சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)


ஆல்பம்...


உமாசங்கர் ஐஏஎஸ் ஊழலுக்கு துணை நிற்க்கவில்லை என்ற காரணத்தால் அவரை பந்தாடுவது எந்த விதத்தில் நியாயம்.. அவர் மீது குற்றம் இருப்பின் மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி அவர் செய்த தவறுகளை சொல்லுங்கள்... அதை விடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து அவமானபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்... தமிழகத்தில் நேர்மையாக இருப்பது தகுதி இழப்பு என்பது இன்னொரு முறை நிரூபனம் ஆகி இருக்கின்றுது...===================
 ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டங்கள் எல்லாம் ஓட்டாக மாறி விடுமோ என்று ஒரு சிறு நடுக்கத்தில் ஆளும் கட்சி இருக்கின்றது
என்பதை மறுப்பதற்கு இல்லை....ஆனால் அதிமுக செலவு செய்யும் பணம் இப்போதுதான், வட்டம், மாவட்டம்எல்லாம் தாண்டி அடி மட்ட தொண்டனிடம் அந்த பண்ம் சேருகின்றது என்பதாக இந்த கூட்டத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்...
===================
121 பாலங்கள் தமிழகத்தில் கட்ட ஆளும் அரசு ஒப்புதல் அளித்து இருக்கின்றது..250 கோடி தமிழக மொத்ததிற்கும் இதுதான் நிதி... சென்னை மட்டும் தமிழகம் அல்ல என்று ஆளும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்....இப்போதும் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள அணைக்கரைபாலம் இன்னும் கட்டபடாமல் இருக்கின்றது... இதனால் அந்த பாலத்தை  கடக்க மக்கள் சொல்லலென்னா துயரத்தை அடைந்து வருகின்றார்கள்....நிறைய சாப்பிட்டாலும் மக்கள் திட்டங்கள் அதிகம் நிறைவேற்றுவது திமுக அரசுதான் அதனால் இந்த கோரிக்கை...
=================
மிக்சர்


திருச்சியில் இருந்து வாசக நண்பர்கள் ராஜேஷ் மற்றும் நாகராஜ் இருவரும் சென்னை வந்து தொடர்பு கொண்டு அன்பு மழை பொழிந்தார்கள்... அவர்களுக்கு என் தளத்தை அறிமுகபடுத்தி  வைத்த அரவிந் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்......


============================
நன்றிகள்
600 பாலோயர்களுக்கு.........
================
கலைஞர் பழுத்த அரசியல்வாதி... அவரை எத்தனையோ பேர் அவமானபடுத்தி இருக்கின்றார்கள்... ஆனால் அவர் அந்த விஷயத்துக்கும் சட்டென் எதிர்வினை செய்யமாட்டார்... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...
===============
இரண்டு நாட்கள் கடுமையான வேலை...பார்க் ஓட்டலில் ஒரு நேர்முகம் வந்து ஒளிப்பதிவு செய்து தர முடியுமா ? என்று கேட்டார்கள்... போனதும் தெரிந்தது நயன்தாராவின் நேர்முகம்....ஓனம் நிகழ்ச்சிக்காக, மலையாள சேனலுக்கான நேர்முகம் அது ....
சொன்ன நேரத்துக்கு சரியாக வந்தார்..எந்த அலட்டுலும் இல்லாமல் நட்பாய் பழகினார்...சினிமாவில் அகன்ற இடுப்புடன் இருப்பார்... நேரில் அப்படி இல்லை சிக்கென இருக்கின்றார்..
எல்லாம் லென்ஸ் களவானிகள் காட்டும் பொய் பிம்பங்கள்...இயல்பாய் இருக்கும் நயன்தாராவுக்கு  நான் ரசிகன் ஆகிவிட்டேன்
=================


இந்தவார சிறந்த படம்...

=======================
இந்தவார சலனபடம்...


.ஒரு பெண்ணை கரெக்ட் பண்ணி கிஸ் பண்ணறது சாதாரன விஷயம் இல்லை.... ஆனா  இந்த படத்துல அந்த  படபடப்பான் நொடிகளை அருமையா விஷுவல் பண்ணி இருக்கின்றார் கௌதம்வாசுதேவ் மேனேன்... மிக முக்கியம் உங்களுக்கு உதடு கொடுக்கும் பெண் உங்களை ரசிக்க வேண்டியது முக்கியம்...

இந்த பாடல் எப்ப டிவியில போட்டாலும் அந்த கடைசி காட்சிகள் வரும் போது நின்று ரசிப்பது என் வாடிக்கை...கொஞ்சம் தப்பானாலும் செருப்படி மற்றும் தப்பான அபிப்பராயம் ஏற்படுத்தும்  செயல்...


வேண்டும் ஆனால் வேண்டாம் என்ற திரிஷாவின் அந்த நிலை... நல்ல நடிப்புக்கு உதாராணம்....சிம்பு மெல்லமாக முன்னேறும் அந்த காட்சி... எல்லோரும் கடந்து வந்த பாதைதான்.... இருந்தாலும்  அந்த பாதையை கடந்து வந்தவர்கள் பாக்கியசாலிகள்.... என்ன நான் சொல்வது உண்மைதானே... அற்புதமாக ஒளிப்பதிவு செய்த  மனோஜ் அவர்களுக்கு  என்  நன்றிகள்..
================================
இந்தவார சினிமா பிளாக்......

பிளாக்கில் ஒரு சிலர் தவிர மற்ற எல்லோரும் சினிமா விமர்சனம் இலக்கியமாக எழுதவில்லை என்று ஒரு பிரபல எழுத்தாளர் குறை பட்டுக்கொண்டார்....அது அவருடைய கருத்து... ஆனால் அந்த எழுத்துக்கு நேரம் ஒதுக்கி... பல தகவல்கள்  கொடுக்கும் சினிமா வலைபூக்களை முதலில் இனி வாரம் வாரம் அறிமுகபடுத்தலாம் என்று இருக்கின்றேன்..... அந்த உழைப்பும் சினிமா பற்றிய புரிதலும் அதன் மேல் உள்ள காதலும் மிக அற்புதமாய்  அவர்கள் எழுதி இருப்பார்கள்... அவர்களுக்கு உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்குங்கள்


இந்த வாரம்.. எனது தம்பி கார்த்திகேயன்... 

இவர் கார்த்திகேயனும் அறிவு தேடலும் என்ற தளத்தில் கீதப்பிரியன் என்ற பெயரில் எழுதி வருகின்றார்....  இளையராஜாவின் பரம ரசிகர்..... இப்போது நான் தட்டச்சு செய்து பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த கீ போர்டை பரிசளித்தவர்...
எல்லா உலக சினிமாவையும் விரிவாய் எழுதுபவர்.. விரிவாய் என்றால் அண்ணன் உண்மைதமிழன் பொறாமைபடும் விதத்தில் எழுதுபவர்....பதிவுலகில் பார்மாலிட்டி டன் என்ற வார்த்தையை பிரபல படுத்தியவர்....
எப்போதும் அண்ணே என்று ஆசையாக அழைப்பவர்....எப்போதும் என் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொள்பவர்... பொது பிரச்சனைக்ள் அவ்வப்போது எழுதினாலும் சினிமாவை பற்றி அதிகம் எழுதுபவர்....கார்த்திகேயனும் அறிவுதேடலும் தளத்தை வாசிக்க... இங்கே கிளிக்கவும்..
http://geethappriyan.blogspot.com/


 =============================


இந்த வார கடிதம்...

Hi Jackie Saker, 

Greetings!
Hope you are doing well - I'm a fellow reader of your blog and today I felt very sorry after reading your post on recent Plagiarism incident happened to you.Though, we cant do much about this - we can at least disable the right click option. 

Thought of sharing this information with you - which will completely disable the "Right click" option in your blog. 

When you edit your template - you can see a tag, in that place you can add "oncontextmenu='return false;'" this statement which will disable right click.

for example:

In my below blog I have this - you can check it out.

Wish you a very best future and do keep writing.

Thanks

நன்றி நண்பா இது மற்றவர்களுக்கும் பயண்படட்டும்... மிக்க நன்றி...=============
பிலாசபி பாண்டி


கொலம்பஸ் மற்றும் மேகலனுக்கு கேர்ள்பிரண்ட் மற்றும் ஒய்ப் இல்லாம இருப்பதுதான்... புதிய உலக கண்டு பிடிக்க உதவியது....அப்படி இருந்து இருந்தா... என்ன நடந்து இருக்கும்...???


எங்க போற???
எத்தனை நாள் ஆகும்???
உன் குழுவில் எத்தனை பேர் பெண்கள்???


எத்தனை கப்பல் உங்க பின்னாடி வருது????
எதாவது ஒரு தீவை கண்டுபிடிச்சா எனக்கு எப்படி தெரிவிப்பிங்க???
பயணம் போற கப்பல் பாய்மரமா? இல்ல கட்டுமரமா?
எத்தனை நாள் கழிச்சி வருவிங்க???
எத்தனை பேர் உங்க கப்பல்ல இருப்பாங்க...?
என்க்கு ஒரு விஷியம் சொல்லனும்னா எப்படி செர்ல்லறது...ன்னு இப்படி கேள்விகளை அடிக்கிக்குனே போனா??? நான் ஆணியே புடுங்கலன்னு ரெண்ட பேரும் உட்கார்ந்து இருப்பாங்க... இன்னமும் நாமும் உலகம் தட்டன்னு நினைச்சிகிட்டு இருப்போம்...
==================
நான்வெஜ்...18+
ஜோக்...1


அந்த ஆளை கொலை பண்ண எதுக்கு பத்து இளவட்டம் கையில கத்தியோட தெருத்துறாங்க???


அந்த ஆளு ஒரு பிரா டிசைனராம்....ஓடினால் ஆடாத, அதிராத,மழையில் நனைந்தால் அல்லது ஈரமானால் எதுவும் தெரியாத புதுவகைபிரா கண்டுபிடிச்சி இருக்காராம்....


===========================
ஜோக் 2
ஒரு மென்டோஸ் தொலைகாட்சி விளம்பரம்.... கீழே ஆடியோ மட்டும்...
சாதாரண காதலர்கள்....


உன் மார்பின் மேல் படுத்துக்கொள்ளவா???
பெண்.... செருப்பால அடிப்பேன்....


மென்டோஸ்காதலர்கள்...
நான் உன் இதய துடிப்பை கேட்க ஆசைபடுகின்றேன்....


பெண்... வா அன்பே வந்து கேள்...


உருவாக்கிடுமே புதிய  எண்ணங்களை மென்டோஸ்....வாழ்க்கை....
===================
ஜோக்..3
65 வயது கிழவருக்கு விந்து டெஸ்ட் எடுக்க சொன்னார் டாக்டர்..... ஒரு பாட்டிலை கொடுத்து அடுத்த நாள் எடுத்து வர சொன்னார்.... மறுநாள் அந்த கிழவர் எம்டி பாட்டிலோடு போனார்....டாக்டர் ஏன்னு கேள்வி கேட்கும் முன்பே... அவரே ஆரம்பிச்சார்....
டாக்டர்  நேத்து என் வலக்கை மற்றும் இடக்கையால் முயற்சி  செய்தேன் முடியலை....அதுக்கு அப்புறம்... என் பெண்டாட்டி இரண்டு கையலும் முயற்ச்சி பண்ணினா.... அப்பயும் முடியலை... ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு என் மருமகளை கூப்பிட்டேன்... அவளும் இரண்டு கையால எவ்வளவோ டிரை பண்ணிட்டு வாயால கடிச்சி கூட டிரை பண்ணினா  ஒன்னும் முடியலை, அவ்வளவு ஏன் பக்கத்துல குடி இருக்கும் குடித்தினகார பெண்ணும் எவ்வளவோ டிரை பண்ணியும்  யாராலையும் பாட்டிலை திறக்க முடியலை என்று சொல்லி கிழவர் வருத்தபட்டார்..........


கடவுள் நல்ல எண்ணங்கள் உங்களுக்கு கொடுக்கட்டும் ......


===========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

26 comments:

 1. அண்ணே மிக்க மகிழ்ச்சி,என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.நயந்தாராவோடு சேர்ந்து நிற்பதற்கு அண்ணி ஒண்ணும் சொல்லலையா?;))நயன் உண்மையிலேயே அழகு தான்

  ReplyDelete
 2. நயன்தாராவைப் பற்றி ஒரு நல்ல விஷயம் கேள்விப்பட்டேன். எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் பயன்படுத்தாத பொருட்களை மக்களை வாங்கச்சொல்லும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

  ReplyDelete
 3. //இப்போது நான் தட்டச்சு செய்து பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த கீ போர்டை பரிசளித்தவர்...//

  இவுருதானா ஜாக்கி?!! இன்னிக்கு இவரை விடுறதா இல்லை. கும்மிட வேண்டியதுதான்! :) :) :)

  ReplyDelete
 4. அண்ணாச்சி வாழ்த்துக்கள் நயனுடன் போட்டோ பிடித்தமைக்கு.
  வழக்கம் போல் கலக்கல்.

  ReplyDelete
 5. சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)

  சூப்பர் அப்பு

  ReplyDelete
 6. இன்றைய சா. அ. நா. சூப்பர்

  ReplyDelete
 7. சூப்பர் ஜாக்கி! அதுவும் ஜோக் 3 :)

  ReplyDelete
 8. இன்றைய சாண்ட்வெஜ் அண்ட் நான்வெஜ் சூப்பர்

  ReplyDelete
 9. மாமா நயன் கூட போட்டா புடிச்சீங்களே பிரபு(தேவா )வுக்கு ஒரு காப்பி அனுப்பலாம் ல..... ( கொஞ்சம் வயித்தெரிச்சல் ஹீ ஹீ ஹீ ஹீ)

  ReplyDelete
 10. //சென்னை மட்டும் தமிழகம் அல்ல என்று ஆளும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்//

  நமக்கு தெரிந்து என்ன பண்றது ஜாக்கி ...ஆள்கின்றவர்கள் அதை புரிந்து கொள்ள வில்லையே...

  ReplyDelete
 11. Hello
  Mr.jakie sekar, i was a silent reader of your blog, it is simply good.
  i recoommend you to comment about the movie LEADER (telugu) and RAJNEETHI (hiNDI).
  such movies are rare, not coming in tamil.

  RAMKUMAR, DOHA-QATAR

  ReplyDelete
 12. உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

  அரசுக்கு எனது கண்டனங்களும்..

  tsekar

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு ஜாக்கி அண்ணே.. நண்பர் கார்த்திக் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. கார்த்திகேயனின் உழைப்பு அபாரமானது. மற்ற நண்பர்களின் பதிவுகளைப் பற்றியும் இந்தத் தளத்தில் எழுதுங்கள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. நயன் தாராவுடைய முகம் இப்போ எப்படி இருக்குங்ணா? வர வர அவர்முகம் பொலிவிழந்து வருகிறது. அய்யா, சந்திர்முகி படங்களில் தெரிந்த அழகான முகத்தை அவர் இப்போது இழந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.
  கீழே ரொம்ப ஹாட்டா இருக்குங்கோவ்!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் 600 க்கு

  ReplyDelete
 16. நல்ல பதிவுகள், வசிக்க சுகமாக ... நன்றி!

  ReplyDelete
 17. அண்ணே,
  வழக்கம் போல் அருமையான பதிவு...
  நான் பதிவுலகத்தில் எழுத ஆரம்பித்த புதியவன்.எங்களைப் போன்ற புதியவர்களை ஊக்குவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது வலைபூவிற்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டால், என் எழுத்துக்களை மேன்படுத்திக்க உதவும்..!
  எனது வலைபூ முகவரி:
  http://vetripages.blogspot.com/

  அன்புடன்,
  வெற்றி

  ReplyDelete
 18. ஜாக்கி,,
  சாண்ட்வெஜ், நான்வெஜ் தொடர் புத்தகமாக வரும் போல இருக்குப்பா.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner