(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிரி....


எச்சரிக்கை... பொது இடத்தில் இந்த படத்தின் விமர்சனம் படிக்கு போது மட்டும்....கவனம் தேவை....
ஒரு வேலையை செய்யும் போது நம்மில் பலர் கண்ணும் கருத்துமாய் இருப்போம்... அந்த விஷயத்தை தவிர வேறு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டோம்...ஆனால் ஒரு சிலர் இருக்கின்றார்கள்...  அவர்கள் எது பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்...


ஒரு அறையில் லேப்டாப்பில் ஒரு மேட்டர் இருக்கின்றது அதை  கவர்ந்து வர  பேன்னென் என்பவனிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றார்கள்... அவனிடம் காதில் இருக்கும்  ரகசிய ஹேட் போன் மூலம் அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் தருகின்றார்கள்.. அவன் போட்டு இருக்கும் குளிர்  கண்ணாடியில் அவன் எதை பார்த்தாலும் மானிட்டரில் அவனுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுக்கும் நண்பனுக்கு நன்கு தெரியும்.....குழப்பம் இல்லாமல் புரிய வேண்டும் என்றால் ஜேம்ஸ் பாண்ட் அணியும் கண்ணாடி போல்...
ஆனாலும் பென்னென் கேப்பில் கிடா வெட்டும் பார்ட்டி... எப்படி  வெட்டுவான் என்றால்? நெற்றிக்கண் படத்தில் ஒரு குழந்தையை ஒரு அம்மா  சக்கர வண்டியில் தள்ளிக்கொண்டு போகும் போது... அடுத்த ஷாட்டில் மரத்தடியில் அந்த பெண்ணுடன் ரஜினி சல்லாபம் செய்வாரே அது போலான பார்ட்டி....

அவன் போகின்றான்... அந்த ஹோட்டலில் ,அந்த  லேப்டாப் இருக்கும் ரூம் கீ கேட்கும் போது.. அந்த ஹோட்டலின் ரிசப்ஷன் பெண்ணின் அழகு ஈர்க்கின்றது... கைதான் குலுக்குவான்.. அந்த பெண்ணும் அவன் பார்வையில் விழுந்து விடுகின்றாள்... ஸ்பேர் கீ இல்லை... மாஸ்டர் கீ தான் இருக்கின்றது என்று அவள் சொல்ல.. அவள்  பொய் சொல்வதாக  அவனது நண்பன் ஹேட் போனில்  சொல்கின்றான்..
 அவனோடு அந்த ரூமுக்கு  நடக்கின்றார்கள்... அந்த பெண் நடக்கின்றாள்.. கதவு திறந்ததும்...பென்னென் மீது வெறிகொண்டு  அவன் மீது பாய்கின்றாள்... ஆனால் பென்னென் நண்பன் இதையெல்லாம் வீடியோவில் பார்த்து விட்டு சொல்கின்றான்...  இப்போது நமக்கு முக்கிய வேலை... அந்த லேப்டாப்பில்  இருக்கும் ரகசியங்களை பென்டிரைவில் சேமித்து வர வேண்டிய வேலை...அந்த பெண்ணை விட்டு விடு... அவளது அழகில் மயங்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லும் போதே...

அவள் சட் சட்டென உடைகள் களைகின்றாள்... பென்னென் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு  லேப்டாப்ல் பென் டிரைவ்  சொறுகி கொண்டு பைல் காப்பி  செய்ய என்டர் பட்டன்   தட்டும் போது, அவன் மீது அவளது உள்ளாடைகள் வந்து விழுந்து அவனை இன்னும் சூடு ஏற்ற...
கேப்பில் கெடா வெட்டுவது என்று தீர்மானமாக  பென்னென்செல்ல... நண்பன்  எவ்வளவோ சொல்கின்றான்... அந்த லேப்டாப்பின் உரிமையாளர் எந்த நேரத்திலும் வந்து விடுவான் பைல் காப்பி செய்து விட்டு உடனே அறையை விட்டு வந்து விடு என்று சொல்ல ...சொல்ல ....கேட்காமல்... அவளோடு வெறித்தனமாக படுக்கையில் புரள...  உச்சகட்டத்தில் அந்த  லேப்டாப்பின் உரிமையாளர் அந்த ரூமுக்கு உள்ளே வருவைதை பார்த்து விட்டு  நண்பன் ஹேட் போனில் கூப்பாடு போட,... அவன் கருமமே கண்ணாக இருக்க... அவனும் உள்ளே வந்து, நமது பூட்டிய அறையில் இரண்டு பேர் எப்படி உடலுறவு கொள்ள முடியும் என்று   யோசித்துக்கொண்டே.... அவர்கள் போடும் சத்தம் பொறுக்கமுடியாமல் அறையின் வெளியே வந்து நிற்க்க... அந்த அறையில் எல்லாம் முடியும்போது... பென்டிரைவில் அந்த பைல் காப்பி ஆகி இருக்கும்... அந்த ரிசப்சனிஸ்ட்.. ஏதும் நடக்காதது போல் உள்ளே இருந்து வெளியே போக...சிவ பூஜையில் கரடி போல் பூந்தாலும் டிஸ்டர்ப் செய்யாமல் இருந்தமைக்காக அந்த லேப்டாப் உரிமையாளன் கையில் பணத்தை திணித்து விட்டு  பென்னென்ஸ்டைலாக கூலிங்க கிளாலை போடுவான்  இந்த காட்சி.. மிகவும் திரில்லாகவும்... அதே சமயத்தில்.. ரொம்ப காமெடியாகவும் இருக்கும்.. முழு படமும் இப்படித்தான்..

சரி உதட்டை துடைத்துக்கொண்டு இந்த படத்தின் கதை என்ன என்று  சில வரிகளில் பார்த்துவிடுவோம்....



THE BANNEN WAY-2010 படத்தின் கதை என்ன???

 நீல் பென்னென் ஒரு ரிலாக்ஸ் பேர்வழி.. எந்த அழகான பெண் நடந்து போனாலும்... அவன் மனதில் பதிந்து விட்டால்  அந்த பெண்ணோடு அவன் படுக்காமல் ஜென்மசாபல்யம் அடைய மாட்டான்... அப்படிபட்ட ஒரு டைப்... எப்போதும் அலட்டிக்கொள்ளமாட்டான்....பணம் வேண்டும் என்றால் யார் பாக்கெட்டையாவது பிட்பாக்கெட் அடித்து கதையை ஓட்டும் ரகம்...சூது விளையாடுவான்...மிஸ்டர் B என்பவரிடம் பிரிலான்சாக திருட்டு வேலைகள் செய்வான்....எல்லாம் லட்சகணக்கில் வரும்....அப்படி ஒரு நாள்ஒரு கிளப்பில் சீட்டு ஆடும் போது தாதாசன்னி என்பவனிடம், ஒரு லட்சம் டாலர் தோற்றுவிடுகின்றான்... அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பண்ம் கேட்கும் போது இன்னும் ஒரு வாரம் டைம் கொடுத்தால் அந்த  பணத்தை விட இரண்டு மடங்கு கொடுப்பேன்  என்று உறுதி அளிக்கின்றான்..எப்படி என்று சன்னி குரூப் கேட்கும் போது, மிஸ்டர் பி எனக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கின்றார்....
அந்த வேலையை முடித்து கொடுத்தால் தனக்கு  ஒரு மில்லியன் டாலர் கொடுப்பாதாக சொல்ல.. சன்னி நம்ப மறுக்க...  மென்சு என்பவனிடம்  ஒரு மர பாக்ஸ இருக்கின்றது அதை எடுத்து வந்து கொடுத்தால் எனக்கு பி ஒரு மில்லயின் கொடுப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் அந்த வேலை முடித்து  உனக்கான பணம்  தருகின்றேன்  என்று வாக்கு கொடுக்கின்றான்... சன்னியும் அந்த ஒரு மில்லியன் டாலருக்கு, அந்த  பெட்டியை அடைய நினைக்கின்றான்... நினைத்தது போல் எல்லாம் ஈசியாக நடந்ததா? என்பதை காமெடி , காமம், திரில்லங், திருப்பம் என ஜாலியா சொல்லி இருக்கின்றார்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

 இந்தபடம் அஜித்தை நம்பாத, கவுதம்மேனேன் அதிகம் நம்பும் நரேட்டிவ் டைப் திரைக்கதை வடிவம்....
அந்த கதை சொல்லும் அழகே அழகு....அதற்கான காட்சிகள் ஒரு விதமான வாம் டோனில் படம்  ஆக்கி இருக்கின்றார்கள்...

எப்படி என்றால்? குவாட்டா கட்டிங் என்று ஒரு படம் வரஇருக்கின்றதே... அது போலான டோனில் படம் பிடித்து இருக்கின்றார்கள்...

 பிட்பாக்கெட் அடித்த பெண்ணிடம் மொத்த பர்சையும் அடிக்கும் இடம்... குறும்பு மற்றும் கல கல இடம்....

நடு நடுவில்  பேசும் போதும் காட்சிகளினுடே வார்த்தைகளில் அறிவுரைகள் வருவது அழகு...

அதுல வரும் ஒரு டயலாக்...
வின்னர் எப்பயும் முயற்ச்சியை விட மாட்டான்... ஆனா லூசர் ஒன்று முதலில் முயற்ச்சியை விடுவான்... அல்லது கடைசியில் முயற்ச்சியை விட்டுவிடுவான்..

முதல் பாராவில் விரிவாய் எழுதிய லேப்டாப்  அறை காட்சியும், அதனை  காமெடியாக காட்சி  படுத்திய இடமும் செம இண்டிரஸ்டிங்.... மிக முக்கியமாக எல்லாவற்றையும் காட்டினாலும், எந்த அங்கத்தையும் காட்டாமல் ,அதற்கு ஏற்ற  கோணத்தில் படம் எடுத்து இருப்பதும்  கேமராமேன் மற்றும் எடிட்டரின் திறமைகள்...ஆனாலும் அந்த பெண் உங்கள் நினைவில் ஒரு வாரத்துக்கு வர வாய்புண்டு...

பி வேலை கொடுக்கும் போது அப்போது அவரது ஆபிசில் ஒரு பெண்   செம அழகாக இருக்க... திட்டத்தை விளக்கும் போதே, இந்த பெண்ணை இப்போது போட்டால் எப்படி இருக்கும்???? என்று  நினைத்து அந்த பெண்ணோடு கற்பனையில் சடுதியில் உடலுறவு நிகழ்த்துவதும்... அதற்க்கான கிரிப்ஸ் ஷாட்ஸ் மற்றும் எடிட்டிங் ரசிக்க வைக்கின்றன...

மர பெட்டி வைத்து இருக்கும் மென்ச்சை அறிமுகபடுத்தும் காட்சியில் ஜயம் நாட் பிரசிடென்ட்  என்று சொல்லும் டயலாக்கின் போது இரண்டு பெண்ணின் மார்பகங்களை அழுத்திக்கொண்டு இருப்பது போல், காட்சி வைத்து இருப்பது வார்த்தை மற்றும் காட்சி குறும்பு...

பென்னென் சன்னியின் காதலியையும் விட்டு வைக்கவில்லை என்று காட்டும் அந்த காட்சி சிரிப்பு...

 சன்னியிடம்  இருந்து தப்பிக்க தன் காதலியை  பிராஸ்டி யூட் என்று சொல்லி விட்டு 5 டாலருக்கு அவள் ஹேன்ட் ஜாப் செய்வாள் என்று சொல்ல... சன்னி பெனென் காதலியிடம் இது உண்மையா??? என்று கேட்கும் இடத்தில்.. அவள் பதில் சொல்லும் இடம் அற்புதம்...

ஸ்டிரிப்டிஸ் நடக்கும் அரங்கில் பின்னனியில் ஒலிக்கும் அந்த பாடல் செம பாடல்...உனக்கு எப்படி அந்த ஆங்கில பாடல் தெரியும் ??? அதை எப்படி ரசித்தாய் ?என்று எல்லாம் என்னை  கேள்வி கேட்டு டென்ஷன் படுத்த கூடாது...சோலிக்கே பிச்சே கியாஹே பாட்டுக்கு அந்த ஒரு வரிக்கு அப்புறம் யாருக்காவது  அந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா? முழு பாட்டையும் கேட்போம் அல்லவா? அது போலதான்...(யப்பா எப்படி எல்லாம் விளக்கம் சொல்லி தொலைக்க வேண்டி இருக்கு...????)

இப்படி இந்த படத்தை சொல்லிக்கொண்டே போகலாம்...நிறைய டுவிஸ்ட் கலந்த ஆக்ஷன் திரில்லர் வகைபடம் இது... நிச்சயம் இந்த படம் உங்களை மகிழ்விக்கும்...

இந்த படத்தின் இசை உற்சாகத்தை கொடுக்கும்...

இந்த படத்தின் ஹீரோMark Ganttயை....சோப்லாங்கி போல் ஆரம்பத்தில் இருந்தாலும்.. படம்  முடியும் போது அவனை ரசிக்க வைக்கின்றார்கள் பார்... அதுதான் நல்ல சினிமா மேக்கிங்...Jesse Warren திறமையான இயக்குனர்தான்..

எதிர்பார்க்காத கிளைம்க்ஸ்...

படத்தின் டிரைலர்..... பாதி கதையை சொல்லிவிடும்..18+



படக்குழுவினர் விபரம்...

* Director: Jesse Warren
    * Genre: Action
    * Main Cast: Mark Gantt, Vanessa Marcil, Gabriel Tigerman, Michael Ironside, Robert Forster
    * Release Year: 2010
    * Run Time: 94 minutes

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

22 comments:

  1. அருமையான விமர்சனம்.
    படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete
  2. படித்து முடித்தவுடன், இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டும் எழுத்து உங்களுடையது.

    இந்த வாரத்திலெயே பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  3. மஜா மல்லிகா ரேஞ்சு'க்கு சொல்றீங்கப்பா!!கட்டாயம் பார்த்தாக வேண்டும்!

    ReplyDelete
  4. Very nice review...your way of writing is great...keep it up Jackie

    ReplyDelete
  5. மிகவும் அற்புதமான விளக்கமான விஸ்தீரமான விமர்சனம்.

    Winner quit at a right time. But loser quit either early or at lost.

    படம் ஒரு அற்புதமான அனுபவத்தைத் தந்தது. Super star hero க்கள் நடிக்க தயங்கும் கதாநாயகன் பாத்திரம். Mark Gantt கலக்கியிருக்கிறார்.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  6. பாக்கணும் போல இருக்கே

    ReplyDelete
  7. பாத்துடலாம் தல இன்னிக்கி ..

    ReplyDelete
  8. விமர்சனம் பட்டாசாக இருக்கிறது.

    படம் பார்த்துடனும்.

    மனோ

    ReplyDelete
  9. உங்க விமர்சனம் படிக்காமயே பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  10. இந்த பட அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  11. சரி உதட்டை துடைத்துக்கொண்டு இந்த படத்தின் கதை என்ன என்று சில வரிகளில் பார்த்துவிடுவோம்....

    இதல்லாம் ரொம்ப over......

    ReplyDelete
  12. நல்ல விரிவான விமர்சனம் ஜாக்கி... பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்...

    ReplyDelete
  13. வழக்கமான முறையில் கலக்கலான விமர்சனம். இத..இதத்தான் எதிர்பார்த்தோம் :)

    ReplyDelete
  14. where we can see this movie on free online web site? also tell me where i can see tamil movies on free online website? because i am in Oman
    i could not see all tamil movies
    please help me.

    ReplyDelete
  15. //சரி உதட்டை துடைத்துக்கொண்டு இந்த படத்தின் கதை என்ன என்று சில வரிகளில் பார்த்துவிடுவோம்...//

    படம் பார்க்கும்போது உங்கள் கைக்குட்டையும் ... நனைந்து போனதாக தெரிகிறது..

    ReplyDelete
  16. Neatly written review...
    Good work keep it up man..

    ReplyDelete
  17. Jakie padam nalla erukumo illaiyo, unga vimarsanam padichale pothum padam parkira interest vanthuruthu!!!

    ReplyDelete
  18. Jackie you are introducing very good time pass movies in an excellent way of writing. Thanks Jackie.

    ReplyDelete
  19. ur review was good.
    you have to review some of the film in your blog which i enjoyed movies.
    1. Where the Money is
    2. The Noble Son
    3. Exam
    4. The collector
    5. The Breed - movie on Timpug site
    6. Smiley

    thanks
    krish

    ReplyDelete
  20. Your review was good..
    You have to review in this blog which i enjoyed movies..
    1. Where the Money is
    2. The Noble Son
    3. The Breed
    4. Smiley
    5. The Collector
    6. Exam

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner