(TOOL BOX MURDERS-2004) 18+ கபாலத்தில் சிக்கிய கோடாலி.....

தமிழகத்தில் வீடியோ டெக் அறிமுகமாகி  இருந்த நேரம்... தமிழக மக்களும் கடவுள் பக்தியில், கோவில் திருவிழாக்களில் சாக்கியத்துக்கு  ஒரு திருவிளையாடலோ ஒரு கந்தன் கருனையோ, சரஸ்வதி சபதமோ போட்டு விட்டு, மற்ற மூன்று படங்கள் சர்வ நிச்சயமாய்... வசந்த மாளிகை,குடியிருந்த கோவில், அன்பேவா போன்ற திரைப்படங்களாக இருக்கும்......



அப்போது நான் கடலூரில் ஒரு வீடியோ லைப்ரேரியில் வேலை செய்து கொண்டு இருந்த காலம்.. ஊர் ஊராக கண் போய் வீடியோ போடுவேன்.... அதே வீடியோ டெக்கை சில வீடுகளில் ஒருநாள் இரவு வாடகைக்கு எடுப்பார்கள்... அப்போது திகில் படமாய் வெகு காலத்துக்கு செலக்ட் செய்த படங்கள் எது தெரியுமா? ஈவில் டெட் தான்... அப்புறம் மறக்காமல் வசந்த மாளிகை....


தமிழகத்தில் பெய்படம் என்றால் அது ஈவில்டெட்தான்... அந்த படத்தில் ஒரு  காட்சி இருக்கும்  கதாநாயகன் கையில் பேய் பிடித்து கொண்டு விடும்... அந்த கையை வெட்டி  பக்கத்தில் வைத்து விட்டு வெட்டிய கைக்கு பிளாஸ்டர் போட்டுக்கொண்டு இருப்பான்... அப்போது அந்த கை மட்டும் தனியாக நகர்ந்து போய்.... சுவற்றில் ஏறிக்கொண்டு இருக்கும்... அதனை கதாநாயகன் பக்கத்தில் இருக்கும் துப்பாக்கியால் சுட...

சுவற்றில் கழனிக்கு தண்ணி பாய்ச்ச மோட்டர் போட்டால் எப்படி தண்ணீர் பிய்ச்சீ அடிக்குமோ? அது போல சுவற்றில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடிக்கும்..... முதுகு தண்டை சில்லலிட வைக்கும் காட்சி இது... அப்போதைக்கு இந்த படத்தை சிலாகிக்காத தமிழ்ர்கள் குறைவு என்பேன்.... ஆனால் அஇந்த டுல்பாக்ஸ் மர்டர் படத்தில் முதல் கொலை....  ஒரு பெண்ணை கொலை செய்கின்றான்...ஒரு பக்கம் ஆணி அடிக்கவும் மறு பக்கம் அதை புடுங்கவும் ஒரு சுத்தி சமாச்சாரத்தை பார்த்து இருப்பீர்களே அதால அந்த பெண்ணோட கழுத்தில் அடிக்க ரத்தம் தேரிக்கின்றது.... அந்த பெண்ணோட தலையில் அடிக்க ஒரு கட்டத்தில் மண்டையேட்டில் கோடாலி சிக்கி கொள்வது அதன் பின் அதனை பிடுங்க மூளை சிதறுவது.....

படத்துல  நிர்வாண சீன் எல்லாம் இல்லை.. ஆனால் இந்த அதீத வன்முறையை 18 வயதுக்கு குறைவானவர்கள் இந்த படத்தை   பார்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்...

போங்க சார் சின்ன பசங்க விளையாடும் வீடியோ கேமில் சூடும் ரத்தம் தெரிப்பது, மண்டை பிளப்பது என்பத போல் மிக தத்ரூபமாக விளையாடும் பிளே ஸ்டேஷன் வீடியோ கேம் வந்துடுச்சின்னு சொல்லறிங்களா?... இது தலையை கட் பண்ணி பாதியா தரையில போடற படம்... அதனால் சொல்கின்றேன்...


(TOOL BOX MURDERS-2004) படத்தின் கதை என்ன??? 


நெல்(Angela Bettis) ன் கணவன் ஸ்டீவன்(Brent Roam) இருவரும் ஒரு காலத்தில் பிரபலமான இருந்த  பழைய கட்டிடத்தில் குடி போகின்றார்கள்...ஸ்டீவ் ஒரு மருத்துவமணையில் வேலை பார்க்கின்றான்... அந்த பழைய கட்டிடத்தில் எப்போதும்  ஏதாவது மறாமத்து பணிகள் நடந்த வண்ணம் இருக்கும...
நெல்  பக்கத்து ரூமில் ஏதோ ஏதோ சத்தம் எல்லாம் கேட்க... ஒரு கட்டத்தில் அந்த சத்தத்தினை தேடி போன அது பல ரகசிய இடங்களுக்கு போகின்றது.. அது ஒரு சைக்கோவின் அறை.... அவனை தேடி கணவன் ஸ்டீவ் இன்னும் சில அப்பார்ட்மேன்ட் வாசிகள் அதில்  வர  அந்த சைக்கோவிடம் இருந்து எப்படி தப்பினார்கள் என்பது மீதி கதை....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


Tobe Hooper இந்த இய்க்குனர் எடுத்த படங்கள் எல்லாமே டெரர்  வகைதான்... அதில் அப்படி என்ன வசீகரம் என்று தெரியவில்லை...

 இதே பெயிரில் 1978ல்  இந்தம படம் எடுக்கபட அந்த படத்தை அப்படியே   இந்த கால கட்டத்துக்கு  ஏற்றது போல் ரீமேக் செய்து இருக்கின்றார் இயக்குனர்....


நினைத்து கூட பார்க்காத விஷயத்தை செல்லுலாய்டில் பதிய வைப்பதுதான் இயக்குனரின் வெற்றியாக கருதபடுகின்றது என்பது என் எண்ணம்


இவரின் முந்தைய படங்கள் த டெக்சஸ் செயின்சாவ் மஸ்கர், ஈடன் அலைவ், மார்ச்சுவரி, குரோக்கோடைல் போன்ற படங்கள் அவருக்க புகழ் சேர்த்த படங்கள்..


தலையை பாதியாக ஆக்கும் காட்சி... வன்முறையின் உச்சம்...


படத்தின் டிரைலர்....




படக்குழுவினர் விபரம்..
Directed by     Tobe Hooper
Produced by     Ryan Carroll
Frank Strausser
Ronnie Truss
Mark Wooding
Starring     Angela Bettis
Brent Roam
Marco Rodríguez
Rance Howard
Juliet Landau
Music by     Joseph Conlan
Cinematography     Steve Yedlin
Editing by     Andrew Cohen
Distributed by     Lions Gate Entertainment
Running time     95 minutes
Country     United States
Language     English



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

13 comments:

  1. உங்களின் விமர்சனங்களை சமீப காலமாக தவறாது படிக்கிறேன். படித்த பின் டவுன்லோட் செய்து பார்க்கவும் செய்கிறேன்.

    ReplyDelete
  2. எவில் டெட் அருமையான திகில் படம். மெதுவாக காட்சிகள் நகர்ந்தவாறு திகிலூட்ட முயற்ச்சிக்கும் படங்களுக்கு மத்தியில் ச்வாரசியம்மாக நகரும்.

    ReplyDelete
  3. அண்ணே இந்த படம் பார்த்துவிட்டேன்,
    இதே போலவே பயங்கர காட்சிகள் கொண்ட மைடியர் வாலண்டை3டி படமும் பாருங்கள்,இது கனடா நாட்டு படம்.கோடாலியை வைத்து முக தாடையை வெட்டி நம்மை நோக்கி வீசுவார்கள்,அப்போது நாம் அருவருத்து ஒதுங்குவோம்.3டில் பார்த்தால் தூள்.நல்ல விமர்சனம்

    ReplyDelete
  4. அண்ணே ஹாலிவுட்டில் நிறைய பழையபடங்களின் ரீமேக்கை தான் தொடர்ந்து புதிய தலைமுறைக்கேற்ப எடுத்து வருகின்றனர்.
    டெக்ஸாஸ் செயின்சா மசாக்ரே
    த லாஸ்ட் ஹவ்ஸ் ஆன் த லெஃப்ட் போன்றவை.
    இந்த படம் பார்க்காவிட்டால் பாருங்க.இதிலும் சைக்கோவின் கையில் சிக்கிய ஒரு குடும்பம் தான் திரி

    ReplyDelete
  5. பட விமர்சனமே பயத்தை ஏற்படுத்துவதாய் இருக்கு.அண்ணே

    ReplyDelete
  6. வயித்த கலக்குதுங்க.

    ஈவில் டெட் பார்த்துவிட்டு ஜுரம் வந்துவிட்டது சின்ன வயசில். இப்பொழுது பார்த்தால் சிரிப்பாக வருகிறது.

    மனதில் அடி ஆழத்தில், இந்த மாதிரி விஷயங்களை ஒரு ஆர்வத்திற்காக பார்க்க விழைவது மனிதனுக்கே உண்டான உணர்ச்சி. அதற்கு தீனிதான் இந்தப் படங்கள்.

    ReplyDelete
  7. ஜாக்கி,

    விமர்சனம் வழமை போல் நல்லாயிருக்கு.

    ஆரம்பத்தில் எனக்கும் இப்படி படங்கள் பார்க்க ஆர்வமிருந்தது. என்னவோ தெரியல இப்போ சில வருஷமாவே Horror Movie அப்படீன்னாலே அந்த திசைக்கு திரும்புறது இல்லை.

    உங்க விமர்சனங்களை வாசித்த பின்புதான் சில நல்ல படங்களை தவறவிட்டது தெரிகிறது!

    ReplyDelete
  8. I saw EVIL DEAD two times
    First time by closing EYES
    second time by closing EARS
    .
    .
    .
    poooonga Mr. J.... Next oru Sexy...Romantic film review la meet pannuvum

    AZHGA IRRUKU - REVIEW
    BAYAMA IRRUKU - FILM

    I am escape....!

    THANKS FOR ENTERTAINING US!

    ReplyDelete
  9. ஜாக்கி போஸ்டர் பாக்கவே பதறுது.. இதுல எங்க படத்த பாக்க...

    ReplyDelete
  10. Jackie

    Thanks for the review....

    Will see this movie....

    ReplyDelete
  11. நான் முதன் முதலில் பார்த்த ஆங்கில படம் 'ஈவில் டெட்' அது தந்த பயத்தில் ஆங்கில படம் என்றாலே ஒரு கிலி. புருஸ் லீ, ஜாக்கி,stolan,போன்றவர்கள்தான் அந்த பயத்தை போக்கினார்கள்.சிறந்த விமர்சனம்.நன்றி ஜாக்கி!

    ReplyDelete
  12. Dear Jackie Sekar, I like all your English movies reviews. please write reviews for
    Catch Me If you can,
    Final Destination
    SAW

    Thanks,
    John

    ReplyDelete
  13. Jackie sir,
    hot ammani per sonnaa theda vasathiyaa irukkum.. (i.e, Google search).

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner