கடற்கரை கழிவறையா????சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ பழக

நீங்கள் சென்னை வாசியா? அப்போது நீங்கள் நிச்சயம் இந்த அறிய காட்சியை பார்த்து இருக்கலாம்... அல்லது தமிழகத்தின் பல கடற்கரைகளில் பார்த்து இருக்கலாம்...


சென்னையில விடியற்காலையில் தூக்கம் வரவில்லை என்று கடற்கரை தண்ணி பக்கம் போனால்  இந்த காட்சியை  பார்த்து தொலைத்து இருக்கலாம்....கடற்கரையில் ஆய் போய்கொண்டு இருக்கும் அந்த திவ்யதரிசன காட்சிகளை பலர் பார்த்து இருக்கலாம்....


நன்றாக யோசித்து பாருங்கள்.... நண்பர்கள் இரண்டு பேர் ஒன்றாக பேசிக்கொண்டு போய் சிறுநீர் கழிக்க போகும் போதே வெட்ட வெளியாக இருந்தாலும் நாம்  என்ன செய்கின்றோம்??? யாருடைய சமாச்சாரத்யும் பார்கக பிடிக்காமல் ரொம்பவும் தள்ளி போய்  நின்று சிறுநீர்கழிக்கின்றோம்....பக்கத்தில் நின்றால் கூச்சம்
ஒரு காரணம்.... எளிதில் வந்தும் தொலையாது...நாம் தனியாக இருக்கின்றோம்  உன் ராஜ்யம் என்று நம்பிக்கை ஊட்டும் போதுதான் அது பிரியாக வருகின்றது...

ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் எதையாவது செய்து கொள்ளட்டும்... ஆனால் ஒரு வெட்ட வெளியில் பலர் கடற்கரைக்கு வரும் இடத்தில் இப்படி உட்கார்ந்து ஆய் போவது எந்த விதத்தில் நியாயம்....

நானும் இதே சென்னை மெரினாவில் பிளாட்பாரத்தில் ஒரு வருட பிளாட்பார வாழ்க்கை வாழ்ந்தவன் ...அப்போது கூட நான் கடற்கரையை கழிவறையாக உபயோகபடுத்தியதில்லை...

நாங்களும் ஊரில் வயல்காட்டில் போய் காலையில் உட்கார்ந்தவர்கள்தான்... அப்படியே அவசரத்துக்கு உட்கார்ந்து விட்டாலும் யாராவது வந்தால் எழுந்து நிற்போம்...ஆனால் சென்னை மெரினாவில் நீங்கள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் உட்கார்ந்து ஆய் போய் கொண்டு இருப்பதுதான் கொடுமையின் உச்சம்....

மெரினா இப்போது முன்பு போல இல்லை...சனி மற்றும் விடுமுறை தினங்களில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வருகின்றது.... காலையில் வெளியூரில் இருந்து சென்னையை சற்றி பார்க்க வரும் சுற்றுலா

பேருந்துகள் எண்ணிக்கை அதிகம்...சேலத்தில் இருப்பவனுக்கு சின்ன வயதில் இருந்து அவன் கடலே பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை...அவன் சுற்றுலா மூலம் சென்னை மெரினாவுக்கு வந்து விடியலில் கடல் பார்க்க குடும்பத்துடன் கடலுக்கு போனால் சேலத்துகாரனுக்கு அவன் பார்க்கும் காட்சி ஆயுசுக்கும் மறக்கமாட்டான்....

சென்னையில் காலையில் கடற்கரையில் தண்ணிர் பக்கத்தி அலை இரைச்சலோடு நடந்து போகலாம் என்றால் சுட சுட நெருப்பு சுட்டு வைக்கும்....

டாய்லட்டில் நமது மலத்தை நமக்கே பார்க்க பிடிக்காது ஆனால் விடியலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயண்படுத்தும் சென்னை மெரினாவில் கடற்கரை ஓரத்தில் மற்றவர்களின் மலத்தை பார்பது என்பது சர்வசாதாரணம்... சில இடங்களில் கடல் அலைகளில் டிஸ்போஸ் ஆகாமல் மலம் கரை ஒரம் ஒதுங்கி  இருக்கும்...


இன்னும் சில பசங்கள் அப்போது சொல்லுவார்கள்... பூனை போல் குழி தோண்டி அதில் மலம் கழித்து மண்ணை போட்டு மூடிவிட்டு வந்துவிடுவார்களாம்... யாராவது தம்பதியோடு தண்ணீர் பக்கத்தில் மணலில் உட்கார்ந்து மணலில் கைய வைத்து விளையாடினால் யோசித்து பாருங்கள்... அவன் மெரினாவை ஜென்மத்துக்கும் மறக்கமாட்டான்...

நான் விடியலில் கடற்கரைக்கு போய் அந்த விடியலையும், மெல்லமாக பரபரப்பாகும் சென்னையையும் எனக்கு பார்க்க ரொம்ப பிடிக்கும்...


திருமணத்துக்கு பிறகும் அந்த வழக்கம் தொடர்கின்றது....

சில நேரங்களில் விடியலில் 4மணிக்கு கூட கடற்கரைக்கு மனைவியோடு போய் காந்தி சிலை அருகே சோளக்கதீர் வாங்கி அதனை சாப்பிட்டபடி பேசுவது எங்களுக்கு பிடித்த விஷயம்...  ஒரு முறை ஆறு மணிக்கு சன் ரைஸ் காட்சியோடு,அந்த பொன்னிறமாக சூரிய ஒளி தகிக்கும் காட்சியை தண்ணிக்கு அருகில் இருந்து பார்க்க அவல்கொண்டு என்னை என் மனைவி நச்சரிக்க, நான் வேண்டாம் என்று திடமாக மறுத்தேன்...காரணம் தெரிந்து வெறுத்து போனாள்..

இப்போதும் சென்னை மெரினாவின் கடற்கரை விடியல் அழகை பார்க்க ஆசைபட்டால் அந்த ஆசையை ஒத்திவைத்து விடுங்கள்...அல்லது புகைபடம் எடுக்க ஆசைபட்டால் கடற்கரையில் தேவையில்லாத பல
பிரேம்கள் வந்து தொலைக்கும்....

நம்மை விட்டு விடுங்கள் இது போலான காட்சியை ஒரு வெளிநாட்டு பயணி நம் கடற்கரையை பார்த்தால் அவர் மனதில் என்ன நினைப்பார்...மகாபலிபுரம் பார்க்க சென்னை வரும் வெளிநாட்டு பயணிகள் சென்னையில் ஸ்டார் ஒட்டல்களில்தான் தங்குகின்றனர்... பக்கத்தில் கடல் இருப்பதால் நிறைய வெளிநாட்டு பயணிகள் காலையில் எழுந்ததும் அருகில் இருக்கும் கடற்கரையைதான் பார்க்க முதல் ஆசையாக வைத்து இருக்கின்றார்கள்...

இப்போதும் கடற்கரையில் விடியலில் நிறைய வெளிநாட்டினரையும் வடமாநிலத்தவரையும் நீங்கள் பார்க்கலாம்...அவர்கள் என்ன நினைப்பார்கள்....

முன்பு எல்லாம் இந்த திவ்யதரிசனம் காலை எட்டு மணிவரை இருக்கும்... மக்கள்தொகை பெருக்கம் அதிகமானதால் இப்போது காலை ஏழுமணிவரை இந்த தரிசனங்கள் தொடர்ந்து மெரினாவில் காட்சி அளிக்கின்றன...கடல் மாதா சுனாமி வடிவில் வந்து ஷேம்பூ போட்டு குளிப்பது போல் தன்னை சுத்தபடுத்திக்கொண்டால்தான் உண்டு....

ஆய் போகுபவர்களை எதாவது தட்டிக்கேட்டு வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள்...அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது... அவர்கள் மண்ணின் மைந்தர்கள்....பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

19 comments:

 1. //. யாராவது தம்பதியோடு தண்ணீர் பக்கத்தில் மணலில் உட்கார்ந்து மணலில் கைய வைத்து விளையாடினால் யோசித்து பாருங்கள்... அவன் மெரினாவை ஜென்மத்துக்கும் மறக்கமாட்டான்...//

  எல்லாம் கொஞ்சம் பேஜாருதான்பா..என்ன நைனா பன்றது.. சென்னை அப்படி மாறிகீனு இருக்குதுபா..

  ReplyDelete
 2. சுகமான "போக்கு" அவர்களுக்கு...சங்கட "நோக்கு" எங்களுக்கு!!

  ReplyDelete
 3. போனதடவ ஊருக்கு வந்தப்ப, ஆர்வக்கோளருல என்ற மனைவியை விடியற்காலையில் எழுப்பி (பிடிக்கவே பிடிக்காத விஷயம்) பெசன்ட் நகர் கூட்டிட்டுப் போய் இந்தக் காட்சியப் பாத்து நொந்து போய்ட்டங்க.. என்ன கலாச்சாரம்..மயிரு..மண்ணாங்க்கட்டி..
  இதப்பத்தி நானும் எழுதியிருக்கேன்..

  http://chummafun.blogspot.com/2008/08/blog-post.html

  ReplyDelete
 4. சென்னையில் மட்டுமில்லை திருச்செந்தூர், இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் இந்த மாதிரி பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. டைம்ஸ் of இந்தியா, ஒரு சிறப்பு மலர் வெளியிட்டார்கள் (தமிழில்- தீபாவளிக்கு என நினைக்கிறேன்), சுஜாதா, மாலன், சாருநிவேதிதா எல்லாரும் கட்டுரை எழுதி இருந்தனர்.

  அதில் சாரு, இது பற்றி மிக விவரமாக எழுதி இருந்தார். கட்டுரை இணைய லிங்க் இருக்கா என்று பார்க்கிறேன்

  ReplyDelete
 6. எல்லாம் கரெக்ட்டுதான்.. வீட்டுக்கு வீடு கக்கூஸ் இருந்தா அவுங்க ஏன் பீச்சுக்கு ஆய் இருக்க வர்றாங்க..?

  அதைச் செஞ்சு கொடுக்காதது யாரோட தப்பு..?

  ReplyDelete
 7. கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

  தலைவர் உண்மைதமிழன் அவர்களுக்கு எத்தனை டாய்லட் கட்டி கொடுத்தாலும் அதை நாறடிச்சிட்டு வெளியில ஆய் போறதுதான் அவுங்க பழக்கம்..

  ReplyDelete
 8. நல்ல பதிவு. எச்சரிக்கைக்கு நன்றிகள்

  ReplyDelete
 9. ஹாட் ஹாட்டார்'ஐ மாற்றி விடுங்கள்... நல்லாயில்லை..

  ReplyDelete
 10. இந்தியாவில், கழிவறை வசதியுள்ளவர்களை விட செல்போன் வசதியுள்ளர்கள் அதிகம் என்கிறது ஒரு கணிப்பு.

  அப்படிப் பார்த்தாலும் 40 முதல் 50 கோடிப் பேரிற்கு கழிவறை வசதியில்லை.

  தொலைக்காட்சிப் பெட்டி தருவதற்கு பதிலாக கழிவறை வசதிகளை ஏற்படுத்த முனைய வேண்டும்.

  உங்கள் பாணியில்.. நல்ல பதிவு ;)

  ReplyDelete
 11. என்னங்க உ னா த னா...... இது கொஞ்சம் ஃபோர் மச் இல்லே?
  கக்கூஸ் மட்டும் கட்டிக் கொடுத்தாப்போதுமா இல்லே.... கழுவி விடவும் அரசாங்கம் ஆள் வைக்கணுமா?

  வீட்டுலே சமையலுக்கு இடம் ஒதுக்குவதுபோல இதுக்கும் கொஞ்சம் ஒதுக்கணுமா இல்லையா?

  ReplyDelete
 12. ஜாக்கி,

  நான் சிறுமியா இருந்தப்ப.... ஒரு சமயம் பட்டணத்துக்கு ரயிலில் வர்றோம். அதிகாலையில் செங்கல்பட்டு தாண்டுனதும் 'பட்டணம் வருது'ன்னு எழுப்பி விட்டுட்டாங்க.

  கண்ணை முழிச்சு ஜன்னலில் ஆசையாப் பார்த்தா......

  ஐயோ.... ஆயுசுக்கும் மறக்க முடியாது. சின்னவயசு என்பதால் வெகுளித்தனம் கூடுதல்.

  ஐய்யய்யோ..... இது என்ன ஒரே பேளப் பட்டினமா இருக்குன்னு கத்துன கத்தலில் கம்பார்ட்மெண்ட் பூராவும் பலத்த சிரிப்பு.

  இந்தியாவில் இருக்கும் எல்லா கஷ்டத்துக்கும் அடிப்படைக் காரணம் (ரூட் காஸ்) மக்கள் தொகை.

  இதைக் கட்டுப்படுத்தலேன்னா....... இன்னும் பாருங்க என்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதுன்னு:(

  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ரூத்லெஸ்ஸா இருக்கணும்.

  ReplyDelete
 13. //
  துளசி கோபால் சைட்...
  என்னங்க உ னா த னா...... இது கொஞ்சம் ஃபோர் மச் இல்லே?
  கக்கூஸ் மட்டும் கட்டிக் கொடுத்தாப்போதுமா இல்லே.... கழுவி விடவும் அரசாங்கம் ஆள் வைக்கணுமா?
  //
  இத படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டே இருக்கேன்........

  ReplyDelete
 14. துளசியக்கா..

  இது மக்கள் தொகை பிரச்சினை அல்ல. மெரினா அருகில் இருக்கும் குப்பத்தில் (அரசாங்கம் கட்டி கொடுத்துள்ள வீடுகளில்) வாழும் மக்களின் பிரச்சினை. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் ”எவன் கேள்வி கேட்க முடியும்” என்று அலட்சிய மனபான்மை.

  அரசு கட்டி கொடுத்துள்ள எல்லா வீடுகளிலும் நல்ல கழிப்பறை வசதி உள்ளது.

  உலகின் அழகான் கடற்கறையின் அருகில் காசில்லாமல் அரசு கட்டிகொடுத்துள்ள வீடுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல்,கடற்கரையையும் அசிங்கபடுத்தும் இந்த மக்களே இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள்.

  அதுமட்டுமல்ல,இரவில் தனியாக இருக்கும் ஜோடிகளிடம் மிரட்டி பணம் பறிப்பதும் இந்த மக்கள்தான் காரணம்

  அன்புடன்
  அரவிந்தன்
  பெங்களுர்

  ReplyDelete
 15. நினைத்து பார்க்கவே கஷ்டமாய் இருகின்றது

  ReplyDelete
 16. yethu nadathalum namaku yennanu vittuporathu than mudal karanam.


  "No Nation is perfect, It needs to be made Perfect"

  ReplyDelete
 17. thalainagar chennaiyin mount road la oru public kakkoos kooda illa. aanaa sevurukku sevuru oviyam mattum varairaanga. apdiye kakkoos katti kuduthaalum endha pannadaiyum sariyaa thaani ootha mattengudhu. naara payaluga... pudhu subway katnaa, pan parag echaiya thupparaan thamilan. yaara kutham solla....goyaale.. public la naara vakkiravan kundila palukka kaachuna kambiyaala soodu pottaadhaan adanguvaanunga.

  ReplyDelete
 18. முன்பெல்லாம் குழந்தைகள் இந்த மாதிரி செய்வார்கள்.ஆனால் பாருங்கள் இப்போது குழந்தைகள் வெளியே செல்வதில்லை.பெரிய ஆண்கள் தான்.எந்த ஊரில் பார்த்தாலும் பட்டப் பகலிலே ரோட்டு ஓரத்திலே(இப்போ மரமெல்லாம் கிடையாது,இருந்தாலும் ஒதுங்குவதில்லை) பேண்ட் போட்டவன் தான் மாடு மாதிரி நின்று கொண்டு அடிக்கிறான். நாலு பேரைச் சுட்டால்தான் இந்த அசிங்கம் அடங்கும்.குறைந்தது நான்கு நாட்கள் சிறையில் தள்ளினால் அடங்கி விடுவார்கள்.

  ReplyDelete
 19. Maruina:Asia's biggest open air toilet system!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner