Parker (2013) பார்க்கர் டபுள் கிராஸ்



கொள்ளைக்கு போனாலும்  கூட்டு உதவாதுன்னு   பெரியவங்க சொல்லி இருக்காங்க...
காரணம் பணத்தை பார்த்ததும் ,கூட்டுக்காரன்களோடு மனசு எப்படி வேணா மாறி தொலைக்கும்... அப்படி கூட்டுக்காரன்களோட மனசு மாறித்தொலைச்சதால பாதிக்கபடுறவனோட கதைதான் இந்த  பார்க்ர் திரைப்படம்.

==============
Parker (2013) படத்தின் ஒன்லைன்..

நம்பிக்கை துரோகம்தான் கடத்தின் ஒன்லைன்.

============
Parker (2013) படத்தின் கதை என்ன?


ஜேசன்( பார்க்கர்) யாருக்கும் தீங்கு ஏற்ப்படாமல் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைப்பவன். அதே போல யாரையும் கொலை செய்யமாட்டான்... ஜந்து பேர் கொண்ட கும்பலோடு ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக கொள்ளை அடித்துக்கொண்டு வரும் வழியில்  பார்க்கரை மட்டும் சுட்டு  கொலை செய்து போட்ட விட்டு  நம்பிகை துரோகம் செய்து விட்டு தப்பி  செல்கின்றது அவனோடு வந்த கும்பல்....  

கொள்ளைக்கார கும்பலை பொருத்தவரை பார்க்கர் இறந்து விட்டான்... ஆனால் பார்க்கர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றான்.. அவனை ஒரு வயதான தம்பதி ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க  வைக்கின்றார்கள்... துரோகம்  செஞ்சவன்களை பழிக்கு பழி வாங்கலாம்ன்னு பார்த்தா.. பால்ம் பீச்  புளோரிடாவுல இருக்கறதை கண்டு பிடிக்கின்றான்.... 

நம்ம பார்க்கர் ஜேசன் புளோரிடா போக.. அங்க நம்ம செக்சி தலைவி ஜெனபர் அவருக்கும் ஹெல்ப் பண்ணறா எப்படி ?அந்த கொள்ளை கூட்டத்தை பழி வாங்கினாங்க அப்படின்றதுதான் கதை.

================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


பார்க்கர் படத்தின் கதை...  பார்க்கர் என்ற நாவலின் திரைவடிவம்....

முதல்  ராப்பரி மிக அற்புதமாக எடுத்து இருப்பார்கள்.. அனால் கூட்டாளிகள் தேவையில்லாமல்  மக்களின் உயிரை எடுக்கும்  போதே பார்க்கர் கேரக்டர் முரண் பட்டு விடுகின்றது.

முதக்காட்சியில் ஜெசன் பாதர் வேஷத்துல வர அப்படியே கொள்ளைக்காரனா மாறுவது  நன்று.

கொள்ளை அடிக்கும் போது அந்த அதிர்ச்சியால் ஒரு செக்யூரிட்டி  அஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு அவனுக்கும் தைரியம் சொல்லும் காட்சி பார்க்கர்  கேரக்டரின் தன்மையை சொல்லும் காட்சி.



ரியல் எஸ்டேட்  பு ரோக்கர் கேரக்டரில் ஜெனிபர் விளையாடி இருக்கின்றார்...40 வயது போல  தெரியவில்லை சிக்கென்று இருக்கின்றார்.... போலிஸ் ஆளா என்று   ஜெனிபரை பார்த்து  சந்தேகப்பட்டு உடை அவிழ்க்க  சொல்லும் காட்சியில் 40 வயதில்  பிரா ஜட்டியோடு அந்த உடம்பை பார்க்கும் போது  இப்படி உடம்பை மெயின்டேயின் செய்ய ஒரு கொடுப்பனை வேண்டும் என்று  மனது அடித்துக்கொள்கின்றது... வேறு என்ன செய்ய? ஹாட் ஜெனி.

பால்கனியில் நடக்கும் அந்த  சண்டை கொடுமையின் உச்சம் ரத்தக்களரிதான்.

கிளைமாக்ஸ் வைரக்கொள்ளை திரில் கொள்ளை...

ஜேசன் மீது ஜெனிபருக்கு  காதல் வந்தாலும்.... அது நிறைவேறாது என்பது தெரிந்து விலகுவதும் அழகு.


அதே போல  கஷ்டப்படும்  ஜெனிபருக்கு மில்லியக் கணக்கில் ஷேர்  கொடுப்பதும் அந்த பணம் பார்சலில் வர அதை பார்த்து ஆடி போவதும் நல்ல நடிப்பு . அதே போல ஜேசன் ரோட்டில் கிடந்த போது  காப்பாற்றிய தம்பதிகள் கடனை அடைத்து புது வீடு வாங்கி தருவதும் அழகு.. அவர்கள்   பேட்டி அதை விட அழகு.
=================
படத்தின் டிரைலர்.

/====================
 படக்குழுவினர் விபரம்.


Directed by Taylor Hackford
Produced by
Les Alexander
Steven Chasman
Taylor Hackford
Sidney Kimmel
Jonathan Mitchell
Screenplay by John J. McLaughlin
Based on Flashfire 
by Donald E. Westlake
Starring Jason Statham
Jennifer Lopez
Music by
Danny Elfman
David Buckley
Cinematography J. Michael Muro
Editing by Andrew Weisblum
Studio
Incentive Filmed Entertainment
Sierra Pictures
Sidney Kimmel Entertainment
Distributed by FilmDistrict
Release date(s)
January 25, 2013
Running time 118 minutes[1]
Country United States
Language English
Box office $46.3 million


====================
பைனல் கிக்.

பார்க்கவேண்டிய திரைப்படம்.... நல்ல ராப்பரி படம்தான் என்றாலும் கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம்.. விக்கென்டில்  கையில் பியரோடு சிக்கன்  வில்லலை கடித்துக்கொண்டு பார்க்க ஏற்றப்படம் எனபதை மறுப்பதற்கில்லை
/=============
படத்தின்  ரேட்டிங்..

பத்துக்கு ஐந்தரை.
===========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

  1. மகேஷ் மூன்று பேர் மூன்று காதல் படம் பார்த்தேன்... நொந்துட்டேன்..

    மற்றவர்களுக்கு மட்டும் ரெப்லி பண்றீங்க. எனக்கு மட்டும் பண்றதில்ல? ஏன் இந்த ஓர வஞ்சன?

    ரெண்டு படம் பாத்துட்டு விமர்சனம் பண்ணுங்கனு ஒரு மாசமா கேக்றேன்

    1). The Martyrs
    2). The Human centipede

    ReplyDelete
    Replies
    1. யோவ் அப்பயிலேர்ந்து நானும் பார்த்துகிட்டு இருக்கேன் இந்த ரெண்டு படத்த மட்டும் ரெவ்யு பண்ணுங்க ரெவ்யு பண்ணுங்கன்னு ரொம்பத்தான் தொல்லை பண்றீங்க. இதுதான் விமர்சனம் - மொதோ படம் ஒரே ரத்த குளியல் ரெண்டாவது படம்.. உவ்வே போனவருஷம் ரொம்பவே தேடிபிடிச்சி பார்த்தேன் படத்த மறந்து நிம்மதியா சாப்பிட நாலு மாசமாச்சி. (கதை சுருக்கம்மின்னு சொன்னாக்கூட எல்லாருக்கும் வாந்தி வரும்)

      Delete
  2. ஜெனிபெர் லோபஜ் மை டார்லிங் செம்ம ஆளு

    ReplyDelete
  3. ஜாக்கி அண்ணனனுக்கு,
    இதுவரை நான் உங்கள் பதிவுக்கு கமென்ட் அதிகம் போட்டதில்லை. ஏன் என்றால் நீங்கள் எழுதிய பிறகே அந்த படத்தை நான் பார்ப்பேன்.

    ஆனால் இந்த படத்தை நீங்கள் எழுதும் முன்னமே பார்த்துவிட்டேன்.
    அருமையான படம்...

    ReplyDelete
  4. ராஜ் ஏன் இந்த கொலை வெறி? ஜாக்கி அண்ணா ப்ளீஸ் நீங்க சொல்லுங்க......

    ReplyDelete
  5. சிவா.. ராஜ் சொல்வது உண்மைதான்... நீ குறிப்பிட்ட உடன் அந்த படத்தை யூ டீயுப்பில் டிரைலர் பார்த்தேன்... இப்போது இருக்கும் மன நிலையில் அந்த படத்தை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை...

    ReplyDelete
  6. மிஸ்டர் சிவா. கொலை வெறி ஒன்னும் இல்ல. நான் வெளிநாட்டு படங்கள் அதிக அளவில் பார்க்க ஆரம்பித்ததே ப்லாகில் உள்ள விமர்சனங்களை பார்த்துதான். குறிப்பா கொரியன் படங்களை அண்ணன் பரிந்துரைக்க நான் (சவுதியில் தியேட்டர் கிடையாதுங்க) டவுன்லோட் பண்ணி பார்கின்றேன் (அதில் முக்கால் வாசி ஹாரர் ஒரு டேரா பைட் அளவுக்கு வச்சிருக்கேன்)இந்த படங்களை பார்க்கவேணாம் என்று அண்ணன் சொன்னாலும் நம்மாளுங்க பாத்துடுவாங்க. நீங்க உண்மையிலேயே ஹுமன்சென்டிபெட் படம் (Its in worlds most sickest film list) பாத்துடீங்கன்னா விமர்சனம் எதிர்பார்க்க மாட்டீங்க கூகிளில் போய் அந்த படத்தோட பேர் சர்ச் பண்ணி வெறும் அங்குள்ள pictures சை பார்த்தாலே விளங்கிடும். வேணுமினா நாம ரெண்டு பேரு மட்டும்தான் டிஸ்கஸ் பண்ணலாம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner