(Mujeres infieles-2004) 18+ உலகசினிமா சிலி நாடு...கள்ள உறவுகள்... கலங்கி நிற்கும் நிஜ உறவுகள்...

போனவாரத்தில் வந்த ஒரு பத்திரிக்கை செய்தி என்னை கவர்ந்தது... அதாவது கணவனும் மனைவியும் சேர்ந்து மனைவியின் கள்ளகாதலனை கொன்ற கதை.. எனக்கு மிக நகைப்பாக இருந்தது... பொதுவாக கணவனின் கள்ளகாதலி, மனைவியின் கள்ளகாதலன் இப்படித்தான் கொலை நடக்கும்... ஆனால் மேலே உள்ள செய்தி சற்று வித்யாசமாக இருந்தது...இன்று பேப்பரை திறந்தால் ஒரு  நாளைக்கு ஒரு  கள்ளஉறவுக்காக நடற்த கொலையும்,  லஞ்சம் வாங்கி முகம் மறைத்து செல்லும் அரசு அதிகாரியும் தினப்பத்திரிக்கையில் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது.... ஆனால் இந்த பிரச்சனையின் பின்னனியில் பல குடும்ப உறுப்பினர்களின் மானம் போகின்றது...வெளியில் தலைகாட்டமுடியாமல் தவிப்பவர்கள் எராளம்... இதில் வெளியே தெரிவது ஒரு சதவீதம்தான்... ஆனால் தெரியாமல் இருப்பது நிறைய.....
இந்த படத்தில்  முதல் காட்சியில் ஒரு ஆணும் பெண்ணும் காரில் ஹோட்டலுக்கு போகின்றனர்... ரூம் நம்பர் இரண்டை தேர்ந்து எடுத்து உள்ளே போனதும் அந்த பெண்ணின் மீது அந்த  ஆண் காமபசியில் பாய்கின்றான்... அந்த பெண் அவனை தள்ளிவிடுகின்றாள்...அவளே உடைகள் களைகின்றாள் அந்த அணும் அது போலவே செய்கின்றான்...இருவரும் வளர்ச்சி அடைந்த பிறந்த மேனியாக இருக்கின்றனர்...


இருவரும் வேகத்துக்கு சின்ன பெக் சாப்பிடுகின்றார்கள்... இருவரும் படுக்கையில் முயங்குகின்றார்கள்... இந்த இடத்தில்  தமிழ் படமாக இருந்தால் குடம் தண்ணீரோடு  படியில் உருளும், வியர்வை முதுகு தெரியும், இழைப்புளி பட்டறையில் தேய்ப்பது போல இரண்டு கால்களும் தெய்த்துக்கொள்ளும், புலி மாணை வேட்டையாடும் ஓவியம்  காண்பிக்கபடும், தண்டவாளங்கள் இணையும், ஆனால் இது சிலி நாட்டு படம் என்பதால் முயங்குவதை கேமராவில் காட்டுகின்றார்கள்...
களைத்துபோய்விட்டு  ஆண் மட்டும் எழுந்து போய்  சிகரேட் பற்றி வைக்க முயற்ச்சிக்க டமால் என்று வெடித்து அவன் இறந்து விடுகின்றான்..... அந்த பெண்ணுக்கு காயம்.....எப்படி வெடித்தது?? அவர்கள் ரூமுக்கு கீழே கேஸ் பைப்லைன் போக அதை எலிகடித்து வைக்க அங்கு கேஸ் லீக் ஆகி அந்த வெடி விபத்து நிகழ்கின்றது...


பயர்சர்விஸ் வீரர்கள் ஒரு விபத்து நடந்ததும் எப்படி செயல்படுகின்றார்கள் என்று ஒரு நிகழ்ச்சிக்கு கேமராவும் கையுமாக வந்த ஒரு  டிவி ரிப்போர்டருக்கு அந்த வெடிவிபத்து நடக்க சென்சேஷனல் நியூஸ் கொடுக்கின்றேன் என்று  உள்ளே போக இறந்து போனவனை டிவியில் காட்ட  டிவி பார்த்த யாரோ ஒரு பெண் பதறுகின்றாள்...  காரணம் அது அவள் கணவன்....வலியில் படுத்து கிடப்பவளை கேமரா காட்டுகின்றது.... இப்போது டிவியில் அந்த காட்சியை பார்த்து விட்டு ஒருவன் திகைக்க அது அந்த பெண்ணின் கணவன்.......அந்த பெண் சிலி நாட்டில் எல்லோருக்கும் தெரியும்..... காரணம் அவள் ஒரு செய்தி சேனலில் நியுஸ் ரீடர்...
இரண்டு நாளைக்கு முன் சிலிநாட்டு தம்பதிகள் 62 சதவீதம் பேர் உண்மையாக இருப்பதில்லை என்ற விவாதம் தனது செய்தி சேனலில் நடத்தியவள்... இப்படி இரண்டு நாள் கழித்து மாட்டிக்கொள்வாள் என்று கனவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டாள்....
==============
(Mujeres infieles-2004) 18+ உலகசினிமா சிலி நாட்டு படத்தின் கதை என்ன?


 சிலி நாட்டின் டெலி 6  செய்தி சேனலில்  செய்தி வாசிக்கு  சிசிலியாவின் கள்ள தொடர்பு வெட்ட வெளிச்சம் ஆகின்றது.... இது அவளே எதிர்பார்க்காத ஒரு  விபத்தின் முலம் ஏற்பட்டு விடுகின்றது....(மேலே அந்த விபத்தும் அதன் பின் நடக்கும் சம்பவ்ங்களும் சற்று விரிவாய்) அவள் கள்ள தொடர்பு வைத்து இருந்தது  அந்த சேனலின் அதிபர்..சிசிலியா எவ்வாறு நடந்த பிரச்சனைகளில் இருந்து மீள்கின்றாள்  என்பதை பல டுவிஸ்டகளுடன் சொல்லிகின்றது இந்த  சிலி நாட்டுபடம்.....
========


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


இந்த படம் பல டுவிஸ்ட்டுகளை உள்ளடக்கிய நான் லீனியர் திரைக்கதை...
பல டுவிஸ்ட்டுகள் நாம் எதிர்பார்க்காத ஒன்று....


விரிவாய் கதையை பற்றி சொன்னால் இந்த படத்தின் சவைப்பு தன்மை குறைந்து விடும் என்பதால் ரொம்ப மெலோட்டமாக சொல்லி இருக்கின்றேன்....
முதலில்ஹோட்டலில் காட்டும் காட்சிகள் இந்த படத்தை வேறு வடிவத்துக்கு அழைத்து சென்றாலும்...பாலியல் மற்றும் கள்ள தொடர்புகளை பிரித்து மேய்ந்து இருக்கின்றார்கள்....


62 பர்சன்ட் பெண்கள் சரியாக இல்லாத காரணத்துக்கு ஆண்கள்தான் காரணம் என்று படத்தின் மூலம் சொல்கின்றார்கள்.... இந்த பர்சென்ட் எண்ணிக்கை இன்னும் கூட அதிகரித்து இருக்கும்... இன்னும் பல ஆண்கள் சரியாக இருப்பதே அதற்கு காரணம்  படத்தில் டிவியில் நடக்கும் விவாதத்தின் மூலம் சொல்கின்றார்கள்...


எவ்வளவு  கெட்ட பேர் இருந்தாலும் சேனல் அதிபரின் மனைவி.. சிசில்யாதான் திரும்புவும் நியூஸ் வாசிக்க வர வேண்டும் என்று சொல்லி விட்டு அதற்கு அந்த செனல் அதிபர் பெண் சொல்லும் காரணம்... அவள் கண்கள், அவள் உதடுகள் எல்லாம் விலைமதிப்பு மிக்கவை என்று சொல்வது எவ்வளவு நிஜம்  என்பது தமிழ் நாட்டில்  நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கையில் புரியும்....
தன் மனைவியின் நிர்வாண வீடியோவை பார்த்து விட்டு அலுவலகத்தில் அழும் கணவன்   மற்றும் அந்த அழுகையின் குலுங்கல்கள்.. அதன் பிறகு அந்த வெற்று மார்பையும் குல் கலைந்து இருக்கும் மனைவியின்  முகத்தை பார்த்து விட்டு கோபத்தில் பென்சிலை உடைப்பதும் அந்த காட்சியும் அருமை....


சிசிலியாவின் கணவன் குழந்தை  இருவரும் சிசிலியாவை பார்க்க மருத்துவமைனை சென்று அன்கான்ஷியசாக இருக்கும் அம்மாவை பார்த்து விட்டு அம்மாவுக்கு வலிக்குமா என்று கேட்க??? அதற்கு அவன் இப்போது வலிக்காது ஒரு வேளை அம்மா கண் விழித்தால் வலிக்கும் என்று இரட்டை அர்த்த வசனத்தில் சொல்வது கவிதையான காட்சிகள்....


 கள்ள தொடர்பு உள்ள மனைவியின் கணவன் என்று மருத்துவமைனையில் மருத்துவரிடம் அறிமுகபடுத்திக்கொள்ளும் போது அந்த கணவன் பாத்திரத்தின் உடல் மொழி நம்மோடு ஒட்டிக்கொள்வது அந்த  பாத்திரத்தின் வெற்றி...


 கணவன் இருக்கும் போது வைபரேடடர் சமாச்சாரத்தோடு அலையும் அந்த பெண்ணும்  அந்த கேரக்டரும் காமெடிரகம்.....


ஒரு சின்ன பையோனேடு உறவு வைத்துக்கொள்ளும் அந்த பெண்... கதவை திறந்ததும்... ஹாய் மை புசி கேட் என்று உதட்டில் முத்தமிட்டு உள்ளே அழைத்து போவதும் அதன்பின் நடக்கும் உணர்ச்சி பூர்வமான பேச்சும் அதன்பின் இரவரும் கொடுத்துக்கொள்ளும் வெறிகொண்ட உதட்டுமுத்தமும் இருவரும் உதடு பிரிந்தும் அந்த ஜொள் இழையாக இருவர் உதட்டையும் இணைப்பது ஏதேச்சையாக நடந்தாலும் அழகான காட்சி......


கிளைமாக்ஸ் பாடலும்...சிசில்லியாவின் குழந்தை தூங்கும் போது அம்மாவின் கையை பிடித்து அணைத்துக்கொண்டு தூங்குவதாக   முடிக்கும் போது படம் இன்னும்  அழகாக இருக்கின்றது...


திரும்பவும் அதே சேனலில் செய்தி வாசிக்கும் போது சிசிலியாவை நமக்கும் பிடித்து விடுகின்றது....
இந்த  சொல்லும் மாரல்.... நீங்கள் நான் என யாரும் யோக்கியம் அல்ல... வாய்ப்பு கிடைத்தால் ????? என்பதான கருத்தை சொல்லி இருக்கின்றது...


இந்த படம் லாஸ் ஏன்ஜல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த படம் திரையிடபட்டது...


படத்தின் டிரைலர்.
படக்குழுவினர் விபரம்...
Address      Rodrigo Ortúzar Lynch Rodrigo Ortuzar Lynch
Producción Production     Verónica Uman Verónica Uman
Guión Script     Walter Slavich Slavich Walter
Marcelo Slavich Marcelo Slavich
Música Music     Quique González Quique González
Fotografía Photography     Juan Carlos Bustamante Juan Carlos Bustamante
Montaje Assembly     Marcela Saenz Marcela Saenz
Reparto Distribution     María José Prieto María José Prieto
Lucía Jiménez Lucía Jiménez
Gabriela Aguilera Gabriela Aguilera
Benjamín Vicuña Benjamín Vicuña
Daniel Alcaíno Daniel Alcaíno


 Country (s)      Chile Chile
Año Year     2004 2004
Género Gender     Comedia dramática Drama
Duración Duration     107 minutos 107 minutes
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

10 comments:

 1. அண்ணே படம் பார்த்திருக்கிறேன்.செம த்ரில்லிங்கான படம்.இதே போல ஓட்டல் அறை வெடிக்கும் காட்சி முனிக் என்னும் ஸ்பீல்பெர்க் படத்திலும் உண்டு.
  த ஸ்கொயர் (the Square)என்னும் ஆஸ்திரேலிய கள்ளத்தொடர்பு படமும் பாருங்க,இதை ஆஸ்திரேலிய ஃபார்கோ என்று சொல்லுகிறார்கள்.ஒரு கள்ளதொடர்பு தவறை மறைக்க இன்னொரு தவறு செய்வதை மிக அழகாக காட்டிய படம்.

  ReplyDelete
 2. பார்க்கவேண்டிய படமோ???

  ReplyDelete
 3. விமர்சனம் எப்போதும் போல் நன்று அண்ணே,
  >>>மாரல்.... நீங்கள் நான் என யாரும் யோக்கியம் அல்ல... வாய்ப்பு கிடைத்தால் ????? என்பதான கருத்தை சொல்லி இருக்கின்றது.....>>>
  யோசிக்க வேண்டிய தத்துவம்

  ReplyDelete
 4. Very good selection for movie review..
  I m collecting dvds of movies you reviewed.

  ReplyDelete
 5. அருமையா எழுதியிருக்கீங்க ஜாக்கிண்ணே..

  இங்க டி.வி.டி கிடைக்குதான்னு பார்க்கிறேன்.

  நன்றிண்ணா.

  ReplyDelete
 6. இந்த விமர்சனம் படம் பார்க்க தூண்டினாலும், நிறைய விசயங்களை யோசிக்க வைக்கிறது.

  ReplyDelete
 7. hi anna
  ur reviews r making us to watch those films,i like ur writing style it is simply superbbbb.if u hv time plz watch Naked Prey which is produced n late 60s

  ReplyDelete
 8. விமர்சனம் cool. "நீங்கள் நான் என யாரும் யோக்கியம் அல்ல... வாய்ப்பு கிடைத்தால் ?????" நம்ம கௌதம் கண்ணில் தட்டுபட்டால்...இன்னுமொரு முத்துச்சரம் பச்சைகிளியாக பறக்குமா தமிழில்... ?!

  ReplyDelete
 9. விமர்சனம் cool. "நீங்கள் நான் என யாரும் யோக்கியம் அல்ல... வாய்ப்பு கிடைத்தால் ?????" நம்ம கௌதம் கண்ணில் தட்டுபட்டால்...இன்னுமொரு முத்துச்சரம் பச்சைகிளியாக பறக்குமா தமிழில்... ?!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner