வம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...

முதலில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுக்கு ஒரே காரணம்... இந்த படத்தின் டிரைலர் என்றால் மிகையாகாது... அதில் ஒரு பாடலுக்கு அரள்நிதி கை ஆட்டி ஆட்டி அடும் அந்த ஆட்டம் ஏனோ  பார்த்தவுடன் பிடித்து போனது... இரண்டாவது  பாண்டி ராஜ்.... பசங்க படத்தின் இயக்கத்தில் எனக்கு அவர் மீது அளவுகடந்த  மரியாதை இருந்தது...



இயக்குனர் என்றால் ஒரு கம்பிர தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற மாயை உடைத்து முதல் படத்தை வெற்றி படமாக்கியவர்...அதனால் இந்த படத்தை தவறாமல் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினேன்...


கிராமங்களில் தலைகட்டு என்று ஒரு விஷயம் இருக்கு... அதாவது எத்தனை பங்காளிகள் இருக்கின்றார்கள் என்பதை பொறுத்து அந்த வம்சத்தை பார்த்து  பயப்படுவார்கள்...ஏனெனில் ஒருவன் மேல் கை வைத்தால் அத்தனை பேரும் மல்லுக்கு வந்து நிற்ப்பார்கள்.. என்பதால் பெரிய தலைகட்டு உள்ள குடும்பத்தின் மீது கை வைக்க யோசிப்பார்கள்....


வம்சம் படத்தின் கதை என்ன?


எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவர் வம்சத்தில் ஒரே வாரிசாக இருக்கும் அன்பரசு(அருள்நிதி)வை நஞ்சுண்டமாஓசி வம்சத்து சீனு கண்ணு தேவர் கொல்ல முயற்ச்சிக்கின்றார்.. காரணம் ரொம்ப சிம்பிள், அன்பரசுவின் அப்பா தனி ஆளாக இருப்பதால் அவன் எதுக்கு என்று சாரயத்தில் விஷம் வைத்து சாகடிக்கின்றார்..
எல்லாம் வம்சம் மற்றும் ஜாதி பாசம்தான்... அப்படி ஜஸ்ட் லைக்தட்ஆக கொலை செய்பவனையும்... வெட்டி சண்டை பிடிப்பவனை... தன் அப்பா சாவுக்கு காரணமானவனை முச்சந்தியில் சாணி கரைத்து அவன் மீது ஊற்றி துடப்பகட்டையால் அடிக்கும் ஒரு வயது பெண்ணை(சுனைனா) சும்மா விடுவானா-? அதிலும் அந்த பெண் அன்பரசுவை காதலிக்க... இருவரையும் பழிவாங்க நேரம்பார்த்து அலைகின்றான்...அந்த இளம் காதலர்கள் அந்த வில்லனிடம் இருந்து எப்படி தப்பின்ர்கள் என்று படத்தை  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில்சில....


முதல்வர் குடும்பத்தில் இருந்து ரசிக்கும் படியாக ஒரு ஹீரோ வந்து இருக்கின்றார்....வாழ்த்துக்கள்...


இயக்குனரிடம் தன்னை முழுதாக ஒப்படைத்துஅருள்நிதிக்கு ஒரு சபாஷ்...


முதல்வரின் பேரன் என்பதால் நிறைய இடங்களில் காம்பரமைஸ் செய்து  எடுத்து இருப்பது போல் எனக்கு படுகின்றது...


மிக முக்கியமாக கிராமத்து  பழக்க வழக்கங்களை பிரிந்து மேய்ந்து இருக்கின்றார்..இந்த படம் தமிழில் கிராமத்து பழக்க வழக்கம் மற்றும் சாதீய நுண்ணரசியல் போன்றவற்றின் ஆவணபெட்டகம் என்றால் அது மிகையல்ல என்பேன்...


ஒயிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி...இயக்குனர் மிஷ்கின் விட்டு வெளியே வந்து செய்து இருக்கும் முதல் படம் இது என்று நினைக்கின்றேன்..நிறைய ஷாட்டுகள்... நிறைய சேசிங்கள்... புது புது கோணங்கள்...


சமீபத்தில் ரீலிசான களவானி  படம் கிராமம் என்பது கிரினிஷ் என்பது போல் காட்சி அளித்தது... இந்த படத்து கிராமம் ரொம்ப டிரையாக இருக்கின்றது... காரணம் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்டாக கூட இருக்கலாம்.....


சாரயம் தயாரிப்பதையும் அதன் பின் பன்னிகறி தின்று விட்டு , இன்னும் போதைக்கு பொணம் எரிக்கும் இடத்துக்கு போய் வாசம் பிடிப்பது  காற்று வாக்கு செய்தியை கண் முன் நிறுத்தி இருக்கின்றார் இயக்குனர்....




பொல்லாதவன் வில்லன் கிஷோர்ன் பிளாஷ்பேக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன... மின முக்கியமாக பின்பாதியில் அருள்நிதி அம்மாவாக வயதான வேடம் போட்ட அந்த பெண்.. பிளாஷ்பேக்கில் அசத்தலானன ஏதோ ஒரு அழகு அந்த பெண்ணிடத்தில் இருக்கின்றது.. ஆது என்னவென்று படம் பார்த்து இப்போது வரை யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்...


என் வீட்டில் ஏர்டெல் பிரச்சனை போல் பாண்டிராஜ்க்கும் அவர் கிராமத்தில் எதாவது டவர் பிரச்சனையில் விழி பிதுங்கி இருந்து இருப்பார் போல.. அதை அப்படியே நகைச்சுவை காட்சிகளாக வைத்து இருக்கின்றார்


சுனைனா சூப்பர்னா பல இடங்களில் அந்த வெள்ளை தோலின் ஆளுமை அடக்க மேக்கப் மேன் போராடி இருப்பது நன்றாக தெரிகின்றது...
சின்ன உதடு, சின்ன மூக்கு,சின்ன பல்வரிசை,வேண்டாம் சாமி இத்தோட நிப்பாட்டிக்கிறேன்... நைட்டு சோறு கிடைக்காம போயிடும்......




பச்சை சிக்னல் விழுந்து பாசிட்டிவ் என்பதை காட்டவும்... ஊர் முழுக்க தெரிந்து விட்டது என்று சொல்ல சூளை செங்கல் ஒன்றன் மீது  ஒன்று விழுவதாக விஷுவலில் சொல்லி இருக்கின்றார்...இயக்குனர்...


கஞ்சா கருப்பு நிறைவு....


மருதானிபூவே பாடலில் சுனைனா பாவாடையை ஹம்மிங்கின் போது சிலுப்பி சிலுப்பி ஆட்டும் போது ரசிக்க வைக்கின்றது... கிராமத்து பெண் தொப்புள் காட்டகூடாது என்று இயக்குனரிடம் தப்பாக அவர்மனதில் யாரோ ஆழமாக பதிய வைத்து இருக்கின்றார்கள் போல....இடுப்பு கூட தெரியாத அளவுக்கு புல்லாக கவர் செய்து ஜாக்கெட்டில் பின் போட்டு கஷ்டபட்டு ஆடி இருக்கின்றார்...


சிவப்பு மற்றும் அரக்கு கலர் ஆப்சாரியில் அதாவது காண்ட்ராஸ்ட் உடைகளில் அதிகம் கவர்கின்றார் சுனைனா-....
குளத்தில் வில்லன்களை வரவைத்துவிட்டு அந்த எலக்டிரிக் மேட்டர் புதுசு மற்றும் நல்ல டுவிஸ்ட்....


 முதல் பாடலுக்கு ஆப் சாரி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடும் லேடி டான்சர்கள்... அன்று இரவு அசதியில் நன்றாக தூங்கி இருக்க வாய்பபு இருக்கின்றது.... அப்படி ஒரு குத்து..


படத்தின் டிரைலர்....





படக்குழுவினர் விபரம்...


சென்னை விருகம்பாக்கம் தேவிகருமாரிஅம்மன் தியேட்டர் டிஸ்க்கி


50 ரூபாய் டிக்கெட்டை விலை ஏற்ற இப்போதுதான் தியேட்டரை ரெடி செய்து கொண்டு இருக்கின்றார்கள்...


பார்க்க நன்றாகவே இருக்கின்றது.. ஆனால் படம் நெடுக குதித்து கொண்டு இருந்தது....முதல்வர் பேரன் நடித்த படம் என்று மெஷினிடம் எந்த புண்ணியவான் சொல்லி வச்சானுங்கன்னு தெரியலை...இரண்டு மெஷினில் படம் போடும் போதும் அதே நிலைதான்.....கொஞ்சம் கவனிங்க அப்பு....


டாய்லட் எல்லாம் மாற்றிவிட்டு ஹைடெக்காக மாற்றி இருக்கின்றார்கள்...  நான் என் பேன்ட் ஜிப் அவுக்கும் முன் தப்பான சென்சாரில் பளிச் என தண்ணீர் கொட்டி என் பேன்ட்டை நனைத்து வைத்தது....


கை கழுவி வெளியே வந்தால் புத்தம் புது டைல்சில் பச்சக் என்று சளியோடு ஒரு நபர் எச்சிலை துப்பி வைத்தார்....


என் சீட்டுக்கு கடைசியில் ஒரு பெண்ணும் ஆணும் உட்கார்ந்து இருந்தார்கள்... அவன் அடிக்கடி என்மேல்  கம்ளெயின்ட் மட்டும் அவன் கொடுக்ககறானன்னு  பாரு என்று  அடிக்கடி போனில் தகவல் சேகரித்து கொண்டு இருந்தான்...அந்த பெண் அவனுக்கு நல்ல ஒத்துழைப்பு...


படம் முடிந்தது... இய்ககம் பாண்டிராஜ் என்று பேர் போட்டதுமே... ஆப்பரேட்டருக்கு பேதி வந்நதுடுச்சி போல பொசுக்குன்னு ஆப் செஞ்சிட்டார்....

டிஸ்கி...

சுனைனா இந்த பாடல் வெளியிட்டின் போது ஏன் அழுதார்... ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...


இந்த படம் பார்க்கவேண்டியபடம்தான்.....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

 

12 comments:

  1. ME THE FIRST...

    நல்ல விமர்சனம்.

    மனோ

    ReplyDelete
  2. இத்தோடா நம்ம ஜாக்கி ஒட்டு போட்டுகினு கீது.
    மய த்தான் வந்துகினுகீது. ஆக்காங்!!

    ReplyDelete
  3. நீங்க ‘உலகப் படம்’ எழுதும் போது வாரேன்!! :) :)

    ==

    இன்னிக்கு வரைக்கும்... உங்க பதிவு ரீடரில் அப்டேட் ஆகறதில்லை.

    ReplyDelete
  4. தமிழ் சினிமாவில் மதுரையை சுற்றீ புனையபடும் கதைகள் வெற்றீ பெரும் என்பதற்கு இந்த படமும் ஒரு சிறந்த உதாரனம்

    ReplyDelete
  5. //சிவப்பு மற்றும் அரக்கு கலர் ஆப்சாரியில் அதாவது காண்ட்ராஸ்ட் உடைகளில் அதிகம் கவர்கின்றார் சுனைனா-....//

    மெதுவா பேசுங்கண்ணே!சம்பந்தபட்டவங்க காதில விழுந்திட போகுது !!

    ReplyDelete
  6. சன் டிவி டாப் டென்னில் முதல் இடத்திற்கு வரலை என்றால் வெட்டு குத்து எதுவும் விழுமோ ?
    எப்படியும் எந்திரனுக்குள் ரிலிஸ் செய்து அள்ள முயற்சித்து இருக்கிறார்கள்

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம்...பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. சின்ன உதடு, சின்ன மூக்கு,சின்ன பல்வரிசை,வேண்டாம் சாமி இத்தோட நிப்பாட்டிக்கிறேன்... நைட்டு சோறு கிடைக்காம போயிடும்......
    அந்த பயம் இருக்கணும் ஜாக்கி தம்பி!

    ReplyDelete
  9. //டாய்லட் எல்லாம் மாற்றிவிட்டு ஹைடெக்காக மாற்றி இருக்கின்றார்கள்... நான் என் பேன்ட் ஜிப் அவுக்கும் முன் தப்பான சென்சாரில் பளிச் என தண்ணீர் கொட்டி என் பேன்ட்டை நனைத்து வைத்தது....//

    விமர்சனம் நல்லாயிருக்கு என்றால் இது ரொம்ப.... நல்லாவே இருக்கு... ஆமா அண்ணே படம் பார்த்திங்களா இல்லை ஒத்துழைப்பை பார்த்துங்களா?

    ReplyDelete
  10. சுனைனா இந்த பாடல் வெளியிட்டின் போது ஏன் அழுதார்... ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...//

    சும்மா ஒரு விளம்பரம் ........

    ReplyDelete
  11. நல்லா விமர்சனம். என்ன கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை தவிர்த்திருக்கலாம்

    ReplyDelete
  12. /*மிக முக்கியமாக பின்பாதியில் அருள்நிதி அம்மாவாக வயதான வேடம் போட்ட அந்த பெண்.. பிளாஷ்பேக்கில் அசத்தலானன ஏதோ ஒரு அழகு அந்த பெண்ணிடத்தில் இருக்கின்றது.. ஆது என்னவென்று படம் பார்த்து இப்போது வரை யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்...*/

    அந்த பெண் கோவையை சேர்ந்தவர் ...பெயர் அனுபமா குமார் ,

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner