விடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்களுடன்)
சென்னையில் எப்போதும் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் இடம் எது தெரியுமா? சென்னை மெரினா பீச்சின் காந்தி சிலைதான்..எப்போதும் என்றால்? எந்த நேரத்திலும் என்று அர்த்தம்....
விடியற்காலை 4 மணியில் இருந்து பார்ப்போம்...மெரினாவில் இருந்து பத்து கிலோமீட்டர், பதினைந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பிரபலங்கள்... வாக்கிங் போய் கொண்டு இருப்பார்கள்... அப்படி போகையில் நான் சுஜாதா, நம்பியார்,சாருஹாசன், போன்றவர்களை பார்த்து இருக்கின்றேன்...
அதன் பின் 6 மணிக்கு பொது மக்கள் வாக்கிங் வர தொடங்கியதும் மெரினா கலை கட்டும்.. அதன் பின் உடற்பயிற்ச்சிகள் கராத்தே பயற்ச்சி,ஸ்கிப்பிங் என விதவிதமான பயற்சிகள் நடக்கும்...
காலை 8 மணிக்கே காதலர்கள் வர தொடங்கி இரவு பத்து மணி வரை பொது மக்கள் தங்கள் கட்டு பாட்டுக்குள் மெரினா கடற்கரையை வைத்து இருப்பார்கள்... அதன் பிறகு அதிகமாக சேர்த்த சொத்தை கரைக்க பிறந்த பிள்ளைகள் கும்பலாக, தன் நண்பர்களுடன் கார்களில் உட்கார்ந்த படியே தாக சாந்தி நடத்துவார்கள்..
அவர்கள் 12லிருந்து ஒரு மணிவரை மெரினாவை அவர்கள் கட்டுபாட்டில் வைத்து இருப்பார்கள்..அப்பறம் போதையில் இடத்தை காலி செய்ய... ஒரு மணிக்கு மேல் எந்த இட்த்தில் எவ்வளவு சொத்து இருக்கின்றது என்று தெரியாத, தூக்கம் வராத மெல்தட்டு வயதானவர்கள்.... தூக்கம் வராத விழிகளுடன் , நண்பர்களோடு காந்திசிலை அருகில் காரை பார்க் செய்துவிட்டு, விடியலில் 3 மணிவரை கதை பேசிக்கொண்டு இருப்பார்கள்.....
திரும்ப 4 மணிக்கு பிரபலங்கள் வாகிங் வர இப்படியாக இந்த சைக்கிள் இடைவிடாது இயங்கும்....
ஒரு ஆறுமாதம் கையில் பத்து பைசா இல்லாமல் மெரினாவின் பிளாட்பார வாழ்க்கை வாழ்ந்த போது இவைகளை எல்லாம் நான் கூர்ந்து கவனித்து இருக்கின்றேன்...
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படப்பிடிப்பு விடிய விடிய மெரினா பக்கத்தில் நடந்தது...படபிடிப்பு 5 மணிக்கு முடிந்த போது, நான் வீட்டுக்கு போகாமல் நான் வாழ்ந்த மெரினாவில் மிக நீண்ட நாளுக்கு பிறகு கடற்கரைக்கு போய் உட்கார்ந்து கொண்டு , அது மெல்ல பரபரப்பாகும் அழகை ரசிக்க ஆரம்பித்தேன்....
கருக்களில் போய் கரையோரம் உட்கார வித விதமான கலர்களில் பலரின் பின்புறத்தை பார்க்க நேர்ந்தது...அட சனியன்களா??? அதனால் திரும்ப காந்திசிலைக்கு வந்து விட்டேன் .. பல வயதானவர்கள் யோகா செய்து கொண்டு இருந்தார்கள்...
அதற்குள் புற்றிசல் போல மக்கள் வர ஆரம்பித்தார்கள்.. அருகம்புல் சாற்றை வயிற்றுக்கு வார்த்துக்கொண்டு தொப்பையை கரைக்க நடைபயில ஆரம்பித்தனர்...
இடுப்பு சுற்றளவு 38 யை நெருங்கிய சின்ன பெண் ஒருத்தி காரில் இருந்து தன் அப்பாவுடன் இறங்கி... இயல்பாய் நடந்து வந்தவள் என்னை பார்த்தும் தலையில் உள்ள ரப்பர் பேன்டை எடுத்து விட்டு, ஸ்டைலாக தலையை கோதி தலைமுடி பறக்காமல் இருக்க, ரொம்ப டைட்டாக ரப்பர் பேன்ட் போட்டால்...நான் பழைய நினைவுகளில் என் தலையில் கை வைத்து சட்டென எடுத்துக்கொண்டேன்...
லைட்ஹவுஸ் பக்கத்தில் ஒரு பெரியவர் கையில் ஒரு பெரிய பொறை பாக்கெட்டை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க... ரொம்ப உரிமையாக தெரு நாய்கள் அவரிடத்தில் வ்நது ரேஷனில் அரிசி வாங்குவது போல் நின்று பொறை வாங்கி சென்றன....
நான்கு பேர் கொண்ட ஒரு குழு கெலாக்ஸ் எடுத்து வந்து ஒரு இடத்தில் கொட்டி வைக்க...... எல்லலோரும் பராசக்தி சிவாஜியாக மாறி போனார்கள்... பெரிய காக்கா கூட்டம் வந்து உட்கார்ந்து, அந்த இடத்தை அவர்கள் ராஜ்யமமாக மாற்றிக்கொணடது....
ஒரு சின்ன பையன் வயது 15 இருக்கும் .....ஆனால் அவ்வளவு பிரமாண்டமாய் நான் இதுவரை பார்த்து இல்லை.. ஒரு படத்தில் விவேக் ஜோக்கில் ஏய் சின்னவனே என்று கூப்பிடும் போது ஒரு உருவம் வருமே... அது போல அந்த பையனின் உருவம் இருந்தது... என் தொப்பையை தடவிக்கொண்டேன்.. ஆறுதல் அடைந்தேன்..
நான் கடற்கரைக்கு அலை பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள முடிவு செய்து நடந்து போக ஆரம்பித்தேன்..
1994க்கும்2010க்கும் நிறைய வித்யாசம் இருந்தது... காரணம் ஆறு மணிக்கே காதலர்கள் வந்து விட்டார்கள்... அந்த பெண்ணுக்கு நீண்ட முடி இருந்தது.. அது தொடைவரை நீண்டு இருந்தது....நெற்றியில் சந்தனம் வைத்து இருந்தாள்... நீண்ட முடி, சந்தனம் அநேகமாக மலையாளியாக இருக்க வேண்டும்... அந்த பையனும் ரொம்ப ஸ்மார்ட்டாக இருந்தான்....கைகள் பின்னிக்கொள்ள, அவன் தோளில் சாய்நதபடி அந்த பெண் அவனோடு நடந்து கொண்டு இருந்தாள்... அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்...நடக்கும் போது அந்த பெண்ணின் மார்பில் அவன் தோள்படுவதாக பார்த்துக்கொண்டான்.......
விடியலில் வாய் நனைக்க மனது துடித்து.. திரும்பவும் பீச் சர்விஸ் லேனுக்கு போகவேண்டுமா? என்று நினைக்கும் போது ஒரு பையன் டீ எடுத்து வந்தான்... படிக்கின்றானாம்... பகுதி நேர விடியல் வேலை....அவன் சுறு சுறுப்பை ரசிக்க ஆரம்பித்தேன்...
ஒரு கணவன் தன் புது மனைவியுடன் வந்து குளித்தான்... வந்தவன் ஷாட்ஸ் எடுத்து வந்து இருந்தான்.... அதில் குளித்து விட்டான்... ஆனால் ஜட்டி மாற்றிக்கொள்ள துண்டை எடுத்து வர மறந்து விட்டான் போல ....
மனைவி போட்டு இருந்த சுடிதாரின் வெள்ளை ஷாலை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஜட்டி மாற்ற........... தலையில் இருந்து வழியும் தண்ணீர் நொடியில் சுடிதார் வெள்ளை நிற ஷாலை ஈரமாக்க.. நம்ம எக்ஸ்ரே கண்ணுக்கு எல்லாம் தெரிய... ஏண்டா நாராயணா கலையில இப்படி சோதிக்கற என்று தலை திருப்பிக்கொண்டேன்......
கடற்கரையில் நிறைய பேர் யோக செய்ய வந்துவிட்டார்கள்... அதில் நிறைய வடநாட்டு முகங்களை காண முடிந்தது.. ஜான் அபிரஹாம் போல இருந்த ஸ்மார்ட் பையன் தன் அப்பா, அம்மாவை கடற்கரைக்கு அழைத்து வந்து இருந்தான்...ஏதோ சாப்ட்வேர் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்க வேண்டும்... அவன் கடற்கரையில் காலாற நடந்தான்...அவன் அம்மா வயதானலும் ரொம்ப சிக்கென இருந்தார்... அந்த அம்மா ஒரு போதும் உடற்பயிற்ச்சியை நிறுத்தவில்லை என்பது அவரது உடலை பார்த்தலே தெரிந்தது...
ஒரு அப்பா தன் இரண்டு பெண் குந்தைகளையும் அழைத்து வந்து கரையில் இறக்கிவிட உற்சாகத்தில் ஹோ என்ற சத்தத்துடன் கால்களை நனைத்து மகிழ்ந்தனர்...அலைகளை போக்கு காட்டி ஆடி மகிழ்ந்தது எனக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது...
ஒரு பெரியவர் நேராக வந்தார்... கடலில் போய் அலையில் கால் நனைத்தார்... சோம்பல் முறித்து எழும் சூரியனை ஆடாமல் அசையாமல் வெகு நேரம் பார்த்துக்கொண்டு நின்றார்... என்ன பிரச்சனையோ?
சுனாமி போல் அந்த மூன்று ராட்சிகளும் வந்தார்கள்... அவர்கள் அலப்பறை தாங்கவில்லை.. மாடலிங் ஸ்டுடியோவில் நின்று போஸ் கொடுப்பது போல் கடற்கரை பின்புலத்தில் நிறைய போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.... அதன் பின் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள்....நானோ பஞ்ச பரதேசி போல் நைட் ஷுட் முடித்து, கண் எல்லாம் திகு திகு என எறிய உட்கார்ந்து இருந்தேன்.....அவர்கள் வந்த பிறகு கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் இதமாக இருந்தது.... அவர்கள் எனது வலப்பக்கம் நடந்து போனார்கள்... திரும்ப என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்... தேவுடா????
பொறுக்கவில்லை சென்னை மாநகராட்சிக்கு என் சந்தோஷத்தை அவர்களால் சுத்தமாக பொறுத்துக்கொள்ள முடியவில்லை....3 கீலோமீட்டர் நீளம் கொண்ட கட்ற்கரையில் நானும் அந்த பெண்களும் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்தா கடற்கரையை சுத்தம் செய்ய அந்த குப்பை எடுக்கும் வாகனம் வர வேண்டும்...????
அந்த குப்பை வாகனம் அருகில் வர, ஏதோ டைனோசர் பக்கத்தில் வந்து போல் கத்தி கூச்சலிட்டார்கள்.... அந்த பெண்கள்அவர்கள் உட்கார்ந்த இடத்துக்கு பக்கத்தில் உரசியபடி அந்த டிரைவர் வாகனத்தை ஒட்டினார்... கத்தி கூச்சல் போட்ட பெண் பிறகு போனில் கதைத்த படி இருந்தார் .....
ஒரு அப்பா தன் குந்தையை மணலில் விளையாட விட்டு உடற்பயற்ச்சி செய்தார்... சட்டென அந்த குழந்தை மணலில் வீடு கட்டியது.... இந்த வயதில் சென்னையில் நிஜ வீடு சாத்தியம் இல்லை என்பதால் அந்த குழந்தை மணல் வீடு கட்டியது....கீழே படத்தில் மணல் வீடு கட்டும் குழந்தை...
கடற்கரையை சுத்தபடுத்தும் எந்திரம் அந்த மணல் வீட்டையும் விட்டு வைக்கவில்லை அதையும் தன் கோர பற்களால் அரைத்து நொறுக்க ரெடியானது...
அடுத்த ரவுண்டில் தன் மணல் வீடு இடிய போவதை பரிதாபமாக பார்க்கும் சிறுமியும் அப்பாவும்.... அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த வாகனம் அந்த மணல் வீட்டை நோக்கி போக.... அந்த பெண் குழந்தை ஒடி வந்து உற்சாகத்தோடு தான் கட்டிய மணல் வீட்டை காலால் இடித்து தள்ளியது....
நிறைய பணக்காரர்கள் விட்டு கன்றுகுட்டி சைஸ் நாய்களை வாக்கிங் என்ற பெயரில் மேய்த்துகொண்டு இருந்தார்கள்... சுத்தம் செய்த இடத்தில் ஒரு நாய் கக்கா போனது....மனிதனே போகும் போது அது போவதில் தவறு இல்லை...
சென்னை வாசிகளே ஒரு முறை உங்கள் சலிப்பை துரத்தி விட்டு விடியலில் நம் கடற்கரை பரபரப்பாவதை பார்த்து மகிழுங்கள்... அது உங்களையும் நிச்சயம் உற்சாகபடுத்தும்....
மெல்ல சூரியன் சுல் என என்னை பதம் பார்க்க.... நான் மெல்ல வீட்டுக்கு கிளம்ப, பின்புறம் ஒட்டிய கடல்மணலை தட்டிவிட்டு ,நிறுத்திய வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பிதேன்....
புகைபடங்கள் எனது செல்போன் கேமராவில் எடுக்கபட்டது... கிளிக்கி பார்க்கவும்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Labels:
அனுபவம்,
பயணஅனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
ஜாக்கி,
ReplyDeleteசென்னையின் தீராத வியப்புகளில் மெரினாவும் ஒன்று. நானும் வினோதமான நேரங்களில் மெரினாலில் காலாற நடந்ததை நினைவுறுத்துகிறது பதிவு.மணல்வீட்டையும், காகங்களையும் பதிவு செய்தது அருமை. உங்களோடு மெரினாவில் நின்று பேசிக்கொண்டிருக்கும் உணர்வைத் தந்திருக்கிறது இடுகை. சிறப்பான பதிவு.
அற்புதமான விவரணை ...
ReplyDeleteபெல்ஸ் ரோட்டில் என் அலுவலகம் இருந்தபோது விடியும்வரைக்கும் சில நாட்கள் வேலை இருக்கும்.. வேலைப்பார்த்த களைப்பை போக்க அதிகாலையில் மெரீனாவில் சென்று இப்படிதான் ரசிப்பேன் ...
உங்கள் பதிவை படித்ததும் இன்னொருமுறை போகவேண்டும்போல் இருக்கிறது ...
எதுக்குங்க காலைல எழுந்திருச்சி போகணும் ?. உங்களோட இந்தப் பதிவே, நேர்ல பார்த்தது மாதிரி இருந்துச்சு. அருமை.
ReplyDeleteஎல்லா ஃபோட்டாக்களும் நன்றாக இருந்தன!
ReplyDeleteஎல்லா ஃபோட்டாக்களும் நன்றாக இருந்தன!
ReplyDeleteதலைவா....
ReplyDeleteநானே மெரினால காலை வாக் போன மாதிரி இருந்தது...
நேர்த்தியாக தொகுத்து எழுதப்பட்ட அழகான கட்டுரை..
அட்டகாசமான படங்கள்...
தூள் கிளப்பும் வர்ணனை....
கொடுத்து வைத்தவர் அய்யா நீர்....
Good One Jackey.........
ReplyDeleteRemember my days.....
Iam leave my house due to failure of my studies..
Iam sataying night.........
& thinking, why i should came,
after that during college days me came with my friends, sharing the sadness & future things.......
Good
மெரினா கடற்கரையை கண்ணு முன்னாடி கொண்டு வந்திட்டிங்க,ரொம்ப அருமையா இருக்கு.
ReplyDeleteSurprised to know that the photoes are taken in your mobile phone. Clarity is very good.
ReplyDeleteநன்றி ஸ்ரீ....
ReplyDeleteநன்றி பின்னோக்கி...உங்க பின்னுட்டத்துக்கு நன்றி..
நன்றி கோபி.... நீங்களும் வந்திங்கன்னா நிங்களும் கொடுத்து வைத்தவர்தான்..
நன்றி மோகன்..
ReplyDeleteநன்றி பிசி
நன்றி மோகன் குமார்.. எனது சேம்சங் செல்போன்.. கேமரா 3 மெகாபிக்சல்.. நன்றி...
எல்லா ஃபோட்டாக்களும் நன்றாக இருந்தன!
ReplyDeletegood post
ReplyDeleteReally great – good article – Chennai marina beach – while reading I feel ……it. And your pictures fantastic.
ReplyDelete*Samsung mobile camera 3mega pixel, zoom shot – unbelievable, ok
Thanks and please to continue congratulation
புகைப்படங்கள் கலக்கல்.
ReplyDelete"that was a good post"
ReplyDeleteeppadi mudhalvan dialouge use panni iruken pathingala,thalaivare.
the post was like tour to marina.
செம வர்ணனை ஜாக்கி!
ReplyDeleteகடற்கரையையும் அதன் மனிதர்களையும்...
பீல் குட் மூவின்னு சொல்லுவீங்கள்ள அதுமாதிரி
பீல் குட் போஸ்ட். வெரி நைஸ்!
எல்லா ஃபோட்டாக்களும் நன்றாக இருந்தன!
ReplyDeletei am also want to see the beautiful sun raising in meerna but i could't since i am living in poonmalle after reading and seeing your articles and photo i feel very happy as it seems to see directly
ReplyDeleteSasi Kumar
ஒரு முறையேனும் இதை ரசிக்கவேண்டும் என குறிப்பெழுதியுள்ளேன்.
ReplyDeleteரசனையான ஆளய்யா நீ!!!
ReplyDeleteதலைவரே...
ReplyDeleteவெகு சிறப்பான பார்வை.
வாழ்க்கையை வாழ ஆசைப்படுபவர்களால் மட்டுமே இப்படி ரசிக்க முடியும்.
அழகான தொகுப்பு.
அன்பு நித்யன்
அருமையான பதிவு அண்ணா.
ReplyDeleteஉங்கள் சினிமா விமர்சனம் போல மெரினா காட்சி போட்டோக்களுடன் ரம்மியமாய்..!
படங்கள் அருமை ஜாக்கி.
ReplyDeleteஅந்த ரேஷன் வாங்கும் நாய்கள் !!! வர்ணனை சூப்பர்.
அருமையான அனுபவம்....நல்ல பதிவு.....
ReplyDeleteபிரபல பதிவர் ஆன எனக்கு வாழ்த்து சொல்லவில்லையா அண்ணா ?
ReplyDeletehttp://sri1982-srihari.blogspot.com/2010/08/secret-tips.html
அருமை தலை! ஹ்ம்ம்.... நான் ரொம்ப நாளாக நினைத்து கொண்டிருக்கும் விஷயம் இது.... எங்க!!! நல்ல ரசித்து அழகாக எழுதி உள்ளீர்கள்.... வழக்கம் போல சூப்பர்!
ReplyDeletereally gud post.wishes.
ReplyDeleteமிகவும் அருமை .... காலை விடியலை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டீர்கள்
ReplyDeleteமிகவும் அருமை .... காலை விடியலை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டீர்கள்
ReplyDelete//நான் சுஜாதா, நம்பியார்,சாருஹாசன், போன்றவர்களை பார்த்து இருக்கின்றேன்...//
ReplyDeleteதலைவா.. நீங்க பாத்த லிஸ்ட் ல already ரெண்டு டிக்கெட்டு அவுட்டு... அடுத்து?!
தப்பா நெனச்சிக்காதீங்க... சும்மா.. விளாட்டுக்கு..:-)
நன்றாக இருக்கிறது பதிப்பு...
அண்ணே
ReplyDeleteஉங்க பதிவுகளிலேயே மிகச்சிறந்த்து எதுன்னு சொன்னா டக்குனு இதை சொல்லுவேன்.
உங்க கூடவே வந்து மணல்ல உக்கார்ந்து வேடிக்கை பார்த்தா மாதிரி இருக்கு.உங்க அனுபவத்தை பதிவுக்கு கடத்துவதால் உணமை ஒளி ,வரிக்கு வரி வீசுது,அதனால் தான் பலபேர் விரும்பி இங்க வர்ரொம்,
இதில் பலவண்ண பின்புறத்தில் துவங்கிய உங்க வர்ணனை அப்படியே வயோதிகர்,அவரின் மகள்,குண்டுப்பையன்,காக்கைகள்,நாய்கள்,டீப்பையன்,மலம்,அருவருப்பு,துப்புறவு வண்டி ,3 ராட்சசிகள்,கேரள காதலி,அது இதுன்னு பயணிச்ச்சி,எங்களுக்கு விசுவல் ட்ரீட்டை வழங்குச்சுன்னுசொன்னா மிகையில்லை,புகைப்படங்கள் மிக மிக அழகு.மாலை நேர மெரினாவையும் இதுபோல வர்ணிக்கணும்,மயிலாப்பூரின் அறுபத்து மூவரையும் இதுபோல வர்ணிக்கணும் என்பது என் அவா.
தவிர பொதுஇடத்தில் கழிப்பவர்களுக்கு புட்டத்திலேயே ஷாக் கொடுக்கனும்,என்பது என் அவா.இலவசமா அரிசி,மற்ற திட்டங்களை கொடுப்பதை விட,இலவச கழிப்பறை கட்டி கொடுத்தால் தேவலை.எப்புடிதான் பீமேலயே நடந்து போய் மீண்டும் பேளுறானுங்களோ?கடவுளே,அந்த நாத்தம் இருக்கே,மெரினா மட்டுமில்ல,கன்யாகுமரி,குற்றாலம்,இன்னும் எங்கல்லாம் சனம் கூடுமோ அங்கெல்லாம் இந்த அநியாயம் தாண்ணே.
இப்புடி அடிக்கடி போய் பதிவு போடக்க் கடவுக.
karthoo2k@gmail.com: அண்ணே
ReplyDeleteஉங்க பதிவுகளிலேயே மிகச்சிறந்த்து எதுன்னு சொன்னா டக்குனு இதை சொல்லுவேன்.
உங்க கூடவே வந்து மணல்ல உக்கார்ந்து வேடிக்கை பார்த்தா மாதிரி இருக்கு.உங்க அனுபவத்தை பதிவுக்கு கடத்துவதால் உணமை ஒளி ,வரிக்கு வரி வீசுது,அதனால் தான் பலபேர் விரும்பி இங்க வர்ரொம்,
இதில் பலவண்ண பின்புறத்தில் துவங்கிய உங்க வர்ணனை அப்படியே வயோதிகர்,அவரின் மகள்,குண்டுப்பையன்,காக்கைகள்,நாய்கள்,டீப்பையன்,மலம்,அருவருப்பு,துப்புறவு வண்டி ,3 ராட்சசிகள்,கேரள காதலி,அது இதுன்னு பயணிச்ச்சி,எங்களுக்கு விசுவல் ட்ரீட்டை வழங்குச்சுன்னுசொன்னா மிகையில்லை,புகைப்படங்கள் மிக மிக அழகு.மாலை நேர மெரினாவையும் இதுபோல வர்ணிக்கணும்,மயிலாப்பூரின் அறுபத்து மூவரையும் இதுபோல வர்ணிக்கணும் என்பது என் அவா.
தவிர பொதுஇடத்தில் கழிப்பவர்களுக்கு புட்டத்திலேயே ஷாக் கொடுக்கனும்,என்பது என் அவா.இலவசமா அரிசி,மற்ற திட்டங்களை கொடுப்பதை விட,இலவச கழிப்பறை கட்டி கொடுத்தால் தேவலை.எப்புடிதான் பீமேலயே நடந்து போய் மீண்டும் பேளுறானுங்களோ?கடவுளே,அந்த நாத்தம் இருக்கே,மெரினா மட்டுமில்ல,கன்யாகுமரி,குற்றாலம்,இன்னும் எங்கல்லாம் சனம் கூடுமோ அங்கெல்லாம் இந்த அநியாயம் தாண்ணே.
அண்ணே
ReplyDeleteஉங்க பதிவுகளிலேயே மிகச்சிறந்த்து எதுன்னு சொன்னா டக்குனு இதை சொல்லுவேன்.
உங்க கூடவே வந்து மணல்ல உக்கார்ந்து வேடிக்கை பார்த்தா மாதிரி இருக்கு.உங்க அனுபவத்தை பதிவுக்கு கடத்துவதால் உணமை ஒளி ,வரிக்கு வரி வீசுது,அதனால் தான் பலபேர் விரும்பி இங்க வர்ரொம்,
இதில் பலவண்ண பின்புறத்தில் துவங்கிய உங்க வர்ணனை அப்படியே வயோதிகர்,அவரின் மகள்,குண்டுப்பையன்,காக்கைகள்,நாய்கள்,டீப்பையன்,மலம்,அருவருப்பு,துப்புறவு வண்டி ,3 ராட்சசிகள்,கேரள காதலி,அது இதுன்னு பயணிச்ச்சி,எங்களுக்கு விசுவல் ட்ரீட்டை வழங்குச்சுன்னுசொன்னா மிகையில்லை,புகைப்படங்கள் மிக மிக அழகு.மாலை நேர மெரினாவையும் இதுபோல வர்ணிக்கணும்,மயிலாப்பூரின் அறுபத்து மூவரையும் இதுபோல வர்ணிக்கணும் என்பது என் அவா.
தவிர பொதுஇடத்தில் கழிப்பவர்களுக்கு புட்டத்திலேயே ஷாக் கொடுக்கனும்,என்பது என் அவா.இலவசமா அரிசி,மற்ற திட்டங்களை கொடுப்பதை விட,இலவச கழிப்பறை கட்டி கொடுத்தால் தேவலை.எப்புடிதான் பீமேலயே நடந்து போய் மீண்டும் பேளுறானுங்களோ?கடவுளே,அந்த நாத்தம் இருக்கே,மெரினா மட்டுமில்ல,கன்யாகுமரி,குற்றாலம்,இன்னும் எங்கல்லாம் சனம் கூடுமோ அங்கெல்லாம் இந்த அநியாயம் தாண்ணே.
இப்புடி அடிக்கடி போய் பதிவு போடக்க் கடவுக.
அண்ணே,நானே போட்டுட்டேன்.ஆஃபீஸ்ல ஃபாஸ்டு நெட்டு,வீட்டுல தான் ஸ்லோ
ReplyDeleteGood one, Jackie.
ReplyDeletejackie...
ReplyDeleteபடம் பார்த்து கதை சொல்வது போய்...
கதை சொல்லி படம் போட்ருக்கீங்க.....
படம் போடறீங்க...
வாழ்த்துக்கள்
அன்புடன் ஜாக்கி ,
ReplyDeleteஒரு கடற்கரையின் கலங்கரை விளக்காய்
நின்று வழி காட்டினீர்
பதிவுக்கும் நினைவுக்கும்
நன்றி
வளவன்
HTTP://THISAIKALYETTUM.BLOGSPOT.COM
naan padithathil ennai megavum kavarthathu intha pathivoo eppadi nanabaray ungal kannil pattavaikalai appadiyae rasikkum padi pathivakki vidikeereerkal naan ungal vasakan agi vitten...
ReplyDeletePhoto Romba Super Sir, Unga Aanupavankalli Pakirenthu Kontatharku Nantri.
ReplyDeletePala natkal nan rasitha marina kadarkarai!
ReplyDeleteThaangal sonna anaithu kaatchiyaiyum naan kandu irukiren.
Nan appothu kanda kaatchiyai ippothu en kan munney kondu vanthu niruthiyatharku nandri... Sivakumar. M, Chennai.
nice post . ..
ReplyDelete