மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•2010)

ஆல்பம்....

நாடாளுமன்றம் இரண்டு நாட்களாக இரண்டு பட்டு கிடக்கின்றது....இப்போது அவர்கள்  வாங்கும் சம்பளம் 16 ஆயிரம்...  இப்போது அரசு 50000 கொடுக்க உத்தேசித்து உள்ளது... ஆனால் நமது எம்பிக்கள்80000 ரூபாய் உயர்த்த ஆர்பாட்டம் நடத்துகின்றார்கள்...நான் சொல்வது என்னவென்றால்... மாதம் இரண்டு லட்சம் கூட கொடுக்கலாம்....  ஏன் ஐந்து லட்சம் கூட கொடுக்கலாம்... ஆனால் எவனிடமும்  லஞ்ச பிச்சை கேட்ககூடாது... தொகுதி நிதியை ஒரு பைசா பாக்கி இல்லாமல் செலவழிக்க வேண்டும்...தொகுயில்தான் இருக்க வேண்டும்.... இதெல்லாம் செய்ய அவர்கள் உத்தேசித்தால் தாராளமாக தரளாம்...... ஆனால் அவர்களின் மாத சம்பாத்தியம்... இப்போது கேட்கும் அளவுக்குதான்அவர்கள் இப்போது சம்பாதிக்கின்றார்களா???


===========
கடந்த 5 மாதத்தில் தமிழகத்தில் 5105 பேர் இறந்து போய் இருக்கின்றார்கள்... இப்போதுதான் அரசு உறக்கம் கலைந்து... வரும் 25ம் தேதி தீவிர தணிக்கை சோதனை நடத்த போகின்றார்கள் ... எது குறித்து தெரியுமா? வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கின்றதா என்று..... வாழ்த்துக்கள் அதிகாரிகளே...இன்னும் 5 மாதத்தில் 10 ஆயிரம் பேர் விபத்தில் இறக்கும் முன் வாங்கும் சம்பளத்துக்கு எதாவது செய்யுங்கள்...
==============


மிக்சர்..
 ஒரு வழியாக அரியர் ஏதும் வைக்காமல், இரண்டு வருட கோர்சில் எல்லா பேப்பரையும், (மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் ஜேர்னலிசம்....)பாஸ் செய்து விட்டேன்...இவ்வளவு வேலைபளுவிலும் முதல் நாள் படித்து மறுநாள் எழுதி  காப்பி அடிக்காமல் தேர்ச்சி பெற்றது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்...என்ன சோழ பரம்பரையில் ஒரு எம்.ஏ......
================
175 படக்ளுக்கு மேல் எழுதி இருக்கின்றேன்...எந்த படத்தையும் போய் என் வலையில் தேடுவது சிரமம்... அதனால் தளத்தின் மேலே செர்ச் பட்டன் போட்டு இருக்கேன்... அதில் படத்தின் பெயர் அடித்தால் அந்த படத்தை பற்றிய விமர்சனம் வரும்....
================
நடுநிசி நாய்கள் படம் .....பார்டவுன் படத்தின் தழுவல் என்று யாரோ எனக்கு மெயில் செய்து அந்த படத்தை பற்றி எழுத சொன்னார்கள்....அது ஏற்கனவே எழுதிய படம்தான்.. மேலே செர்ச் பார்சில் அடித்து படியுங்கள்.. இந்த வார பாக்கியாவில் அந்த படத்தின் விமர்சனம் வந்து இருக்கின்றது....
===============
 இரண்டு நாளைக்கு  முன் லீராயல் மெரிடினில் ஒரு பக்ஷன் ரொம்ப நாளைக்கு பிறகு வீடியோ எடுத்தேன்...எல்லாம் முடிந்து சாப்பிட போகும் போது... மீன், மட்டன், சிக்கன், எல்லாம் வறுத்து வைத்து இருந்தார்கள்.... சிலர் ஆசையில் தட்டு நிறைய பரப்பி தின்ன முடியாமல் விழித்துக்கொண்டு இருந்ததை பார்க்க நகைப்பாக இருந்தது....
=================
தொடர்ந்து வேலை பளு அதிகமாக இருக்கின்றது.... அதனால் பின்னுட்ட பதில் போட முடிவதில்லை.. அனால் உங்கள் பின்னுட்டங்களை ரொம்ப நெகிழ்வாக வாசிக்கின்றேன்...தனி தனியாக பதில் போட முடியாமைக்கு வருந்துகின்றேன்..
=============
சென்னையில் மழை வர வேண்டும் என்றால் கேபிளின் வாயால் பதிவர் சந்திப்பு என்று வார்த்தையை சொல்ல சொன்னாலே... வருனபகவானுக்கு மூக்கில் வேர்த்து விடுகின்றது... மழை பொலகாட்டு காட்டுகின்றது...நேற்று வர முயற்ச்சித்தாலும் ஒரு இண்டர்வியுவில் மாட்டிக்கொண்டேன்...
===============
தளத்தின்பின்புலத்தை பலர் ரசிக்கின்றனர்...இரண்டு  மூன்று பேர் மாற்ற சொல்லி கேட்கின்றார்கள்...எனக்கு இந்த பேர் ரவுண்ட் எனக்கு ம்பவும் பிடித்து இருக்கின்றது... என்ன செய்ய????

=============
இந்தவார சிறந்த படம்...

இந்த வார சலனபடம்

 
எல்லா விளம்பரமும் கலக்குலுங்கோ..

இந்த வார அசத்தும் பதிவர்

 ஹாலிவுட்பாலா....

பிக்சர் புலி,ஹாலிவுட் சிங்கம், என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கபடுபவர்...இவர் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் இருக்கும்...நல்ல விரிவான சினிமா பற்றி புரிதல் உள்ள பதிவர்....இவரின் ஆங்கில பட விமர்சனம்  நிறைய டெக்னிக்கல் விஷயங்களை தூவி எழுதுபவர்....நையாண்டி,மற்றும் நக்கல் இவரது எழுத்துக்களில் கரைபுரண்டு ஓடும்...தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவாராக தேர்ந்து எடுத்து போது, ஆங்கலத்தில் தலைப்பு வைப்பது தொடர்பாக கருத்து  பிரச்சனை ஏற்பட்டு தன் சுதந்திரம் பிறர் தலையீடு இருப்பதால் திரட்டியில் இணைவதை நிறுத்தியவர்....அதற்கு பெரிய தைரியம் வேணும்... எந்த திரட்டியிலும் இணைக்காமல் எழுதுபவர்... ஆங்கில எழுத்து ஏவில் இருந்து இசட் வரை 18+ பிளஸ் ஹாலிவுட் படங்கள் எழுதி தமிழ்கூறும் நல்உலகத்துக்கு கைரேகை அழிய காரணமானவர்.... முதலில் பத்தோடு பதினோன்றாக இவரை நினைத்து இருந்தேன்... மைக்கேல் மூர் நைன் இலவனுக்கு அப்புறம் எடுத்த டாக்குமண்டரி பெயர் நினைவில் இல்லை...(கேஎப்சி)...பற்றி மிக விரிவாக எழுதி என்னை கவர்ந்தவர்... ஹாலவுட் படங்களை  பற்றி மட்டும் எழுதுவர்... இருப்பினும் இவர் ஆக்சிடென்ட் பற்றிய பதிவு போல் சில சமுக பிரச்சனைகளை எழுதுபவர்... சமீபத்தில் கூட பிக்சர் பற்றி மென்புத்தகத்தை போட்டவர்....பிளாட்ஸ்கிரின்,டிவிடி , ரீப் போன்ற தொழில்நுட்ப விஷயங்களையும் எழுதுபவர்.....இவ்ர் அமெரிக்க நகரத்தில் புளோரிடாவில் குடும்பத்துடன் வசிப்பவர் .....நடுவில் இவருக்கு அமெரிக்காவில்  வேலை  போய் வேலை  தேடிக்கொண்டு இருந்த போது வேலைகிடைக்க வேண்டும் என பல உருக்கமான வேண்டுதல்களை வாசகர்கள் வைத்தார்கள்,... அந்த வேண்டுதல்களில் எனது வேண்டுதலும் ஒன்று....

(உரிமையில் ஒரு வேண்டுகோள்... எந்த படைப்பு மக்களிடம் போய் சேர வேண்டும் என்றுதான் எழுதுகின்றோம்... அப்படி இல்லை என்றால் டைரி எழுதிவிட்டு போகலாம்....இன்னும் பெரும்பாண்மையான மக்களிடம் பாலா உன் எழுத்து போய் சேர வேண்டும்...அதற்கு உங்களுக்கு பிடித்த திரட்டிகளில் உங்கள் இடுக்கையை இணைக்கவும்...)

ஹாலிவுட்பாலாவின் தளத்தை வாசிக்க......இங்கே கிளிக்கவும்
=================


இந்தவார கடிதம்...

Hi Jackie Saker,

Good morning!

Just read your "Sandwitch & Non Veg" post and started typing this email to you. To have my email in your blog as "This week email" section is truly shows your heart. In particular to have my blog address is truly amazing brother. Believe me - after your post - visitors to my blog has tremendous increase.

I don't know to write in tamil using keys... I never felt bad for that - but today I did. I couldn't explain the feelings for you and your good heart.

Soon - im going to learn how to type in tamil and i'll send you an email in tamil.

Once again - Thank you very much.

Thanks
- g -
http://ganben.blogspot.com/


கடிதம் போட்ட அரைமணியில் உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கும்,இந்த தளத்தில் போட்டதால் ஹிட்ஸ் அதிகமானதை வெளிப்படையாக சொன்னமைக்கும் எனது நன்றிகள்.. நண்பா..
======================
பிலாசபி பாண்டி...
 மழை அடிச்சா அதை திருப்பி அடிக்கவும் முடியாது... சன்டிவி சொர்கம் சீரியலை சொர்கத்துல போயிம்  பார்க்க முடியாது...
================
என்னமாப்ல  சோகமா இருக்கே???
பிலாசிபாண்டி... என் கேர்ள்பிரண்ட் என்ன பேர்ல் அவ மொபைல்ல என் பேரை ஸ்டோர் பண்ணி இருக்கா? என்று பார்த்து நொந்து போயிட்டேன்....
என் பேர்லடா பாண்டி???
டைம்பபாஸ் நம்பர் 16ன்னு அதுல ஸ்டோர் ஆகி இருக்கு....
=================
செம பிகரோடு பேசுவதால் மட்டும் உதடகள் ஒட்டாது...
நச்சின்னு கிஸ்அடிச்சாதான் உதடுகள் கூடஒட்டும்....
இது சொன்னது கலைஞர் அல்ல இளைஞர்கள்...


============
நான்வெஜ்...18+
ஜோக் ...1
டாக்டர்... சாரி சார் உங்க ஒய்போட மெடிக்கல் ரிப்போர்ட்... மாறிடிச்சு... அவுங்களுக்கு ஆஸ்துமாவா, அல்லது எயிட்சான்னு சரியா தெரியலை...
கணவன்..டாகடர் நான் இப்ப என்ன பண்ணறது...????
டாக்டர்... நீங்க கலையில இரண்ட பேரும் ஜாக்கிங் போங்க... வீட்டுக்கு அவுங்களும் திரும்பி வந்தா ஜில்பான்ஸ் பண்ணாதிங்க....
=============

ஒரு ராஜாவுக்கு செம டவுட்டு ஒரு வாராம அதே சிந்தனையா இருந்தாரு... அதனால நாட்டுல எந்த வளர்ச்சி பணியும் நடக்கலை... அரசர்கிட்ட பிரச்சனை கேட்வும் பயம்.. தலையை சீவிட்டா? பொறுத்து பொறுத்து பார்த்த ஒரு மந்திரி கொஞ்சம் தைரியமா ராஜாகிட்ட பேச்சு கொடுக்க... ராஜா தன் பிரச்சனையை  மந்திரிகிட்ட பகிர்ந்துகிட்டாரு.... ராணி நல்ல கலர்தானே ஆமாம் ராஜா.... அப்ப அந்த இடம் மட்டும் ஏன் கருப்பா இருக்கு???? நாளைக்கு  காலைல பதில் சொல்லலைன்னா... உன் லுல்லுவை   காக்கா கவ்வும் என்று அணையிட்டார்... மந்திரி உடல் நடுக்க வீட்டில் வந்து பயத்தில் எப்படியும்  நாளைக்கு சாக போறோம் அதனால ஜில்பான்ஸ்   பண்ணிடுவோம்னு ஒய்புகிட்ட ஜில்பன்ஸ் பண்ணி முடிச்சதும்..ராஜா கேட்ட அதே கேள்வியை தன் மனைவிகிட்ட கேட்டானாம்.... அவ பளார்னு ஒரு அறைமந்திரி கன்னத்துல விட்டாளாம்...... எதா இருந்தாலும்  காலைல பேசிக்குவோம் படுங்க என்றாள் மந்திரி மனைவி....திரும்ப கேட்டா இன்னோரு அறைக்கு பயந்து சுருண்டு படுத்துக்கிட்டானாம்...காலையில உயிர் பயத்துல அதே கேள்வியை மந்திரி தன் மனைவி கிட்ட கேட்க??? உன் கண்ணத்தை கண்ணாடியில பாரு என்றாள்... மந்திரியும் ஆர்வமாக கண்ணத்தை கண்ணாடியில் பார்க்க.....கண்ணம் கண்ணி போய் இருந்தது...மனைவி சொன்னாள் சும்மா இப்படி ஒரு அறைக்கே உன் சிவப்பான கண்ணம் கண்ணி போயிடுச்சே............கொஞ்சம் யோசிச்சு பாரு.....
===========
அவனை எதுக்கு கத்தியால வெட்ட ஒரு கூட்டம் துரத்தி ஒடிகிட்டு இருக்கு...அவன் புது புது பிரா கண்டுபிடிக்கற சயிண்டிஸ்டாம் ... அவன் கண்டு பிடிச்சி இருக்கற புது பிரா.. மழையில நனைஞ்சாலும் தெரியாத, ஒடினாலும் அதிராத,முழுசும் கவர் பண்ணறது போல கண்டுபிடிச்சிட்டான்னு  கோவம்.... அதான்..
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

25 comments:

 1. ஜாக்கி : வழக்கம் போல் அருமை....

  ReplyDelete
 2. உங்களின் எழுத்து நடைமுறை பாவனை ஈர்க்கிறது - நன்று - தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

  ReplyDelete
 3. வழக்கம் போல் அருமை நண்பரே , மந்திரி ஜோக் சூப்பர், ஆமா அதுதான் அதுக்கு உண்மையான காரணமா பாஸ்!!!!

  ReplyDelete
 4. வெள்ளைக்காரனுங்க 300 ஆண்டுகளாக ஆண்டு கொள்ளையடித்ததை விட இவர்கள் வெறும் 50 ஆண்டுகளிலேயே சுரண்டி விட்டார்கள். இது போதாதென்று சம்பள உயர்வு வேறு...?? எதுவுமே நடைபெறாத மாதிரி இருக்கும் பிரதமர், சுற்றிலும் ஊழல் பெருச்சாளி அமைச்சர்கள், அதிகாரிகள். அவர்களின் வண்டவாளங்கள் நீதிமன்றத்தில் ஏறாமல் நித்தம் நித்தம் செய்தி தொலைக்காட்சிகளில் ஏறுகிறது.. விளையாட்டுக்கு ஒதுக்கிய பணத்தில் இவர்கள் அடித்த கொள்ளையில் நாடே நாற்றம் எடுக்கிறது. விளையாட்டு துறையிலேயே இப்படியென்றால் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு ஊழல்கள்.. இதி எதிர்கட்சி ஆளுங்கட்சி பாகுபாடே கிடையாது.. இதில் அவர்களுக்கு 300% சம்பள உயர்வு வேறு. முதலில் இவர்களுக்கெல்லாம் PAN கார்டு இருக்கான்னு கேளுங்க.. ஏற்கனவே பல கோடி மக்கள் பணத்தை சுரண்டி முதல்வர் பதவியை இழந்த லாலு போன்ற ஊழல் பெருச்சாளிகள் ஊதிய உயர்வு கேட்பது தேசத்தின் அவமானம்.. வாய் கூசாமல் லாலு கேட்பதை மற்ற எம்பிக்கள் கேட்டு சிரித்து மகிழ்வதை தொலைகாட்சியில் பார்த்த போது நாராசமாய் இருக்கிறது..

  ReplyDelete
 5. Mr.Dhanasekaran.M.A

  Congrats!

  With Love
  Aravindan
  Bangalore

  ReplyDelete
 6. சோழ பரம்பரை எம் ஏக்கு வாழ்த்துக்கள்.
  ராஜா ஜோக் நிஜமா?

  ReplyDelete
 7. ஜாக்கி ஹாலி பாலி இருக்கறது ஜாக்சன்வில், ஃபுளோரிடா... :).. உங்க மினி சாண்ட்விச் சூப்பர் :)

  ReplyDelete
 8. நம்ம தல ஹாலிவுட் பாலாவை பற்றிய பகிர்தல் மிக அருமை. அப்புறம் அவரோட 'Avatar' சீரிஸ் பற்றியும் ஞாபகபடுத்தியிருக்கலாம்.

  ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணே...கொஞ்சம் இந்த 'Font' மாத்தலாமே...Bold வேற இருக்கா கண்ணா உறுத்துது..

  ReplyDelete
 9. நம்ம தல ஹாலிவுட் பாலாவை பற்றிய பகிர்தல் மிக அருமை. அப்புறம் அவரோட 'Avatar' சீரிஸ் பற்றியும் ஞாபகபடுத்தியிருக்கலாம்.

  ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணே...கொஞ்சம் இந்த 'Font' மாத்தலாமே...Bold வேற இருக்கா கண்ணா உறுத்துது..

  ReplyDelete
 10. // சோழ பரம்பரையில் ஒரு எம்.ஏ...... //
  வாழ்த்துக்கள் ஜாக்கி... :)

  // இரண்டு மூன்று பேர் மாற்ற சொல்லி கேட்கின்றார்கள்.. //
  சில குறிப்பிட்ட விஷயங்கள் (உதா: எழுத்து bold font-ஆக இருப்பது) மாற்றவேண்டும் என நினைத்தால், பேக்ரவுண்ட் மாற்றாமல், அந்த விஷயத்தை மட்டும் மாற்றும் வசதி டிஸைனரில் உள்ளது...

  ReplyDelete
 11. பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. நண்பர்களே...

  ReplyDelete
 12. ஜோக்.. அவ்வளவுதான்... அது நல்லவிதமாக இருந்தாலும் கெட்ட விதமாக இருந்தாலும்... அதனுள் இறங்கி பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு அல்ல...

  அது ஜோக்....அவ்வளவுதான்...

  ReplyDelete
 13. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போல்டினை மாற்றிவிட்டேன்...

  ReplyDelete
 14. பாலா புளோரிடா என்று மாற்றிவிட்டேன்..
  நன்றி இராமசாமி

  ReplyDelete
 15. ///ஒரு வழியாக அரியர் ஏதும் வைக்காமல், இரண்டு வருட கோர்சில் எல்லா பேப்பரையும், (மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் ஜேர்னலிசம்....)பாஸ் செய்து விட்டேன்..///

  சொல்லவே இல்ல?? நெறய முயற்சி செஞ்சு நெறய வேலைகளை ஒரே நேரத்தில் பாத்திருக்க - ஒவ்வொரு ரிசல்டா வந்துக்கிட்டு இருக்கு - எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 16. கடின உழைப்புக்கான வெற்றிக்கு வாழ்த்துகள் ஜாக்கி:)

  ReplyDelete
 17. வழக்கம் போல் அருமை நண்பரே

  ReplyDelete
 18. ஜாக்கி...

  நான் காலைலயே வந்து ஒரு கமெண்ட் போட்டேனே?? என்ன ஆச்சி?

  [இதுக்கு முன்னாடி எழுதின கமெண்ட் இருந்தா இதை பப்ளிஷ் பண்ண வேணாம் தல]

  ----

  ரொம்ப நன்றி ஜாக்கி! :)

  நான் எந்தத் திரட்டியில் இனிமே இணைக்கப் போறதில்லை ஜாக்கி. தமிழ்மணத்துக்கே போறதில்லைன்னு ஆய்ட்டப் பின்னாடி, இணைப்பு மட்டும் எதுக்கு?

  இதுனால.. நாம ஓட்டு கேக்கத் தேவையில்லை, ஓட்டு போடத்தேவையில்லை. இந்த சாதி பத்தி எழுதற சனியனுங்க தொந்தரவு இல்லை.

  ------

  அப்புறம் ஏற்கனவே ஹாலி பாலியை பாலி(யல்) பாலின்னு மாத்தி வச்சிட்டாங்க. நீங்க வேற கைரேகை பத்தியெல்லாம் பேசி கன்ஃபார்ம் பண்ணிட்டீங்க!! :) :) :)

  ------

  இராமசாமி சொன்ன மாறி, நானிருப்பது ஜாக்ஸன்வில், ஃப்ளோரிடா.

  ReplyDelete
 19. அண்ணா 18 + இறுதி ஜோக் இந்த வாரத்தில் வேறு எதோ ஒரு ப்ளோகில் பார்த்ததை நினைவு,MA க்கு வாழ்த்துகள்.நேரம் இருந்தால் The naked Pray,Perfume the story of a Murderer பார்க்கவும்.

  ReplyDelete
 20. hollywood balavinaal enakku perumaiya irukku..

  ReplyDelete
 21. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்..
  ஜோக் எனக்கு மெயிலில் நண்பர்கள் அனுப்புகின்றார்கள்.. அதை இங்கு எழுதுகின்றேன்

  ReplyDelete
 22. //hollywood balavinaal enakku perumaiya irukku..//

  எதுக்கு சங்கர்?? மக்களுக்கு கைரேகை காணாம போக வச்சதுக்கா? :) :) :)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner