பிம்பிலிக்கு பிலாப்பி,மாமா பிஸ்கோத்து.

2000

4000
6000
8000
பிம்பிலிக்கு பிலாப்பி.
12,000
14,000
16,000
20,000

ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம்... கிளிங்...

மாமா பிஸ்கோத்து, பிம்பிலிக்கு பிலாப்பின்னு  ஏலம் எடுக்க வந்தவன் ஏலக்கடைக்காரன்கிட்ட சொன்னா... ஒரு ஏலக்கடைகாரனுக்கு எப்படி வயிறு எரியும்.

அப்படித்தான் என் வயிறும் எரிந்துக்கொண்டு இருக்கின்றது... கடந்த ஒரு   வருடமாக  நான் யாரையெல்லாம் உயர்வாக,  மரியாதையாக, ஆளுமையுள்ளவர்கள் என்று நினைத்து ,தலைக்குமேல்  தூக்கி வைத்துக்கொண்டு தட்டாமலை சுற்றினேனோ? அவர்கள் எல்லோரும் ஒரு பிரேக்கிங் பாயிண்டில், பிம்பிலிக்கு பில்லாக்கின்னு  சொல்லி அவுங்க சுயரூபத்தை வெளிப்படுத்தினா... உங்களுக்கு  எப்படி இருக்கும்????? 

தேவர் மகன் படத்துல கமல்  அப்பா சிவாஜிக்கிட்ட எந்தஅளவுக்கு மரியாதை செலுத்துவாரு?? அப்படி ஒரு ஒரு அனுபவசாலியை மிக உயர்வாக நினைத்து அவர் எதிரில் இருந்தாலே  அந்த பக்கம் கூட திரும்பாமல் அவர் மீது மரியாதை செலுத்தியிருக்கின்றேன்...   அவரும் பிம்பிலிக்கு பிலாப்பி என்றார் இது சின்ன உதாரணம்...

இன்றைக்கு  எனக்கு இருக்கும்  மிகப்பெரிய பொருளாதார சிக்கலை என் மீது வலுக்கட்டயமாக  திணித்து, தற்போது நான் வாழும் வாழ்க்கையை தன் சுய நலத்தால் நரக வாழ்க்கை வாழ என்னை  காலி பண்ணியவர், நான் மிகவும்  நேசித்த நண்பர்தான்....  உறவுகளில் இருந்து  நண்பர்கள், வரை  இந்த ஒரு வருடத்தில் ,எல்லோரும்  என்னிடத்தில் பிம்பிலிக்கு பிலாப்பி சொல்லி இருக்கின்றார்கள்...

இதில் 5 பெண்கள் உட்பட எட்டு ஆண்கள் வரை அடக்கம்.... எல்லோரையும்  அமைதியாக கவனித்துக்கொண்டு  வருகின்றேன்..போதும் இறைவா இத்தோட நிறுத்திக்குவோம்...

நெருங்கிய  நண்பர்களும் ஆளுமை மிக்கவர்களும் இப்படி   சொல்வது கொடுமையாக இருக்கின்றது...மனது அளவில்  முடியலை.......

ஒருத்தன் சொன்ன பராவாயில்லையா சமாளிச்சிக்கிட்டு போயிடலாம்... அல்லது உதறிட்டு போயிடலாம்... ஆனா  பத்த பேருக்கு மேல ஒரே நேரத்துல கோரசா சொன்னா எப்படி இருக்கும்-?--??? ஆனாலும் ஒரு சின்ன சந்தோஷம் இவர்கள் சுயரூபம் இப்போதாவது தெரிந்ததே என்று சந்தோஷமே.

வழக்கம் போல என் அம்மாவிடம் மனம் உருக  வேண்டி, அவர்களை பற்றி சொல்லி விட்டு அடுத்த வேலையை வழக்கம் போல பார்க்க போய் விடுவேன்... 

அவள் பார்த்துக்கொள்வாள்.

நமக்கு ஆயிரம் வேலை இருக்கு...


 இது போல மனசுல இருக்கறதை, மனசுல வச்சிக்கிட்டு புழுங்கறதை விட ,இப்படி எழுதினா மனசு லேசா ஆகின்றதை நிறைய முறை உணர்ந்து இருக்கின்றேன்....

=========
ரொம்ப சீரியசா திங் பண்ணறிங்களா? 

பிம்பிலிக்கி பிலாப்பி....




நம்பிக்கை தளராமல்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
 

28 comments:

  1. same every where, but dont loose ur confident, v got lot to do as u say. forget, try to forgive .

    ReplyDelete
  2. உங்க அனுபவகளை தனி தனி பதிவா சம்பந்தப்படவர்க்ளின் பெயரை கூட குறிப்பிடமல் எழுதுங்க....

    உங்களுக்கும் கொஞ்சம் சுமையை இறக்கி வைத்தமாதிரி இருக்கும்...
    படிப்பவர்க்கும் வாழ்கை பாடம் கிடைக்கும்,

    எனக்கு தெரிந்த அளவில் உங்களூக்கு கேது தசை புக்தி இருக்கலாம்...
    அப்படி இருந்தால் வேண்டியதை எதாவது உதவிகள் செய்யவும்...

    மேல் விபரங்கள் கூகுளில் kavithai07, பரிகாரங்கள் என்று தேடி பார்க்கவும் www.anubavajothidam.com சைட்டை பார்க்கவும்...

    நன்றி,
    வினொத்

    ReplyDelete
  3. ஜாக்கிக்கு ஏழரை சனி நடக்குது போல ..? இபோதான் நம்மல சுத்தி இருகருவங்கலு நல்லவங்க யாருன்னும் கெட்டவங்க யாருனும் தெரிந்துகொள்ள முடியும்....

    ReplyDelete
  4. "You must pray to God and ask what you want. Ask for “complete satisfaction in my heart, joy in my heart, bliss in my heart, so that the whole world becomes blissful. Give me love, love that I could love the whole world and that the whole world becomes one in love. Give salvation to this humanity which is suffering."

    ReplyDelete
  5. More the heat and more the beatings , the sword will become stronger and sharper... ( Easy to say !!) But if u look ur past life you passed more tougher phases in your life. This phase will also pass by ... Surely u will be in a great place and posistion... Nalla mansuku eppodhume Nallathu nadakum sir... I don't know u personally but I can feel u r good in heart... Don't worry thalaivare... U will overcome... Take care

    ReplyDelete
  6. கவலை படாதீங்க ஜாக்கி, "மான அவமானங்கள் ,ஏமாற்றங்கள் ,தோல்விகள்,நிலை குலைந்து போக செய்யும் கால சூழ்நிலைகள் ,நம்பிக்கை துரோகங்கள் ,செய்யும் காரியத்தில் நஷ்டம், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள்,உறவினர் நண்பர்களின் சூதுகள் ,அன்பின் இழப்புகள் , இவை அனைத்தும் மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் .இது போன்ற போராட்டங்களை மன உறுதியுடனும் ,துணிச்சலுடனும் எதிர் கொள்கின்ற மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக திகழ்கிறான்" . பகவத் கீதை

    ReplyDelete
  7. வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது! அனுபவங்கள் சும்மா கிடைப்பது இல்லை! மீண்டு வர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இது யெல்லாம் பொருளாதாரத்தை சார்ந்த பிரச்சினைகளால் உந்தப்பட்டு சந்தர்ப்பத்தை பொருத்து வெடித்த முகங்களாக இருக்கலாம் ஜாக்கி சார்.

    எதையும் எதிர் பார்க்காத தோழமைக்கு மனைவி மக்களை நினைத்து சந்தோசம் பட்டு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. கவலை படாதீங்க ஜாக்கி, "மான அவமானங்கள் ,ஏமாற்றங்கள் ,தோல்விகள்,நிலை குலைந்து போக செய்யும் கால சூழ்நிலைகள் ,நம்பிக்கை துரோகங்கள் ,செய்யும் காரியத்தில் நஷ்டம், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள்,உறவினர் நண்பர்களின் சூதுகள் ,அன்பின் இழப்புகள் , இவை அனைத்தும் மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் .இது போன்ற போராட்டங்களை மன உறுதியுடனும் ,துணிச்சலுடனும் எதிர் கொள்கின்ற மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக திகழ்கிறான்" . பகவத் கீதை

    ReplyDelete
  10. If you reached a point where you feel you can't endure anymore, then that is the point where the problem ends....expect good things from now on cos everything will be over and great opportunities will be on your way.

    ReplyDelete
  11. அனைத்தும தங்களை கடந்து போகும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  12. jackie anna,

    this will happen to anyone during bad time periods.even i had gone through this from childhood. i learned to keep some distance with everyone at all times.there is no other way.

    ReplyDelete
  13. Ethu nadanthatho athu nanragave nadanthathu

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. //ரொம்ப சீரியசா திங் பண்ணறிங்களா?

    பிம்பிலிக்கி பிலாப்பி....//
    :)

    இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  16. We all with you anna. Be happy and do your work.

    All is well

    ReplyDelete
  17. இதுவும் கடந்து போகும்

    All is well anna. God is with You

    ReplyDelete
  18. தோள் கொடுத்த தோழமைகளுக்கு என் நன்றிகள்.. உங்கள் வார்த்தைகள் எனக்கு எனர்ஜி டானிக்... குறிப்பிட்ட நபரை சொல்லி அவரா இவரா என்று ஆருடம் கேட்கின்றார்கள்...பதிவுலகம் தவிர்த்து எனக்கு உறவுகள் நண்பர்கள் கூட்டம் இருக்கின்றதை இவர்கள் எளிதாய் மறந்து போகின்றார்கள். அல்லது எவரையாது தெருவில் போகின்றவரை இழுத்து போட்டு குளிர்காய நினைக்கின்றார்கள்.. அவர்களுக்கு நேரம் போக வேண்டும் அல்லவா? என் .ஆனால் போன் செய்து நட்பாய் நம்பிக்கையாய் நாலு நல்ல வார்த்தை பேசி நாங்க இருக்கோம் என்று நிறைய தம்பிகள் வயது ஒத்தவர்கள் அனுபவசாலிகள் சொல்லுகின்றார்கள்... அந்த வாழ்த்துகள் போதும்... நான் மீண்டு வர. நன்றி

    ReplyDelete
  19. Anna...
    Ellam sariyakividum...
    Kavalappadathenganna...

    Nallathe natakkum anna...


    ReplyDelete
  20. ஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள்தான் ஜாக்கி.
    கடந்து வரத்தான் நமக்கு அறிவை கொடுத்து இருக்கிறான்.

    கஷ்ட காலத்தில்,
    நல்ல நண்பர்களுடன் பேசுவது...
    நல்ல சினிமாவை பார்ப்பது...
    இதை மட்டுமே நான் கடை பிடித்து வருகிறேன்.

    எக்காரணம் கொண்டும் அண்ணன்,தம்பி,,அக்கா,தங்கை,மாமன்,மச்சான் என எந்த உறவுகள் பக்கம் மட்டும் எட்டி பார்க்க மாட்டேன்.
    திருமணத்திற்கும் கூட செல்ல மாட்டேன்.
    [மரணத்திற்கு மட்டும் தவிற்க முடியாமல் செல்வேன்.]
    அவர்களும் இப்போது என்னை புரிந்து கொண்டார்கள்.
    ‘வசதியாயிருந்தால் மட்டுமே வருவான்’.

    கஷ்டத்தை கடந்து வர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  21. தங்களுடைய எழுத்து நடை அப்படியே சாரு நிவேதிதாவை ஒத்திருக்கிறது நீங்கள் அவரை படிச்சிருக்கிங்களா ஜாக்கி ? அவரும் உங்களை மாதிரியே நண்பர்களை நம்பியே ஏமாறுகிறவர். வாழ்கையில் நிறைய அடிபட்டு மேலே வந்தவர். உங்கள் இருவருக்கும் இப்படி நிறைய ஒற்றுமை. அவரை படியுங்கள் ஜாக்கி, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
    நன்றி
    மோகன்

    ReplyDelete
  22. இதே நிலைதான் இப்போது எனக்கும்.... யாரை நொந்தும் பயனில்லை...
    நடப்பது நன்மைக்கே...
    பார்க்கலாம்...

    ReplyDelete
  23. dont worry jackie sir.we reach our GOOD TIME soon.

    ReplyDelete
  24. Dont worry jackie sir.We reach our GOOD TIME SOON.

    ReplyDelete
  25. The greatest teacher in the world is experience. For heaven's sake, do not curse the persons who have backstabbed you but wish them good luck to be peaceful in their life. When my house was robbed of all the jewels and ornaments before 17 years, I really wished him good luck and also prayed the Almighty to give him good life out of this stolen jewels. But today I am well off but still do not know the life style of the thief.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner