இனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...

தெலுங்கில் அந்த படம்  எத்தனை முறை  பார்த்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது... நான் பதிவு எழுத வந்த ஆரம்பத்தில் அந்த படத்தை  எழுதி இருக்கின்றேன்... அந்த  படத்தை மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல் எழுதி இருப்பேன்.... அப்போது எல்லாம் ஒரு பதிவுக்கு 4 மணி நேரம் எடுத்துக்கொள்வேன்.... அப்படி எழுதிய ஹேப்பி  டேஸ் தெலுங்கு பட விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும்....


இன்னும் கூட ஒரு ஆசை... அந்த படத்துக்கு இன்னோரு முறை  இன்னும் ரசனையாய் எழுத வேண்டும் என்பது என் ஆசை... அது நேரம் கிடைக்கும் போது நான் நிச்சயம் எழுதுவேன்..

குடும்ப சூழல் காரணமாக பத்தாவதுக்கு பிறகு பி குருப் படிக்க என் அம்மா கம்மலை அடகு வைத்து 500ரூபாய் என் அப்பா கட்டி என்னை பதினொன்னாவது சேர்த்தார்... ஆனால் எனக்கு சயின்ஸ் சுட்டு போட்டாலும் வராது....பல சப்ஜெக்டுகளில் கோட்... அத்துடன் குடும்ப வறுமைகாரணமாக நான் படிப்பதை விட வேலைக்கு செல்ல மிக ஆர்வமாய் இருந்தேன்....

என் அப்பா எப்போதும் என்னை அடித்து துவைப்பதிலும் அவமானப்படுத்துவதிலும் வல்லவர்... எந்த ஆசையான பொருளும் எனக்கு கிடைக்காது... என்னை நக்கல் விட்டு கொட்டி கொட்டி குலவி ஆக்குவார்...நான் படிப்பில் மக்கு என்றும் எதற்கும் உதவாதவன் என்று என்னை ஏளனம் செய்வார்...ஒரு நாள் காலை  வேப்பங்குச்சியில் பல் விலக்கி  கொண்டு இருந்தார்.. நான் ஏதோ கேட்டேன்...படிப்புல ஒன்னும் இல்லை.. இதுல மட்டும் வக்கனை கேக்குதோ என்று சட்டென  பல் விளக்கி கீழே துப்பும் எச்சிலை என் மீது துப்பி விட்டார்.....

படிப்பு என்ற விஷயத்தை என்னுள் அதிகமாக திணிக்க திணிக்கஅதன் காரணமான அதன் மேல் வெறுப்பு வந்து விட்டது...அதனால் எனக்கு படிப்பில் பெரிய ஈடுபாடு எல்லாம் இல்லை....அதன் பிறகு பகுதி நேர வேலைகளுக்கு எல்லாம் செல்ல ஆரம்பித்தேன்...என்னோடு படித்த நண்பர்கள் எத்த புத்தக சுமையும்  இல்லாமல் சைக்கிளில் ரொம்ப ஜாலியாக காலேஜ் போய் வருவதை பார்த்து ஏங்கிய நாட்கள் அதிகம்...

அந்த கல்லூரி வாழ்க்கை என் வாழ்க்கையில்  இல்லை என்று புறம் தள்ளிவிட்டு பல வேலைகள் செய்து கொண்டு இருக்க.. ஒரு கல்லூரியில் டெக்னிக்ல் இன்ஸ்டெக்ட்ர் வேலை இருப்பதாக சொல்ல மறு பேச்சு இல்லாமல் ஒத்துக்கொண்டேன்...5 வருட காலம் மாணவ மாணவிகளோடு பழகினேன்.... என் மனதில் இருந்த கல்லூரி பற்றிய ஏக்கம் சுத்தமாக கரைந்து போனது.....

கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு  போனதால் மீண்டும் படிக்கும் ஆர்வம் வந்தது...படிப்பை ரொம்ப இலகுவாக பார்க்க ஆரம்பித்தேன்... ஆங்கிலம்  தெரியாது... எதுஎழுதினாலும் ஆங்கிலத்தில் பாசானால்தானே வெற்றி பெற முடியும் என்பதால் படிப்பே எனக்கு பிடிக்கவில்லை...இன்று ஆங்கில படம் அதிகம் பார்க்கின்றேன்.... உலக சினிமாக்கள் ரசிக்கின்றேன்... இரண்டு  நாளைக்கு முன்  எம்ஏ தேர்வில் வெற்றி பெற்றேன்.....ஆங்கிலத்தை பயத்தோடு பார்க்காமல் இருந்தது... இந்த வெற்றிக்கு காரணம்.....என்பேன்.. அது போல் இந்த படத்திலும் ஒரு கேரக்டர் வருகின்றது....

என்னதான் இன்று வாழ்க்கை  உயரங்களை அடைந்தாலும்... அந்த 3 வருடவாழ்க்கை அல்லது 4 வருட வாழ்க்கை என் வாழ்வில் நிகழவே இல்லை.. அதனாலே எனக்கு தெலுங்கு படம் ஹாப்பிடேசை எனக்கு பிடிக்கும் ..... எனக்கே இப்படி என்றால் கல்லூரியில் வாழ்ந்தவர்களுக்கு எப்படி இருக்கும்... அந்த நினைவுகளை மீட்டி விட்டால் அவர்களால் விழியோரம்  நீருடன்  அந்த நினைவுகள் எட்டி பார்க்கும் அல்லவா?

அப்படி நினைவுகளை மீட்ட வந்து இருக்கும் படம்தான் ஹாப்பிடேஸ்....தெலுங்கு படம்  தமிழில் ரீமேக்காகி  இனிது இனிது என்று வந்து இருக்கின்றது....

இனிது இனிது படத்தின் கதை என்ன???

12ம் வகுப்பு முடித்து விட்டு நான்கு மாணவர்கள்...3 மாணவிகள்  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வகுப்பில் சேர... அந்த நான்கு வருட காலங்கள் அவர்கள் வாழ்வில் கடந்து இன்ப துன்ப நினைவுகளை சொல்லும் சம்பவங்கள்தான்   இனிது இனிது படத்தின் கதை....கல்லூரி  வாழ்க்கையை கடடந்து போனவர்கள்.. மற்றும் அந்த வாழ்க்கையை மிஸ் செய்தவர்கள் அனைவரும் நிச்சயம் ரசிக்கும் படம் இது...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் தெலுங்கு படம் போல் இருக்கின்றதா என்றால் அது நிச்சயம் இல்லை.. அது வேறு இது வேறு....

தெலுங்கு படத்தை  பார்க்காமல் இந்த படத்தை பார்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்...

எல்லோரும் புதுமுதகம் என்றாலும்... தெலுங்கில் மேயின் கேரக்டர் செய்த பையனைவிட தமிழ் படத்தில் மெயின் கேரக்டர் செய்த பையன் ஸ்மார்ட்டாக இருக்கின்றான்.....

தம்ன்னா கேரக்டர் தெலுங்கில்   செய்த மது  பார்த்திரத்தை ரேஷ்மி செய்து இருக்கின்றார்...இவரை பார்ப்பதற்கு சன்டிவியில் வானிலை அறிக்கை பல வருடங்களாக ஒரு சின்ன பெண்  தோற்றத்தில் வாசிப்பாரே...  அந்த பெண் போலானதோற்த்தை தருகின்றார்...

காலேஜ் படிக்கும்  லுக் இருந்தாலும்... அதீத வளர்ச்சி... புடவையோடு  ரெட் சாரியில் நடந்து வரும் அழகே அழகு....

பல காட்சிகளில் டிரையான உதடுகளுடன் இருக்கின்றார்... டெங்கு காய்சல் வந்து மாத்திரை போட்டு சுடதண்ணி குடித்த உதடு போலவே இருக்கின்றது... கொஞ்சம் தன் உதட்டாலே ஈரபடுத்தி இருக்கலாம்... அல்லது ஒரு லிப் லைனராவது உபயோகபடுத்தி இருக்கலாம்.... மற்ற காட்சிகளில் எல்லாம் நன்றாகவே செய்து இருக்கின்றார்...

எவரையும் புது முகம் என்று ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு அந்த முகங்கள் நன்கு செய்து இருக்கின்றன...முக்கியமாக அந்த எம்எல்ஏ யைன் கேரக்டர்... காமெடியில் பிச்சி உதறுகின்றான்... சீனியிரை காதலிக்கும் அந்த பையனும் நடிப்பில் நன்றாக ஸ்கோர்  செய்கின்றார்கள்....தெலுங்க படத்தில் அதே கேரக்டர் இந்த படத்திலும் செய்து இருப்பது அந்த சீனியர்  பெண் ஷ்ரவாஸ் (சோனியா)மட்டும்தான்......

இன்ஜினியரிங் காலேஜ் ரொம்ப ஹைடெக்காக இருக்கின்றது... அதில் படிக்கும் பிள்ளைகள் போடும் உடைகளும் ஹைடெக்... உடைகள் வாசுகி பாஸ்கர்..  அவரை இரண்டு நாளைக்கு முன்புதான் பொதிகை டிவிக்கு இண்டர்வியூவு  ஒளிப்பதிவு செய்தேன்....

இசை, மிக்கி ஜே மேயர்....பாடல்கள் ஹேப்பிடேஸ்பாடல்கள்தான் அப்படியே  பயன்படுத்தி இருக்கின்றார்கள்... இங்கே தெலுங்கு படத்தின்  மனதை அள்ளும் ஒரு பாடல்....ஸ்டார் லெவலில் யாராவது புக் செய்து இருந்தால் உதாரணத்துக்கு தமன்னா கேரக்டருக்கு தமன்னாவை புக்  செய்து இருந்தால்.. எப்படியும் அவர் ஒருவருகே 60 லட்சம் வரை செலவு செய்ய  வேண்டிவரும் என்பதால் அதனை தவிர்த்து அந்த பணத்தை படத்தின் ரிச்நெஸ்க்கு பய்ண்படுத்தி இருக்கின்றார்கள்...நல்ல யோசனை..

இனிது இனிது  காதல் காட்சி நன்றாகவே இருந்தது.... இருந்தாலும் ஒரு
தெலுங்கில் ஒரு சாம்பிள்...


படத்தினை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருப்பவர்.. ஒளிபதிவாளர் குகன் அவர்கள்...இரண்டையும் கட்டி மேய்பது என்பது சாதாரண காரியம் அல்ல... இந்த படத்திலும் அவருடைய டிரென்டான மிரர் ரிப்லைக்ட் இந்த படத்திலும் உண்டு....

இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் அவர்களின் வருங்கால மனைவி போனிவர்மா... இந்த படத்துக்கு நடனம்...

காலேஜ் பிரின்சிபல் வேடத்திலாவது பிரகாஷ்ராஜ் நடித்து இருக்கலாம்... படத்தை அப்படியே எடுக்காமல் நிறைய காட்சிகள் மாற்றி எடுத்து இருக்கின்றார்கள்...

 சென்னை கமலாவில் ஸ்கீரின் இரண்டில் இந்த படத்தை பார்த்தேன்.....சில காட்சிளில் அவுட் ஆகி  இருந்தது....இரண்டையும் மேய்பது கடினம்....இந்தனை ஆர்டிஸ்ட் வைத்து முதல் படத்தில் வேலை வாங்கி ஒளிப்பதிவு செய்த இயக்குனருக்கு என்  வாழ்த்துக்கள்......

 தேசிய கொடி ஷாட்டுக்கு மெனக்கெட்டு இருப்பதற்கு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றிகள்...

கேரளாவுக்கு டூர் போகும் காட்சிகளில் அந்த சாப்ட்   லைட்டிங்கில் கோணங்கள் அருமை...

படக்குழுவினர் விபரம்....

Directed by     K. V. Guhan
Produced by     Prakash Raj
Written by     Sekhar Kammula, K. V. Guhan
Starring     Narayan
Arun Iswaran
Vimal
Sharan Sharma
Reshmi Menon
Sonia Deepti
Benaas
Gia Umar
Sunny Sawrav
Abhishek
Krishna
Ajay
Satish
Music by     Mickey J Meyer
Studio     Duet Movies
Release date(s)     20 August 2010
Country      India
இனிது இனிது... கல்லூரி போனாலும் போகாவிட்டாலும்... உங்களை கல்லுரி வாழ்க்கையை நினைத்து பார்க்க வைக்கும் அல்லது ஏங்க வைக்கும் படம்.... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

சென்னை கமலா தியேட்டர் ஸ்கிரின் 2  டிஸ்கி...


எனக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த மூன்று பேர் மொக்கையாக காமெடி என்ற போர்வையில் சத்தம் போட்டு  பேசிக்கொண்டு இருந்தார்கள்...

எனக்கு முன்  சீட்டு வரிசையில் கேபிள் மற்றும் சுரேகா உட்கார்ந்து இருந்தார்கள்

எனக்கு முன் சீட்டில் ஒரு இளம் அம்மாவிடம் அவரின் குழந்தை அப்பட்டமாக தெரியும் ஆப்பரேட்டர் ரூமை காட்டி அது என்ன என்று கேள்வி எழுப்ப- ? அந்த அம்மா பொறுமையாக நிதானமாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்....

புதியவர்கள் நடித்த படம் என்பதால் அரங்கம் முழுவதுமாக நிறையவில்லை...

இந்த முறையும் கமலாதியேட்டர் சாக்ஸ் நாத்தம் பாப்கான் மசலா பவுடரால் எனக்கு பயங்கர டிஸ்டபன்ஸ்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

19 comments:

 1. அப்ப பார்த்திட வேண்டியதுதான்.அதுசரி தமிழ் சினிமாவில் இன்ஜினியரிங் என்ட உடனேயே ஏன் mechanical இன்ஜினியரிங் பத்தியே வருது??

  ReplyDelete
 2. மனதை திறந்து ஒன்றூ சொல்கிறேன்.. நான் என்னுடய கல்லோரி வழ்க்கையை அனுபவித்தத்ஏ இல்லை. எனக்கு வீட்டில் அதிக சுதந்திரம்.ஆனால் கல்லூரியில் இருந்த வழ்ழ்க்கையும் அதில் இருந்த போலிதனமையும் எனக்கு பிடிக்கவும் இல்லை. நான் அதில் ஒட்டவும் இல்லை. கடை சி நாள் எல்லாரும் போய் ஆ ஊ என்று செண்டியை தாக்கிய போது நான் போகவும் இல்லை. எல்லருக்கும் கல்லோரி வாழ்க்கை அத்தனை சுலபமில்லை.என் நண்பர்கள் சிலரும் அப்படியே. பெண்களை என்ன பாடு படுத்தி அவர்கள் எதிர்த்தால் 'உன் பெயரை கெடுத்து செவுருலு எழுதுவேன்' மாதிரி கல்லூரி.அதனால் ரொம்ப மிஸ் பண்ணவில்லை .

  ReplyDelete
 3. பெருமதிப்பிற்குரிய அண்ணன் ஜாக்கிசேகர் அவர்களே. உங்கள் இந்த பதிவை லினக்ஸ் இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை. சரிய செய்ய முயலவும். நன்றி.

  ReplyDelete
 4. Ellarukkum Kalloori walkai athanai sulabamillai - Unmai tan.
  Analum sekar anna anda lipliner wishayam tan konjam udaikidu,awalo unnipa pathingaloooooooo - hehe

  ReplyDelete
 5. தெலுங்குல நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம். தமிழ்ல என்னை ஏமாத்திட்டாங்க. நானும் இந்தப்படத்தைப்பத்தி எழுதி இருக்கேன். அருமையாக எழுதி இருக்கீங்க.

  ReplyDelete
 6. அன்பிற்கினிய நண்பரே..,

  / /...என்னதான் இன்று வாழ்க்கை உயரங்களை அடைந்தாலும்... அந்த 3 வருடவாழ்க்கை அல்லது 4 வருட வாழ்க்கை என் வாழ்வில் நிகழவே இல்லை.. ../ /

  உண்மையில் கொடுத்து வைத்தவர் நீங்கள்தான்... சினிமாவில் காட்டப்படும் கல்லூரி வாழ்க்கை நிஜத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை. கல்லூரியில் பணிபுரிந்த உங்களுக்கு இது தெரிந்திருக்கும் என்றே நினைத்திருந்தேன்.

  பதிவு நன்றாக உள்ளது. உங்கள் பழைய பதிவையும் படித்தேன் - என் போன்ற புதியவர்களுக்கு இதுதான் உற்சாக பாணம்.

  நன்றி.......

  மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..,
  அன்புடன்...ச.ரமேஷ்.

  ReplyDelete
 7. அப்பா பார்த்துட வேண்டியது தான்,இனிது இனிது டீமோட சந்திப்பு நிகழ்ச்சி இன்னைக்கு விஜய் டிவில இரவு 8 மணிக்கு இருக்கு.

  ReplyDelete
 8. Padam eppadiyo..your way of writing is very good.
  College la padikalai nu kavalai padathinga. You are better than those people..

  ReplyDelete
 9. உடனே படம் பார்க்க தூண்டும் நல்ல அலசல்... M.A. தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. தெரியலை இளையவன்...அந்த அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை...நன்றி வருகைக்கு..

  ReplyDelete
 11. நன்றி திரு... இது உங்கள் பார்வை... சினிமா கல்லூரிக்கு வித்யாசம் எனக்கு நன்றாகவே தெரியும்... நீங்கள் ரிசர்வ்டு டைப் என்பது நன்றாக தெரிகின்றது...

  ReplyDelete
 12. பிரபு என்ன பிரச்சனைன்னு தெரியலைப்பா...

  ReplyDelete
 13. நன்றி கவிதைகாதலன்
  நன்றி அருன்..

  ReplyDelete
 14. தங்கை சாந்திக்கு.. நான் ஒரு போட்டோ கிராபர்... அப்புறம் கேமராமேன்... எல்லாத்தையும் உன்னிப்பாக பார்க்க வேண்டும்... ஒரு குளோஸ் அப் வைக்கின்றோம் என்று வைத்துக்கொள்... எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்.ஒரு சட்டத்துக்குள் இருக்கும் காட்சி கூடுமானவரை அழகு படுத்த முயற்ச்சி செய்ய வேண்டும்...இது கல்யண பெண்ணுக்கு சடங்கு செய்யும் போது சந்தனம் அதிகம் முகத்தில் இருத்ல் ஏன் துடைத்து விட சொல்கின்றோம்.... ??அது போலதான் இதுவும். அதுதான்ஒரு கேமராமேன் மற்றும் புகைபட கலைஞனின் வேலை...

  ReplyDelete
 15. நன்றி மதன்
  நன்றி தெய்வமகன்...

  ReplyDelete
 16. அக்பின் ரமேஷ் எனக்கு இரண்டுக்கான வேறுபாடு நன்றாக தெரிந்தாலும்.. ஆனால் அந்த வாழ்க்கையை நேரில் பார்த்து இருக்கின்றேன்... அதனால் அந்த ஆர்வம்...

  ReplyDelete
 17. ஜாக்கி அண்ணா, உங்கள் விமர்சனத்தோடு நான் 75% ஒத்துப் போகிறேன். ஆனால் climax ஏனோ ரொம்ப பொறுமையை சோதித்து.இது குறித்த எனது பதிவு கீழே.

  http://yaavarumnalam.blogspot.com/

  தங்களது கருத்தைக் கூறினால் மிகவும் மகிழ்வேன். நன்றி.

  ReplyDelete
 18. விமர்சனம் படத்தை பார்க்க தோன்றுகிறது..!
  அன்புடன்
  வெற்றி
  http://vetripages.blogspot.com/

  ReplyDelete
 19. நாலைந்து பதிவுகள் முதல் பக்கத்திலேயே தெரியுமாறு செய்திருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner