சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/07/07/2013


ஆல்பம் ...

 காதலும் காமமும் இயற்கை, 
மனித  வாழ்க்கை தழைக்க வகுத்து கொடுத்த நியதிகள்.ஆனால் இங்கே திருமணம் செய்தும் வெறி தணியாது... காதலன் மண்டை பிளக்கப்ப்பட்டு சாகின்றான்... சாதியை வைத்து இரண்டு  சாதிகளுமே செய்யும் அட்டகாசங்களை பொதுமக்கள் அறிவார்கள்... அதனால் எந்த சாதியும்  யோக்கியசாதி இல்லை என்பதே  உண்மை....ஆனால் சாதி அடையாளத்தை மட்டும் தமிழகத்தில் ஒழித்து விடலாம் என்று கனவு மட்டும் காணாதீர்கள்... அது புரையோடி போய்  விட்டது... அதனால் நானே   நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கின்றேன். அதனால்  சாதியை ஒன்றும் செய்யமுடியாது. 


இந்த மாதிரி கொடுமை எல்லாம் நடக்கும் என்றுதான் பெரியார், கலப்பு மணங்களை ஆதாரித்து தொலைத்தார்... ஆனால் கடந்த இருபது வருடத்தில் பெரியார் கண்ட கனவு எல்லாம் பணால் ஆகி  தொலைத்து விட்டது... 


நியாயப்படி பார்த்தால்  ஆதிக்க சாதியினரிடம்தான் இந்த இரண்டு சாதிகளும் போட்டி போட வேண்டும்.. ஆனால் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு எதிர்கால தலைமுறையினரின்  வாழ்வை ஒரு சிலரின் பிழைப்புக்கு, அப்பாவி மக்கள் பலியாகிபோகின்றார்கள்.   இந்த  நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.

=======
  நெய்வேலியில் இன்னும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகின்றது... இப்போதுதான் இரண்டு மணி நேர மின் வெட்டில் இருந்து தப்பிச்சோம்..  இனி அப்படி இல்லை ... போராட்டம் பெரியதானால் இன்னும் மின்வெட்டு தவிர்க்க முடியாதது அகி விட்டது. ஒரு மழைதான் பெய்ந்து விட்டு சென்றது..

 கொசு தொல்லை அதிகரிக்க  ஆரம்பித்து விட்டது.. குழந்தையை வச்சிக்கிட்டு  இராப்புரா விசிறிக்கிட்டு கை வலிக்கற கொடுமை இருக்கே..அட நாரயணா... என்னடா செய்யறது..?

/=====================
மிக்சர்.


 தமிழ்தாய் சிலைக்கு  எந்த  அளவில்  பணிகள் ஆரம்பித்து இருக்கின்றன என்று தெரியவில்லை... ஆனால் இப்போது மாமல்லபுரத்து அருகே 250  கோடியில் கடல் வாழ் உயிரின பூங்கா  ஒன்றை திறக்க போவதாக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கின்றார்...பென்னி குக் மணி  மண்டபம் ஒரு மழைக்கே  நீர்  கசிகின்றதாம்.... அது போல அட்டு கண்டிராக்டர்களிடம் பணியை வழங்காமல் நேர்மையான காண்டிராக்டரிடம் பணிகளை வழங்க அம்மா தாயுள்ளத்தோடு பரிசீலிக்க வேண்டும்அ கடல்மாதா சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

========================
டாஸ்மார்க்கில் மினி குவாட்டர் அறிமுகபடுத்த போகின்றார்களாம்... இது ஏற்க்கனவே பெங்களுரீல்  நடை முறையில் இருக்கின்றது...  கட்டிங் ஷேர் பண்ணலாமா? என்ற யாரும் யாரையும் பிச்சை எடுக்கும் குறையாக யாரையும் கேட்பதில்லை... ஆனால்  மினிகுவாட்டரை அறிமுகபடுத்துவதில் காட்டும்  வேகத்தை மினி பேருந்தில் காண்பிக்க வேண்டுகின்றேன்.. 


ஒன்றரை வருடத்துக்கு முன்   சென்னையில் மினி பேருந்துகள் அறிமுகம் என்று சொன்னார்கள்....ஆனால் இன்று வரை சென்னையில் மினி பேருந்துகள் அறிமுகம் செய்யவில்லை..... குவாட்டரை விட பேருந்துகள் அறிமுகபடுதிதினால் ஷேர் ஆட்டோ நெருக்கலில் இருந்து  பயணிகள்  தப்பிப்பார்கள்.


=================
 நம்ம  ஆட்டோ கட்டுரையை நான் எதெச்சையாக எழுதினேன்... ஆனால் அதே வாரத்தில் விகடனில் நம்ம ஆட்டோ கட்டுரை வந்ததை பார்த்து விட்டு அப்படியே உங்க  கட்டுரை போலவே  விகடன்ல எழுதி இருக்காங்க... என்ன ஒரே வித்தியயாசம் அந்த ஓனர்கிட்ட பேட்டி வாங்கி போட்டு இருக்காங்க என்று நண்பர்  செந்தழல்ரவி, தங்கை சியாமளா  போன்றோர் போன் செய்து சொன்னார்கள்... நல்ல விஷயம் அது நாலு பேரிடம் போய் சேர வேண்டும் என்றுதான் அந்த போஸ்ட்டை எழுதி ஷேர் செய்ய சொன்னேன்... கடைசியில்  வெகுஜன ஊடகமான விகடனில் வந்ததில் மகிழ்ச்சி... 


இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.. நான் நம்ம  ஆட்டோவில் இருந்து அப்துல்லா  பேசறேன்... இரண்டு வருஷமா உங்க தளத்தை  வாசிச்சிக்கிட்டு இருக்கேன்... உங்க ரைட்டிங்ல நம்ம ஆட்டோ பற்றிய செய்தி  வந்தது, ரொம்ப  சந்தோஷம் அண்ணே என்று போனில்   நெகிழ்ந்தார். உலகம் மிக  சிறியது.

===========================

அம்மாவின் ஸ்டைலில் ரொம்ப முக்கியமானது... ரத்த உறவுளை முட்டிக்கொள்ள  வைப்பது... முன்பு தாமரைக்கனி  அந்த வரிசையில் தற்போது பரிதிஇளம்வழுதி.

==============================
தமிழ்நாடு கிரைம் ரேட்

 சட்டுன்னு இன்ஸ்டன்ட்  கொலைகள் சமீபத்தில் அதிகரித்து இருக்கின்றன...
சிவகங்கையில் ஒரு சிறுமியை கொலை செய்து  வாஷ் பேஷனுக்கு கீழே புதைத்து வைத்து இருக்கின்றான்...

பக்கத்து வீட்டுக்காரன்  போதையில் பாட்டியை கூட விட்டுவைக்காமல் கற்பழித்து உதட்டை கடித்து  கொடுமை படுத்தி இருக்கின்றான்...

கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வேலை செய்த பெண்ணை காதலன் கழுத்தை நெருக்கி கொலை செய்து இருக்கின்றான்... ஏன்டா கொலை செய்தாய்? என்று கேட்டால் அவள் மற்ற ஆண்களுடன்   சிரித்து பேசினாலாம்.. என்ன கொடுமைடா இது.. இந்த பொரிக்கியை கல்யாணம் பண்ணா  பூட்டி வச்சிட்டுதான் வேலைக்கு போய் இருப்பான்..  என்னவோ கொலை செய்யறது ரொம்ப ஈசியா போயிடுச்சி.... அதுமட்டும் நல்லா தெரியுது...

=================
படித்ததில் பிடித்தது.

 நண்பர் அராத்து முகநூலில் இதை பகிர்ந்து இருந்தார்.... படித்து விட்டு குபீர் என்று   சிரித்துக்கொண்டு இருந்தேன்...  நீங்களும் சிரிக்க.,

=================
ஒரு பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்கும் போது , டெல்லி கற்பழிப்பை பற்றி பேச்சு வந்தது. அந்த பெண் ,கொஞ்சம் பயமாதான் இருக்கு இரவில் தனியே வெளியில் செல்ல என்று சொல்லி , நான் அப்படி மாட்டிகிட்டா , நினைச்சாலே பகீர்ன்னு இருக்கு என சொன்னார்.

நான் , ஒரு ஆளிடம் மட்டும் மாட்டினா ஈஸியா எஸ்கேப் ஆயிடலாம் என்றேன்.

எப்படி என அவர் கேட்க ,

நல்ல சந்தர்ப்பம் பார்த்து அவன் கொட்டையிலேயே உங்க முட்டிக்காலால் ஒரு எத்து எத்தணும். அதுவும் அவனை இறுக்கி கட்டி பிடிச்சி , அவன் அடடா என சொக்குகையில் உங்க காலை பின்னால ஒரு வாங்கு வாங்கி ராக்கெட் ஸ்பீடில் கொட்டையில் முட்டிக்காலை லேண்ட் பண்ணா அவனுக்கு தெறிச்சிடும்.அப்படியே சரிஞ்சிடுவான் . இனம் புரியாத மயக்கத்தில் உயிர் வலி பின்னி எடுக்கும். நீங்க துப்பட்டாவை சரி பண்ணிகிட்டு ஜாலியா ஸ்லோமோஷன்ல எஸ்கேப் ஆகலாம் என்றேன்.

அய்ய்யோ பாவம் , ச்சே அவனுக்கு எவ்ளோ வலிக்கும் , பாவம்பா, என்னால அப்படி பண்ணவே முடியாது ,நான் ரொம்ப ஸாஃப்ட் நேச்சர் என்றார் அந்த பெண்.

என்னை யாரோ கொட்டையில் உதைத்தது போல கிர்ர்ர்ர்ர்ரென்றது.

==========================
பேஸ்புக்கில் பார்த்ததில் ரசித்த  மேட்டர்...




===============
கடந்த வாரம் பேஸ்புக்கில் நான் பகிர்ந்தவை.


இன்னும் ஒரு வாரத்தில்... சாதிவெறியர்கள், ஊடக கேள்விகள் என துரத்தோ துரத்து என துரத்தி, அந்த பெண்ணையும் தற்கொலைக்கு தூண்டி அவளையும் சாகடிச்சதுக்கு அப்புறம் தான், பெரிய நோபல் பரிசு சாதனை நிகழ்த்தியது போல, நிம்மதியாக உறக்கம் கொள்ளுவார்கள் சாதி வெறிப்பிடித்த கயவர்கள்.

=================



இந்த படத்தை பார்த்ததில் இருந்து கிலிபிடித்து இருக்கின்றேன்.... எல்கேஜி பசங்களின் புத்தகம்... மாடி வீட்டில் யாழினிக்கு படிக்க கொடுத்தார்கள்... படத்தில் அம்மா கம்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றாள்..... தாத்தா பேப்பர் படிக்கின்றார். பாட்டிபசங்களை பார்த்துக்கொள்ளுகின்றார்... பசங்க விளையாடுகின்றன.
அப்பா சமையல் செய்து கொண்டு இருக்கின்றார்...

வேலைக்கு போற பொண்டாட்டியாச்சேன்னு பிக்கப் டிராப் செய்யறது. பத்து பாத்திரம் கழுவி கொடுக்கறது.. காய்கறி நறுக்கறதுன்னு எதோ சின்ன சின்ன ஹெல்ப் பண்ணிக்கிட்டு வரேன்..

இந்த படத்துல இருக்கறது போல பிஞ்சுங்க மனசுல அப்பா சமைக்காறான்னு பதிய வச்சிட்டா... அதுக்கான வேலை நடந்துக்கிட்டு இருக்குன்னு இந்த படத்தை பார்த்தலே தெரியுது...

அதனாலதான் இந்த படத்தை பார்த்ததில் இருந்து கிலிபிடிச்சி கிடக்கறேன்....யாழினி என்ன சமைச்சி இருக்கப்பான்னு கேட்கறதுக்குள்ள அட்லிஸ்ட் உப்மா சமைக்கறது எப்படின்னாவது கத்துக்கனும்... அட நாராயணா?? எண்ணி மூன்று நாலு வருஷத்துல ஜல்லிகரண்டி நம்ம கைக்கு மாறிடும் போல.,..

ஜல்லிகரண்டி பயத்தோடும் கிலியோடும் ஜாக்கி.

==============


இப்படி ஒரு மேசேஜ் என் எப் பி இன்பாக்ஸ்ல வந்து இருந்துச்சி..

Nibia Stella
Hi dear !
I looked at your actual pics on fb. I'm keen on you a lot. Let us talk !
I could send you my pics if you want, email me directly at: (nayyerstella@yahoo.co.uk)
Hoping to see you soon
stella for you
பதிலுக்கு...


ஒரு மயிறும் வேணாம்ன்னு தமிழ்ல டைப் அடிச்சி அனுப்பிட்டேன்.. டேய் யாருக்கிட்டடீ...??? நாங்க எல்லாம் அப்பவே அப்படி....
====================
நான்வெஜ் 18+


A drunk guy walks into a bar and walks up to a guy and says, “I just had sex with your mom!” The guy walks away angrily.

A few minutes later the drunk guy comes up to the guy again and says, “I just had great sex with your mom!” The guy walks away angrily.

A few minutes later the drunk guy comes up to him again and says, “I just had the best sex ever with your mom!” The guy now says, “Shut up dad! You’re drunk again!

================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

5 comments:

  1. STELLA ஊருக்கெல்லாம் அனுப்புவா போலிருக்கே...

    எல்லாம் அருமை...

    ReplyDelete
  2. //ஜல்லிகரண்டி பயத்தோடும் கிலியோடும் ஜாக்கி.// LOL..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner