பொதுவாக எனக்கு பிளாக் அண்டு ஒயிட் படங்கள் பிடிக்காது.. டூரிங் டாக்கிசில் அந்த வகை படங்கள்தான் எப்போதும் பார்த்து தொலைக்க வேண்டிஇருக்கும்.. டவுன் கொட்டகையில் கலர்படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு...பிளாக் அண்டு ஒயிட் படங்கள் சலிக்க சலிக்க பார்த்த மனதுக்கு..
கலர் படங்கள் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தன.. அப்படியே ஸ்கோப்பில் பார்க்கும் போது அந்த சந்தோஷம் எனக்கு இன்னும் அதிகம் ஆகியது... அதனால் பிளாக் அண்டு ஒயிட் படங்கள் பாப்பது என்பது அரிதானது... ஆனால் அதற்காக பிளாக் ஆண்டு ஒயிட் படங்களுக்கு நான் எதிரி இல்லை...
ஆனாலும் சில படங்கள் எப்போதும் பார்த்தாலும் மனதில் ஒரு உற்சாகம் வந்து தொற்றிக்கொள்ளும் வகை இந்த படம்... 1955ல் வெளியான மிஸ்ஸியம்மா படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு சந்தோஷம் ஒரு உற்சாகம் இந்த படத்தை பார்க்கையில் என்னில் வந்து ஒட்டிக்கொள்ளும்....
எல்லோருடைய வாழ்க்கை சுவாரஸ்யத்துக்கும் ஊடல் மிக அவசியம்... இந்த படத்தை நான் ரசிக்க மிக முக்கிய காரணம் அந்த ஊடல்தான் காரணம் ... இந்த படத்தில் ஊடல் மிகுந்த ரசனை உடையதாய் இருக்கும்....இப்போது சொல்லபடும் கெமிஸ்ட்ரி என்ற தமிழ் வார்த்தை..அப்போதைய சாவித்ரி, ஜெமினிக்கு அதிகமாக ஒர்க் ஆகிய படம்...
கணவன் மனைவியாக இருந்தாலும், காதலன் காதலியாக இருந்தாலும் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்...
1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா....படத்தின் கதை என்ன...???
பாலு(ஜெமினிகணேசன்), மேரி (சாவித்திரி) இருவரும் பி ஏ படித்த பட்டதாரிகள்... இருவரும் ஒரு மேனேஜரின் குழந்தைக்கு பாட்டும் டியுஷனும் சொல்லி கொடுக்க ... மேனேஜருக்கு பணி இடம் மாறுதல் வர ....இருவருக்கும் வேலை போகின்றது... இருவரும் வேலை தேட வேண்டிய கட்டாயம்... மேரி டேவிட் என்பனிடம் 400 ரூபாய் கடன் வாங்கி இருக்க... அவன் வேறு கடன் தொகைக்காக மேரியையும் அவள் குடும்பத்தையும் தினமும் டார்சர் செய்கின்றான்...
ஆண்டிப்பாளையம் எனும் பள்ளியில் கணவன் மனைவி இருவரும் ஆசிரியராக இருந்தால் உடன் வேலை என்ற விளம்பரம் பேப்பரில் வர..... வேலை போன பாலுவும், மேரியும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி வேலைக்கு சேருகின்றனர்... பள்ளி நிர்வாகியும் ஜமீந்தாருமான, ரங்காராவ் தன் தொலைந்து போன மகள், மகாலட்சுமி நினைவாக அந்த பள்ளியை நடத்துகின்றார்...
என்னதான் மேரியும் பாலுவும் கணவன் மனைவி என்றுவேஷம் போட்டாலும்... நிறைய சண்டை போடுகின்றனர்... அவர்கள் நடிப்பு கடைசிவைரை தொடர்ந்ததா ? என்பதை வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
ஜெமினி மற்றும் சாவித்ரி இருவரும் நிஜத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்தனர்....என்றாலும் இத இவர்களின் கலை பயணத்துக்கு அடிகோலியபடம் எனலாம்.... இந்த படத்தில் இருவர் நடிப்பும் அவர்கள் இளமையும் மிக அழகாக இருக்கும்...
அந்த கால சென்னையை அவுட்டோரில் ஒரு ஷாட் வைத்து காட்டி இருப்பார்கள்... கவர்மெண்ட் டிரான்ஸ் போர்ட் மெட்ராஸ் என்று ஒரு பேருந்து நாய் பிடிக்கும் வண்டி போல் வரும்.... டிராம் தடங்களும் ரோட்டில் இருக்கும் காட்சிகள் ஒரு வராலாற்று ஆவனம்...
அந்த காலத்தில் தபால் சார்ஜ் ஒன்றையனா ஜெமினிகேட்கும் போது விலைவாசியை தெரிந்து கொள்ளலாம்...
காலஞ்சென்ற ஜெமினியும் சாவித்திரியும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள்...
இந்த படம் தமாஷான ஒரு பேமிலி டிராமா எண்டர்டெயின்மேன்ட்...
இப்போது கட்டாமிட்டாவில் திரிஷா போட்டு இருப்பதுபோல் குளோஸ் நெக் ஜாக்கெட் போட்டு நடித்து இருக்கும் படம் 1955க்கு பிறகு அதே பேஷன் திரும்பவும்.....
பொட்டு எடுத்தால் கிரிஸ்டியன்.. பொட்டு வைத்தால் இந்து என்பதாக சாவித்ரி பின்னியிருப்பார்...
அழகான ஜெமினி... உதட்டுக்கு மேல் ஒரு வரி மீசை... இன்னமும் என் அப்பா அப்படி பட்ட மீசைதான் வைத்துக்கொள்கின்றார்.... எல்லோரும் காதல் மன்னாக
உழைத்து சாப்பிடுவதை விட ஏமாற்றி சாப்பிடுவதில் இருக்கும் கிக்கும்... அதை பற்றி அந்த கேரக்டர் லோகி தாஸ் (சங்கரபாணி)பார்வையில் விளக்குவதும்....அந்த கேரக்டர் வாத்தியார்என்பதால் இருவர் மீதும் காட்டும் அன்பு குறையாமல் , அதே போல் அந்த மரியாதை குறையாமல் காட்டி இருப்பதுதான்.. இயக்குனரின் இயக்கத்துக்கான சிறப்பு... அவ்வப்போது கொஞ்சம் வெள்ளையப்பனை தள்ளு என்று எல்லோரிடமும்
பணம் கறப்பது அந்த கேரக்டரின் பலம்...
இது போல் படத்தில் நடித்த எல்லா கேரக்டர்களும் மிக இயல்பாய் வாழ வைத்து இருப்பது இயக்குனர் பிரசாத் அவர்களின் திறமைக்கு சான்றுகள்..
இளமையான தங்கவேலு துப்பறியும் சிங்கம் கேரக்டரில்... அந்த பாடிலாங்வேஜ்ம் அந்த டயலாக் டெலிவரியும் அற்புதம்... கூடவே நடித்து இருக்கும் ஏ கருணாநிதி, நடிகர் தங்கவேலுக்கு இணையான நடிப்பு...
நம்பியார் அவர்கள் கேரக்டர்.... ரவுடி கேரக்டர் என்றாலும்... பல காட்சிகள் சார்லி சாப்ளினை ஞாபக படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை... அனாலும் நடிப்பு அற்புதம்...
இருவரும் எதிரும் புதிருமாக சண்டை போட்டலும் ஒரு கனவு கண்டுவிட்டு வரும் சாவித்திரி அதன் பிறக ஏற்பட்ட மாற்றங்களையும்... பார்வையாளனுக்கு அது என்ன கனவு என்று விரிவாய் சொல்லாமல் புடகமாக சொல்லி, காட்சிகளை வெகு நுட்பமாய் பதிவு செய்த இயக்குனர் பிரசாத் தெய்வம்....
சாவித்ரி அவர்களின் கண்கள் பல கதைகள் சொல்கின்றன...படத்தில் விக்கல் வந்த கஷ்டபடுவதை காட்டும் போது காட்டும் நடிப்பு தேர்ந்த நடிகை பட்டத்தையும்...நடிகையர் திலகம் பட்டமும், தேசிய விருதும் கொடுத்தது அந்த விருதுக்குதான் பெருமை.... ஒரு சிவாஜி படத்தில் கூத்துக்கலைஞியாக சிவாஜியுடன் நடித்து இருப்பார்.... நடிப்பின் வித்தை கற்றுக்கொள்ள அந்த காட்சியை பார்பது நடிப்பவர்களுக்கு நலம்....
படத்தின பலம் பாடல்கள்....
முடியும் என்றால் படியாது...
படியும் என்றால் முடியாது ....
தெரிந்து கொள்ளனும் பெண்ணே... பாடல் சாவித்திரி பாடி முடிக்க
பழக தெரியம் வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே பாடல் அதனை தொடர்ந்து ஜெமினி அவர்கள் பாட... கடு கடு மகம் மாறுதல் கர்நாடக வழக்கம் அன்றோ என்ற வரியில் சாவித்ரி கொடுக்கும் எக்ஸ்பிரசன்.... ஐலவ் சாவித்ரி என்று சொல்லவைக்கும் இடங்கள்.....
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் .....
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது சொந்தம் அன்றோ என்ற பாடலும்... வாராயோ வெண்ணிலாவே பாடலும் சுகமான ராகங்கள்...
எல்லாம் உனக்கே தருவேனே . இனிமேல் உரிமை நீதானே போன்ற பாடல்கள் செம....
தெலுங்கிலும் இந்த படம் வெற்றிக்கொடி நாட்டியது....
இந்த படத்திள் ஒளிப்பதிவாளர் மார்க்ஸ்பார்ட்லே... வாராயோ வெண்ணிலவே ஒரு சாங் போதும் அழகியலுக்கும் திறமைக்கும்....
இந்த படம் இதுவரை பார்க்காத இளைய தலைமுறை பார்த்து ரசிக்க வேண்டிய பார்த்தே தீர வேண்டிய படம் இது....
படக்குழுவினர் விபரம்
இயக்குனர் எல். வி. பிரசாத்
தயாரிப்பாளர் நாகிரெட்டி
விஜயா புரொடக்ஷன்ஸ்
சக்கரபாணி
கதை திரைக்கதை எல். வி. பிரசாத்
கதை சக்கரபாணி
நடிப்பு ஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
கே. சாரங்கபாணி
எம். என். நம்பியார்
எஸ். வி. ரங்கராவ்
சாவித்திரி
ஜமுனா
மீனாட்சி
இசையமைப்பு எஸ். ராஜேஸ்வர ராவ்
வெளியீடு நாட்கள் ஜனவரி 14, 1955
கால நீளம் .
நாடு இந்தியா
மொழி தமிழ்
நீளம் 16170 அடி
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
//வாராயோ வெண்ணிலாவே பாடலும் //
ReplyDeleteஎனக்கும் ஆல்டைம் ஃபேவோரைட்.
நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து நிறைய படங்கள் கலரில் எடுக்கப்பட்டு இருக்கிறது 80, 90 களில்.நல்ல விமர்சனம்.நன்றி!!!
ReplyDeleteப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் பாட்டு இன்னும் ஹிட் ஆச்சே. நான் சொந்தமா ஒரிஜினல் விடியோ சிடி வைச்சிருக்க படங்களில் இதுவும் ஒண்ணு. Worth it.
ReplyDeleteஅருமையான விமர்சனம் அண்ணே
ReplyDeleteடிடியில் தேய தேய போட்டாங்க,கிளாஸிக்ஸ் கலக்ஷன்ஸ் டிவிடி வாங்கணும்.
இப்போ கமெண்ட் போட மிகவும் ஈசியாக உள்ளது,மாற்றாதீர்கள்.பாப் அப் விண்டோவுக்கு
ReplyDelete\\எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் .....
ReplyDeleteபிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது சொந்தம் அன்றோ என்ற பாடலும்... வாராயோ வெண்ணிலாவே பாடலும் சுகமான ராகங்கள்...\\
எனக்கும்.
நல்ல நினைவூட்டல்.
\\எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் .....
ReplyDeleteபிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது சொந்தம் அன்றோ என்ற பாடலும்... வாராயோ வெண்ணிலாவே பாடலும் சுகமான ராகங்கள்...\\
எனக்கும்.
நல்ல நினைவூட்டல்.
தினமும் நான் இந்தப் படத்தின் பாடல்களை, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது கேட்டுவிடுவேன். மிக அருமையான, இயல்பான, சிரிப்பான படம்
ReplyDeleteபொதுவாக கதாநாயகன் வேடம் ஏற்கும் நாகேஸ்வர ராவ் தெலுங்கு மிசியம்மாவில் தமிழில் தங்கவேல் செய்த காமெடி வேடத்தை செய்திருப்பார்.பலர் அறியாத செய்தி இது.
ReplyDeleteவாராயோ வெண்ணிலவே ஒரு சாங் போதும் அழகியலுக்கும் திறமைக்கும்....
ReplyDeletevery nice song.
jakcy sir, Why you dont write about Ilayaraja's songs about your own wtiting method?
lingam.
நீங்க் சொல்லி இருக்கற பாடல் நவராத்திரி படத்தில் வரும். http://www.youtube.com/watch?v=DqWKRny75nc
ReplyDeleteஅற்புதமான பாடல்கள்
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றிகள்
பழைய படங்களை மறக்கவே முடியவில்லை பாருங்கள். நான் மிக ரசித்த படம் மிஸ்ஸியம்மா. கே.டிவியில் ஒருநாள் பார்த்து நான் எழுதிய பதிவை பாருங்களேன்.
ReplyDeletehttp://vedivaal.blogspot.com/2009/10/blog-post_9894.htm
சகாதேவன்
எனக்கு பல தலைமுறைகள் முந்தைய திரைப்படம் தமிழில் பார்த்ததில்லை ஹிந்தியில் பார்த்திருக்கிறேன் டிவியில் போட்டதால் . பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். வாராயோ வெண்ணிலாவே மற்றும் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் ச்சே நந்தகுமாரனும் என்பன
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த பாடல் : வாராயோ வெண்ணிலாவே
ReplyDeleteபிடித்த வரிகள் : சதி பதி விரோதம் மிகவே.. சிதைந்தது இதம் தரும் வாழ்வே..
ஏன் பிடித்தது என்று தெரியவில்லை. எப்போதுழு கேட்டாலும் என்னை மறந்து விடுவேன்.
அருமையான படம். அடங்காத நினைவுகள்.
படம் நாடகப்பாணியைத தழுவியது: குறிப்பாக பூங்காக் காட்சிகள். ஒரே செட், அல்லது இரு செட்டுகளைத் தாற்காலிகமாக போட்டு முடிப்பது நாடகப்பாணி. காரணம். பணப்பிரச்சினை; மற்றும் இடமிட்டு இடம் நகரவேண்டும்போது சுமக்க வேண்டிய பிரச்சினைகள். திரைப்படத்திற்குமா? இப்படம் விதிவிலக்கல்ல. அக்காலப்படங்கள் நாடகத்தின் மறுபிரதிகளாகவே விளங்கின!
ReplyDeleteலோகிதாசாக வருபவர் சாரங்கபாணி. எப்படி சங்கரபாணியானார் உங்களுக்கு?
சாவித்திரி, ஜெமினி - மிகவும் இளவயதானதால், அழகாகத்தோன்றுவார்கள். உண்மையிலே மனித அழகு.
விமர்சனத்தில் ஒரு பெருங்குறை: ஒரு பிரபலமான பாடலை இருட்டடித்தது!! ஒருவேளை விமர்சகருக்கு அப்படிப்பாடல்கள் பிடிக்காததவை போலும்! அப்பாடல் மனதை உருக்கவில்லையென்றால், என்ன மனதது?
‘மேரி மாதா’ பாடலைத்தான் சொல்கிறேன்.
அதைப் பாடியவரும், நடித்தவரும், தமிழ் கத்தோலிக்கர்களின் வாழ்க்கையில் நீங்காவிடம் பிடித்துவிட்டார்கள். இப்பாடல் கேட்காத சர்ச்சும், கத்தோலிக்க கிறுத்துவர்கள் இல்ல நிகழ்ச்சிகளும் எனக்குத்தெரிந்து இல்லை.
குறிப்பாக சர்ச் விழாக்களில்.
படத்தின் சிறப்பு: நேரான கதை. அழகான நாயகன், நாயகி. மற்றும் பாடல்கள். (personal opinion)
ஜெமினிகணேசனுக்கு ஒரு சிறப்பு பானரோமா டெல்லியில் இந்திய அரசு நடாத்தியது சில்லாண்டுகளுக்கு முன் அவர் மரித்த மறுவருடம். அதில் இப்படம் திரையிடப்பட்டது.
இப்படம் சாவித்திரி படமல்லவா! சாவித்திரிக்கு ஒரு பானரோமாவும் இல்லை. பெயர் நடிகையர் திலகம்! என்ன இலாபம்?
இளைய தலைமுறைகளுக்கு காணாத குறையை போக்கிவிட்டிர்கள்
ReplyDeleteபிரசன்னா நடித்த அழகிய தீயே வும் இக்கதையை வைத்தே எடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்
ReplyDelete