Singam II-2013 இரண்டாம் சிங்கம் ஆக்ஷன் பேக்கேஜ்.



 இயக்குனர் ஹரி
பார்க்கறதுக்குதான் தலை கலைஞ்சி கிராமத்து லுக்குல இருப்பார்... ஆனா அவரது படங்கள் ஆக்ஷன் பரபரப்புக்கு நெகிழ்ச்சிக்கும்  பஞ்சம் இருக்காது.. அது மட்டும் அல்ல... கடின உழைப்பாளி...இரவு பகல்பாராமல் உழைத்துக்கொண்டே இருப்பவர்..  இந்த படத்துக்கு முன் அவரது படைப்பான  வேங்கை எனக்கு ரொம்பவே பிடித்த படம்... சமீபத்தில்தான் அந்த படத்தை பார்த்தேன் ரசித்தேன்.... அதே போல சிங்கம் முதல் பாகம் ஒரு ஆக்ஷன் பேக்கேஜ்... ரொம்ப பரபரப்பா பண்ணி  இருப்பார்..

ஹீரோ குடும்ப செண்டிமென்ட்டோடு இருப்பார்... அவரது எல்லா ஹீரோ கதாபாத்திரங்கலும்   செண்டிமென்ட்காரர்கள்தான்... குடும்பத்துக்காக உயிரையே கொடுப்பவர்கள்...இந்த குடும்ப சென்ட்டிமென்ட்  ஹீரோவோடு மாபியா  கும்பல் கதையை சற்றே டீடெயிலாக நீட்டி முழக்குவார்... அதில் கூட லாஜிக்  இருக்கும்...  அதே போல பி  சி சென்டர் ரசிகர்கள் நாடி துடிப்பும் இவருக்கு அத்துப்படி.

பறந்து பறந்து சண்டை போட்டாலும் கொஞ்சமாவது லாஜிக்கோடு படம் எடுக்கும் கமர்ஷியல் இயக்குனர்களில்  ஹரியும்  ஒருவர் என்பதை  நாம் மறுக்க முடியாது.  சூர்யா பற்றி நாம் சொல்லவே வேண்டாம்.. இவர்கள் இரண்டு பேர்  இணைந்த மிரட்டும் இந்த சிங்கம் 2 படத்தை பற்றி  சற்றே விரிவாய்.

====================
Singam II-2013 படத்தின் ஒன்லைன்.



 என்சிசி ஆபிசர் போல போலிஸ் துரைசிங்க   சூர்யா   தூத்துக்குடி ஹார்பர் பின்னனியில் நடக்கும் நிழல் உலகத்தை எப்படி  தோலுரிக்கின்றார் என்பது படத்தின் ஒன்லைன்.

==================
Singam II-2013 படத்தின்  கதை என்ன?

முதல் பாகத்தில்பிரகாஷ் ராஜ் கதையை முடித்து விட்டு ஹோம் மினிஸ்டர் விஜயகுமார் ஒரு அசைன் மென்ட் சூர்யா விடம் தருகின்றார்.. தூத்துக்குடியில் சமுக விரோத செயல்கள் நடைபெறுவதாய் அதை கண்டு  பிடித்து முறியடிக்க வேண்டும் என்று.... அதற்க்காக  போலிஸ் சூர்யா வேலையை ரஜினாமா செய்து விட்டது போல நாடகமாடி, தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் என் சிசி ஆபிசர் போல வேடமிட்டு ஹர்பர் பின்னனியில் நடக்கும் நிழல் உலக தொடர்புகளை  கண்டுபிடித்து  எப்படி முறியடிக்கின்றார் என்பது சிங்கம் 2 திரைப்படத்தின் கதை.

==========================

பிரேமுக்கு பிரேம் சூர்யா போலிஸ் யுனிபார்மில் அசத்துகின்றார்...  மிடுக்கான நடை சிக்ஸ் பேக் என்று கலக்குகின்றார்... நாம் அக்குளில் ஷேவ் செய்யும் போது ,பிளேடு  தெரியாமல் பட்டு ஒரு கோடு போட்டு விட்டால் ஒரு முன்று நாளைக்கு   இரண்டு ஹர்ம்ஸ்களையும் பறப்பது போல தூக்கிக்கொண்டு நடப்போமே அப்படித்தான் சூர்யா நடக்கின்றார் என்று  நக்கல் விடலாம்.. பட்.. அந்த உடம்பை அவர் மெயின்டெயின் செய்ய ,எவ்வளவு ஒர்க் அவுட் செய்து இருப்பார் எனும் போது நக்கல் விட மனது கேட்கவில்லை.

அசிஸ்டென்ட் கமிஷ்னராக பொறுப்பு எற்றுக்கொள்கின்றேன் என்று சூர்யா  போலிஸ் யூனிபார்ம் போட தியேட்டரில் எழுந்து நின்று ஆடுகின்றார்கள்.

முதல்  பாடலில் அஞ்சலி பின் பக்க பிரமாண்ட முதுகுவையும், முன் பக்கம் சற்றே பெரிதாகி கொண்டே இருக்கும் தொப்பையோடு... முதல்  முதலாக  வரும் கப்பல் பாடலில்    கவர்ச்சி விருந்து  படைக்கின்றார். தியேட்டரில் கரகோஷம் விண்ணை பிளக்கின்றது...

ஹன்ஷிகா பள்ளி மாணவியாக வந்து  சூர்யாவை சைட் அடித்த படத்தின் முக்கிய திருப்பு முனைக்கு உறுதுனையாக இருந்து கவுரவக்கொலைக்கு பலியாகின்றார்.

அனுஷ்க்கா ஆண்டி லுக்கில் இருந்தாலும் அழகாய் இருக்கின்றார்...  அனுஷ்காவின் முதல் பாடலில் லைட்டாக   மேல்பக்கம் கொஞ்சம்  பிளவு  தெரிய.. அதுக்கு எபக்ட் போட்டு அதை மறைத்து தன் கடமையை  செவ்வனே செய்து தமிழ் ரசிகர்கள் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள.. பார்த்தார்... இயக்குனர் ஹரி... கடைசி அனுஷ்கா செட் சாங்கில் எல்லோருக்கம் லோ நெக் ஜாக்கெட்  அனுஷ்காவுக்கும் டான்சர்களுக்கும்  கொடுக்க தமிழ் ரசிகர்கள் தம்மடிக்க வெயியே போய்  நிகோடினை வெளியே விடாமல் சூடாகி தியேட்டர் உள்ளே இருக்கும்  எசியில் கலந்த கார்ப்ன்டை ஆக்சைடு சுவாசித்துக்கொண்டு அந்த பாட்லை ரசிக்கின்றார்கள்..

 சந்தானம் வரும் காட்சிகளில் தியேட்டரில் கை தட்டல்  அடங்க் நேரம் ஆகின்றது...அதே போல முதல் பாகத்தில் நடித்த  விவேக்கிற்கு இப்போது படம் இல்லாவிட்டாலும் அவரை இந்த படத்தின்  முழுக்க முழுக்க பயண்படுத்தி தான் ஜென்டில்மேன் என்பதை ஹரி நிரூபித்து இருக்கின்றார்.

ரகுமான் ராம் படத்துக்கு பிறகு  வெயிட்டான பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்...

பரபரப்பான வசனங்ள் திரைக்கதை பின்னே உழைப்பு தெரிகின்றது.. முக்கியமாக பிரவுன்ஷுகர் பற்றிய கணக்கும், ரகுமான்... எத்தனை  கேஸ் போட்டாலும்,  சகாயம் வந்து எல்லாத்தையும் ஏத்துக்குவான் என்று சொல்ல... அவன் ஹிஸ்ட்ரியை சொல்லி விட்டு, இப்ப பரோட்டா சாப்பிட்டுக்கிட்டு இருக்கான் என்று சொல்லி போன் போடும்  காட்சி தியேட்டரில் கைதட்டல்...

ஹரியின் ஆஸ்தான கேமராமேன் பிரியன் ஹரியின் வேகத்துக்கும் ஈடுகொடுத்து படம் எடுத்து இருக்கின்றார். டிஎஸ்பி பாடல்கள் பெரிதாய் சோபிக்கவில்லை... கங்கம் ஸ்டைலில் ஒரு பாடலை போட்டு இருக்கின்றார்...

நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

போலிஸ் அக்காடமியில் ஒரு போலிஸ் எப்படிகம்பீரமாக இருக்க வேண்டும் என்று சூர்யாவின் நடிப்பை  போட்டு காட்டுகின்றார்களாம்... அதுதான்  அந்த பாத்திரபடைப்புக்கு கிடைத்த வெற்றி.

===================
படத்தோட  டிரைலர்.




=================
படக்குழுவினர் விபரம்.


Directed by Hari
Produced by S. Lakshman Kumar[1]
Written by Hari
Starring Suriya
Anushka Shetty
Hansika Motwani
Vivek
Santhanam
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Editing by V. T. Vijayan
Studio Prince Pictures
Distributed by Prince Pictures (Tamil Nadu)
Studio Green (Telugu version)
Release date(s) 5 July 2013
Country India
Language Tamil

==========
சாங் மேக்கிங்.

 அனுஷ்காகவை ரசிக்க.




===============
பைனல்கிக்.

ஹரி படம் என்றால் வீச்சரிவாள்,  எத்திராஜ் காலேஜ் அருகில் எடுக்கும் ஷாட்டுக்கு, புதிய தலைமைசெயலகத்தில் இருந்து கேமரா, ரோட்டில் பிராயாணித்து,  எல்ஐசி தாண்டி ஸ்பென்சர்  அருகே கேமரா ரைட் கட் பண்ணி, கன்னிமாரா, பக்கத்தில்  இருக்கும்  பாலத்தை கடந்து,   எத்திராஜ் காலேஜ் வாசலில் மீசை முறுக்கி போலிஸ் ஜீப்பில்  சூர்யா இறங்குவதாக ஷாட் எடுத்து, அந்த ரோட் ஷாட்டை ஸ்பீட் பண்ணி  சர் புர் என்று ஸ்பெஷல் எபெக்ட் போட்டு காட்டுவார்கள்.. அது போல ஷாட்டுகள் சிங்கம்2 திரைப்படத்தில்  நிறையவே.. ஆனாலும் ரசிக்க வைக்கின்றார்கள்.. லாஜிக்காய் போலிஸ்  சூர்யா காய் நகர்த்துகின்றார்.. இந்த படம் பார்க்கவேண்டிய படம்.. 

சூர்யா வளர்ந்து வருகின்றார்.. பதினோரு மணி காட்சிக்கு  உள்ளகரம் குமரன் தியேட்டர் அரங்கு நிறைந்து  திருப்பதியில் லட்டு வாங்க  நிற்கும் கூட்டம் போல டிக்கெட் வாங்க பெரிய கீயூ நிற்கின்றது.. வாழ்த்துகள் சிங்கம் இரண்டு டீமுக்கு...மூன்று நாட்களில் போட்ட காசை எடுத்து விட்டு லாபத்தை நான்காவது நாளில் இருந்து எண்ணுவார்கள் என்று எண்ணுகின்றேன்.

===============
படத்தோட ரேட்டிங்.

 பத்துக்கு ஆறரை...


===============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


6 comments:

  1. தம்பி Karthikeyan Vasudevan முகநூலில் பகிர்ந்தது.



    நிச்சயம் பார்க்கனும்,போலீஸ்காரர்களை மதிக்கும் படி படம் எடுக்க ஆரம்பித்ததே ஹரி தான்,ஹை ஸ்பீட் ஸ்க்ரீன் ப்ளேக்கும்,சின்ன சின்ன டீடெய்ல்கள்,மற்றும் காவல்துறைக்கே தெரியாத ஐடியாக்கள் என்று நிறைய வைப்பார்,என்ன அதை ரோஹித் ஷெட்டி போல பாலிவுட் திருட்டு இயக்குனர்கள் அப்படியே திருடி ஹரிக்கு க்ரெடிட் தராமல் தன் பயரை போட்டுக்கொள்வர்,சிங்கம்-2 விற்காவது ஹரி விழித்துக்கொள்ள வேண்டும்,ஏற்கனவே சென்னை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் நிறைய ஹரி படங்களின் காட்சிகள் திருடி வைக்கப்பட்டுள்ளன,அதற்கும் ரோஹித் ஷெட்டி என்னும் மூதேவி தான் இயக்குனர்,நிறைய தகவல் பிழைகலும் உண்டு

    ReplyDelete
  2. JACKIE I am expecting you to write your view on Dharmapuri Ilavarasan issue..The reason is not to indulge you in trouble but spread the realitry of northern district situations to fellow tamilians around the world.

    ReplyDelete
  3. ANNA..

    NANGA NALAIKKU MOVIKKU POLAM ENTRU PLAN PANNI IRUKKIROM.

    ReplyDelete
  4. வழக்கம் போல தங்களிடம் இருந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு நிறைவை தருகிறது விமர்சனம்.

    ReplyDelete
  5. கவிதா போயிட்டு வாம்மா... படம் மசாலாதான் பட் என்ஜாய் பண்ணலாம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner