திருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....

காலையில் ஒரு போன் பிஸ்கோத்துபயல் என்ற நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு .. முன்பு வலைதளத்தில் எழுதிக்கொண்டு இருந்தார்... இப்போது இல்லை... 


ஜாக்கி நீங்க ஏதாவது பத்திரிக்கைக்கு உங்க சினிமா விமர்சனத்தை அனுப்பி இருக்கிங்களா?


இல்லைப்பா....


போனவார பாக்யா பத்திரிக்கையை நண்பர் வாங்கினார்... அதை ஏதெச்சையாக திறந்து பார்த்த போது நீங்கள் எழுதி இருந்த நேக்கடு பியர் படத்தை பத்தி எழுதி இருந்தது... படிச்சப்ப அதை ஏற்கனவே படிச்சது போலவே இருந்தது... அப்படி யே உங்கதளத்துக்கு வந்து பார்த்த போது அப்படியே காப்பி பேஸ்ட் செஞ்சி இருப்பது தெரிந்தது..அதில் கொடுமை என்னவென்றால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட சரி செய்யாமல் அப்படியே  வந்து இருப்பதாக சொல்ல......






யார் பெயரில் அது வந்து இருக்கின்றது என்று  நான் கேட்டேன்....,?


சென்னிமலை சிபி செந்தில் குமார் என்ற பெயரில் வந்து இருப்பதாக சொன்னார்...
என்ன தலைப்பு என்று கேட்ட போது....


என்னை கவர்ந்த வெளிநாட்டுபடம் என்று தலைப்பு இட்டு இருக்கின்றார்கள் என்று சொன்னார்.. 

அதனை காப்பி செய்து அனுப்ப சொன்னேன்....படித்த போது வெறுத்து போய் விட்டேன்... என் அனுமதியோ அல்லது எனது பேரோ எதுவும் போடவில்லை... அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விட்டு பெயர் மட்டும் மாற்றிஇருக்கின்றார்.... நல்லது....

பதிவர் சென்னிமலை சிபி செந்தில் குமார் தற்போது பதிவுலகில் எழுத வந்து இருக்கின்றார்.. ஆட்ரா சக்கை என்ற வலைப்பூவில் எழுதுகின்றார்.... வார பத்திரிக்கை வாசிப்பவர்களுக்கு அவரை நிச்சயம் தெரிந்து இருக்கும்... சென்னி மலை சிபி செந்தில் குமார் என்று நிறைய ஜோக்குகளுக்கு கீழ் அந்த பெயரை நீங்கள் பார்த்து இருக்கலாம்...


எனக்கு அவர் ஒரு மாதமாக பழக்கம்.. தொடர்ந்து என் பதிவுகளை படித்து விட்டு பின்னுட்டம் இடுபவர்...ஒரே நாளில் ஒரு 15 பழைய பதிவுகளுக்கு பின்னுட்டம் போட்டவர்.... போனில் தொடர்பு கொண்ட போது என் உலக படங்களுக்கும் என் விமர்சனத்துக்கும்  ரசிகன் என்றார்... என்னிடம் கூட உலக படங்க்ள் இருக்கின்றது என்று சொன்னார்.... விலாசம் கொடுத்தால் அனுப்பி வைப்பதாக  சொன்னார்... சொன்னது போல் அனுப்பியும் வைத்தார்.. அதில் எந்த உலக படமும் இல்லை.... எல்லாம் சாதாரண படங்கள்தான் அதில் பலது என்னடத்தில் இருக்கின்றன....


எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்....ஆனால் ஒருவர் எழுதியதை அவர் அனுமதி இல்லாமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்வது எந்தவிதத்தில் நியாயம்...



பாக்கியா பத்திரிக்கையில்  சிபி செந்தில்குமார் பெயரில் வெளியாகி இருக்கும் என் பதிவு...கிளிக்கி வாசிக்கவும்


நேக்டு பியர் படத்தை பற்றி போன மாதம்  நான் எழுதிய பதிவு..... வாசிக்க இங்கே கிளிக்கவும்




ஒரு படம் எழுத பதினைந்து குப்பை படங்கள் பார்த்து தொலைக்கின்றேன்... பல ஆயிரங்கள் செலவு செய்து, பஜார் பஜாராக படத்துக்காக அலைந்து திரிந்து பார்த்து விட்டு அது குறித்தான  புகைபடங்கள் வலையில் தேடி சரியான இடத்தில் போட்டுஎழுதுவதற்க்குள் தாவு  தீர்ந்துவிடுகின்றது...... ஒரு படத்தை   அப்படியே   எழுதினால் நன்றாக இருக்காது என்பதற்காக யோசித்து ஈர்க்கும் விதமாக  எழுதினால் அப்படியே காப்பி பெஸ்ட் செய்து பெயர் போட்டுக்கொண்டு இருக்கின்றார்....





அன்பின் சென்னிமலை சிபி செந்தில் குமார்... 

 நீங்கள் எழுதிய ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்டரில் வந்து இருப்பதாக சந்தோஷமாக சொன்னவன் நான்....  ஆனால் பாக்கியாவில் வந்த விஷயத்தை உங்களோடு  பகிர எனக்கே கூச்சமாக இருக்கின்றது... இந்த வாரம் பாக்கியாவில் நேக்டுபியருக்கு அடுத்து நான் எழுதி இருக்கும்... எக்சாம் படத்தை பற்றி எழுதி இருக்கின்றீர்கள்.... அது காப்பி பேஸ்ட் இல்லாமல் வேறு மாதிரி எழுதி இருக்கின்றீர்கள்.... இன்னும் நிறைய படங்கள் எழுதி இருக்கின்றேன்... அந்த படங்களை பார்த்து விட்டு  உங்கள் நடையில்எழுதுங்கள்....உங்களுக்கு போன் பண்ணி கேட்கவும் பேசவும் மனம்வரவில்லை...

வருத்தங்களுடன்
ஜாக்கிசேகர்...




நண்பர் உண்மைதமிழனிடம் சொன்னேன்... போனை  போடு கேட்போம் என்றார்... நான் சொன்னேன்... என்ன சொல்லுவாப்பல????
சாரி அண்ணே என்று சொல்ல அதிக வாய்ப்பு இருப்பதால்
அதை எதுக்கு போனை போட்டு கேட்டுகிட்டு..... என்றேன்...  
சொல்லிவிட்டு போட்டு இருக்கலாம் என்று உண்மைதமிழன் சொன்னார்... அதில் எனக்கு உடன்பாடு இல்லை..  சொல்லிவிட்டு போட்டாலும் என்  பெயர் போட்டு இருக்க வேண்டும்....




பதிவர்களே... நீங்கள் எழுதிய பல பதிவுகள் இது போல் காபி பேஸ்ட்  மற்றும் பெயர் மாற்றம் செய்து அச்சு ஊடகத்தில்  வரும் வாய்ப்பு அதிகம்...


விழிப்புடன் இருங்கள்....


 விழிப்புடன்இருந்தால் மட்டும் என்ன செய்ய முடியும்.... நியாயமான கேள்விதான் என்ன செய்ய முடியும்....?????



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..


100 comments:

  1. அட்றா சக்கை... பகல் கொள்ளை மாதிரில்லா இருக்கு... இதைக் கேட்டே ஆகனும்...


    என்னோட கவுஜையையே ரெண்டுபேரு காப்பிபேஸ்டிருக்கான்...
    நீஙக எழுதுனதை மட்டும் வுட்டுருவாங்களா என்ன? கண்டிப்பா கேளங்க...
    பாக்யா அலுவலகத்துக்கும் தெரியப்படுத்துங்க...

    சிபி செந்தில்குமாரின் பதிவுகளை புறக்கணிப்போமாக..

    ReplyDelete
  2. //சிபி செந்தில்குமாரின் பதிவுகளை புறக்கணிப்போமாக.///

    avarudaya blog link koduinga .. we will make tamilish and tamilmanam remove him

    ReplyDelete
  3. எனக்கும் இதே போன்ற ஓர் அனுபவம் நிகழ்ந்தது நண்பரே..என் ஓவியத்தை திருடி ஒருவர் ,என் கையெழுத்தை அழித்து தன் பெயரில் வெளியிட்டிருந்தார்..அதை தற்செயலாக நான் இணையத்தில் காண நேர்ந்தது ..அதிர்ந்து விட்டேன்.அவர் சினிமா படங்களில் எல்லாம் பாடல் எழுதுபவர்,பாடலாசிரியர் என்று விபரம் அறிந்தவர்கள் சொன்னார்கள்..சிலர் என்னிடம் சண்டை கூட இட்டார்கள்..நீங்கள் தான் அவருடையதை எடுத்து போட்டு கொண்டீர்கள் என்று..அவர் அப்படி செய்யமாட்டார்..அவர் நல்லவர் என்று..
    அப்புறம் என்நிலைக் குறித்து ஓர் பதிவே நான் எழுத நேர்ந்தது..
    http://padaipali.wordpress.com/2010/05/20/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/
    பாருங்கள் நண்பரே..இதைப்போன்ற செயல்கள் இணையத்தில், இப்போ நிறைய நடந்து வருகிறது..

    ReplyDelete
  4. I feel you should inform Bakya Editorial on this. silence will not work here.

    ReplyDelete
  5. உங்க ப்ளாக்கின் பெயர் மாதிரி நோகடிச்சுட்டாங்களே.

    இதுக்குத்தான் சொல்றது, எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி நல்லா எழுதாதீங்கன்னு :).

    நீங்கள் சொன்னது மாதிரி, உங்களின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. அண்ணே ,
    பகல் கொள்ளை அண்ணே இது ...,:(
    அப்போ சில கவிதைகள் வார இதழ்களில் வருகிறதே பதிவர்களை கேட்காமலே தான் போடுகிறார்களா ?

    ReplyDelete
  7. தோழர் ஜாக்கி !
    உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறேன் ...
    நீங்கள் சிபியிடம் அலைபேசாதது பெருந்தன்மை!
    அவர் தனது செயலை எண்ணி வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

    ReplyDelete
  8. இதுல கொடுமை என்ன தெரியுமா? நம்ம பதிவ படிக்கிறவன் ஒரு பய இருக்க மாட்டான். நம்ம பதிவ தப்பி தவறி பாத்திட்டு நாம காப்பி அடிசோம்னு சொல்லுவானுங்க. இந்த எழவுக்காக தான் நான் பதிவே போடுறதில்ல பல நாளா. வெக்கம் கெட்டவனுங்க.

    ReplyDelete
  9. ஜாக்கி,

    உங்க‌ள் ப‌திவு பார்த்து அதிர்ந்தேன். அலுவ‌ல‌கத்தில் இருந்து என்னால் பின்னூட்ட‌ம் இட‌ முடிய‌வில்லை. உங்க‌ள் ப‌திவின் லிங்கை கூகுள் ப‌ஸ்ஸில் போட்டிருக்கிறேன்.
    http://www.google.com/profiles/nvpathi#buzz

    பாக்யா இத‌ழுக்கு நேர‌டியா தொட‌ர்பு கொண்டு விள‌க்குங்க‌ள். அவ‌ர்க‌ளை அடுத்த‌ புத்த‌க‌த்தில் விள‌க்க‌ம் வெளியிடுமாறு கேளுங்க‌ள். அதுதான் இதுபோன்ற‌ அடுத்த‌வ‌ன் பெற்ற‌ குழ‌ந்தைக்கு த‌ன்னை அப்ப‌னாக‌க் காட்டிக் கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு ச‌ரியான‌ செருப்ப‌டியாக‌ இருக்கும்.

    இதை உங்க‌ள் ப‌திவில் பின்னூட்ட‌மாக‌ போட‌வும்.

    ந‌ன்றி
    வெண்பூ

    ReplyDelete
  10. உங்க வலையின் பெயரிப் போலவே உங்களை ஆக்கீட்டாங்களே தோழர் :(

    ReplyDelete
  11. எழுதியவரின் அனுமதியில்லாமல் வேறு அச்சு ஊடகங்களில் அவருடைய படைப்பை வெளிட்டமைக்கு நானும் எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  12. அனுமதி பெறாமல், தன் சொந்த பெயரில் அப்படியே காப்பி அடித்ததை என்னவென்று சொல்லுவது. ரொம்பக் கொடுமை அண்ணா. :(

    ReplyDelete
  13. நன்றி நாஞ்சில்...

    நன்றி பிரதாப்....

    புறக்கணிப்பு பெரிய வார்த்தை இனி அந்த தவற்றை அவர் செய்ய கூடாது....பெரிய இழப்பு இதனால் இல்லை என்றாலும் ரொம்பவும் வருத்தமாக இருக்கின்றது....

    அவர் தளத்தை லிங்கில் கொடுத்தால் அது நன்றாக இருக்காது என்பதால் கொடுக்கவில்லை ....

    இப்போதுதான் தளத்தை ஆரம்பித்து இருக்கின்றார்... அவர் அது போல் செய்யாமல் இருந்தால் போதும்...மற்றவர்களும் இதை உணர வேண்டும்....

    ReplyDelete
  14. அண்ணே,
    எனக்கும் இதுப்போல இரண்டு முறை ஆயிருக்கு,ஆனால் என்ன வலைப்பதிவிலேயே வெளியிடுவார்கள்,உங்க பேர்ல அது பாக்யால வந்திருந்தா எவ்வளவு பெருமையாயிருக்கும் எங்களுக்கெல்லாம்.சிவன் சொத்து குல நாசம்

    ReplyDelete
  15. கண்டிக்கத்தக்க செயல்.

    ReplyDelete
  16. பாக்யா இதழை யாருமே படிப்பதில்லைன்னு முடிவே செஞ்சிட்டாரா?என்ன தைரியம் இருக்கும்,நண்பர் செந்தில்குமார் நீங்கள் ஜாக்கிசேகர் பெயரிலேயே அதை செய்திருந்தால் நாங்கள் எவ்வளவு மகிழ்ந்திருப்போம்,ஜாக்கி அண்ணன் அதை பதிவில் போட்டு உங்களுக்கு ஹிட் வாங்கிகொடுத்திருப்பாரே,இப்போது பாருங்கள்,யோசியுங்க நண்பர்களே

    ReplyDelete
  17. பேர், புகழ் வேண்டும் அதற்காக ஒருவர் எழுதியதை மற்றொருவர் பெயரில் போடுவது நியாயமில்லை....

    இதை வன்மையாக கன்டிக்கிறேன்....

    ReplyDelete
  18. என் பதிவு விமர்சன்ம எல்லாம் பல பிரபல பத்திரிக்கைகளில் ஆங்காங்கு சிறு சிறு மாற்றங்களுடன் இன்னமும் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது. அது மட்டுமில்லாமல் பல சிறு சேனல்களுக்கு என் திரைவிமர்சனத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்வதும் தெரிந்ததே.. என்ன செய்ய..?

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  19. வருந்துகிறேன், மிகவும் கேவலமான செயல்,

    எனது பதிவையும் ஆங்காங்கே போட்டு விட்டு நன்றி: இணையம் என்று மாட்டி விடுவார்கள்

    ReplyDelete
  20. வன்மையாக கண்டிக்க தக்கது. நம்ம எழுத்துகளுக்கு காப்பி ரைட்ஸ் வாங்க முடியுமான்னு பாக்கனும்.

    ReplyDelete
  21. கண்டிக்கத்தக்க செயல்...

    ReplyDelete
  22. கேட்டு இருக்கனும்ங்க. கேபிள் சொல்றா மாதிரி, இல்லாட்டி திருடறது தொடருங்களே.

    ReplyDelete
  23. வருந்தத்தக்க செயல் ஜாக்கி எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. இப்போதுதான் தளத்தை ஆரம்பித்து இருக்கின்றார்... அவர் அது போல் செய்யாமல் இருந்தால் போதும்...மற்றவர்களும் இதை உணர வேண்டும்.... //

    பாராட்டுகிறேன் ஜாக்கி.

    அதேசமயம் இது வருத்தம் தரக்கூடிய விஷயம். இனி இது போன்று நடவாதிருக்கட்டும்.

    ReplyDelete
  25. கண்டிக்கப்படவேண்டிய செயல். :( பாக்யா இதழுக்கு தெரியப்படுத்தி அடுத்த இதழில் விளக்கம் கொடுக்கவும் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  26. ஐயா பதிவுலக நண்பர்களே எல்லோரும் உங்க பதிவில் கொட்டை எழுத்தில் காபிரைட் இன்ஃபார்மேஷன் வைக்கவும்.இந்தியாவில் ப்லேகாரிசம் பெயர்போனதாகையால் படைப்புரிமைக்கு மதிப்பே இருப்பதில்லை,நீங்கள் அந்த காபிரைட் இன்ஃபோ வைத்தாலாவது பயப்படுவார்கள்
    http://myfreecopyright.com/

    ReplyDelete
  27. வெகுஜன பத்திரிக்கைகளின் இந்த காப்பியை ஆதரிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கதே!!!
    கூட்டிக்கழித்துபார்த்தால் வலைப்பதிவையே மறுபதிவு செய்வார்கள் போலிருக்கிறது,வெகுஜன இதழ்கள் படிப்பதே விட்டுப்போய்விட்டது.

    ReplyDelete
  28. வருத்தப்படவேண்டிய விஷயம்

    அதே நேரம் உடனடி நடவடிக்கை தேவை

    பாக்யா இதழுக்கு எழுதுங்கள்

    ReplyDelete
  29. அண்ணே, அந்த இதழில் நன்றி -ஜாக்கிசேகர் என வரவேண்டியது,மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும்.நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன்.விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம்.நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம்.

    ReplyDelete
  30. விடுங்க பாஸ் ஒரு பிச்சை காரன் உங்க அனுமதி இல்லாம உங்க காசுல சாப்டன்னு நெனசுக்காங்க

    ReplyDelete
  31. என்னுடைய வன்மையான கண்டனங்கள்.

    ReplyDelete
  32. வருத்தமான விஷயம். கண்டிப்பாக நடவடிக்கை எடுங்கள் ஜாக்கி. அப்படியே விட்டு விடாதீர்கள்.

    ReplyDelete
  33. வருத்தமான விஷயம்.

    இனி இது போன்று நடவாதிருக்கட்டும்.

    பாக்யா இதழுக்கு எழுதுங்கள்

    ReplyDelete
  34. நான் முதல்ல இந்த பதிவை பார்த்த போதே + ஓட்டு போட்டுவிட்டேன் ஜாக்கி. சி.பி. செந்தில்குமார் கண்டிப்பா வந்து பதில் சொல்லுவார்ன்னு நினைச்சேன். வெகுஜன பத்திரிக்கையில் எழுதிகொண்டிருப்பவர் இப்படி வேண்டுமென்றே செய்திருந்தா அதையும் 567 பாலோயர்ஸ் வைத்திருக்கும் உங்க பதிவை செஞ்சிருந்தா இதை நீங்க பாக்யா இதழுக்கு தெரிவிப்பீங்கன்னு தெரியாதா? அது போல இப்படி ஒரு பதிவும் போடுவீங்கன்னு தெரியாமையா இருக்கும். அப்படி நடந்தா பின்னர் அதனால் அவரது ezuththu entha paththirikkaiyum seendaathu enpathum avarukku theriyaathaa. ennavoo thappu nadanthu poochu. marappoom mannippoom jaakky. (thidiirnnu thamil cut aahi pochu)

    ReplyDelete
  35. வருத்தப்படாதீர்கள் ஜாக்கி, உங்கள் பதிவுகளை திருட முடியுமே தவிர உங்கள் அறிவை அல்ல, இலவச விளம்பரம் என நினைத்து கொள்ளுங்கள், அதற்காக நடந்த விஷயம் சரி என சொல்லவில்லை, பாக்கியாவில் உங்கள் பதிவு திருடி வெளியிடப்பட்டது என்பது உங்களுக்கு புகழ் சேர்க்கும் விஷயம் தானே? ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. உன்மை வெளி வந்தே தீரும் அல்லவா? வழக்கம் போல உங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  36. நடந்த உண்மை புரியாமல் அவசரப்பட்டு விட்டார் ஜாக்கி.போன் போட்டு கேட்டு விட்டு பதிவு போட்டிருக்க வேண்டும்.உங்க பதிவையும்,அவர் பதிவையும் கீதப்பிரியன் பதிவையும் அவரவர் பெயரை போட்டெ பாக்யா விற்கு அனுப்பினார்.ஆனால் பாக்யா செந்தில் பெயரை மட்டுமே வெளியிட்டது.இது பாக்யா தவறு.ஊர் உலகத்துக்கு தெரிஞ்ச பத்திரிக்கைக்கு அனுப்பும் போது விவரம் தெரிஞ்ச உள்ளூர் ஜாக்கி க்கு தெரியாமல் போய் விடுமா இதை செந்தில் யோசிக்க மாட்டாரா.அவர் சொந்தமாக மிக அதிக அளவில் எழுதி உள்ளார்.உங்கள் படைப்பை பயன்படுத்தி புதிதாக புகழடையும் எண்ணம் அவருக்கு இல்லை.நான் அவரை பற்றி நன்கு அறிந்த நண்பர் என்ற முறையில் தங்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  37. சின்னப்புள்ள தனமா இருக்கு!போகட்டும் விட்டுவிடுங்கள்! இனிமேல் சென்னிமலை சிபி செந்தில் குமார் இப்படியான வேலைகளைச்செய்யமாட்டார்.

    ReplyDelete
  38. உழைக்காமல் கிடைக்கும் புகழ் நிலைக்காது...அவரின் பின்னூட்ட விளக்கம் எரிச்சலையே தருகிறது.

    இவர்களை புறக்கணித்து விட்டு, தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

    ReplyDelete
  39. Hi Jackie,

    Thought of scraping my view in tamil, but will mislead from what I tried to convey.
    1) This post actually meets ur blog heading. Sorry if it heads.. even I do feel bad for you.
    2) Literary works can be copied. even I have copied from some blog, since literatures can be explained only by few streamlined scholars.
    But this is totally arrogant.
    3) You should be proud for copy pasting your work. I could just think nothing other than the writer's inefficiency. Evlo try pannirupparu atha podanum , since he failed to find the exact wording and linenings he copy pasted.
    4) You told he is a new blogger right. This might be a trick to attract all your subscribes (i think). Good you did not mention the url other wise everyone will hit it. Positively or negatively number of hits will motive a website.
    5) I am happy to hear two things. Firstly you are not interested in speaking to bakia editorial and second thing, you effort to publish one movie. to watch 15 movies to publish 1 movie is unimaginable and hatsoff to your effort. Keep it up.


    Dont get demotivated. It happens (always for the best people) :)

    Yours,
    Anantha

    ReplyDelete
  40. அண்ணே என்னன்னே இது ....பகல் திருட்டை விட மோசமா இருக்கு ....

    இப்படி போடறதுக்கு முன்னடியாச்சு உங்களோட அனுமதியை கேட்டிருக்கணும் ......போட்டது போட்ட பிறகு , உண்மை தெரிஞ்சு அப்பரும் அந்த ஆளு வந்து பின்னோடதுல சொல்லுறதெல்லாம் ரொம்ப ஓவர் .....

    பாக்யா .....அதே ஒரு கட் காபி பேஸ்ட் பத்திரிகை தானுங்க ......ஒரு தடவை நான் ஒரு புஸ்தகத்துல படிச்சதை அப்படியே பாக்யராஜ் சார் தானோட சொந்த கற்பனை மாதிரியே எழுதிருந்தை பார்த்து நொந்து போயிட்டேன்னே ....

    அந்த issue ல உங்க பெயர் வந்திருந்தா கொஞ்சமாச்சும் உங்களுக்கும் எதாவது புது வியாபாரம் கிடைச்சிருக்கும் ....

    நீங்க அந்த பத்திரிகை காரங்க கிட்ட பேசுங்க ண்ணே..... ரொம்ப ஓவரா போனாங்கன்ன பிறகு பார்த்து கொள்ளலாம் ....நமக்கும் சூது தெரியும்ன்னு காட்டிருவோம்

    ReplyDelete
  41. கண்டிக்கப்படவேண்டிய செயல். பாக்யா இதழுக்கு தெரியப்படுத்தி அடுத்த இதழில் விளக்கம் கொடுக்கவும் செய்ய வேண்டும். கண்டிப்பா தட்டிக் கேக்கணும்ணே :-((((((

    ReplyDelete
  42. பத்திரிக்கைன்னு இல்லைன்னே ....பல இணையதளங்களே இப்படி கட் காபி பேஸ்ட் செய்ஞ்சு தான் காலத்தை ஓட்டிகிட்டு இருக்கு....

    இவங்களுக்கெல்லாம் சொந்த செலவுல ஜெட்டி போட தெரியாது போலிருக்கு ....

    ReplyDelete
  43. உழைப்புத்திருட்டு என்பது மன்னிக்க முடியாத குற்றம். எத்தனை சமாதானம் கூறினாலும் மனது ஏற்காது. இதை பாலகுமாரன் மிக கோபமாக எழுதியிருப்பார்.மனம் தளரவேண்டாம் ஜாக்கி! நண்பர்களைப் புரிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது என்று நினைத்து கொள்ளுங்கள்.இதனால்,உங்கள் புகழுக்கு களங்கம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை.மாறாக மென் மேலும் பெருகும்.போலிகள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை.தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete
  44. உங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது நல்லது.

    அதே நேரம் பாக்யா ஆசிரியர் குழுவிற்கு நீங்கள் இதைத் தெரியப்ப்டுத்தவும் வேண்டும். அவர்களும் கவனமாக இருப்பார்கள்.

    மேலும் உங்கள் விமர்சனம் அவர்களுக்குப் பிடித்திருப்பதால்தான் பதிவேறி இருக்கிறது. எனவே நீங்களே நேரடியாக அங்கே எழுதவும் வாய்ப்புக் கிடைக்கலாம்.

    வாழ்த்துக்கள் சேகர்.

    ReplyDelete
  45. சென்னிமலை சிபி செந்தில் குமார் க்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்...

    ReplyDelete
  46. வருத்தங்கள் ஜாக்கி.

    கிருபாவின் பின்னூட்டம் அருமை.
    உங்கள் பதிவுகளை திருட முடியுமே தவிர உங்கள் அறிவை அன்பை அல்ல.
    மறப்போம் மன்னிப்போம்

    ReplyDelete
  47. மிகுந்த வருத்தம் தரும் செயல்! என்ன மனிதர்கள் இவர்கள்!

    ReplyDelete
  48. கண்டிக்கத்தக்க விஷயம், என் கண்டணங்களை பதிவு செய்கிறேன்.
    கண்டிப்பா பாக்யா எடிட்டருக்கு கடிதம் அனுப்பு, உண்மையையும் எதிர்ப்பையும் பதிவு செய்வது அவசியம். செந்தில் குமார் எடிட்டரிடம் சொல்வதாக பின்னூட்டம் போட்டிருக்கிறார், அவரோட வெர்ஷன் வேற மாதிரி இருக்கும், நீ கடிதம் எழுத வேண்டியது அவசியம்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  49. அன்புள்ள சேகர்

    படைப்புத்திருடர்களை உங்கள் சார்பில் நானும் கண்டிக்கிறேன்.

    என் படைப்பான பாரதி ஓவியத்தைத் தொடர்ந்து திருடுவது அச்சிலும், இணையத்திலும் நடந்துகொண்டே இருக்கிறது.1982ல் தீம்தரிகிட இதழைத்தொடங்கியபோது நான் வரைந்த பாரதி ஓவியத்தை அந்த இதழுக்கும் நான் தொடர்புள்ள ஞானபாநு பதிப்பகம், பரீக்‌ஷா, கோலம் அமைப்பு அனைத்துக்கும் சின்னமாகப் பயன்படுத்தி வருகிறேன். பத்திரிகைகள், பதிப்பகங்கள், அச்சகங்கள், இணைய தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள், சினிமா தயாரிப்பாளர்கள் எனப் பலரும் இதைத் திருடிப் பயன்படுத்துகிறார்கள். அண்மையில் செம்மொழி மாநாட்டின்போது மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் என் பாரதி ஓவியத்தை டீ ஷர்ட்டில் அச்சிட்டு விற்றுக் காசு பண்ணியிருக்கிறார்கள். எனக்குத் தெரியவ்ரும்போதெல்லாம், நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறேன். பலரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். நஷ்ட ஈடும் அளித்திருகிறார்கள். என் பாரதி ஓவிய வரலாறு பற்றி என் இணைய தளத்தில் ஓவியம் பகுதியில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். www.gnani.net.

    ஓயாமல் படைப்புத்திருடர்களை அமபலப்படுத்துங்கள். வாழ்த்துகள்.

    அன்புடன் ஞாநி

    ReplyDelete
  50. Congrats! (!) Be +ve (That is not only my blood group)

    ReplyDelete
  51. எனக்கும் இதே போன்ற ஒரு அனுபவம் இருக்கிறது, எனது பதிவொன்றை இலங்கை இதழ் ஒன்றில் என்னிடம் அனுமதி கேட்காமல் போட்டிருந்தார்கள், நல்ல வேளை எனது பெயரை அதில் போட்டிருந்தார்கள். அதை நான் கேட்க போய் பெரும் பிரச்சினையாகிவிட்டது.

    அந்த பிரச்சனை ரொம்ப அனுபவங்களை பெற்று தந்தது

    ReplyDelete
  52. //சி.பி.செந்தில்குமார் said...

    அண்ணே, அந்த இதழில் நன்றி -ஜாக்கிசேகர் என வரவேண்டியது,மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும்.நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன்.விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம்.நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம். //
    செந்தில்.. மற்றவரின் பதிப்பை ஒரு வெகுஜன பத்திரிக்கைக்கு அனுப்பும் முன்னர் சம்பந்தபட்டவரின் அனுமதி வாங்க வேண்டும் என்ற அடிப்படை விசயம் கூடவா தெரியாது உங்களுக்கு.. அது எப்படிங்க just like that ஒரு sorry மட்டும் கேக்கறீங்க.. இன்னும் கடுமையாக கேள்வி கேட்க தோனுது.. பொது இடம் வேண்டி அமைதி காக்க வேண்டியிருக்கு..

    ReplyDelete
  53. ஜாக்கி இந்த விசயத்தில் நீங்க கொஞ்சம் அவசரப்பட்டு விட்டர்கள்.பொறுமை காக்கவும்

    ReplyDelete
  54. தல இவர்களை என்ன செய்வது தல ஓரு பதிவு போட எவ்வளவு கஷ்டப் படுகிறோம்.....

    http://adrasaka.blogspot.com/

    இவர் தானே அவர்...

    ReplyDelete
  55. [[[சி.பி.செந்தில்குமார் said...
    அண்ணே, அந்த இதழில் நன்றி -ஜாக்கிசேகர் என வர வேண்டியது, மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும். நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன். விடுபட்டமைக்கு வருந்துகிறேன். அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம். நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம்.]]]

    உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி செந்தில்..! இப்படியொரு பதிவொன்று பத்திரிகைகளில் வரப் போகிறது என்று முன்கூட்டியே நீங்களாவது ஜாக்கியிடம் சொல்லியிருக்கலாம்..! அல்லது இந்தப் புத்தகம் வந்த பின்பாவது நடந்த குழப்பத்தை அவரிடம் முன்பே தொலைபேசியில் சொல்லியிருக்கலாம்..!

    சரி போகட்டும்.. விடுங்கள்..! அடுத்த முறை எந்தப் பதிவராக இருந்தாலும் முன்கூட்டியே அவர்களிடம் ஒரு தகவலைத் தெரிவித்து விடுங்கள்..!

    நன்றி..!

    ReplyDelete
  56. http://adrasaka.blogspot.com/2010/08/blog-post_03.html ITHAIYUM PADIKKAVUM

    ReplyDelete
  57. இது வருத்தமான விசயம் ஜாக்கி..

    ReplyDelete
  58. முதலில் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...

    சி.பி.செந்தில்குமார் பின்னூட்டத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்... அவரது வருத்தம் பாக்யா இதழிலும் வெளிவந்தால் தான் உண்மையான பிராயச்சித்தமாக இருக்கும்... அதையும் செய்வார் என நம்புவோம்....

    ReplyDelete
  59. ஜாக்கி,
    கண்டிக்கத்த செயல்.எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  60. sir unga eluthu avalavu madhipudaiyadhu.
    neenga kandipa itharku nadavadikai edakavenum.

    ReplyDelete
  61. //பதிவுலக படைப்பாளிகளான கேபிள் சங்கர்,கீதப்பிரியன்,உண்மைத்தமிழன்,ஜாக்கிசேகர்,சவுக்கு உட்பட 14 படைப்பாளிகளின் படைப்புகளை அவர்கள் பிளாக் முகவரியோடு பாக்யாவில் எழுதினேன்.//

    இதில் யாரிடமாவது உங்கள் படைப்புகளை பாக்யாவில் எழுதினேன் என்று முன்னதாக கூறினீர்களா

    இந்த கட்டுரை ஜாக்கி பெயரிலேயே வந்தது என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை ஜாக்கி இதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி, அவருக்கு தெரியாமலேயே நீங்கள் அதை பாக்யாவிற்கு அனுப்பி, இரண்டும் ஒரே நாளில் (ஜாக்கி பெயரிலேயே) வெளிவந்தால் ஆனந்த விகடனில் ஜாக்கியை பற்றி என்ன நினைப்பார்கள்

    ஒரே நேரத்தில் ஒரே படைப்பை இரண்டு பத்திரிகைகளுக்கு அனுப்புகிறான் என்று தவறாக நினைக்க மாட்டார்களா ?

    வெகுசன ஊடகங்களில் 18 வருடமாக எழுதியும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறுவதை நம்ப சிரமமாக உள்ளது

    ReplyDelete
  62. dear jocky
    its all in the game
    continue writing
    regards

    balu vellore

    ReplyDelete
  63. முடிந்தது முடிந்து விட்டது.

    இதன் மூலன் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : தயவு செய்து அடுத்தவர்களின் படைப்புகளை அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் பெயரில் கூட பயன் படுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்

    ReplyDelete
  64. கண்டிக்கவேண்டிய செயல் . அவர் பதில் கூட உண்மை போல இல்லை..

    ReplyDelete
  65. அடுத்தவரின் படைப்புகளை அவர்களின் பெயரில் வெளியிட்டால் கூட அனுமதி வாங்கி வெளியிட்டால் இது போல் அதிர்ச்சிகளை தடுக்கலாம்

    ReplyDelete
  66. அபிஅப்பா, அவரோட பதிவுகளையும் யாராவது காப்பி அடிச்சா இப்படித்தான் விளக்கம் கொடுத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்ப தெரிஞ்சே பண்ணா தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்களா அபிஅப்பா?

    ஏன் வேறு ஏதாச்சும் பெரிய இணைய இதழின் கட்டுரையை காப்பி பண்ணி பத்திரிக்கைக்கு அனுப்பச்சொல்லுங்க பார்க்கலாம்....

    ReplyDelete
  67. கண்டிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  68. இன்னொரு வலைதளத்திலும் இதுபோல் பிரபல பதிவுகளை வேறு பெயரில் போட்டிருந்தார்கள், நான் கண்டித்து மின்னஞ்சல் அனுப்பியதும் அவர்கள் வருத்தம் தெரிவித்து நீக்கி விட்டார்கள்..

    செந்தில்குமார் உங்களிடம் சொல்லிவிட்டு அனுப்பியிருக்கலாம்..!

    ReplyDelete
  69. உணமையிலே வருத்தப் படவேண்டிய விஷயம். என்னால் முடிந்த வரை சில திருட்டுப் பதிவுகளைத் தொகுக்க முயன்றுவருகிறேன். ஆனால் வாசகரிடம் போய்ச் சேர்வதில்லை.
    http://pirathu.blogspot.com

    ReplyDelete
  70. cp senthil kumar oru onnam number thirudan yerkanavea 8 varusam munbu GA publication in ungal junior il velivantha ivanudaiya oru kavithai veru yengoo thirudiyathu endru kandu pidikkappattathu piragu avarkal senthil kumarai ini un padaippu yethuvum yengal pakame vara koodathu yendru miratti irunthargal

    ReplyDelete
  71. பதிவிலிருந்து திருடி இப்ப இதழ்களில் கூட போட ஆரம்பிச்சிடானுங்களா

    ரொம்ப மோசமான உலகமடா

    ReplyDelete
  72. அருவருப்பான செயல். கண்டனத்துக்குரியது!

    ReplyDelete
  73. அழுவதா சிரிப்பதா தெரியவில்லை!

    பதிவில் உள்ள சந்திப்பிழையைக்கூட சரிபண்ணாமல் அப்படியே பயன்படுத்தியுள்ளார். ஈயடிச்சான் காப்பி என்பதெல்லாம் பழசோ?

    http://creativecommons.org/licenses/

    னு ஒரு தளம் பார்த்தேன். நம்முடைய படைப்பாக்கங்களுக்கான காப்புரிமை. பயன்படுத்திக்கொள்ளவும்!

    ReplyDelete
  74. ஜாக்கி சேகர் மற்றும் சென்னிமலை செந்தில் குமார் அவருக்கும் முதலில் கண்டனத்தை தெரிவித்த்துக் கொள்கிறேன் இது உண்மையில் இவர்கள் இருவருமாகவே சேர்ந்து நம்மை ஏமாற்றும் வழிதான் இது செந்தில் குமார் பிரபல பதிவர் ஆக இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் நாடகம் தான் இது

    ReplyDelete
  75. என் கண்டனங்களும்..

    ReplyDelete
  76. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பதிவு, பத்திரிக்கையில் வந்ததற்கு காரணமானவரை தெரிந்தும் பிரச்னையை பேசித் தீர்ப்பதற்குள்ளே, இப்படி பதிவு செய்வது எதோ விளம்பர யுக்தியாகத் தெரிகிறது.
    மேலும் உங்கள் விமர்சனங்களில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் எல்லாம் உங்கள் கேமிராவிலோ அல்லது பதிப்புரிமை இலவசமாக்கப்பட்ட படங்களாகவோ இருந்தால் உண்மையிலே உண்மையானப் படைப்பாளி பாதிக்கப் பட்டுள்ளார் எனக் கொள்ளலாம். அப்படியில்லாமல் இருந்தால் "வல்லவனுக்கு வல்லவனுண்டு உலகிலே" அப்படின்னு போகவேண்டியதுதான்.

    ReplyDelete
  77. உங்கள் தளத்தில் கண்டனம் சொல்லிய சிலர், தங்கள் பதிவும் திருடப்பட்டுள்ளதாக ஒரு விளம்பரம் கொடுப்பவர்களுக்கும் மேலேச் சொல்லிய தகவல் பொருந்தும்.

    ReplyDelete
  78. ஜாக்கி...

    நீங்கள் சொன்னது போல், கையிலிருந்து பல ஆயிரங்கள் பணம், நேர விரயம், அலைச்சல், பின் படத்தை முழுதும் உள்வாங்கி பார்த்தல், பின் மனதில் உள்வாங்கியதை நினைவு கூர்ந்து கோர்வையாக ஒரு பதிவாக / திரை விமர்சனமாக எழுதுதல் எவ்வளவு கடினம் என்று நினைத்து பார்க்கிறேன்... மலைத்து போகிறேன்...

    நீங்கள் சொன்னது தான் சரி... உங்களிடம் கேட்டிருக்க வேண்டும் என்பதை விட, உங்கள் பெயர் அங்கு இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்...

    பாக்யா நாளிதழுடன் பேசுங்கள்... முடிந்தால், ஆதார பூர்வமாக விளக்கவும்...

    இந்த பின்னூட்டத்தின் மூலம் உங்கள் பதிவை அப்படியே காப்பியடித்து தன் பெயரை போட்டுக்கொண்ட சென்னிமலை சிபி செந்தில் குமார் அவர்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்..

    ReplyDelete
  79. \\நாஞ்சில் பிரதாப் said...

    அபிஅப்பா, அவரோட பதிவுகளையும் யாராவது காப்பி அடிச்சா இப்படித்தான் விளக்கம் கொடுத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்ப தெரிஞ்சே பண்ணா தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்களா அபிஅப்பா?

    ஏன் வேறு ஏதாச்சும் பெரிய இணைய இதழின் கட்டுரையை காப்பி பண்ணி பத்திரிக்கைக்கு அனுப்பச்சொல்லுங்க பார்க்கலாம்.... \\

    இல்லை பிரதாப். நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வர்வில்லை. தான் செய்த தவறு தன்னையே எந்த அளவு பாதிக்கும் என்கிற மனநிலை கூட அவருக்கு இல்லை என்றே சொல்கிறேன். அதனால இனி இங்க இப்படி கிழிக்கப்பட்ட பின்பு இனி அப்படி நிச்சயமாக செய்ய மாட்டார்ன்னு நினைத்து தான் மறப்போம் மன்னிப்போம்ன்னு சொன்னேன். நான் அவரு செஞ்சது சரின்னு சொல்லவேயில்லை.

    ReplyDelete
  80. சரி விடுங்கப்பா, நடந்தது நடந்திருச்சு. அப்புறம் என்ன கண்கள் பனித்து இதயம் இனிச்சிட வேண்டியது தான...?

    ReplyDelete
  81. என்ன கொடுமை சார் இது? :-(

    ReplyDelete
  82. பிரபலமாயிட்டாவே இந்த தொல்லைதான் போங்க!!!

    ReplyDelete
  83. Dear Sir

    Just ignoring these people will not solve the problem. Expose him through the same magazine.
    If somebody lives in fools paradise
    let them be; we will not attempt to bring them out.
    But point them that they are in fools paradise.
    All the best
    SS

    ReplyDelete
  84. கண்டிக்கத்தக்க விஷயம் இது ..
    பாக்யா இதழுக்கு எதிராக கேஸ் கூட போடலாம் ..படைப்புத்திருட்டு ஈனத்தனமான செயல்..
    வெளிநாடுகளில் இது போல நடந்தால் நஷ்ட ஈடு கேட்ப்பார்கள் .. நீங்களும் கேளுங்கள் பாக்யா இதழிடம்..

    ReplyDelete
  85. எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

    எழுதியவரின் அனுமதி இல்லாமல் வெளியிடுவது வருந்ததக்க செயல்

    ReplyDelete
  86. இது பெருமைக்குறிய செய்திதான் ஜாக்கி...

    விடுத்தள்ளுங்க. தேவை என்றால், இதைப்பற்றி பாக்கியராஜ் சார் இடம் பேசலாம்.

    ஆனாலும் இது கண்டிக்கத்தக்கது. என் கண்டனத்தை நானும் பதிவுசெய்கிறேன்.

    இதை தடுக்க எந்தவித முறையும் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் வேதனை.

    ReplyDelete
  87. திருட‌ராய் பார்த்து திருந்தா விட்டால்
    திருட்டை ஒழிக்க‌ முடியாது

    ReplyDelete
  88. rajesh kannah
    antha idoit comment vaera pottirikkan, naanaga irunthirunthaal avanai naar naaraga kilithiruppen-

    ReplyDelete
  89. ஜாக்கி.. இதைப்பற்றி நண்பர் கார்த்திகேயன் சொன்னார். ஆனால் பின்னூட்டம் இட முடியாதபடி, வேலை அதிகமாகிவிட்டது. கிடைக்கும் நேரத்தில் இந்தப் பின்னூட்டம்.

    பதிவைக் காப்பியடிக்கும் Plagiarism, ஒரு கொடிய வியாதி. அதற்கு என்னுடைய முழு எதிர்ப்பையும் இங்கே பதிவு செய்கிறேன்.

    அந்தப் பதிவரிடம் பேசுங்கள் (ஒருவேளை இதுவரை பேசவில்லையெனில்). பேசி, அவர் செய்த தப்பை உறைக்கும்படி அவரிடம் சொல்லுங்கள். அதன்பின், பாக்யாவுக்கும் ஒரு கடிதமோ தொலைபேசியோ போடுங்கள்.

    இதனை இப்படியே விட்டுவிடவேண்டாம். ஏனெனில், கவனிக்கவில்லையெனில், இது மேலும் பெருகும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    உங்களுக்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுதுவதைத் தொடருங்கள். . . கவலை வேண்டாம். நாங்கள் அனைவரும் இருக்கிறோம். . .

    ReplyDelete
  90. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  91. பல எழுத்தாளர்களுக்கும் இது நடந்து கொண்டேதான் இருக்கிறது. பதிவர்களுக்கும் நடக்கிறது இப்போது. "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே கல்கி புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. யூத்ஃபுல் விகடனையே காப்பி பேஸ்ட் செய்து அனுப்ப அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? எழுதும் பழக்கம் இருப்பவர்கள் பல பத்திரிகைகளையும் படிப்பார்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியவரும் என்று கூட அந்த நாதாறிக்கு அறிவு இல்லை போலிருக்கிறது. அது சரி.. அந்தப்பிரபல பத்திரிகைகளுக்கு பொறுப்பு இல்லையா? அவர்கள் எல்லாம் அதை எழுதி அனுப்புபவர்களிடம் குறைந்தபட்சம் "இந்தப்படைப்பு சொந்தக்கற்பனையே" என்ற உறுதி மொழியைக்கூட வாங்குவதில்லை போலிருக்கிறது. கொதித்துப்போய் போன் செய்தாலோ, கடிதம் எழுதினாலோ எந்த பதிலும் இல்லை. கல்கிக்கு மெயில் அனுப்பினால் சிம்பிளாக "sorry" என்று ஒரு பதில் வருகிறது "பொறுப்பாசிரியர் சார்பாக" என்று யாரோ பெயர் போட்டு. அந்த "ஜான்ஸி ராணி" யாரென்றே தெரியவில்லை.

    ReplyDelete
  92. ரொம்ப வருத்தமா இருக்குங்க ஜாக்கி சேகர்.. இப்படியெல்லாம் வேற செய்றாங்களா..

    ReplyDelete
  93. நீங்க வேற, என்னோட கவிதை வரிகள் அப்படியே சினிமா பாட்டுல வரதைக் கேட்டு பல தடவை மெரண்டு போயிருக்கேன் !

    ReplyDelete
  94. Ꮤhy visitors still make use of to reaԀ news papers when in this
    technologiсɑl world the wole thing iis presented on net?

    ReplyDelete
  95. Hi there would you mind letting me know which webhost you're working with?
    I've loaded your blog in 3 completely different web browsers and I must say this blog loads a lot faster then most.
    Can you recommend a good hosting provider at a reasonable price?
    Cheers, I appreciate it!

    ReplyDelete
  96. Programmes TV à suivre en direct sur TF1 Séries Films.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner