எல்லோரும் எழுதி விட்டர்ர்கள் இந்த கதையை... படம் வருவதற்குள் ஒரளவுக்கு இது என்ன கதை என்று என்னால் யுகிக்க முடிந்தது...விமர்சனங்களை படித்தாகிவிட்டது..
அதனால் ஒரளவு சளிப்பாகதான் இந்த படத்துக்கு போக வேண்டும் என்று நினைத்து இருந்ததேன்.. ஏனெனில் இது போலான படங்களின் கதை தெரிந்து விடுவதால் பலது தொய்வை கொடுத்து இருக்கின்றன...
ஆனால் பல நண்பர்கள் இந்த படத்தை நான் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து செல்களில் குறிஞ்செய்தி அனுப்பியபடி இருந்தனர்... அந்த எஸ்எம்எஸ்கள் கூட இந்த படத்தை நான் விரைவில் பார்க்க வேண்டும் என்று உணர்வை தூண்டின என்றால் அது மிகையில்லை....
நேற்று பதிவர் கேஆர் பி செந்தில் அண்ணே பிரியா இருந்தா இந்த படத்துக்கு போயிட்டு வரலாமா என்று கேட்க.... அயம் ஆல்வேஸ் பிரி என்பதால் படம் பார்க்க ஒப்புக்கொண்டேன்....ஏவிஎம் ராஜேஸ்வரி போனோம்..
தமிழில் 23ம் புலிகேசி, இரும்புகோட்டை முரட்டு சிங்கம், போன்ற முயற்ச்சிகள் தமிழ் திரைப்பட உலகில் புது ராஜபாட்டையை போட்டு செல்கின்றன... அந்த வகையில் இந்த படமும்....இயக்குனர் விஜயின் மூன்றாவது படம்... இந்த படம் என்று நினைக்கின்றேன்......இதற்கு முன் அஜித் திரிஷாவை வைத்து கிரீடம் என்ற படத்தை எடுத்தவர்... மூன்றாவது படத்துக்கு பிரீயட் பிலிம் எடுக்க நிரம்ப தைரியம் வேண்டும்... அவர் சொன்ன கதையை தயாரிப்பு தரப்பு புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும்...அதை இந்த படம் சாத்தியபடுத்தி இருக்கின்றது....ஆனால் இதில் கண்டிப்பாக தவிர்த்து இருக்க வேண்டிய விஷயம் என்பது டைட்டானிக் படத்தின் ஒன்லைன்....
படத்தில் போட்ட பணத்தை எடுக்க அவர்கள் சேப்டி சைடுக்கு டைட்டானிக் படத்தின் ஒன்லைனையே அப்படியே எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்னை பொறுத்தவரை அதில் தவறில்லை என்பேன்...பழைய படங்களை ரீமேக்கி தள்ளும் காலம்...
உதாரணத்துக்கு அஜித்தின் பில்லாவை சொல்லாம்.... அது எற்க்கனவே எடுத்த படம்... பார்த்த கதை அதையே சுவாரஸ்ய படுத்தவில்லையா? இந்த படம் நாம் வாழும் நகரத்தின் ஒரு கால கட்டத்தை .....இருக்கும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார மார்கெட்டுக்கு ஏற்றது போல் நம் கண்முன் காட்டமுயற்ச்சி செய்து இருக்கின்றார்கள் அல்லவா? அதற்கு எனது ராயல் சல்யூட்.....
மதராசபட்டிணம் படத்தின் கதை என்ன?
1945 ல் பிரிட்டிஷ் காலத்து இந்தியாவின் மதராசபட்டிணத்தில் அரம்பிக்கும் கதை....சலவைத்தொழிலாளயாக இருக்கும் பரிதி (ஆர்யா) என்கின்ற இளைஞனுக்கும் துரையம்மாஎன்று அழைக்கபடும் (எமி ஜாக்சனுக்கும்) வெள்ளைகார கவர்னரின் பெண்ணுக்கும் இடையே, பாழாய் போன காதல் பூ பூக்க அந்த காதல் எதில் முடிந்தது என்பது ஒரு வரி கதை...அப்படியே டைட்டானிக் படத்தை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றினால் என்ன வரும் அதை வைத்து சுவாரஸ்யமாக நம்மை உட்கார வைக்கின்றார்கள்....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
படத்தின் பெரிய பலமே வெள்ளைக்கார பெண்ணாக நடித்த எமி ஜாக்சன்தான்... இதை இப்படி சொல்வதால் எனக்கு வீட்டில் ஒரு வாரத்துக்கு நல்ல சோறு கிடைக்காது என்பது தெரிந்தும் நான் சுதந்திரமாக சூளுரைத்து சொல்லுவேன்...அந்த பெண்தான் எவ்வளவு அழகு....
தினமும் தேங்யூ என்ற இந்த ஆங்கில வார்த்தையை எத்தனையோ பேர் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றோம்... ஆனால் எமி சொல்லும் போது ஒரு அழகு வந்து போகின்றது பாருங்கள் அது கவிதை....அந்த உதடு குவியும் போது நம் உள்ளமும் குவிவது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன...
படத்துக்கு ரிப்பிட் ஆடியன்சுக்கு மிக முக்கிய காரணம் இந்த எமி என்ற வெள்ளைக்கார பொண்ணுதான்....
இந்த பெண்ணை பார்க்கையில் கட்டணா, அவளை கட்டனும்டா... இல்லை கட்டிணவன் காலை தொட்டுக்கும்மடனும்டா என்ற பாடல் நினைவில் தேவையில்லாமல் வந்து போனது...
டைட்டானிக் வெற்றிக்கு மிக முக்கியகாரணம் கேத்வின்செல்ட்தான்... அந்த பொண்ணோட அழகு... கொள்ளை அழகு, அந்த குழந்தைதனமான முகம்.. அப்புறம்தான் தொழில்நுட்பம், ஜேம்ஸ்கேமரோன், டிகாப்ரியோ, பிரமாண்டம் எல்லாம்.... அதுதான் இந்த படத்தில் சாத்தியபடுத்தி இருக்கின்றது...
எமி வரும் காட்சிகளில் இளமை துள்ளல் அந்த கொஞ்சி பேசுதலும், மறந்துட்டியா என்று கேட்கும் அந்த தமிழின் முதல் வசனத்துக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்...
எமி சில காட்சிகளில் இயல்பாகவும் இரவு மெருன் உடையில் உப்பி போய் வருகின்றார்... கஸ்ட்டியூமர் கைவண்ணம்??? நம்ம ஆளுங்களுக்கு அப்படி இருந்ததான் பிடிக்கும்...
எமிக்கு அடுத்த படத்தின்வெற்றிக்கான உழைப்பு கேமராமேன் நீரவ்ஷா.... மனிதர் பின்னி எடுத்து இருக்கின்றார்...
வரலாற்று படம் என்பதால் தமிழ் படத்துக்கு பெரிய செட் போட முடியாது என்பதால் நிறைய காட்சிகள் லோ ஆங்கிளில் கேமரா பயணிக்கின்றது..அதனால் வானம் அதிகமான கமிட் ஆவதை மறுப்பதற்கு இல்லை....
வெள்ளைகாரர்கள் இருக்கும் இன்டோர் காட்சிகளில் நல்ல சாப்ட் லைட்டிங்.... நன்றாகவே இருக்கின்றது.... அது ரிச்சாகவும் காட்டி இருப்பது படத்தின் பலம் பார்வையாளன் அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது....
ஏதோ கொடுத்ததை வைத்து நிறைவாய் செய்து கொடுத்த இருக்கின்றார்கள்...14 கோடியில் உலக சினிமா சாத்தியம்தான் என்பதை இந்த படம் நிருப்பிக்கின்றது...
மிக முக்கியமாக எமியின் குளோசப்ஸ் அருமை....கேமராமேன் நீரவ்ஷாவுக்கு இது அற்புதமான களம்...
இந்த படத்தின் வெற்றி என்பது எல்லோரும் அந்த பெண்ணை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்... அது படம் ஓடி பத்து நாளுக்கு பிறகு அந்த பெண் வரும் காட்சிகளில் ரசிகனிடம் இருந்து வரும் உற்சாகத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது... அதே போல் அந்த ஏற்றதாழ்வு காதல் எல்லோருக்கும் பிடித்து இருக்கின்றது...
அந்த பெண்ணை இனி வரும் படத்தில் எப்படி யூஸ் செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை... இருப்பினும் தொப்புளில் ஆம்டலெட் போடாமல் இருந்தால் சரி...
வாம் லைட்டில் காட்டன் சாரி கட்டி தெரியும் எமியின் செவத்த சின்ன இடுப்புக்கு தியேட்டரில் விசில்...
இந்த படத்தின் காட்சிகள் டைட்டானிக், அபகலிப்டோ என்று பல காட்சிகள் நினைவு படுத்தினாலும் ..... அந்த காதல் காட்சிகளில் இருக்கும் ரசனை எல்லோரையும் ரசிக்க வைத்ததில் தான் தேர்ந்த இயக்குனர் என்று இயக்குனர் நிருபித்துவிட்டார்....
மிக முக்கியமாக பல குளோசப், பிரேம் என்ட்ரி, லோ அங்கில்ஸ், ஆப் லைட்,டிராலி போன்ற இயக்கங்களில் நல்ல சென்ஸ் வெளிபடுத்தி இருக்கின்றார்...
இயக்குனர் விஜய் 200 படங்களுக்கு மேல் விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் இந்த படத்தில் காட்சிகளின் விஷுவலில் கை கொடுத்து இருக்கின்றது..
ஆர்யா நல்ல உடற்கட்டு... அவருக்கு கொடுக்கபட்ட பாத்திரத்தை நன்றாக செய்து இருக்கின்றார்...வாம்மா துரையம்மா பாட்டை வேறு யாராவது பாடகர் பாடி இருக்கலாம்...வெள்ளைகாரருடன் சண்டை போடும் போது டாப் ஆங்கிலில் இருவர் மட்டும் மண்ணில் இருப்பது போலான காட்சி அற்புதம்...
ஹனிபாவுக்கு கடைசி படம் நன்றாக நடித்து இருக்கின்றார்.... சிறைச்சாலை
படத்துக்கு அப்புறம் நல்ல வேடம்...மற்றும் நாசர் , பாலாசிங், பாஸ்கர் போன்றவர்கள் தங்கள் பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கின்றார்கள்...
ஆர்ட் டைரக்கடருக்கு ஒரு சலாம்.. நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கின்றார்கள்...அதே போல் காஸ்ட்யூம்.. மிக முக்கியமாக கடைசியில் கிரேடிட் கார்டு போடும் போது பழைய சென்னையின் போட்டோக்களை அதே ஆங்கிளில் படம் பிடித்து போட்ட உழைப்பு ஒரு அற்புதம்...
அதே போல் அசிஸ்டென்ட் பெயர்களை முதலில் போட்டதற்கு நன்றிகள்.. பாராட்டுகள்
துணி துவைக்கும் காட்சியில் முதல் பெண் துவைக்க... துவைக்கும் கல் ஆடுவதை தவிர்த்து இருக்கலாம்..அல்லது கவனித்து இருக்கலாம்...
எப்போதும் தூங்கும் ஒரு கேரக்டர்...இந்தியனின் சோம்பேறி தனத்துக்கு ஒரு சாம்பிள்...
400 வருஷத்துக்கு அப்புறம் கொடுக்கும் முதல் அடி என்று பேசும் வசனங்கள் பலது மனதில் நிற்க்கின்றன...
கார்பிரேட் நிறுவன போர்வையில் பாரினரிடம் கொள்ளை அடிக்கும் விஷயங்களையும் நக்கல் அடித்து இருக்கின்றார்கள்...
இந்த படம் தப்பிக்க அடுத்த காரணம் லாகானில் விளையாட்டை மட்டும் வைத்து ஜெயித்தார்கள்...இதில் காதலைமட்டும் வைத்து ஜெயித்து இருக்கின்றார்கள்...சுதந்திர போராட்டத்தை படத்தின் பேக் டிராப்பாக வைத்துக்கொண்டு வெற்றிக்கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்...
ஆர்யா நல்ல உடற்கட்டு... அவருக்கு கொடுக்கபட்ட பாத்திரத்தை நன்றாக செய்து இருக்கின்றார்..
தாலியை காட்டியதும் வரும் ஒரு கிளாசிகல் இசையும் அதன்பின் வரும் பாடலும் இசை பிரகாஷை உயரச்செய்கின்றது...
வழக்கமான படம் செய்யாமல் இது போலான கதையை தேர்ந்து எடுத்தமைக்கே இந்த குழுவை பாராட்டலாம்....
படத்தில் மிகப்பெரிய ஓட்டைஇருக்கின்றது...சுதந்திர இந்தியாவில் எந்த பிளைட்டும் இங்கிலாந்துக்கு போகவில்லையா? அல்லது வரவில்லையா? என்பதும்.... பெரிய கல்லூரியை வழி நடத்துபவரின் சின்ன வயது போட்டோவை ஒருவர் மட்டும் அடையாளம் கண்டு கொள்வது வியப்பு
சுதந்திர தாகம் கொண்டவர்கள் போராட்டத்தை சரியாக காட்டவில்லை என்று குறைபட்டுக்கொண்டால்... சிறைச்சாலை என்று ஒரு படம் இதை விட டீடெய்லாக எடுத்து இருப்பார்கள் அந்த படத்தை பார்க்கவும்... அந்த படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய தேசம் அல்லவா இது...
படத்தின் டிரைலர்
படக்குழுவினர் விபரம்....
Directed by A. L. Vijay
Produced by Kalpathi S. Agoram
Written by A. L. Vijay
Starring Arya
Amy Jackson
Nassar
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Editing by Anthony Gonsalvez
Studio AGS Entertainment
Distributed by Red Giant Movies (India)
Ayngaran International (Worldwide)
Release date(s) 9 July 2010
Country India
Language Tamil
சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் டிஸ்க்கி...
படம் வெளியாகி ஏவிஎம் ராஜேஸ்வரிக்கு நான், என் கசின் லக்ஷமன்,பதிவர் கேஆர்பி செந்தில் ஆகியோர் போனோம்.....
நிறைய கல்லூரி பெண்கள் வந்து இருந்தார்கள்.. அதே போல் மாணவர் கூட்டமும் கையில் நோட்டுடன் வந்து இருந்தார்கள்
யார் நடந்தாலும் அண்ணா தியேட்டர் போல் திரை மறைத்துக்கொண்டது...
படம் வந்து பத்து நாளுக்கு பிறகு கவுண்டரில் கூட்டம் இருந்தது...காசி தியேட்டரில் 80 ரூபாய் மற்றும் 90 ரூபாய் என்பதாலும் கூட ஏவிஎம் ராஜேஸ்வரியில் கூட்டம் இருக்க ஒரு காரணமாக இருக்கலாம்... திங்கள் கிழமை மதிய காட்சிக்கு ஹவுஸ்புல்லை ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கின்றேன்..
தியேட்டரில் மேட்டடல் டிடெக்டர் வைத்து இருந்த காரணத்தால் எல்லோரும் வரிசையில் சென்றது ஆச்சர்யம்.. அனால் 3 மணி படத்துக்கு 3 பத்து வரை ஒவ்வோருவராக உள்ளே போக கடைசியில் நம் புத்தியை காட்டிவிட்டோம்... காரணம் அதற்குள் படத்தை போட்டு விட்டார்கள்.... இன்னும்15 நிமிடத்துக்கு முன் தியேட்டரில் விட்டு இருந்தால் எல்லாம் சரியாக நடந்து இருக்கும்... அதே போல் இரண்டு வழியில் டிடேக்டர் வைக்க வேண்டும்....
எமி ஆர்யாவுக்கு மணி கூண்டு சீனில் கிஸ் கொடுக்க உதடுவரை போய் மார்பில் சாய்ந்து கொள்ள... நான் அது வெள்ளைக்கார பெண்ணே இல்லை என்று நான் கமெண்ட் அடிக்க.... இங்க எங்கயோ லோக்கல்ல இருந்து பிடிச்சிகிட்டு வந்து இருக்காங்க என்று சொல்ல...தியேட்டரில் சிரிப்பலை..
இங்கு புகை பிடிக்க கூடாது என்று போட்டு இருந்த போர்டுக்கு பக்கத்தில் எல்லோரும் புகைத்துக்கொண்டு இருந்தார்கள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
ஆமா தல இது விஜய்க்கு முன்றாவது படம் கிரீடம், பொய் சொல போறோம் ,மதராசபட்டிணம்.
ReplyDeleteதல, ஏமியெ பத்தி குளூ குளூன்னு சொல்லி நீங்க என் குருன்னு நீருபிச்சுட்டீங்க... நல்ல விமர்சனம்.
ReplyDeleteமனோ
எமி ஆர்யாவுக்கு மணி கூண்டு சினில் கிஸ் கொடுக்க உதடுவரை போய் மார்பில் சாய்ந்து கொள்ள... நான் அது வெள்ளைக்கார பெண்ணே இல்லை என்று நான் கமெண்ட் அடிக்க.... தியேட்டரில் சிரிப்பலை..
ReplyDeletesuperb!!!!!!!!!!!!!
தமிழ் சினிமாவில் காப்பியடிப்பதை பற்றி இப்போது பிரச்சனையில்லை, ஆனல் இந்த படத்தை பார்த்து தான் எடுத்தேன் என்று ஏன் திரையில் போடுவதில்லை, காப்பிரைட் பிரச்ச்னையில் என்றால் இந்த மாதிரியான அறிவுசார் திருட்டு செய்பவர்களை கண்டிக்காமல் தடவி கொடுப்பது, 'ஆங் எல்லொரும் செய்யறத் தான் இவனும் செய்தான் என்பதும் " அருவருக்கத்தக்கது...
ReplyDeleteசௌந்தர் , மனோ, பொழுது போக்கு, அனைவருக்கு நன்றி
ReplyDeleteவழக்கம் போல் விமர்சனம் அருமை ஜாக்கி.
ReplyDeleteஅன்பின் அக்னி... ஏற்கனவே டைட்டானிக் எடுத்தபடத்தைதான் கேமரோன் எடுத்தார்...அதில் காதலை சேர்த்தார்....
ReplyDeleteஇன்று சமைக்கும் உணவில் இருந்து கட்டிட கலையில் இருந்து காப்பி இல்லாமல் எதுவும் இல்லை அதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்கின்றார்கள்....
சினிமா கவனிக்கபடுகின்றது அவ்வளவே,....
இங்க எவனாவது சுயம்பு என்றால் அது பைத்தியக்காரதனம்...
ஈஅடிச்சான் காப்பி என்றால் மட்டுமே சொல்லமுடியம்.. அதற்க்கு உதாரணம்... வேகம் என்று எஸ்விசேகர் பையன் நடித்த படத்தை சொல்லாம்....
ஏவிஎம் தியேட்டர் முன்னொரு காலத்தில் ப்ரிவியூவாக இருந்ததால், வீட்டினில் உட்கார்ந்து பார்க்கும் எஃபக்ட் கிடைக்கும். அதனால் தான் யாரவது நடந்தால் திரை மறைத்திருக்கிறது.
ReplyDeleteபடம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள். கண்டிப்பாக பார்க்கணும்.
ஜாக்கி,
ReplyDeleteஜொள்ளு ஓவரா இருக்கு, தொடச்சிக்கிட்டு வந்து எழுதுறதில்ல??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இந்த பெண்ணை பார்க்கையில் கட்டணா, அவளை கட்டனும்டா... இல்லை கட்டிணவன் காலை தொட்டுக்கும்மடனும்டா என்ற பாடல் நினைவில் தேவையில்லாமல் வந்து போனது...- அப்படி போடு அருவாளை.அப்புறம் துவைக்கற கல் ஆடறதைக்கூட நுணூக்கமா கவனிச்சு நீங்க ஒரு கேமராமேன்னு நிரூபிச்சிட்டீங்க
ReplyDeleteஅருமை ஜாக்கி; தாமதம் ஆனாலும் விலாவாரியா எழுதியிருக்கீங்க
ReplyDeleteநல்ல விமர்சனம். நானும் ஒன்னும் எழுதி இருக்கேன் .... ஆனா அது விமர்சனம் இல்ல. படிச்சுட்டு சொல்லுங்க.
ReplyDeletehttp://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_20.html
அருமையான படம். ஆனால், படத்தின் இறுதி கட்டங்களில் ,அதாவது சுதந்திரதன்று ரயில் நிலையத்தில் , மக்கள் அனைவரும் சத்யமூர்த்தி வருகிறார் , ஆச்சாரியார் வருகிறார் என்று "சத்யமூர்த்தி வாழ்க" "ஆச்சாரியார் வாழ்க" என்று கோஷம் எழுப்புகின்றனர். அந்த நாளில் சத்யமூர்த்தி உயிரோடு இல்லையே. பின் எப்படி?? . கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் .
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Sathyamurthy
//இந்த பெண்ணை பார்க்கையில் கட்டணா, அவளை கட்டனும்டா... இல்லை கட்டிணவன் காலை தொட்டுக்கும்மடனும்டா என்ற பாடல் நினைவில் தேவையில்லாமல் வந்து போனது...
ReplyDelete//
என் அக்கா ரொம்ப பாவம் :(
ellarum therinja nadikarkalai patriye elutharanga, neengalavathu ithil nadicha english nadikarkalai pathi eluthuveengannu ninachen, ana nalla eluthi irukkinga.
ReplyDeleteellarum therinja nadikarkalai patriye elutharanga, neengalavathu ithil nadicha english nadikarkalai pathi eluthuveengannu ninachen, ana nalla eluthi irukkinga.
ReplyDelete"மதராசபட்டினத்தின் மிகப்பரிய + துரையம்மா" என்பதை யாரும் மறுக்கமுடியாது.டைட்டானிக்கின் தாக்கம் படத்தில் உண்டு என்பதற்க்கு கிளைமாக்ஸ்சில் எமி, ஆர்யாவை காப்பாற்ற தண்ணியில் தள்ளிவிடுவதும் துடுப்பால் ஆர்யாவின் கைகளுக்கு அடிக்கும் காட்சிகளே சாட்சி.(கதைக்கருவைப்பொறுத்தவரை)டைட்டானிக் மட்டுமல்ல பாரதிராஜாவின் நாடோடித்தென்றலும் மதராசப்பட்டினத்தில் விசியிருக்கிறதோ? என்று எண்ணத்தோன்றுகிறது."வழக்கமான படம் செய்யாமல் இது போலான கதையை தேர்ந்து எடுத்தமைக்கே இந்த குழுவை பாராட்டலாம்...." நானும் அமோதிக்கிறேன்.இருந்தாலும் வரவேற்கவேண்டிய படம்தான்.ஜாக்கி சார் உங்கள் விமர்சனமும்தான்.
ReplyDelete"மதராசபட்டினத்தின் மிகப்பரிய + துரையம்மா" என்பதை யாரும் மறுக்கமுடியாது.டைட்டானிக்கின் தாக்கம் படத்தில் உண்டு என்பதற்க்கு கிளைமாக்ஸ்சில் எமி, ஆர்யாவை காப்பாற்ற தண்ணியில் தள்ளிவிடுவதும் துடுப்பால் ஆர்யாவின் கைகளுக்கு அடிக்கும் காட்சிகளே சாட்சி.(கதைக்கருவைப்பொறுத்தவரை)டைட்டானிக் மட்டுமல்ல பாரதிராஜாவின் நாடோடித்தென்றலும் மதராசப்பட்டினத்தில் விசியிருக்கிறதோ? என்று எண்ணத்தோன்றுகிறது."வழக்கமான படம் செய்யாமல் இது போலான கதையை தேர்ந்து எடுத்தமைக்கே இந்த குழுவை பாராட்டலாம்...." நானும் அமோதிக்கிறேன்.இருந்தாலும் வரவேற்கவேண்டிய படம்தான்.ஜாக்கி சார் உங்கள் விமர்சனமும்தான்.
ReplyDelete"மதராசபட்டினத்தின் மிகப்பரிய + துரையம்மா" என்பதை யாரும் மறுக்கமுடியாது.டைட்டானிக்கின் தாக்கம் படத்தில் உண்டு என்பதற்க்கு கிளைமாக்ஸ்சில் எமி, ஆர்யாவை காப்பாற்ற தண்ணியில் தள்ளிவிடுவதும் துடுப்பால் ஆர்யாவின் கைகளுக்கு அடிக்கும் காட்சிகளே சாட்சி.(கதைக்கருவைப்பொறுத்தவரை)டைட்டானிக் மட்டுமல்ல பாரதிராஜாவின் நாடோடித்தென்றலும் மதராசப்பட்டினத்தில் விசியிருக்கிறதோ? என்று எண்ணத்தோன்றுகிறது."வழக்கமான படம் செய்யாமல் இது போலான கதையை தேர்ந்து எடுத்தமைக்கே இந்த குழுவை பாராட்டலாம்...." நானும் அமோதிக்கிறேன்.இருந்தாலும் வரவேற்கவேண்டிய படம்தான்.ஜாக்கி சார் உங்கள் விமர்சனமும்தான்.
ReplyDeleteதிரு "ஜாக்கி" சேகர் அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteஇதுவே எனது முதல் பின்னுட்டம் ....என்னினும் உங்கள் தளம் எனது மிகவிருப்பமான ஒன்று
என்னை மிகவும் பாதித்த படங்களில் மதராச பட்டினமும் ஒன்றாகிறது
உரிமையோடு ஒரு கேள்வி . மிகவும் அற்புதமாக வடித்திருந்த "grand ma" பாத்திரத்தை பற்றி அதிகம் ( இடம் பெறவில்லை என்ன நினைக்கிறேன் ) தாங்கள் குறிப்பிடவில்லை
என்னை பொறுத்த வரையில் granne மிகவும் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனர் அதிகம் வசனம் அமைக்காமல் இந்த பாத்திரத்தின் அமைப்பை மிக அற்புதமாக வடித்து விட்டார் என்றே கூறுவேன்
பக்குவபட்ட ஒரு மனது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். அது கண்களில் தோன்றும் . அந்த தோற்றத்தை அந்த வயதான அம்மா மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார் . உதாரணமாக வழிகாட்டி தமிழ் தெரியாது என நினைத்து கிண்டலடிப்பதையும் , பணம் அதிகமாக வாங்குவதையும் அப்படியே தலைமட்டும் திருப்பி ஒரு பார்வை மட்டும் .. மிகவும் நேர்த்தியாக இருந்தது .மேலும் காதலினால் ஏற்பட்ட வலி , பாதிப்பும் எத்துணை வருடம் ஆனாலும் அப்படியே தான் இருக்கும் .அதன் வெளிப்பாடு அந்த வயதான அம்மா அழகாக வெளிப்படுத்தி இருப்பார்
மேலும் எனக்கு எழுத விருப்பம் . ஆனால் உங்கள் விமர்சனம் படித்த பிறகும் படத்தின் உயிரோட்டமுடனும் , உணர்வுடனும் பார்க்க முடியும் என்பதனால் அதை நான் குறைக்க விரும்பவில்லை
பூக்கள் பூக்கும் தருணம் பாடல் மனதை வருடும் ஒன்று என்றால் மிகையாகாது . ஆனால் நான் படம் பார்த்த பிறகே ரசிக்க ஆரம்பித்தேன்
உங்கள் தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி
உங்களின் இனிவரும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
நட்புடன்
முத்துவேல்
திரு "ஜாக்கி" சேகர் அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteஇதுவே எனது முதல் பின்னுட்டம் ....என்னினும் உங்கள் தளம் எனது மிகவிருப்பமான ஒன்று
என்னை மிகவும் பாதித்த படங்களில் மதராச பட்டினமும் ஒன்றாகிறது
உரிமையோடு ஒரு கேள்வி . மிகவும் அற்புதமாக வடித்திருந்த "grand ma" பாத்திரத்தை பற்றி அதிகம் ( இடம் பெறவில்லை என்ன நினைக்கிறேன் ) தாங்கள் குறிப்பிடவில்லை
என்னை பொறுத்த வரையில் granne மிகவும் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனர் அதிகம் வசனம் அமைக்காமல் இந்த பாத்திரத்தின் அமைப்பை மிக அற்புதமாக வடித்து விட்டார் என்றே கூறுவேன்
பக்குவபட்ட ஒரு மனது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். அது கண்களில் தோன்றும் . அந்த தோற்றத்தை அந்த வயதான அம்மா மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார் . உதாரணமாக வழிகாட்டி தமிழ் தெரியாது என நினைத்து கிண்டலடிப்பதையும் , பணம் அதிகமாக வாங்குவதையும் அப்படியே தலைமட்டும் திருப்பி ஒரு பார்வை மட்டும் .. மிகவும் நேர்த்தியாக இருந்தது .மேலும் காதலினால் ஏற்பட்ட வலி , பாதிப்பும் எத்துணை வருடம் ஆனாலும் அப்படியே தான் இருக்கும் .அதன் வெளிப்பாடு அந்த வயதான அம்மா அழகாக வெளிப்படுத்தி இருப்பார்
மேலும் எனக்கு எழுத விருப்பம் . ஆனால் உங்கள் விமர்சனம் படித்த பிறகும் படத்தின் உயிரோட்டமுடனும் , உணர்வுடனும் பார்க்க முடியும் என்பதனால் அதை நான் குறைக்க விரும்பவில்லை
பூக்கள் பூக்கும் தருணம் பாடல் மனதை வருடும் ஒன்று என்றால் மிகையாகாது . ஆனால் நான் படம் பார்த்த பிறகே ரசிக்க ஆரம்பித்தேன்
உங்கள் தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி
உங்களின் இனிவரும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
நட்புடன்
முத்துவேல்
நான் படம் பார்த்தவுடனே இந்த படத்துக்கு விமர்சனம் எழுதினேன்.......இப்போது தான் உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன் ....
ReplyDeleteஆனால் நான் தான் சிறப்பாக எழுதி உள்ளதாக சொல்லுகிறார்கள் ...
நீங்க என்ன நினைக்கிறீங்க ...
Jockey you missed to command that old white lady acting .Her silent face acting know every thing
ReplyDelete