THE THIEVES-2012/உலகசினிமா/ கொரியா/ கொரியாவின் திருட்டு எத்தன்கள்.


ஒஷன் 11 படம் பார்த்து விட்டு எல்லா  படைப்பாளிக்கு கை பரபரவென அரிக்க  ஆரம்பித்து இருக்கும்,..
காரணம் இந்த  மாதிரி மேக்கிங்கில் ஒரு ராப்பரி படம் எடுக்க  வேண்டும் என்று... அப்படி ஓஷன் பட சீரியஸை பார்த்து விட்டு   கொரிய சினிமாக்காரர்கள்  நாங்களும் களத்துல எறங்கி படத்தை எடுத்துகாட்டுறோம்லே என்று களத்தில் இறங்கி எடுத்த சவுத்  கொரியன் திரைப்படம் தான் த  தீவ்ஸ்.


============

THE THIEVES-2012/உலகசினிமா/ கொரியா படத்தின்   ஒன்லைன்.


நம்பிக்கை துரோகங்களோடு ஒரு கொள்ளை அதன் பின் ஒரு மாறக்காதல்.. இதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

==========

THE THIEVES-2012/உலகசினிமா/ கொரியா படத்தின் கதை என்ன?


 எல்லாம் கொரிய பெயர் சொன்னால் எனக்கு தலை சுற்றும் படிக்கும் உங்களுக்கும் தலை சுற்றும்... அதனால் பொதுவாய் படத்தோட கதை சுருக்கத்தை சொல்லறேன்.. 

Macao Park ஒரு பக்கா திருடன்... இவனோட குருப்  ஒரு லாக்கர் இருக்கற தங்கத்தை கொள்ளை அடிக்கும் போது  தங்கத்தோட இவன் மட்டும் எஸ் அகிடறான்.. இதனால இந்த கொள்ளையில் ஈடுபட்ட அவனோட காதலி போலிசில்  சிக்கி 4 வருஷம்  ஜெயிலில் கம்பி எண்ணுகின்றாள். வெளியே வந்தால் அவனுக்கு கீழே இருந்த அசிஸ்டென்ட்  போப்பி, ஒரு கும்பலை சேர்த்திக்கிட்டு சின்ன  சின்ன திருட்டு செஞ்சிக்கிட்டு இருக்கான்...


 ஜெயிலில் இருந்து காதலி வெளியே வருகின்றாள்... திரும்ப தங்கத்தை  கொள்ளை அடித்து காணாமல் போன காதலன் ஒரு விலைமதிக்க முடியாத டைமன்ட்டை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுக்கின்றான்...   எல்லோரும் ஒன்று கூடகின்றார்கள்.. அந்த  வைரத்தை கொள்ளை அடித்தார்களா? இல்லையா என்பதே கதை.

==============================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.


பத்து பேர் ஒவ்வோருத்தனும் ஏதாவது ஒரு விஷயத்தில் கில்லாடிகள்... டைமன்ட் எடுக்க அவர்கள் படும் பாட்டை மிக அழகாக  ஸ்டைலாக எடுத்து இருக்கின்றார்.. கொரிய இயக்குனர்  Choi Dong-hoon


கொரிய திரைப்படங்களில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த இரண்டாவது படம் இந்த திரைப்படம்...


டைம்ன்ட் உடன் அடுக்கு மாடியில் கயிறு கட்டிக்கொண்டு  சண்டை போடும் காட்சிகளில் ஸ்டன்ட்  மாஸ்டர் உழைப்பு பிரேமுக்கு பிரேம் தெரிகின்றது..


எனக்கு படத்தில் பிடித்த கேரக்டர் இரண்டு பேர்  ஒன்று அம்மாவோடு திருட கிளம்பும் டீன் ஏஜ் பெண்Yenicall .. அவளோட பாடி லாங்வேஜ் டயலாக் டெலிவரி, பிரசன்ட்ஸ் ஆப் மைன்ட் என்று அசத்துக்கின்றார். சுற்றி போலிஸ் நிற்க்க டவலோடு குளித்துக்கொண்டு இருந்தேன் என்று தம்பிக்கும் அந்த காட்சியில் அதன் பிறகு அவன் நடக்கும் தடிப்பான நடையும் வாவ்.


இரண்டாவது கேரக்டர் பெரிய டான்  ஆனா Wei Hong கேரக்டர்...  எதிரில் யார் எதிர்பட்டாலும் சுட்டுக்கொண்டே செல்லும் அந்த  ஸ்டைல் வயசானாலும் மனிதரின் பாடி லாங்வேஜ் நம்மை ரசிக்க வைக்கின்றது.


கிளைமாக்ஸ் சூப்பர்... அதுவும் Wei Hong டைமன்ட் தேட  மேக்கோ காதலியை பார்த்தம் பேசமுடியாமல் தவிக்க, அந்த காட்சியும் அதன் பின் Wei Hong வலிய கூப்பிட்டு போலிஸ் கவனத்தை திருப்பி தப்பிப்பது  சூப்பர்..


========================
படத்தின்  டிரைலர்.



=================
படக்குழுவினர் விபரம்.
Directed by Choi Dong-hoon
Produced by Ahn Soo-hyun
Written by Choi Dong-hoon
Lee Ki-cheol
Starring Kim Yoon-seok
Lee Jung-jae
Kim Hye-soo
Jeon Ji-hyun
Music by Jang Yeong-gyoo
Cinematography Choi Yeong-hwan
Editing by Shin Min-kyeong
Distributed by Showbox/Mediaplex
Release date(s)


July 25, 2012[1]
Running time 136 minutes
Country South Korea
Language Korean
Japanese
English
Mandarin
Cantonese
Budget ₩15.2 billion
Box office $83,519,699 



===================
 படத்தின் சிறப்பான காட்சி...




===========
படம் வாங்கி தள்ளிய விருதுகள்.

Awards and nominations

2012 Buil Film Awards
Best Cinematography - Choi Yeong-hwan
Best Art Direction - Lee Ha-joon
Buil Readers' Jury Award
Nomination - Best Director - Choi Dong-hoon
Nomination - Best Supporting Actress - Kim Hae-sook
Nomination - Best New Actor - Kim Soo-hyun
2012 Grand Bell Awards[83]
Best Supporting Actress - Kim Hae-sook
Nomination - Best Director - Choi Dong-hoon
2012 Korean Association of Film Critics Awards[84]
Best Cinematography - Choi Yeong-hwan
2012 Blue Dragon Film Awards[85]
Best Technical Award - Yoo Sang-sub, Jung Yoon-hyun
Popularity Award - Kim Soo-hyun
Audience Choice Award for Most Popular Film
Nomination - Best Film
Nomination - Best Director - Choi Dong-hoon
Nomination - Best Supporting Actress - Kim Hae-sook
Nomination - Best New Actor - Kim Soo-hyun
Nomination - Best Screenplay - Choi Dong-hoon, Lee Ki-cheol
Nomination - Best Cinematography - Choi Yeong-hwan
Nomination - Best Lighting - Kim Seong-kwan
2012 Korean Culture and Entertainment Awards[86]
Grand Prize/Daesang - Kim Yoon-seok
Top Excellence Award, Actress in a Film - Kim Hye-soo
Best Film
2012 Women in Film Korea Awards[87][88]
Best Producer - Ahn Soo-hyun
2013 KOFRA Film Awards (Korea Film Reporters Association)[89]
Best Supporting Actress - Kim Hae-sook
2013 Asian Film Awards[90]
Nomination - Best Supporting Actress - Kim Hye-soo
Nomination - Best Supporting Actress - Jeon Ji-hyun
Nomination - Best Cinematography - Choi Yeong-hwan
Nomination - Best Editing - Shin Min-kyeong
2013 Baeksang Arts Awards[91]
Nomination - Best Director - Choi Dong-hoon

Nomination - Best Supporting Actress - Jeon Ji-hyun



==============


பைனல்கிக்.
இந்த படத்தை பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்...  நல்ல  ராப்பரி படங்கள் வரிசையில் கண்டிப்பாக இந்த படத்தை பரிந்துரைக்கலாம்.. ஆனால் என்ன? படத்தின் நீளம் பெரிய மைனஸ்... இரண்டேகால் மணிநேரம்.... அப்படியே ஷார்ப்பா ஒன்னே முக்கா மணி நேரத்துக்கு இதை பிரசன்ட் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் ... டோன்ட் மிஸ் திஸ் மூவி.
===============
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஏழு..

============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. hi there how do you get both tamil and english font properly in your blog.cud u pls explain

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இது மாதிரி ஸ்டென்ட் காட்சியுடம் தமிழ் படங்கள் யாரும் எடுப்பது இல்லை.
    அதே மாதிரி கதை அம்சமும் தமிழ் படஙளில் விருவிறுப்பு படம் முழுவது கொண்டு வருவது இல்லை.ஒரு வேலை தமிழ் படங்கள் 2.30மணி நேரம் ஓட வேண்டிய கட்டாயமாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  4. அபிராமி இதை உங்களுக்கு டைப் அடிச்சி விளக்கம் சொன்னால் ஒரு யுகம் ஆகும்..எனக்கு போன் செய்யவும். 98402 29629

    ReplyDelete
  5. நன்றி சே குமார்... தொடர்ந்து பின்னுட்டத்தில் உற்சாகபடுத்துவதற்கு...

    ReplyDelete
  6. நன்றி ஆரிப்... தொடர்ந்து பின்னுட்டத்தில் உற்சாகபடுத்துவதற்கு... நீங்கள் சொல்வது உண்மைதான்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner