டூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...
கால ஓட்டத்தில் காணமல் போனவைகள் தொடரில் இந்த பாகத்தில் தமிழகத்தில் பலரால் மறக்க முடியாத அந்த கால பொழுது போக்கு சாதனமான டுரிங் டாக்கிஸ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்
நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த தமிழனை களைப்பு போக்கி சினிமா கலை வளர்ந்த அல்லது வளர்ந்த இடம் கிராமத்து டூரிங் டாக்கிஸ்கள் என்றால் அது மிகையில்லை.
இன்று ஐநாக்ஸ் சத்தியம் போன்ற திரையரங்குகளில் ஒரு படம் பார்க்க நுழைவு கட்டணமாக இன்று ரூபாய் 120ல் இருந்து 150,180 வரை கட்டணம் வசூலிக்கின்றார்கள், ஆனால் அப்போது படம் பார்க்க டூரிங் டாக்கி்ஸ் வசூலித்த கட்டணம் 30 பைசா அப்போது தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை 4லிருந்து 5ரூபாய் அவ்வளவுதான்.
அப்போதும் படம்தான் பார்த்தோம் இப்போதும் படம்தான் பார்க்கிறோம் என்ன சற்று வசதிகளைஅதிகப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவுதான். அது காலத்தின் கட்டாயம். இப்போது படம் பார்க்கும் போது சிம்ரன் வந்து நெஞ்சு அல்லது ...தடவி படம் பார்க்க வைக்கிறாரா? எதற்க்காக இவ்வளவு கட்டணம்? பாருங்கள் டாபிக் விட்டு கோபத்தில் வெளியே போய் விட்டேன்.
அப்போது டிவி எல்லோர் வீட்டிலும் தன் அழிச்சியாட்டத்தை அரம்பிக்காத நேரம். அதுவும் கலர் டிவி என்பது எல்லோருக்கும் பகல்கணவாய் இருந்த கால கட்டம் அது. உழைத்து களைத்த அத்தனை பேருக்கும் அரும் மருந்து இந்த டூரிங் டாக்கிஸ்கள்தான்.
சரி ஏன் டுரிங் டாக்கிஸ் தெரியுமா?சினிமா பேசாத காலகட்டத்தில் இருந்து பேசும் காலகட்டத்துக்கு வந்த போது அது பேசியதால் அதாவது டாக் செய்ததால் அதற்கு டாக்கிஸ் என்று பெயர் வைத்தார்கள்.
டுரிங்டாக்கிஸில் படம் பார்க்கின்றது என்பது என்னை பொருத்தவரை ரொம்ப சந்தோஷமான செயல் என்பேன். ஒரு நாளைக்குஇரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடுவார்கள் மாலைக்காட்சி அடுத்தது இரவு காட்சி. மாலை காட்சி இரவு எழு மணிக்கும், இரவு காட்சி பத்து மணிக்கும் ஆரம்பிப்பார்கள்.
டாக்கிஸ்ல் படம் துவங்கும் அழகே அழகு. முதலில் கூம்பு ஒலி பெருக்கியில் நாதஸ்வரம் இரவு 6.50க்கு போடுவார்கள். கிராமத்தில் படம் பார்க்க செல்லும் எல்லோர் வீட்டிலும் சின்ன பதட்டம் வந்து ஓட்டிக்கொள்ளும்.
“கொட்டாயில பாட்டு போட்டுட்டான் எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க”
என்றவுடன் அடித்து பிடித்து ஓடிய அந்நநாளைய நினைவுகள் என்னை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கின்றன.
நாதஸ்வரம் 5 நிமிடத்தில் முடிந்து ஒரு வெஸ்டன் இசை ஒளிக்க ஆரம்பிக்கும் அது முடிந்த உடன் சர்வ நிச்சயமாக எந்த மைனர் வந்தாலும் வரா விட்டாலும் படம் ஆரம்பித்துவிடும்அதானால் நாங்கள் அனைவரும் நடையில் ஓட்டத்தை சேர்ப்போம்.
30 பைசா டிக்கெட் தரை டிக்கெட்டில் படம் பார்பது போன்றதொறு சுகம் எனக்கு தெரிந்து சத்தியம் ஐநாக்சில் கூட இல்லை என்பேன்.பறந்த மணல் பகுதி அதில் நடுவில் கட்டை அல்லது சிமென்ட் கட்டை கட்டி ஆண்கள் பெண்கள் என்று பிரித்து இருப்பார்கள். அந்த வயதில் நாங்கள் பெண்கள் பகுதியில்தான் உட்காருவோம் ஏன் என்றால் அம்மாதானே படத்துக்கு அழைத்து செல்வார் அதனால்தான். அதே போல் படம் தெரியவில்லை என்றால் கூடுதலாக மணல் கூட்டி அதன் மீது உட்காருவோம்.
யாரவது எதிரில் மறைத்தால் அவர் பின்புறம் மணலை கொஞ்சம் நோண்டினால் அவர் மெல்ல கீழ் இறங்குவார்.
அதே போல் பசங்களுக்குள் விளையாடும் விளையாட்டும் அதுவே. மண் கூட்டி உட்கார்வதும் அதனை பின்னால் இருந்து பறிக்கும் தமிழர்களின் அரசியல் விளையாட்டை அப்போதே நாங்கள் விளையாடுவோம்.
அதே போல் இருபாலிணத்தையும் பிரிக்கும் கட்டை சுவர் பக்கம் ஆண்கள் பக்கம் என்றாலும் பெண்கள் பக்கம் என்றாலும் உட்காரவே கூடாது அப்படி உட்கார்ந்தால் ஒரு லிட்டர் பெனாயிலில் கை கழுவ வேண்டும் கட்டை சுவர் ஓரம் எல்லாம் வெற்றிலைபாக்கு எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்
படம் முதல் இன்டர் வெல் விடும் போது அந்த கால முங்கள் ஊர் டாக்கி்ஸ்ல் அழது வடியும் 40 வாட்ஸ் பல்பு அழுது வடிந்து கடமைக்காக எரியும்.அப்போது கட்டை குரலில் தேங்காய் ரொட்டி முருக்கேய்,
தேங்காய் ரொட்டி முருக்கேய் என்று காலனி பசங்க அலுமினிய தட்டில் வைத்து தேங்காய் ரொட்டி முருக்கு போன்றவற்றை விற்ப்பார்கள்.
அதற்க்கு தட்டு முருக்கு என்று செல்ல பெயர் கூட உண்டு.
எங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்கனவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தின்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடுவாள்.
காளிமார்க் சோடா பாட்டிலில் அந்த காலத்து லோக்கல் பெப்சி கலர் கலர்கலராக இருக்கும் அது பிரிட்ஜ் இல்லாத காலம் அல்லது அந்த ஊர் டாக்கிஸ்க்கு கட்டுபடி ஆகாததால் தேர்மக்கோல் ஐஸ்கட்டிகள் வாங்கி ஐஸ் சீக்கிரம் உருகாமல் இருக்க உமி போட்டு வைத்து இருப்பபார்கள். ஒரு கலர் 1,50 ரூபாய் அதை வாங்கி கட்டையில் சாய்ந்தபடி ஸ்டைலாக வாங்கி குடித்த காலமும் உண்டு.
முக்கோன பன்னில் ஜாம் தடவி அதில் கலர் கலரான சேமியா போல் வெள்ளை ஜாம் மேல் ஒட்ட வைத்து இருப்பார்கள். அது என்னுடைய பேவரிட் திண்பண்டம்
இப்போது போல் அப்போது எல்லாம் புது படங்கள் டென்டு கொட்டாய்க்கு வரவே வராது. அல்லது வினியோகஸ்த்தர்கள் கொடுக்கவும் மாட்டார்கள்,அன்பே வா, துணிவே துனை,சவாலேசமாளி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாயாபாஜார்,வசந்த மாளிகை போன்ற பழைய படங்கள்தான் திரையிடப்படும்.
சிவாஜி படத்துக்கு நிறைய பெண்கள் கூட்டத்தை பார்க்கலாம். எம்ஜியார் படத்துக்கு நிறைய ஆண்கள் கூட்டத்தையும் கொஞ்சமாக பெண்கள் கூட்டமும் இருக்கும். முக்கியமாக பாட்டாளி மக்கள் கூட்டம் மிக ஆதிகமாக வருவார்கள், நிறைய விசிலும் கூடவே சாராய நெடியும் பின்னி பெடெலெடுக்கும்.
ரஜினி கமல் படத்துக்க எல்லா சின்ன பசங்களும் வந்து கொட்டாய் சுற்றி ஓடிபிடித்து விளையாடுவதுமாக சண்டை போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள் கமல் படங்கள் வந்ததால் அரும்பு மீசை வாலிபர் பட்டாளம் கைலியை ஏற்றி கட்டிக்கொண்டு வந்து நி்ற்க்கும். வெள்ளிக்கிழமையானால் படம் கண்டிப்பாக மாறிவிடும் எல்லோரும் பார்த்த படம் என்பதால் அந்த படத்துக்கு ஆயில் காலம் ஒரு வாரம்தான்.
பெண்கள் பக்கம் நான் உட்கார்ந்து படம் பார்க்கும் போது ஒரு நெலியவைக்கும் பிரச்சனை என்ன வென்றால் நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள். அதனாலே நான் அடம் பிடித்து ஆண்கள் பக்கம் போய் உட்காருவேன்.என் அம்மா ஏன் அந்த பக்கம் போய் உட்காருகின்றாய் -?என்று எப்படி காரணம் கேட்டாலும் என்னால் பதில் சொல்லமுடியாது...
அதே போல் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் சட்டென தகர சேரை மடக்கி ஒளிவரும் ஓட்டையை அடைத்தும் ரகளை செய்வார்கள். முதல்நாள் படம் ஓட்டுவதில் பிரச்சனை என்றால் ஒரு பாஸ் கொடுத்து அனுப்புவார்கள் அதை எடுத்து போய் டிக்கெட் இல்லாமல் படம் பார்க்கலாம். அந்த பாசுக்கு வேறு அடித்து கொள்வார்கள்...
கால மாற்றத்தில் காணாமல் போனாலும் இன்றளவும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது டுரிங் டாக்கிஸ்கள்தான். எப்போது அந்த டெண்ட் கொட்டைகளை பார்த்தாலும் பழைய நினைவுகள் என்னில் நிழலாடும் எங்கள் ஊர் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஜெகதாம்பிகா என்ற டெண்ட் கொட்டகை இருந்தது, அந்த நினைவுகள்இதை எழுதும் போது எல்லாம் நினைவுக்கு வருகிறது.
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்
என்ற ஆண்பாவம் படத்து பாடல் எங்கேயோ கேட்பது போல் இல்லை, அந்த பாடலில் வரும் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை.....
பிரியங்களுடன் ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
Labels:
அனுபவம்,
எழுதியதில் பிடித்தது,
மீள்பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
//இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்
ReplyDeleteஅது ஒரு காலம்.... அழகிய காலம்...
நாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.
ReplyDelete//இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்
ReplyDeleteஅது ஒரு காலம்.... அழகிய காலம்...
நீ திருந்த வே மாட்டியா ராசா?
ReplyDelete//நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள்.//
:))))
Yaa jackie, marakka mudiyadha ninaivugal adhu...Palasaiyellam meendum ninaikka vachutteenga
ReplyDeleteNalla Pathivu
ReplyDeleteபாஸ்..
ReplyDeleteஅட்டகாசமான பதிவு. பால்ய கால நினைவுகளை கிளறி விட்டீர்கள்.
மனோ
என் நினைவில் - முதல் முதலாக டூரிங் கொட்டாயில சங்கேமுழங்கு "வாத்தியார்" படம் பார்த்தேன். கோவை சாய்பாபா காலனி அருகே இருந்த ஒரு கொட்டாயில. வருஷம் 1973-ல. ஏசி-ல இல்லாத ஒரு மகிழ்ச்சி அப்போ அந்த டூரிங் கொட்டாயில் இருந்துச்சி ! ! !
ReplyDeleteanne koothapakkam murugalaya theater than ennaku therium.
ReplyDeleteana angeye enaku therunju 3 rs padam pathiruken.
apuram firstclass 5 rubaithan romba naal varikum.
apparam naan vellaikarai,naduveerapatu ingalam turing talkies la pathiruken.
ஜாக்கி..அந்த நாட்களில்..அம்பத்தூரில் என் பெற்றோருடன் பார்த்த படங்கள்...பழைய நினைவுகள்..டூரிங் டாக்கீஸ் மசால்வடை...எல்லாவற்றையும் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்..
ReplyDeleteஒரே டிக்கெட்டில் இரண்டு படங்களும் போட்டிருக்கிறார்கள்ஜாக்கி..அந்த நாட்களில்..அம்பத்தூரில் என் பெற்றோருடன் பார்த்த படங்கள்...பழைய நினைவுகள்..டூரிங் டாக்கீஸ் மசால்வடை...எல்லாவற்றையும் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்..
ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்களும் போட்டிருக்கிறார்கள் :)))
நீங்க தெருவுல இருக்கிற வெள்ளை துணியை எல்லாம் ஒன்ன கட்டி ...ஸ்க்ரீன் ஆக்கி படம் ஓட்டுவங்களே..அதுல படம் பார்த்து இருக்கீங்களா ???? அருமையா இருக்கும்... அப்படி நான் பார்த்த அன்பே வா படத்தை இன்றளவும் மறக்க முடியாது
ReplyDeleteநானும் எவ்வளவோ தியேட்டர் ல படம் பார்த்தாலும் ..எங்க ஊர் பிளக் தியேட்டர் ல படம் பார்த்த மாதிரி வராது.
Mr Jackie sekar very nice you take to me olden days now I am also thinking about our Tent Kottai
ReplyDeletebasically i am coming from Tirunelveli district now i am in chennai. your writing style very simple and lovable one. Now a days i am not fail to read your blogs daily.keep it up
by
Hariharaputren
எங்கள் ஊரிலும் இரண்டு டூரிங் டாகீஸ்கள்(சரியா?) இருந்தன. கால ஓட்டத்தில் கரஞ்சே போயிருச்சு. அதுல ஒன்னு சுடு காட்டுக்கு பக்கத்துல. பல நேரத்துல படத்தோட பிணம் எரியிறது கூட பார்க்கலாம்.
ReplyDelete-தினா
எங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்கனவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தின்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடுவாள்.//
ReplyDeleteநல்ல தொடர் வாழ்த்துக்கள்
மிக அருமை. மிக நன்றி. பழைய நினைவுகள் பசுமையானவை. மீள அதிக நேரம் தேவை.
ReplyDeleteஉங்கள் சேவை எங்களூக்கு தேவை.
அன்பரசு செல்வராசு
படம் அருமை, பாலாஜி டூரிங் டாக்கீஸ் , எங்கு இருக்கிறது, போரூர் பக்கமா.
ReplyDeleteகீழ்கட்டளை இன்னமும் தனலெட்சுமி டூரிங் டாக்கீஸ் இருக்கிறது என நினைக்கிறேன். லக்கி லுக் கூட முன்பு கீழ்கட்டளை தனலெட்சுமி குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார்.
நன்றி நண்பரே கடந்து போனதையும் , மறந்து போன்றதையும் மீண்டும் திரும்பி பார்ப்பதில் இருக்கும் ஒரு மகிழ்ச்சியை வேறு எதுவும் கொடுக்க இயலாது . மிகவும் சிறப்பான பதிவு .
ReplyDeleteமறந்துபோன இனிமையான நினைவுகளை மீண்டும் இதயங்களில் நிரப்பி சென்றது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி .
அண்ணே.. இன்னும் மதுரையில ஒண்ணு ரெண்டு டாக்கிச் இருக்கு.. ஆனா அங்கன பிட்டு படம்தான் ஓட்டுறாங்க...
ReplyDeleteஅண்ணே கொட்டாய் படங்கள் எல்லாம் சூப்பர் ... அந்த காலம் பசுமைக் காலம் ...
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteடூரிங் கொட்டாய்களைப் பற்றிய தெளிவான, ஆழமான பதிவு. அந்த நாட்களில் மதுரையில் படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஸ்ரீ....
Good post ....congrats
ReplyDeleteநல்ல பதிவு ஜாக்கி சார்,
ReplyDeleteஓட்டு போட்டுட்டேன்...இதுல பாருங்க எங்கள் ஊர் சினிமாக் கொட்டகை.. னு தலைப்பெல்லாம் வச்சு எங்க ஊர் டூரிங் டாக்கிஸ் அதுனுடன் எங்கள் அனுபவமெல்லாம் எழுதலாம்னு நினைத்து இன்னைக்குதான் பாதி டைப் பண்ணி வச்சுருந்தேன் ... ..அதுக்குள்ள முந்திட்டிங்களே... சார்..
நான் திங்கள் அன்று எழுதுகிறேன் .. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
எனக்கு உங்கள் இந்த பதிவில் இருக்கும் போட்டோஸ் காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி வேண்டும்
அன்புடன்
பொன்.சிவா.
நல்ல பதிவு ஜாக்கி சார்,
ReplyDeleteஓட்டு போட்டுட்டேன்...இதுல பாருங்க எங்கள் ஊர் சினிமாக் கொட்டகை.. னு தலைப்பெல்லாம் வச்சு எங்க ஊர் டூரிங் டாக்கிஸ் அதுனுடன் எங்கள் அனுபவமெல்லாம் எழுதலாம்னு நினைத்து இன்னைக்குதான் பாதி டைப் பண்ணி வச்சுருந்தேன் ... ..அதுக்குள்ள முந்திட்டிங்களே... சார்..
நான் திங்கள் அன்று எழுதுகிறேன் .. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
எனக்கு உங்கள் இந்த பதிவில் இருக்கும் போட்டோஸ் காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி வேண்டும்
அன்புடன்
பொன்.சிவா.