50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நான் வைத்து இருந்த பிம்பம் அந்த புத்தகத்தை வாசிக்கையில் கொஞ்சம் மாறி இருந்தது.. தொழில் துறையிலும் ஜெர்மன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என ஹிட்லரை வாசித்த போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...
அதே வேளையில் ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் பேர்வரை யூதர்கள்இறப்புக்குகாரணமான கொடுங்கோலனை ரசிக்க முடியவில்லை... உலகில் ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு காரணமானவனை ரசிக்க முடியவில்லை....
நான்தான்... நான்தான் என்று இருமாப்புடன் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்.... முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய்இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை (பீயூரர்)வழி நடத்துபவர் என்று அழைக்கபட்டார்....என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...
இதுவரை இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்....மிக முக்கியமாக... ஐ சர்வடு கிங் ஆப் இங்கிலாந்து.. படமும் லைப் ஈஸ் பீயூட்டிபுல் படமும் , ஸ்பீல்பெர்க்கின் ஷின்டலர்லிஸ்ட் என்று அடுக்கி கொண்டே போகலாம்....
ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றியை ருசித்தவன்...அவனுக்காக தலையை சீவிக்கொண்டு கொத்து கொத்தாக இறக்க கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்??? உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கைதானே...அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..
ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது...காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...
(DOWN FALL -2004 படத்தின் கதை என்ன????
ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்..இட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்....இட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன்தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து...தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு,புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..
எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் இட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்..இட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்....இட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன்தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து...தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு,புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..
தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி,ஓவியன்,அரசியல்வாதி,மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....
வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்ககவேண்டிய படம் இது....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
Bruno Ganz இட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...
ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்...எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படக்குழுவினர் அப்படி ஆகவில்லை...

இந்த படம் முழுவதும் இட்லரின் வரலாற்று பின்னனியை சொல்லவில்லை... ஏதோ காதில் விழுந்த விஷயங்களை வைத்தே இந்த படததை எடுத்து இருக்கின்றார்கள்....
எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும்
கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்...
அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு இட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை... அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...
ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்...அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...
தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பர பரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்
இட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....
இட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி யும் இட்லரை யும் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....
கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது...எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் தெரியகூடாது... அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்...பதுங்கு அறையில் டிராலி உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...
செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....
நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று வியாகியானம் பேசுவது இட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....
ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...
எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...
இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு வேட்கையை தனித்துக்கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....
இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....
இட்லரின் எரிந்து விழும் விஷயத்தை நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்...
இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....
இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...
இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்குங்ம தளபதிகள்... அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் இட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....
கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது...ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக இட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...
இட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...
இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது...இந்த படம் ஜெர்மன் படம்...
இட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...
இந்த படம் பார்த்த பின்பு இட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்
படத்தின் டிரைலர்
படக்குழுவினர் விபரம்....
Directed by Oliver Hirschbiegel
Produced by Bernd Eichinger
Written by Joachim Fest
Bernd Eichinger
Traudl Junge
Melissa Müller
Starring Bruno Ganz
Alexandra Maria Lara
Corinna Harfouch
Ulrich Matthes
Juliane Köhler
and
Thomas Kretschmann
Music by Stephan Zacharias
Cinematography Rainer Klausmann
Editing by Hans Funck
Distributed by Constantin Film
Newmarket Films (English subtitles)
Release date(s) September 16, 2004 (Germany)
February 18, 2005 (USA)
Running time Theatrical cut:
155 minutes
Extended cut:
178 minutes
Country Germany
Italy
Austria
Language German
Russian
Budget €13.5 million[1]
Gross revenue $92,180,910[1]
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...கள்ள ஓட்டு போட எனக்கு தெரியாதுங்கன்னா....
குறிப்பு...
நிறைய எழுதினேன் எல்லாம் பாழய் போன சிபி நெட் கனெக்ஷனால் இந்த பிரச்சனை சட்டென நெட் கட் ஆக அடித்து எதுவும் சேவ் ஆகவில்லை...பிஎஸ்என் எல் கனெக்ஷன் ஒரு வாரத்தில் தந்து விடுகின்றோம் என்று இரண்டு பிஎஸ் என் எல் வாசக நண்பர்கள் சொன்னார்கள்... அவர்கள் அதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... அது கிடைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்...

ரொம்ப நுணுக்கமான பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளது,கோனார் நோட்ஸ் மாதிரி ஜாக்கி விமர்சன நோட்ஸூடன் பிற மொழிப்படங்களை பார்க்கலாம்.ஆனால் நீங்க லேட்.ஆனந்த விகடனில் இந்தப்படத்தின் விமர்சனம் ஒரு வருடம் முன்பே வந்துவிட்டதே.வழக்கமா நீங்கதான் முந்துவீங்க
ReplyDeleteஅய்யா ஒரு ட்யுயல் சிம் மொபைல் வாங்கி உங்க ஏரியாவில் சிக்னல் உள்ள இன்னொரு சிம்மை வாங்கி போட்டுக் கொள்ளவும்..

ReplyDeleteஅன்பான நண்பர் நண்பர் திரு ஜாக்கி சேகர்,
ReplyDeleteஇது ஒரு மிக அருமையான படம். சந்தேகமே இல்லை! நீங்களும் நன்றாகவே அதை விவரித்து இருக்கிறீர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை! வாழ்த்துகள்!
ஹிட்லரை புரிந்து கொள்ள இது உதவும், ஓரளவிற்கு! ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், ஹிட்லர் was not a product of his end days. Rather his end as shown in this film is the product of what Hitler was! அதாவது ஹிட்லரின் உருவாக்கம் அவரின் கடைசி நாட்களினால் ஆனது அல்ல! அந்த கடைசி நாட்கள் ஹிட்லெரிசம் என்பதின் கடைசி logical கட்டங்கள் மட்டுமே!
ஹிட்லரின் யாரென்பதை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் மனிதத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டிய எல்லோருக்கும் மிக அவசியம்!!
மனிதத்தன்மை என்பதன் இரு எல்லைகளில் இருக்கும் இரு குழுக்களையும் உணர்ந்தால்தான், மானுடம் மற்றும் மனிதம் என்பதம் முழு அர்த்தம் விளங்கும்!
ஒரு எல்லைகொட்டில் மகாத்மா காந்தி, பாபா ஆம்தே, அன்னை தெரேசா, தாமஸ் பெயின் போன்றவர் இருக்கிறார்கள். மறு எல்லையில், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, போல் பாட் போன்றவர்கள் இருக்கிறார்கள்! மனித மனம் எவ்வளவு நல்ல நிலைகளையும், அதே போல மிக கொடிய நிலைகளையும்
எட்டும் என்பதற்கான எல்லைகள் இவைகள்!!
இன்னும் ஹிட்லரைப்பற்றி ஒரு ஜனரஞ்சகமான படத்தை பார்க்கவேண்டுமென்றால், Hitler - The rise of evil என்ற ஒரு நெடும் தொடரை பாருங்கள்! இந்தியாவிலும், Fox History channel லில் அதை அப்பப்போ கட்டுகிறார்கள்! நான் பார்த்ததிலேயே மிக மிக அருமையான சரித்திர நெடுந்தொடர்களில் மிக முக்கியமானது இது! மிக தெளிவானது இது. மிக சிறப்பானது இது!! BBC யும் மற்றும் British தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரித்த நெடுன்தொடரிது!! முடிந்தால் பாருங்கள்! ஹிட்லர் யார் என்பதை ஓரளவுக்கு தெரிய இது ஒரு சிறந்து வழி. ஹிட்லரை பற்றி படிக்கவேண்டுமென்றால் அருமையான ஆய்வு மற்றும் ஜனரஞ்சக புத்தகங்கள் பல இருக்கிறது! படித்தால் அவனின் கொடூரம் புரியும்! மானுடத்தின் மேல் ஹிட்லருக்கு உள்ள பகை புரியும்! மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் குணம் புரியும்! அவனின் கூட்டாளிகளான, கொலைகளின் பங்கு கொண்ட அயோக்கியர்களான Heinrich Himmler, Heydrich, Goering, Joseph Goebells, போன்ற மானுட எதிரிகளின் பின்புலம் புரியும்!!!
கடைசியாக:
ஹிட்லரே பார்த்து வியந்த ஒரு சார்வாதிகாரி மற்றும் கொடுங்கோலன் யார் என்றால், அது ஜோசப் ஸ்டாலின்தான்! ஹிட்லருக்கு தாத்தாவான அவர், ஹிட்லருக்கு படோடாபத்துடன் எப்படி தன்னை மட்டும் விளம்பரப்படுத்தி, தன்னைத்தவிர எவரையும் வட்டத்திர்க்குள் விடாது ஆட்சிபுரியவேண்டும் என்று சொல்லித்தந்த முன்னோடி! ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது 1934 இல்! ஸ்டாலின் சர்வாதிகாரியாக ஆடத்தொடங்கியது 1924 முதல், அதாவது லெனின் இறந்தவுடன்! ஸ்டாலினின் சுயதம்பட்ட குறும்படங்களை (சோவியத் வெளியீடுகள்) பார்த்து தன் வழிமுறைகளை (அதாவது சுய விளம்பரத்தில்) ஓரளவுக்கு வகுதுக்கொண்டவர்தான் ஹிட்லர்!!
ஹிட்லர் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்ற பொய்யை பலர் பரப்பினார்கள் (ஏனென்றால் கெட்டவர்கள் மற்றும் கொடியவர்கள் கடவுளை நம்பாதவர்கள் என்று உரைப்பதற்கு) ! ஆனால் உண்மை என்னவிடில் அவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர்! கத்தோலிக்கர், மற்றும் கடவுளை Providence என்று விளித்து, கடைசிவரை அது எனக்கு ஆணை இட்டது என்று கூறிவந்தார்! 1944 இல் அவரின் மேல் தொடுக்கப்பட்ட மிக முக்கியமான assasination attempt இல் அவர் தப்பித்து விட்ட பிறகு (Tom Cruise நடித்த ஆங்கிலப்படமான Vaal Kurie ஐ பாருங்கள்) இதுவும் Providence இன் செயலே என்று வர்ணித்தார்!!
ஹிட்லர் தன் வயதினால் பாதியான (ஜெல்லி ரூபல்) அவரின் அக்கா மகளை விரும்பினார்! ஆனால் ஜெலியோ, ஹிட்லரை கண்டு பயந்தார்! கடைசியில்
தற்கொலை செய்துகொண்டார்!
இன்னும் பல பல......நேரம் இருந்தால் எழுதுகிறேன்!!
நன்றி
//இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்//
ReplyDeleteநீங்களே சொல்கிறீர்கள், "எதோ காதில் விழுந்த விசியங்களை வைத்தே படமெடுத்திருக்கிறார்கள் என்று", அப்படியிருக்க இதை பள்ளி மாணவர்களுக்கு எப்படி காட்ட முடியும், இது ஒரு வரலாற்று ஆவணவம்னு சொல்வது இடிக்குது. சரியான வரலாறு மாணவர்களுக்கு தெரியாவிட்டாலும் பராவாயில்லை தவறான வரலாறு அவர்களுக்கு தெரியபடுத்தக் கூடாது, ஹிட்லர் மட்டுமல்ல எவன் ஒருவனின் மரணத்தையும் படித்தாலோ அல்லது பார்த்தாலோ அவன் மீது பரிதாபம் வருவது இயற்க்கையே. ஒரு வாததிற்கு கோட்சேவின் கடைசி இரண்டு நாட்களை மட்டும் படமாக எடுத்தால், அதை வரலாறு தெரியாத ஒருவர் பார்க்கும் போது வெறும் பரிதாபமே மிஞ்சும், ஒரு எடுத்துக்காட்டுக்காக தான் இந்த உதரணம் மற்ற படி கோட்சேவை வெறும் தீவீரவாதியாக நான் குறிப்பிட வில்லை. கமல் கூறியது போல, புலியோட இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் நியாயம் புரியும். காந்தியாணாலும் சரி கோட்சேவானாலும் சரி யாருடைய செயலும் விமர்சணத்திற்க்கு அப்பாற்பட்ட தல்ல.
பதிவை விட்டு எங்கேயோ வந்து விட்டோம் என்றும் நினைக்கிறேன், இரண்டாம் உலக போரை ஹிட்லர் தொடங்காமல் அதற்க்கு முன் அவர் இறந்திருந்தார், இன்று உலகம் அவரை கொண்டாடியிருக்கும் விதமே வேறு. என்ன தான் திறமையும், ஆளுமையும் இருந்தாலும் மனிதாபிமானம் இல்லாமல் இனவெறியோடு ஒரு இனத்தையே அழிக்க அழிக்க நினைத்த ஒருவனின் மரணத்தை மட்டும் மாணவர்களுக்கு காட்டுவது சரியாக பட வில்லை. இந்த படத்தை பார்த்த மாணவர்களிடம் பிறகு ஹிட்லரை பற்றி என்ன தான் சொன்னாலும் அவர்கள் மண்டையில் ஏறாது.
மற்றபடி திறையான நடிகர்கள்/டெக் ஷிசியன்களை வைத்து எடுத்த அருமையாண திரைப்படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது
பார்த்தே தீரவேண்டிய படங்களில் இந்தப் படம் கண்டிப்பாக இருக்கிறது. அழகான, இயல்பான விமர்சனம். இந்தப் படத்தைப் பார்த்து சற்று பரிதாபம் கொண்டேன். பிறகு, அவன் செய்த கொடூரங்களை விளக்கும் பல படங்களை பார்த்த பிறகு வெறுப்பு வந்தது.
ReplyDeleteஅருமையாக இருந்தது உங்கள் விமர்சனம்.படம் நீளமென்றாலும் படம் பார்க்கையில் நமக்கு அந்த எண்ணமே வராது.
ReplyDeleteஒரு தகவலை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஹிட்லரும் ஜப்பானும், நேதாஜிக்கு செய்த உதவிகளை பற்றி படித்திருப்பீர்கள். என்றாவது, ஏன் ஹிட்லருக்கும் ஜப்பானுகும் இந்திய விடுதலையில் ஆர்வம் என்று யோசித்தது உண்டா? இதற்குப் பின்னால் இருந்தது ஒரு அறிவியல் காரணம் என்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை. அனைத்து வாகனங்களும் இயங்க டயர் அவசியம். இந்த டயர் தயாரிக்கத் தேவையான ரப்பர் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அன்றைய காலகட்டத்தில், ரப்பர் "இன்டி ரப்பர்" என்றே அழைக்கப்பட்டது. இங்கிலாந்துக்கும், அதன் மூலம் அமெரிக்காவிற்கும் செல்லும் ரப்பரை தடுக்க ஒரே வழி, இந்திய சுதந்திரம். இது ஹிட்லரின் திட்டம். இதை முன்பே கணித்த அமெரிக்கா, அவர்களுடைய பெரும்பான்மையான விஞ்ஞானிகளை செயற்கை ரப்பர் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட வலியுருத்தியது. அந்த ஆராய்ச்சியில் அவர்கள் பெற்ற வெற்றியினால் "இன்டி ரப்பரை" நம்ப வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இல்லாமல் போனது. அமெரிக்கா இன்னொன்றையும் செய்தது, அது ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இருந்த டயர் தொழிற்சாலைகளை குண்டு வீசி அழித்தது. எனவே, ஹிட்லரை விட அமெரிக்கத் தலைவர்கள் திட்டமிடல் மற்றும் வியூகம் வகுப்பதில் சிறந்து விளங்கினர். சிறந்த வல்லுனர்களாக இத்தலைவர்கள் இருந்தாலும், அணுகுண்டு வீச்சையும், யூத படுகொலைகளையும் வரலாறு மன்னிக்கவில்லை என்பதே உண்மை.
ReplyDeleteஉங்கள் விவரிப்பும், அண்ணன் நோ அவர்களின் பின்னூட்டமும் என்னுடைய ரசனையுடன் ஒத்துபோவது ஆச்சர்யம்..
ReplyDeleteஇந்தபடம் பார்த்த பிறகுதான் ஹிட்லரை நேசிக்க ஆரம்பித்து அவர் சம்பந்தப்பட்ட நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்...
ஹிட்லர் பற்றிய தான் பார்த்த,அறிந்த செய்திகள்,படங்கள் மூலமான மதிப்பீடுகளுக்கும் ஹிட்லர் அவரைப்பற்றிய எழுதிய சுய மதிப்பீட்டை அவரவர் பார்வைக்கு விட்டுச் செல்வதிலும் வித்தியாசம் இருக்கிறது.முன்பு சொன்னதற்கு சிறந்த உதாரணமாக உங்கள் இடுகையையும் NO வின் பின்னூட்டத்தையும் குறிப்பிடலாம்.
ReplyDeleteஇரண்டாவதாக ஹிட்லரே ஹிட்லர் பற்றி சொல்லியதை புரிந்து கொள்ள வேண்டுமானால் படிக்க வேண்டியது
ஹிட்லரின் சுய சரிதை.
My Struggle - By Hitler
Released by - Paternoster Library.
மேலும் ஹிட்லர் எழுதிய உயில் நேட்டோ படைகளிடம் எப்படி சிக்கியது என்பது ஆங்கில புலனாய்வு திரைப்படத்துக்கு இணையான சுவராசியமான ஒன்று.
Hitler Will General Intelligence - The Discovery of Hitlers Wills
என்ற தலைப்பிலுள்ள உயிலையும் தேடி கண்டு பிடியுங்கள்.
முதலாம் உலகப்போரின் காரணங்கள்,விளைவுகள் இரண்டாம் உலகப்போருக்கு ஹிட்லரால் கொண்டு வரப்பட்டாலும் இரண்டாம் உலகப்போரின் மையமே காலனி சார்ந்த,சாராத நாடுகளில் தன்னாதிக்கம் செலுத்தும் மனப்பான்மையே போரை வலுப்படுத்தியது.இதில் ஜெர்மனிக்கும்,நேட்டோ படைகளுக்கும் சரிசமமான பங்குண்டு.அமெரிக்கா என்ற கிரியா ஊக்கியுடன் ஐரோப்பா தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு இரண்டாம் உலக யுத்தம்.
ReplyDeleteஇந்தப்படத்த்ஐ அவசியம் பார்க்கிறேன் ஜாக்கி.
ReplyDeleteமுடிந்தால் ஸோஃபி ஷோல் பாருன்ஙள்.எப்போதுமே எல்லா ஜெர்மானியர்களும் ஹிட்லரை ஆதரித்ததது போலவே தோன்றும். ஆனால் ஸோஃப்ஹி ஷோல் பார்த்து இந்னொரு முகத்தையும் கண்டேன்
படத்தில் ஹிட்லராக நடித்தவரின் நடிப்பு சூப்பர். ஆனால் திரைகதையில் வேகம் இல்லை, ரொம்ப மெதுவா போகுது..
ReplyDeleteஅன்பான நண்பர் திரு ராஜ நடராஜன்,
ReplyDeleteMein Kamf அதாவது ஆங்கிலத்தில் My struggle புத்தகத்தை படித்தால் முதலில் புலப்படுவது, துவேஷம், எழுதியவரின் அரைகுறை சரித்திர புரிதல் மற்றும் பார்வை அதற்க்கு மேலாக narcissism அதாவது மிதி மிஞ்சிய சுய அபிமானம்! Mein Kamf எந்த விதத்திலும் ஒரு நன்றாக எழுதப்பட்ட புத்தகமோ, உரையோ, சமூக
உரையாடல் கொண்ட அலசலோ அல்ல!!! It was a very ordinary political cum personal pamphlet! அதாவது மிக பெரிதாக எழுதப்பட்ட சுய பார்வையிலான
பிரச்சார துண்டு! It was just a turgid piece of writing which became mentioned only because of what Hitler was! Hitler's writings never preceeded him. It was the other way round.
என்னிடம் ஆங்கில மொழிபெயப்பு உள்ளது, அதை விலாவாரியாக படித்திருக்கிறேன்! அதில் இருப்பதெல்லாம் ஐநூறு பக்க பிரச்சாரங்கள் மட்டுமே. அதுவும்,
திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி திட்டுவது மற்றும் மிரட்டுவது மேலும் பக்கம் பக்கமாக சத்திலா பத்திகள்!! ஆங்கிலத்தில் சொல்லுவதென்றால் a turgid prose with lots of diatribe, plenty of dull words and repetitive slangings and meaningless prose.
நீங்கள் இரண்டாம் உலகப்போரைப்பற்றி சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை! இரண்டாம் உலகப்போரின் முதல் காரணம், ஹிட்லரின் ஆளும் வெறி!
அதாவது உலகம் பழைய அரசகுல தர்மங்களின்மூலம் இனி நடக்காது என்பதை புரிந்து கொள்ளாத ஒருவரின் வழிமுறையால் வந்த வினை! அதாவது, படையெடுத்து வேற்று நாடுகளை "பிடிப்பது" பெரும் படைகளை கொண்டு வேறு நாட்டின் படைகளை தகர்ப்பது, பெரும் நிலப்பரப்பை ஆளுவது போன்ற feudal and monarchist வழிமுறைகள் பின்பற்றி அதில் வெல்வதே மிகப்பெரும் மானுட கடமை என்ற எண்ண ஓட்டம்!! அதனுடன், வெள்ளை இனமே ஆளப்பிறந்த இனம் என்று கொடுமையான சிந்தனைகளும் சேர்ந்து யூதர்களை எல்லாம் கொல்லவேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து உருவான ஒரு கொலை வழிமுறைதான் ஹிட்லர்!!
ஹிட்லர் தான் தோற்கடித்த மற்றும் தோர்க்கடிக்கபோகும் நாடுகளுக்கு என்ன பிளான் வைத்திருந்தார் தெரியுமா? இந்தியாவை பொறுத்தவரையில், அது இங்கிலாந்திடமே இருக்கவேண்டும் என்று நினைத்தவர் அவர்!வெள்ளையர்கள் இல்லாத இனம் எதற்கு நாடாளவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்! அந்த மொழியிலேயே இங்கிலாந்திற்கும் தூது விட்டார்! தான் கைப்பற்றிய பிரெஞ்சு தேசத்திற்கும் அதையே செய்தார்! அதாவது பிரெஞ்ச் நாட்டின் காலனிகளை பிரெஞ்சு மக்களே ஆளலாம், யாருக்கும் விடுதலை கொடுக்க அவசியம் இல்லை என்பதை உறுதி செய்து அதன் படி நடக்கவும் விட்டார்!!
சுருக்கமாக, வெள்ளையர்களை அவர் ஆளவேண்டும், வெள்ளையர்கள் இல்லாத மற்றவர்களை அவரோ அல்லது அவரால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் உள்ள வெள்ளையர்களோ ஆள்வதே நல்லது என்று நினைத்தார்! இது எல்லாம் சரித்திரத்தில் பதிவாகி இருக்கிறது!! அவர் நட்புடன் இருந்த ஒரே வெள்ளையர் இல்லாத ஒரு சமூகம் ஜப்பானியர்கள் மட்டுமே (மேலும், எகிப்து மற்றும் ஆரேபியா அருகில் இருக்கும் சிலரை அவரின் கூட்டாளிகள் கொம்பு சீவி விட்டார்கள், அதுவும் யூதர்களையும், பிரிட்டிஷ் களையும் தாக்க அவர்கள் பயன்படுவார்கள் என்பதால்) !! மற்றபடி அவர் எல்லா வெள்ளையர் அல்லாதவரின் மேலேயும் மிக்க காழ்ப்புனர்ச்சியுடந்தான் கடைசிவரை இருந்தார்!! (இதில் வேடிக்கை, போலந்து மக்கள் மற்றும் ரஷ்யர்களை அவர் வெள்ளையர்களாக
மதிக்கவில்லை, அவர்கள் slavic இனத்தை சேர்ந்ததால், அவர்களுக்கு ஆசிய இரத்தம் அதிகம் ஓடுகிறது ஆதலால் அவர்கள் mainstream வெள்ளையர்கள் இல்லை என்று அழிக்க எத்தனித்தார்!!
ஹிட்லர் ஒரு மானுட எதிரி! அவரின் குணாதிசியங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் அழித்தலுக்கு உபயோகப்பட்ட கருவிகள் மட்டுமே! இது மிக்க விலாவாரியாக சரித்திரத்தில் ஆதாரங்களுடன் பதிவுசெய்யப்பட்டு விட்டது! ஆதலால் ஹிட்லரை ஒரு கொடுங்கோல் அழித்தல் விரும்பி, மானுட எதிரி என்று மட்டுமே பார்க்கமுடியும்!! பார்க்கவேண்டும்!! Admiration maybe there for some of his charecteristics, yet ultimately none of them was contributing to any goodness, they all worked towards building the racist society which thankfully came to an end in a very short time!!
நன்றி
//இந்த படம் முழுவதும் இட்லரின் வரலாற்று பின்னனியை சொல்லவில்லை... ஏதோ காதில் விழுந்த விஷயங்களை வைத்தே இந்த படததை எடுத்து இருக்கின்றார்கள்....//
ReplyDeleteஇல்லை. மேலே உள்ள படத்தில் உள்ள வயதான பெண்மனி சொன்னதை வைத்து படமாக்கியிருக்கிறார்கள். படம் ஆரம்ப காட்சி முதல் கடசி காட்சி வரை அந்த பெண்மனி தான் இருப்பார். இது ஒரு டாக்குமென்டரி படம். கடைசி 35 - 40 நாட்கள் அந்த பெண்மனியின் அனுபவம் தான் கதை.
//கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது...ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக இட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது//
இதில் கண்மூடித்தனம் எதுவும் இல்லை. வழக்கமாக ஒரு சாம்ராஜம் வீழும் போது நிகழ்வது தான், கோயபல்ஸின் குடும்பத்துக்கும் நிகழ்கிறது.

பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteமெத்த படித்தவர்கள் கொடுத்த தகவல்களை இங்கு விவாதித்ததில் நான் நிறைய தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..
எனக்கு பெரிய அளவில் ஆங்கில பரிச்சயம் இல்லை என்பதால் நான் அது போலான புத்தகங்கள் படித்தது இல்லை...
எல்லாதகவல்களும் அழிக்கபட்டு எஞ்சி இருப்பவர்களால் சொல்லபட்டு எடுக்கபட்ட படம் இது...
அந்த படத்தில் இருக்கும் நர்ஸ் சொன்ன ஸ்டேட்மேன்ட் என்னவென்றால்.. நிறைய உண்மையும் சில பொய்களையும் சேர்த்து எடுத்து இருக்கின்றார்கள் என்பதே...
பசங்கள் ஏன் பார்க்கவேண்டும் என்றால் போரின் பாதிப்பை நம் சமுகம் திரையில் பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டும் அதனால் அப்படி சொன்னேன்...
ஹட்லரை யோக்கியன் என்று எங்கும் சொல்லிவில்லை...
இட்லர் இறந்து இரண்டு நாள் கழித்து படைதளபதிகளில் பலர் சூட்டுக்கொண்டு சாவதை சொல்லி இருந்தேன்...
அதே போல் தப்பிக்க வழி இருந்தும் இட்லர் மேல் உள்ள விசுவாசத்தால் பலர் இறந்து போனார்கள் எனபதே வரலாற்று உண்மை...
மற்றபடி விரிவாய் சொன்ன நோ, கிச்சா ,ராஜ நடராஜன்,சதிஷ், சினு போன்றவர்களுக்கு என் நன்றிகள்.....
நல்ல பதிவு.ஹிட்லரின் கடைசி நாட்களைப் பற்றி அதிகாரப் பூர்வ நூலாக கருதப் படுவது The last hundred days of Hitler என்ற புத்தகமே.Trever roper என்ற பத்திரிகையாளர் எழுதியது.
ReplyDeleteஅருமயா எழுதிருக்கீங்க..இந்த படத்தை நானும் பார்த்தேன்..அருமயான பகிர்வு..வி கி பிடியா தோத்துது போங்க..கலக்கல் தொடற என வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த படம் பார்த்து ஒரு வாரம் ஒரு மாதிரி திரிந்தேன் :) பாதி எழுதி எழுதி அழித்துவிடுவேன். சீக்கிரமே இரு நல்ல நீண்ட பதிவா இந்த படத்த போட்டு விடுகிறேன். நன்றி அண்ணே.
ReplyDeleteஹலோ,
ReplyDeleteசேகர், எஸ் ஜாக்கி சேகர்...
வணக்கம் வந்தனம்
ஹிட்லரின் அதி தீவிர ரசிகன் நான்....
இப்படி சொல்லி, நெறைய பேருகிட்ட வாங்கி கட்டிக்கிட்டது தனி கதை.... அப்படி சொன்னவங்க கேள்விகளுக்கு நான் பதில் அளித்ததும் சுவாரஸ்யமான கதை தான் :)
ஹிட்லர் பற்றி நெறைய படிச்சு, ரசிச்சு, பார்த்து தீவிர ரசிகன் ஆனேன்....
மனிதனுக்குள்ளே மிருகம் - மதன் எழுதிய புத்தகத்தை படிச்சு இருக்கீங்களா? அதுலயும் நம்ம sorry என்னோட ஹீரோ ஹிட்லர் பத்தி சொல்லி இருப்பார்...
நல்ல நேர்மையான விமர்சனம்
வாழ்த்துக்கள் சேகர்
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
உங்கள் பதிவுகளை அடிக்கடி பார்த்து வருகிறேன்... கலக்கலா எழுதுறீங்க...
உங்களுக்கு ஹிட்லர் சாயலில் ஒரு Royal Salute :)
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
//ஆதலால் ஹிட்லரை ஒரு கொடுங்கோல் அழித்தல் விரும்பி, மானுட எதிரி என்று மட்டுமே பார்க்கமுடியும்!! பார்க்கவேண்டும்// மிகச் சரியாகச் சொன்னீர்கள் நோ. தவறான மனிதர்களை ஹீரோகளாக மாற்றிக் காட்டும் எந்த முயற்சியும் தவறே. இது சினிமாவில் ரவுடிகளை ஹீரோக்களாக்கும் ட்ரென்டின் தொடர்ச்சி தான். ஜாக்கி அவருடைய எண்ணத்தை வெளிப் படுத்தினார் என்பது புரிகிறது. ஆனாலும்.......
ReplyDelete//ஹட்லரை யோக்கியன் என்று எங்கும் சொல்லிவில்லை...// இது நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னது.
//இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன//
//ஜெர்மன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என ஹிட்லரை வாசித்த போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...//
//என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...//
//உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கைதானே...அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..//
//ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது//
இவை இங்கள் பதிவில் உள்ளது.
உங்களுடைய முரன் புரிகிறாதா ஜாக்கி அவர்களே?
நண்பர் அமர பாராதிக்கு.. ஒரு கெட்டவன் கிட்ட இருக்கற நல்ல விஷயங்களை சொல்லவே கூடாதா? அவனுடைய பிரேக்கிங் பாயிண்ட்டை சொல்லவே கூடாதா? சரிதான் நிங்க சொன்னதுதான் சரி ... முரண்பாடாதான் இருக்கு... போதுமா?
ReplyDeleteHi Jackie..
ReplyDeleteI really enjoyed your narrations skills.
But i differ with you in a point that we should recommend the students to see this movie.
Please take my word, Never ever show the negative in to the kids heart. That will stay longer than any positive.
We need to bring our society only in the positive way.
Like Gandhi, nelson mandela, Annai terrasa,Subash chandrabose, Dr kalam,Katta bomman, Bharathiar, Dr Manmohan singh,,,, so many.
Simply i'm saying, if you find time ,please our Kamalkassan movie Unnal mudiyum thambi.
Build the society with positive energy. That positive energy has to get multiplied and need to feel the happiness in all.
Thanks
I guess u will like this Jackie
ReplyDeletehttp://historymix.blogspot.com/2010/07/hitlers-unseen-400-rare-picture.html
anna plz read ths link
ReplyDeletehttp://ashwin-cinema.blogspot.com/2010/08/downfall-2004.html