மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•2010)


ஆல்பம்...

ஊர் பக்கம்  ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள்... அவுங்க எல்லாம் நெய்யில பொறிச்சவங்க நாம எல்லாம் பீயில பொறிச்சவங்க என்று ஆளும் வர்கத்தை நோக்கி இயலாமையில் மக்கள்  வெதும்ப சொல்லும் ஊர் பக்க பழமொழி இது....மீண்டும் அது இப்போது நிரூபனம் ஆகி இருக்கின்றது...



மத்தியமந்திரி பிரனாப்முகர்ஜி ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது.... உங்களுக்கு வங்கி கடன் வேண்டுமா என்று போன் வர... அவரும் நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன் என்று சொல்லி போனை  வைத்து விட்டார்....

நாம் எல்லாம் தினம் தினம் இந்த ரோதனையை அனுபவித்து இருக்கின்றோம்.... இன்னும் ஒரு வாரத்தில் இதற்கு தடை வரும் என மத்திய அமைச்சர் ராசா அறிவித்து இருக்கின்றார்.... மீண்டும் அந்த பழ மொழியை படித்து பார்க்கவும்..
==================
 காஷ்மீரில் வானம் கிழிந்து மழை கொட்டியதால்120 பேர் பலி  ஆகி இருக்கின்றார்கள்...500 பேருக்கு மேல் கானோம்... அப்படி என்றால் சேத மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.... தொலைகாட்சியில் காட்சிகள் காட்டிய போது எப்படியும் ஆயிரத்துக்கு மேல் இறந்து  போய் இருக்க வாய்ப்பு இருக்கின்றது...
=============
சென்னை மெட்ரோ ரயிலுக்கான் பில்லர்கள் உரு பெற தொடங்கிவிட்டன... இதன் காரணமாக தென்மாவட்டத்து பேருந்துகள் .. பெருங்களத்தூரில் இருந்து தாம்பரத்தை டச் செய்யாமல் மதுரவயல் பைபாசில் திருப்பி விட்டு இருக்கின்றார்கள்...

வடபழனி அசோக் பில்லர் பக்கம் சிவப்பு மற்றும் நீல கலர் பேருந்துகளை இப்பபோது பார்க்க முடிவதில்லை...கோயம்பேடு மார்க்கெட் பக்கம் ஆம்னி  பெங்களுர் பேருந்துகள் வெளி செல்லும் வழியில் நிறைய மரங்கள், புதர் செடிகள் அதிகம் இருந்தன... இப்போது இல்லை ....எல்லாம் ஷேவ் செய்யபட்டு மழ மழ  என்று இருக்கின்றன... காரணம் கேட்டேன்... மெட்ரோ ரயில் ஷெட் வரப்போகின்றதாம்....
===================
அதிகாரம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்று நினைப்பவர்களை நீதி தேடிவந்து தண்டித்து இருக்கின்றது... கஞ்சா வைத்து இருந்ததாக பொய்கேஸ்போட்டு உள்ளே தள்ளிய, போலிசார்  மூவரை நேற்று கைது செய்து இருக்கின்றார்கள்...ஆனால் நிறைய விஷயங்களில் நீதிக்கு  செருப்படி கிடைத்து இருக்கின்றது.....சமீபத்திய உதாரணம் போபால் வழக்கு.....
=========

மிக்சர்......

பனகல் பார்க்கில் இப்போது பார்க்கின்றேன்.. பிளாட்பாரத்தில் பெண்கள் வடநாட்டு வாலிப பசங்களிடம் கையேந்தியபடி, பாத்ரூமில் பெண்கள் உட்கார்ந்து குளிக்கு சின்ன ஸ்டூல் இருக்குமே அது போலான முக்காலி சைஸ் சிவப்பு பிளாஸ்டிக்சேர்களில்  கையேந்தியபடி பனகல்பார்க் பிளாட்பாரத்தை சுற்றியும் உட்கார்ந்து இருக்கின்றார்கள்... 

காரணம் ரொம்ப சிம்பிள்....மெகந்தி வைத்துக்கொள்ள கையேந்துகின்றார்கள்...எனக்கு ஒரு டவுட்.. எல்லோரும் காரில் வந்து வைத்துக்கொள்ள போவதில்லை... எப்படியும் பேருந்து மற்றும் புறநகர் ரயில் பயணம்தான் எப்படி இவர்களால் வைத்த மெகந்தி கலையாமல் பயணிக்க முடியும்.... அதே போல் முக்கியமான டவுட் ஒன்று மனதில் தோன்றியது.... திடிர் என்று....... வேண்டாம் உதைப்பீர்கள்.....

============================
போருர் சிக்னலில்  அந்த அழகான கவிதையான அந்த காட்சியை பார்த்தேன்.. 

ஒருஆட்டோ டிரைவர்....தன் மனைவியையும் இரண்டு குந்தைகளை யும் அவர் அட்டோவில் இறக்கிவிட்டு விட்டு, தன் பாக்கெட்டில் இருந்து காசு  எடுத்து மனைவியிடம் கொடுத்து போரூர் மார்கெட் வாசலில் இறக்கி விடுகின்றார்..  

ஆண் குழந்தைக்கு எட்டு வயது இருக்கும் அது அம்மாவின் கை பிடித்து நடக்கின்றது.... பெண்குழந்தை  அது கைக்குழந்தை இரண்டு வயது இருக்கும்... ஆட்டோ டிரைவர் ஆட்டோ எடுக்கின்றார்... அம்மாவின்  இடுப்பில் இருக்கும் குந்தை அப்பாவைபார்த்து ஊரில் பொங்கல் வைக்கும் போது குலவையிடுவார்களே.... அது போல தன் பிஞ்சு விரல்களால் அதன் வாயில் அடித்துக்கொண்டது.... 

எனக்கு முதலில் புரியவில்லை... சிக்னல் வேர்வை கசகசப்பில் என் தலையில்  இருக்கும் நாலு முடியை பிய்த்துக்கொள்கின்றேன்....முதலில்   சாலை பார்த்து ஆட்டோவை நகர்த்திய ஆட்டோ டிரைவர் தன் சின்ன பிள்ளையை பார்த்து பிளையிங்கிஸ் கொடுத்த போதுதான்... அந்த குழந்தை அப்பாவுக்கு பிளையிங்கிஸ் கொடுத்தது என்று.....ஆனால் அந்த பிஞ்சு கைவிரல் குலவை கவிதை என்பேன்...
===================
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....

பிரான்சில் வசிக்கும் ஈழ இந்த தளத்தின் வாசக நண்பர்  லிங்கம் அவர்கள்... சொந்தமாக,தனது கடுமையான உழைப்பால் பிரான்சில் வீடு கட்டி இருக்கின்றார்....கிரஹப்பிரவேசத்துக்கு
அழைப்பு விடுத்து இருக்கின்றார்....மடிப்பாக்கம் மந்தவெளி என்றால் போய் கலந்து கொண்டுவிட்டு வரலாம்.... இருப்பினும் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் முன்னதாக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்......லிங்கள் குடும்பத்தினர்  வரும் 27ம் தேதி புதுமனை புகுவிழா செய்ய எல்லாம் வல்ல பரம் பொருள் உதவி செய்யட்டும்...




இந்த வார சிறந்த நிழற்படம்......

By: Andrew Campbell
Equipment: Nikon D90, Nikon Micro-Nikkor 105mm f/2.8

==========================
இந்த வார சலன படம் ...






இந்தவார கடிதம்......

Hi Jackisekar,
This is amarnath, workig in UAE
I am reading ur blog for the past oe month
It is great to see ur blog
Most of ur writings agree with my thinkings
Ur  film review is perfect ad neutral
I was about to write this mail long before
i donno to write in tamil , but the next time i will do
Keep up ur good work
It will be great, if u write also about international politics
Thank u
Please reply
Expecting more from u
Anbudan,
Amarath Santh,
UAE


கடிதத்துக்கு....நன்றி அமர்.... பக்கா லோக்கலில் எதாவது கொஞ்சம் உணர்ச்சிவசபட்டு எழுதினாலே பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. இதில் உலக அரசியல் வேரா???? இன்னும் சில நாட்களில் நிறைய ஆணி புடுங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்...  எனக்கு தோன்றுவதை எப்போதும் எழுதுவேன்...உலக  அரசியல் அளவுக்கு நமக்கு புத்தி இல்லை நண்பா...
====================
பிலாசபி பாண்டி..


வெற்றி உன்னை உலகத்துக்கு அறிமுகபடுத்தும்...
தோல்வி உனக்கு உலகத்தை புரியவைக்கும்....
==========
சொல்யூஷனுக்கு சிறந்த வரி.....
என்னால உங்க  கார் ஹாரனை இப்ப சரி பண்ணமுடியாது... ஆனா பிரேக்கை பர்பெக்டா சரி பண்ண முடியும்.....
==========
காதலிக்க பெண் வேண்டும்...
கல்யாணத்துக்கு பெண் வேண்டும்..
சமைத்து வைக்க பெண் வேண்டும்
துணி துவைத்து வைக்க பெண் வேண்டும்...
மாத சம்பளம் கிடைக்க வேலைக்கு போகும் பெண் வேண்டும்
படுக்கை பசி தீர்க்க பெண் வேண்டும்
வாரிசு சுமக்க பெண்  வேண்டும்...
கொய்யால ஆனா வாரிசு மட்டும் ஆண் குழந்தை வேண்டும்.... என்னடா உலகம் இது????
==============

பிலாசி பாண்டியிடம் ஒரு லேடி கேள்விகேட்டாங்க?
மாட்டுக்கு நாலு இருக்கும் என்கிட்ட ரெண்டு இருக்கும் அது என்ன???
பாண்டி  சொன்னான்....அது உங்க கால்கள் என்றான்...உடனே பாண்டியை மடக்க .. உன் பேண்ட்ல இருக்கும் ஆனா  அது என் சாரியில இருக்காது அது என்னன்னு கேள்வி கேட்க.. பாண்டி கொஞ்சமும் யோசிக்காம பாக்கெட்னு சொன்னான்...இன்னும் அவனை கொழப்ப ரொம்ப கஷ்டமான கேள்வியை அந்த லேடி கேட்டாங்க....முதல் முறை குத்தும் போது பெண்கள் அலறுவாங்க... அது எப்போதுன்னு கேள்விகேட்க... பாண்டி கொஞ்சமும் யோசிக்காம காது குத்தும் போதுன்னு  சொன்னான்.....


இதுல தெரிய வேண்டிய மாரல் என்ன தெரியுமா?
பிலாசபி பாண்டி ரொம்ப நல்லவன்......
==================
இப்ப பில்கேட்ஸ் பிசினசை நிறுத்தினாலும் ஒரு நாளக்கு ஒரு கோடி வீதம் 750 வருசத்துக்கு செலவு செய்யலாம்..... கிறுக்கு பயபுல்ல இன்னும் உழைச்சிகிட்டு இருக்கு....நாம உல்டாவா ஒரு பதிவு போடுவோம்...
==========

நான்வெஜ்18+

சிலது ஆங்கிலத்தில்தான் நல்லா இருக்கும்... 

ஜோக்..1


An Angry Husband send sms to his mamanar, 

"UR PRODUCT NOT MATCHING MY REQUIREMENTS"

A smart Mamanar replied, 


"WARRANTY EXPIRED, MANUFACTURER NOT RESPONSIBLE"
================
Girl, "What is a PENIS"?


Mom,"When you become a good girl you will get one", But the girl not statisfied with the answer she eargly asked her mother, 


Girl: What if i dont become a gud girl???????????

Mom: Then you will get many....!!!!!!!!
================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
 

13 comments:

  1. தூங்க மாட்டீங்கள ஜாக்கி?

    ReplyDelete
  2. மினி சாண்ட்விச் பட்டையை கிளப்புகிறது ஜாக்கி..

    ReplyDelete
  3. மினின்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் போடுறீங்க. சும்மா கும்முன்னு இருக்கு ...

    ReplyDelete
  4. இந்த பதிவில் சில விஷயங்கள் மெயிலில் முன்பே எனக்கு வந்தது ஆனாலும் இதுபோன்று எழுத எனக்கு தோன்றியது இல்லை.
    உங்கள் பதிவில் அதை பார்க்கையில்

    "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்"
    ஞாபகம் வந்தது.

    கலக்குங்க கலக்குங்க கலக்கிகிட்டே இருங்க

    ReplyDelete
  5. சான்ட்விச் சிறந்த முறையில் பரிமாறப்பட்டுள்ளது.நன்றி

    ReplyDelete
  6. பிலாசபி பாண்டி சூப்பர்,கலக்குங்க.

    ReplyDelete
  7. அந்த விளம்ரபங்கள் எல்லாம் அடிபொலி தலைவரே...:))

    ReplyDelete
  8. பின்னுட்டம் மூலம் கருத்தை பகிர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்...

    தண்ணி வண்டி எனக்கும் இவைகள் எல்லாம்எ ன நண்பர்களால் செல்லில் அனுப்பி வைக்கபட்டவைதான்..

    ReplyDelete
  9. குழந்தை முத்தமிடும் காட்சியை வர்ணித்த விதம் கவிதை அண்ணே

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner