STOKER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ சைக்கோ சித்தப்பா.



ஸ்டோக்கர் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் பிலிம்....
மூன்று மாதங்களுக்கு முன் வெளியாகி ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றது... பத்திரிக்கையாளர்கள் பாராட்டி தள்ளிக்கொண்டு இருக்கின்றார்கள்...  அது மட்டும்தானா என்றால் பாராட்டும் போது கண்டிப்பாக திட்டுவார்கள் அல்லவா? இந்த படத்துக்கு அதுவும் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது...

ஆனாலும் மக்கள் தீர்ப்பே மகேசன்  தீர்ப்பு என்று  ஏற்றுக்கொள்ளவேண்டும்...  படத்தை பார்த்து விட்டு உலகம் எங்கும் இருக்கும் ரசிகர்கள் இணையத்தில்  சிலாகித்துக்கொண்டு இருக்கின்றார்கள்...  பார்க்காதவர்களை  பார்க்க சொல்லி பரிந்துரைக்கின்றார்கள்.. அப்படி பரிந்துரைத்து நேற்று டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படம்தான் ஸ்டோக்கர்.

பார்த்த உடன் இரண்டு மூன்று ஷாட்டுகளில் இந்த திரைப்படம்  மனதில் ஒட்டிக்கொண்டது.. இத்தனைக்கு பெரிய ஆர்ட்டிஸ்  வேல்யூ என்று பார்த்தால் நிக்கோல் கிட்மேன் மட்டும்தான்...ஆனாலும் படத்தை ரசிக்க வைத்து இருப்பது இயக்குனரின்  பழுர் அனுபவமுள்ள மேக்கிங்.. எஸ் தென்  கொரியாவின் பிரபல டைரக்டர்.. ஓல்டு பாய் திரைப்பட புகழ் Park Chan-wook தான்... என்னதான் லோக்கல்ல  சலங்கை கட்டி ஆடினிலே ரொம்ப பார்த்து பார்த்து ஆடுவோம்.. இன்னும் வெளியூர் என்றால் கேட்கவே வேண்டாம்...  இன்னும் பயபக்தியாக தன் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவோமே அப்படி வெளிப்படுத்தி  கொரியாவில் இருந்து போய் முதல் ஹாலிவுட் படத்தை எடுத்து இருக்கின்றார்... Park Chan-wook.. இத்தனைக்கு இருக்கு ஆங்கிலம்  தெரியாது.. கலைக்கு ஏது மொழி.....????

================
STOKER-2013/உலகசினிமா/அமெரிக்கா படத்தின் ஒன்லைன்.



புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் என்ன செய்யும்... குற்றம் இழைக்க அஞ்சாது.. இதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

=====================
STOKER-2013/உலகசினிமா/அமெரிக்கா படத்தின் கதை என்ன?
நிக்கோல் கிட்மேன் கணவன்  ரிச்சர்ட் இறந்து விடுகின்றார்....அம்போ என்று  குடும்பத்தை தவிக்க விட்டு  பரலோகம் சென்று விடுகின்றார்...இந்த தம்பதிகளுக்கு .. பருவவயதில் ஒரு மகள்... பெயர் இன்டியா ஸ்டோக்கர்..16 நாள்  காரியங்கள் ,கருமாதி, போன்றவைகளுக்கு  உதவி செய்தபடி ரிச்சர்ட்டின் தம்பி சார்லி உடன் இருக்கின்றான்.. அதாவது நிக்கோல் கிட்மேன் கொழுந்தன்...நிக்கோல் கிட்மேனோட  பேமிலி பிரண்டான  கிழவி  துக்கம் விசாரிக்க வீட்டுக்கு வருது.....துக்கம் விசாரிச்சிட்டு உன் கொழுந்தன் ரொம்ப நாளா? தங்கி இருக்கானா? அவன் சரியில்லையே என்று சொல்ல... அன்று இரவு அந்த கிழவி மர்க்கேயா... சோ.. இன்டியா ஸ்டோக்கர் சித்தப்பன் சார்லி எந்த ரகத்தை சேர்ந்தவன்? படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

=======================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

நீட்டான  பிலிம் மேக்கிங் என்று சொல்லுவார்களே அதற்கு இந்த படத்தினை தாரளமாக உதாரணமாக சொல்லலாம்.. அற்புதமான பிலிம் மேக்கிங்.
எல்லா கேரக்டர்களும் மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்..
ஆங்கிலம் தெரியாது... மீடியேட்டர் வைத்துக்கொண்டுதான் காட்சியை விளக்க வேண்டும்.. அப்படி இருந்து மிகை இல்லாத நடிப்பை வாங்கி இருப்பது சான்சே இல்லை...இயக்குனர்  Park Chan-wook  சரக்கு  உள்ள மனிதர்தான்...

முக்கியமாக பருவ பெண்ணான இன்டியா ஸ்டோக்கர் கேரக்டரில் நடித்து இருக்கும் Mia Wasikowska அசத்தல்...

அங்கிள் சார்லியாக Matthew Goode அன்டர்பிளே செய்து இருக்கின்றார்... கண்ணில் காட்டும் அந்த விஷமம்.. மெல்லிய சிரிப்பு என்ற பீதியை கிளப்புகின்றார்.

வயசாகி நிக்கோலுக்கு சுருக்கம் விழுந்தாலும்.. உடம்பை அப்படியே கச்சிதமாக வெயிட் ஏறாதபடி பார்த்துக்கொண்டு இருக்கின்றார்... அப்படி மெயின்டெயின் பண்ணிக்கொள்வதை பார்க்கும் போது பொறாமையாக இருக்கின்றது. அம்மா கதாபாத்திரத்தில் அசத்தல்...



படத்தின் பெரிய பலம்... படத்தின் ஒளிப்பதிவு...நிச்சயம் எதிர்கால ஒளிப்பதிவாளர்கள் இன்றைய ஒளிப்பதிவாளர்கள்  மற்றும் இயக்குனர்கள் சமுகம் என  எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்...ஒளிப்பதிவாளர் Chung Chung-hoon  பிடியுங்கள் மலர்க்கொத்தை... வாழ்த்துகள்...



 என்னமாதிரி ஷாட்.. அற்புதமான லைட்டிங்... முக்கியமாக இன்டியா காலேஜ் பையனுடன் ஒதுக்குபுறமான பார்கிற்க்கு செல்லும் போது அந்த பார்க்கில் செய்யப்பட்டு இருக்கும் லைட்டிங்... எதுவும் ஆர்ட்டிபிஷியலாக இருக்காது... ஆம்பியன்ஸ்  சோர்ஸ் லைட்டு போல ரொம்ப நல்லா கம்போஸ் பண்ணி இருக்காங்க.. அது மட்டும் அல்ல.. படம் முழுக்கவே... ஒவ்வோரு ஷாட்டுக்கும் மெனக்கெட்டு இருக்காங்க...

சைக்காலிஜிக்கால் திரில்லர் என்றால் கேமராவை  ஷோல்டரில் வைத்துக்கொண்டு ஹேண்ட் ஹேல்டு ஷாட்  எடுக்கின்றேன் பேர்வழி என்று கேமராவை ஆட்டிக்கொண்டு இருக்காமல் தேவைபட்ட இடங்களில் மட்டும் பயண்படுத்தி இருக்கின்றார்கள்...



ரத்தம் பட்ட பெண்சில் ஷார்ப்பனரில் சீவுதல், வேக வைத்த முட்டையை டைனிங் டேபிளில் உருட்டுதல் என்று மிக அழகாய் எடுத்து இருக்கின்றார்கள்..

 சார்லி கேரக்டர் எப்படி இன்டியாவை வீழுத்துகின்றது அல்லது சலனத்தை ஏற்ப்படுத்துகின்றது என்பதை  அந்த பியானோ ஷாட்டில்  பின்னி இருக்கின்றார்கள்...

அதே போல எடிட்டிங்... திரைக்கதையில் எந்த இடத்தில் எல்லாம்  எடிட்டிங்கில் அசத்தலாம் என்று முன்பே தீர்மானித்து விட்டார்கள் போலும். பென்சில் பாக்ஸ் திறக்கும் போது பீரீசர் பாக்ஸ்... பேருந்தில் இருந்து இறங்கி ரோட்டில் நடக்கும்  காட்சி, தலை சீவும் போது அதில் இருந்து சோலையான வனப்பகுதிக்கு செல்லும் காட்சி என்று அசத்தல்...


Park Chan-wookகின் கதை கிடையாது... Wentworth Miller என்ற நடிகரின் கதைதான ஸ்டோக்கர்... முதலில் இந்த கதையை சொன்ன போது ஹாலிவுட்டில் Wentworth Miller ஒரு வெம்பயர் கதையை கையில வச்சிக்கிட்டு அலையறான்டோய் என்று  கதை கிளப்பி விட்டு இருக்கின்றார்கள்.... சைக்காலிஜிக்கல் திரில்லர் என்று கோவில் கோவிலாக சத்தியம் செய்தே இந்த கதையை தயாரிப்பாளரிடம் ஓகே சொல்லி இருக்கின்றார்..ஹிட்சாக்கின்  பிரபல திரைப்படமான  Shadow of a Doubt எனற திரைப்படம்தான் இந்த திரைக்கதை எழுத இன்ஸ்பயர் என்று சொல்லி இருக்கின்றார்..


 Park Chan-wookகின் இந்த படம் முடிந்த உடன் தர்க நியாயங்கள் யார் யார் என்னவகையில்  அவரவர்  பார்வையில் யூகித்து இருக்கின்றார்களோ  அதுதான் இந்த திரைப்பட்த்தின் கதை என்று சொல்லி இருக்கின்றார்.

===================
படத்தின் டிரைலர்




====================
படக்குழுவினர் விபரம்.


Directed by Park Chan-wook
Produced by Ridley Scott
Tony Scott
Michael Costigan
Written by Wentworth Miller
Starring Mia Wasikowska
Matthew Goode
Nicole Kidman
Dermot Mulroney
Jacki Weaver
Music by Clint Mansell
Cinematography Chung Chung-hoon
Editing by Nicolas De Toth
Studio Scott Free Productions
Indian Paintbrush
Distributed by Fox Searchlight Pictures
Release date(s)
January 20, 2013 (Sundance)
March 1, 2013
Running time 99 minutes[1]
Country United States
United Kingdom
Language English
Budget $12 million[2]

Box office $9,356,992



=================
பைனல்கிக்.
இந்த படம் சினிமாவில் ஆர்வமுள்ளவர்கள் அத்தனை பேரும் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்... எடுத்துக்கொண்ட கதை.,. அதுக்கான லைட்டிங், கேமரா கோணம், கேரக்டர் ஆக்டிங் என்று படத்தில் பணி புரிந்த அத்தனை பேருமே தங்கள் பங்களிப்பை செய்து இருக்கின்றார்கள்.. இந்த திரைப்படம் பார்த்தே  தீரவேண்டிய திரைப்படம்..இந்த படத்தை எனக்கு பரிந்துரைத்த முகநூல் நண்பர் கும்பகோணம் நந்தகுமார் அவர்களுக்கு நன்றி...இது போன்ற திரைப்படங்கள் நீங்கள் டவுன்லோட் செய்தாலோ? அல்லது லிங்க கிடைத்தாலோ எனத மெயில் முகவரிக்கு தெரியபடுத்தவும் நன்றி.

=================
படத்தின்  ஆர்ட்டிஸ்ட் இன்ட்ரோ



==================
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஏழரை.

/================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
=============

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

  1. பத்து நாட்களுக்கு முன்னரே இந்த படத்தை பார்த்துவிட்டேன்.. இண்டியா கேரக்டர்ல நடிச்சி இருக்கும் பெண் சான்சே இல்ல .. அதே போல அவ சித்தப்பன் என்னா முகபாவனை ..

    ReplyDelete
  2. நல்லா இருக்கே உங்க லச்சணம். நீங்க உங்க கிட்ட இருக்குற டவுன்லோட் லிங்க் ஷேர் பண்ண மாட்டீங்க. அறிமுக படுத்துறது மட்டும் தான், என்னோட வேலை. தேடி பிடிகுறது உங்க சமத்து, அப்படினு டயலாக் ... ஆனா எங்ககிட்ட இருந்த இ- மெயில் கு அனுப்பி வைங்க அப்படினு கேக்குறது என நியாயம்....

    ReplyDelete
  3. நன்றி ரோமியோ....

    ReplyDelete
  4. கேபி என் லட்சணம் என்னன்னு எனக்கு தெரியும்...நீங்க ஒரு லிங்கும் அனுப்பவேண்டாம்.. எனக்கு படத்தை அறிமுகபடுத்திய நந்தகுமாருக்கு சொன்ன மேட்டர் அது... அதனால் உங்க கிட்ட கேட்கறது நியாம் இல்லைன்னு எனக்கு தெரியாதா? அப்படி உங்களை மாதிரி ஆட்கள்கிட்ட கேட்டுதான் படம் பார்க்கனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.

    ReplyDelete
  5. kickass.to u can download this movie here

    ReplyDelete
  6. kickass.to u can dowload the movie here

    ReplyDelete
  7. படத்த கடையில தேடி பார்த்துர வேண்டியதுதான். ஒரு நல்ல படத்த அறிமுகம் செய்த ஜாக்கி அண்ணணுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அண்ணா சூப்பர் படம் நிக்கோல் மிக நல்ல நடிகை,இதில் கலக்கி விட்டார்,உண்மையிலேயே பார்க் சான் வூக் மிகத்திறமைசாலி இயக்குனர் தான்,பகிர்ந்தமைக்கு நன்றி,நான் நாளை சுமார் 50 ஐரோப்பிய படங்களின் டாரண்டையே மெயிலில் அனுப்புறேன்

    ReplyDelete
  9. நன்றி கார்த்தி... ஐரோப்பிய படங்களை அனுப்பிச்சி விடுங்க..

    ReplyDelete
  10. மெயில் அனுபுவதற்கு பதில், இங்கேயே தரலாம்...

    சண்டை ரொம்ப ஓவரா இருக்கே,,,!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner