பாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்பு

ஒரு வாரத்துக்கு முன்பு பாக்யா வார இதழின் சப் எடிட்டர்  பாலசங்கர் பேசினார்.... நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்..இப்போது வருத்தம் மற்றும் மறுப்பு தெரிவிக்க முடியாது... அடுத்த இதழுக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன... இனி இப்படி நிகழாது என்று சொன்னார்...


நேக்டுபியர் படத்தை பற்றி பாக்யா புத்தகத்தில் போட்டதும்.. அந்த படத்தின் விமர்சனம்.... அந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் தோன்றியதாக பல வாசகர்கள் போன் பண்ணியதாகவும்.. ஆசிரியர் குழுவிலும் அந்த விமர்சனத்தை பற்றி எல்லோரும் பேசி பாராட்டியதாக சொன்னார்...


அந்த விமர்சனத்தை படிக்கும் போதே தனக்கும் பிடித்து இருந்த காரணத்தால், அன்று இரவே செந்திலுக்கு போன் செய்து தான் பாராட்டியதாகவும்....
ஆனால் அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்றும்... விஷயம் தெரிந்தும் அவருக்கு  போன் செய்து தான் கேட்ட போது அவர் உண்மையை ஒத்துக்கொண்டதாகவும் .. பல வருட நம்பிக்கை காரணமாக அந்த தவறு நேர்ந்து விட்டதாக  பாக்யா சப் எடிட்டர் பால சங்கர் என்னிடத்தில் வருத்தம் தெரிவித்தார்.....


 இப்போதுதான் நான் உங்கள் தளத்தை பார்க்கின்றேன்...  எங்களால்  சன்மானமாக எதுவும் தரமுடியாது...உங்கள் கட்டுரைகளை பயன்படுத்தலாமா? என்று பாலசங்கர் கேட்ட போது...
நான் தாரளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்... எந்த பகுதியை போடுவதாக இருந்தாலும் சொல்லி விட்டு போடுங்கள் என்று சொன்னேன்.....

இந்த வாரம் மறுப்பு தெரிவித்து  என் சிறுகதையும், அலேக்சான்டர் புராஜக்ட் என்ற ஆஸ்திரேலியபடத்தின் விமர்சனத்தையும் போட்டு இருக்கின்றார்கள்...நன்றி என்று எனது தள முகவரியையும் எனது போட்டோவையும் போட்டு இருக்கின்றார்கள்...அதன் கீழேயே மறுப்பை சொல்லி இருக்கின்றார்கள்....
வாசகர் கடிதத்திலும் தனது மறுப்பையும் தங்கள் தரப்பையும்  சொல்லி இருக்கின்றார்கள்....நான் பதிவு போட்ட இரண்டாவது நாளில் என்னை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லிவிட்டார்கள்... ஆனால் மறுப்பு என்பதை அச்சில் பார்த்தும் இந்த விஷயத்தை உங்களோடு  பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் இருந்தேன்....


சொன்னது போல எனது சிறுகதை மற்றும் விமர்சனத்தை போட்டு விட்டு அதனை பிடிஎப் பைலாகவும் எனக்கு அனுப்பி வைத்து விட்டார்...


இந்த நேரத்தில் நண்பர் வடகரைவேலன் சொன்னது போல் எனது கதையும் , எனது சினிமாவிமர்சனமும் இந்த வார பாக்யா இதழில் வந்து இருக்கின்றது வேலனுக்கு நன்றி...இது யாரையும் குற்றம்  சாட்டவோ, பழையதை கிளறவோ  இந்த பதிவு அல்ல... நடந்ததையும் ,பாக்யாவின் மறுப்பு தெரிவிப்பை உங்களுடன்  பகிரவும்தான்...


 நன்றி செந்தில்குமார் எனது எழுத்தை அச்சு ஊடகம் வரை எடுத்து சென்றமைக்கு மிக்க நன்றி...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

66 comments:

 1. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் ஜாக்கி:).

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ...கூடிய சீக்கிரம் அப்படியே குமுதம் விகடன் ன்னு வளருங்க ... அவங்க எல்லாம் காசு தருவாங்கன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 4. ஜாக்கி, உங்க‌ளுக்கு ம‌ன‌ம் நிறைந்த‌ வாழ்த்துக‌ளும் த‌வ‌றை த‌ய‌க்க‌மின்றி ஒத்துக்கொண்ட‌ பாக்யா குழுவின‌ருக்கு பாராட்டுக‌ளும்.

  ReplyDelete
 5. அன்பு ஜாக்கி,

  அற்புதமான விளக்கம்.

  இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
  என்ன பயத்ததோ சால்பு

  அடுத்த தளத்திற்கு அன்பு வாழ்த்துக்கள்.

  அன்பு நித்யன்.

  ReplyDelete
 6. ஜாக்கி,

  பிரச்சனை நல்லவிதமாக முடிந்திருக்கிறது. இதற்காக அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்.... பணி தொடரட்டும்..

  ReplyDelete
 8. வாழ்த்துக‌ள்..ர‌வுடியாயிட்டீங்க‌ :)

  ReplyDelete
 9. வாழ்த்துகள்!

  எல்லாவற்றிலும் ஒரு நன்மை இருக்கின்றது என்பது இது தான் போல - நன்றி தங்கள் நண்பர் செந்திலுக்கும்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் குரு...


  மனோ

  ReplyDelete
 11. CONGRATS. GOOD TO SEE THIS
  WITHLOVE
  S.SAKUL HAMEED

  ReplyDelete
 12. ஆனால் அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்றும்... விஷயம் தெரிந்தும் அவருக்கு போன் செய்து தான் கேட்ட போது அவர் உண்மையை ஒத்துக்கொண்டதாகவும் .. பல வருட நம்பிக்கை காரணமாக அந்த தவறு நேர்ந்து விட்டதாக பாக்யா சப் எடிட்டர் பொன் சங்கர் என்னிடத்தில் வருத்தம் தெரிவித்தார்.//
  எதுக்கு இந்த கொலை வெறி....இந்த வரியையும் நீக்கி இருந்தால் உங்கள் பெருந்தன்மை பேசப்பட்டிருக்கும்.கீழே நன்றி வேறு

  ReplyDelete
 13. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி...

  ReplyDelete
 14. பாக்யா அலுவலகத்திற்க்கு பல்வேறு வகையிலும் நீங்கள் கொடுத்த தொல்லைகள்,பல்வேறு பெயர்களில் நீங்கள் கொடுத்த கடிதம்,ஈ மெயில் டார்ச்சர் பற்றியும் எழுதி இருக்கலாமே

  ReplyDelete
 15. சதிஷ் பாக்யாவில் பேசியதை சொன்னால் கொலை வெறியா? என்னுடைய பெருந்தன்மை பத்தி நீங்க கவலை பட வேண்டிய அவசியம் இல்லை... நீங்க பெருந்தன்மை காவலராக வாழ்வாங்கு வாழ வாழ்துக்கள்...

  ReplyDelete
 16. சதிஷ் உங்கள் எண்ணம் தெரிந்து விட்டது...உங்களுக்கு பதில் சொல்வதும் வீண்...என்க்கு வேற வேலையே இல்லையா? பாக்யிவுக்கு போய் டார்சர் கொடூக்கனுமா?...நீங்க சொல்லறது படிக்கற அத்தனை பேருக்கும் சிறுபிள்ளைதனமாக இருக்கும் அது போதும்...

  இனி இந்த விவாதத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை...

  ReplyDelete
 17. ஆர்.கே.ச‌திஷ்குமார், உங்க‌ பிர‌ச்சினை என்ன‌?

  எழுத்து திருட்டு ந‌ட‌ந்த‌துக்கு எதிரா என்ன‌ என்ன‌ செய்ய‌ முடியுமோ எல்லாம் செஞ்ச‌ ஜாக்கியை நான் ம‌ன‌ப்பூர்வ‌மா பாராட்டுறேன். இதுக்கு முன்னால‌ ந‌ட‌ந்த‌ ஒவ்வொரு திருட்டையும் எல்லாரும் பெருந்த‌ன்மையா ம‌ன்னிச்ச‌தால‌தான் ப‌ப்ளிக்கா இப்ப‌டி திருடி அதை த‌ன் பேர்ல‌ போட்டுக்க‌ முடியுது.

  நீங்க‌ பெருந்த‌ன்மையாள‌ரா இருந்தா நாளைக்கு உங்க‌ எழுத்தையும் யாராவ‌து திருடுற‌ப்ப‌ ம‌ன்னிச்சிடுங்க‌. ஆனா எல்லாரும் அப்ப‌டியே இருக்க‌ணும்னு எதிர்பார்க்காதிங்க‌..

  முட்டை போடுற‌ கோழிக்குதான் வ‌லி தெரியும்...

  ReplyDelete
 18. ஆர்.கே.ச‌திஷ்குமார்,

  பாக்யா ஆபிஸ்-ல நேர்ல போய் எல்லாம் பார்த்த மாதிரி சொல்றிங்க..பாக்யாவே தவ்றை எற்றுகொண்டு வருத்தமும் கேட்டுவிட்டார்கள்.அப்படியிருக்க நீங்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்க விரும்புவது ஏன்.?

  உங்கள் பெருந்தன்மையின் இலக்கணம் அளவு குறித்து விரிவாக சொல்வீர்களா..

  அரவிந்தன்
  பெங்களுர்

  ReplyDelete
 19. நீங்கள் ஒரு முன்ணுதாரனம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள். எல்லாம் நன்மைக்கே என்பது இந்த விஷயத்தில் உண்மை ஆகி உள்ளது

  ReplyDelete
 21. நான் யாரிடமும் வாக்கு வாதம் செய்ய விரும்பவில்லை.பாக்யா அலுவலகத்தில் நடந்தது எனக்கு தெரியும் என்பதால் மட்டுமே அவ்வாறு சொன்னேன்.பாக்யாவின் மறுப்பு அறிவிப்பை ஜாக்கி சொன்னால் போதும் .துணை ஆசிரியர் சொன்னதாக கூறும் கதைகளை நான் நம்பவில்லை அவ்வளவுதான்.

  ReplyDelete
 22. எழுத்து திருட்டு ந‌ட‌ந்த‌துக்கு எதிரா என்ன‌ என்ன‌ செய்ய‌ முடியுமோ எல்லாம் செஞ்ச‌ ஜாக்கியை நான் ம‌ன‌ப்பூர்வ‌மா பாராட்டுறேன். இதுக்கு முன்னால‌ ந‌ட‌ந்த‌ ஒவ்வொரு திருட்டையும் எல்லாரும் பெருந்த‌ன்மையா ம‌ன்னி//
  ஆமா ஜாக்கி என்ன காவியமா எழுதிட்டாரு..அதை திருடி சம்பாதிக்க..போங்க சார்..காமெட்ய் பண்ணிக்கிட்டு

  ReplyDelete
 23. பாக்யாவுக்கு போன் செய்யுங்கள்... சப் எடிட்டர் பொன்சங்கர் பற்றி வசாரியுங்கள் அவரிடமே கேளுங்கள்.. அவர் சொல்லுவார்...

  ReplyDelete
 24. வேலை இருக்கின்றது இரவு சந்திக்கின்றேன்...வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும்... பதில் கருத்தை உடனே சொன்ன வெண்பூ மற்றும் அரவிந் அவர்களுக்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 25. ஒருத்தர் நம்பவேண்டும் என்பதற்காக எல்லாம் என்னால் பதில் சொல்லவும் பதிவு எழுதவும் என்னால் முடியாது...

  ReplyDelete
 26. அண்ணே
  மனமார்ந்த வாழ்த்துக்கள்
  உங்கள் எழுத்துக்கள் மூலம் பாக்யா சர்குலேஷன் எங்கேயோ போகப்போகிறது என்றால் மிகையல்ல.நீங்கள் குமுதம்,குங்குமம்,ஆ.விகடன்.கல்கி,உயிர்மை,தினமணிகதிர்.வாரமலர் போன்ற எல்லா பத்திரிக்கைகளிலும் உங்கள் படைப்புகளை வெளியிடவேண்டும் என்பதே எங்கள் அமீரக நண்பர்களின் அவா,உலகச்னிமா என்றால் என்ன என்று உங்கள் படைப்புகள் உணர்த்தும்.

  ===
  போராடி படைப்புரிமையை காத்ததற்கும் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 27. ஆமாம்..மற்றவர் பெருந்தன்மையாக நினைக்க வேண்டும் என்பதற்காக உண்மைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை....

  இந்தப் பிரச்சினையின் முடிவு, அச்சு ஊடகத்திற்கு உங்களை கொண்டு சென்று சேர்த்திருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது...

  ReplyDelete
 28. நண்பர்களுக்கு பாக்யா சப் எடிட்டர் பாலசங்கர் என்பதற்கு பொன்சங்கர் என்று டைப்பிவிட்டேன்...மன்னிக்க...

  ReplyDelete
 29. வாழ்த்துகள் ஜாக்கி சேகர்!!!

  மென் மேலும் வளர வாழ்த்துகள்!!

  ReplyDelete
 30. //ஆர்.கே.ச‌திஷ்குமார்

  குட்டு எல்லாம் வெளியான பிறகும்
  ஒருத்தருக்காக சப்போர்ட் பண்ணுரிங்க !!!
  பாவம் நீங்க !!!

  ReplyDelete
 31. //ஆர்.கே.ச‌திஷ்குமார்

  குட்டு எல்லாம் வெளியான பிறகும்
  ஒருத்தருக்காக சப்போர்ட் பண்ணுரிங்க !!!
  பாவம் நீங்க !!!

  ReplyDelete
 32. //ஆர்.கே.ச‌திஷ்குமார்

  குட்டு எல்லாம் வெளியான பிறகும்
  ஒருத்தருக்காக சப்போர்ட் பண்ணுரிங்க !!!
  பாவம் நீங்க !!!

  ReplyDelete
 33. வாழ்த்துகள் ஜாக்கி. மேலே கீதப்ரியன் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் .. ;-)

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணே!!!!!

  ReplyDelete
 35. சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி........நன்றி.......நன்றி..........

  ReplyDelete
 36. என்னத்த்தை வேணும்னாலும் காப்பி/பேஸ்ட் பண்ணிக்கங்கய்யா.. என் பேரைக் கூட போட வேணாம்னு சொல்லிட்டேன் ஜாக்கி.

  பய புள்ளைங்க.. அப்பக்கூட என்னை மதிக்க மாட்டேங்கறாங்க.

  சி.பி.செ... அண்ணா..

  பாக்யாவெல்லாம் வேணாம்னா.. எதுனா.. என்னை மாறி ஏழைக்கேத்த எல்லுருண்டை-யா ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையிலாவது.. போடுங்ணா...

  ReplyDelete
 37. Congrats! Mr J.

  Good to see your article in Bhagya...

  Regards

  Rajkumar S

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணே!!!!!

  ReplyDelete
 40. ஆர்.கே.ச‌தீஷ்குமார்....

  ஒரு ப‌ட‌த்துல‌ வ‌டிவேலு சொல்லுவாரே "என்ன‌ கைய‌ புடிச்சி இழுத்தியா?"ன்னு அதுதான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது.. :))

  போங்க‌ சார் போங்க‌.. திருட்டுக்கு இவ்ளோ ச‌ப்போர்ட் ப‌ண்ணுறீங்க‌ளே, நீங்க‌ யாரோட‌ எழுத்தையாவ‌து ஆட்டைய‌ போட்டிருக்கீங்க‌ளா? :)

  "என்ன‌ ஆட்டைய‌ போட்டிருக்கீங்க‌ளா?"ன்னு ப‌தில் போடாதீங்க‌.. :))

  ReplyDelete
 41. //
  ஆர்.கே.சதீஷ்குமார் said...

  ஆமா ஜாக்கி என்ன காவியமா எழுதிட்டாரு..அதை திருடி சம்பாதிக்க..போங்க சார்..காமெட்ய் பண்ணிக்கிட்டு
  //

  அட‌, இதை இப்ப‌தான் பாக்குறேன்..

  ஜாக்கி எழுதுற‌து காவிய‌மா மொக்கையான்ற‌து இருக்க‌ட்டும், அதுகூட‌ எழுத‌ வ‌க்கில்லாம‌தானு அதை திருடி த‌ன்னோட‌ பேர்ல‌ போட்டுக்கிறீங்க‌.. முத‌ல்ல‌ உங்க‌ளுக்கு எழுத‌ வ‌ருதான்னு பாருங்க‌, இல்லைன்னா எழுதுற‌வ‌ன‌ பாராட்ட‌வாவ‌து செய்ங்க‌, ரெண்டும் இல்லாம‌.... அட‌ போங்க‌ சார்.. என‌க்கே உங்க‌ள‌ நினைச்சா பாவ‌மா இருக்கு.. ஹி..ஹி..

  ReplyDelete
 42. Dear J

  All the best to you.

  I request you to kindly see the picture "BORDER TOWN"
  and write a review about the same. I hope you will oblige to my request.

  Thanks. SS

  ReplyDelete
 43. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா...

  ReplyDelete
 44. ஆர் கே சதீஷ் குமார்
  சுயமாக எழுதுவது கிடையாது

  அவரது பத்திரிகை நண்பர் எழுதி தருவதை பதிவு செய்பவர்

  பினாமி பதிவர்

  அவர் சொல்வதை காதுல போட்டுக்காதீங்க ஜாக்கி

  வாழ்த்துக்கள் ஜாக்கி
  ஸ்டார்ட் மியூசிக்

  ReplyDelete
 45. ஆர் கே சதீஷ் குமார்
  சுயமாக எழுதுவது கிடையாது

  அவரது பத்திரிகை நண்பர் எழுதி தருவதை பதிவு செய்பவர்

  பினாமி பதிவர்

  அவர் சொல்வதை காதுல போட்டுக்காதீங்க ஜாக்கி

  வாழ்த்துக்கள் ஜாக்கி
  ஸ்டார்ட் மியூசிக்

  ReplyDelete
 46. Br.jakie sekar-kku vazhthukal. achu udakap pani evvalavu kadinam enpathu enakku theriyum.sarchayai- vivathangalai mudithuk kollumaaru kedduk kolkiren-meerapriyan.blogspot.com

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner