அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...

அன்புள்ள இந்திய (தமிழக) மீனவனுக்கு வணக்கம் வாழிய நலம்...
எங்க வாழிய நலம் என்று முனு முனுக்க வேண்டாம்...

உங்கள் சமுக மீனவர்களை சிங்களவர்கள் நிர்வாணபடுத்தி,உதை கொடுத்து, குண்டு அடிபட்டு சீறும் சிறப்புமாக இருப்பதாய் பத்திரிக்கைகளில் படித்துக்கொண்டு இருக்கின்றேன்...

உலகின் 5வது வல்லரசாக வளர்ந்து கொண்டு இருக்கும் நாட்டின் குடிமகன்... குண்டடி பட்டு இறப்பது வாடிக்கையாகிவிட்டது...ஆனால் அவர்களுக்கு உங்களை நம் நாட்டின் குடிமகன் என்ற நினைப்பு கிஞ்சித்தும் அவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது...

இந்தியாவில் பிறந்த அத்தனை குடிமகன்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகின்றது... அப்படி கொடுப்போம் என்று சொல்லிதான் ஆட்சியாளர்கள் அறியனை ஏறுகின்றார்கள்...

தமிழ்நாட்டை விட சிறியதாய் இருக்கும் தேசம்...இந்தியாவில் இருப்பவனை அடித்துக்கொண்டு இருக்கின்றது.. ஒரு கேள்வி இல்லை ஒரு கண்டனம் இல்லை...பிரதமர் ஒரு எச்சரிக்கை விடுத்தால் கூட அது உலக நாடுகளின் கவனம் பெரும்... அதை கூட செய்வதில் அவருக்கு தயக்கம் இருக்கின்றது...

ஒருவேளை நீங்கள் தலையில் டர்பன் கட்டி இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் கால் சதையாவது அவருக்கு ஆடி இருக்கும்...ஒரு வேளை இந்திய இறையாண்மை பாராளுமன்றத்தில் மட்டும் இருப்பதாக எண்ணிவிட்டதன் விளைவே இந்த அமைதி என்று என்ன தோன்றுகின்றது....

பாரளுமன்றத்தில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தால்தான் இந்திய இறையாண்மை கேள்விகுறியாக்கபடுகின்றது... ஆனால் உங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயும் போது அது பற்றி எந்த கேள்வியும் இல்லை... வாழ்க்கை போராட்டத்தில் தினமும் உயிரை பணயம் வைப்பவன் விஷயத்தில் இந்திய இறையாண்மை எந்த கேள்வியும்ம இல்லாமல் தூங்குகின்றது...


நம்ம ஊரில் ஆயுதபூஜைக்கு இரும்பு சாமான்களை துடைத்து பட்டை போட்டு படையல் வைப்பது போல் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்துக்கு நம் ராணுவ தளவாடங்கள் அணிவகுத்து காட்சி நடத்துவோம்....அது ஒரு நாளும் இந்திய பெருங்கடலில் சிங்கள ராணுவத்தையோ அல்லது சிங்கள மீனவனையோ இது போல் செய்தது இல்லை அல்லது பயமுறுத்துவது போல ஒரு சின்ன லுலுலாயி வேலையை கூட செய்தது இல்லை...


எல்லைதாண்டி வந்த எத்தனையோ சிங்கள மீனவனையும்,பங்களாதேஷ் மீனவனையும் கைது செய்து முறைபடி அவர்கள் அரசிடம் அல்லது அவர்கள் நாட்டின் தூதரகத்தில் விட்டு விடுவோம்... யாரையும் நிர்வாணபடுத்தி துப்பாக்கியால் சுட்டது இல்லை....



உலகின் மிக பழைமையான தொழில் உங்களுடையதுதான்...அதே வேளையில் உலகில் ஆறு மொழிகள் மட்டுமே மிக தொன்மையானவையாம்.....அதில் நீ பேசும் தமிழ் மொழியும் ஒன்று...

ஆம் எவ்வளவு பெருமையான விசயம் அல்லவா? இப்போது கூட நீ பேசி சிலாகிக்கும் நம் தமிழ் செம்மொழிக்கு450 கோடியில் விழா எடுத்தார்கள்...நம் பரப்பரை வீரம் பற்றி சீலாகித்தார்கள்.. யாரும் நம் வீரம் பற்றி மறந்து விடக்கூடாது அல்லவா? அதனால்தான்

அது எல்லாம் பழம் கதை இப்போது எல்லாம் அது பேசி புரயோஜனம் இல்லை....நீ கூட தெருமுக்கில் டீ குடித்து கொண்டே தினத்தந்தி படித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட தமிழர் வீரம் பற்றி பெருமை பேசி இருக்கலாம்...ஆனால் அந்த வீரத்துக்கும் ஆதீத துரோகத்தால் முள்ளிவாய்காலில் முடிவு கட்டபட்டது..

முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...


மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...

ஒரு 50 பேர் சாகும் போதுதான் ஒரு அரசு விழிக்கும்... ஏனெனில் அரசுக்கு எத்தனையோ தலைக்கு மேல் வேலை இருக்கின்றது....சரி மாநில அரசு விழிக்க வேண்டும்... அதுவும் விழிக்கவில்லை....100 பேர் செத்தார்கள்.. மத்திய மாநில அரசுகள் விழித்து இருக்க வேண்டும்...அவர்கள் விழிக்கவில்லை...200 ஆயிற்று,300 ஆயிற்று,400 ஆயிற்று,500 ஆயிற்று அதுக்கு மேலும் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்...எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு இருப்பதாக உங்கள் மர மண்டைக்கு எட்டவில்லை...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.. அல்லது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை....

எனக்கு தெரிந்து நீங்கள் தொழிலை மாற்றி விடுவது நல்லது... உயிர் பயம் இருந்தால் நீங்கள் தொழிலை மாற்றியே ஆக வேண்டும்.... ஆம் நண்பர்களே உங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும்..

அடுத்த மாதம் இதே போல் இந்திய பெருங்கடலில் வலையறுப்பு சம்பவம் மற்றும் சிங்களவர்கள் நிர்வாண மீனவ பேஷன் ஷோ நடத்துவார்கள்...யாராவது ஒரு மூளை சூடுள்ள சிங்களவன் துப்பாக்கியால் சூட்டு வைப்பான்... நீங்கள் எப்படியும் நிச்சயம் இறந்து போவீர்கள்...அப்படி நீங்கள் இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை தீர்க்க தரிசனம் போல் சொல்கின்றேன் கேளுங்கள்...

இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும் தெரியுமா?

தினத்தந்தியில் மீண்டும் சிங்கள இராணுவம் அட்டுழியம் என்ற தலைப்பிட்டு செய்தி வரும்...

தமிழகத்தில் எந்த முதல்வர் ஆட்சிக்கு இருந்தாலும் ஒரு கண்டன்ம் தெரிவிப்பார்... இப்போதைய முதல்வர் கடிதம் எழுதுவார்... மாட்டுகாரன் செனைக்கு மாடு அழைத்து வருவதை கூட செல்போனில் பேசி முடிக்கும் போது... இப்போதும் கடிதம்தான்.....

உள்துறை அமைச்சகத்தில் இருந்து இலங்கையிடம் விளக்கம் கேட்கபோவதாக கடிதம் வரும்...

ஒரு வாரத்துக்கு பிறகு அந்த கடிதம் மற்றும் விஷயம் டிவி சீரியல்களால் மறக்கடிக்கபடும்....

ரொம்ப தீவிரமான தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரம் முன் ஆர்பாட்டம் நடத்தும்...

தேர்தல் வந்தால் தமிழனாய் இருந்து கொண்டு மீனவ்ர்கள் மீதான தூப்பாக்கி சூட்டை கண்டிக்காத ஆளும்கட்சியே ஒழிக என்பதாய் கோஷம் எழுப்பபடும்...

எதிர்கட்சி இறந்த மீனவனின் போட்டோவை பெரிதாக வால் போஸ்ட் அடித்து தேர்தல் நேரத்தில் ஓட்டி போஸ்டரில் சக்கரை கரைசலை ஊற்றி ஈக்களை மொய்க்க வைத்து பரிதாபம் தேடி....தேர்தலில் ஜெயிக்க வழிபார்பபார்கள்...

இறந்த மீனவன் குடும்பத்துக்கு பிரச்சனையின் சமயத்துக்கு ஏற்ப... ஒரு லட்சம் இரண்டு லட்சம் வழங்கபடும்... எலெக்ஷன் நேரம் என்றால் 3லட்சத்தில் இருந்து 5 லட்சம் கொடுக்கபடும்... போராட்டம் ரொம்ப தீவிரமானால் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கபடும்...

இதுதான் நடக்கும் நீங்களும் மணலில் புதைத்து வைத்த டப்பா கஞ்சியை குடித்துக்கொண்டே அரசு கொடுத்த தொலைகாட்சியில் பார்த்து வைப்பீர்கள்...ரொம்பவும் போதை ஏறிவிட்டால் செல்போனில்

ஹலோ ....மீயிசிக்கா?
சித்ரம் பேசுதடி படத்தில் இருந்து வலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டை போட சொல்லி நேயர் விருப்பம் கேட்பீர்கள்...

யாராவது எல்லைதாண்டும் சிங்கள மீனவர்களை தமிழ எல்லையில் வந்தால் அவர்களை கைது செய்து புது உடை கொடுத்து...உணவு கொடுத்து தூதரகம் மூலம் இலங்கைக்கு கப்பல் மூலமோ அல்லது விமானம் மூலமோ வந்தாரை வாழவைக்கும் தமிழனால் அனுப்பி வைக்கபடுவான்...


தமிழக மீனவர்களே உங்களுக்கு உயிர் தப்பிக்க ஒரு உபாயம் சொல்கின்றேன் கவனமாக கேளுங்கள்...
உயிர்தப்ப வேண்டும் என்றால் ஒரே வழி... இருக்கின்றது... இல்லை எங்கள் தொழிலைதான் நாங்கள் செய்வோம் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை....ஊரில் இருக்கும் சொத்தை வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்... தர்பூசனி மொத்தமாக பயிரிடும் இடத்தில் போய், ஒரு காய் 10 ரூபாய் மேனிக்கு பேசி ஒரு 500 தர்பூசனி வாங்கி லாரி பிடித்து சென்னையில் ஏதாவது ஒரு நடையோரத்தில் கடை போடுங்கள்...

போலிசுக்கு லஞ்சம் என்றும், அந்த பகுதி தாதாக்களை கவர் செய்ய என கொஞ்சம் அமவுன்ட் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்...நோச்சிகுப்பம் அல்லது அயோத்திக்குப்பம் பக்கம் வாடைகைக்கு வீடுபிடித்துக்கொள்ளுங்கள்....சப்போஸ் தொழிலில் தோர்தாலும் சென்னையில் உள்ள கடலில் வலை போட்டு மீன் பிடிக்கலாம்...

போர்குற்றத்தை விசாரிக்கவந்த பான்கீ மூனை மாமா என்று அழைத்தவர்கள்...சிங்களவர்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை செய்யாதவரை இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்க போவதில்லை...

தினமலரும், இந்துவும் எப்போதும் சிங்களவர் பக்கம்தான்...அவர்கள் செய்வது நியாயம் என்று எழுதுவார்கள்...இவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்து இருக்க கூடாது என தரையில் இருந்து கொண்டு வாதம் செய்வார்கள்...அவர்களை பொறுத்தவரை மயிலாபூரில் தண்ணியும் கரண்டும் ஒழுங்காக தடையில்லாமல் வந்தால் போதும்....


ஆனால் சிங்களவர்கள் ஒரு போதும் இந்தியாவை ஒரு நேச நாடாக வைத்து பார்ப்தில்லை... விரைவில் நம் கண்ணை குத்த தொடங்கும் படலம் விரைவில் நடக்கும்...அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் குரல் கொடுப்போம்.... அப்போது எல்லாமே கடந்து போய் இருக்கும்..

ஒரு கோபத்தின் வெளிபாடாய் இந்த கடிதம்.... மீனவ மக்களை காயபடுத்த அல்ல....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...

குறிப்பு ..
எழுத்து பிழைகள் இருக்கும்.. வேலை இருப்பதால் வந்து சரி செய்கின்றேன்..

2 comments:

  1. //முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...
    மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...//
    இது கையாகாலா தனம் அல்ல. திராவிடக்கட்சிகளிடம், மாநில உரிமைகள் சம்பந்தமான ஒரு தெளிவான தொலை நோக்குப் பார்வை இல்லை. அண்ணா தனிமாநில கோரிக்கையை கைவிடும்போதே, "மாநில பிரிவினைக்கான கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன" என்றார். அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்தார்? அவர் மாநிலப்பிரிவினையை கைவிட்டதே பதவி அரசியல் செய்ய வேண்டும் என்பதுதானே. பிழைப்புவாதத்தின் பிதாமகன் என்று ஒரு பதிவு வினவில் வந்தது. படித்துப் பாருங்கள்.
    அண்ணாவே இப்படி என்றால்.. பின்னால் வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ????.
    எம்ஜியாரும் சரி கலைஞரும் சரி தம்முடைய அரசியல் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் போதும் - இதுதான் மத்திய அரசுடனான மாநில அரசின் உறவு.
    தன்னுடைய மகனுக்கு மகளுக்குப் பதவி என்றால் தன்னைப் பொட்டலம் கட்டிக் கொண்டு டில்லி செல்வார் கலைஞர். ஆனால் முள்ளிவாய்க்கால் இழவு, மீனவ படுகொலைகள் என்றால் கடிதம் எழுதுவார்.
    நிலைமை இப்படி இருக்க - சும்மா மயிலிறகால் தடவி கொடுப்பது மாதிரி - மாநில மத்திய லிமிட் என்று உள்குத்து வைக்கின்றர்களே ? என்ன விடயம் ?
    சரி பரவாயில்லை விடுங்கள் - நர்சிம் பிரச்சனைக்குப் பிறகு 'உம்மைப்' போன்ற வலைஞர்கள் நிறைய பொதுப் பிரச்சனைப் பற்றி பேசுகிறீர்கள். அதுவே நல்ல முன்னேற்றம்தான். இதற்காக வினவிற்கு ஒரு நன்றி

    ReplyDelete
  2. //முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...
    மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...//

    இது கையாகாலா தனம் அல்ல. திராவிடக்கட்சிகளிடம், மாநில உரிமைகள் சம்பந்தமான ஒரு தெளிவான தொலை நோக்குப் பார்வை இல்லை. அண்ணா தனிமாநில கோரிக்கையை கைவிடும்போதே, "மாநில பிரிவினைக்கான கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன" என்றார். அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்தார்? அவர் மாநிலப்பிரிவினையை கைவிட்டதே பதவி அரசியல் செய்ய வேண்டும் என்பதுதானே. பிழைப்புவாதத்தின் பிதாமகன் என்று ஒரு பதிவு வினவில் வந்தது. படித்துப் பாருங்கள்.

    அண்ணாவே இப்படி என்றால்.. பின்னால் வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ????.

    எம்ஜியாரும் சரி கலைஞரும் சரி தம்முடைய அரசியல் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் போதும் - இதுதான் மத்திய அரசுடனான மாநில அரசின் உறவு.

    தன்னுடைய மகனுக்கு மகளுக்குப் பதவி என்றால் தன்னைப் பொட்டலம் கட்டிக் கொண்டு டில்லி செல்வார் கலைஞர். ஆனால் முள்ளிவாய்க்கால் இழவு, மீனவ படுகொலைகள் என்றால் கடிதம் எழுதுவார்.

    நிலைமை இப்படி இருக்க - சும்மா மயிலிறகால் தடவி கொடுப்பது மாதிரி - மாநில மத்திய லிமிட் என்று உள்குத்து வைக்கின்றர்களே ? என்ன விடயம் ?

    சரி பரவாயில்லை விடுங்கள் - நர்சிம் பிரச்சனைக்குப் பிறகு 'உம்மைப்' போன்ற வலைஞர்கள் நிறைய பொதுப் பிரச்சனைப் பற்றி பேசுகிறீர்கள். அதுவே நல்ல முன்னேற்றம்தான். இதற்காக வினவிற்கு ஒரு நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner