ஆல்பம்...
இன்று கிருஷ்ணஜெயந்தி அரசு விடுமுறை... பள்ளி படிக்கும் போது... இந்த ஒரு நாளை நாங்கள் போற்றுவோம் ..காரணம் பள்ளி விடுமுறை... கிருஷ்ணணை பற்றிய பாடல்களில்...கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலை கேட்டு என்ற அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..அந்த கோகுலனின் பெயரை சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது.. ராமாயி என்ற அந்த பாடலும், அந்த பாடலில் இடையில் வரும் புல்லாங்குழல் இசையும் அற்புதம்....
============
கோவை வேளான் கல்லூரி மாணவிகள் எரித்து கொல்லபட்டவழக்கில் உச்ச நீதி மன்றம் குற்றவாளிகள் மூன்று பேருக்கு, தூக்கு தண்டனை கொடுத்து இருக்கின்றது...இது ஏதோ ஜோடிக்கபட்ட வழக்கு அல்ல.. மிக சரியாக உயிர் தப்பிய மாணவ,மாணவிகளால் அடையாளம் காட்டபட்ட பின்பு குற்றவாளிகளுக்கு கிடைத்து இருக்கும் தீர்ப்பு இது....அடையாளம் காட்டும் போது கூட, அந்த கயவர்களை பார்த்து பெண் பிள்ளைகள் கதறி அழுததை யாரும் மறந்து இருக்க முடியாது...இப்போது தூக்கு வேண்டாம்... ஆயுள் போதும் என்று யாராவது சொல்லலாம்...ஒருதீக்குச்சி உரசி அதன் சின்ன பீஸ் நம் உடலில் கொப்புளம் போட்டாலே நம்மால் தாங்கி கொள்ள முடிவதில்லை.... அந்த பெண்கள் உடல் முழுவதும் தீயில் கருகும் போது,அந்த பெண்கள் எப்படி கதறி துடித்து இருப்பார்கள்...??? அவர்களை காப்பாற்ற போன சக மாணவர்கள் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுக்கும் போது, சதை மட்டும் கையோடு வந்ததாக அப்போது பத்திரிக்கையில் உயிர் தப்பிய மாணவர்கள் பேட்டி கொடுத்தார்கள்..அவர்கள் கண் எதிரில் காப்பாற்ற முடியாமல், தனது நண்பியை பலி கொடுத்த போது எப்படி கதறி இருப்பார்கள்..??எதற்கும் கல்லுரி திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டைனையாக மாற்ற வேண்டுமா? என்று யோசியுங்கள்....
=============
சென்னை தெருக்களில் இரண்டு நாள் மழைக்கு பிறகு ரோட்டின் ஓரத்தில் இருந்த மண்கள் எல்லாம் சாலைக்கு வந்து தர்ணா நடத்திக்கொண்டு இருக்கின்றன....ஒரு கனரக வாகனம் போய் அதன் பின் நாம் பயணித்தால் எல்லாம் மண்ணும், நம் கண்ணில் அராஜகமாய் விழுந்து தொல்லை கொடுக்கின்றன....
==============
இரண்டு வாரத்துக்கு முன் ஜுவியில் ஒரு செய்தி படித்தேன்... இப்போதுதான் டார்கிஷ்டிலைட் என்ற நெதர்லான்டு படத்தை பற்றி விமர்சனம் எழுதி இருந்தேன்,.. அதில் நாயகன் எத்தனை பெண்களிடம் உடலுறவு கொண்டாலும் அவனது டைரியில் அந்த பெண்ணின் ஞாபகத்திற்கு முடி முதற்க்கொண்டு எதையாவது ஒட்டி வைப்பான்... இப்போது மேட்டர் அதுவல்ல.....
ஒரு பெண் ஒன்பது வருடத்தில் இதுவரை 5000ஆயிரம் பேருடன் உடலுறவு கொண்டு இருக்கின்றாள்.. அந்த பெண்ணின் வயது மறந்து தொலைத்து விட்டேன்.. என்ன 40க்குள்தான் இருக்கும்.... அதிகபட்சம் ஒரு நாள் இரவுக்கு 4 பேருடன்....எல்லாம் பாது காப்பான உடலுறவுதான் என்றாலும்...இந்த 5000 பேர் என்பது (குறி)த்து வைத்த பிறகு..... ஆனால்.. (குறி)த்து வைப்பதுக்கு முன் கணக்கில் அடங்காமல் இருந்ததாம்.. சரி குறித்து வைத்தால் என்ன என்று நினைத்து குறித்து வைக்க இதுவைரை 5000பேர்....வீறுநடை போட்டு தொடரட்டும் அந்த எண்ணிக்கை...பாவம் அந்த பெண்ணின் இணை சேரா கால்கள்
============
மிக்சர்..
சமீபத்தில் ஒரு எஸ்எம் எஸ் செய்தி எல்லோரிடமும் சுற்றிக்கொண்டு இருக்கின்றது.. அதாவது ரோட்டில் எந்த குழந்தை அழுதாலும் அதை பெண்கள் பார்த்தால் குழந்தையை போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்கின்றார்கள்.. குழந்தை மீது பரிதாபபட்டு அந்த குழந்தையை உரியவரிடம் ஒப்படைக்க போனால், அந்த இடத்தில் நாலு தடிப்பசங்கள் வேனில் அழுத குழந்தையோடு உதவி செய்ய வரும்பெண்களை கடத்துவதாக, எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.. உண்மையோ? பொய்யோ.. சங்கை ஊஊஊஊஊஊஊஊஊ என்று ஊதுவது நமது கடமை... ஜாக்கிரதை பெண்களே...
==============
பிரான்சில் இருக்கும் தமிழ் நண்பர் லிங்கம் தன் சொந்த வீட்டு கிரஹப்பிரவேச புகைபடங்களை அனுப்பி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்... எனக்கு அந்த நிகழ்வில் கலந்த மகிழ்ச்சியை அந்த புகைபடங்கள் கொடுத்தது...வாழ்த்துக்கள் மிஸ்டர் லிங்கம்.. நம் இருவரையும் நேரில் ஒரு சேர யாராவது பார்த்தால்... உங்களை என்னுடைய பெரிய அண்ணன் என்று சொல்ல 95 சதவீகித வாய்ப்புஉள்ளது...உலகம் எங்கும் என்னை நேசிக்கும் நட்பு வட்டத்தை கொடுத்த பதிவுலகத்துக்கு என் நன்றிகள்... உங்க கடைக்குட்டி சிரிப்புக்கு நான் ரசிகனுங்கோ....
===============
எக்ஸ்பிரஸ்மால் மற்றும் மெரினா புகைபடங்கள் பதிவுகளில் போட்ட புகைபடங்கள் எனது செல்போனில் எடுத்தது என்ற சொன்னபோது, பலர் ஆர்வத்தில் அது எந்த செல்போன்? அதன் மாடல் என்ன-? என்று கேட்டு இருந்தார்கள்...அது சாம்சங்.. செல்போன் மாடல் எண்..GTS 5233S....அது டச் ஸ்கிரீன் மாடல்....3மேகா பிக்சல் கேமரா.... அதில் எடுத்த ஒருபுகைபடம் கீழே நான் எடுத்த புகைபடம் என்ற தலைப்பில்.................
==============
தமிழ் பிளாக்கர் போரம்மில் இருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன்...சிலது நன்றாக இருக்கின்றது.. பலது விவகாரமாய் இருக்கின்றது...எப்போதும் மெயில்பாக்ஸ் புல்லாகி விடுகின்றது... அதுவும் ஒரு காரணம்.
==========
மகிழ்ச்சியும், நன்றியும்...
மெரினா மற்றும் எக்ஸ்பிரஸ்மால் பற்றி எழுதிய போது பல புதியவர்கள் பாலோவராக ஆனார்கள்... அதே போல் பின்னுட்டமும் ஓட்டும் பல பதிய நண்பர்களும் போடுகின்றார்கள்... எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
==================
ஹாட் ஹாட்டர் படத்தை சைடில் போட வேண்டும் என்று ஆனந்கிரிஷ் என்ற நண்பர் வேண்டுகோள் வைத்து இருந்தார்...அது தளத்தில் கடைசியில்கீழே போட்டு இருக்கின்றேன்... விருப்பம் இருப்பவர்கள் கடைசிவரை பயணித்து ஜென்மசாபல்யம் அடைய வேண்டுகின்றேன்....
============
மகிழ்ச்சி....
இயக்குனர் நம்பிராஜன் உதவியாளர் விஜய் எனும் வருங்கால இயக்குனர் எனக்கு போன் செய்து என் எழுத்தை வெகவாக பாராட்டியது மட்டும் அல்லாமல்.. படத்தின் டிஸ்கஷனுக்கு அழைத்தாள் வருவீர்களா? என்று கேட்டார்... வருவேன்... ஆனால் அதுக்கு எனக்கு தகுதி இருக்கா? தெரியவில்லை என்று சொன்னேன்.. தகுதி இருப்பதாலே உங்களிடம் கேட்கின்றேன் என்றார்.. பார்ப்போம்....
இந்தவார புகைபடம்...
==============
இந்தவார சலனபடம்...
சமீபத்தில்தான் இந்த விளம்பம் பார்த்தேன்... வறுமையின் நிறம் சிகப்பு கான்செப்டில் வந்து இருக்கும் விளம்பரம்... இரண்டாம் புடவையும் , மூன்றாம் புடவையும் அழகாய் இருக்கின்றது... அந்த வரிகள் கூட அற்புதம்... இந்த விளம்பரம் ஷுட் செய்த இடம் கேரளாவில் இருக்கு வாகமன் என்ற இடமா?????
=========================
நான் எடுத்த புகைபடம்....
மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு பக்கத்தில் ஒரு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் 3ம் தளத்தில் இருந்து எடுத்தது....நகரின் பரபரப்பை பார்வையிடும் வாலிபன்..அது பள்ளி விட்ட நேரம் என்பது சுவாரஸ்ய தகவல்....
===========================
இந்த வாரகடிதம்..
அன்பின் ஜாக்கி,
வணக்கம். உங்களது பல பதிவுகளை படித்துள்ளேன், தொடர்ந்து படித்தும் வருகின்றேன். இன்று இந்தவார வாசகர் கடிதம் படித்தேன். உங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு உந்துதல்.
அது தொடர்பான இடுகையையும் இன்றுதான் படித்தேன். மிகவும் சரியான செய்தியை தாங்கி வந்துள்ளது.
உங்களுக்கு என் நன்றிகள்.
கடந்த ஜனவரி-யில் சென்னை வந்த நேரத்தில் கேபிள் சங்கர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் உங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது.
கடந்த ஐந்து வருடங்களாக கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றேன். அடுத்து எப்போது தமிழகம் வந்தாலும் நிச்சயம் முன்கூட்டியே உங்களுக்கு செய்தி தந்து, நேரில் வந்து சந்திகின்றேன்.
உங்கள் பதிவை படிக்கும் போது தோ ன்றும் நட்புணர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
நன்றி பாலாஜி நீங்கள் சென்னை வரும் போது நிச்சயம் சந்திக்கலாம்....
=======================
வார்த்தைகள் சார்லஸ்....
சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை தமிழ் சினிமாவில் எழுதுபவர்கள் குறைவு...சினிமாவில் இயக்குனராக இருக்கும் சார்லஸ் எழுதும் படங்கள்.. சினிமாவில் அரிச்சுவடி படிக்க நினைக்கும் உதவி இயக்குனர்கள் நிச்சயம் இந்த தளத்தை வாசிக்க வேண்டும்....தான் பெற்றதை எல்லோருக்கும் விரிவாய் சொல்லும் வெகுசிலரில் தமிழ்சினிமாவில் சார்லஸ்ம் ஒருவர்....அவரிடம் நான் இதுவரை பேசியது இல்லை... அவர் தளத்தை வாசிக்க...
இந்தவார பதிவர்....
வார்த்தைகள் சார்லஸ்....
சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை தமிழ் சினிமாவில் எழுதுபவர்கள் குறைவு...சினிமாவில் இயக்குனராக இருக்கும் சார்லஸ் எழுதும் படங்கள்.. சினிமாவில் அரிச்சுவடி படிக்க நினைக்கும் உதவி இயக்குனர்கள் நிச்சயம் இந்த தளத்தை வாசிக்க வேண்டும்....தான் பெற்றதை எல்லோருக்கும் விரிவாய் சொல்லும் வெகுசிலரில் தமிழ்சினிமாவில் சார்லஸ்ம் ஒருவர்....அவரிடம் நான் இதுவரை பேசியது இல்லை... அவர் தளத்தை வாசிக்க...
பிலாசபி பாண்டி....
ஒரு காகிதம் எரிந்து 2 நிமிஷத்துல சாம்பல் ஆகிடும்...
ஒரு கட்டை பத்து நிமிஷம் எரிஞ்சி அப்புறம் சாம்பல் ஆகும்...
ஒரு மரம் 2மணி நேரம் எரிஞ்சி சாம்பல் ஆகும்...
ஆனா பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆவது இல்லை... எப்புடி??? இப்டித்தான் புதுசு புதுசா திங் பண்ணோனும்...
=========================
நான்வெஜ்18+
ஜோக்..1
அந்த விக்கெட் கீப்பரை கல்யாணம் பண்ண பது பொண்ணு ஏன் டிவோர்ஸ் கேக்குதாம்??? கிரவுண்ட்ல... கிளவுஸ் போட்டு பாலை புடிச்சா பரவாயில்லை.. வீட்டலையும் அப்படிதானாம்... அதான்...
=============
ஜோக்..2
இரண்ட பசங்க பீச்சில் நடந்து போயிகிட்டு இருக்கும் போது.. ஒரு பெண் நிர்வாணமா படுத்து இருப்பதை பார்த்து விட்டு ஒரு பையன் தலை தெரிக்க ஓட ஆரம்பித்தான்.... என்டா இப்படி ஓடறன்னு அந்த பையன் ஓடற பையன்கிட்ட மூச்சு இரைக்க ஓடிக்கிட்டே கேட்க??இந்த மாதிரி நிர்வாணமா பார்த்தா நான் கல்லாகிடுவேன் என் அம்மா என்கிட்ட சொன்னாங்க.. அதான் ஒடுறேன்னு என்று சொல்ல... நீதான் கல்லா ஆகலையேன்னு அந்த பையன் கேட்க....??? போடாங்.. டொயான் இரண்டு செகண்ட் பார்த்ததுக்கே சாதாரணமா இருந்த என் லுல்லு கல்லுமாதிரி ஆயிடுச்சி... முழுசா பார்த்தா அவ்வளவுதான்....
==============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
இந்த வார புதுப் பதிவர் ஏரியாவை காணாம் ஜாக்கி?
ReplyDeleteபுகைப்படம் அருமை ஜாக்கி :)
ReplyDeleteNice Jacki... Me the First?
ReplyDeleteHi, Come to my blog. share the Dewali Greeting Wallpaper Free to all...:)
htt://sugumarje.blogspot.com
பாலா அதை சேர்க்க நினைச்சிகிட்டு இருந்தேன்.. சரி பிரியூவ் பார்க்கலாம் என்று பார்க்க அவசர குடுக்கையாக எனது கர்சர் அதில் பட்டு அதுவே போஸ்ட் ஆகிவிட்டது.. திரும்ப அதில் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தேன்...
ReplyDeleteநன்றி ராமசாமி..
ReplyDeleteநன்றி சுகுமார் ஜி, நன்றி புரட்சிதலைவன்..
ReplyDelete@ ஹாலி பாலி
ReplyDelete// இந்த வார புதுப் பதிவர் ஏரியாவை காணாம் ஜாக்கி?
//
போங்க பாலாண்ணே போயி Fx எழுதுங்க... சொம்மா வடை தின்னுகினு :)
@ ஜாக்கி
நல்லா இருக்கு அண்ணே பதிவு. பாவம் மந்திரா பேடி :)
ellam arumai.
ReplyDeleteபுகைப்படம் அருமை.
foot ball goal keeper joke!!!
ReplyDeleteதானும் போடமாட்டான், அடுத்தவனையும் போட விடமாட்டான்.
don't trigger me jackie
y moderation?
ReplyDelete//கல்லூரி மாணவிகள் எரித்து கொள்ளபட்டவழக்கில்//
ReplyDeleteஅண்ணே! 'கொல்லப்பட்ட' என்று வரவேண்டும்... மற்றபடி பதிவு எப்பவும் போல நன்றாக இருக்கிறது....
நன்றி.
உங்களுக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவனாக நான் இருப்பது மகிழ்ச்சி. நன்றி ஜாக்கி சேகர்.
ReplyDeleteஎன்னோட பர்சனல் கருத்து என்னன்னா, இந்த மாதிரி கொடூரங்களைப் பண்ணுறவங்களை அம்மணமாக்கி, கல்லாலயே அடிச்சிக் கொல்லணும்ன்றதுதான்... தூக்குத்தண்டனை வேண்டவே வேண்டாம் !
ReplyDeleteபுகைப்படம் சூப்பர் ,அண்ணா புகைப்படக்கலையை பத்தி உங்களுக்கு தெரிந்ததை பதிவாய் இடலாமே
ReplyDeleteநேரம் இருந்தால் Friday the 13th(2009) movie பாருங்கள்
///
ReplyDeleteபாவம் அந்த பெண்ணின் இணை சேரா கால்கள்
///
இதுதான் ஜாக்கி டச்.
வழக்கம் போல் அருமை.
அன்பு நித்யன்
Thalaivare,
ReplyDeletephilosophy pandi philosophy is great.
vote pottachu.
இன்னும் எத்தனை நாளுக்கு தான் அந்த பாவிங்கள் மேல் முறையீடு , மேல் முறையீடு என்று போய்கிட்டு இருபன்னுக நு தெரியலையே... இதுக்கு லாம் இரு முடிவே இல்ல நு தோணுது.. கல்லூரி படம் ரிலீஸ் ஆனா சமயத்துல ஒரு தீர்ப்பு வந்துச்சு 3 பேருக்கு தூக்கு நு.. எப்ப தான் தூக்கு ல போடுவாங்க நு தெரியல. அதே சமயம் , தினகரன் ல நடந்த 3பேர் இறந்த சம்பவம் விசாரணை என்ன ஆச்சோ ?
ReplyDelete'சார்லஸ்' அவர்களின் 'வார்த்தைகள்' பதிவை படித்தேன்.சினிமாவை மிகவும் நுனுக்கமாக அலசி ஆராய்ந்து எலுதியுள்ளார்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியற்க்கு நன்றி
ஹாய் ஜாக்....
ReplyDeleteஉங்கள் பதிவுகளின் சமீப வாசகன். இதுவரை படித்ததில் தி பெஸ்ட் ஆக இருப்பது
http://jackiesekar.blogspot.com/2009/05/blog-post_29.html
இந்த பதிவின் வரிகள் தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் தத்துவம் உரைக்கின்றன......
மற்ற பதிவுகளையும் படித்து மேலும் சொல்கிறேன்
superb sir,
ReplyDeleteI am 42 years old, the way of your thiking is similar to me, i like your writing.
Keep it up.
இணை சேர கால்கள் சூப்பர்,
ReplyDelete//வருவேன்... ஆனால் அதுக்கு எனக்கு தகுதி இருக்கா?//
இது உங்கள் தன்னடக்கம்.
ஒரு வாசகனாய் என் கருத்து,நீங்கள் தகுதியானவரே.