நான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்திரன்..



தினமும் நீங்கள் செய்திதாள் வாசித்தால் இந்த படத்தில் வரும் பல விஷயங்கள் நீங்கள் படித்து இருக்கலாம்... அல்லது நண்பர்கள் மூலம் லன்ச் பாக்ஸ் ஓப்பன் பண்ணும் போது   இது போலான செய்திகைளை நீங்கள் கேட்டு இருக்கலாம்..... அது போலான விஷயங்களை பின்னனியில் வைத்து சமுகத்தின் பிரதிபலிப்பை அப்படியே காட்டுகின்றார் இயக்குனர் அவருக்கு முதலில் வாழ்த்துக்கள்...




இரண்டு பேர் பைக்கில் ஒரு கட்டை பை பிடித்த படி இறங்குகின்றார்கள்...அந்த அறையில் எல்லோரும் கஞ்சா புகைத்தபடி இருக்க... அந்த சுருட்டை முடி தலை கொண்ட பையன்... தரையில் உட்கார்ந்து  கட்டை பையில் இருந்து ஆடு வெட்டும் ஒரு பெரிய கத்தி எடுக்கின்றான்.... கட்டடிலுக்கு அடியில் இருந்து ஒரு  பொருளை இழுக்க அது கழுத்து அறுபட்ட பெண்ணின் தலை. அது உடலோடு ஒட்டிகொண்டு இருக்கின்றது.. அந்த வெட்டு பட்ட கழுத்தில் ஓங்கி ஒரு போடும் போது அந்த காட்சி  டிசால்வ்... இந்த படத்தில் இந்த காட்சி வரும் போது வேறு ஒருதளத்தில் பயணிக்கின்றது...


இப்போதுதான் ஈசிஆரில் சவுக்கு தோப்பில் ஒதுங்கும் ஜோடிகளை மிரட்டி கற்பழிப்பு செய்வது என்று நான் எழுதி இருந்தேன்... இப்போது இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்கள்... இபோது அந்த செய்தி இன்னும் விரைவாக பசங்களிடம் போய் சேரும்.... இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள்....


சமீபத்தில் கூட போருரில் துண்டு துண்டாக வெட்டபட்டு  ஒரு நடத்தர வயது பெண்மணியின் சடலம் கிடந்தது.... காரணம் ரொம்ப சிம்பிள்...அந்த பையன் ஒரு மெடிக்கல் காலேஜ் ஸடூடன்ட்... நிறைய பண்ம்...  அம்மா அப்பா வெளியூரில்... பையனுக்கு போதை பழக்கம்... சரி அவனை பார்த்துக்கொள்ள ஒரு சொந்தகார பெண்மணியை ஏற்பாடு செய்தார்கள்...


போதையில் இருந்த பையனை ஒரு உரிமைக்கு இப்படி போதையில் சீரழிகின்றாயே என்று கேட்ட ஒரே காரணத்துக்காக,, கொஞ்ச  நேரத்தில் போதையில் அந்த பெண்மணியை கொலை செய்து துண்டு துண்டாக  வெட்டி போரூர் குப்பையில் வீசி இருக்கின்றான்....


இது போலான விஷயங்களை பின்புலமாக வைத்துக்கொண்டு மிக டிடெயில்டாக கதை சொல்லி இருக்கின்றார் இயக்குனர்....இன்று கமிஷன் தகாறுக்கெல்லாம் மாணவர்கள் கொலை செய்கின்றார்கள்..  இத்தனைக்கு அவர்கள் எல்லாம் நம்மோடு நன்றாக பழகியவர்கள்...


கொலை செய்கின்றோம் என்றாலும் பெரியதாய் அலட்டிக்கொள்வது இல்லை.... அவர்களை பொறுத்தவரை போதை... அதற்காக எதையும் செய்யும் கல்லூரி மாணவ்ர்கள் இந்த சமுகத்தில் இன்னும் உலவி கொண்டு இருக்கின்றார்கள்... அவர்கள் உங்கள் பக்கத்துவீட்டில் இருக்கலாம்,.... அல்லது உங்கள் கல்லூரியில் பக்கத்து பெஞ்சு பார்ட்டியாக கூட  இருக்கலாம்.... அதனை தோள் உரித்து சொல்கின்றது இந்த படம்....


நான் மகான் அல்ல படத்தின் கதை என்ன???




ஜீவா (கார்த்தி) மிடில்கிளாஸ் குடுப்த்து பையன்... பிரியா  அப்பர்கிளாஸ் பெண்... ஒரு திருமணத்தில் பார்த்ததும் காதல்...ஒரு சரியான சுபதினத்தில் அவளும் அவனை காதலிக்க...அப்புறம் கல்யாணம்தானே என்று கேட்காதீர்கள்.... ஜீவாவின் அப்பா ஒரு கொலைக்கு சாட்சியாக  இருக்க ...அவரை போட்டு தள்ளுகின்றார்கள்.... ஒரு மிடில்கிளாஸ்பையன் தன் அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை எப்படி கண்டுபிடித்தான்  என்னவானான் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


இன்றைய சமுக நிகழ்வுகளின் பின்னனியில், ரொம்ப யதார்த்தமாக, ரொம்ப டிடெயில்டாக ,மிக சுவாரஸ்யமாக கதை சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள்...




இரண்டாவது படம் ஜெயிக்க சில காம்பிரமைஸ் செய்ய வேண்டும் என்ற இன்டேன்ஷன் இல்லாமல் படம் செய்து இருக்கின்றார்... அது ரொம்ப டிடெய்லாக சொல்லி இருக்கின்றார்...


கார்த்தி...பையாவுக்கு அடுத்து நல்ல ஸ்கோய் உள்ள கேரக்டர்.. அடி பின்னி இருக்கின்றார்... முதல் பாதியில் காதல் காட்சிகளில் இன்ன பிற விஷயங்களில் நிறையவே சுவாரஸ்யங்கள்....அந்த சுவாரஸ்யத்துக்கு கார்த்தி மற்றும் காஜல் காரணம்... அந்த ரொமாண்டிக்கும் ஒரு காரணம்...


ஆக்ஷன் காட்சிகளில் கார்த்தி நன்றாக செய்து இருக்கின்றார்... அந்த பேரம்பூர் ரயில் நியைத்துக்கு பக்கத்து டிராக்கில் நடக்கும் முதல் சண்டைகாட்சியில் அப்பாவை கொன்ற அந்த வேகம் நன்றாக முகத்தில் காட்டி இருக்கின்றார்....


சின்ன சின்ன விசயங்களில் --சுவாரஸ்யம்... முக்கியமாக திருமணத்துக்கு வரவேற்ப்பு கொடுக்கும் பெண்ணிடம் பன்னீர் எப்படி தெளிக்கவேண்டும் என்று சொல்லி காட்டுவது...


கடற்கரையில் பல விஷயங்களை மிக உண்ணிப்பாக இயக்குனர் கவனித்து இருக்கின்றார்..கடற்கரை மணலில் காஜல்  மடியில் படுத்து இருக்கும் போது போலிஸ்காரர் வர தூங்குவது போல் நடிக்கும் அந்த ஒரு காட்சி  கவிதை...


 டிரஸ்  எடுத்து லிப்டில் லிப் கிஸ் அடித்து பணம் கட்டும் போது உள் உதட்டை தடவி பார்த்து காயம் இருக்கின்றதா? என்று சோதித்து விட்டு பணம் எடுத்துக்கொடுக்கும் காஜலும் அது போலான தருணங்கள் நம் அனைவர் வாழ்க்கையிலும் வந்து போயிருக்கும் கணங்கள்தான்...


காஜல் இந்த படத்தில் தொப்புள் காட்டாமல் நடித்து இருக்கின்றார்... இடைவேளைவரைதான் அவர் பங்கு அதன் பிறகு கதை வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விடும் போது காஜலை மறந்து போகின்றோம்....


காஜல்  வாக்கிங் டிரஸ்சில் நடந்து வரும் போது பெசன்ட் நசர் பீச்சில் மிகப்பெரிய வளர்ச்சி கண்ட இது போலான பெண்களை நாம்  பார்த்து இருக்கலாம்....அந்த இரண்டு கண்களும் நிறைய கதைகள் சொல்கின்றன...


காத்தியின் தங்கையாக நடித்தது இருப்பவர்.... ஏதோ டிவியில் காம்பியர்  முகம் பார்த்த ஞாபகம்... நன்றாக செய்து  இருக்கின்றார்... இண்டர்வெல்லுக்கு முன் வரும் காட்சிகளில் 3 காட்சிகளில் வருகின்றார்... அதில் இரண்டு காட்சிகளில் சேம் நைட்டி... வேறு ஒரு நாள்  என்பதால் காம்பரமைஸ் ஆகலாம்....முதல் காட்சியில்  நைட்டிக்குள் பேன்ட் போட்டு இருக்கின்றார்....மிட் ஷாட்தான் ரெடி ரெடி என்று டைரக்டர் பரபரத்து இருக்க வேண்டும்... ஒளிப்பதிவாளரும் முட்டிக்கு கீழே வராது என்று தைரியம் சொல்லி இருக்க வேண்டும்....


மதி ஒளிப்பதிவாளர்...கார்த்தியோடு இது இரண்டாவது படம்..முதல்படம் பையா... இரண்டாவது இந்த படம்.... நன்றாக செய்து இருக்கினறார்... மிக முக்கியமாக அந்த கடைசி 20 நிமிட ஆக்ஷன் காட்சி....


500பிரேம்சில்...16 எம் எம்மில் ஷுட் செய்து அதை ஸ்டெரெட்சு செய்ம் போது அந்த  டீடெயில் திரையில்  நன்றாக இல்லை...மதியின் கோணங்க்ள் ஆக்ஷன் காட்சிகளில் மாத்திரம் அல்ல பல கோணங்களில் முக்கியமாக  அந்த முதல் கடற்கரை ரேப்சீன்... அற்புதமான படப்பதிவு.....




கார்த்தியின் குடும்பம் நிஜ குடும்பமாய் நம் மனதில் பதிகின்றது.... அதனால்  காத்தியின் அப்பா இறப்பின் போது நம் கண்களில் நீர் கசிவதை தவிர்க்க முடிவதில்லை....


என் அப்பாவைவிட கார்த்தி ரொம் நல்லவன் என்று சொல்லும் போது 6 மாதம் தெரிந்த கார்த்தியோடு 20 வருஷம் குடும்பம் நடத்திட்டு சொல்லு.. என்று சொல்லும் அந்த காட்சி வெரி நைஸ்...


அப்பா காசில் வாழும் பல பிள்ளைகள்  கார்த்தி போல்தான் இருக்கின்றார்கள்... அவர்களுக்கு குடும்ப பிரச்சனை பற்றி தெரிவதில்லை... நிறைய பெற்றோரும் செல்லத்தில் அப்படிதான் வளர்க்கின்றார்கள்...குடம்ப கஷ்டம் தெரியும் படி பிள்ளை ஏன் வளர்க்க வேண்டும் என்பதை காட்சியாக வைத்து குடும்பஸ்தனுக்கு சல்யூட் வைப்பது அழகு....


அந்த போதை பசங்க நல்ல தேர்வு.... நாண்பர்களே.. நண்பனின் காதலியை சின்ன பின்னபடுத்துவது புதுசு அல்ல... நைட்டியுடன் மாருதியில் ஏறும் அந்த பெண்.... போல பக்கத்து அக்கத்து வீடுகிளில் பார்த்து இருக்கலாம்....


அந்த சுருள் முடி பைய்ன்  மற்றும் ,ஸ்கெட்சு போடும் அந்த தாய் மாமன் கேரக்டர் அருமை....


ஒரு இடத்தில் கலவரம் எப்படி ஏற்படுகின்றது எதற்கு ஏற்படுகின்றது என்பதை இன்னோரு கோணத்தில் சொல்லி இருக்கின்றார்... இயக்குனர்..


ராயபுரம் ரவுடி பாத்திர படைப்பு நல்ல தேர்வு... அந்த தாடி வச்ச பையன் எல்லாத்துக்கு போட்டுடலாம் என்று கூவும் அந்த பையன்.. ஏற்கனவே சிறுவனாக ஏதோ படத்தில் பார்த்தாக நினைவு....நல்ல கேரக்டர்... கண்களில் அந்த வண்மம் யப்பா....


கார்த்தி நண்பனாக வெ.க.குழு படத்தில் நடித்த நண்ப்ர் மற்றும் வங்கி மேனேஜர் மனதில் நிற்க்கும் பார்த்திரங்கள்....


யுவனின் நிலா பாட்டு ரசிக்க வைக்கின்றது...


வசனம் பாஸ்கர் சக்தி நிறைவு.....


கலை இயக்குனர் ராஜீவன்... போலிஸ் வேஷத்தில் வருகின்றார்.... நன்றாக இருக்கின்றார்...




சமுக கண்ணாடியாக நிகழ்வுகளை படத்தில் வைத்து சுவர்ஸ்யமாக சொன்ன இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள்...
இயக்குனருக்கு இது இரண்டாவது வெற்றி......


கிளவுட் நைனுக்கு ஏதோ மச்சம் இருக்கின்றது....


படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்....


Directed by     Suseenthiran
Produced by     K. E. Gnanavelraja
S. R. Prakash Babu
S. R. Prabhu
Written by     Susindran
Bhaskar Sakthi
Starring     Karthi
Kajal Aggarwal
Jayaprakash
Soori
Music by     Yuvan Shankar Raja
Cinematography     R. Madhi
Editing by     Kasi Viswanathan
Studio     Studio Green
Distributed by     Cloud Nine Movies
Release date(s)     August 20, 2010
Country     India
Language     Tamil
சென்னை கமலா தியேட்டர் டிஸ்கி....


நேற்று மாலை இரவு இரண்டு காட்சிகள் தொடர்ந்து நான் மகான் அல்ல மற்றும் இனிதி இனிது பார்ர்தேன்..


திரையில் பத்துரூபா  டிக்ட்தான் பெஸ்ட் எனும் காட்சியில் கைதட்டடல் விசில்....
==========
கொஞ்சம்   அணி பிடுங்கவது அதிகம்..... பொறுத்துக்கொள்ளவும்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

20 comments:

  1. \\\தினமும் நீங்கள் செய்திதாள் வாசித்தால் இந்த படத்தில் வரும் பல விஷயங்கள் நீங்கள் படித்து இருக்கலாம்..\\

    எல்லாருமே படம் பார்த்துத்தான் அண்ணே கெட்டுபோயிடுறாங்க...

    :-((((

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக படத்தைப் பற்றி அலசி எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. \\ஸ்கெட்சு போடும் அந்த சித்தப்பா கேரக்டர் அருமை....\\\

    சித்தப்பா இல்லை அண்ணே மாமா..

    ReplyDelete
  4. Jackie...i saw the film yday and i saw kajal and her father in karthi's fathers funeral in the film.I think u missed it as they were shown only once.Correct me if im wrong.

    ReplyDelete
  5. ஜாக்கி சார்,

    படம் ஒரு டைம்பாஸ் என்பதை அனைவரும் கூறிவிட்டார்கள்.

    இதுவரை வந்த கார்த்தியின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று இன்று டைம்ஸ் அப் இந்தியா வேறு கூறி இருக்கிறது

    ReplyDelete
  6. அருமை.......பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. உங்கள் விமர்சனம் அருமை.
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. really your reviews about the films are all very superb.. u r the only talented person in this tamilmanam blog.. even in the magazines like anandhavikatan, kumudham, indiatoday, kungumam, kalkandu and so on.. their reviews are very normal when compare to your reviews. keep it up . please don,t waste your talents. u can proceed these talents with some of the tamil magazines and get an applause .. sure.. go ahead man... congratulations..

    ReplyDelete
  9. //இப்போதுதான் ஈசிஆரில் சவுக்கு தோப்பில் ஒதுங்கும் ஜோடிகளை மிரட்டி கற்பழிப்பு செய்வது என்று நான் எழுதி இருந்தேன்... இப்போது இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்கள்... இபோது அந்த செய்தி இன்னும் விரைவாக பசங்களிடம் போய் சேரும்.... இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள்....//

    படம் பார்க்கும் போதே ஜாக்கி இதைப்பத்தி எழுதியிருந்தாரே என்றுதான் நினைத்தேன். படத்தின் மேல் - மொக்கை, சூப்பர், நல்லாயிருக்கு, ரத்தக்களறின்னு ஆயிரம் கமெண்ட் இருந்தாலும் இதைப்பார்த்து ஜோடியா ஒதுங்குற நாலு பேராவது திருந்துவாங்க. போலீஸூக்கும் கொஞ்சம் வேலை குறையும்.

    ReplyDelete
  10. சேகர் தளத்தின் பின்புல நிறத்தை மாற்ற வாய்ப்பு உண்டா? ஒவ்வொரு முறையும் வந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு சற்று கடினமாக இருக்கிறது. விருப்பம் இருந்தால் மாற்றுங்கள்.

    ReplyDelete
  11. pls change the template anna! Hard to read and taking time for loading the pages.

    ReplyDelete
  12. //முதல் காட்சியில் நைட்டிக்குள் பேன்ட் போட்டு இருக்கின்றார்.//


    நல்லா உன்னிப்பாதான் பாத்துருக்கீங்க! நல்ல வேள அந்தக்கா பேண்ட் போட்டுருக்கற சீன வி(வ)ரிக்காம உட்டீங்களே!

    ReplyDelete
  13. நல்ல விமர்சனம்...!
    அந்த தாடி வைத்த பையன்."நந்தா" திரைப்படத்தில் இளவயது சூர்யா வக வருகிற பையன்."நந்தா"விலும் சரி "இந்த படத்திலும் சரி அவன் கண்கள் பேசுகிறதை கவனித்தீர்களா? மற்றும் கார்த்தி அப்பா சாவுக்கு காஜல் வந்திருப்பார்,அவரை பிரேமில் காட்டிவிட்டு,அடுத்த பிரேமிலேயே காஜல் அப்பாவையும் காட்டிருப்பர்கள்.காஜல் அப்பா சில நொடிகளில்" அவர் இந்த மரண நிகழ்வை பெரும் துக்கமாக எடுத்துக்கொண்டதை போல முகத்தில் பாவனைக் காட்டிருப்பார்".
    http://vetripages.blogspot.com/

    ReplyDelete
  14. பின்னுட்டம் இட்ட அனைவருக்கு நன்றி... நான் காஜல் அப்பாலைதான் பார்த்தேன்... கண நேரத்தில் நான் தவற விட்டு இருக்க கூடும் அதனால் அங்நத வரி நீக்க படுகின்றது...

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம் :)

    ReplyDelete
  16. படத்தை கூர்ந்து பார்த்து அலசி இருக்கிறீர்கள்...அருமை...ஆனால் இந்த விமர்சனத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவே....அது படிக்கும் போது சற்றே கடுப்படிக்கிறது...முடிந்தால் சரி செய்துவிடுங்களேன்...

    ReplyDelete
  17. //இப்போதுதான் ஈசிஆரில் சவுக்கு தோப்பில் ஒதுங்கும் ஜோடிகளை மிரட்டி கற்பழிப்பு செய்வது என்று நான் எழுதி இருந்தேன்...//

    பிரதர் இப்ப அந்த மேட்டரை வைத்துத்தான், சன்டீவியின், செல்லமே மெகசீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூத்தைப் பற்றிய நல்ல அவதானிப்பு உங்களிடம் உள்ளது.

    ReplyDelete
  18. ஒரு கேமராமேனின் பார்வையில் எழுதிய விமர்சனம் என்ற வகையில் ஆங்காங்கே தெரிந்தாளும்....நன்றாகவே இருக்கிறது.....

    ReplyDelete
  19. நல்ல விமர்சனம்.. வாழ்த்துக்கள். நானும் விமர்சனம் செய்துள்ளேன்.. வருகை தந்தால் மகிழ்ச்சி அளிக்கும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner