(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....


உலகில் இருபது கேங்ஸ்டர் படங்களை பட்டியல் இட்டால் இந்த படத்துக்கு அந்த இருபது எண்ணுக்குள் ஒரு இடம் உண்டு....அப்படி  ஒரு ஸ்டைலான படம் இந்த படம்....

இன்று மெல்கிப்சன் உலகம் பாராட்டும் இயக்குனராக  இருந்தாலும்... அவரின் பிலிம் பயோகிராபியில் இந்த படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு என்பதை அவரே நினைத்தாலும் மறுக்கமுடியாது...

தனக்கு சேர வேண்டிய பணத்தை ஒருத்தன் எப்படி பெரிய டான்கிட்ட இருந்து பணத்தை வாங்குறான் என்பதுதான் கதை... சாத்துகுடியை சாரு ஆக்கி சக்கை புழிஞ்ச கதைதான்...இருந்தாலும் அதை சொன்ன ஸ்டைல் இருக்கே.... அதுதான் இந்த படத்தின் பலம்...

(PAYBACK-1999) படத்தின் கதை என்ன???


போர்டர்(மெல்கிப்சன்) தனது முன்னாள் மனைவி மற்றும் பார்டனருடன் ஒரு சைனிஸ் குழுவிடம் இருந்து கொள்ளையில் ஈடுபட...அந்த பணத்தை பங்கு போடும் போது எக்ஸ் ஒய்பும் , பார்ட்னரும்.. போர்டருடைய முதுகுக்கு இரண்டு புல்லட் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகின்றனர்.....
போர்டருக்கு சேர வேண்டிய தொகை 70 ஆயிரம் டாலர்... ஒரு கட்டத்தில் பார்ட்னரை இரண்டு தட்டி தட்டி பணம் எங்கே என்று கேட்கையில் அந்த பணத்தை அவுட்பிட் என்ற மாபியா தலைவனிடம் பிசினஸ்க்கு கொடுத்து விட்டதாக சொல்ல.... அந்த பணத்தை  போர்டர் எப்படி மீட்டான் என்பது மீதி சுவாரஸ்ய கதை....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

சின்ன வயசு மெல்கிப்சன்... எனக்கு மெல்கிப்சனின் கண்ணும்... அந்த சிரிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவர் சிரிக்கும் போது கண்ணும் சிரிக்கும்....

இந்த படத்தோட டைரக்டர் ஒரு பிரபல ஸ்கிரீன் பிளே ரைட்டர்....பார்ன் சூப்பர் மெர்சி,இப்ப ரீலிசான சால்ட், ராபின்ஹுட் போன்ற பிரபலபடங்களுக்கு திரைக்கதை எழுதியவர்....

இந்த படத்தை  எப்பவேனா போட்டு பார்க்கலாம் அதுக்கு காரணம் இந்த படத்தோட மேக்கிங் ஸ்டைல்.....

1999ல் இந்த படத்தோட  கலர் டோன்  கிரேடிங்ல மாத்தி பிரின்ட் போட்டு இருப்பாங்க... ஒரிஜினல் ஸ்கின் டோனை படத்துல எந்த இடத்துலயும் பார்க்க முடியாது... அதுவே இந்த படத்துக்கு வேற ஒரு டார்க் மூட் கொடுக்கும்

போர்டர் வரும் போகும் காட்சிகளில் ஒரு பின்னனி இசை ஒலிக்கும்... அந்த இசை வரும் போது எல்லாம் ஒரு உற்சாக துள்ளல் வரும்...

ஒரு 5 ஷாட்டுகளில் போர்டருடைய கேரக்டர் என்ன என்பதை காட்டி இருப்பார்கள்...

நேருக்கு நேர் மோதும் கார்...

சுத்தியால் காலை அடித்து உடைக்கும் டார்சர்கள்....
கத்தியால் லுல்லுவை கட் பண்ண வரும் வில்லன் கூட்டம் அப்போது நடக்கும் டுவிஸ்ட் என படம் நெடுக்க நிறைய சுவாரஸ்யங்கள்...

போர்டர் தன் காதலி கிட்ட பேசும் வசனம்....

ரோசி இது என்ன நாய்......
எஸ் போர்டர் இது பேருகூட போர்டர்தான்...
நீ இல்லாத அப்ப நீ செய்யறதை எல்லாம் இந்த நாய் செஞ்சுது என்பது போன்ற கமெடி வசனங்கள் நிறைய....

படத்துல அடிச்சி செக்ஸ் அனுபவக்கும் கேரக்டர் போர்டருடைய பார்னர் கேரக்டர்... அந்த சைனிஸ் பொண்ணு மரண அடி அடிக்குது... அதுல எப்படி சுகம் வரும்னு தெரியலை இதை பத்தி விசயம் தெரிஞ்சவங்க எழுதினா.... மெத்த மகிழ்ச்சியடைவேன்... இதை பத்தி கருந்தேளும்,ஹாலிவுட்பாலாவும் எழுத வேண்டுகின்றேன்..

படத்தின் டிரைலர்.....



படக்குழுவினர்விபரம்....

Directed by     Brian Helgeland
Produced by     Bruce Davey
Written by     Brian Helgeland
Terry Hayes
tarring     Mel Gibson
Gregg Henry
Maria Bello
David Paymer
Bill Duke
Lucy Liu
John Glover
William Devane
Deborah Kara Unger
Jack Conley
and Kris Kristofferson
Uncredited:
James Coburn
Music by     Chris Boardman
Moe Jaffe
Cinematography     Ericson Core
Editing by     Kevin Stitt
Distributed by     Paramount Pictures (USA)
Warner Bros. (non-USA)
Release date(s)     February 5, 1999
Running time     100 min.
Language     English
Budget     $90 million

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

18 comments:

  1. நல்ல படம்! நான் நாலைந்து தடவை பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  2. எனக்கு இவர் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது 1995-ஆம் வருடம் வந்த BraveHeart திரைப்படம் தான்... அதன் இசைக்காகவே இந்த படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்... ஸ்காட்லாந்தின் ஹீரோவான William Wallace கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்... அந்த காதலின் சந்தோசத்தையும், பழி வாங்கும் குரூரத்தையும், சுதந்திர தாகத்தையும் கண்களில் அழகாக காண்பித்திருப்பார்... நம் ஊர் கதாநாயகர்கள் போல பஞ்ச் வசனங்கள் பேசியோ சத்தம் போட்டு சவால் விட்டோ சுதந்திரம் கேட்காமல், அழகாக தன் மக்களிடையில் இருக்கும் புல்லுருவிகளுக்கு மத்தியிலும், தன் ஆதரவாளர்களுடன் அழகாக போராடி இருப்பார்...

    ReplyDelete
  3. இந்த படத்தை பார்க்க விடாமல் அன்று கிளப்பி விட்டீர்கள். உங்களை தில்லாலங்கடியில் தமன்னா திட்டுவது போல் “ங்கொய்யால” என்று திட்டிக் கொள்கிறேன்.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  4. அமர்க்களமான விமர்சனம்.. கருந்தேளும்.. ஹாலிவுட் பாலாவும்.. ஜாக்கிசார் சொன்ன அந்த விஷயத்தை பத்தி எழுதினா நானும் ரொம்ப சந்தோஷமடைவேன்.(ஹி.. ஹி....)

    ReplyDelete
  5. ஜாக்கி.. வழக்கமான பட விமர்சனத்திற்கு கொஞ்சம் கம்மியாகவே எழுதியிருக்கிறீர்கள். டைம் போதவில்லையா ? :)

    ReplyDelete
  6. தல நல்ல பகிர்வு... பாத்துப்புடுறேன்....

    ReplyDelete
  7. ஏற்கனவே பார்த்தாலும் மீண்டும் பார்க்கலாம்,Gibson முன்னணி நடிகராய் வந்திருக்க வேண்டியவர் ஏனோ direction பக்கம் போய்ட்டார்.புதிய 007kku இவரை அழைத்த போதும் ஏனோ மறுத்து விட்டார்
    அண்ணா நான் ஏற்கனவே சொன்ன படங்கள் பார்த்திங்களா??

    ReplyDelete
  8. "அந்த சைனிஸ் பொண்ணு மரண அடி அடிக்குது... அதுல எப்படி சுகம் வரும்னு தெரியலை"
    ஆமா, எனக்கும் அந்த டவுட் ரொம்ப நாளா இருக்குது.சீக்கிரம் யாராவது கிளியர் பண்ணுங்க.

    ReplyDelete
  9. Let me watch the film.. Thanks for the review.... One doubt.. How to write the comments in Tamil as others do..

    ReplyDelete
  10. a]அது தான் பாஸ், masochism...அது என்ன எழவோ!

    ReplyDelete
  11. //.. இதை பத்தி கருந்தேளும்,ஹாலிவுட்பாலாவும் எழுத வேண்டுகின்றேன்//

    ஜாக்கி.. ஏற்கனவே சில 18+ பதிவில் எழுதியாச்சி ஜாக்கி. இதில் வரும் சில உட்பிரிவுகளை கூட.

    கடைசியா எழுதின நினைப்பு வர்றது, AEA பத்தி The World's Greatest Dad.

    ReplyDelete
  12. ணா..இந்தப் படத்துல Guy Ritchie ஸ்டைல் கொஞ்சம் இருப்பதைப் பார்க்கலாம். போற போக்குல சொல்லுற டயலாக் ஒவ்வொன்னும் செமையா இருக்கும். இந்த டைரக்டரோட ஸ்க்ரீன்ப்ளேல வந்த இன்னொரு முக்கியமான படம் நம் அனைவருக்கும் பிடிச்ச Mystic River.
    (உங்க வலைத்தளத்தை ஒரு மாசமா படிச்சிட்டு வந்தாலும் எப்படி கமென்டிடுறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். இப்ப ஒரு லீட் கெடச்சிருச்சு. இனி அடிக்கடி என் குறுக்கீடு இருக்கும்)

    ReplyDelete
  13. நன்றி சிவகுமார்...

    நன்றி வித்யாசமானகடவுள் நீங்கள் சொல்வது உண்மைதான்...

    நன்றி நித்யகுமாரன்... நேரம் இல்லை அதான்...

    ReplyDelete
  14. நன்றி கவிதை காதலன்...

    நன்றி பின்னோக்கி....நிறைய எழுதலாம் ஆனால் பல விசயங்கள் சொல்லி அந்த படம் பார்க்கும் டெம்ட்டை குறைக்க கூடாது...

    அதுமட்டும் அல்ல எழுதியதை எல்லாம் படிக்கறாங்க என்பதற்க்காக வலுகட்டாயமாக எழுதுவதில் எனக்கு பிரியம் இல்லை...
    வேலை பளு ஒரு காரணம்தான்..

    ReplyDelete
  15. நன்றி இவன் சிவன்...

    நன்றி இளையவன்.. இன்னும் பார்க்கவில்லை வேலை பளு....

    நன்றி மைதின்..பாலா எழுதி இருக்காரு படிங்க..

    நன்றி சண்முகா...

    நன்றி பப்பு..

    நன்றி பாலா விளக்கத்துக்கு நன்றி.,,,

    நன்றி கொழந்தை ன்னா...நல்லபடியி குறுக்கிட்டா சந்தோஷம்தான்..

    ReplyDelete
  16. நன்றி விமர்சனத்திற்கு. மெல் கிப்சன் படங்கள் அருமைதான். சில வேளைகளில் வன்முறை கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றும்.

    ReplyDelete
  17. அருமையான விமர்சனம் ஜாக்கி
    எனக்கு மெல் கிப்சனை ஏனோ அவ்வளவாய் பிடிக்காது. சின்ன வயதில் பார்த்தப் படம் பெயர் இப்போது ஞாபகமில்லை மெல் கிப்சன் ஒரு தொழிலதிபர் அவரது குழந்தையை கடத்தி பணம் கேட்பார்கள். இவர் பணத்தைக் கொடுக்காமல் குழந்தையை மீட்டு தருபவர்களுக்கு அதற்கு மேலேயே பணம் தருவதாக சொல்லுவார். பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  18. நான் இப்பவே பார்க்கிரேன் அப்புரம் என்ன ஜாக்கி அன்னன் சொன்ன வேர பேச்சே இல்ல.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner