மைதிலிக்கான உதவிகள் இந்த வருடத்திற்கு போதும்..



 போன வருடம் மைதிலி வீட்டில்  பணம் கொடுத்து விட்டு கிளம்பும் போது அடுத்த வருடம் ஏதாவது உதவி கிடைக்குமா?
என்று  அவள் கேட்ட போது பார்த்துக்கலாம் அதை பற்றி கவலை படாமல் படி என்று சொல்லி விட்டு வந்தேன்.. அதன் பிறகு நண்பர் ஸ்ரீராமும்,க.ராவும் அவளது படிப்புக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தனர்... அதற்கு முன் அந்த பதிவை வாசித்து விட்டு வந்தால் படிக்கும் உங்களுக்கு சூழ் நிலை புரியும்..... பதிவை வாசிக்க.. இங்கே கிளிக்கவும்.

 இந்த வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடியும்  என்று நினைத்தேன்... ஆனால் இந்த வருடம் அவளுக்கு பீஸ் கட்ட போகும் போது  காலேஜில் ஒரு குண்டை தூக்கி போட்டனர்...24,500க்கு  பணம் கட்டினால் ரசீது இல்லை என்றார்கள்.... அதுடொனேஷன்  என்றார்கள்..   நான் ஸ்ரீராமிடமும், காராவிடமும் விஷயத்தை சொன்னேன்.. அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட டோனேஷன் என்ற பெயரில் ஒரு பைசா கொடுக்க மாட்டேன் மச்சி.. வேற யாரு கொடுத்தாலும் எனக்கு பிரிச்சனை இல்லை... என்னை தவறாக  நினைக்க வேண்டாம்.  அது கருப்பு பணம் பெருக வழி வகுக்கும் என்று ஸ்ரீராம் சொன்னான்.. முதல் முறையாக உதவ வரும் போதே இப்படியா-? இப்படி  ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொள்வேன் என்று நான் நினைக்கவேயில்லை.


மைதிலிக்கு டோனேஷன் இல்லாமல் அரகூ நிர்ணியத்தை தொகை 34,500 ஆனால் அவள் வீட்டில் அவள்தான் முதல் பட்டாதாரி என்பதால் அரசு இருபதாயிரத்தை தள்ளுபடி செய்து இருந்தது. 14,500 நான் உதவி செய்யா விட்டாலும் எப்படியாவது  புரட்டி கட்டி இருப்பார்கள். ஆனால் 24,500 ரூபாய் டெனேஷன் பணத்தை கட்டுவது அந்த குடும்பத்தை பொறுத்தவரை மிக சிரமம்.. ஒரே ஒரு பெண்ணுக்காக  விலக்கு அளிக்க வருவது சாத்தியம் என்றாலும்  அந்த சாத்தியத்துக்கு மிக மிக வாய்ப்பு குறைவு.. நான் கல்லுரியில் வேலை செய்தவன் என்ற முறையில் அதுக்கு மிக மிக வாய்ப்பு குறைவு என்பதால் என்ன  செய்வதென்று விழித்தேன்..ஒரு ஒரு பெண்ணுக்காக இந்தியா உடனே யோக்கிய சிகாமணியாக மாற வாய்ப்பே இல்லை... ஏன்டா இப்படி சோதிக்கற..? என்று இறைவனை நொந்துக்கொண்டேன்...


ஸ்ரீராம் தனது கொள்கையில் உறுதியாக இருந்தான்...அவனது கொள்கை முடிவை நான் மாற்ற விரும்பவில்லை.. அது அவனுடைய விருப்பம்... அவனை கம்பெல் செய்ய  நான் விரும்பவில்லை..


 அவளது கல்லூரி மற்றும் அவளது  நண்பர்களிடம் விசாரித்தேன்.. பணம் எல்லோரும் கட்ட வேண்டும் என்றார்......24,500 ரூபாய்க்கு   எங்கே போவது..?? என்ன செய்வது..? யாரிடம் கேட்பது.. ?நிறைய மெயில்கள் வந்தன.. அதில் அவளுக்கு நல்ல உடை எடுத்து கொடுக்கின்றேன் என்பதாய் சிலது இருந்தது..

 ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.... அவரை போன் செய்யும் படி கேட்டுக்கொண்டேன்..பெயர் வேண்டாம்..,.. ஜாக்கி.. உங்க அக்கவுண்ட் நண்பர் கொடுங்க... நான் ரியாத்ல இருக்கேன்.. என்னால முடிஞ்ச தொகையை உங்களுக்கு அனுப்பறேன்.. அதை நீங்க என்னவேனா செஞ்சிக்கோங்க... பட் என் பேர் மட்டும் வெளிய தெரியவேண்டாம்... சரிங்க...7642 ரூபாய் எனது அக்கவுண்டுக்கு அணுப்பினார்....

 என் பேர் தினேஷ் பாபு .... நான் கடலூர் ஓட்டி செல்லங்குப்பம்தான்.. இப்ப நான்   கத்தார்ல இருக்கேன்.. எவ்வளவு பணம் வேணும்னு சொல்லுங்க..... நான் இப்ப அனுப்பறேன் என்றார்... முதலில் ஒரு 20,000 வேண்டும் என்றேன்...  தேவை என்றால் பிறகு போன் செய்கின்றேன் என்று சொன்னேன். பத்து நிமிடத்தில் போன் வந்தது  பணம் அனுப்பிட்டேன்..செக் பண்ணிட்டு எனக்கு  மெயில் பண்ணுங்க...

 பத்தே நிமிடங்கள் 27,642 ரூபாய்  ரெடி செய்து விட்டேன்... மைதிலிக்கு போன் செய்து உன் அம்மாவை அழைத்துக்கொண்டு ஞாயிற்றுகிழமை காலையில் வீட்டுக்கு வந்து விடு என்று எனது வீட்டு விலாசத்தை கொடுத்தேன்..

 அடுத்த மெயில் சிங்கப்பூரில் இருந்து வந்தது..

Dear Mr.Jackie Sekar, I am regular visitor your blog.At many times, I can see myself in your words and activities. I am working in Singapore for Marine Industry. I can sponsor education fees of Ms.Mythili's, including tuition fee, monthly expenses, Mess fee, project fees and exam fees. Please send the bank account details to the below email.

 தன்னை வெளிப்படுத்திக்க அதிகம் தயங்கினார்.. அவ் பெயர் வேராக இருந்தாலும்   அவருக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்துக்கொள்வோம்.....

அண்ணே பத்தாவதுல நல்ல மார்க் எடுத்த காரணத்தால்தான் எனக்கு பிளஸ் ஒன், பிளஸ் டூ ரெண்டு வருஷத்தை பிரியா படிச்சேன், அதுக்கு அப்புறம்  சென்னையில் சத்யபாமா  காலேஜ்ல படிச்சேன்.....திடிர் திடிர்ன்னு ஏதாவது பிஸ் கட்ட சொல்லுவாங்க.. பிஸ் கட்ட முடியாம நான் வெளியே போய் நின்னு இருக்கேன்... அந்த வலி எனக்கு தெரியும் ஒரு 22,000 பணம் அனுப்பறேன்.. அந்த பொண்ணு படிப்பு முடியற வரைக்கும் நான் செலவு பண்ணறேன் என்றான்... 20,000   பிசுக்கும் 2000 அந்த பொண்ணோட டிரஸ்க்கும் வச்சிக்கோங்க... அதே போல அவுனோட  கசினும் என்கிட்ட பேசினான்.. அவங்க  இன்னும் நிறைய பேருக்கு உதவி  செய்து கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது..   அந்த பொண்ணு இருக்கும் நிலையில படிக்கறதே பெரிய விஷயம், எப்படி வேண்டுமானாலும் படிச்சிட்டு போவட்டும்.. இளம் வயதில் வறுமையோடு  படிப்பது ரொம்ப கொடுமையான விஷயம் அந்த வேதனை எனக்கு தெரியும்.. 80 பர்சென்ட் நல்ல மார்க்... படிச்சி நல்லவேலைக்கு போனா போதும் என்றான்..

சோ இந்த வருடத்துக்கான உதவிகள் போதும்... எல்லோரும் அந்த பெண்ணின் அக்கவுண்ட் நம்பர் கேட்டார்கள்...  அவளுக்கும் அவள் அம்மாவுக்கு ஜாயின்ட் அக்கவுண்ட் இருந்தது...எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இந்த வருடத்துக்கு மட்டும் உதவி செய்து விட்டால்..? அது மட்டும் அல்ல..  இந்த பணம் முக்கியமாக கல்வி  செலவுகளுக்கும் அவளுக்கு  தேவையான பொருட்களுக்கு மட்டுமே செலவிட  வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.. அதனால்தான் என்  அக்கவுண்ட் மூலம் பணம் பரிவர்த்தனை நடக்க  வைத்தேன்.. உதவி இந்த வருடத்துக்கு போதும் என்று சொல்லி விட்டேன்... ஆனால் இரண்டு  மாதம் கழித்து  இந்த பதிவை படிக்கும்  ஒருவர்  உதவி செய்ய வேண்டும் என்று  பத்தாயிரம்  அந்த பெண் அக்கவுண்டில் போட்டால்,-? அது படிப்பை  தவிர வேறு செலவுக்கு சென்று விட வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த முடிவை எடுத்தேன்...

ஞாயிறு அன்று மைதிலியும் அவள் அம்மாவும் என் வீட்டுக்கு  வந்தார்கள் காலையில் பதினோரு மணிக்கு வந்தார்கள்.. பழம், பிஸ்கட் என்று உறவுக்காரரை பார்க்க சென்றால், எப்படி போவோமோ? அது போல பொருட்கள் வாங்கி வந்து இருந்தார்கள்.. இப்போது ஓகே.. இனி  இது போல ஏதும் வாங்கி வரவேண்டாம் என்று அவள்  அம்மாவிடம் சொன்னேன்.

ரொம்ப நன்றிங்க... இந்த உதவியை நாங்க எப்பயும் மறக்க மாட்டேன்ங்க..

 என்ன வேலை செய்யறிங்க...?

 சித்தாளு வேலைதான்..

ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்..?

250 ரூபாய்.. அதுவும் மாசம் புல்லா வேலை இருக்காது...


இந்த வருடம் என்னால பணம் ஏற்பாடு செய்யலைன்ன்னா என்ன   செஞ்சி இருப்பிங்க..?

மகளீர் சுய உதவி குழுவுல பத்தாயிரம் பணம் கேட்டு இருந்தேங்க.. அது கிடைச்சாதான் ஆச்சி....தூங்கி ஒரு வாரம் ஆச்சி... இப்ப ரொம்ப சதோஷமா இருக்கேன்..

மைதிலி  யாழினிடமும் என் மனைவியிடமும் சட்டென ஒட்டிக்கொண்டாள்.. மதிய உணவு எல்லோரும் சாப்பிட்டு விட்டு  கோவை நண்பர் அவளுக்கு அனுப்பிய உடையை  போட்டு  பார்க்க சென்னேன். சரியாக இருந்தது....மைதிலி வீட்டை விட்டு போகும் முன்....இது அலையாபும் வயசு.. காதல் கத்திரிக்காய்ன்னு விழுந்திட வேண்டாம்... முதல்ல நல்லா படி, நல்ல வேலைக்கு போகும் அந்த ஒண்டு குடித்தின வீட்டை விட்டு நல்ல வீட்டுக்கு போ.. அதுக்கு அப்புறம்  கல்யாணம் காதலை பத்தி யோசி என்றேன்.. அவள் அம்மாவுக்கு அப்படி ஒரு அட்வைஸ் செய்ய மிக மிக சந்தோஷப்பட்டார்...

பணத்தை கொடுத்து  இருரையும் வழி அனுப்பி வைத்தேன்... திரும்ப ரெகுலர் பீஸ் பணத்தை வரும் வெள்ளிக்கிழமை அல்லது வரும் ஞாயிறு  வந்து வாங்கி கொண்டு போக சொல்லி இருக்கின்றேன். அதனோடு நண்பர் பெங்களுர் பாஸ்கர் இரண்டு டிரஸ் சுடி செட் அனுப்பி வைத்து இருந்தார் அதையும் கொடுக்க வேண்டும்.

==========

டிரஸ் கொடுக்கறேன். என்று நிறைய மெயில்கள்.. கோவை பக்கம் கார்மெண்ட் பேக்ட்ரி வைத்து இருக்கும் நண்பர்  பெயர்  வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு முதலில் இரவு   நேர உடைகள் பார்சலில் அனுப்பி வைத்ததோடு மட்டும் அல்லாமல், எல்லா வருடமும் அவளுக்கு டிரஸ் அனுப்பி வைக்கின்றேன் என்று  வாக்கு கொடுத்தார்... நேற்று இரவு  அவரை சென்னையில்  சந்தித்தேன்... முதலில் திநகர் கிளப்பில் சந்திப்பதாக இருந்தது பின்பு எனக்காக  சபரி இன் ஓட்டல் பாருக்கு சென்றோம்... அவருடைய நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. அதிமுக வட்ட செயலாளர், பிரபல அமைச்சரின் பிஏ என்று அதிகார வட்டத்தில் இருக்கும் பெரிய ஆட்கள்  அவருடைய   நண்பர்களாக இருந்தார்கள்.. சாப்பிட்டு விட்டு விடைபெற்றோம்.. எனக்கு அவரும் நிறைய ஒற்றுமைகள்.. வீட்டுக்கு போய்  விட்டேனா என்று போன் செய்து செக் செய்து கொண்டார்.. நன்றி நண்பா....

==================


Amount received for mythili’s education…



Mr.Dinesh Babu (UAE)
20000.00




Mr.X(does not want to reveal his name (UAE)
7642.00




Mr.Krishna (Singapore)
20000.00


============
Total
47642.00


=============
Given to Mythili


College Donation Fees
24500


Fees  regular
14500




paid amount
===========================
39000


==========
Balance
8642.00


===============================
Amount received for Mythili's Dress

Mr.Bhaskar (Bangalore)
1000.00


Mr.Mohan (Baroda)
500.00


Mr.Krishna(signapore)
2000.00




==================


3500.00


==============
 மைதிலிக்கான டிரஸ் அமவுன்ட்  வரும் தீபாவளிக்கு அவளுக்கு உடை வாங்கி கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்.

கல்விக்கான மீதத்தொகை அவளுடை படிப்புக்கு இந்த வருடத்தில்  தேவையான செலவுகள் செய்யப்படும்.. இந்த வருடத்துக்கான உதவி போதுமானது... மிக்க நன்றி நண்பர்களே...


=============
 உதவி செய்வது சாதாரண காரியம் அல்ல.. நாம் எல்லோரும் மனிதர்கள் ... சட்டென மனம் மாறி விடும்... இந்த வருடம் உதவி செய்த அத்தனை  நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.. பத்தே  நிமிடத்தில் 30 ஆயிரம் புரட்ட முடிகின்றது.. என் மீதான அன்புக்கு மரியாதைக்கும் மிக்க நன்றி.  சிலர் பணம் அனுப்பறேன் என்று வாக்கு கொடுத்து மெயில் அனுப்பி விட்டு திரும்ப அதை பற்றி பேசாமல்  போனாவர்கள் ஒரு சிலர்.. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ?

 யாருமற்ற புறநகரில் நல்ல மழையில் ஒருமணிநேரம் கால் கடுக்க நின்று கெண்டு இருப்பீர்கள்.  ஒரு ஆட்டோ கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.. ஆட்டோ கிடைத்தால் 200 ரூபாய் பேரம் பேசாமல் கொடுத்து விடவேண்டும் என்று நினைப்பீர்கள்.. ஆட்டோ கிடைத்து ஏறி  உட்கார்ந்ததும் 150 ரூபாய் கொடுத்தால் போதும் என்று நினைப்பீர்கள்..  வீடு கிட்ட வர வர எழுபத்திஜந்து கொடுக்கலாம் என்று நினைப்பீர்கள்..ஆனால்  வண்டி விட்டு இறங்கும் போது பேரம் பேசிக்கொண்டு இருப்பீர்கள்..  இதில் நீங்களோ நானோ வுதிவிலக்கு அல்ல...இதுதான் மனித மனம்... இதையும் மீறி உதவி செய்த நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

26 comments:

  1. நல்ல செயலைச் செய்திருக்கிறீர்கள் ஜாக்கி. நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பெரிய விசயம் ஜாக்கி. இதுக்கு மேல நீ என்னத்தைடா பதிவுல சாதிச்சிட போறே?

    ReplyDelete
  3. நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள். Nandri Anna.

    ReplyDelete
  5. Good karma, Jackie. Keep it up.
    Best wishes for the student and her mother.

    ReplyDelete
  6. Good karma, Jackie. Keep it up.
    Best wishes for the student and her mother.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஜாக்கி...

    ReplyDelete
  8. உதவிய நண்பர்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்து சொல்வதைவிட நன்றி சொல்வதே பொருத்தம். நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  9. படிப்பிற்க மட்டுமே பயன்பட வேண்டும் இந்த பணம் என்ற ஒரு உயரிய உங்கள் எண்ணமும் அதிகமாக பணம் சேர்ந்தால் தவறாக பயன்படுத்தலாம் என்ற தெளிவும் பிரமிப்பாக உள்ளது அண்ணே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. என்ன சொல்லலாம்.. ம்ம்ம்.. --”நல்லா இருப்பா”

    ReplyDelete
  11. இத்தனை நல்ல உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது! அன்பு நெஞ்சங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    ReplyDelete
  12. உதவி செய்த நண்பர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  13. ஜாக்கி.. கலக்குங்க.
    Good job.. and thanks to all the souls who supported a noble cause.

    ReplyDelete
  14. ஒரு உதவி செய்ய தீர்மானித்துவிட்டு, பிறகு அதை ஒரு பதிவாக எழுதி அதன் மூலம் கிடைக்கும் உதவிகளை சரியாக செய்து, அந்த வரவு செலவுகளை எழுதி அதை மற்றவர்களின் பார்வைக்கும் வைத்து... எந்தவித இலாப நோக்கமுமில்லாமல் நீங்கள் செய்யும் இந்த உதவிகள் நிச்சயம் உங்களை உயரத்தில் வைக்கும் நண்பரே..

    உதவி செய்த அத்தனை முகம் தெரியாத நண்பர்களும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்...

    ReplyDelete
  15. Well Done... Jackie.Leaving a meaningful life!!!
    Good.

    ReplyDelete
  16. ஜாக்கி சார் நன்றியும் வாழ்த்துகளும்

    ஒரு பிரச்சனயை அனுகிய விதம்
    அதை பகிர்ந்துகொண்ட விதம்
    நிறைவேற்றி முடித்த விதம்

    எல்லாவற்றிற்கும் மேலாக
    வெளிப்படையாக கணக்கு வழக்குகளை
    வெளியிட்டு கச்சிதமாக முற்றுபுள்ளி
    வைத்த விதம் தங்களை மேண்மையான
    மனிதரென்பதை நிரூபித்து விட்டீர்கள்.

    நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  17. உதவி செய்த அத்தனை முகம் தெரியாத நண்பர்களும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்...

    ReplyDelete
  18. நன்றி சொல்வதே பொருத்தம். நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  19. வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.. இளா நீ சொல்லறது 100க்கு 100 உண்மைதான்..

    ReplyDelete
  20. என்னடா இது... மெயிலுக்கும் பதிலைக்காணோம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இந்தப் பதிவைப் பார்த்தபிறகுதான் விஷயம் புரிந்தது. நல்லது.
    அடுத்த ஆண்டு மைதிலிக்கு உதவி தேவைப்படும்போது என்னையும் கொஞ்சம் நினைத்துக்கொள்ளுங்கள். நான் அடிக்கடி வலைப்பூக்களை நுகர்பவன் அல்ல. என் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கிறது. தொடர்பு கொள்ளவும். நானும் உங்களைப்போல, அல்லது உங்களைவிட மோசமான நிலையில் இருக்கும் நடுத்தர வர்க்கம்தான். பெரியதொகை ஏதும் இல்லாவிட்டாலும் இயன்றதைச் செய்ய முடியும்.
    கடைசியில் ஆட்டோ அனுபவம் எழுதினீர்களே - அதுதான் அனைவரின் நிலையும். இதுபோல ஏதாவது செய்தியைப் படித்ததும் உதவி செய்ய எண்ணம் உடனே பிறக்கும், அதை உடனே செய்யாவிட்டால் அந்த எண்ணம் அப்படியே மறைந்து போகும். இப்படித்தான் பலர் உதவும் மனமிருந்தும் செய்யாமல் இருக்கிறார்கள். அதனால்தான் நான் இந்த மாதிரி விஷயங்களில் நினைத்ததை அந்தக்கணமே தொலைபேசி அல்லது அஞ்சல் வழி தெரிவித்து விடுவேன். இது ஒரு கமிட்மென்ட் ஆகி விடும் என்பதால் பிறகு தப்பாது. இதையும் எழுதக்காரணம், என் இந்த வழக்கத்தை மற்றவர்களும் பின்பற்றலாம் என்பதற்காகத்தான்.

    ReplyDelete
  21. அண்ணே, நீ வாழ்க்கையில் நல்லா இருப்ப ....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner