மினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•2010)

ஆல்பம்.....

 உலகம் எங்கும் இருந்து இந்த பக்கத்தை  வாசிக்கும் அனைவருக்கும்,சகபயணியாய் என்னோடு  கூடவே பயணிக்கும் நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும்  எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்......==================
இன்றிலிருந்து மின் கட்டணம் தமிழகத்தில் 300 யூனிட்வரை  அதே ரேட் ....அதில் எந்த மாற்றமும் இல்லை...300 யூனிட்டுக்கு மேல் ஒரு ரூபாய் உயர்த்தி இருக்கின்றது தமிழக அரசு...ஆனால் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமைதான் பாவம்... இந்த மாசத்தில் இருந்து யூனிட்டுக்கு 6 ரூபாய் என்றுஹவுஸ் ஒனர்கள் சட்டமாக போட்டு விடுவார்கள்.... எதிர்த்து கேள்வி கேட்க முடியாது... மீறி கேட்டால் வீட்டை காலி பண்ணிகிட்டு போ... என்ற ரெடிமேட் பதில் அவர்கள் உதட்டில் இருக்கும்.... 
=======================
ரூபாய்க்கான குறியீட்டை தினகரன் நாளிதழில் போட ஆரம்பித்து விட்டார்கள்.. இன்னும் சில சென்னை பேருந்தின் பின்பக்க விளம்பரத்தில் பார்க்க நேர்ந்தது...அவைகளை பார்க்க வித்யாசமாக இருந்தது....
============
மிக்சர்...
இரண்டு நாட்களாக மழை அவ்வப்போது சென்னையில் பெய்து வைக்கின்றது... நன்றாக அடித்து பேய யோசிக்கின்றது....அதுக்கு என்ன பிரச்சனையோ???
==========
வெஸ்ட் மாம்பலம் ஆரிய கவுடா ரோட்டில் வாகனம் ஒட்டி, அரைகிலோ துவரம் பருப்பு வாங்கி வீட்டுக்கு வந்து விட்டீர்கள் என்றால்... உலகில் எந்த பகுதியிலும் நீங்கள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் கொடுத்து விடலாம் என்பது என் பரிந்துரை...
==================

நண்பர்கள் தினத்தில் அனுப்பும் எல்லா எஸ்எம் எஸ்க்கும் வழக்கத்தை விட இந்த முறையும் ஏர்டெல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றது...இந்த  பகல் கொள்ளைக்கு என்னைக்கு விடிவுன்னு தெரியலை...
==============
நல்லா சாப்பிட்டு விட்டு டயர்டில் கொஞ்சம் கண் அசரலாம் என்று பார்த்தால், சரியாக மதியம் மூணு மணிக்கு கண் இழுத்துக்கொண்டு போகும் போது... சார் நாங்க ஐசி ஐசிஐ பிருடொசியல் இருந்து கால் பண்ணறோம்.....ஐடியா மொபைல் டெமோ பத்தி இரண்டு நிமிசம் பேசலாமா? போன்ற கால்கள் வரும் போது மிக அசிங்கமான வார்த்தைகள் வாயில் இருந்து வருகின்றது....என்ன செய்ய அந்த பெண்களுக்காக கோபத்தை அடிக்கி கொள்ள வேண்டி இருக்கின்றது...

அப்ப ஆம்பளையா இருந்தா திட்டுவிங்களா? இப்படித்தான் பல பின்னுட்டங்கள் எனக்கு வருகின்றன...நான் எப்பையா சொன்னேன் ஆம்பளைன்னா திட்டுவேன்னு...இவிங்களா கற்பனை பண்ணிப்பாங்களோ???
=============
அதே போல்55630 ஒரு நம்பர்ல இருந்து எஸ்எம் எஸ் வந்து என் உயரை வாங்கறது... அதை விட ஏர்டேல் தொல்லை இருக்கே அது ஆண்டவனுக்கே அடுக்காது.... இன்னைக்கு இவ்வளவு டாக்டைம், அன்னைக்கு அவ்வளவு டாக்டைம்னு சொல்லி ஒரு நாளைக்கு பத்துக்கு மேல வருது... அதுவும் சரியா இரண்டு மணிக்கு மேலதான் வரும்....
==============
சோழிங்க நல்லூர்ல ஸ்கொயர் பிட் 1200 ரூபாய், திண்டிவனத்துகிட்ட300ரூபான்னு ஒரு நாளைக்கு 20 எஸ்எம் எஸ் வருது....

டேய் இப்பதான் புது வீடு வாங்கி 27 லட்சம் கடன்ல இருக்கேன் சத்தம் போட்டு கத்தனும்னு இருக்கு....
எங்க போய் கத்தறதன்னு யாராவது சொல்ங்கப்பா...
=============
பதிவுலக கிசு கிசு...


இரண்டு பிரபல பதிவர்கள் அயல்தேசம் போறாங்க... அநேகமா இந்த வாரத்துல இருக்கும்.. கன்பார்ம் ஆனதும் சொல்லறேன்...


==================
ஒரு வாரத்துக்கு ஆணி புடுங்கும் வேலை அதிகம் இருப்பதால் பின்னுட்டத்திற்கு பதில் போட முடியாது...பதிவு போட முடிஞ்சா போடறேன்....தொடர்ந்து ஒட்டு போடும் நண்பர்களுக்கு ஸ்பெஷல்  நன்றிகள்..
=============
நன்றி....
தொடர்ந்து எஸ்எம் எஸ்அனுப்பும், இந்த தளத்தின் தொடர் வாசகர்கள், ராம், சக்திவேல்,ரமேஷ் ஆகியோருக்கு என் நன்றிகள்.... கொஞ்சம் சிரிப்பு பதிவுக்கு ஆமிரகத்தில் இருந்து குறிஞ்செய்தி அனுப்பிய நாஞ்சில் பிராதாப்புக்கு என் நன்றிகள்...
================
இந்த வார புகைபடம்....இந்தவார சலனபடம்பிலாசபி பாண்டி...

 எல்லா சரியான விஷயத்தையும் செயல்படுத்த முடியாது...
செயல் படுத்தும் எல்லா விஷயமும் சரியானவை அல்ல...
 =========================
திருடன் கொள்ளை அடித்தால் அது கை வரிசை
அதையே மணமகன் செய்தால் சீர்வரிசை.....
=============


நான்வெஜ் 18+

ஜோக்...1  


படுக்கையில இருக்கும் போது புருசன் பொண்டாட்டிகிட்ட ஆசையா கேட்டான்... அன்பே நீ சொல்லும் ஒரு வாக்கியம் எனக்கு பெருமையாவும் அதே சமயத்துல பயங்கர கோபத்தை  உண்டாக்குவது போல் ஒரு  வாக்கியம் சொல்லு பார்ப்போம் என்றான்... அதற்கு மனைவி நம்ம டிரைவர்லுல்லுவைவிட உங்க சம்ச்சாரம் பெரிசு.....


====================
தெருவுல ரெண்டு பிரண்ட்ஸ் பேசிகிட்டு நிக்கும் போது அந்த பக்கமா ஒரு பொண்ணு போச்சு... அவளை பார்த்ததுமே அவனுக்கு பிடிச்சி போச்சி.. மச்சி அந்த பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க போறேன்...


டேய் அந்த பொண்ணுக்கு பாய்பிரண்ட் இருக்கான்டா......
மச்சி கோல் போஸ்ட்ன்னா எப்படியும் ஒரு கோல் கீப்பர் இருப்பான்... அவனையும் மீறிதான் கோல் போடனும்...
==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..


14 comments:

 1. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ..

  அப்புறம் போன் தொல்லை நீங்க ...

  START DND என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு SMS பண்ணுங்க ...

  ReplyDelete
 2. தத்துவம் சூப்பர்.

  ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

  ReplyDelete
 3. ஹஹஹ... சான்ட்விச்சு டாப்பு.... :))

  ReplyDelete
 4. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.சாண்ட்விட்ச் ரொம்ப நன்றாக இருந்தது.,

  ReplyDelete
 6. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தல....

  ReplyDelete
 7. //ஒரு வாரத்துக்கு ஆணி புடுங்கும் வேலை அதிகம் இருப்பதால் பின்னுட்டத்திற்கு பதில் போட முடியாது...//

  ரொம்ப நாள் கழிச்சி ஆனி புடுங்க போரிங்க போல? very good. பணி சிறக்க வாழ்துகள்.

  ReplyDelete
 8. //ஐசி ஐசிஐ பிருடொசியல் இருந்து கால் பண்ணறோம்..ஐடியா மொபைல் டெமோ பத்தி இரண்டு நிமிசம் பேசலாமா//

  You can avoid those calls by using this service in Airtel :
  http://www.airtel.in/wps/wcm/connect/airtel.in/airtel.in/home/do+not+disturb+registry/

  ReplyDelete
 9. அண்ணே,ஆணி புடுங்கும் வேலைன்னா பர்சனல் ஒர்க்கா?ஓகே,ஏ ஜோக்ஸ் சூப்பெர்

  ReplyDelete
 10. கோல் போட்டாச்சி ...ச்சே..... வோட்டு போட்டாச்சி!

  ReplyDelete
 11. ஹஹஹ... சான்ட்விச் டாப்பு....!!!!

  ReplyDelete
 12. கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா--சினிமா வியாபாரம்--புகைப்படங்கள்-தொகுப்பு


  www.kaveriganesh.blogspot.com

  ReplyDelete
 13. கலவையான சாண்ட்விஜ்,முழு பிட்சா சாப்பிட்டது போல் இருந்தது.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner