பாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக்கங்கள்...

நேற்றில் இருந்து கண்டனத்தையும், உங்கள் கருத்தையும் எழுத்திலும் போனிலும் தொடர்ந்து பேசி  தெரிவித்தமைக்கு என் நன்றிகள்.... தலைவர் உண்மைதமிழன் போல் தமிழ் டைப்பில் நான் புலி அல்ல என்ற காரணத்தால் எல்லோருடைய பின்னுட்டத்துக்கு பதில் போட என்னால் முடியாது  என்பதால் இந்த சர்ச்சை குறித்து எனது விளக்கம் ஒரு பதிவாக...




நான்  நிறைய முறை சொல்லி இருக்கின்றேன்... நாம்  ஒன்றும் சுயம்பு அல்ல... நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் எதாவது ஒன்ற கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம்.... எல்லாம் எனக்கு தெரியும் என்று எவராலும் வாழ முடியாது...எல்லோரும் ஏதாவது ஒருவரிடம் காப்பி அடித்துதான் வாழ்க்கை வாழ்கின்றோம்.....


நாம் எல்லோரும் அப்படித்தான்... நான் நடிகர் ஜாக்கியை காப்பி அடித்து வாழ்ந்தவன் என்று சொல்லி இருக்கின்றேன்.... ஆனால் அச்சு அசலாக அப்படியே காப்பி அடித்து வாழ்ந்தது இல்லை....என் எழுத்தின் சாயல்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் சம்மனமிட்டு உட்கார்ந்து இருப்பது உற்று வாசிப்பவர்களுக்கு  நன்கு தெரியும்.....காப்பிக்கு இன்னோரு பெயர் இன்ஸ்பிரேஷன்....


பாலகுமாரன்எழுதிய பயணிகள் கவனிக்கவும் போல ஏர்போர்ட்டை  ஒன்லைனாக வைத்து கதை செய்யலாம் ஆனால் பயணிகள் கவனிக்கவும் நாவலை வரிக்கு வரி அப்படிய  டைப் செய்து ஜாக்கிசேகர் என்று வெளிவந்தால் அதுதான் ஈ அடிச்சான் காப்பி



முதலில் நான் ஒரு படத்தை பார்த்து சிலாகித்து,அந்த படத்தில் என்னை ஈர்த்த விஷயங்களை சின்ன குறிப்பேட்டில் குறித்து வைத்து பின்னர் படத்தை பற்றி எழுதும் போது அது குறித்து வலைதளங்களில் கொட்டிகிடக்கும் தகவல்களை படிக்கின்றேன் பின்பு அதனை மனதில் கொண்டுசுவரஸ்யமாக எழுதுகின்றேன்....


ஆனால் வரிக்கு வரிக்கு காப்பி செய்து ஸ்பெல்லிங் மீஸ்டேக்கோடு ஒரு பத்திரிக்கையில் நாம் எழுதிய கட்டுரை வரும் போது... அதில் வேறு ஒருவர் பெயர் இருக்கும் போது கோபம் வருவது இயற்கை....அவர் என்னோடு போனில் பேசுபவர்... இப்படி இருந்தும் நமக்கு தகவல் இல்லையே என்று அவர் மீது வருத்தம் கொண்டு எழுதினேன்....




இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி நான் எழுதிய பல கட்டுரைகள் பல தளங்களில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டு எனது பெயரும் என் தளத்தின் முகவரியும் போட்டு இருக்கின்றார்கள்...அவர்களிடத்தில் ஏன் என் கட்டுரையை போட்டீர்கள் என்று கேட்டதில்லை....




பிரபல பத்திரிக்கையில் நம் வலைதளத்தை பாராட்டி வரும் போது அது சந்தோஷம் கொடுக்கும்... ஆனால் அதே பத்திரிக்கை உங்கள் வலைதளத்தை பற்றி எழுதும் போது வேறு ஒருவர் பெயர் போட்டு சிறப்பாக எழுதுகின்றார் என்று எழுதினால் அது எவ்வளவு பெரிய பிரபல பத்திரிக்கையாக இருந்தாலும்  கோபம் வருவது இயல்பே.....


பாக்யா இதழ் கட்டுரை பெயர் மாற்றத்திற்கு இப்போது பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கும் செந்தில் ...ஒரு வார்த்தை.. என்னிடம் அண்ணே உங்க பிளாக்ல இருந்து ஒரு படத்தை நான் பாக்யா இதழுக்கு அனுப்பறேன்னு சொல்லிவிட்டு செய்து இருந்திருந்தால்.... இப்போது பாக்யா ஆசிரியர் குழுவினரின் தவறால் பெயர் மாறி போய் வந்து  இருக்கின்றது என்று சொல்லும் செந்தில்.... அப்படியே பெயர் மாறி வந்து இருந்தாலும் நான் இந்த விஷயத்துக்கு  வருத்தபட  போவதில்லை.....

செந்தில் நீ  சொன்னா மாதிரி பாக்யாவுல கட்டுரை வந்து இருக்கு....

அப்படியா அண்ணே ஒரு நிமிசம் என்று செந்தில் போன் செய்து விட்டு....

அண்ணே தப்பு நடந்து விட்டது..

ஆசிரியர் குழுவால் வந்த பிரச்சனை என்று  சொல்லி இருந்தால்......

சாண்ட்வெஜ் பகுதியில் ஒரு நான்கு வரி செய்தியாக இது மாற்றம் அடைந்து இருக்கும்...நான் திருட்டு பதிவு என்று கோபம் கொண்டு இருக்க வாய்ப்பு குறைவு...




பத்திரிக்கை வந்து ஒரு வாராத்துக்கு மேல்  ஆகிவிட்டது... அடுத்த இதழ் இன்று கடைகளில் கிடைக்கின்றது.... ஆனால் பெயர் மாற்றம் பற்றியோ? எனது கட்டுரை வெளியானது குறித்தோ எந்த தகவலும் எனக்கு வரவில்லை... நண்பர் பிஸ்கோத்துபயல் சொல்லவில்லை என்றால்அதுவும் எனக்கு தெரிய வாய்பில்லை.....இப்படி ஒன்று நடந்து இருக்கின்றது என்பதே என் கவனத்துக்கு வராமலே போகும் வாய்ப்பு அதிகம்......


பாக்யா எல்லோராலும் வாசிக்கபடும்.. புத்தகம் அல்ல..
அப்படி வாசித்தாலும் இணையம் வாசிப்பவர்கள் தமிழ்நாட்டில் குறைவு... அப்படியே வாசித்தாலும் என்னை தெரிந்தவர் வெகு சிலரே..... இதுதான் ரியல் பேக்ட்.....


பத்திரிக்கை கட்டுரை பார்த்தும்  சின்ன விஷயத்துக்கு எல்லாம் போன் போட்டு சொல்லும் செந்தில் இந்த விஷயத்தை நம்மிடம் சொல்லவில்லையே என்ற வருத்தமும்... அதனால் அவரிடம் போனில் பேசக்கூட எனக்கு பிடிக்கவில்லை விளக்கம் கேட்கவும் பிடிக்கவில்லை என்பதே உண்மை.....


நிறைய நண்பர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தி இருந்தார்கள்.... அதில் பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் மருத்துவர் புருனோவும்  மிக அழகாக கேள்வி கேட்டு இருந்தார்கள்... அதுதான் என் கேள்வியும்...அதில் மருத்துவர் புருனோவின் கேள்வி கிழே... இதே கேள்வியைதான் பலரும் கேட்டு இருக்கின்றார்கள்...




//பதிவுலக படைப்பாளிகளான கேபிள் சங்கர்,கீதப்பிரியன்,உண்மைத்தமி
ழன்,ஜாக்கிசேகர்,சவுக்கு உட்பட 14 படைப்பாளிகளின் படைப்புகளை அவர்கள் பிளாக் முகவரியோடு பாக்யாவில் எழுதினேன்.//


இதில் யாரிடமாவது உங்கள் படைப்புகளை பாக்யாவில் எழுதினேன் என்று முன்னதாக கூறினீர்களா


இந்த கட்டுரை ஜாக்கி பெயரிலேயே வந்தது என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை ஜாக்கி இதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி, அவருக்கு தெரியாமலேயே நீங்கள் அதை பாக்யாவிற்கு அனுப்பி, இரண்டும் ஒரே நாளில் (ஜாக்கி பெயரிலேயே) வெளிவந்தால் ஆனந்த விகடனில் ஜாக்கியை பற்றி என்ன நினைப்பார்கள்


ஒரே நேரத்தில் ஒரே படைப்பை இரண்டு பத்திரிகைகளுக்கு அனுப்புகிறான் என்று தவறாக நினைக்க மாட்டார்களா ?


வெகுசன ஊடகங்களில் 18 வருடமாக எழுதியும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறுவதை நம்ப சிரமமாக உள்ளது ...//
இதுதான் என் கேள்வியும்??? ஒரு போன் செய்து சொல்லி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை....
நேற்று மதியம் பாக்கயா இதழுக்கு ஒரு  விளக்க கடிதம் எழுதி போஸ்ட் செய்து விட்டேன்...



தெரியாத நபர் இந்த வேலையை செய்து இருந்தால் என் ரியாக்ஷன் வேறுமாதிரி இருந்து இருக்கும். நன்றாக பழகியவர் செந்தில் என்பதால் என் கோபங்கள் மிக குறைவு...எனக்கு செந்தில் மேல் எந்த வருத்தமும் இல்லை... நான் பதிவு போடுவதற்கு முன் உங்களிடம் போனில் பேசிவிட்டு பதிவை போட்டு இருக்க வேண்டும் என்று சதிஷ்மற்றும் செந்தில் இருவரும் சொல்லி இருக்கின்றீர்கள்...பாக்கியாவுக்கு அனுப்பும் முன் ஒரு வார்த்தை கேட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் வந்து இருக்காது... ஆனால் என்னை போன் செய்து கேட்டு இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் இருவர் வாதமும் நகைப்பாக இருக்கின்றது....



பலர் நான் மன்னிப்பேன்..... என்று என் மேல் உள்ள மதிப்பில் பின்னுட்டத்தில் எழுதி இருக்கின்றார்கள்..நான் ஒன்றும் மன்னிக்க காட்பாதர் அல்ல.... நேற்று மாலை சென்னிமலை செந்தில்.... தவறு நிகழ்ந்து விட்டது... வரும் வாரத்தில் வரும் பாக்கியா இதழில் சரி செய்யபடும் என்று போனில் பேசினார்.. அது போதும்....மன்னிக்க நான் யார்.????  அதற்கான தகுதி என்னிடத்தில் இல்லை...

இரண்டு பேர்  பேசிவைத்துக்கொண்டு பிரபலம் ஆக முற்ச்சிக்கின்றார்கள்
என்று ஒருவர் கொளுத்தி போட்டு இருக்கின்றார்....லக்கி சொன்னது போல் வலையை தமிழ்நாட்டில்  வாசிப்பவர்கள்...50 ஆயிரம் பேர்தான்....நான் தெரியாம கேட்கின்றேன்  ???அது என்ன பிரபலம்.....? மவுண்ட் ரோடில் நடக்கின்றேன்...மெரினாவில் ரோட்டுக்கடையில் சாப்பிடுகின்றேன்... எவரும் சூழ்ந்து கொண்டு நீங்க ஜாக்கிதானே என்று ஆட்டோடிகிராப் கேட்பதில்லை...50000 ஆயிரம் பேர் கொண்ட பதிவுலகில் என்னை 15000 பேருக்கு தெரியும் அவ்வளவே....




மூன்று மாதத்துக்கு ஒரு முறை  தோனி தொலங்கி பார்ப்கார்ன் வாங்கி தியேட்டரில்கொரிக்கையில் நீங்க ஜாக்கிதானே என்று கேட்டு இருக்கின்றார்கள்....பிரபலம் என்ன என்பதை நான் பணியாற்றும் சினிமாவில் பார்த்து இருக்கின்றேன்...தயவு செய்து பிரபலம்ஆக வலையில் எழுதுகின்றேன் என்றால் எனக்கு சிரிப்பாக இருக்கின்றது......பிரபலம் என்றால் என்ன தெரியுமா? பொது இடத்தில் நடக்கும் படபிடிப்பில் கேரவேனில் இருந்து மாஸ் ஹிரோவின்  கை வெளியே தெரிந்ததும் ஒரு பெருங்குரல் சத்தமாக ஆரவாரமாகி கேட்கும் பாருங்கள் அதுதான் பிரபலம்...


ஒரு பதிவுக்கு  இரண்டு மணி நேரம்... அதுவே ஆங்கில , உலக சினிமா பற்றி எழுத 3 மணி நேரம் ஆகின்றது... அதுவே தமிழ்படம்  பற்றி எழுதினால் 5 மணி நேரம் ஆகின்றது...இதனால் எனக்கு என்ன லாபம்....? நெட் கனெக்ஷன்,கரண்ட்,டிவிடி  செலவுகள், என மாதத்துக்கு 3 ஆயிரம் ஆகின்றது....எனக்கு என்ன வருமானம் ஒன்றும் இல்லை... ஒரு சின்ன ஆத்ம திருப்தி....


அதை விட நான் ஏதோ  பெயர் சம்பாதிக்க எழுதி இருப்பதாக சொல்லி இருக்கின்றார்....

நான்  பெரிய இலக்கியம் படைக்க எழுதவில்லை...
ஆனால் பலரது அன்பை சம்பாதித்து இருக்கின்றேன் என்பது மட்டும் என்னால் உணர முடிகின்றது...அதை கர்வத்தோடு சொல்லுவேன்.. அப்புறம் எதுக்கு எழுதற... ஒரு ஆத்ம திருப்திக்கு....உலகம் எங்கும் நான் சம்பாதித்து இருக்கும் நண்பர்களுக்காகவும் எழுதுகின்றேன்... என் வலையை தொடர்ந்து பலர் தினமும் வாசிப்பதாலும் எழுகின்றேன்...கீழே இருக்கும் இந்த கடிதம் அதைதான் உணர்த்துகின்றது...

Dear Mr. S. Rabidas

Good day to you.

With hard feelings I came to know that Bhagya published an article with out checking the original credibility.

By visiting the below link you can understand the severity of the issue.


Mr. சென்னிமலை சிபி செந்தில் குமார் copied an article belongs to Mr. ஜாக்கி சேகர்.

I request you warn Mr. Senthil Kumar and give the credit to Mr. Jackisekar. 

Mr. Jackisekar is a wonderful and versatile writer. You can visit his blog http://jackiesekar.blogspot.com to know more about him.

He can be your best movie reviewer compare to Mr. Senthial Kumar. If you go through few articles in http://jackiesekar.blogspot.com you can easily come to know that Mr. Jakisekar has his own writing style.

Kindly spend some time to appreciate quality writer and punish copy - paste (with spelling mistakes) writer.

Regards

Rajkumar Srinivasan
Bhagya's X - Reader
Sharjah
 இது போல் தொடர்ந்து பாக்யா இதழுக்கு கடிதங்கள் போய் கொண்டு இருப்பதாக அதன்  பொறுப்பாசிரியர் சொன்னதாக செந்திலே சொல்லி இருக்கின்றார்...





சிலர் நான் அவசரபட்டு பதிவு போட்டு விட்டதாகவும் , என்னை அவசர குடுக்கை என்றும் சொல்லி இருக்கின்றார்கள்...அவர்கள் நிதானமாக நீடுடி வாழ என் வாழ்த்துக்கள்....

இதற்கு மேல் இந்த விவாதம் தொடர அல்லது விளக்கம் சொல்ல விருப்பம் அல்ல.... நாம அடுத்த வேலை பார்க்க போவோம்... நிறைய வேலைகள் இருக்கின்றது...



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

29 comments:

  1. அய்யா நீங்கள் எவ்வளவோ படங்கள் பற்றி எழுதுகிறீர்கள்..
    அதன் தொடர்ச்சியாக கே பி யின் உன்னால் முடியும் தம்பி படத்தை பற்றி எழுதுங்கள்..

    ReplyDelete
  2. தெளிவான விளக்கம் ஜாக்கி.

    பத்திரிகைகளில் அடிக்கடி இதுபோல நிகழ்வதுண்டு. நிச்சயமாக இது பத்திரிகைகளின் தவறல்ல. ஒரு கட்டுரை தபாலிலோ, மின்னஞ்சலிலோ வந்து சேர்ந்ததும் அது வேறு ஒருவர் இணையத்திலோ அல்லது சிற்றிதழிலோ எழுதியதா என்று சரிபார்ப்பது சாத்தியமல்ல. ஏனெனில் இதுபோன்ற படைப்புகள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பத்திகை அலுவலகத்துக்கு வந்துகொண்டேயிருக்கும்.

    ஏற்கனவே நர்சிம்மின் பதிவொன்று வேறொருவர் பெயரில் குமுதம் இதழில் வெளிவந்தது என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

    டோண்ட் ஒர்ரீ... பீ ஹேப்பி! :-)

    ReplyDelete
  3. உங்களின் மேல் எந்த தவறும் இல்லை. இணையத்தை வைத்து பல பத்திரிகைகள் நன்றாகவே குளிர் காய்கின்றன.

    ReplyDelete
  4. சரிண்ணே... இதுக்கம்மேலயும் பிரச்சனையை வளக்கனுமா என்ன? சிபி செந்திலுக்கு உங்க வேதனை புரிஞ்சிருக்கும்.

    விட்டுத்துள்ளுங்க... உங்ககாசுல யாருக்காவது டீ வாங்கி கொடுக்கறதில்லையா...??

    ReplyDelete
  5. பிர‌ப‌ல‌ம் ப‌ற்றி நீங்க‌ள் சொல்லி இருக்கிற‌ க‌ருத்து ச‌த்திய‌மான‌ உண்மை, இது ப‌திவெழுதும் ப‌ல‌ருக்குப் புரிவ‌தில்லை. மைக்கேல் வ‌ச‌ல‌வ்ஸ்கி எனும் புக‌ழ் பெற்ற‌ வேதிய‌ல் பேராசிரிய‌ரின் மாண‌வ‌ன், ம‌ற்றொரு துணை பேராசிரிய‌ரின் மாண‌வ‌னை (அமெரிக்காவிற்குப் ப‌டிக்க‌ச் சென்ற‌ சீனா மாண‌வ‌ன்) பார்த்து, எங்க‌ள் பாஸ் பிர‌ப‌ல‌மான‌வ‌ர், உன‌து பாஸ் பிர‌ப‌ல‌மில்லாத‌வ‌ர் என‌ கேலி செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சீன‌ மாண‌வ‌ன் சொன்னான், ஜூலியா ராப‌ர்ட்ஸ் பிர‌ப‌லாம‌ன‌வ‌ர், உன்னுடைய‌ பாஸ் பிர‌ப‌ல‌மான‌வ‌ரில்லை. இது ப‌த்து ஆண்டுக‌ளுக்கு முன்பு நார்த் வெஸ்ட‌ர்ன் ப‌ல‌க‌லைக‌ழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌து. உல‌க‌ம் முழுதும் புக‌ழ்பித்து பிடித்து அலைப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். இங்கும் சில‌ பேர் ப‌திவெழுதுவ‌தால் தான் பிர‌ப‌ல‌ம் என்று த‌ன்னை தானே ஏமாற்றிக்கொள்வ‌து துர‌திர்ஷ்ட‌மே!
    -krishnamoorthy

    ReplyDelete
  6. லக்கி சொன்னதை தான் சொல்கிறேன். டோண்ட் ஒர்ரீ பீ ஹேப்பீ.... அடுத்து சுட சுட நல்ல பதிவா வழக்கம் போல எதிர்பார்க்கிறோம் ஜாக்கி உங்க கிட்ட இருந்து.

    ReplyDelete
  7. இந்த பதிவுக்கும்,விளக்கத்துக்கும் நன்றி அண்ணே.இனி இது போல் தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. jackie write about OLD BOY Korean movie

    ReplyDelete
  9. என்ன சொல்லுறதுன்னு தெரியலைண்ணே ....

    ஆனா நீங்க சொன்ன ஒவ்வொரு வரிகளுடனும் ஒத்து போறேனுங்க ....

    யாரு இருக்காங்களோ இல்லையோ நான் உங்களுக்கு full support ண்ணா ....

    ReplyDelete
  10. உங்களுக்கு தெரியாதுங்க ...

    இந்த தளம் உங்களை மிக பெரிய அளவுக்கு கொண்டு போகும் ..அதற்க்கு நிறைய வாய்ப்புகளிருக்கு

    KEEP SMILING...

    ENJOY LIVING

    ReplyDelete
  11. நண்பர் ஜாக்கி அவர்களுக்கு....உங்கள் ஆதங்கம் புரிகிறது...அதுபோல் உங்களின் பெருந்தன்மையான விளக்கங்கள், எதிரியை கூட நண்பனாக்கும் ஓர் காந்த கர்வமிக்க எழுத்துக்கள், வலை அன்பர்களுக்கு ஓர் முன் உதாரணமாக என்றும் இருப்பீர்கள் நண்பரே.......நன்றி....

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. திரு சேகர் அவர்களுக்கு,
    நான் சில தினங்களாகதான் உங்கள் பதிவை பார்க்கிறேன். திரு செந்தில் அவர்கள் செயல் எனக்கும் வருத்தம் அளிக்கிறது. வடிவேலு பட டயலாக் மாதிரி கேக்குற எனக்கே இப்படின்னா. நானும் ஆவேசபட்டு அட்ராசக்க பக்கம் போனேன் அங்க ஏற்கனவே அவர சக்கையாக்கிட்டங்க. மன்னிப்போம் மறப்போம்.

    ReplyDelete
  14. ஜாக்கி

    தமிழில் டைப் செய்ய இந்த லிங்க் உபயோஹபடும்

    முற்சிக்கவும்

    http://www.google.com/transliterate/indic/Tamil

    ReplyDelete
  15. //இதற்கு மேல் இந்த விவாதம் தொடர அல்லது விளக்கம் சொல்ல விருப்பம் அல்ல.... நாம அடுத்த வேலை பார்க்க போவோம்... நிறைய வேலைகள் இருக்கின்றது...//

    :) அதானே இதற்கெல்லாம் நீங்கள் கலங்கிவிடுவீர்களா என்ன? உங்களிடம் நேர்மை இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  16. //.50000 ஆயிரம் பேர் கொண்ட பதிவுலகில் என்னை 15000 பேருக்கு தெரியும் அவ்வளவே....//


    அண்ணே உண்மையிலேயே நீங்க பிரபலம் தான்!
    ஒரு புத்தகம் மட்டும் எழுதுங்க 15000 காப்பி நிச்சயம் விற்கும், சாருவிற்கு கூட அவ்வளவு விற்காது என்பதே உண்மை!

    ReplyDelete
  17. //இந்த பதிவுக்கும்,விளக்கத்துக்கும் நன்றி அண்ணே.இனி இது போல் தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன். //

    செந்தில் குமார்.. நீங்கள் ஏற்கனவே இது வரை என்னுடய கட்டுரைகள் எதை எடுத்து போட்டீர்களோ என்று எனக்கு தெரியாது. ஆனால் இனிமேலாவது தயவு செய்து கேட்டுவிட்டு போடவும். நான் இப்போது சில பல சிறு பத்திரிக்கைகள், மற்றும் சில புத்தகங்கள் எழுத முற்பட்டிருக்கும் வேளையில் கொஞ்சம் பிரச்சனையாகிவிடும் என் நம்பர் என் ப்லாக்கிலோ.. அல்லது ஜாக்கியிடமோ வாங்கி க் கொள்ளூங்க.. நன்றி..

    ReplyDelete
  18. ஜாக்கி அண்ணே ,
    மனிதனுக்கு ஒரு சொல்.
    காய்த்த மரம் கல்லடி படத்தான் செயும்.
    எனவே இதோடு விடுங்கள்.

    ReplyDelete
  19. //பாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக்கங்கள். //
    நேற்றைய பதிவின் தலைப்புக்கும் இன்றைய பதிவின் தலைப்புக்கும் உள்ள வித்தியாசம் உங்களது பெருந்தன்மையை,கண்ணியத்தை,மன்னிக்கும் குணத்தை காட்டுகிறது! (சற்றே தவறு செய்த போதிலும் )செந்தில் அவர்கள் உங்களுக்கு போனிலும் ,பின்னூடங்களிலும் வருத்தம் தெரிவித்த பாங்கும் நல்ல தொரு விஷயம். இருவருமே பிரச்சனையை பெரிதாக்காமல் இருந்ததை வரவேற்கிறேன்..

    ReplyDelete
  20. நண்பர் ஜாக்கி அவர்களுக்கு....

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. திரு. சிபிக்கும் இது விளங்கியிருக்கும். மேலும் நடந்ததை நினைத்து வருந்துவதால் பயன் ஏது?

    பாக்யாவில் இருந்து தவறை திருத்திக் கொண்ட அறிவிப்பு வரும் என்று நம்புவோம். அவர்கள் இனி சிபி கொடுக்கும் செய்திகளை சில நாட்களுக்காவது அலசி ஆராய்ந்து வெளியிடுவார்கள் என்று கண்டிப்பாக நம்பலாம்.

    திரு சிபியும் நிறைய வருந்தியிருப்பார். விட்டுத் தள்ளுங்கள்... உங்கள் எழுத்தின் புகழ் இன்னும் வளர வேண்டும்...

    மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டீர்கள்... அடுத்த பதிவை எழுதுங்கள்.

    ReplyDelete
  21. அன்புள்ள நண்பர்களுக்கு இனி சென்னிமலைசெந்திலை தனிபட்டமுறையில் தாக்கி எழுதி எனக்கு பின்னுட்டம் இட வேண்டாம்... என் மேல் உள்ள அன்பினால் உங்களுக்கு கோபம் வந்தாலும்... இனி இது போல் நடக்காது அண்ணே என்று சொன்ன பிறகும் அவரை திட்டுவது ஏற்புடையது அல்ல..

    ReplyDelete
  22. Me too feel the same Jackie, Look forward.

    ReplyDelete
  23. அன்பு ஜாக்கி,

    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்

    திருக்குறள்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  24. சரி,ஜாக்கி மன்னிப்போம்! மறப்போம்! நமக்கு நிறைய வேலை இருக்குது விட்டு தள்ளுங்க!

    ReplyDelete
  25. அன்பின் ஜாக்கி சேகர்

    நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் என்ற பெருந்தன்மையினை விளக்கிய ஒரு அருமையான இடுகை நாம் அடுத்த வலையினைப் பார்ப்போம்.

    நன்று நன்று நல்வாழ்த்துகள் ஜாக்கி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  26. அருமையான விளக்கம்...

    ReplyDelete
  27. ஜாக்கி

    போலிகளை கண்டு துவள வேண்டாம்... நேர்மை உறங்குவது போல் தோன்றினாலும், பொய்மை இப்போது ஜெயிப்பது போல் தோன்றினாலும், நேர்மை ஒரு நாள் ஜெயிக்கும்...

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  28. விடுங்க சாமிகளா ரெண்டு பேரும்.

    பாக்யா பத்திரிக்கை நின்னு போச்சுன்னு நான் நினச்சுட்டு இருந்தேன். உங்கள் இருவர் பதிவில் இருந்துதான் அந்த பத்திரிக்கை இன்னும் தொடர்கிறது என்பதே தெரிகிறது.

    டி ராஜேந்தரின் உஷா, சரவnaa ஸ்டோர் செல்வா இரத்தின வார பத்திரிக்கை எல்லாம் இன்னும் வந்து கொண்டு இருக்கிறதா.

    ReplyDelete
  29. // ஒரு பதிவுக்கு இரண்டு மணி நேரம்... அதுவே ஆங்கில , உலக சினிமா பற்றி எழுத 3 மணி நேரம் ஆகின்றது... அதுவே தமிழ்படம் பற்றி எழுதினால் 5 மணி நேரம் ஆகின்றது...//
    ஜாக்கி
    ,
    உங்களுடைய
    ஒவ்வொரு பதிவுக்குப் பின்னும் இவ்வளவு உழைப்பு இருப்பது பற்றி எனக்கு இப்போதுதான் தெரிகிறது. புதிதாக எழுத ஆரம்பித்த எனக்கு இது ஒரு நல்ல தகவல். நல்ல பதிவுகள் எழுத வேண்டும் என்றால், தீவிர உழைப்பு இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner