தில்லாலங்கடி...திரைவிமர்சனம்...ஐ லவ் யூ ஜாக்கி என்று சொல்லும் தமன்னா..

கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? கிக் இருக்க வேண்டும்... சரக்கு போட்டு விட்டு வரும் கிக்கும் ஒரு கிக்குதான்....

நடைமுறை வாழ்க்கையில் எதெல்லாம் கிக்காக இருக்கின்றது?????..

நிறைய பையன்களுக்கு தன்னை நிறைய பெண்கள் காதலிக்க வேண்டும் என்பது கிக்தான்...

தன்னை எல்லா ஆண்களும ரசிக்கும் அழகு பெண்ணுக்கு கிக்தான்....



பாரின் சரக்கா அடிக்க வேண்டும் என்பதும் குடிமகனின் கிக்தான்....

எழுதிய போஸ்ட்டை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்பதும் ஒரு கிக்தான்...

போஸ்ட் போட்டதும் மைனஸ் ஓட்டு போடுவதும் ஒரு கிக்தான்....

எத்தனை பேர் செத்தாலும் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என மம்தாவுக்கு பிடித்து இருப்பது பதவி கிக்.....

எல்லா இடத்துக்கும் பிளைட்டில் போவது ஜெயலலிதாவுக்கு பிடித்த கிக்

சன் டிவிக்கு இன்னும் 20 சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பதும் பிசினஸ் கிக்தான்...

எர்டெல் செல் நிறுவனம்... டாப்ஆப் செய்யும் கஸ்டமர்களிடமும், கஸ்டமர்கேரில் பேசும் போதும் கஸ்டமர்களிடம் பணம் பிடுங்குவதும் கிக்தான்....

முதல்வருக்கு பாராட்டுவிழாவாக நடத்துவதும் கிக்தான்... அதை சலிக்காமல் ஏற்றுக்கொள்வதும் ஒரு கிக்தான்...

பொண்டாட்டியிடம் மாட்டிக்கொள்ளாமல் பொய் பேசுவதும் ஒரு கிக்தான்....

இப்படி கிக்குகளை அடிக்கி கொண்டே போகலாம்.. அப்படி கிக்குக்காக எதையும் செய்யும் கதாநாயகனை பற்றிய கதைதான் இந்த தில்லாலங்கடி....


தில்லாலங்கடி படத்தின் கதை என்ன?

மலேசியாவில் இருக்கும் நிஷாவுக்கு(தமன்னா) திருமணம் நிச்சயம் ஆகின்றது... மாப்பிள்ளை கிருஷ்ணகுமார்(ஷாம்)... போலிஸ்....இருவரும் மரியாதை நிமித்தம் ரயிலில் சந்திக்கின்றனர்... ரயிலில் போகும் போது தனது முன்னாள் காதலனை பற்றி நிஷா சொல்கின்றாள்...முன்னாள் காதலன் கிருஷ்ணா (ஜெயம்ரவி) கிக்குக்கா எதையும் செய்யும் ரகம்... நிஷாவை காதலிக்கும் போது கூட உடனே ஐலவ்யூ சொன்னால் கிக் போய் விடும் என்பதால் அவனை அலைகழித்து காதலை சொல்லவைக்கும் ரகம்... தான் வாழும் வாழ்க்கையில் கிக் வேண்டும் என்பதற்க்காக எதையும் செய்யும் ரகம்.... அதனால் தன் காதலையும் இழக்கின்றான்.... காதலியை தேடி காதலன் கிருஷ்ணாவும் மலேசியா வர, சில பல சுவாரஸ்யங்களிடையே காதலர்கள் இணைகின்றார்கள்... அது எப்படி என்பதை வெண்திரையில் பாருங்கள்....




படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

தெலுங்கில் வெற்றிகரமாக ஒடி கலைத்த கிக் என்ற படத்தின் தமிழாக்கம் இந்த தமிழ் தில்லாலங்கடி...திரும்பவும் எடிட்டர் மோகன் அவர்களின் குடும்பம் ஜெயிக்கும் குதிரை மேல் பணம் கட்டி இருக்கின்றார்கள்.... குதிரை நிச்சயம் ஜெயிக்கும்...

தெலுங்கில் ரவிதேஜா செய்த பாத்திரம்... ரவி தேஜா பல படங்களில் அது போலான ஒரு லுஸ் டைப் கேரக்டர் நிறைய பண்ணி இருக்கின்றார்.... 40 வயதுக்கு மேல் இண்டஸ்டரிக்கு வந்து தெலுங்கு இண்டஸ்டரியை ஒரு கலக்கு கலக்கியவர்...அவர் முகத்தில் பயங்கர மெச்சூரிட்டி இருக்கும்.... அந்த பாத்திரத்துக்கு ரவி எப்படி பொருந்துவார் என்று படம் எடுக்கும் போது யோசித்து இருக்கின்றேன்... ஆனால் பொருந்தி இருக்கின்றார்...

தெலுங்கில் இலியானா நடித்த பாத்திரத்தில் தமன்னா... தமன்னாவும் நன்றாக செய்து இருக்கின்றார்... பல இடங்களில் நேரா சர்ச் பார்க் காண்வெண்டில் இருந்து விட்டுக்கு போய் யூனிபார்ம் கழட்டி போட்டு விட்டு ,மேக்கப் போட்டு நடிக்க வந்தது போல் இருக்கின்றார்...


இலியான தெலுங்கில் யோகா செய்வதை பார்த்து கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆயிற்று.. இங்கும் அப்படியே....

காதலிக்கின்றேன் என்று சொல்லும் காதலி உடனேயே உன்னை பிடிக்கவில்லை என்றால் எப்படி இருக்கும்? அப்படி என்ன தப்பை காதலன் செய்து இருக்க முடியும்-???

ஜாக்சன் என்கின்ற ஜாக்கி கதாபாத்திரத்தில் வடிவேலு பின்னி இருக்கின்றார்....வடிவேலுவுடன் தமன்னா ரோமான்ஸ் படத்தில் விசிலை பறக்கவைக்கின்றன....வடிவேலுவை ஐ லவ் யூ ஜாக்கி என்று சொல்லும்போது விசில் மழை...

சொல் பேச்சு கேட்காத சுந்தரியே என்ற பாடல் கட் ஷாட் இல்லாமல் எடுத்து இருக்கின்றார்கள்...செம கலர்புல்...5 ரவி, 4 தமன்னா என வந்து ஆட்டம் போடுகின்றார்கள்...தொழில் நுட்பம் உதவி செய்து இருக்கின்றது....

ஷாம் தெலுங்கில் ஏற்ற ஆதே பத்திரம்.... கொஞ்சம் பிரிஸ்க்காக இருக்கின்றார்....


தமன்னா தங்கையாக வருபவர் அடுத்தபடத்தில் எப்படியும் சான்ஸ் வாங்கி விட வேண்டும் என்பது அவரின் உடைகளில் தெரிகின்றது...

சந்தானம் காமெடி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்......

ஐட்டம் சாங்கில் முகமைதுகான் பீவர் ஒழிந்து இருக்கின்றது.... இதில் அந்த பெண்களை ரசிக்கலாம்....

காஸ்ட்டியூம்களில் அப்பட்டமான தெலுங்குவாடை ரவி பல உடைகளில் ரொம்பவும் சாமிங்காக தெரிகின்றார்....வெயிட் போட்டு இருக்கின்றார்...

வடிவேலுவுக்கு நல்ல இங்கிலிஷ்கலர் டிரஸ்கள்....போனிடெய்லுடன் வருகின்றார்...மனிதர் கலக்குகின்றார்...

தமன்னாவுக்கு பல உடைகள் செட் ஆகவில்லை...ஒரு சில காட்சிகளில் புஷ்ட்டியாகவும் பல காட்சிகளில் இளைத்தும் தெரிகின்றார்...

செட் சாங்குகளில் ராஜசேகர் நன்றாக லைட்டிங் செய்து இருக்கின்றார்....முக்கியமாக மலேசியாவில் பல காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி..


தமன்னாவுக்கு இன்னும் கொஞ்சம் கழுத்துக்கு கீழே பவுடர் டச்சப் செய்து இருக்கலாம்... மார்டன் டிரஸ்சில் உள்ளாடை போட்ட முத்திரைகள் நன்றாக தெரிகின்றன..

இசை யுவன்..பாடல்கள் அந்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை.. பின்னனி இசை தமன்....

படத்தின் முடிவில் இப்போதைய தெலுங்கு டிரென்ட் போல, ஜாக்கிசான் படத்தின் இறுதி காட்சி போல.. படத்தில் எடுத்த என்ஜி ஷாட்டுகளை போடுகின்றார்கள்...

நான் எற்கனவே தெலுங்கு கிக் பார்த்ததால் ... நான் பல இடங்களில் அமைதி காத்தேன்....

நல்ல ஸ்கிரிப்ட்.... பரபரப்பான திரைக்கதை....சிங்கத்துக்கு பிறகு சன்னுக்கு அடுத்த வெற்றி....

லாஜிக்கை ஓரம் கட்டி விட்டு இந்த படத்தை பார்த்தால் வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம்....


படத்தின் டிரைலர்



படக்குழுவினர் விபரம்...

Directed by M. Raja
Produced by Mohan
Written by M. Raja
Vakkantam Vamsi
Starring Jayam Ravi
Tamannaah Bhatia
Shaam
Prabhu Ganesan
Vadivelu
Suhasini Maniratnam
Santhanam
Music by Yuvan Shankar Raja
Thaman
Cinematography B. Rajsekhar
Editing by L. Sasikumar
Studio Jayam Company
Distributed by Sun Pictures (India) Ayngaran International (UK)
Release date(s) July 23, 2010
Country India
Language Tamil

சென்னை பரங்கிமலை ஜோதி தியேட்டர் டிஸ்க்கி....
ஜோதி தியேட்டரில் மட்டும்தான் மதிய காட்சிக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதால் நானும் பதிவர் நித்யகுமாரனும் படத்துக்கு போனோம்...

தியேட்டரில் நல்ல கூட்டம்....

ஜோதி தியேட்டர் திரையை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்... மேலேயும் கீழேயும் கருப்பாக தெரிகின்றது....

கொடுத்த காசுக்கு கடைசிவரை ஏசி போடுகின்றார்கள்..

பஸ்ட்கிளாசில் இரண்டு பெண்கள் மட்டுமே வந்து இருந்தார்கள்..

வடிவேலுவை தம்ன்னா கட்டி பிடித்து பைக் ஓட்டும் காட்சி வரும் போது தியேட்டரில் செம விசில்தமன்னா யோகா செய்யும் போது கேமரா குளோஸ்ஆக பயணிக்க தியேட்டரில் ஆர்பாட்டம்....

ரவி தம்ன்னா வயிற்றில் கை வைக்க சட்டென் தமன்னா ரவியின் கீழே உள்ள கால் சட்டையின் பட்டனை பிடிக்க தியேட்டரில் கரவொலி....

ஆயிரம் சொல்லுங்கள் தமன்னா ஐ லவ்யூ ஜாக்கி என்று செல்லமாக அழைக்கும் போது எனக்கு மெய்யாலுமே குஜாலாக இருந்தது...

படம் பார்த்து விட்டு வெளியே வர அடுத்த ஷோவுக்கு ஏ பிலிம் பை பராதிராஜா என்ற டைட்டிலை பார்த்து விட்டு நேராக திருநீர்மலையில் சுட சுட கல்யாணம் முடித்து விட்டு வந்த ஜோடி ஒன்று டீக்கடை வாசலில் ஆறு மணி ஷோவுக்கு வெயிட் செய்து கொண்டு இருந்தது....


மார்க் மை வேர்ட்
இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது வடிவேலுக்கு “‘மச்சம்டா” என்று நீங்கள் மனசுக்குள் முனகுவது பக்கத்தில் இருப்பவருக்கு சர்வ நிச்சயமாய் கேட்கக்கூடும்...

பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்

16 comments:

  1. படத்த பாக்கறதுக்கு போனிங்களா. இல்லேன்னா தமனாவ பாக்க போனிங்க்ளா.. அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிருக்கீங்க..

    ReplyDelete
  2. ஏ பிலிம் பை பராதிராஜா////ஜெயம் ராஜாவா............

    ReplyDelete
  3. தமன்ன ரசிகர்மன்ற தலைவறாங்க நீங்க ?

    ReplyDelete
  4. தமன்னாவுக்கு இன்னும் கொஞ்சம் கழுத்துக்கு கீழே பவுடர் டச்சப் செய்து இருக்கலாம்... மார்டன் டிரஸ்சில் உள்ளாடை போட்ட முத்திரைகள் நன்றாக தெரிகின்றன..
    நீங்க ஒரு ஃபோட்டோகிராஃபர்னு நிரூபிச்சிட்டே இருக்கீங்க.நல்ல கவனிப்பு

    ReplyDelete
  5. எதில் எதில் இருந்துதான் சுடனும்ன்னு விவஸ்தையே இல்லாமபோச்சு அண்ணே .. மேல இருந்து ஐந்தாவது படத்தை My Sassy Girl படத்தில் இருந்து சுட்டு இருக்காங்க .. இந்த லிங்க் போய் பாருங்க . http://www.dvdonline.com.au/images/my%20sassy%20girl.jpg

    ReplyDelete
  6. அப்பா பார்க்கலாம்னு சொல்றீங்க

    ReplyDelete
  7. "ஜாக்கி ! ! ஐ லவ் யூ" - தமன்னா பின்னோட்டம் போட்ட மாதிரி நெனச்சுக்கோங்க ! ! !

    ReplyDelete
  8. தமன்னாவிற்காக பார்க்கலாம் போல.
    இப்போவே கூல் தமிழ் டாட் காம் இல் பார்த்து விடுகிறேன்

    ReplyDelete
  9. வந்து ரொம்ப நேரமாச்சு ஜாக்கி ஆனா கமெண்ட் போட முடியல வழுக்கிட்டே இருக்கு எல்லாத்தையும் தொடைச்சிட்டு ஒருவழியா கமென்ட் போட்டுட்டேன் அவ்வளவு ஜொள்ளு மழை ஆனாலும் த்யேட்டர் டிஸ்கி இன்று கம்மி காரணம் ஜாக்கி தமன்னாவை பார்பதிலேயே குறியாய் இருந்ததால் கவனம் சிதறாமல் பார்த்திருக்கீங்க போல .

    ReplyDelete
  10. என்னது தமன்னா லவ் யூ சொல்லிட்டாங்களா உங்களுக்கு? என்ன கொடுமை ஜாக்கி:-))) இதுக்காகவே ஒரு மைனஸ் ஓட்டு போடலாம். ஆனாலும் ஒரு ப்ளஸ் போடுறேன் பொழைச்சு போங்க!

    ReplyDelete
  11. annathai arasiyal vendame , vimarsanam seiyum pothu

    ReplyDelete
  12. ரவி 70 MM சைஸ்ல இருக்காப்புல. சீன்க்கு சீன் காப்பி அடிச்சு என்னவோ போங்க. எப்படியாவது படம் ஹிட் ஆகிடுது. களவாணி மாதிரி படம் ஓட கஷ்டப்படுது :(

    ReplyDelete
  13. ரோமியோ சொன்ன மாதிரி, ஸ்டில்கூட யோசிச்சு எடுக்கக் கூடாதா..

    லவ்யூ ஜாக்கின்னு சொன்ன உடனே.. நீங்க ப்ளாட் ஆகிட்டீங்க போல :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner