நடிகர் ஜாக்கிசானால் நான் பட்ட அவமானம்...
தமிழகத்தில் 1990களில் என் ரோல் மாடல் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான் தமிழகத்தில் வசூலில் சாதனை படைத்த நேரம்.... புராஜக்ட் ஏ... படம் பட்டையை கிளப்ப... அதில் மணிக்கூண்டு பைட் ரொம்பவும் பிரபலம்... கடைசியில் அந்த படத்தில் எடுத்த காட்சிகளை போடும் போது அதில் ஜாக்கி அடிபட்டு கீழே விழும் காட்சியை பார்த்து திகைக்காதவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது.....
யங் மாஸ்டர் படத்தில் தலைக்கீழாக ஜாக்கி அந்த படத்தில் ஒரு எக்சஸைஸ் செய்வார்... அது போல என் நண்பன் சுபாஷ் அவன் வீட்டில் அது போலவே வேப்பம் மரத்தில் ஒரு பலகை அமைத்து மிக அழகாக செட் செய்து இருந்தான்... அதில் இரண்டு மூன்றுக்கு மேல் தலைக்கீழாக தொங்கி மேல் நோக்கி எழும்ப முடியாது..செல்பும் எடுக்காது... ஆனாலும் தொடர்ந்து முயற்ச்சிப்போம்...
ஜாக்கி அப்போது எங்களை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தார்.. எங்கள் எல்லா செயல் களிலும் ஜாக்கி நிறைந்து இருந்தார்....
நடையில், உடையில்,ஓட்டத்தில்,மரத்தில் இருந்து குதிப்பது, சைக்கிளில் போகும் போது சின்ன பிளாட்பார்மில் சைக்கிள் ஓட்டுவது என்று எங்களிடத்தில் ஜாக்கியின் பிரதிபலிப்பு எல்லா இடத்திலும் இருக்கும்... அதுவும் என்னிடத்தில் ரொம் ப அதிகம்..
ஜாக்கியின் உலகளாவிய வளர்ச்சிக்கு படத்தில் பின் புலத்த்தில் நடந்த காட்சிகள் படத்தின் என்ட் கிரடிட்கார்டின் போது ஜாக்கி நடித்த படத்தில் போடுவார்கள்... படத்தின் பின்புறத்தில் நடக்கும்... பி ஹைண்ட் த சீன் காட்சிகளும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது... ஆர்மர் ஆப் காட் படத்தின் ஒவ்வொரு பிரேமும் எனக்கு இன்னும் அத்துபடி..... அந்த படத்தில் வருவது போல் பபிள்காம் ஸ்டைலாக போடுவது என்று அப்பட்டமான காப்பி வாழ்க்கை வாழ்ந்தவன் நான்...
மேலே உள்ள ஆர்மர் ஆப் காட் டிரைலரில் வரும் ஆங்கில பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமானது... எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் அந்த பாடலை அப்போதெல்லாம் சத்தமாக பாடியபடி சைக்கிள் மிதிப்பேன்..
அந்த பாடலை இப்போது பாடினாலும் எனக்கு உற்சாகம் வந்து விடும்...இன் டு த ஸ்கை என்பது மட்டும் ரொம்ப சத்தமாக மிஸ்டர் பீன் சர்ச்சில் பாடவது போல் சத்தமாக பாடுவேன்........ அந்த படத்தில் வருவது போல் பப்பிள்காம் கையில் வைத்து வாயிக்கு சாகசம் செய்வது என்று பயங்கரமாக பிராக்டிஸ் பண்ணுவோம்.....
ஆனால் பேனர் கட்டுவது , தேங்காய் உடைப்பது என்று செய்யாமல் , எங்கள் உடலில் வலு ஏற்ற ஜாக்கியை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டோம்...
ஏன் இவ்வளவு விரிவாய் சொல்கின்றேன் என்றால்.... பின்னால் வரும் கதை அப்படிப்ட்டது....
என் அத்தை வீட்டு பக்கத்து வீட்டு மாடியில் கிளிப் விழுந்து விட்டால் பக்கத்து வீட்டுகாரர் வீட்டு கதவை தட்டி மாடிக்கு போய் எடுக்கும் பழக்கம் எல்லாம் இல்லை.. அப்படியே அடுத்த வீட்டு மாடிக்கு ஜாக்கி போல் தாவி கிளிப் மற்றும் விழுந்த பொருட்கள் எடுத்து வருவதுதான் என் ஸ்டைல்....
தனியாக கடலூர் சில்வர் பீச்சில் குதிப்பது பல்ட்டி அடிப்பது எகிறி குதிப்பது என ஜாக்கி போல் பல ஆட்டங்கள் போடுவோம்.. ரொம்ப எனர்ஜியாய் இருப்போம்...
என் உறவுகாரர்.... திருட்டுக்கு பயந்து அவரது வீட்டு மாடியில் அவரின் அரை சைக்கிளை ஏற்றி வைத்து இருந்தார்.... நான் கொஞ்சம் விபரம் என்பதால் என்னை எடுத்து வர சொல்லி சைக்கிள் சாவி கொடுத்து இருந்தார்... அவர் வீட்டின் மாடியில்தான் நான் கதை புத்தகங்கள் வார பத்திரிக்கை படிப்பது வழக்கம்..
அந்த வீட்டின் படிகள்வீட்டின் சைடில் இருக்கும்,ரோட்டை ஒட்டி இருக்கும்...
நான் சைக்கிளை படிகளில் தூக்கி கொண்டு தரைக்கு இறங்கி வந்து சைக்கிள் ஓட்ட வேண்டும்...இப்படி நடந்து இருந்து இருந்தால் இந்த கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இப்போது வந்த இருக்காது... விதி யாரை விட்டது....
மாடியில் இருந்து எட்டி பார்த்தேன்... தூரத்தில் நாங்கள் தவமாய் தவம் கிடக்கும் எங்கள் நகரின் தேவதை, அவளின் அக்கா குழந்தையை கை பிடித்து நடத்தி அழைத்து வருவதை பார்த்தேன்.....
பெரிய அளவில் அவளை அசத்த தீர்மாணித்தேன்... அதாவது புராஜக்ட் ஏ படத்தில் ஜாக்கி சைக்கிள் சாகசம் செய்வது போல் படியில் சைக்கிளில் இறங்கி அவள் பக்கத்தில் சட்டென போய் வளைந்து அவளை அசத்த வேண்டும் என்பது பிளான்...
நான் இருக்கும் வீட்டு படியின் அருகில் நடந்து வந்து விட்டாள்... முன் பிரேக் பின் பிரேக் ரெண்டையும் அழுத்தி பிடித்தேன் முன் சக்கரத்தை இரண்டு படிகளில் இறக்கினேன்... அதாவது கொஞ்சம் விசையை செலுத்தினால் 25 படிகள் கொண்ட அந்த மாடி படியில் இருந்து சைக்கிளோடு நான் சட சட வென இறங்கி வேண்டும்... சத்தமாக சைக்கிளில் நான் இறங்கும் போது அவள் பார்த்து கலவரபடவேண்டும்..... இது நம்ம பிளான்.... ஆண்டவன் வேற பிளான் வைத்து இருந்ததை நான் அப்போது அறியவில்லை....
அவள் வந்துவிட்டாள்... நான் என் சைக்கிளில் முன் சக்கரத்தை ஒரு படிதான் இறக்கினேன்... பின் சக்கரத்தை மாடியின் படி விளிம்பில் வைத்தேன்....அவள் வந்து விட்டாள்.... கொஞ்சமாக சைக்கிளை நகர்த்த... அப்போதுதான் நியூட்டன் கண்டு பிடித்த புவியீர்ப்பு விசை பேய் வேகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது....சைக்கிளின் வெயிட் ,என் வெயிட், மற்றும் 25 படிகள் கொண்ட செங்குத்தான படியில் இருந்து புவியீர்ப்பு விசைவேகம் என்னை பலம் கொண்ட மட்டும் இழுக்க ...முன் பிரேக், பின்பிரேக் எல்லாத்தையும் காறி துப்பி விட்டு புவியீர்ப்பு விசை தன்னகத்தே எடுத்துக்கொண்டது...
அப்போதுதான் ஜாக்கி எந்த சண்டை மற்றும் சாகச காட்சிக்கு முன் பலமுறை ரிகர்சல் செய்வார்... என்ற உண்மையும்... கீழே விழுந்தால் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு படையே வரும் என்பதும் ரொம்ப லேட்டாக நினைவுக்கு வந்து தொலைத்தது...
நான் பக்கத்தில் உள்ள கைபிடியில் சாய்ந்து வேகமாக தடதடத்து, அதில் புவியீர்ப்பு விசை காரணமாக விழுந்து என் கட்டுபாட்டை இழந்தேன்...
விடியலில்... நாய் ஒரு மாதிரி ஊலை இடுமே... அது போலான சத்தம் என் வாயில் இருந்து என்னை அறியாமல் பயத்தில் வெளிப்பட..... சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட என பெருத்த சத்தம் எழுப்பியபடி சைக்கிளும் நானும் அவள் காலடியில் போய் சொத் என்ற சத்தத்துடன் விழுந்தோம்.....
என் சைக்கிள் கேரியரில் வைத்து இருந்த புத்தகங்கள் எல்லாம் நெல்லிகாய் மூட்டையை பிரித்து கொட்டினால் சிதறுமே அது போல் சிதறி கிடந்தது... அவள் பயத்தில் நடத்தி வந்த குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள்...நான் தூசி மண்டலத்துக்குள் இருந்து எழுந்து அவள் முகத்தை பார்த்தேன்... அவள் ராஜேந்திரகுமார் எழுதும் ஙே போல் ஒரு கேவலமான,பயம்கலந்த பார்வை பார்த்து விட்டு நடக்க...அந்த பார்வையை என் ஆயுசுக்கும் என்னால் மறக்க முடியாது.. இது நடந்து 1992 களில் என்று நினைக்கின்றேன்... அது ஜாக்கியால் நான் போட்டுக்கொண்ட சூடு....
நான் புத்தகங்களை சேகரிக்க... பக்கத்து விட்டு மாடியில் இருந்து ஜாக்கி என்று குரல் கேட்டது.. அது என் நண்பர்கள் கூட்டம்..ஜாக்கிபோல் சாகசம் செய்து பெயிலர் ஆனதால் அந்த குரல்களில் நக்கல் வழிந்தது...
இரண்டு மாதத்துக்கு முன் ஊருக்கு போய் இருந்தேன்... பேருந்து நிறுத்தத்தில் யாரோ களுக் என சிரிப்பது போல இருந்தது....தவமாய் தவம் கிடந்த அந்த தேவதை சிசேரியனுக்கு பிறகு சின்ன தொப்பையோடு ம் இரண்டு பெண் குழந்தைகளோடும் காட்சி கொடுத்து கொண்டு இருந்தது...
என்னை பார்த்து நான்விழுந்து வைத்ததை நினைத்து அவள் சிரித்து வைத்து இருக்க வேண்டும்... அவளை பார்த்த போது அது உறுதிபடுத்தினாள்...அவளின் இரண்டு குழந்தைகள்... தமன்னா அணியும் உடைகள் அணிந்து புசு புசு என்று காட்சி அளித்தார்கள்...
பேருந்து வந்தது....பேருந்தில் நல்ல கூட்டம் அவள் முதலில் பேருந்தில் ஏறிவிட்டாள்... நான் அவள் குழந்தைகள் ஏற உதவி செய்தேன்.... தேவையில்லாமல் பழைய ஞாபகம் வர உதட்டில் சிரிப்புடன்... ஓடும் பேருந்தின் ஜன்னல் கம்பியில் வவ்வால் ஆனேன்...
தவமாய் தவம், பேருந்தின் உள்ளே இருந்து என்னை பார்த்தாள்...சட்டென வலையோசை கல கலவென என்று சத்யா படத்தின் பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது..
உன்னை காணும் சபலம் வரக்கூடும்...
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள் ஆகும்...
நான் மீண்டும் பேருந்தின் உள்ளே பார்க்கும் பார்வையை தவிர்க்க ஆரம்பித்தேன்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
Labels:
அனுபவம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணே அந்த பாட்டு ரொம்ப புடிச்சிருக்கு
ReplyDeletenice autograph mr jakie.
ReplyDeleteஜாக்கிசானையும்,அவரது மார்ஷியல் ஆர்ட்டையும் ரசிக்க்காதவர்கள் இந்த உலகில் இருக்க முடியும?
ReplyDeleteஅருமையான பதிவு.திடீர்னு கவிதை,ஃப்ளாஷ் பேக் ஃபிகர்னு போய் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்னு பெயர் எடுத்துடுவீங்க போல ,வாழ்த்துக்கள் அண்ணே
உங்களின் ஆக்க்ஷன் சீன் தவிர்த்து மற்ற எல்லா காட்சிகள் என் வாழ்க்கையிலும் உண்டு. :)
ReplyDeleteகடைசி வரிகளில் ஜொலிக்கிறீங்க ஜாக்கி
ReplyDeleteஎல்லோரட வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் இருக்கும் போலவே.. நல்லா எழுதிரூக்கீங்க ஜாக்கி :)
ReplyDeleteஎல்லா பசங்களுமே இப்பிடித்தனா.அருமையான பதிவு.
ReplyDeleteஅட...அட...அட... ஆட்டோகிராப் கலக்கல்... இந்த தேவதைங்களே இப்படித்தாண்ணே...
ReplyDeleteஉசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்கிடுவாளுக.... அடி பலமோ??? :))
நன்றி ஜெகதிஷ்....
ReplyDeleteநன்றி. செந்தில்குமார்.... தொடர் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும்...
நன்றி குரு இத எல்லோர் வாழ்விலும் நடந்து கதைதான்.. நான் மீசையில் மண் ஒட்டியதை சொல்லி இருக்கேன்...
ஆர்மர் ஆப் காட் படத்துல ஆரம்பிச்சுட்டு முடிக்கும்போது ஆட்டோகிராப்புக்கு வந்துட்டீங்களே... ரசித்தேன். நன்றி.
ReplyDeleteக. சுரேந்திரன்
அகம் புறம்.
நன்றி ஜமால் நீ நலமா?
ReplyDeleteநன்றி இராமசாமி கண்ணன்,,
நன்றி அருண் பிரசாத்...
நன்றி நாஞ்சில் பிரதாப்... செம அடி ஆனா வடிவேலு சொல்வது போல் வலிப்பது தெரிவிக்காமல் சட்டென எழுந்து விட்டேன்
குரு,
ReplyDeleteசூப்பர் ப்ளாஷ் பேக். இதோ இதை படித்ததனால் என் மானமும் போயிற்று கீழ் கண்டவாறு....
//: இது நம்ம பிளான்.... ஆண்டவன் வேற பிளான் வைத்து இருந்ததை நான் அப்போது அறியவில்லை....
அவள் வந்துவிட்டாள்... கொஞ்சமாக சைக்கிளை நகர்த்த... அப்போதுதான் நியூட்டன் கண்டு பிடித்த புவியீர்ப்பு விசை பேய் வேகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது....சைக்கிளின் வெயிட் ,என் வெயிட், மற்றும் 25 படிகள் கொண்ட செங்குத்தான படியில் இருந்து புவியீர்ப்பு விசைவேகம் என்னை பலம் கொண்ட மட்டும் இழுக்க ...முன் பிரேக், பின்பிரேக் எல்லாத்தையும் காறி துப்பி விட்டு புவியீர்ப்பு விசை தன்னகத்தே எடுத்துக்கொண்டது...
விடியலில்... நாய் ஒரு மாதிரி ஊலை இடுமே... அது போலான சத்தம் என் வாயில் இருந்து என்னை அறியாமல் பயத்தில் வெளிப்பட..... சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட என பெருத்த சத்தம் எழுப்பியபடி சைக்கிளும் நானும் அவள் காலடியில் போய் சொத் என்ற சத்தத்துடன் விழுந்தோம்.....://
மேற்கண்ட வரிகளை படித்து நான் அலுவலகத்தில் வயிரு வலிக்க சிரிக்க ஆரம்பிக்க, விதி என் MD ரூபத்தில் போன் வழியாக வந்தது.
மிக சீரியசாக அவர் எதையோ கேட்க, நான் சிரிப்பை அடக்க முடியமல் கெக்க பிக்கெ என சிரித்து வைக்க.. அவர் விட்ட வசவுகளை பற்றி எழுதினால்.. இன்னமும் என் மானம் போகும்.
மனோ
எனக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். நானும் ஜாக்கி ஜானின் தீவிர ரசிகன்தான். ப்திவிற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஉங்கள் பிளாக் மிக நன்றாக உள்ளது!
நல்லா வாய்விட்டு சிரித்தேன்... வேறொரு தனிப்பட்ட காரணத்தால் துயரத்தில் மூழ்கியிருந்தபோதும்...
ReplyDelete//////மேலே உள்ள ஆர்மர் ஆப் காட் டிரைலரில் வரும் ஆங்கில பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமானது... எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் அந்த பாடலை அப்போதெல்லாம் சத்தமாக பாடியபடி சைக்கிள் மிதிப்பேன்../////////
ReplyDeleteநண்பரே உங்களின் வெளிப்படையான எழுத்து நடை என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி
//
ReplyDeleteஆனால் பேனர் கட்டுவது , தேங்காய் உடைப்பது என்று செய்யாமல் , எங்கள் உடலில் வலு ஏற்ற ஜாக்கியை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டோம்...
//
நல்லாத்தான் யோசிச்சிரிக்கிறீங்க
.....
அருமையாக இருந்தது. இயல்பாக எழுதுகிறீர்கள்.
ReplyDeleteஜாக்கின்னா,அசத்தல் பதிவு!! ம்ம் ..ஒவொரு மனுசனக்கும் ஒவொரு பீலிங்
ReplyDeleteஆனா இதுல பேஜாரான மேட்டரே அவளுங்க சிரிக்கிறதுதான் , அந்த சிரிப்புக்கு இன்னா அர்த்தம்னம்னு எவனுக்கும் தெரியாது
அன்புடன்
சிவா
அருமை நண்பரே. ஜாக்கியால் போட்ட சூடு படித்து சிரித்துவிட்டேன்.
ReplyDelete//முன் பிரேக், பின்பிரேக் எல்லாத்தையும் காறி துப்பி விட்டு புவியீர்ப்பு விசை தன்னகத்தே எடுத்துக்கொண்டது...
ReplyDeleteவிடியலில்... நாய் ஒரு மாதிரி ஊலை இடுமே... அது போலான சத்தம் என் வாயில் இருந்து என்னை அறியாமல் பயத்தில் வெளிப்பட.....//
அருமையான வரிகள் ஜாக்கி, சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்கிறது. இப்போது இருக்கும் உங்களின் உருவத்தோடு இந்த சம்பவங்களை நினைத்துப்பார்த்தேன்..முடியவில்லை..பதிவாக முழுமையாக இருக்கிறது.
இந்தப் பதிவில் மிக அழகான வார்த்தைகளால் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசம்பவத்திற்கு :). :(
தேவதைகளை அசத்த நாம் படும் படு சொல்ல முடியல.... பாதி காலம் அதிலேயே தீர்ந்து விடுகிறது.
ReplyDeleteநீங்கள் பதிவு எழுதும் விதம் நன்றாக உள்ளது
// அப்போதுதான் ஜாக்கி எந்த சண்டை மற்றும் சாகச காட்சிக்கு முன் பலமுறை ரிகர்சல் செய்வார்... என்ற உண்மையும்... கீழே விழுந்தால் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு படையே வரும் என்பதும் ரொம்ப லேட்டாக நினைவுக்கு வந்து தொலைத்தது... //
ReplyDeleteSafety First...
எப்போதும்!
Anna nega wilumbodu epadi irundirukum unga face nu nenachi paten ha ha ha mudiyala,anda kankolla katchhi
ReplyDeleteneenga panna Chettaikku
ReplyDeleteethukkay Jackie karanam solringa?
Nayama Ungalal Jackie Patta avamanan endru Title irukka Vendum
siriththu siriththu vayiru punnaagip ponathu!
ReplyDeleteகலக்கிட்டிங்க போங்க..
ReplyDelete