முதல் முறையாக ஒரு புகைப்பட போட்டியில் கலந்து கொள்கின்றேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை.


போட்டோகிரபாராக 15 வருடத்துக்கு மேல் இருந்தாலும் பெரிய புகைபட போட்டிகளில்  நான் கலந்து கொண்டது கிடையாது...
கடலூரில் கோடைவிழாவில் நடந்த புகைப்பட போட்டியில் கல்ந்து கொண்டு ஆறுதல் பரிசு வாங்கி இருக்கின்றேன்...

ஆனால் மாநில அளவில் இந்திய அளவில் நடைபெற்ற புகைபட போட்டியில் நான் இதுவரை கலந்து கொண்டது கிடையாது. முதன் முறையாக இந்திய  அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கின்றேன்....

நேற்று காலை ஏதேச்சையாக தமிழில் புகைப்படகலை தளத்தை பார்வையிட்ட போது புகைபடக்கலைஞர் ராமலஷ்மி அவர்கள் ஒரு செய்தியை  பகிர்து இருந்தார்.. அது கீழே....

==========
தி இந்து நாளிதழின் ஷட்டர்பக் அறிவித்திருக்கும் அகில இந்திய அளவிலான இம்மாதப் போட்டி உழைக்கும்  முதியோர்’.

வயிற்றுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர்; உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் மன பலத்துடன் வாழும் வரை தன் காலில் நிற்கவேண்டும் என்கிற உறுதியோடு சிலர்; தள்ளாத வயதிலும் குடும்பத்துக்கான தம் பங்களிப்பைக் கொடுத்தாக வேண்டிய சூழலில் சிலர் எனக் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாடெங்கிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

இது குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிர்க்பெக் பல்கலைக் கழகம், லண்டன் மற்றும்  மனித உரிமை காப்புறுதி ஆய்வு மையம், சென்னை ஆகியவற்றோடு கை கோர்த்து தி ஹிந்து’  இப்போட்டியை அறிவித்திருக்கிறது.  இந்நிலையில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு உதவும் என நம்புகிறது.  என்று எழுதி இருந்தார்..

============
கடைசி நாள் நேற்று இரவு பதினோரு மணியோடு முடிகின்றது என்று  தெரிவித்து இருந்தார்...12 மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் மூன்று  தேறியது..

மதியம் இரண்டு மணிக்கு கேமரா எடுத்துக்கொண்டு கிளம்பினேன்... மாலை ஆறு மணி வரைதான் சன்லைட்... சோ.. மழை வேறு பிசுபிசுத்துக்கொண்டு இருந்தது... மூன்று மணி நேரத்தில்  அலைந்து எடுத்த புகைபடங்கள் இங்கே உங்களுக்கு கொடுத்து இருக்கின்றேன்.. இதில் கோயம் பேட்டில் ரவுடிகளின் தொல்லை வேறு...

முதலில்  எத்தனை  புகைபடங்கள் வேண்டுமானாலும் அப்லோட் செய்யலாம் என்று சொல்லி இருந்தார்கள்... ஆனால் பத்து புகைபடம் மட்டும் தான் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ள  வேண்டும் என்று அறிவித்து விட்டார்கள்..

பத்து புகைபடங்களை மட்டுமே செலக்ட் செய்து ரிஜிஸ்டும் செய்து விட்டேன்... கீழே புகைபடங்கள் மற்றும் அதன் விங்குகளை கொடுக்கின்றேன்.. புகைப்படம் நன்றாக இருந்தால்  சிரமம் பார்க்கமல் ஓட்டு போட வேண்டுகின்றேன்... திறமையை விட இங்கே பிரோமோஷன் எல்லா விஷயத்துக்கும் தேவையாய் இருக்கின்றது... ஆஸ்கார் விருதுக்கு கூட பல கோடி செலவு செய்து புரோமோஷன் வேலைகள் செய்யும் போது, நான் எல்லாம் சாதாரணம்.. பல கோடி மக்களில் நம் திறமையை நாமே பறை சாற்றிக்கொள்வதுதான் இப்போதைய உலகத்தில் மிகத்தேவையான ஒன்று என்று மிக  லேட்டாக   நான் புரிந்துகொண்ட உண்மை.


உழைக்கும் முதியோர்” - ‘தி ஹிந்துஷட்டர்பக் அகில இந்தியப் புகைப்படப் போட்டியை நடத்துக்கின்றது... இந்த போட்டியில் நான் எடுத்த பத்து புகைபடங்களுடன் கலந்து கொண்டு இருக்கின்றேன்... அந்த புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்...புகைபடங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டு போடுங்கள்.. நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஓட்டு போடச்சொல்லுங்கள்.



 ===============


முள்ளங்கி விற்று வந்த பணத்தில் , கந்து வட்டிக்கு போக.... இரவு சாப்பாட்டுக்கு பணம் இருக்குமா? என்று நினைவுகள் மேலோங்க பணம் எண்ணும் முதியவர்



======================



மொத்தமாக வாங்கிய பூண்டுகளை ரக வாரியாக சில்லரை விலையில் விற்க பூண்டுகளை தரம் பார்த்து பிரித்து எடுத்து அடுக்கி வைத்து கூறு கட்டி விற்க ஆயூத்தமாகின்றார் இந்த பாட்டி.. 

பாட்டிக்கு பார்வை குறைவு இருக்கின்றது....ஆனால் தன்னம்பிக்கையும் சொந்தகாலில் நிற்க வேண்டிய வெறியும் அவரிடத்தில் நிறையவே... 




=======================




சென்னை கோயம்பேட்டில் மழைகாரணமாக ஈரம் பட்ட , தூசு பட்ட மாதுளம் பழங்களை பேப்பர் வைத்து துடைத்து மெருகு ஏற்றி விற்பனைக்கு அடிக்கி வைக்கின்றார் இந்த பெரியவர்.




=============




சென்னை கோயம்பேட்டில் கோவக்காய் விற்கும் பாட்டி ....தன் கண் கண்ணாடியை துடைத்து அடுத்த வியாபாரத்துக்கு ஆயுத்தமாகின்றார்.



===========




முகத்தில்தான் தீ ஜூவாலை பொசுக்கிய தழும்புகள்...அதனாலென்ன...?பிறரிடம் கையேந்தாமல்... மல்லிகை பூ விற்று பிழைக்கும் பெண்மணி.




===========






பறை மேளம் அடித்து விட்டு ஓய்வெடுக்கும் இரண்டு பெருசுகள்.


==============




உதயம் தியேட்டர் அருகே கூழ் விற்கும் அதே பெண்மணி பூவும் கட்டி விற்பனை செய்கின்றார்...வயது முதிர்ந்த காலத்தில் வயிற்று பிழைப்புக்கு இரண்டு தொழில்கள். ஐ லவ் யூ.


===============




எங்கள் ஊர் திருவிழாவில் பலூன் விற்கும் முதியவர்.. பலூன் தாத்தா.



=============





மிக வயதான மூதாட்டி டீ குடித்து விட்டு காய்கறி வியாபாரம் செய்கின்றார்... இடம் கோயம்பேடு. சென்னை.



===================






உதயம் தியேட்டர் அருகே தள்ளுவண்டியில் கூழ் விற்கும் முதிய பெண்மணி.


==================


மேலுள்ள  நான் எடுத்த புகைப்படங்கள் பிடித்து இருந்தால்.... சிரமம் பார்க்காமல் உங்கள் ஓட்டுகளை செலுத்திடுங்கள்... நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.



பரிசு விவரங்கள்:

முதல் பரிசு ரூ.20000/-, இரண்டாம் பரிசு ரூ.10000/-; மூன்றாம் பரிசு ரூ. 5000/- மற்றும் 3 ஆறுதல் பரிசு பெறுகின்றவருக்குப் பாராட்டுப் பத்திரங்கள். வந்துபடியே இருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் அதிக வாக்கு பெறும் ஒரு படத்துக்கு ரூ.5000/-. உழைக்கும் முதியோர் நிலை குறித்த செய்தி எல்லோரையும் சென்றடைய வேண்டும், பலரும் படங்களை பார்வையிட வேண்டும் எனும் நோக்கத்துடன் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் அமைப்பாளர்கள் அதற்கானக் கடைசித் தேதி 28 ஜூலை  இரவு 11 மணி வரையில் என அறிவித்து ஒருமாத காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். போட்டி முடிவுகள் 31 ஜூலை இணையத்திலும், 4 ஆகஸ்ட் பத்திரிகைகளிலும் வெளியாகும்.  


பிட் புகைபடத்தளத்தில் போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட புகைபடக்கலைஞர் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் ,70/300 டாம்ரான் ஜூம் லென்ஸ் கொடுத்து உதவிய  எனது இனிய நண்பர் சீர்காழி ராஜசேகரன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


போட்டியில் வெற்றி பெற  உங்கள் வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்கள் வேண்டி.....

பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

41 comments:

  1. எனக்கு போட்டோ 1-ம், 3-ம் ரொம்ப புடிச்சு இருக்கு சார். கஷ்டமாவும் இருக்கு.

    ReplyDelete
  2. Anna..

    All the best anna...

    I am also pray for u...

    ReplyDelete
  3. ஒருவர் எத்தனை ஓட்டு போடமுடியும் ?? நான் உங்கள் 2வது மற்றும் 6வது படங்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறேன்... எல்லா படங்களுக்கும் போட முடியுமா ??

    ReplyDelete
  4. ஒருவர் ஒரு படத்துக்கு ஒரு ஓட்டுதான் போடமுடியும்... அதே போல என்னுடைய எல்லா படத்துக்கும் ஒரு ஓட்டு கண்டிப்பாக போடலாம்... உங்கள் ஈ மெயில் பாஸ்வேர்டு கொடுதது லாகின் செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் போட முடியும்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  6. Always first will be the best.
    It gives the full impact.
    All the best

    ReplyDelete
  7. நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  9. Best Wishes for your good efforts. All the BEST

    ReplyDelete
  10. No 1 is the one, Best of luck Jackie ...

    ReplyDelete
  11. I did vote for all picture,i thing u win.best of luck

    ReplyDelete
  12. I did vote for all picture.
    I thing u r going to win.
    best of luck jeckie sir

    ReplyDelete
  13. படங்கள் அருமை ஜாக்கி

    வெற்றி விரைவில்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  16. எல்லாத்துக்கும் வோட்டு போட்டாச்சி போட்டாச்சி

    ReplyDelete
  17. எல்லாத்துக்கும் வோட்டு போட்டாச்சி போட்டாச்சி

    ReplyDelete
  18. அசத்திட்டீங்க....வாழ்த்துக்கள் ...போட்டுட்டோம். ஓட்டு..

    ReplyDelete
  19. தங்களது படைப்பில் 2வது படம் தலைப்பை ஒத்தது போல் வந்து இருக்கிறது.அதற்கு வாக்கு பதிவு செய்து விட்டேன்.வாழ்த்துகள் ஜாக்கி அன்னே.

    ReplyDelete
  20. எல்லா படத்துக்கும் போட்டாச்சு

    ReplyDelete
  21. Voted for 6 photos Jackie.. All the best to win the first prize.
    you deserve it..

    ReplyDelete
  22. என்னிடம் இருக்கும் எல்லா இமெயில் ID-களையும் பயன்படுத்தி லாகின் செய்து, அனைத்து புகைப்படங்களுக்கும் வாக்களித்து விட்டேன். இத்தனை நாட்களும் எங்களுக்கு பொழுதுபோக்கு, குடும்ப நலன், சமூக அக்கரை இப்படி பல விடயங்களை நேரம் பார்க்காமல் பகிர்ந்து வரும் உங்களுக்கு இந்த ஒரு உதவி செய்யாமல் இருக்க முடியுமா, இது எமது கடமை.

    ReplyDelete
  23. போட்டாச்சு!போட்டாச்சு!

    ReplyDelete
  24. போட்டாச்சு!போட்டாச்சு! :)

    ReplyDelete
  25. என் ஓட்டு படம் 1, படம் 8. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. \\பல கோடி மக்களில் நம் திறமையை நாமே பறை சாற்றிக்கொள்வதுதான் இப்போதைய உலகத்தில் மிகத்தேவையான ஒன்று என்று மிக லேட்டாக நான் புரிந்துகொண்ட உண்மை.//

    வாழ்த்துக்கள் ஜாக்கி, உங்கள் படங்கள்தான் அதிக ஓட்டு பெற்று வரும். முன்னதாகவே ஒரு வாழ்த்தையும் சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  27. all photo's super anna
    my vote 1photo very all the best anna

    ReplyDelete
  28. MY VOTE FOR YOUR ALL PHOTOS. 10 OUT OF 10.ALL THE BEST.

    ReplyDelete
  29. வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    போட்டியில் வெற்றி பெறும் வல்லமை உங்கள் படங்களில் இருக்கிறது ஜாக்கி.

    ReplyDelete
  30. வெற்றிபேற வாழ்த்துகள்.
    படம் 1 சூப்பர்.

    ReplyDelete
  31. வெற்றிபெற வாழ்த்துக்கள்! அனைத்தும் அருமையான படங்கள்! இதை பார்த்ததும் பொன்னேரி பஜாரில் பல வருசங்களாக எலுமிச்சம் பழம் விற்கும் மூதாட்டி ஒருவர் என் நினைவுக்கு வந்தார். இந்த பக்கம் வந்தால் அவரையும் ஒரு போட்டோ எடுங்கள்! நன்றி!

    ReplyDelete
  32. அசத்தல் சார் ! நீங்கள் கண்டிப்பாக ஜெயிப்பீர்கள்..... இந்த போட்டியில் மட்டும் இல்லை. நான் ஓட்டு போட்டாச்சு !

    ReplyDelete
  33. ஓட்டு போட்ட அத்தனை பேருக்கும் நன்றி... 350 ஓட்டுகள் வாங்கிய புகைப்படங்கள் இந்த போட்டியில் பார்த்து இருக்கின்றேன்.. நம் புகைப்படங்கள் 100 மதிப்பெண்தான் வாங்கி இருக்கின்றன. வெற்றியோ தோல்வியோ இந்த புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு இது அனைவரிடத்தில் சென்று சேர வேண்டும் என்று விரும்பினேன்... அதில் ஜெயித்து விட்டேன்.. மீண்டும் வாக்களித்த நண்பர்களுக்கு சிரம் தாழ்த்த நன்றிகள்.

    ReplyDelete
  34. really super photos, vaidu aanal eppadi irupom endru enni paarkavaithu
    vittathu. my advance wishes.

    Sundar Raj.G

    ReplyDelete
  35. அண்ணே நம்ம சார்பா 3 வோட்டு done....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner