மாஸ்கோவின் காவேரி...திரைவிமர்சனம்

எந்த ஒரு படத்தை பார்க்கவும் ஏதாவது ஒரு தூண்டு கோல் இருக்க வேண்டும் அல்லவா? இந்த படத்தை நான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது... இந்த படத்தின் டிரைலர்தான்...


ராவணன் படம் பார்த்த போது இந்த படத்தின் டிரைலர் போட்டார்கள் அப்போதே முடிவு செய்துவிட்டேன்இந்த படத்தை பார்க்க..இந்த படத்தின் டிரைலரை கூட சாண்ட்வெஜ் பகுதியில் சிலாகித்து எழுதி இருந்தேன்...

இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று... அப்புறம் மிக முக்கியமான விஷயம் இந்த படத்தின் கதாநாயகி... கொள்ளை அழகு.....திரும்புவும் சொல்கின்றேன்.....இந்த படத்தை பார்க்க மிக முக்கியகாரணம் அந்த பெண்தான்....

மூன்றாவதாக இந்த படத்தின் பிரேம்கள்...என்னை ரசிக்க வைத்தன.... அதனால் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்....

மாஸ்கோவின் காவேரி படத்தின் கதை என்ன?

மாஸ்கோ(ராகுல்) காவேரி(சமந்தா) இருவரும் கிராமத்துவாசிகள் இருந்தாலும் படித்து முடித்து சென்னையில் ஐடியில் வேலை செய்கின்றார்கள்.... மாஸ்கோவின் பெய்ர் காரணம் சொல்லும் போது பயங்கர கைதட்டல் என்பதால் எனக்கு சரியாக காதில் விழவில்லை... முதலில் மாஸ்கோதான் காவேரியை காதலிக்கின்றான்... ஆனால் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை... பிறகு ஒத்துக்கொள்கின்றாள்...  திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே பிளாட்டில் இருக்க வீட்டு ஓனர் வீட்டை காலி செய்ய  சொல்கின்றார்...உடனே ஈசிஆரில் வீடு வாங்குகின்றார்கள்....
ஒரு நாள் கூட தங்கவில்லை.. உடனே ஜதராபாத் போகின்றார்கள்.. அங்கு தமிழ் டிவி நிகழ்ச்சியில் கலந்து சண்டை போடுகின்றார்கள்...சண்டை போட்டு பிரிகின்றார்கள்...வேண்டாம்  நண்பர்களே என்னை அழ வைக்காதீர்கள்... மீதி கதை.....ப்ச் ...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

லாஜிக் என்றால் அது எப்படி இருக்கும் என்பது போலான கதையும் திரைக்கதையும்...இதுக்கு மேல அதை சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை....படம் பார்க்கும் போது நிறைய கேள்விகள் வந்து உங்கள் முன் நிற்க்கும் நீங்கள்  கலங்கி நிற்பதை தவிர வேறு வழியில்லை.....


சரி  அதை விடுத்து வேறு என்ன சுவாரஸ்யம்...படத்தின் ஒளிப்பதிவு... ஒரு சின்ன பிரேமாக இருந்தாலும் நிறைய மெனக்கெட்டு இருக்கின்றார்கள்...அது படம் கடைசி வரை தெரிகின்றது...

மாஸ்கோவாக நடித்த அந்த புது பையன் ராகுல் நல்ல சார்மிங்...சில இடங்களில் நடிப்பில் தேறுகின்றார்... அந்த பெண்ணோடு சில சீன்களில் நடிக்கும் காட்சிகளில்... முதல் படத்தில்  கொடுத்து வைத்தவர் என்பது புரிகின்றது....

130ரூபாய் டிக்கெட்...சரி வேறு எதில் கவனம் செலுத்தலாம் அந்த  பெண்ணின் மீது கவனம் செலுத்தினேன்...

நின்றால்,நடந்தால் படுத்தால்,இரவில் தூங்கினால்,குளித்தால்,ஆடினால் அவ்வளவு அழகாக காட்டி இருக்கின்றார்கள்... ஒரு  பெண்ணை நன்றாக ரசித்தால் மட்டுமே இவ்வளவு அழகாக காட்ட முடியும்.. அதனை செய்து இருக்கின்றார்கள்...அதுவும் அந்த பட்டுபுடவையில் சொக்கா.... இனிமேல் இன்னும் எழுதினால் தேவையற்ற  சண்டை வீட்டில் நிகழ்ந்துவிட வாய்ப்பு இருப்பதாலும் இப்போதே  என் கீ போர்டு எழுத்துக்கள் லேசாக வழுக்கி கொண்டு இருப்பதாலும் அடுத்த பாராவுக்கு போகின்றேன்...
விண்ணைதாண்டிவருவாயாவில் தெலுங்கில் திரிஷா கேரக்டர் செய்தவர் தமிழில் சிம்புவின் பிரண்ட் கேரக்டர்.... நன்றாக செய்து இருக்கின்றார்.. நன்றாக நடிக்கின்றார்... நன்றாகவும்  நடக்கின்றார்.... அவர் மாடல் என்பதால் அலட்சிய நடை இயல்பாக அவருக்கு வருகின்றது...

இரவு  வெள்ளை உடை அணிந்து தூங்குவது போலான காட்சி... காலையில் கதவு திறப்பது போலான காட்சி...இரவு உடையிலேயே அப்படியே வந்து நடித்தது போல் இருந்தது....அவ்வளவு டீடெயில்....

எனக்கு எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை....

இவ்வளவு கவர்ச்சியாக உடை அணிந்த பெண்ணோடு ஊர் சுற்றிவிட்டு படுக்கையில் வேவ்வேறு பக்கம் திரும்பியபடி படுத்து இருப்பது போலான காட்சியை என்னால் நம்பமுடியவில்லை..

போகிற போக்கில் நீயா நானா ஷோவை வாரி இருக்கின்றார்கள்...நானே அது பற்றி யோச்சித்து இருக்கேன்....அதை திரையில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்...

ஐடி ஆட்களையும் வாரி இருக்கின்றார்கள்...

சந்தானம் இடைவேளைக்கு பிறகு வருகின்றார்....


இயக்குனர்கள்சீமான், சரவணசுப்பையா போன்றவர்கள் நடித்து இருக்கின்றார்கள்....

நீ ஒன்றும் அழகி இல்லை என்ற பாடல் தளம் போட  வைப்பது மட்டும் அல்ல...அந்த பாடல் ஜாலியான பாடலும் கூட...

பாண்டிச்சேரி பல காட்சிகளில் மிக மிக அழகாக காட்டி இருக்கின்றார்கள்...


ஒளிப்பதிவுக்கு தனியாக,இயக்கத்துக்கு தனியாக ரவிவர்மன் என்று இரண்டு டைட்டில் வருகின்றது...

ஒரு பாடலில் ரவிவர்மன்(இயக்குனர்) நடித்து இருக்கின்றார்....

ஒளிப்பதிவு அழகாக இருக்கின்றது என்பதற்க்காக நான் உட்கார்ந்து பார்ப்பேன் நீங்கள் பார்க்க வாய்ப்பு இல்லை....

நான் ரசித்த இந்த படத்தின் டிரைலர்....



படம் ஒரு விஷுவல் டிரிட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.....ஆனால்????

மாஸ்கோவின்  காவேரி ...குழி குழியாய் மணல் திருட்டு நடந்து இருக்கின்றது... தண்ணீர் இல்லை...

படக்குழுவினர் விபரம்...
Directed by     Ravi Varman
Produced by     D. Ramesh Babu
Written by     Ravi Varman
Starring     Rahul Ravindran
Samantha
Harshvardhan
Santhanam
Seeman
Music by     Thaman
Cinematography     Ravi Varman
Editing by     Anthony
Studio     R Films
Distributed by     Aascar Films
Release date(s)     27 August 2010 (2010-08-27)
Country     India
Language     TAmil


 சென்னை சத்தியம் தியேட்டர்.... சுவாரஸ்யம்...


எனக்கு முன் வரிசையில் நடிகர்  ஒய்ஜி மகேந்திரனின் பெண் தன் நண்பர்களுடன் படம் பார்க்க வந்து இருந்தார்.....உடம்பை குறைத்து விட்டார்....திரையில் வில்லன் வரும் போது எல்லா காட்சிகளுக்கும்  கைதட்டி மகிழ்ந்தார்கள்...சொந்தக்கார பையனா????


படத்தில் நடித்து ஹீரோ தன் நண்பர்களுடன் வந்து இருந்தார்.. அதனால் அவரின் என்ட்ரியின் போது பயங்கர விசில்... கைதட்டல்....இடைவேளையின் போது அவர் பெண் நண்பி வந்து கலந்து கொண்டார்...

நாயகி புடவை கட்டி வர அவரின் அழகில் மயங்கி, காதநாயகன் புடவை தலைப்பை மதித்து தச்சாதனன் போல துகில் உறிவது போலான காட்சி...ஆர்வமாய் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே...பக்கத்து சீட்காரருக்கு போன் வர, எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு அவர் என்னை கடப்பதற்க்குள் அந்த காட்சியில் பாதி போய் விட்டது... அது என்ன கடப்பது என்று நீங்கள் ஆச்சர்யத்தோடு  கேட்பது புரிகின்றது... அந்த உருவம்  பெரிய உருவம்.... அதனால்தான் கடப்பது....

இடைவேளையில் காபி சாப்பிட உத்தேசித்தேன்...முன்பு காபி ரேட் 15 இருந்தது... அதன் பிறகு 20 ஆயிற்று...சத்தியம் தியேட்டர் மாடுதான் ரொம்ப காஸ்ட்லி ஆச்சே?? அந்த நினைப்பில் மேல் பாக்கெட்டில் இருந்து 50 ரூபாய் எடுக்க... சட்டென டிஜிட்டல் போர்டில்  ஒரு கப் காபிரூபாய் 25 என்று பார்க்க.... சட்டென தூக்கில் தொங்கும் சடலம் போல்  சட்டென என் பாக்கெட்டில் அந்த 50 ரூபாய் எடுத்த இடத்தை நோக்கி போனது...

ஏதோ ஒரு புண்ணியவான்.. தியேட்டர்ல  திண்பண்டத்துக்கு அதிகமா காசு புடுங்கறாங்கன்னு கேஸ் போட்டாங்க.. அதுக்கு என்ன ரிசல்ட் அரசு கொடுக்கும்னு தெரியலை....

ஆனாலும் கூட்டம் வாங்கற இடத்துல அடிச்சி புடிச்சி வாங்குது....
இந்த படம் தான் சத்தியம் சிக்ஸ் டிகிரியில் நான் பார்க்கும் முதல் படம்.. தியேட்டர் நல்லாவே இருந்தது....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

31 comments:

  1. சொன்னபடியே பாத்தாச்சா...?

    நடக்கட்டும் நடக்கட்டும்.

    அந்தப் பொண்ணை ரொம்ப லவ் பண்ணி பாத்துருக்கீங்க போல இருக்கே...

    வாழ்க வளமுடன்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்……குப்பை படம்……

    ReplyDelete
  3. நானும் முதல் ரெண்டு பாரா படிச்சுட்டு ஆஹா.. சூப்பர் படம் போலன்னு நினைச்சா, அடுத்து நீங்க எழுதியிருந்தது சிரிப்பை வரவழைத்தது :).

    நீங்க சொன்ன மாதிரி ட்ரெய்லர் நல்லாயிருக்கு.. பச்.. ரொம்ப நாளா எடுத்த படம் இப்படியாகியிருக்க வேண்டாம்...

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி அண்ணே.....

    ReplyDelete
  5. அய்யோ! படம் போச்சா அப்போ!!!! பாக்கலாம்னு நெனச்சேன்...

    \\சட்டென தூக்கில் தொங்கும் சடலம் போல் சட்டென என் பாக்கெட்டில் அந்த 50 ரூபாய் எடுத்த இடத்தை நோக்கி போனது...\\

    நல்ல உவமை!

    ReplyDelete
  6. அப்போ, நாயகிக்காக படம் பார்க்கலாம் போல :))

    ReplyDelete
  7. //எனக்கு முன் வரிசையில் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் பெண் தன் நண்பர்களுடன் படம் பார்க்க வந்து இருந்தார்.....உடம்பை குறைத்து விட்டார்....திரையில் வில்லன் வரும் போது எல்லா காட்சிகளுக்கும் கைதட்டி மகிழ்ந்தார்கள்...சொந்தக்கார பையனா????//

    சகோதரனோ?

    http://cablesankar.blogspot.com/2010/08/blog-post_28.html

    ReplyDelete
  8. மிக அருமை
    Trustworthiness:
    Vendor reliability:
    Privacy:
    Child safety:

    ReplyDelete
  9. naanum ungaloda ella padhivaium pakkaren neenga romba than antha samandha ponnu mela valiyaringa. pathunga kudumbathula kalebaram aagidapothu.

    ReplyDelete
  10. வாழ்க வளமுடன்
    உங்கள் பதிவு படித்த பின்புதான் படம் எவ்வளவு ரசித்து பார்க்கவேண்டும் என்று தெரிகிறது
    நன்றி அண்ணா

    வாழ்க வளமுடன்
    அன்புடன்
    நெல்லை நடேசன்
    துபாய் அமீரகம்

    ReplyDelete
  11. //ஏதோ ஒரு புண்ணியவான்.. தியேட்டர்ல திண்பண்டத்துக்கு அதிகமா காசு புடுங்கறாங்கன்னு கேஸ் போட்டாங்க.. அதுக்கு என்ன ரிசல்ட் அரசு கொடுக்கும்னு தெரியலை....//

    arasu ennasolapoaguthunu naanum aarvamaa irukean

    ReplyDelete
  12. (அப்புறம் மிக முக்கியமான விஷயம் இந்த படத்தின் கதாநாயகி... கொள்ளை அழகு.....திரும்புவும் சொல்கின்றேன்.....இந்த படத்தை பார்க்க மிக முக்கியகாரணம் அந்த பெண்தான்....)
    but இந்த நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு ஒகே.

    ReplyDelete
  13. //படம் ஒரு விஷுவல் டிரிட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.....ஆனால்????//

    ராவணன் எத்தனை நாள் ஓடியது :) :)

    ReplyDelete
  14. really a good review
    from your review only d film can be seen for heroine........

    ReplyDelete
  15. நியாயமான விமர்சனம், நன்றி!!!!!!!!!

    ReplyDelete
  16. எனக்கு வேலைய மிச்சம் பண்ணிடீங்க - நைட் ஷோ பார்த்திட்டு நாளைக்கு கமெண்ட்ஸ் போடறேன்...

    ReplyDelete
  17. எனக்கு இப்பவே பார்க்கனும் போல இருக்கு.......ஹீரோயினை....!..

    ReplyDelete
  18. //நாயகி புடவை கட்டி வர அவரின் அழகில் மயங்கி, காதநாயகன் புடவை தலைப்பை மதித்து தச்சாதனன் போல துகில் உறிவது போலான காட்சி...ஆர்வமாய் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே...பக்கத்து சீட்காரருக்கு போன் வர, எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு அவர் என்னை கடப்பதற்க்குள் அந்த காட்சியில் பாதி போய் விட்டது... அது என்ன கடப்பது என்று நீங்கள் ஆச்சர்யத்தோடு//
    இது எனக்கும் நடந்துச்சு.. என்ன அவர் முன் சீட்டு, சடக்குன்னு எந்திருச்சு போன காதுல வச்சுட்டு போனாரு..அப்பத்தான் உங்க விமர்சனம் ஞாபகம் வந்துச்சு

    ReplyDelete
  19. iam v impress ஒளிப்பதிவு அழகாக இருக்கின்றது என்பதற்க்காக நான் உட்கார்ந்து பார்ப்பேன்
    பல காட்சிகளில் மிக மிக அழகாக காட்டி இருக்கின்றார்கள்...
    இந்த படத்தின் பிரேம்கள்...என்னை ரசிக்க வைத்தன.... அதனால் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்... gore gore song msin by popshankar salem

    ReplyDelete
  20. படம் ஒரு விஷுவல் டிரிட் என்பதை யாராலும் மறுக்க முடியாது..... iam v imper es by popshankar salem

    ReplyDelete
  21. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்... தினமும் பதிவு போடுவதால் நேரம் கிடைக்கவில்லை அதனால் தனிதினியாக நன்றி சொல்லவில்லை என்ற வருத்தம் வேண்டாம் நண்பர்களே... உங்கள் பின்னுட்டம்கள்தான் எனக்கு உறுதுணையும் வளர்ச்சியும்...

    டாகட்ர் ராவணன் போல்தான் இதுவும்... ராவணன் கூட கொஞ்சமாவது லாஜிக் இருந்தது.. இதில் அதவும் இல்லை..

    ஆகாய மனிதன் சேம் பிளட் உங்களுக்குமா?

    ReplyDelete
  22. டிரைலர் நல்லா இருக்கு... நான் இன்னும் மா.கா பார்க்கவில்லை...

    ReplyDelete
  23. nallaa irukkunga saar padamalla unga vimarsanam

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner