வாருங்கள் ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.(A. R. Rahman/KM Music Conservatory & Orchestra )


ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.


கொண்டாடுவோம் என்றால்....?

கையில் சூடம் ஏற்றி, ரகுமான்  இருக்கும் கட்டவுட்டுக்கு பால்  அபிஷேகம் மற்றும் பீர் அபிஷேகம் செய்ய சொல்லவில்லை. அவர் செய்த செயல்களை  மனப்பூர்வமாய் பாராட்டுவோம் என்று அர்த்தம்.

 ரகுமான் அப்பா சேகர் ஒரு சிறந்த இசையமைப்பாளர்தான்... ஆனால் அவர் அந்த துறையில் பெரியதாய் சோபிக்காமல்  மரித்து போனார்....ஒருதுறையில் பெரிய ஆளுரைம மிக்க மனிதரின் வாரிசுகள்,  அதே துறையில் சோப்பிப்பது பெரிய விஷயம் இல்லை...  வாய்ப்புகள் அப்பாவின் புகழோடு  சேர்ந்து ரெக்கார்டிங்  ஸ்டுடியோ கதவை தட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அது ஒரு பெரிய மேட்டரே இல்லை...

ஒருவேளை இசைத்துறையில் ரகுமான் அப்பா பெரிய ஜாம்பவனாக மாறி இருந்து  இருந்தால்  அவருக்கு  வந்த பட வாய்ப்பை அப்படிதய பைபாஸ் ரூட்டில் பையனுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்து பிள்ளை பாசத்தை நிரூபித்து இருக்கலாம்...  

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம்... நான் இப்ப ரொம்ப  பிசி...இப்ப என் பையன்  நல்லா மியூசிக் பண்ணறான்... உங்களுக்கே தெரியும்... அவன் இந்த யூத் சப்ஜெக்ட்டுக்கு மியூசிக் பண்ணா சரியா வரும் என்று தயாரிப்பாளர் இயக்குனரை கன்வின்ஸ் செய்து வாய்ப்பு வாங்கி  கொடுக்கலாம்... 

இன்கேஸ் அவன் மியூசிக்ல  உங்களுக்கு  மனநிறைவு வரலைன்னா கண்டிப்பா நான் உங்களுக்கு  கூட இருந்து ஹெல்ப் பண்ணறேன் என்று சொல்லி நம்பிக்கை கொடுக்கலாம்....இப்படி தன் புகழை வைத்து தன் பெற்ற பிள்ளையை வளர்த்து விடலாம்...

ஆனால் ரகுமான் விஷயத்தில் எல்லாமே தலைக்கீழ்.... ஒன்பது வயதில் தன் தந்தையை இழந்தார்.. வறுமை சூழல்...  குடும்பத்துக்கு பெரிய பையன்... தங்கைகளை காப்பாற்றும் பொறுப்பு என்று ரகுமானை குடும்ப பொறுப்புகள் பாடாய் படுத்தியது.

ஒரு நேர்முகத்தில் ரகுமான் பகிர்ந்து கொண்டு  செய்தி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை  அளித்தது...  

நான் வீட்டுக்கு பெரிய பையன்...  குடும்பம் நடக்க பணம் வேண்டும்... அதனால் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வைத்து இருந்தேன்....ஒருவேளை இசையில் என்னால் சாதிக்க முடியவில்லை என்றால்... அல்லது  அந்த துறையே திடிர் என்று அழிந்து போனால் ? நான் கார்  டிரைவராக வேலை செய்தாவது என் குடும்பத்தை காப்பாற்ற  கார் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வைத்து இருந்தேன் என்று ரகுமான் சொல்லி இருக்கின்றார்.. சற்றே யோசித்து பாருங்கள்... சிறு வயதில் குடும்பத்தலைவனாக பொறுப்பு ஏற்றுக்கொள்வது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்..??? குடும்பத்தின் மீது உள்ள பாசம் காரணமான ஏற்ப்பட்ட அந்த பயத்துக்காகவே  எனக்கு ரகுமானை ரொம்பவே பிடிக்கும்.

 கடுமையான உழைப்பு...  நிறைய  தியாகங்கள்.... 1992 ஆம் ஆண்டு ரோஜா மூலம் அறிமுகமாகி உலகில் உள்ள இசை வல்லுனர்கள்...சென்னையின் மோசார்ட் என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பது சாதாரணகாரியாமா?... ஹாலிவுட் பக்கம் கொடுக்கப்படும் அத்தனை விருதுகளையும் சென்னை கோடம்பாக்க சுப்பராயன் நகரில் இருக்கும் ரகுமான் வீட்டு ஷோ கேசுக்கு வர வைத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இசையமைப்பாளர்களையும்  பொறாமை கொள்ள வைத்த ஒரு  தமிழர் நம்ம ரகுமான்தான்....

நான் கொண்டாட வேண்டும் என்று சொல்ல மிக முக்கிய காரணம்.. அவருடைய இசை அற்பணிப்பு. நான் வளர்ந்து விட்டேன்,  நான்கு தலைமுறைக்கு சொத்து  சேர்த்து விட்டேன்.. என் பிள்ளைகள்  ஏழு தலைமுடுறைக்கு மேல் உட்கார்ந்து சாப்பிடலாம்.. லண்டனில் ஒரு வீடு அமெரிக்காவில்  ஒரு வீடு, 1000 ஏக்கர்  நிலம்... அதன் பிறகு ஆன்மீகம் என்று பல வெற்றியாளர்களை போல ரகுமான் சுயநலவாதியாக உட்கார்ந்து விடவில்லை...தான் வாழும் சமுகத்துக்கு ஏதாவது செய்ய நினைத்து அதற்கு விதையை நான்கு வருடத்துக்கு முன்பு  ஊன்றி விட்டார். அதுதான்....  KM Music Conservatory & Orchestra 


நான் , எனது  , என் குடும்பம், என் சொந்தம், என்  சகோதரிகள், என் செல்வாக்கு என்பதோடு அவர் சுயநலமாய் யோசிக்கவில்லை... தான் கற்ற கலையை தன் சமுகத்துக்கு பயிற்றுவிக்கின்றார்... அது எவ்வளவு பெரிய விஷயம்...எவன் ஒருவன் தான் வளர்ந்ததோடு இல்லாமல் தன் சமுகமும் தன்னோடு வளரவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைக்கின்றானோ? அவனே உண்மையான கலைஞன்  ஆவான். ரகுமான் உண்மையான கலைஞன்.

நம் சமுகம் முன்னேறாமல் போனதற்கு பெரிய காரணம்  நாம்  கற்ற கலையை நம் ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தே பல கலைகள் வளரவிடாமல் மண்ணோடு மண்ணாக அழிந்து போகும் அளவுக்கு குறுகிய தனம் படைத்தவர்கள்..... காரணம் பொறாமை.. தன் ரத்தம் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்ற குறுகிய மனப்பாண்மை...

ஆனால் ரகுமான்  அப்படி அல்ல... தன் சமுகத்துக்கு தான் கற்ற  இசையை கற்றுக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றார்.. கர்நாடக இசை, எப்படி ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே கற்றுக்கொண்டு, ஒரு சிண்டிகேட்  லாபி  செய்து கொண்டு...  அது  பற்றிய அடிப்படை  தெரியாத மக்களை ஞானசூனியம் என்று  நக்கல்  வேறு விடுகின்றார்கள்.. ஆனால் ரகுமான் அப்படி  அல்ல...

தனது KM Music Conservatory & Orchestra  மூலம் அதனை குப்பனுக்கும் சுப்பனுக்கும் சாத்தியபடுத்தி இருக்கின்றார்...டைலர் மகன், அயர்ன் கடை வைத்து இருப்பவரின் பிள்ளை, ஆட்டோ டிரைவரின் மகள் என்று அனைவருக்கும்  இசையை சாத்தியபடுத்தி இருக்கின்றார்...  அவர்களிடம் கல்வி கட்டணமாக பெரும் தொகை பெறவில்லை.... அவர்களுக்கு  இசை ஆர்வம் இருந்தால் போதும் அவர்களை கைபிடித்து  இசை உலகிற்கு அழைத்து போகின்றார்.. அல்லா ரக்கா ரகுமான்.


இந்த வீடியோ பதினைந்து பக்கம் நான் டைப் அடிக்கும் விஷயத்தை மிக சுருக்கமாய் நச் சென்று சொல்லி இருக்கின்றது... இந்த வீடியோவை  பார்க்கும் போது உணர்ச்சி மேலுடுகின்றது.. கண்களில்  ஈரம் கசிகின்றது...  வெள்ளை தோல் கொண்டோரின்  பிள்ளைகள் மட்டுமே  வெகு  எளிதாய்  உள்ளே நுழைந்து கோலாச்சிய தமிழ் இசை உலகில் ,சாமான்யனின்  பிள்ளைக்கும்  சாத்தியபடுத்தி மற்ற கலை வல்லுனர்களுக்கும் வாழும் உதாரணமாய்  மாறி இருக்கின்றார் ரகுமான்.
சைலோ என்று ஒரு வாத்தியம்  எருமை  மாடு கணக்காக பெரிதாய் இருக்கும் கார்த்திக் நகராஜ்  சார் அறிமுகத்தில் ஜான் வில்லியம்ஸ் ஆர்கஸ்ட்ராக்களை  வீடியோக்களில் கேட்டும் பார்த்தும் இருக்கின்றேன்... அந்த வாத்தியத்தை கோடம்பாக்கத்து தெருக்களில்  ஆட்டோவில் வைத்து பிள்ளைகள் சர்வசாதரணமாய்  எடுத்து செல்லுகின்றார்கள்.ஒரு காலத்தில்  தொலைகாட்சியில் இசை நிகழ்ச்சிகளை காட்டும  போழுது, காது பக்கம் நரையோடு இசை கருவிகைளை வாசிப்பவர்களை  நாம் பார்த்து இருக்கின்றோம்... ஆனால் இன்றும் இரண்டு மூன்று வருடங்களில் இந்திய இசை உலகில் புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர் களத்தில் இறங்கி இசைகருவிகளை வாசித்து பின்னி பெடலெடுக்க  போகின்றார்கள்.


 இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் ரொம்ப  பிடிக்கும் அப்புறம் சினிமாஇசை... அதில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை.. சினிமாவை மையப்படுத்தியே இசை சுற்றிக்கொண்டு இருக்கின்றது... அந்த சுற்றுப்பாதையை சற்றே தன் உன்னதமான உழைப்பால் வேறு  பாயில் சுற்றி விட்டு இருக்கின்றார்....130 கோடி மக்கள் தொகை கொண்ட  நாட்டில் சிம்பனி ஆர்கெஸ்ட்ரா என்று ஒன்று இல்லை...ஆனால் சிம்பனியை இந்திய மண்ணில் சாத்தியப்படுத்த  ரகுமான் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்...

நாலு வருடத்துக்கு முன் நட்ட விதை இன்று ஆலமரமாய் விருட்சமாய் சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவாக  பரிந்து விரிந்து இருக்கின்றது....

மகாபலிபுரத்துக்கு வரும்  வெள்ளைக்காரர்களை தாழ்வுமனப்பான்மையோடு  எட்டே இருந்து பார்த்த ரசித்த  சாமான்யனின் பிள்ளைகள்... இன்று அவர்களோடு சரிக்கு சம்மாக  உட்கார்ந்து கொண்டு வயலினையும் செல்லோவையும் வாசிக்க ரகுமானே காரணம்.ஒரு காலத்தில் சுசிலா,எஸ்பி,யேசுதாஸ்,வாணிஜெயராம்,ஜானகி இவர்களை விட்டால் வேறு குரல்களை ரசித்து  ருசிபார்த்தது இல்லை இந்த தமிழ் சமுகம்...ஆனால் இன்று 30க்கு மேற்ப்பட்ட பாடகர்கள் ரோஜா திரைப்படத்துக்கு பிறகு தமிழ் இசை உலகில்  கோலோச்சிக்கொண்டு இருக்கின்றார்கள்... அதை சாத்தியபடுத்தியவர் ரகுமான்...

இன்னும் நிறைய .........சென்னை மோசார்ட்டுகள் உருவாக போகின்றார்கள்... அதற்கு பாதை அமைத்துக் கொடுத்த ரகுமானை கொண்டாடுவோம்.


 தெருவில் டீ விற்று பிழைப்பு நடத்துபவர் பிள்ளையின் விரல்களை வயலினில் நடனமாட விட்டு சாத்தியபடுத்தி இருக்கின்றார் ரகுமான்.. இதை விட ஒரு கலைஞனுக்கு பெரிய மரியாதை என்னவாக  இருந்து விட முடியும்..


வாருங்கள் ரகுமானை கொண்டாடுவோம்.பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

26 comments:

 1. Its true. Congrats Our lovable ARR

  ReplyDelete
 2. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். ரஹ்மான் கடுமையான உழைப்பாளி.புதிய முயற்சிகளால் உலகையே தன் பக்கம் பக்கம் திரும்ப வைத்தவர். அவரை போற்றுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக மற்றவரை குறைத்தோ தாழ்த்தியோ கூறுவதை தவிர்க்கலாம் என்றே கருதுகிறேன்.இசைக்கு இனமில்லை.கர்நாடக இசையிலும் புகழ்பெற்ற கே.ஜே.ஏசுதாஸ்,சீர்காழி கோவிந்தராஜன், போன்றவர்கள் ஒரே இனத்தவர் அல்ல.

  ReplyDelete
 3. ரொம்ப சரியாய் சொல்லி இருக்கீங்க ஜாக்கி

  ReplyDelete
 4. ஆம்... ரகுமானை கொண்டாடுவோம்.. அனைவரும் கொண்டாடுவோம்.. விருதுகள் பெற்றால் மட்டும் பெருமையல்ல.. தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கும் கற்றுக்கொடுப்பதும், பகிர்வதுமே பெருமை.. வாழும் உதாரணம் ரகுமானை நாமும் வாழ்த்தி மகிழ்ந்து கொண்டாடுவோம்....!!!!!

  பகிர்வுக்கு மிக்க நன்றி திரு ஜாக்கி அவர்களே...!

  ReplyDelete
 5. ithai azhagaai pathivitta ungalaiyum kondadavendum!!

  ReplyDelete
 6. அருமையான பதிவு...

  ReplyDelete
 7. ரஹ்மானை வாழ்த்துவது நல்ல விடயம்.
  அதே நேரத்தில் மற்றவர்களை தாக்கி மட்டம் தட்டுவது அநாகரீகம் அநாகரீகம் அநாகரீகம் அநாகரீகம்

  ReplyDelete
 8. எழுதியிருக்கும் விதம், தகவல்களை பகிர்ந்ததில் உள்ள பாங்கு உங்களைப் பாராட்டி பின்னூட்டமிட உந்துகிறது...

  பிரபாகர்...

  ReplyDelete
 9. One of the best post from you Jackie. Thanks.

  ReplyDelete
 10. நிச்சயம் கொண்டாடுவோம்

  ReplyDelete
 11. நிச்சயம் கொண்டாடுவோம்

  ReplyDelete
 12. ரஹ்மான் வாழ்க வளமுடன்,
  எல்லா புகழும் இறைவனுக்கே!

  ReplyDelete
 13. தொடர்ந்து இது போன்ற விசயங்களை அறிமுகம் செய்து வைக்கவும்.

  ReplyDelete
 14. ஆச்சர்யமூட்டும் நிகழ்வு.....இந்த நிறூவனத்தை பற்றி கேள்வி பட்டு இருக்கின்றேன் நான் நினைத்தேன் எப்படியும் பணக்காரர்களுக்காக தான் இதை வைத்து இருப்பார் என்று நினைத்தேன் ஆனால் தான் கற்ற விடயத்தை பிறருக்கும் கற்று கொடுப்பது பெரும் பேற்றே.....நல்ல பணி உங்களுடையதும் தான்....செய்தியை பொது தளத்திற்கு கொண்டு சேர்ப்பது அதுவும் சாதாரணமன்று....

  ReplyDelete
 15. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம்... நான் இப்ப ரொம்ப பிசி...இப்ப என் பையன் நல்லா மியூசிக் பண்ணறான்... உங்களுக்கே தெரியும்... அவன் இந்த யூத் சப்ஜெக்ட்டுக்கு மியூசிக் பண்ணா சரியா வரும் என்று தயாரிப்பாளர் இயக்குனரை கன்வின்ஸ் செய்து வாய்ப்பு வாங்கி கொடுக்கலாம்...

  இன்கேஸ் அவன் மியூசிக்ல உங்களுக்கு மனநிறைவு வரலைன்னா கண்டிப்பா நான் உங்களுக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ணறேன் என்று சொல்லி நம்பிக்கை கொடுக்கலாம்....இப்படி தன் புகழை வைத்து தன் பெற்ற பிள்ளையை வளர்த்து விடலாம்..

  >> ஜாக்கி சேகர் நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று அநேகமாக எல்லாருக்கும் புரிந்திருக்கும். ரஹ்மான் வெற்றியை கொண்டாடும் நீங்கள் ஏன் யுவனின் வளர்ச்சியை சிறுமை ஆக்க பாக்குறீங்க. இதே ரஹ்மானுக்காக அன்று ராஜாவின் முகாமில் இருந்தவர்களை யார் ரஹ்மான் வசம் மாற்றினர் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். அப்ப ரஹ்மானுக்காக "உதவியவர்களை" என்னவென்று சொல்வீர்கள்..? அல்லது அந்த உதவி நியாயமானது தான் ஆனால் தன மகனுக்காக தந்தை உதவினால் அது அநியாயம் என்று சொல்ல வர்றீங்களா..?

  ReplyDelete
 16. எதிக்கலிஸ்ட், சரவணனன்.. இரண்டு பேருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன்.., நான் யாரையும் மட்டம் தட்டவில்லை..யாருடைய வளர்சியை சிறுமையாக நினைக்கவில்லை.. ரகுமானுக்கு அப்பா இருந்து இருந்தால் இப்படி உதவிகள் கிடைத்து இருக்கும் என்று சொன்னேன்... எந்த உதவியும் கிட்டாமல் மேலே வந்த சிகரம் தொட்டு அதை சாமனினுக்கும் கிடைக்க செய்ததை சொல்லி இருக்கின்றேன். எழுதிய கருத்தை புரிந்து கொள்ளாமல் யாரை குறிப்பிட்டு இருக்கின்றேன்.. என்று யோசித்தால் நிறைய பேர் பெயரை என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியும்.... அது என் வேலை அல்ல...

  ReplyDelete
 17. அவரின் பேட்டியில் கூறியுள்ளார், இந்த அமைப்பால் எனக்கு இழப்பு நேர்ந்தாலும் அதனால் நான் பாதிக்கப்படப் போவதில்லை

  வெற்றி அடைகயில் நம் நாட்டிலும் சினிமாவின் ஆதிக்கமின்றி இசை நிகழ்ச்சிகள் சாத்தியமாகும். திறமையுள்ள இளையவர்களால்.

  He does not think about his wealth or publicity in this matter. All he concerns is the wide spread of music that through the children who cannot afford to pay for music learning.

  Hats off AR :)

  (http://chummakonjaneram.blogspot.com)

  ReplyDelete
 18. ரகுமானை புகழ்ந்து எழுதிவிட்டால் நிறைய பேருக்கு வயிற்றில் புகை வருமே? ஒரு உண்மையான இசைக் கலைஞன் தான் அறிந்ததை மற்றவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவானே அன்றி சுவர்கள் எழுப்பமாட்டான். ரகுமான் நிறைய மாற்றங்களை தமிழ் இசையில் கொண்டுவந்திருப்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. நியாயமான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 19. hates off ar.rahman.. and specially thanks to sekar..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner