ஆல்பம்...
முந்தா நாள் இரவு சென்னையில் இரவு போக்குவரத்து நெரிசல் அது கிளியர் ஆக 5 மணி நேரம் ஆனது மக்கள் திண்டாடி போனார்கள்....காரணம் பணி முடிந்த சின்னமலையில் சாப்பிட சென்ற மாநகர போக்குவரத்து டிரைவர்கள், சாப்பிடும் ஹோட்டலில்வாய்தகறாராக ஆரம்பிக்க...( அது டாஸ்மார்க்கில் நடந்து சண்டை என்று ஒரு தரப்பு சொல்கின்றது...)
சில ரவுடிகள், டிரைவர்களை நன்றாக கும்பி விட்டு சென்று விட்டார்கள்...டிரைவர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் ரவுடிகள் போல் செயல் பட்டார்களா? என்பது தெரியவில்லை... அடித்து விட்டு ஒடியவர்களை ரவுடி என்று சொல்லிவிட்டார்கள்...உடனே உதைவாங்கி ரோட்டுக்கு வந்து அந்த பக்கம் வந்த பேருந்துகளை மறிக்க... அவர்களும் உடனே சாலையில் நிறுத்தி ஒற்றுமை உணர்வை வெளிபடுத்தி இருக்கின்றார்கள்..... இவன்க தனியா தாலி அறுத்துக்குனா ஏன்டா ரோட்டுக்கு வறிங்க...ஒரு பேருந்தில் ஒரு டிரைவர் பணி செய்யும் போது அதுக்கு தொல்லை ஏற்பட்டு அதற்கு இந்த டிராபிக் ஏற்படுத்தினால் அது கூட தவறுதான்... இருப்பினும் அதில் சின்ன நியாயம் இருக்கின்றது...ஆனால் பணி முடிந்து சாப்பிட போகும் போது ஏற்பட்ட பிரச்சனைக்கு ஏன் இந்த அலப்பறை...இது இப்படியே நீடித்தால்... அரசு போக்குவரத்து ஊழியர் என்ற இருமாப்பில் காலையில் கக்கா போகும் போது முக்கி முக்கி பார்த்து வரவில்லை என்றால் உடனே ரோட்டில் இறங்கி.. எனக்கு பிரியா கக்கா போகலை... அதனால எல்லா பஸ்சையும் நிறுத்துங்க என்று சொல்லி ஆர்பட்டம் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை.... ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்காமல்... நாளைக்கு நமக்கு கக்கா வரலைன்னாலும் இது போல் செய்ய ஒரு ஆதரவு வேனும் என்று எல்லா பேருந்து ஓட்டுனரும் சாலை மறியலில் ஈடுபடலாம்....அதனால் சென்னையில் ஒரு இடத்துக்கு போக 3 மணி நேரத்துக்கு முன்னே கிளம்பி போய்விடுவோம் நாம்....
=========
மிக்சர்..
சென்னை சத்யம் தியேட்டடரில் சீட் செலக்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பத்து ரூபாய் ஒவ்வோரு டிக்கெட்டுக்கும் எடுப்பதை என்னவென்று சொல்வது...================
ஒரு நண்பர் ....
நான் மகான் அல்ல படத்துக்கு எழுதிய விமர்சனத்துக்கு.. மிக பெரிய கடிதம் எழுதி இருந்தார்...அது எல்லாம் ஒரு படமா? அதுல என்ன கதை இருந்திச்சி? என்று நீட்டி முழங்கி எழுதி இருந்தார்...அவருக்கு பதில் சொல்லி எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை....கதை என்பது ஒரு ஊரில் என்ற ஆரம்பிக்க வேண்டும் என்று இல்லை... நீங்கள் டீ குடித்து விட்டு சின்ன கல் தடுக்கி தரையில் விழுந்து முக்கு உடைந்து... அந்த பக்கம் வரும் உங்கள் எதிரி உங்களை மருத்துவமைனையில் சேர்த்தால் அது கூட கதைதான்..ஆனந்தவிகடன் 44 மார்க் கதையில்லா நான் மகான் அல்ல படத்துக்கு போட்டு இருக்கினறது.... என்ன செய்ய??
==============
இரண்டு சந்திப்புகள்.. நெடுநாளாய் வாசிக்கும் ஒரு திரைபட இணைஇயக்குனர் என்னை சந்திக்க விருபம் தெரிவித்தார்... திருவெற்றியூரில் வீடு என்பதால் மெரினா வந்தால் போன் செய்கின்றேன் என்று சொன்னேன்.. அதே போல் போன் செய்தேன்... அவரை 5 அரைக்கு வர சொன்னேன்....இன்று திருமணம் செய்து கொள்ளும் எனது மாணவி.. அவளது திருமணப்பத்திரிக்கையை என்னிடம் நேரில் கொடுப்பேன் என்று அடம்பிடித்து பீச்சில் வந்து கொடுத்தாள்... வாசக நண்பர் ரமேஷ்... 6 மணிக்கு வந்தார் ...ஒரு இரண்டு மணிநேரம் காக்க வைத்து விட்டேன்.. கல்யாண பெண் வந்து பத்திரிக்கை வாங்கி அனுப்பிவிட ரெடியாக இருந்தேன்.. அந்த பெண் வரவே லேட்டாகிவிட்டது.....அப்புறம் நானும் ரமேஷும் ஒரு மணிநேரத்துக்கு மேல் சினிமா பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்....நல்ல சந்திப்பு அது...
==============
நேற்று எக்ஸ்பிரஸ் அவன்யூ மனைவியுடன் சென்றேன்...நீங்க ஜாக்கிதானே என்று அமெரிக்க வங்கியில் பணி புரியும் சரவணன் ..கரூர்காரர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்..தம்பதி சகிதமாய் வந்து இருந்தார்கள்.. அவர் மனைவியிடம் என்னை அறிமுகபடுத்திவிட்டு புது வீடு பற்றி விசாரித்தார்... இது போலான சந்திப்புகள் எதிர்பாராமல் நிகழ்வதால் எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை.... ஒரு காபி குடிக்க கூட அவரை அழைக்க மற்ந்துவிட்டேன்....அவரின் பிள்ளை செம கியூட்டாக இருந்தது.. என் மனைவி அழைத்தும் அந்த குழந்தை அழுதது... ஆனால் நன்றாக டாட்டா மட்டும் காட்டியது... எனக்கும் என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்... இது போல சந்திப்புகள் நிகழ்வதால்.. கூடுதலாய் கம்யூட்டர் முன் உட்கார்ந்தாலும் மனைவி கத்துவதில்லை... அன்பின் செல்வராஜ் உங்கள் கைபேசி எண்ணை அவசரத்தில் வாங்கவில்லை... என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது மெயில் செய்யவும்...
===============
சிறந்த நிழற்படம்...
eggs on a curlBy: kayes c |
Tags: butterfly insect macro
Equipment: Nikon D90, nikkor AF-S VR 105mm f/2.8 G IF-ED
===================
நான் எடுத்ததில் பிடித்தது....
புகைபடம்... ஜாக்கிசேகர்..
சோனி ஆட்டோ போகஸ் கேமரா... செல்ப்ஷாட்..இடம் பார்க் ஓட்டல் ஏழாம் மாடி பாத்ரும் கண்ணாடி...
================
சலனபடம்....
இந்த பிரின்ஸ் ஜுவல்லரி விளம்பரம்.. எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... மிக முக்கியமாக அந்த பாடல்... அதில் வரும் பெண்குரல்.. பிறகு வரும் ஆண்குரல் இரண்டும் மிக ரசனையானது....அதுவும் கணாகண்டேனே என் தோழி என் நெஞ்சிலே... =====================
இந்தவார பதிவர்.....
பிறமொழிபடங்கள் தமிழில்...ஜெய்...
சினிமாவின் ரசனைக்குஉரிய காதலர்...நான் லீனியார், லீனியர் திரைக்கதைவடிவங்களை மிக அழகாக புரியும் படி தமிழில் விளக்கமாக எழுதியவர் மிக முக்கியமாக கிளாசிக் படங்களாக இருந்தாலும் ரசித்து எழுதுபவர்...இயக்குனர் பிரம்மாக்கள்...கிரிஸ்டோபர் நோலன் மற்றும் கியூப்ரிக் பற்றி மிக சுவாரஸ்யமாக எழுதியவர்...எந்த நேரத்தில் பிளாக் பற்றி எனக்கு தகவல் கேட்டாலும் பொறுமையாக சொல்லிதருபவர்.....
அவரது வலைதளத்தை வாசிக்க இங்க கிளிக்கவும்....
===================
இந்தவார கடிதம்...
தனசு,
வணக்கம். நலமா? இப்போ சில நாட்களாக blog தொடர்ந்து பார்க்கிறேன். இண்ட்லியில் vote செய்து பிரபலப் படுத்தப்பட்ட செய்தியும் அனுப்பி இருந்தேன், பார்த்து இருப்பாய். நல்ல flow இருக்கிறது, நன்றாகவே ரசிக்கிறே ன். சுந்தரவடிவேலு எனும் நண்பர் சொல்லி இருந்தது போல் உன் திறமையை இன்னும் effective-ஆக பயன்படுத்திக் கொ ள்ளவேண்டும். M.A. results இப்போது தான் வந்ததா? வாழ்த்துக்கள். Offline msgs ம் சில அனுப்பி இருந்தேன், பதிலே இல்லை? ரொம்ப busy-யா? வேறு நண்பர்கள் பற்றி செய்தி எதுவும் உண்டா? தெரிந்த நண்பர்களிடம் விசாரிப்பைத் தெரியப்படுத்தவும். அடிக்கடி தொடர்பிலிரு.
சமீபத்தில் சென்னையில் நடந்த வேதாத்திரி மஹரிஷியின் நூற்றாண்டு விழா பற்றிய video ஏதும் sites-ல் பார்த்தால் தெரிவிக்கவும். Full function coverage கிடைத்தால் கூட நன்றாக இருக்கும். ஏதும் வாய்ப்பு உள்ளதா?
என்றும் அன்புடன்,
ஆனந்தராஜா...
இந்த கடிதம் எழுதிய நண்பர்தான் என்னை முதன் முதலில் ஜாக்கி என்று அன்போடு அழைத்தவர்...பேனா நட்பு மூலம் பழக்கம்.... அரபு தேசத்தில் இருக்கின்றார்......
===========
பிலாசபி பாண்டி....
பிட்சாவை நாம fast ஃபுட்டுன்னு சொல்லும் போது...பழைய சோற்றை நாம் ஏன்...??? past ஃபுட்டுன்னு சொல்லக்கூடாது...
==========
உலகத்துல 95சதவீதம் பேர்.. காதலிக்கறாங்க....அதுல 5 சதவீதம் பேர் அறிவோட இருக்காங்க... அந்த 5 சதவீதத்துல இந்த பிலசாபி பாண்டியும் ஒருத்தன்...
====
நான்வெஜ் 18+...
ஜோக்..1ஒய்போட ஹோட்டலில் ஒருவன் உட்கார்ந்து இருந்தான்... அவன் பக்கத்துல வந்த அந்த லிப்ஸ்டிக் உதட்டு பெண்...ங்கொய்யால... காசு கம்மியா கொடுத்தா இப்படி பட்ட அயிட்டம்தான்டா கிடைக்கும்....
=========
ஜோக்... 2
A POSTMAN WAS RETIRING AFTER 35 YEARS OF SERVICE.
THE TOWN PEOPLE PRESENTED HIM DIFFERENT GIFTS.
IN ONE HOUSE A YOUNG LADY TOOK HIM TO BEDROOM GAVE HIM A GOOD SEX, A LAVISH LUNCH AND ONE DOLLAR.
POSTMAN ASKED AMAZINGLY: WHY ONE DOLLAR?
ACTUALLY I ASKED MY HUSBAND WHAT TO PRESENT YOU HE SAID, “FUCK HIM! JUST GIVE HIM ONE DOLLAR.” BUT THE LUNCH WAS MY IDEA.
ALWAYS GIVE DETAILED INSTRUCTIONS TO LADIES!!!!!!
===========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
Good jackie,
ReplyDeletekeep it up.nan than first ah?
gopi
Interesting Post as usual Jackie..
ReplyDeleteVery nice
ReplyDeleteவழக்கம் போல கலக்கல்!!! அந்த சத்யம் தியேட்டர் சீட் மேட்டர், தேவை பட்டா மேட்டருக்கு 10 ரூபா ஒரு மேட்டரே இல்லை...
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஎழுத்து நடை மிளிர்கிறது.
கோபம்,விசாரிப்பு, நட்பு, தொழில்பக்தி, நகைச்சுவை,சலனம் என சாண்ட்வெஜ், நான்வெஜ் மிளிர்கிறது.
ஜாக்கி அண்ணே நம்ம மோகன்குமார் Interesting Post சொல்றாரே, அது உங்க போஸ்ட பத்தியா இல்ல அந்த போஸ்ட்மன் ஜோக்க பத்தியா?!
ReplyDelete:)
நன்றி ஜாக்கி அண்ணே... :)
ReplyDeleteGovernment should take some action against the mtc drivers
ReplyDeleteபதிவு எழுதுவது போலல்லாமல், ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்வதை போல் எழுதுவது இன்னும் நெருக்கத்தை உருவாக்குகிறது.நன்றி ஜாக்கி!!!
ReplyDeleteஅண்ணா, சாண்ட்வேஜ் நல்லாவே இருந்திச்சு ஆனா நான்வேஜுக்கு கொஞ்சம் காரம் சேர்த்து இருக்கலாம்.நான் மகன் அல்ல என்னக்கு பிடிச்சு இருந்திச்சு பையா விடவும் நல்லாய் இருந்திச்சுmaking ரெம்பவே நல்லாய் இருந்திச்சு
ReplyDeleteஉண்மை......... இந்த டிரைவர்களின் கொடுமை தாங்கமுடியலைடா சாமி.. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே
ReplyDeleteஆல்பம், விளாசல்.
ReplyDeleteஜோக் 2, ஹா......ஹா...
18+ joke 2 Kalakkal
ReplyDeleteஜாக்கி ஜெய் திருச்சின்னு சொன்னா மாதிரி நியாபகம்.. கேட்டுக்கோங்க.. மிச்ச படி எல்லா மேட்டரும் நல்லா இருக்குங்க :)
ReplyDeletenice.......
ReplyDelete//ஜாக்கி அண்ணே நம்ம மோகன்குமார் Interesting Post சொல்றாரே, அது உங்க போஸ்ட பத்தியா இல்ல அந்த போஸ்ட்மன் ஜோக்க பத்தியா?!//
ReplyDeleteராஜகோபால் அண்ணோ...மோகன்குமார் கமண்ட் போட்டு அப்பவே போயட்டாரு...நீங்க இன்னும் போஸ்ட்மேனை விடாம இருக்கியளே...ஏன்??:)
ஜாக்கி ஜி நீங்க ஒரு தமிழ்நாடு ஐகானா மாறிவிட்டு வர்றீங்க....:))
வழக்கம் போல கலக்கல்!
ReplyDeleteபஸ் ஸ்ட்ரைக்கா?
ReplyDeleteசென்னையில் வாழ இதையும் பழகிக்கணுமோ நல்லவேளை நான் சென்னைல இல்ல
:(
பதிவு அருமை.
must read
ReplyDeletehttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473
Hello Mr. Jackie,
ReplyDeleteHow r u? hope u r doing good tre....
I'm back from site... nd again strated u r rocking writings....
Chennaila mazhai vera... Strike veraya??? pavam makkal.....
Marina beach writing romba pidichi iruthathu....
Keep feeding more....
Regards,
Vijay,
Muscat
ராஜகோபால் போஸ்ட்மேன் ஜோக்கை பத்தி கூட சொல்லி இருக்கலாம்...
ReplyDeleteநான்வெஜ் காரம் கம்மி..இளையவன் எல்லா நாளும் எல்லாம் சரியா இருந்தா போர் அடிச்சிடும்..ரெண்டாவது பலதை தமிழ் படுத்த பயங்கர கஷ்டமா இருக்கு... என்ன செய்ய..
நன்றி நாஞ்சில் ஆனாலும் தமிழ்நாடு ஐகான் ரொம்ப ஓவரோ ஓவர்..
நன்றி காவேரிகணேஷ்...
மற்றும் பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteகலக்கல் சா. அ. நா.வெ.
ReplyDeleteகீப் இட் அப்
சிறப்பு ஜாக்கி...
ReplyDeleteஅன்பு நித்யன்
Remba nalla irrukunga sir
ReplyDelete