையோடு, நகம் கடித்துக்கொண்டு இருக்கின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேக்ர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

பேரன்ட்ஸ் மீட்டிங் நடத்துகிறார்களா? ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் மகள் 80 சதவீதம்தான் வாங்குகிறார். அது போதாது இன்னும் வாங்க வேண்டும் நீங்கள் இன்னும் சரியாக கவனம் செலுத்த வேண்டும். என்று சொல்லி அனுப்புவார்கள்
angayum poi pattaya kellapittu vaanga
ReplyDeleteபோங்க போங்க அப்பா னா சும்மாவா? இதுலாம் பரவால.when your child goes higher class and when you attend the meeting means chuma nika vechi kelvi kepaanga. apa paarunga pori parakkum....
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி , நல்ல அம்மா நல்ல பையன்
ReplyDeleteஅட நேற்றுதான்
யாழினி பிறந்தது போல் உள்ளது ,
அதற்குள் காது குத்தி கம்மல்
போட்டாகிவிட்டதா
Super,Anna,don't miss this wonderful moments
ReplyDeleteAnna... Tension akathenganna... rasikkira mathiri irukkum.. Pappa panra kurumbai solluvanga... Romba samaththu.. konjam kurumbu vera oru prachanai illa... entru solluvanganna... Neenga tension agi anniyum tension akkirathenganna...
ReplyDeleteNalla irukkum...
Pappa ungala mathiriye irukkanna...
Anniyum pappavaiyum kettatha sollunganna..
-Kavi Saran
is she riding dad's bike? want to become a racer?
ReplyDeletefor a parent spending time with children are wonderful especially with kids like yazilini do not miss it
சோழ பரம்பரையில் முதன் முதலாக பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங் அட்டென்ட் செய்ய போகும் ஜாக்கிசேகர்.
ReplyDeleteநான் கழுத்து வியர்வையோடு, நகம் கடித்துக்கொண்டு இருக்கின்றேன்.
அது சரி... என்னத்த சொல்லப் போறாங்க.... மீட்டிங்க் வைத்தோமுன்னு ஒரு பேருக்கு வைப்பாங்க...
In my kids school, they calling it as OPEN DAY, last saturday of every month for KG classes :-)
ReplyDeleteசோழ பரம்பரை? நீங்க பல்லவ பரம்பரை என்று நினைத்தேன்>> சரி சரி மீட்டிங் போகும்போது வாள் எல்லாம் எடுத்திட்டு போகாதீங்க ?
ReplyDeleteயாழினிக்கு வாழ்த்துகள்.
ReplyDelete