Compliance-2012/ உலகசினிமா/ அமெரிக்கா/ வஞ்சிக்கப்பட்ட அப்பாவி இளம் பெண்

.


மடத்தனம் செய்யறதுக்கு
ரொம்ப அறிவாளியாவோ  தண்ணிவாளியாவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை... சூழ்நிலையும் அனுபவமின்மையும்தான் நம்மை மடையானாக்குகின்றது...

சூது கவ்வும் படத்தில் வரும் டயலாக்கில்  வருவது போல மடத்தனம் செய்ய ரு குருட்டுதனமான முட்டடாள்தனம் வேணும்,ஒரு  புத்திசாலிதனமான முரட்டுதனம் வேணும்...

யாரும் பிறக்கும் போதே குற்றம்  செய்ய வேண்டும் என்று பிறப்பதில்லை.. ஆனால் சூழ்நிலைகள் நம்மை குற்றம் செய்ய வைக்க தூண்டுகின்றன.. அவைகள் முட்டாள்தனத்தின் பக்கம் நின்று நம்மையும் சாய்த்து விடுகின்றன.

கற்பழித்து கொலை செய்தால் போலிசில் மாட்டிக்கொண்டு  ஆயுள் கைதியாக  கம்பி என்ன வேண்டும் என்று தெரிந்தும்... கற்பழிக்கவில்லை... அதுவும் படித்தவனே அந்த தப்பை ஈவு இரக்கம் இல்லாமல் செய்யவில்லை..?? அது போலத்தான்...

நன்றாக தெரியும் ஆலமரத்தில் பேய் இல்லை என்று ஆனாலும்  நாம் என்ன செய்வோம்..ஆலமரத்தில் பேய் இருப்பதாக காலம் காலமாக  நம் மனதில் பதிந்து போன  பொய்யான  உண்மை..  அந்தி சாயும் போது ஏழு மணிக்கு அந்த பக்கம் வரும் போது காற்றில் கிளை  முறிந்த சத்ததில் கூட பேய் வந்து பிடறியை டச் பண்ணதாக நினைத்துக்கொண்டு மண்டையை போட்டவர்கள் ஏராளம்....காரணம் பேய் பற்றி நமக்கு   காலம் காலமாக சொல்லிக்கொடுக்கப்பட்ட படம்...

அது போலதான் போலிஸ்...  போலிஸ் வீட்டுக்கு வருகின்றது என்றால் நம்மில் எத்தனை பேருக்கு வாங்க சார் என்ன விஷயம் என்று கேட்கும் அளவுக்கு புரிதல் இருக்கின்றது... போலிஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகின்றேன் என்று சொன்னதும் என்ன செய்கின்றோம் படபடப்பாகின்றோம்...

ஏ2  இன்ஸ்பெக்ட்ர்  பாலமுரளி பேசறேன்.

முருகேசன் உங்க பையன்தானா?

ஆமாங்க...

 அவரை பத்தி விசாரிக்க வேண்டி இருக்கின்றது...

 சாமி  முருகேசன் எங்க புள்ளைதான்... எந்த தப்பு தண்டாவும் பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை.... ரொம்ப நல்லவன் சாமி என்று உச்சி முதல் பாதம் வரை வேர்த்து  போனில் அழுது புரளுவோம்..

யோவ் உன் புள்ளை பாஸ் போர்ட் அப்ளே பண்ணி இருக்கான்... அதனால் வீட்டுக்கு வந்து அட்ரஸ் வெரிபிகேஷன்  செய்யனும்... ஏட்டு கலசலிங்கத்தை அனுப்பி வைக்கின்றேன் என்றதும் தான்  நிம்மதி வரும்... அதே  போல  ஏட்டு கலசலிங்கம் வீட்டுக்கு வந்து போகும் வரை அள்ளு இல்லாமல்  எது கேட்டாலுமி உளறி தள்ளி அவரை அனுப்பி வைப்போம்... காரணம்  பேய் போல காலம் காலமாக நம் மனதில் போலிஸ் பற்றிய எண்ணம் அவ்விதமாக பதிய  பட்டு இருக்கின்றது... போலிசை பார்த்து பயப்பட படிச்சவன் படிக்காதவன்ற வித்தியாசம்லாம் ஏதும் இல்லை.

குள்ளநரிக்கூட்டம் படத்துல போலிஸ் என்றால் ஹீரோவின் அப்பாவுக்கு ஆகாது... இத்தனைக்கு கவர்மென்ட் உத்யோகம் செய்பவர்தான்..  அது போலத்தான் எல்லாரும்.

அது  அமெரிக்காவா இருந்தாலும்  ஆப்பிரிக்காவா இருந்தாலும் ஒன்னுதான். அப்படி அமெரிக்காவில் மாட்டிய ஒரு அப்பாவி பெண்ணின் உண்மைகதைதான் இந்த Compliance  படத்தின்  அடிநாதம்.



==============

Compliance-2012/ உலகசினிமா/ அமெரிக்கா  படத்தின் ஒன்லைன்.



படித்தவர்ளும் முட்டாள்தனமாக நடந்து கொள்ள சூழ்நிலை  ஒன்று போதும்... இதான் ஒன்லைன்.


====================

Compliance-2012/ உலகசினிமா/ அமெரிக்கா படத்தின் கதை என்ன?



நீங்கள் ஒரு பெண்மணி


உங்கள் பெயர் சான்ட்ரா.


நீங்கள் 40 வயதை  கடந்தவர்.


நீங்கள்  நேர்மையானவர்.


நீங்கள் பாவபுண்ணியம் பார்ப்பவர்.


நீங்கள் ஒரு  பாஸ்ட் புட் ரெஸ்ட்டாரண்ட் வைத்து நடத்துகின்றீர்கள். அதில் கூட்டம்  அம்முகின்றது... உங்களிடம்   ஆறு பேர் வேலை  செய்கின்றார்கள்... அதில் மூன்று பேர் பெண்கள்.. மூன்று பேர் ஆண்கள்.


பேகி என்ற பெண் அழகானவள் திறமையானவள்... கூட்டம் அம்மிக்கொண்டு இருக்கும் போது, உங்களுக்கு போன் வருகின்றது...  போனில்  போலிஸ் டேனியல் பேசுகின்றேன்...  இங்கே ஒரு பெண்   கம்ளையின்ட் கொடுத்து இருக்கின்றார்...  

உங்கள் ஓட்டலில் வேலை  செய்யும் பேகி என்ற பெண்  இவருடைய பணத்தை திருடி விட்டதாக புகார் கொடுத்து இருக்கின்றார்...  பேகியை அழைத்து போய்  தனியறையில் சோதனை செய்து,  அவளிடம் பணம் இருக்கின்றதாக செக் செய்யவும்  நான் லைனில் இருக்கின்றேன்  என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??


  அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை...  பேகி  கவுண்டர் சேல்சில் இருக்கின்றாள்.. அவளுக்கு  திருடும் பழக்கம் இல்லை.. இங்கே சர்வலன்ஸ் கேமரா இருக்கின்றது... புகார் கொடுத்து பெண்ணை அழைத்து வாரூங்கள்.. கிளியர் செய்து   கொள்வோம் என்று ஒரு மேனஜர்  அல்லது ஒரு ஓட்டல் உரிமையாளர் அப்படித்தான்  சொல்லி இருக்க வேண்டும். அனால் அப்படி சொல்லவில்லை.. போலிஸ் மீதான பயம் காரணமாக நம்புதல் போல பேசினகாரணத்தால்...

அந்த பெண்ணை தனியறைக்கு அழைத்து போய்  போலிஸ்  டேனியல் போனில்   சொல்ல  சொல்ல ....  அந்த அப்பாவி டீன் எஜ் பெண்ணை ,உடை கழற்ற செய்து நிர்வாணமாக்கி, அப்புறம் நினைத்துக்கூட பார்க்க முடியாத  சம்பவங்கள் மூன்று மணி நேரத்தில் நடந்து இருக்கின்றன... காரணம் போலிஸ் போல ஒரு சைக்கோ பேசினாலும் போலிஸ் என்பதால் எதை பற்றியும் யோசிக்காம்ல்  நடந்த உண்மை சம்பவத்தின் அப்பட்டமான தொகுப்பு இந்த திரைப்படம்.


============
படத்தின் சுவாரஸ்யங்கள்...

 படத்தின் ஆரம்பத்தில் உண்மை சம்பவம் போல ஒரு போலிஸ் பேசுவது போல இருந்தாலும் 20  நிமிடத்தில் அவன் போனில்  சொல்ல சொல்ல செய்ய வைப்பது போலிஸ் மீதான மக்களின்  பார்வைதான்.


படத்தின் ஹீரோயின் Dreama Walker பார்க்க யாரையோ நியாபகபடுத்துகின்றார்... யார் என்றால்  இயக்குனர் பார்தீபன் மகள் கீர்த்தனா போலவே இருக்கின்றார்....

 பேகி கேரக்டரில் நடித்த Dreama Walker  சான்சே இல்லாத நடிப்பு... முதலில் உடை அவிழ்க்க எதிர்ப்பு தெரிவித்தாலும் இதை அவிழ்த்தால் தன் உடன் பணிபுரிவோர் நம்பி விடபோகின்றார்கள்.. இந்த திருட்டு குற்றத்தில் இருந்து உடனே வெளியே சென்று விடலாம் என்று நினைத்தால்.... அது  அவரை எங்கோ இடியாப்ப சிக்கலில்  கொண்டு சென்று விடுகின்து..


 பேகி பேசும்  போது எல்லாம் அவளை மிக சாதுர்யமாக பேச்சில்   அடக்கி பேசும் அந்த சைக்கோ... அவளை லாஜிக்கா  திரட்டன் செய்யும் காட்சிகள் கொடுமை... இது உண்மை சம்பவம் எனும்  போது... நம்பாமல் இருக்க முடியவில்லை..  அதுக்கா ஒரு பெண் ஓரல்  செக்ஸ் வரை போவளா? என்றாள் கண்டிப்பாக பயத்தில் ஏது வேண்டுமானாலும்  செய்யலாம்...

போலிஸ்   விசாரனைக்கு அழைத்து செல்லும் போது உளவியலாக  உங்களை திக்கு முக்காடி உங்களை பயமுறுத்த  முதலில் ஒரு முரட்டுதனமாக அறைவிடுவார்கள்... பொறி கலங்கி போய் இருக்கும் போது அவர்கள் கேட்கும் கேள்விகள் அத்தனைக்கு  உளறி கொட்டுவீர்கள்... அதுதான் அந்த பயம்தான் அவர்களுக்கு  தேவையாய் இருக்கின்றது.. அந்த பயத்தை வைத்தே  அந்த சைக்கோ பேகியை    மிரட்டுவது  கொடுமையிலு கொடுமை..


 எல்லா துணியையும் அவிழ்த்து விட்டு ஒரு நாற்றம் பிடித்த ஏப்பராளை கொடுத்து உடலை மறைத்துக்கொள்ள வைத்து இருக்கும் காட்சியும்...அவளோடு வேலை பார்க்கும்  ஒரு பையனை  அவளை பார்த்தக்கொள்ள சொல்ல.... அவனிடம் போனில்  அந்த சைக்கோ பேகி எப்ரானை தூக்கி பார் என்று சொல்ல.... வாட் த பக் யூ  ஆஸ்கிங் மீ என்று சான்ட்ராவிடம் போனை கொடுத்து என்னால்  முடியாது என்று  விலகி செல்லும் காட்சி நேர்மையான நட்பின்  வெளிப்பாடு.
 ==========

(அமெரிக்காவின் எபிசி தொலைகாட்சி பாதிக்கப்பட்டவர்களை இன்டர்வியூ எடுத்த  சில  காட்சிகள் உங்களுக்காக.)


 =============

அவள் பின்புறத்தில் பணத்தை ஒளித்து வைத்து இருப்பாள் என்று கன்வின்ஸ்  செய்து அவளைகுனிய வைத்து அவளது பட்டக்சில் பத்து நிமிடத்துக்கு மேல் அடித்து கன்னி போக  செய்து இருக்கின்றான் அந்த சைக்கோ..  அவன் அடிக்கவில்லை போனில் லைனில் இருப்பவர்களை எல்லாம் அவர்கள்  பிரச்சனையை வைத்தே  மிரட்ட வைப்பது  பயங்கரம்.

இந்த படம் சுடான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு  பயங்கர அதிர்வலை  ஏற்ப்படுத்திய படம்...அ தே போல சான்ட்ரா பாத்திரத்தில் நடித்த Ann Dowdக்கு National Board of Review Award for Best Supporting Actress விருது கிடைத்தது...


எந்த பெரிய கடையாக இருந்தாலும், பேக் ஆபிசில் இது போல ஒரு பிரச்சனை சுவற்றுக்கு பின்னால் எந்த நிறுவணத்தில் வேண்டுமானாலும் நடந்து கொண்டு இருக்கலாம் என்பதை இந்த படம் நேர்மையாக உணர்த்துகின்றது.

அமெரிக்காவில்....30 மாகணங்களில் 70 சம்பவங்கள் போலிஸ் போல போன் செய்து மிரட்டி பெண்களை பாலியல் வன்முறைக்கு பாலியாக்குவது நடந்து இருப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது...


இயக்குனர் Craig Zobel ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி நம்மை இந்த படத்தில் பொருத்திக்கொண்டு தூங்க விடாமல்  செய்கின்றார்... அவருக்கு ஒரு பிரஷ் பொக்கே.


===========
படத்தின் டிரைலர்.


============
படக்குழுவினர் விபரம்.


Directed by Craig Zobel
Produced by Craig Zobel
Sophia Lin
Theo Sena
Lisa Muskat
Tyler Davidson
Written by Craig Zobel
Starring Ann Dowd
Dreama Walker
Pat Healy
Music by Heather McIntosh
Cinematography Adam Stone
Editing by Jane Rizzo
Studio Dogfish Pictures
Distributed by Magnolia Pictures
Release date(s)
January 21, 2012 (Sundance)
August 17, 2012
Running time 90 minutes[1]
Country United States
Language English
Box office $319,285[2] 
==================

பைனல் கிக்.

அமெரிக்காவில்  புல்ட்டி கவுன்டி மாகணத்தில்  இருக்கும் மெக்டொனல்ட் கடையில் ஒரு அப்பாவி பெண்ணுக்கு  நடந்த உண்மை கதையே இந்த  டாக்கு டிராமா டைப் திரைப்படம்.. அவசியம்   இந்த படத்தை பெற்றோர்கள் மற்றும் 15 வயதை கடந்தவர்கள் இந்த படத்தை பார்க்கவேண்டும்... இப்படி ஒரு சூழ்நிலை யாருக்கு வேண்டும்னாலும்  நடக்கலாம்...  நீங்கள் தப்பு செய்ய வேண்டிய  அவசியம் இல்லை... நீங்கள் அழகாக இருக்கலாம்  அல்லது உங்கள் எதிரியாராவது இது போல செய்யலாம்... அதனால் வயதுக்கு வந்த பெண்கள் இந்த படத்தை  அவசியம் பாருங்க... சூழ்நிலை நம்மை குற்றம் செயலை நோக்கி நம்மையறியாமல் நம்மை தள்ளி விடும் என்பதை  சான்ட்ரா கேரக்டர் நம்மை உணர்த்துகின்றது.... இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்.

==================


படத்தின்  ரேட்டிங்.

பத்துக்கு எட்டு.
=============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. அருமையான விமர்சனம்...
    படிக்கும் போதே பேகி பட்ட பாடு நம்மை அதிர வைக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி சே குமார்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner