தனிமையில் வீட்டில் இருக்கின்றீர்கள்... பிளாக் எழுதி விட்டீர்கள்...ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும் போது அதில் மனது லயிக்கவில்லை.. சர்வ நிச்சயமாக அந்த வெற்றிடத்தை நிரப்ப இசைக்கு முக்கிய பங்கு உண்டு...
எனக்கு பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் நிறைய பேருக்கு மெல்லிசை பிடிக்கும் எனக்கு வெஸ்டர்ன் இசை...பிடிக்கும்..அதே போல் எனது மூட் மாற மிக முக்கிய பங்கு இசைக்கு உண்டு...நான் மிகுந்த யோசனையில் மன உளைச்சலில் இருக்கும் போது நான் இந்த பாடலைதான் கேட்பேன்...
எப்போதும் என்னுள் ஒரு தன்னம்பிக்கையை இந்த பாடல் உற்பத்தி செய்யும் இதன் வரிகள்.. மிக அற்புதமானவை....மிகுந்த தன்னம்பிக்கை உள்ள மனிதனால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும்.....
அந்த பாடல் இருவர் படத்தில் வரும்.. ஆயிரத்தில் நான் ஒருவன் பாடல்...
அதில் வரும் வரிகளில்.....
நான் நினைத்தால்
நினைத்து நடக்கும்
நடந்தபின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்.....
நான் அழைத்தால் நதியும் கடல்களும் ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்.. இந்த வரிகள்
எவ்வளவு ஆணவமான வரிகள்....இயற்க்கையை வம்புக்கு இழுப்பது மட்டும் அல்ல...அதனை அடக்கி ஆளுவேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய விஷயம்....எவ்வளவு பெரிய நக்கல்..அதில் தன்னம்பிக்கை....
நதியும் கடலையும் ஊருக்குள் ஊர்வலம் செய்விக்க ஒருவனால் முடியுமா? அது என்ன குவாட்டருக்கும் கோழிபிரியானிக்கும் கோஷம் போடும் ஜந்துக்களா அது????
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்...திறக்குமா? திறக்காதா? என்று தெரியாது... ஆனால் அந்த நம்பிக்கை... அந்த தன்னம்பிக்கை... மிக அற்புதம்....நான் உதைத்தால் திற்ந்து கொள்ளும்... அந்த கதவு எங்கு இருக்கின்றது? எத்தனை பேர் அதன் பின் காவலுக்கு நிற்பார்க்ள்... அதை பற்றி எல்லாம் எந்த கவலையும்... ஆனால் நான் உதைத்தால் அது திறந்து கொள்ளும்... என்ற நம்பிக்கை....அந்த வரிகளில் இருக்கும்...
இது எம்ஜிஆரை மனதில் வைத்து எழுதிய பாடல்.. ஆனால் அந்த வார்த்தை வீச்சுகளை அப்படியே கண்முன் நிறுத்தி வைத்து இருப்பார்...வைரமுத்து...
அந்த காலகட்ட இசையை மிக அழகாக உருவாக்கி இருப்பார் இசைபுயல்..
இந்த பாடலில் ஐஸ்வர்யாவின் நளினம் கொஞ்சம் ஜொள் விட வைக்கும்...ஒரு பாலைவண மேட்டில் சில் அவுட்டில் ஜஸ் ஆடும் அந்த நடன காட்சி அற்புதம்..
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிகட்டுமே....
பழைய பகை படை எடுத்தால் கத்தி, புத்தி இரண்டும் கொண்டு வென்று விடுக...
நான் ரசிக்கும் அந்த பாடல்...
இந்த பாடல் எப்போது நான் கேட்டாலும் என்னை உற்சாகபடுத்தும்.. இதுவரை ஆழ்ந்து கேட்டுபாருங்கள்.. இந்த பாடல் உங்களையும் விசீகரிக்கும்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
பாடல் அருமை
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteஇந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த ஒன்று.
இந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் திரு. MGR அவர்களை நினைவு படுத்துபவை.
அருமையான பாடல்.
ReplyDeleteரஹமான் இசையில் இருவர், ஜீன்ஸ், கண்டு.கண்டுகொண்டேன். இந்த 3 படங்களின் பாடல்கள் சற்றே தனித்துவமாக இருக்கும்.
தலைவா தங்களின் பதிவின் ஒரு ரசிகன் நான் எனக்கு சிறிய வருத்தம் தங்களின் பதிவை லினக்ஸ் இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை தயவு செய்து தங்களின் template font னை மாற்றவும்
ReplyDeleteநன்றி
http://fosstamil.blogspot.com
மணி ரத்னம் நம்ம வாத்தியார கிண்டல் பண்றதுக்கு ஒரு மலையாள நடிகர வச்சு எடுத்தது... வைரமுத்துவும் புகுந்து விளயாடியிருக்கிறார்..
ReplyDeleteகந்தசாமி
இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த ஒன்று.
ReplyDeletesuper, keep it up
ReplyDeleteநல்ல பாடல்...நல்ல இசை...நல்ல வரிகள்... ஆனாலும் மனோ, டி.எம்.எஸ். குரல்லே பாட முயற்சி பண்ணது மட்டும் கொஞ்சம் உதைக்கும் விசயம்...
ReplyDeleteஓட்டு போட்டாச்சு ஜாக்கி... எனக்கு ஒரு உதவி நண்பர்களே, இன்டலி மற்றும் தமிழ்மணம் vote icons-ஐ நம் வலைப்பக்கத்தில் இணைப்பது எப்படி என்று யாராவது கூறுங்கள் ;-)
ReplyDeleteஇந்த பாடல் அந்த மெல்லிய இசை கேட்கின்றபோது நாமும் ஏதோ பெரிய ஆள் போல தோன்ற வைக்கும் பாடல்!
ReplyDeleteதமிழ் நடிகர்கள் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கியதால்தான் மோகன்லாலை மணி தேர்வு செய்தார். மூச்சுக்கு முன்னூறு தடவை எம்.ஜி.ஆர் புகழ்பாடும் சத்யராஜ் கூட இந்த வாய்ப்பினை தவிர்த்தார் என்பதுதான் உண்மை.
ReplyDeleteஇது வர அந்த பாட்ட கவனமா கேட்டது இல்ல. இனி கேக்குறேன்.
ReplyDeleteகடற்கரை புகைப்படங்கள் மனதிலேயே நிற்கிறது.. போரடித்தால் கேமராவை எடுத்துகிட்டு கிளம்பு.. சும்மா சாம்ராணி போடாத..
ReplyDelete//மணி ரத்னம் நம்ம வாத்தியார கிண்டல் பண்றதுக்கு ஒரு மலையாள நடிகர வச்சு எடுத்தது... வைரமுத்துவும் புகுந்து விளயாடியிருக்கிறார்..
ReplyDeleteகந்தசாமி //
அப்ப நம்ம வாத்தியார் மலையாளி இல்லையா?? இது என்ன புது கதையா இருக்கு?
எது எனக்கும் பிடித்த பாடல்..
ReplyDeleteஅட்டகாசமான விமர்சனம்..
பாடகர் மனோ பற்றியும் எழுதிருக்கலாம்
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்... தினமும் பதிவு போடுவதால் நேரம் கிடைக்கவில்லை அதனால் தனிதினியாக நன்றி சொல்லவில்லை என்ற வருத்தம் வேண்டாம் நண்பர்களே... உங்கள் பின்னுட்டம்கள்தான் எனக்கு உறுதுணையும் வளர்ச்சியும்...
ReplyDeleteஉண்மைதான் மனோ பற்றி எழுதி இருக்க வேண்டும்.... மறந்துட்டேன் வேலைபளு..அப்புறம் டிஎம் எஸ் போல பாட டிரைபண்ண தப்பில்லை..
எம்ஜியார்.. பூர்வீகம் இலங்கை... மலையாளத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் நடித்து பிரபலமானவர்..
லினிக்ஸ் இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை என்று சொல்கின்றீர்கள்.. இப்போதுதான் டெம்ளெட் மாற்றி செட்டாகி இருக்கின்றது... அது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை நண்பா... வேறு எதாவதில் படிக்கவும்.. நமக்கு டெக்னிகல் ஞான சூன்யம்...
ReplyDelete