(INCEPTION-2010) கிரிஸ்டோபர் நோலனால் நான் குழம்பிய கனவு வேட்டை...


சிறுவயதில் எனக்கு ஒரு கனவு வரும்... ஒரு பாம்பு என் காலின் கட்டைவிரலை கடித்து கொண்டு இருக்கும்... எங்கு போனாலும் வரும்... எது செய்ததாலும் என் கூட வரும்... கூட வரும் என்றால் அது கடித்தபடியேதான் இருக்கும்... அந்த சனியனை எவ்வளவு உதறினாலும் போகவே போகாது...ஆய் போகும் போது கூட என் கால் கட்டை விரலை கடித்துகொண்டு இருக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.....

அதை மரத்தில் போட்டு தேய்ப்பேன்,மண்ணில் போட்டு தேய்ப்பேன் போகவே போகாது...பலம் கொண்ட மட்டும் இழுப்பேன் ம்ஹும் அப்படியதோன் இருக்கும்


அஞ்சலி படத்தில் ஒரு தள்ளு வண்டியில் அஞ்சலி பாப்பாவை வைத்துக்கொண்டு தள்ளி போவார்களே... அது போலான ஒரு சாமாச்சாரம்தான் என் வாகனம்... அதில் ஏறி என் சொந்த ஊர் கடலூரை வானத்தில் சுற்றி வருவேன்....

இத்தனைக்கு ஏழு கழுதை வயசாகின்றது...நான் இதுவரை விமானத்தில் பறந்தது இல்லை... ஆனால் என் சொந்த ஊர் கடலூர் டாப் ஆங்கிளில் மேலிருந்து பார்க்கும் போது எப்படி இருக்கும் என்பதை உருவகபடுத்தி காட்டியது இந்த கனவுதான்...

அதன் பிறகு என் பாட்டி எனக்கு கொடுக்கும் நாலனா, எட்டனாவை என் வீட்டு பக்கத்தில் உள்ள பேபி கடையில் கடலை மிட்டாய் வாங்கி தின்று விட்டு வீடு திரும்பும் போது, அந்த பைசா கீழே கிடக்கும்... ரொம்ப சந்தோஷமாக எடுத்தால் பக்கத்தில் ஒரு ரூபாய் கிடக்கும்.... அது போல் எடுத்து எடுத்து வைக்க ஒரு பை நிறைய ரொம்பி இடமில்லாமல் அலைந்து கொண்டு இருக்கும் போது சட்டென விழிப்பு வந்து எழுந்து அந்த கனவை சபித்து இருக்கின்றேன்...


அதுமட்டும் அல்ல அதன் பிறகு இது போல் சில்லரை பொறுக்குவது போல் கனவு வந்தாலே சரி இது கனவு என்பதை கனவிலேயே பிரிலியன்டாக நினைத்துக்கொள்வேன்...

திங்கள் கிழமை தமிழ் வகுப்பில் செய்யுள் மனப்பாட பகுதியை ஒப்பிக்க முடியாமல் வகுப்பே தினரும்... போச்சுடா ... நமக்கு இன்னைக்கு சங்குதான் என்று நினைத்து சட்டென எழுந்து பார்த்தால் அது சனிக்கிழமையாக இருக்கும்... அப்போது மனம் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.....இன்னும் ஒரு நாள் இருக்குல்ல...

அதன் பிறகு ஆஜால் குஜால் படங்கள் பார்த்து விட்டு விடியலில் கைலியை ஈரமாக்கிய கனவுகள் ஏராளம்....ஏதோ ஒரு திருமணத்தில் பார்த்த பெண்ணுடன் கனவில் உறவு கொண்டு இருக்கின்றேன்.... இத்தனைக்கும் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை... ஆனால் அந்த பெண் வெகுநாட்கள் பழகியது போல் பேசி,முத்தமிட்டு,வளைந்து கொடுத்து என ஆச்சார்யமாக வந்த 18+கனவுகளும் கவுந்த பெண்களும் ஏராளம்....


சில கனவுகளில் முக்கியமான வாழ்க்கை திருப்பம் போன்ற ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் உதாரணத்துக்கு நான் என் காதலியுடன் வீட்டை விட்டு ஓடி வந்து ரெஜிஸ்டர் ஆபிசில் கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் போது....கையெழுத்து போட யார் இருக்கின்றார்கள் என்று ரெஜிஸ்டர் கேட்க?? நாம் தவித்து இருக்கும் போது எப்போதோ ஊட்டியில் இரண்டு சக்கர வாகனத்துக்கு பஞ்சர் ஒட்டிய பையன் சிரித்தபடி வந்து அண்ணே நான் இருக்கேன் என்று சொல்லும் போது கனவிலேயே, வாய் பிளந்து இவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று கனவிலேயே யோசித்து இருக்கின்றேன்....

எல்லா கனவை விட சூப்பரான கனவு என்பது எதாவது பிரச்சனையில் யார் மீதாவது கை வைத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு ஊரே வடிவேலுவையும் முரளியையும் துரத்தி வருவது போல் வரும்... நாமும் ஓடுவோம் ஒடுவோம் ஓடிக்கொண்டே இருப்போம் , சைக்கிள், பைக், பஸ், ரயில் என மாற்றி மாற்றி ஓடிக்கொண்டு இருப்போம், எல்லா இடத்திலேயும் நம் சட்டை காலரை பிடிக்கும் அளவுக்கு வந்து விடுவார்கள்.... தட்டி விட்டு ஓடிக்கொண்டே இருப்போம்... ஒரு கட்டத்தில் பிடித்து நைய புடைக்க போகின்றார்கள் என்று நினைக்கும் போது அது கனவாக இருக்கும்.....

இன்னும் இப்படி பல சுவாரஸ்யங்களை அடிக்கி கொண்டே போகலாம்... அது போல் ஒரு கனவை வைத்து எப்போதும் போல் நான் லீனியரில் கதை சொல்லி இருக்கின்றார்...பேட்மேன் புகழ் இய்க்குனர் கிரிஸ்டோபர் நோலன்.....

(INCEPTION-2010) தமிழில், கனவு வேட்டை... படத்தின் கதை என்ன???

Cobb (Leonardo DiCaprio) ஒரு ஜகஜால கில்லாடி... அதாவது கனவின் உள்ளே போய் ஆழ்மனதில் இருக்கும் என்னஒட்டங்களை மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவன்... இந்த கனவு சோதனையின் போது அவன் மனைவி... நிஜஉலகில் கனவுலகம் என நினைத்து தற்கொலை செய்து கொள்கின்றாள்...காப்புக்கு இரண்டு குழந்தைகள்....

ஒரு பெரிய பணக்காரன் அல்லது டான்.... காப்பிடம் வியாபாரத்தில் அந்தஸ்த்தில் தன்னை விட வெகு வேகமாக வளரும் எதிரியை அழிக்க அவன் கனவில் குழப்பம் ஏற்படுத்த சொல்கின்றான்... அப்படி எற்படுத்தினால் அவன் வியாபாரத்தில் தோற்றுவிடுவான் தான் வெற்றி பெறலாம் என்று நினைத்து காபிடம் அந்த வேலையை ஒப்படைக்க... முதலில் மறுக்கும் காப்... வில்லன் கப்பின் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்ல, அந்த அசைன்மெடன்டுக்கு காப் சம்மதிக்கின்றான்....அந்த கனவுக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டு கொடுக்க தன் புரபசர் உதவியை நாட அவர் அவரது மாணவியை காப்புக்கு உதவ சொல்கின்றார்...
காப்குழு வில்லன் சொன்னஅவன் கனவில் மாற்றம் செய்ததா? காப் குழந்தைகள் என்னவானார்கள் என்பதை தலையை பிய்த்துகொண்டு தியேட்டரில் பார்த்து வையுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

உலகம் எங்கும் நேற்று ரிலீஸ் ஆகிய இந்த படம் செம்மொழியான தமிழ் மொழியில் நேற்று, கனவு வேட்டை என்ற பெயரில் வெளியானது....

நான் இந்த படத்தை சென்னை பைலட்டில் பார்த்தேன்....

மேட்ரிக்ஸ்ன்னு ஒரு படம்... செம ஹைபையா வந்தது நினைவுக்கு இருக்கலாம் அது போலதான் இந்த படம்...அந்த படம் வரவில்லை என்றால் இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடி இருக்கும்...

கனவு கனவுக்குள் கனவு , கனவுக்குள் கனவுன்னு என்னை கொழப்புறேன்னு நினைக்கிறீங்களா? அப்படி கனவுக்குள்ள கனவில் போய் எதிராளியின் அறிவை திருடுதல் அல்லது நிர்மூலமாக்குதல்தான் கதை... படம் முழுவதும் இப்படித்தான் டிராவல் ஆகின்றது... நடுவில் பிளாஷ் பேக்குகள்......நோலன் விளையாடி இருக்கின்றார்....

இதை எப்படி ஸ்கிரிப்ட் எழுதி என்ற நினைக்கும் போதே அயர்ச்சி வந்து விடுகின்றது...

மேக்கிங்கில் எந்த குறையும் சொல்ல முடியாது...ஆனால் இந்த படத்தை ஆங்கிலத்தில் பார்த்தால் பொம்மை படம் பார்த்து விட்டு வந்த பீல்தான் கிடைக்கும்....ங்கோத்தா நல்ல வேளை தமிழ்ல பார்த்தோம்னு படம் பார்த்த பாதி பேர் பந்தா இல்லாம நெஞ்சை தொட்டு ஒத்துகிடுவிங்க....

ஓ ஷிட் தமிழ் டப்பிங் எல்லாம் எவன் பார்க்கறதுன்னு இறுமாப்புடன் சொன்னாலும் நீங்க பந்தா பண்ணுகின்றீர்கள் என்று அர்த்தம்...


நோலன் படங்கள் சப்டைட்டில் இல்லையென்றால் தடுமாறிவிடும் அளவுக்கு பார்வையாளனுக்கு அவ்வளவு செய்திகள் வந்து குவியும்...

படம் இரண்டரை மணி நேரம் சாலிடாக ஒடுகின்றது....

தான் மனைவியுடன் வாழ்ந்த வீட்டுக்கு வரும் போது காட்டபடும் அந்த கடற்கரை நகரம் மிக அற்புதமான காட்சிகள்...

அண்ணா யூனிவர்சிட்டி மட்டும் ஐஐடி மாணவர்கள் இந்த படத்தை பார்த்தால்.... வாட் ஏ எக்சலன்ட் ஸ்டோரி என்று கொண்டாடுவார்கள்...

ஒரு வேளை இன்டெலக்சுவலுக்கு இந்த படத்தின் சுவாரஸ்யத்துக்கு குறைவு இருக்காது என்று நம்புகின்றேன்...ஆனால் ஒரு வித்யாசமான கான்செப்ட்டில் இந்த படத்தை கொடுத்த நோலனுக்கு நன்றிகள்...

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது... ஆக்ஷன் காட்சிகள் இன்னும் அதிகம் இருந்து இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாம் என்பது என் எண்ணம்....படத்தின் டிரைலர்.......


படக்குழுவினர் விபரம்..


Directed by Christopher Nolan
Produced by Christopher Nolan
Emma Thomas
Written by Christopher Nolan
Starring Leonardo DiCaprio
Ken Watanabe
Joseph Gordon-Levitt
Marion Cotillard
Ellen Page
Tom Hardy
Cillian Murphy
Dileep Rao
Tom Berenger
Michael Caine

Music by Hans Zimmer[1]
Cinematography Wally Pfister
Editing by Lee Smith
Studio Legendary Pictures
Syncopy Films
Distributed by Warner Bros. Pictures
Release date(s) July 16, 2010 (2010-07-16)
Running time 148 minutes
Country United States
Language English
Budget $160 million

தியேட்டர் டிஸ்க்கி சென்னை பைலட்......

இரண்டு ஷோ பைலட்டில் போட்டு இருக்கின்றார்கள்....

படம் ஆரம்பித்து 15 நிமிடத்துக்கு என்ன பேசுகின்றார்கள் என்று ஒரு எழவும் புரியவில்லை...

லெப்ட், ரைட்டில் மட்டும்தான் சவுண்ட் அதிகம் வருகின்றது சென்டர் ஸ்பீக்ரில் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை....

ஐயா டப்பிங் திலகங்களே.. எல்லா வாய்சும் பெஸ்லதான் இருக்கு... யாருக்கும் வாய்ஸ் ஷார்ப்பாவே இல்லை....

டப்பிங் தியேட்டர்ல எந்த சத்தமும் இல்லாமல் பின் டராப் சைலன்டாக இருப்பதால் சின்ன முக்கல கூட உங்களுக்கு சவுண்ட் அதிகம் போல் தோன்றும்... ஆனால் நம்ம தியேட்டர் எதுவும் அப்படி இல்லை அதை புரிந்து வாய்ஸ் மிக்ஸ் பண்ணுங்க.....


ஒரு மணிக்கு படம் போட ஒன்னு பத்துக்கு உள்ளே வந்து இருவர் பசியில் வரும் போதே இரண்டு சிப்ஸ் பாக்கெட் கையில் பிடித்துகொண்டு வந்து விட, மொறுக் மொறுக் என சத்தம் வந்து தொலைக்க... என் ரோவில் இருந்து இரண்டு ரோ முன்னாடி போய் உட்கார,அங்கும் சனியன் பனியன் போட்டு உட்கார்ந்து இருந்தது..... எப்படியா? எனக்கு முன்சீட்டில உட்கார்ந்து இருந்தவன் மாவா போட்டு பிச்சிக் பிச்சிக்னு துப்பிக்கொண்டு இருக்க.... ஓங்கி வாயில் வைக்க மனது துடித்தாலும் நோலனுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு படம் பார்த்தேன்.....

ஒரு ஆள் பார்த்த முதல் நாளே பாட்டு ரிங்டோனை சத்தமா செல்லில் வச்சி இருந்திச்சி....கால் வந்துகிட்டே இருக்கு... சரி அதை வைபரேட்ர்லயும் போட்டு தொலைச்சி இருக்கலாம்... அதுவும் இல்லை...அப்புறம் நான் சத்தம் போட மொபைல் வைபரேட் மோடுக்கு தாவியது...

எல்லா சீனிலும வாய்ஸ் வந்து அப்புறம் கட்டாகி என படம் பார்க்கும் உணர்வை பைலட் தியேட்டர் டிடிஎஸ் ஆபரேட்டிங்
சிஸ்டம் கண்டம் துண்டமாக வெட்டிக்கொண்டு இருந்தது....

அப்புறம் எல்லா தியேட்டர்காரங்களும் ஒன்னை கத்து விச்சி இருக்கானுங்க... இன்டெர்வெல் முடிந்து படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன டிரிங் போட்டுட்டுதான் படம் ஆரம்பிப்பானுங்க... இப்ப எல்லாம் அப்படி இல்லை ... சின்ன டாய்லட்டில் வரிசையில நின்னு சரியா உதறி பேண்ட் ஜிப்பை போட்டு திரும்ப வரிசையில நின்னு கைய கழுவறதுக்குள்ள படத்தை போட்டுடறானுங்க...

இரண்டு காதலிகள் படத்துக்கு வந்து இருந்தார்கள்... இரண்டு பேருமே இன்டர்வெல்லில் லைட் போட்டதும் தலைகுனிந்து உட்கார்ந்து இருந்தார்கள்... எதுக்கு வெக்கம்னு தெரியலை...

ஆட்டோ பார்க்கிங் பைலட்டில் அனுமதி கொடுத்து இருப்பதால்.... ஒரு 30 ஆட்டோக்கள் ஆயுதபுஜைக்கு நிற்பது போல் வரிசை கட்டி நின்றன...

படம் இன்டர்வெல்லின் போது ஒரு அறிமுக எழுத்தாளரை சந்தித்தேன்... அவ்ர் பெயர் சினிமாவியாபரம் புகழ் கேபிள் சங்கர்....

படம் பார்த்து விட்டு வந்து இரவு டைப்பும் போது முரளிகுமார் பத்மநாபன் போனில் படம் எக்சலன்ட்னு குறிஞ்செய்தி அனுப்ப... அப்போதே போனில் பேசினேன் இன்னும் பத்து நிமடத்தில் படத்தை பற்றிய பதிவு வந்துவிடும்னு...


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்.. எனக்க சத்தியமா எனக்கு கள்ள ஓட்டு போட தெரியாதுங்கன்னா...

25 comments:

 1. படம் பாக்கணும் அண்ணே... கொஞ்சம் குழப்பமாக இருக்கும் இம்மாதிரி படங்கள் எடுக்க நிறைய சிரமம் இருக்கும்.. பார்த்துவிட்டு போன் செய்கிறேன் ..

  ReplyDelete
 2. இப்பத்தான் ஜெய் எழுதினத படிச்சுட்டு வந்தேன். பார்கனும் கண்டிப்பா :)

  ReplyDelete
 3. அண்ணே,
  இப்போ தான் பதிவு பார்த்தேன்,அவசியம் படம் பார்த்து விடுகிறேன்,நல்லா சூப்பரா எழுதுனீங்க,உங்க தேட்டர் டிஸிகியும் அருமை

  ReplyDelete
 4. உங்க ஸ்பெஷாலிட்டியே விமர்சனத்துக்கு முன்னே வர்ற லீடும்,தியேட்டர் ஆடியன்ஸ் டயலாக்கும்தான்,அசத்த்றீங்கண்ணே,டி காப்ரியோ ஆக்டிங் பற்றி எதும் சொல்லலையே

  ReplyDelete
 5. நானும் தியேட்டரில் இருந்ததை சொல்லாமல் விட்ட உன் நுண்ணரசியலை.. பாராட்டுகிறேன்.. (ஐய்யா.. புதுசா ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சிரலாமா..?_):))))

  ReplyDelete
 6. கதையை எப்படி சொல்லணுமோ, அப்படி நச்சுனு நாலு வரியில சொல்லி இருக்கீங்க...

  // வில்லன் கப்பின் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்ல, அந்த அசைன்மெடன்டுக்கு காப் சம்மதிக்கின்றான்.... //
  அப்படியா? காப் அமெரிக்கா போக அந்த பணக்காரன் வழிபண்ணுவான்னுதானே அந்த அசைன்மெடன்டுக்கு காப் சம்மதிக்கின்றான்னு நினைச்சேன்...

  ஓவர் ஆல் கதை நல்லாவே புரிஞ்சாலும், இன்னும் பல சின்ன சின்ன விஷயங்கள் புரியலைங்க... இன்னொரு தடவை பார்க்கணும்...

  ReplyDelete
 7. விமர்சனம் நன்றாக உள்ளது.

  மனோ

  ReplyDelete
 8. Yes your correct, i have seen this in Engligh in Dubai. I prefer to see in Tamil. We can understand in parts only.

  I also felt the same, how this guy have visualised and explain to various cinema crew to make the film. Oh daunting task.

  Good effort.

  Sudharsan

  ReplyDelete
 9. வழக்கமாய் பதிவு போட்டால் உடனே மறுமொழி போடும்

  இராமசாமி
  கீதப்பிரியன்
  கேஆர் பி செந்தில்
  சிபி செந்தில் குமார்
  ஜெய்
  மனோ

  உங்களை எப்போதும் என் மனிதில் நினைத்து கொள்வேன்...

  உங்கள் அன்புக்கு நன்றி...

  ReplyDelete
 10. கேபிள் வளர்ந்து வரும் எழுத்தாளரான நீங்கள் இப்படி நுனி புல் மேய்வது கண்டிக்க தக்கது.....

  தியேட்டர் டிஸ்க்கியில் கடைசி பாராவுக்கு முத பாராவை பாருங்க...
  இது இப்ப சேர்த்து இல்லை வேனும்னா கூகுள் ரீடர்ல கூட செக் பண்ணிக்கோங்க...

  ReplyDelete
 11. விம‌ர்ச‌ன‌ம் ச‌ரி... ங்கோத்தானு எழுத‌ற‌த‌ கொஞ்ச‌ம் நிறுத்தினா ப‌ர‌வாயில்ல‌... பாக்குர‌வ‌ன் எல்லாம் ப‌ந்தாவுக்குனு நெனைக்காதீங்க‌ பாஸ்... உங‌க‌ளுக்கு புரியாதுனா எல்லோருக்குமா புரியாது? உட‌னே நான் பாக்காத‌ ப‌ட‌மானு ஆர‌ம்பிச்சுடுதீங்க‌...

  ReplyDelete
 12. intha padam nolan-in master piece. i got imagine how he think this script.... avvv....

  ReplyDelete
 13. படத்தின் விமர்சனத்தை விட உங்கள் கனவு கதைகளே வெகு சுவாரசியம். பிற்காலத்தில் நீங்கல் உங்கள் கனவுகளை அடிப்படையாக வைத்தே பல திற்ரைப்படங்கள் எடுக்கலாம் போல

  ReplyDelete
 14. அன்பின் ஜாக்கி சேகர்..,

  படத்தின் கதையைவிட உங்கள் முன்னோட்டம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

  நான் உங்களது பதிவை படித்து பின்னூட்டம் இடுகிறேன்-ஆனால் சில நேரங்களில் வருவதில்லை ஏன்?

  நன்றி...

  ReplyDelete
 15. Neenga seekiram oru padam pannunga. Vaazhthukkal.

  Chezhian

  ReplyDelete
 16. விமர்சனம் அருமை, என்றும் போல்.
  என்னை அழைக்காமல், தியேட்டர் சென்ற ஜாக்கி ஒரு குட்டு :-)
  - பாரதிதாஸ்

  ReplyDelete
 17. விமர்சனம் அருமை, என்றும் போல்.
  என்னை அழைக்காமல், தியேட்டர் சென்ற ஜாக்கி ஒரு குட்டு :-)
  - பாரதிதாஸ்

  ReplyDelete
 18. நோலன் படம் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. உலகளாவிய அளவில் வந்திருக்கும் படம், தமிழில் உடனே வெளியாகியிருப்பது ஒரு காலத்தில் கனவாகவே இருந்தது.

  பஞ்சர் ஒட்டும் பையனும் உங்கள் கனவுகளும் அருமை. கனவிலே, இது கனவுன்னு கண்டுபிடிச்சிட்டீங்க :).

  கண்டிப்பா இந்தப் படம் பார்க்கணும். நீங்க சொன்ன மாதிரி, ஒரு தடவை பார்த்தா நோலன் படம் முழுவதும் புரிந்துகொள்வது கடினம். அதனால தமிழ்ல பார்க்குறது பெஸ்ட்

  ReplyDelete
 19. need to watch.. :) posted in my facebook...

  ReplyDelete
 20. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

  ReplyDelete
 21. Dear Sir

  I am yet to see the picture. But from the review of yours, I think you have not seen the picture THE CELL - a 2000 film directed by an Indian Director Tarsem Singh. If you have not seen this picture kindly see and write a review. Inception is only an extension of the concept of The Cell in an elaborate way. But seeds are already sworn by an Indian in the year 2000

  July 19, 2010 12:26 PM

  ReplyDelete
 22. Hi Jacky,

  I have been reading your blogs for a year long continously.. it is very good.. Nowadays, i am choosing to watch any english film which you have reviewed..

  It makes very good.. keep up your gr8 work..

  Ever Your's
  Prabu

  ReplyDelete
 23. Hi,

  i watched the movie last week.jacky your comment is very nice. and tell to manian THE CELL is different layer. need somemore tech discussion about inception.


  What i was felt in this movie everything is extraordinary but the some camero angle and background music reflect from The Dark Knight


  Thanks
  Kingston

  ReplyDelete
 24. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner