ஆல்பம்...
ஏதோ இந்தியா விளையாட்டுலையும் இருக்குதுன்னு அப்ப அப்ப சர்வதேச லெவல்ல செஸ் டோர்னமேன்டுல ஜெயிச்சி... இந்திய கொடியை பக்கத்துல வச்சிக்கினு விளையான்டா.. அவன் பல்லையே புடிச்சி பாக்கறது நம்ம அரசாங்கம்தான்....இந்த அளவுக்கு ஒருத்தனை அசிங்கபடுத்தகூடாது...என்க்கு தெரிஞ்சி ஆனந் அடுத்தமுறை ஸ்பெயின் நாட்டு பிரஜையா மாறி விளையாடினால்.... சர்வதேச கவனம் மற்றும் நல்ல பல மரியாதையான பலன்களை அனுபவிக்கலாம்....சின்ன வயசுல இருந்து பாராத தாயை அம்மான்னு கூப்பிட்டவன் ஆனந்..அவனை பெத்து எடுத்தது பாரத தாய்தான்... ஆனா சில பண்ணாடைகள் அது உங்க அம்மா இல்லைன்னு சொல்லி கதை வளர்த்து இருக்குதுங்க...
அதுக்கு ஒரே காரணம்தான் இருக்கும்... அவன் தமிழ்நாட்டுல பொறந்தவன்....வேற ஒரு மயிறு காரணமும் இதுல இருக்கறதா எனக்கு தோனலை....
=======
சென்னை ரோடுகளில் மரணபள்ளத்தாக்கு குழிகளை நீங்கள் பார்க்கலாம்.. அதுவே டிராபிக்குக்கு மிக முக்கிய காரணம்... வடபழனி போரூர் சாலையில் ஒரு நாள் காலையில் ஒன்பது மணிக்கு நமது முதல்வர் மன்னிக்கவும் அவரால் இரு சக்கர வாகனம் ஒட்ட முடியாது.... அதனால் துணைமுதல்வர் இருசக்கர வாகனம் அல்லது எந்த வாகனமாவது ஓட்டி பார்க்கட்டும்... அவரே அவர் செய்யும் ஆட்சியை கடுப்பில் மறந்து திட்டிவிடுவார்...இன்னும் கொஞ்ச நாளில் நேஷனல் தியேட்டர் திறந்து விடுவார்கள்... திறந்து விட்டால் அரோகராதான்...
=========
மிக்சர்....
சமீபத்தில் செய்திதாளில் வாசித்த அந்த செய்தி என்னை சிரிக்க வைத்தது....
ஒரு காதலன் காதலி..காதலி காதலனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனுடன் ஓடிவிட்டாள்...இதனை சற்றும் எதிர்பார்க்காத காதலன்.. காதலி வீட்டின் முன் போய் நின்று தன் வயிற்றை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்ச்சி செய்து இருக்கின்றான்.. ஓ இதுதான் தெய்வீக காதலா?????
==========
ஒரு மகிழ்ச்சியான செய்தி....
நானும், பதிவர் நித்யாவும் மழைக்கு இரண்டு பெக் போட்டு விட்டு.. சில மணி நேரம் கழித்து சென்னை டிரேட் சென்டர் எதிரில் டீ குடிக்க வாகனத்தை நிறுத்தினோம்...ஒருவர் வாகனம் நிறுத்தும் போதே என்னை கவனித்து விட்டார்... டீ ஆர்டர் சொல்லவும் அவர் என் பக்கத்தில் வந்து நீங்க ஜாக்கிதானே.. என்று கேட்க ஆம் என்றேன்... பதிவர் நித்யாவிக்கு ஆச்சர்யம்....சார் என் பேர் விவேகானந்தன்... நான் உங்ககிட்டு போனில் பேசி இருக்கேன்... மெயிலும் அனுப்பி இருக்கேன்...அந்த மெயிலை கூட சாண்ட்வெஜ் பகுதியில் போட்டு இருக்கிங்க...திருவனந்தபுரம் போய் 5 வருஷம் ஒடிடுச்சி.. உங்க ஒரு பதிவு எனக்கு இன்ஸ்பரேஷன் ஆச்சு.. அன்னைக்கு வேலை தேட ஆரம்பிச்சேன்... இன்னைக்கு உங்க பதிவால எனக்கு சென்னையில மேனேஜர் போஸ்ட் ராமபுரம் டிஎல்எப்ல இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து இருப்பதாக சொன்னார்.... ரொம்ப தேங்ஸ் என்று வாசக நண்பர் கை கூலுக்க.. எனக்கு சந்தோஷத்தில் கண்ணில் கண்ணீர் வந்தது... பல லட்சம் பேரு வாழற சென்னையில நீ இங்கதான டீ குடிக்க வந்து என் கண்ணுல மாட்டனும்..... என்ன இன்சிடன்ட... நேரமின்னை காரணமாக விவேகானந்தான் விடை பெற்றார்.... அவரை இன்ஸ்பயர் செய்த பதிவும்... அவர் எனக்கு அனுப்பிய கடிதமும்.... இந்த வார கடிதம் பகுதியில் இடம் பெற்று இருக்கின்றது.....
========================
சென்னையில் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை சாத்து சாத்து என்று சாத்துகின்றது...சென்னையில் ஊட்டி போல் இரண்டு நாட்களாக சாரல் தெளித்து கொண்டு இருக்கின்றது...ஒரு குவளை தேநீர்... நிறைய சாராலாக இருக்கின்றது ...
==============
இந்த வார சிறந்த புகைபடம்.
இந்த வார சலனபடம்....
இந்த வார பதிவர்....
கருந்தேள் கண்ணாயிரம்.....
பேரே ரைமிங்கா இருக்கு இல்ல??? அது போலவே அந்த நபரும்... எனக்கு முதலில் அந்த வளைதளத்தை பிடிக்கவில்லை... சிலரை காரணமே தெரியாமல் பிடிக்காது அல்லவா??, அது போல எனக்கு அந்த தளத்தை பிடிக்ககாது.. முக்கியமாக அதில் உள்ள ஒரு போடோ.... தாடி வைத்து கை விரல்கள் போர் கிரவுண்டில் தெரிவது போல ஒரு போட்டோ....
நிறைய பேர் சினிமா விமர்சனம் எழுதுகின்றார்கள்... அது போல பத்தோட பதினொன்று இது என்று நான் நினைத்து இருந்தேன்....ஆனாலும் பாலோயராக இருந்தேன்....ஒரு கட்டத்தில் அந்த எழுத்து நடை... மிக முக்கியமாக சினிமைவை நேசிக்கும் அந்த காதல்... சினிமா பற்றிய புரிதல் இது எல்லாம் அந்த தளத்தின் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்பேன்...
ரொம்ப வெளிப்படையான ஆளு... எனக்கு பிடிச்ச பல விஷயங்களில் அப்படியே ஆப்போசிட்.... ரசனைகளும் கருத்துகளும் வேறாக இருந்தாலும்... நான் அவரின் தளத்துக்கு ரசிகன்... எனக்கு தெரியாத பல படங்கள் அந்த தளத்தில் மிக விரிவாய் வாசித்து இருக்கின்றேன்...
பெயர் ராஜேஷ்.... பெண்களுரில் வாசம்.... சொந்த ஊர் கோவை....அவ்வளவுதான் எனக்கு தெரியும் நேரில் இதுவரை சந்தித்து இல்லை...
எப்போது நான் போன் செய்தாலும் சொல்லுங்க ஜாக்கி என்ற அந்த உற்சாக குரல் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று...
அவரது தளத்தை வாசிக்க..... இங்கே கிளிக்கவும்....
==================
இந்த வார கடிதம்..
Mr Jackisekar,i just read your article,
http://jackiesekar.blogspot.
i am just proud off you, and your life should be higlighted to many people,
you have opened so many eyes on me, thanks for that,
sicne i don't know how to type tamil. i am writting in english,
and i will be happy if i get your phone no, and i would like to speak to you,
by the way i am also from cuddalore Dist, pennadam is my native place , and right now working and living in Trivandrum,
thanks and regards,
S.Vivekanandan.
0-9961333610
====================
பிலாசிபி பாண்டி
டிக்கெட் கலெக்டர் டிக்கெட் இல்லாத சுடிதார் பெண்ணுக்கு 100 ரூபாய் பைன்.... ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 50ரூபாய் பைன்... அடுத்து புடவை கட்டிய பெண்ணுக்கு பைனே போடலை ? ஏன்?? ஏன்னா அவ டிக்கெட் எடுத்து இருந்தா....
========
ஒரு சின்ன குருவி உடைஞ்சி போக போற கிளையில உட்கார்ந்தது...அந்த கிளை மீது உள்ள நம்பிக்கையில் அது உட்கார வில்லை.. தன் சிறகு மீது இருக்கும் நம்பிக்கையில் உட்கார்ந்தது....
============
ரொம்ப படிச்ச ஒரு ஆள் ஒரு ஊருக்கு போனாரு... அங்க போனதும் அவருக்கு ஜெலுசில் சிரப் கொடுத்தாங்க...அவர் அடுத்த ஊருக்கு போனதும் அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.. ஏன் தெரியுமா?... கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா? அதான்...
===============
நான்வெஜ் 18+
Why Women love Gold more than their husband??
Guess....
Answer: Because Gold has 24 carots & Husband has only one Carrot.....!!!!!!!!!!
=========
ஒழுங்கா பத்து தேய்க்காத வேலைக்காரியை எஜமானி கண்டபடி திட்டினா... ஒரு கட்டத்துல பெரிய சண்டையா வளர்ந்திடுச்சி...உன் மொகரைக்கு மாசம் ஆயிரம் என்று வார்த்தையை விட... வேலைக்காரி சொன்னா.. என்னை பத்தி என்ன வேனா பேசு என் மொகத்தை பத்தி பேசாத.... உன்னோட நான் ஒசத்தி என்று சொல்லி முடிப்பதற்க்குள்... எஜமானி.. யாரு என் புருசன் இதை சொன்னானா? அந்த ஆளு சொல்லி இருப்பான் என்று அழுத புலம்ப... நம் வீட்டு டிரைவர் சொன்னான் என்றாள் வேலைக்காரி..
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
pottaachu jaakie ottu.
ReplyDeleteவெளியுறவுதுறை மற்றும் வெளிநாட்டில் உள்ள நம் இந்திய தூதரகங்கள் பத்தியும் நிறைய மோசமான கதைகள் இருக்கு ...இன்னைக்கு ஆனந்த் வரைக்கும் நீண்டிருக்கிறது...
ReplyDeleteசென்னை சாலைகளில் இப்ப மழைவேறு நடனம் ஆடுகிறது .. மருத்துவமனைகளுக்கு நல்ல வருமானம் ..
அப்புறம் சலனப் படம் அருமை ...
//அவன் தமிழ்நாட்டுல பொறந்தவன்....வேற ஒரு மயிறு காரணமும் இதுல இருக்கறதா எனக்கு தோனலை....//
ReplyDeleteஇதுவே அவன் ம..ளி-யா இருந்த அவன் ம..ரை கூட புகழ்வானுங்க
இந்திக் காரனா இருந்தா அவன் கோவணத்தக் கூட துவச்சிப் போடுவானுங்க ..
//பெண்களுரில் வாசம்// - எழுத்துப் பிழையா . .. நக்கலா
எனக்கும் பிடித்த பதிவர்,கருந்தேள் கண்ணாயிரம்.
ReplyDeleteஆனந்த் அவன் தமிழ்நாட்டுல பொறந்தவன்....வேற ஒரு மயிறு காரணமும் இதுல இருக்கறதா எனக்கு தோனலை....உண்மை முற்றிலும் உண்மை
ReplyDeleteலங்காவில் கொன்றுகுவிக்பட்ட நம் இனமும், ஆனந்துகு ஏற்பட்ட இன்றைய நிலையும் இதுக்கெல்லாம் காரணம் இரண்டு யாளிகள் நம்ம பி.ம் வோட அல்லகைகள்தான். கூட இருந்தே குழி பறிப்பதில் கெடுதல் செய்வதில் வல்லவர்கள்.....இந்த உண்மை எத்துனை பேருக்கு தெரியும்....அதிகாரம் உள்ளவர்களை தவிர ..தமிழ்நாட்டில் அதிகாரம் உள்ளவர்களுக்கு நல்லவே தெரியும்.
ஓணம் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் விடுமுறை எங்கே கேரளாவில் பொங்கலுக்கு விடசொல்லமுடியுமா? அந்த எண்ணம்,தைரியம் தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசில்வாதிகாவது உண்டா? உலகத்திலே கேவலமான ஒரு பிறவி என்றால் அது தமிழனாகத்தான் இருக்க முடியும்.
Super ....
ReplyDeleteநன்றி அரன் மிக்க நன்றி...
ReplyDeleteஉண்மைதான் திரு... பெங்களுரை இனி பெண்களுர் என்றே எழுத போகின்றேன்..
ReplyDeleteநன்றி மோகன்...
ReplyDeleteபல குழ்ப்பங்களுக்கு காரணமே அங்க கூட இருக்கும் இரண்டு அல்லகைக்ள்தான்...எந்த தார்மீக உதவியும் நம்ம தொப்புள்கொடி உறவுகளுக்கு கிடைக்காம செஞ்சதுல அவன்க பங்கு அதிகம்..
ReplyDeleteநன்றி மனசாட்சி..
அண்ணே,
ReplyDeleteஆனந்த் தமிழன் என்பதாலே தான் வடக்கத்திக்காரர்கள் துவேஷிக்கின்றன்ர்,நாங்கள் இங்கே அனுதினம் பார்க்கும் ஒருவிஷயம்,தமிழகம் என்பதையே விட்டால் மறைத்து விடுவது போல அவர்கள் செய்கை இருக்கும்.பதருங்க விடுங்க,நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
இப்போ கூட ரூபாய்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார்,தமிழர் என்பதால் சில வடநாய்களும் மிடியாவும்,அவர் விதியை மீற்னார்.அது இது என உளரினர் அசிங்கமான அம்பானி புள்ளைங்கள்.
===
கருந்தேள் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள்,அவரின் காட்சிகளை விளக்கும் விதமும்,கேள்வி கேட்டு பதில் சொல்லும் உத்தியும் ஆவென படிக்க வைக்கும்,மிகப் பிரசித்தம்,சிறந்த ஐரோப்பிய புதின ஆசிரியர்களை சிலாகித்து படிப்பவரும் கூட,கவிதை பிடிக்காதவர்.
தவிர நல்ல ஆங்கில புலமை இருந்தாலும் பிஸ்து காட்டாதவர்.தமிழில் எழுதி பெயர் வாங்க நினைப்பவர்.
ஒருமுறைக்கு இரு முறை படித்தேன் மிகவும் அருமை நன்றி
ReplyDeleteஅமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கனை மணந்த கல்பனா சாவ்லா வை இந்தியன் என்று தூக்கி வைத்து ஆடும் இந்திய மீடியாக்கள் செஸ் ஆனந்த் விஷயத்தில் சும்மா இருப்பதேன்.?
ReplyDeleteஇதே சச்சின் கொஞ்ச நாள் வெளிநாட்டில் வசித்து அவருக்கு இந்த நிலம ஏற்பட்டிருந்தால் சும்மாயிருந்திருப்பார்களா வட இந்தியர்கள்?
ReplyDeleteதவிர
ReplyDeleteஇந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே ,இவ்வளவு அருமையாக பிளாக் எழுதவும் படிக்கவும் செய்கிறோம்,ஏனைய மொழிகளில் எதாவது பிளாக் ஒன்றை முழு ஹிந்தியிலோ,முழு தெலுங்கிலோ ,முழு மலயாளத்திலோ தேடுகிறேன் கிடைக்கலை,யாராவது அப்படி ஒண்னை கண்டுபிடிச்சா சொல்லுங்க,தொடர்ந்து ஓட்டும் பின்னூட்டமும் போடுகிறேன்.
கூட வேலை செய்யும் வடகத்திகாரர்கள் தமிழின் வ்லைப்பூ வளர்ச்சி கண்டு திகைக்கின்றனர்.ஜெயமோகனுக்கு பிடித்த அதே வயிற்றெரிசல்,அவர்களுக்கும் பிடித்தது,நான் பெருந்தன்மையாக ஹிந்தியில் எப்படி எழுதனும்னு சொல்லிகொடுத்தேன்,அப்போதும் ஆங்கிலத்தில் எழுதுவதையே விரும்புகின்றனர்.
ஆகவே ,நம் மொழியை பேணிக்காப்போம்.இதை வைத்து விளையாடும் அரசியல்வாதிகளை இனம் காண்போம்.அது தான் வேலைக்கு ஆகும்.
||இரண்டு பெக் போட்டு விட்டு.. சில மணி நேரம் கழித்து சென்னை டிரேட் சென்டர் எதிரில் டீ குடிக்க வாகனத்தை நிறுத்தினோம்..||
ReplyDeleteட்ரங்க் அண்ட் ட்ரைவுக்கு ஒரு இடுகை போடுங்க ஜாக்கினு யாருமே பின்னூட்டத்துல சொல்லல பாருங்க....
||உங்க ஒரு பதிவு எனக்கு இன்ஸ்பரேஷன் ஆச்சு.. அன்னைக்கு வேலை தேட ஆரம்பிச்சேன்... ||
ReplyDeleteகிரேட்....
அன்பின் ஜாக்கி அண்ணே,
ReplyDeleteசென்னை மக்களுக்குத் தேவையான கருத்துகள் உள்ள பதிவுகள் எழுதும் நீங்கள் 'மப்படித்து விட்டு வண்டி ஓட்டினேன்' என்று எழுதலாமா?
உங்கள் பதிவைப் படித்து "Inspire" ஆகும் வாசகர்களுக்கு இது சரியாகப் படுமா?
நீங்கள் ஒளிவு மறைவின்றி எழுதுவது பாராட்டத்தக்கதே. ஆனால்.. இது இடிக்கிறதே..
நன்றி நினைவாலே...
ReplyDeleteநன்றி கார்த்தி தம்பி...கருந்தேள் பற்றி புது விஷயங்களை சொல்லி இருக்கின்றாய்... நன்றி..
அரவிந்த சச்சினை அப்படி சொல்லி இருந்தா.. மகாராஷ்டிரம் பற்றி எறிந்து இருக்கும்....
ReplyDeleteஈரோடுகதிர், செந்தில் வேலன்...
ReplyDeleteசரக்கு போட்டது 2 மணிக்கு,இரண்டு பெக் போட்டு,பிரியாணி சாப்பிட்டு, ஒரு ஆங்கில படம் பார்த்து விட்டு, நன்றான குறட்டை விட்டு தூங்கி எழுந்து, முகம் கழுவி, பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஏதாவது கடிதம் வந்ததா? என்று கேட்டு விட்டு,மனைவியிடம் ஒரு முக்கிய விஷயம் குறித்து அரைமணிநேரம் பேசிவிட்டு, நண்பர் அவர் பில்டிங் சம்பந்தமாக ஒரு கிளையின்டிடம் பேசிவிட்டு ,தூரிய படி இருந்த மழை மழையில் நனைந்தபடியே நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது மணி ஏழரை... சரியாக அந்த நண்பரை சந்தித்த போது மணி எட்டு...எனக்கு தெரிந்து இது குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஆகாது... இப்படி நீட்டி முழங்கினால் படிப்பவர் வெறுத்து விடுவார்கள் என்பதால் இரண்டு பெக் போட்டு சில மணி நேரம் கழித்து என்று ஷாட்டாக எழுதினேன்.... இருப்பினும் உங்கள் கருத்தை சொன்னமைக்கு என் நன்றிகள்..
//ஒரு மகிழ்ச்சியான செய்தி....//
ReplyDeleteகலக்குற ஜாக்கி! வாழ்த்துகள்!
its very nice
ReplyDeleteஜாக்கி உன் சகவாசத்தால ரெண்டு பெக் போட்ட மேட்டரல்லாம் உலகம் முழுக்க பறக்குதே...
ReplyDeleteஊரு உலகம் என்ன பேசும்.
வரலாறு மிக முக்கியம் ஜாக்கி.
இதையே screen shot எடுத்து வச்சு நாளைக்கு நம்ம அரசியல் கட்சி ஆரம்பிக்கிறப்ப image, damage பண்ணிடுவாங்க. சமீபத்திய “வனவாசம்” குறிப்பெல்லாம் திருச்சியில சொன்னாங்களே கவனிக்கலயா...
தயவுசெய்து கெட்ட வார்த்தையில் பதிலளிக்க வேண்டாம்.
அன்பு நித்யன்.
. வடபழனி போரூர் சாலையில் ஒரு நாள் காலையில் ஒன்பது மணிக்கு நமது முதல்வர் மன்னிக்கவும் அவரால் இரு சக்கர வாகனம் ஒட்ட முடியாது.... அதனால் துணைமுதல்வர் இருசக்கர வாகனம் அல்லது எந்த வாகனமாவது ஓட்டி பார்க்கட்டும்... அவரே அவர் செய்யும் ஆட்சியை கடுப்பில் மறந்து திட்டிவிடுவார்...இன்னும் கொஞ்ச நாளில் நேஷனல் தியேட்டர் திறந்து விடுவார்கள்... திறந்து விட்டால் அரோகராதான்...
ReplyDelete=========
தாவு தீருது...
நன்றி திரு .ஜாக்கிசேகர் ... உங்கள் ஆலோசனையை பின்பற்றுகிறேன் ... உங்கள் பதிவுகள் எங்களை போன்ற புதிய பதிவர்களுக்கு ஒரு முன்னோடி . உங்கள் பதிவுகளை படித்து வியந்ததுண்டு . விரைவில் உங்களை வெள்ளி திரையில் மிக பெரிய ஆளாக பார்க்க ஆசை ......
ReplyDeleteI am a regular reader Jackie(hope that this is how you spell your name). You should be proud of yourself, 'cause, you have been an inspiration to people like Mr.Vivekanandan.
ReplyDeleteKeep up the good work. (Sorry, i still have not learned to do comments in Tamil).
Thanks
Arul
நமது முதல்வர் மன்னிக்கவும் அவரால் இரு சக்கர வாகனம் ஒட்ட முடியாது.... ///
ReplyDeleteஜாக்கி அண்ணா ஒரு டவுட் . வீல் சேர் இரு சக்கர வாகனம் தானே..........
Nice sir
ReplyDeletei am new for this Just reading all ur old post
everything nice sir
Thanks for ur valuable time and keep rock
ஒரு சின்ன குருவி உடைஞ்சி போக போற கிளையில உட்கார்ந்தது...அந்த கிளை மீது உள்ள நம்பிக்கையில் அது உட்கார வில்லை.. தன் சிறகு மீது இருக்கும் நம்பிக்கையில் உட்கார்ந்தது...
ReplyDeleteGreat!!!!
//வடபழனி போரூர் சாலையில் ஒரு நாள் காலையில் ஒன்பது மணிக்கு நமது முதல்வர் மன்னிக்கவும் அவரால் இரு சக்கர வாகனம் ஒட்ட முடியாது.... அதனால் துணைமுதல்வர் இருசக்கர வாகனம் அல்லது எந்த வாகனமாவது ஓட்டி பார்க்கட்டும்... //
ReplyDeleteஜாக்கி,
இது ஓவராக தெரியவில்லை...
ரோடு சரி செய்யற வேலையா,நம்ம முதல் அமைச்சருக்கு.
நகராட்சி அல்லது மாநகராட்சிக்கு மனு போட வேண்டியது நாம் தான்.
கூத்தப்பாக்கம் சாலையை சமீபத்தில்,நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்!.
கலக்கல் ஜாக்கி.
ReplyDeleteஅன்புடன்,
மறத்தமிழன்
உஙகள் எழுத்துக்களைப் படிக்கும் போது சில ஏன் பல நேரஙகளில் ஹெரொல்ட் ராபின்ஸ் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை நண்பரே. ஜாக்கி ராபின்ஸ் சேகர் என்று கூட தட்டச்சு செய்து பார்த்தேன்... அழகோ அழகு....
ReplyDelete//ஒரு சின்ன குருவி உடைஞ்சி போக போற கிளையில உட்கார்ந்தது...அந்த கிளை மீது உள்ள நம்பிக்கையில் அது உட்கார வில்லை.. தன் சிறகு மீது இருக்கும் நம்பிக்கையில் உட்கார்ந்தது....//
ReplyDeleteஅற்புதம் ஜாக்கி. தன்னம்பிக்கைக்கு நல்ல உதாரணம். அது சரி குருவிய எங்க சுட்டீங்க?