செழிக்கும் சென்னை டியூஷன் டீச்சர்கள்...(சென்னையில் வாழப் பழக...பாகம்/6)



ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு டியூஷன் வைத்தார்கள்...ஏபிசிடியும் ஆனா ஆவான்னாவும் சிலைட்டில் எழுதுவதை என் அம்மா கற்றுக்கொடுத்தலும், பாப்பாத்தி டீச்சர் அதனை மெருகு ஏற்றினார்...எனக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் எடுத்தார்கள்... அவருக்கு 60 வயதுக்கு மேல் வயிற்று பிழைப்புக்கு டியூஷன் எடுத்தார்....






1980 களில் மாதம் வெறும் 5ரூபாய்  மட்டும்தான் வாங்குவார் .... கல்வி  என்பது விற்பதற்கு அல்ல என் வயிற்று பிழப்புக்கு இதை செய்கின்றேன்... எனக்கு சொத்து சுகம் இருந்தால்  இதை கூட நான் வாங்க மாட்டேன் என்று சொல்லுவார்..எனக்கு  பிச்சை எடுப்பதில் விருப்பம் இல்லை என்று சொல்வார்கள்...


என் அம்மா  எப்போதாவது என் பிள்ளை படிக்வேமாட்டேன்கிறான்... விளையாட்டு புத்தி ஜாஸ்த்தி ஆயிடுத்து என்று குறைபட்டுக்கொண்டாள்... அதற்கு அந்த பாப்பாத்தி டீச்சர்,


உன் புள்ள இப்பதானே ஒன்னாவது படிக்கின்றான்.... நாளைக்கு என்னவோ ஐஏஎஸ் பரிட்சை எழுதுவது போல் கவலைபடறே என்று,


என்  அம்மாவை பார்த்து திட்டுவார்.....இப்போதை அம்மாக்கள்.. பிரிகேஜிலேயே பிலிங் ஆகிவிடுகின்றார்கள் என்பது வேறு விஷயம்....


அதன் பிறகு எனக்கு தாரா என்ற  டியூஷன் டீச்சர் எனக்கு அறிவு பசியை தூண்ட  படாத பாடு பட்டார்கள்...தாரா டீச்சர் மாதம் எல்லா சப்ஜெக்டுக்கும்  சேர்த்து 25 ரூபாய் வாங்கினார்கள்...5வதில் இருந்து 8 வரை என் பள்ளி சிரமைப்பில் நாங்கள் ஈடுபடுத்தபட்டோம்....9ம் வகுப்பு திருப்பாபுலீயூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் சேர்ந்த போது அல்ஜிப்ரா என்ற   புதிய வஸ்துவை சொல்லிகொடுத்தார்கள்... அஜீப்ராவை கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்து  இருந்தால் அப்போதே ஜுஸ் பிழிந்து இருப்பேன்......


எனக்கும் கல்விசெல்வத்துக்கும் எப்போதும் ஏழரைதான்...எட்டாம் வகுப்பு படிக்கும் போது ரஜினி நடித்த விடுதலை படம் வந்து தொலைக்க...ஏற்கனவே படிப்பில் சூரபுலியான நான் அதன் பிறகு இறங்கும் முகம்தான்...ஏதோ பத்தாவது ஒழுங்கா பாஸ் பண்ணாதான்..இந்த உலகத்தில் போராட முடியும் என்பதால் என்னை எப்படியாவது பத்தாவது  படித்து முடிக்க வேண்டும் என்று என் பெற்றோர் படாத பாடு பட்டனர் ...


எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த முத்துக்குமாரசாமி என்பவரிடம் பத்தாம் வகுப்பு மேக்சு டியூஷன்  சென்றேன்... மாதம் 150 வாங்கினார்..எனக்கு தினத்தந்தியில் நம்பர் வரும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை...கணக்கில் 85ம் அறிவியலில் 35ம் எடுத்து 277 எடுத்து வெற்றிக்கோட்டை பார்டரில் தொட்டேன்....அறிவியல் பரிட்சை பேப்பர்  திருத்தியவர் ஒரு மார்க் குறைத்து இருந்தாலும் பைக் மெக்கானிக்காக  மாறிகையில் ஸ்பேனருடன்,  சீட்டில் ஒருக்களித்து உட்கார்ந்து காதல் பரத் போல, பள்ளிக்கு போகும் பிள்ளைகளை சைட் அடித்துக்கொண்டு இருந்து இருப்பேன்...


அதன் பிறகு டியூஷன் என்ற சொல் எனக்கு அதிகம் பரிட்சையம் இல்லாமல் போய் விட்டது....


நான் இப்போது வீடு மாறி புது  வீட்டுக்கு போகும் போது அங்கு  ஒரு நண்பரின் குழந்தை எல்கேஜி படிக்கின்றது... டியூஷனில் இருந்து  நண்பர் குழந்தையை அழைத்து கொண்டு  வரும் போது... எனக்கு பாப்பாத்தி டீச்சர் ஞாபகம் வந்தது...




  இப்போது எவ்வளவு டியூஷன் டீச்சர்கள் வாங்குகின்றார்கள் என்பதை அறிய மாதத்துக்கு எவ்வளவு என்று கேட்க ஒரு சப்ஜெக்டுக்கு400 ரூபாய் 5 சப்ஜெக்டுக்கு2000 ஆயிரம் ரூபாய் என்று நண்பர் சொன்ன போது எனக்கு பகிர் என்றது....குழந்தை என்னை பார்த்து விகல்பம் இல்லாமல் சிரித்து வைத்தது...




எத்தனை பேர் படிக்கின்றார்கள் என்று கேட்க ஒரு 20 பேர் படிக்கின்றார்கள் என்று சொன்னார்...மனம் சட்டென கணக்கு போட20x2000ம் 40 ஆயிரம்... அதாவது மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரைதான்... இரண்டு மணி நேரம் மாதம்40000 வருமானம்....


இதில் எல்லா குழந்தைகளும் 5 சப்ஜெக்டுக்கு படிப்பதில்லை சில குழந்தைகள் 2 சில குந்தைகள் 4 என்று இருக்கும்  எப்படி இருந்தாலும் மாதம் இரண்டு மணி நேர உழைப்புக்கு 25 ஆயிரம் சம்பாதிக்க முடிகின்றது.....எல்கேஜிபிள்கைக்கே இந்த அமவுண்ட் என்பதை என்னால் ஜிரணிக்க முடியவில்லை....


என் நண்பி இப்போதுதான்  ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தாள்... வீட்டுக்கு போய் டியூஷன் எடுத்தால் இரண்டு சப்ஜெக்டுக்கு மாதம் 3500 ரூபாயாம்...படிக்கும் பிள்ளைகள் அத்தனையும் கார்பரேஷன் பள்ளியில் படிப்பதில்லை...


கேந்திரிய வித்யாலாயா, பொன்வித்யாசரமம்,சராதா வித்யாலயா என  பெரிய  பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்தான்... அந்த பிள்ளகைளுக்கு பள்ளியிலேயே நல்ல கோச்சிங் இருந்தாலும் டியூஷனும் வைக்கின்றார்கள்....




என் நண்பி வீட்டில் டியூஷன் எடுக்கின்றாள்...4ம் வகுப்பு .. மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு எடுக்கின்றாள்... எல்லா சப்ஜெக்டுக்கும் சேர்த்து 250 மாதம் வசூலிக்கின்றாள்... கூட வேலை செய்யும் டீச்சர் சொன்னாராம்... இப்படி கம்மியான அமவுன்ட் வாங்கினால் .. நீங்க நல்ல டீச்சர் இல்லை... உங்க கிட்ட குவாலிட்டி இருக்காதுன்னு பேரண்ட்ஸ் போயிடுவாங்க மீஸ்... அதனால் அதிகமா பணம் வாங்கினாதான்... நீங்க நல்ல டீச்சர் என்று சொல்லுவார்கள்.... என்று சொல்லி இருக்கின்றார்கள்....

என் நண்பி என்னிடம் கேட்டாள்.... ?
அது எப்படிப்பா  படிப்பு சொல்லிகொடுத்து  இவ்வளவு காசு வாங்கினா உடம்புல ஓட்டும என்று ...??????


நான் நடிகர் விவேக் சொல்வது போல் சில்லி கேள் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்....


ஆகவே பெற்றோர்களே சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்கள் குந்தைகளை டியூஷன்  அனுப்ப ஊரில் இருக்கும் 2 ஏக்கர் நஞ்சையை விற்று கையில் பணமாக வைத்துக்கொள்ளுங்கள்... தேவைபட்டால் முந்திரிகாட்டை அவசரத்துக்கு அடமானமாக வைத்துக்கொள்ளலாம்....






இந்த முறை மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி காப்ரேஷன் பள்ளியில் படித்தவர் என்பதை நினைவில் கொள்வது நலம்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

30 comments:

  1. அர்த்தமுள்ள பதிவு

    ReplyDelete
  2. நல்ல பதிவு ...

    ReplyDelete
  3. இதில அவலம் என்னனா எல்லா வகுப்பு பிள்ளைகளும் கலந்து படிப்பாங்க ( இது தான் சமச் சீர் போல ).
    ஒரே வகுப்பு பிள்ளைகளோடு ஒரு எட்டு மணி நேரம் பள்ளியில் இருந்தே , ஒவ்வொரு subject கும் தனி ஆசிரியர் இருந்தே படிக்காத நம்ம புத்திர சிகாமணிகள் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் 2 மணி நேரம் பல வகுப்பு பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார்ந்து அனைத்து subj படிச்சு கிழிச்சிடும்னு நம்ம பெற்றோர்கள் நினைப்பது வேடிக்கை. எதோ வேலைக்கு போகிற வீடுகளில் baby sitting மாதிரி இருந்து தொலையட்டும்னு விடராங்கன்னு பார்த்தா இப்போ எல்லோரும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

    ReplyDelete
  4. நன்றி கதிர்... உங்கள் பகிர்தலுக்கு..

    ReplyDelete
  5. நன்றி செந்தில் குமார்...

    ReplyDelete
  6. //ஆகவே பெற்றோர்களே சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்கள் குந்தைகளை டியூஷன் அனுப்ப ஊரில் இருக்கும் 2 ஏக்கர் நஞ்சையை விற்று கையில் பணமாக வைத்துக்கொள்ளுங்கள்... தேவைபட்டால் முந்திரிகாட்டை அவசரத்துக்கு அடமானமாக வைத்துக்கொள்ளலாம்....//

    போதுமா?

    சரி, இப்படி சொத்து எதுவும் இல்லாதவர்கள் கதி?

    ReplyDelete
  7. நான்லாம் உதவி பெறும் நடுநிலைபள்ளியில் படித்தவன்...சொத்து இல்லாதவன்... நான் படிச்சா போல காடர்பஷைன் பள்ளிதான்....சொத்து இருக்கறவன்தான் ஒரு சப்ஜெக்டுக்கு 400 தர முடியும்...இல்லாதவன் என்ன செய்ய முடியும்... நீங்களே சொல்லுங்க...


    அது கொள்ளையான அமேவுண்டை நக்கல் விட சொன்ன வரிகள்..

    ReplyDelete
  8. அண்ணே,நல்ல பதிவு.இனிவரும்கால கல்வி கட்டணத்தை நினைத்தால் பயமாருக்கு,
    இங்க நல்ல சி பி எஸ் ஸி சிலபசில் ஒரு குழந்தையை படிக்கவைக்க வருடத்துக்கு 6முதல் 7 லட்சமாகிறது,நடுத்தர மக்கள் குழந்தைகளை சேர்க்கும் இந்தியன் பள்ளிகளில் குறைந்தது3 லட்சம் ஆகிறது நான் சொன்னது 2ஆம் வகுப்புக்கு.
    என் மகளுக்கு சென்னையில்45000வருடத்துக்கு பஸ் ஃபீஸ்,உணவுடன் ,பள்ளியில் படித்தால் மட்டும் போதும் என்று பெற்றோர் நினைக்கவேண்டும்.எப்போவோ டாகடருக்கும் இஞ்சினியருக்கு படிக்க இப்போதே பிஞ்சுகளை சித்திரவதை செய்தல் நியாயமா?கொடுமை இது.
    =====
    இப்போதெல்லாம் இவர்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க செய்யும் தீஸிஸ் மற்றும் தொடுக்கும் கேள்விகளை பார்த்தால்,ஒன்றூ தான் நினைவுக்கு வருது,ஊர்ல இல்லாத புள்ளைய பெத்துட்டான் என்பது தான் அது.
    =====
    நான் அரசுப்பள்ளியில் படித்தவனே.

    ReplyDelete
  9. not only in chennai jackie.. தமிழ்நாட்டுல எங்க போனாலும் இதே கததான்..

    ReplyDelete
  10. //சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்கள் குந்தைகளை டியூஷன் அனுப்ப ஊரில் இருக்கும் 2 ஏக்கர் நஞ்சையை விற்று கையில் பணமாக வைத்துக்கொள்ளுங்கள்... தேவைபட்டால் முந்திரிகாட்டை அவசரத்துக்கு அடமானமாக வைத்துக்கொள்ளலாம்....//

    நண்பரே டியூசன் மட்டுமல்ல இந்த மெட்ரிக் பள்ளியில புடுங்கறானுக பாரு காசு... இதுக்கு 2 ஏக்கர் பத்தாது....

    டியூசன் எடுப்பவர்களையோ மெட்ரிக்பள்ளி நடத்துவபர்களையோ சொல்லி பயன் இல்லை.... காசு கொடுக்க நம்ம மக்கள் தயாராக இருக்கும் வரை இது தொடரும்.....

    //இந்த முறை மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி காப்ரேஷன் பள்ளியில் படித்தவர் என்பதை நினைவில் கொள்வது நலம்...//

    ஒவ்வொரு வருடமும் இது தொடரவேண்டும் என்பது என் கனவு....

    ReplyDelete
  11. சென்னை என்ற மாய உலகின் வாழ்வியல் மிக மோசமான பாதையை காட்டி கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  12. Our Makkal has to change their mind to study in corp school

    ReplyDelete
  13. தொல்பழங்காலத்தியதாய்ப் போய்விட்ட மெக்காலே கல்விமுறையைத்தான் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறோம். எவ்வளவு திறமையாக வாந்தியெடுக்கிறானோ அவ்வளவு தூரம் மாணவன் புத்திசாலி!!! மாற்றுக்கல்விமுறை, மாற்று வாழ்க்கைமுறை இவற்றைப் பற்றியெல்லாம் தீவிரமாக சிந்திக்கவேண்டிய தருணமிது!

    ReplyDelete
  14. எங்க ஊரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100% மாணவிகள் நல்ல மார்க்குகளோடு பாஸ் செய்திருக்கிறார்கள்.

    வெறும் பாஸ் மட்டுமில்லை. மதிப்பெண்களும் மாவட்டத்தின் முதல் ரேங்குகளில் உள்ளன.

    வெகு முக்கியமாக, ஆங்கிலப்பள்ளியில் உள்ளது போல, பப்ளிக் பரீட்சைக்கு முன் screening test வைத்து நல்ல மாணவர்களை மட்டும் எழுதவிடவில்லை!

    இதெல்லாம் சும்மாங்க..

    ’படித்தால் இந்த மாதிரி ஆங்கிலமீடியம் பள்ளியில் படிக்கவேண்டும்..’ என்பது ஒரு வியாபார தந்திரமே! அட்சய திருதயை,ஆடித்தள்ளுபடி,பச்சைப்புடவை மாதிரி!

    அன்புடன்
    கார்த்திகேயன்
    காரணம் ஆயிரம்
    http://kaaranam1000.blogspot.com

    ReplyDelete
  15. உங்க நண்பியை போலவே குறைந்த ஃபீஸ் வாங்கிக்கொண்டு டியூஷன் சொல்லிக்குடுக்கும் நிறைய பேர் இருக்காங்க ஜாக்கி அண்ணே.

    ReplyDelete
  16. இணையத்தில் இலவசமா கிடைக்குது . பெற்றோர் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் வீட்டிலேயே கற்கலாம் கற்று கொடுக்கலாம்..

    டியுஷன் அனுப்புவது கொடுமை ..

    குழந்தைகள் குழந்தைப்பருவத்தை அனுபவிக்கணும்..

    நல்ல கட்டுரை.

    ReplyDelete
  17. அருமை.உங்களீடமிருந்து இவ்வளவு சீரியசான பதிவை எதிர்பார்க்கவில்லை.மிக நல்ல பதிவு.ஆனா ஒரு விஷயம் 12வது படிக்கற பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கறதை விட எல் கே ஜி ஸ்டூடண்ட்ஸ்க்கு எடுக்கறது கஷ்டம்

    ReplyDelete
  18. அருமையான பதிவு ....!
    இதுபோல் நிறைய எழுதுங்கள் !!!
    (For you, Just created a ID in Tamilish to VOTE)

    ReplyDelete
  19. ஜாக்கி குறைந்த பணத்தில் மன நிறைவுடன் பாடம் சொல்லி தறும் உங்கள் நண்பிக்கு பூங்கொத்து.

    ReplyDelete
  20. niraiya solla ninaithu ondrum sollaamal pogiraen.
    orey pakka karuthukkal endrum yerpudaiyathaagumaa? intha vivaatham thodarnthaal niraiya visayangal arinthu kollalaam.


    Useful post..It is very nice...

    ReplyDelete
  21. புதுவை சிவா♠ said...
    ஜாக்கி குறைந்த பணத்தில் மன நிறைவுடன் பாடம் சொல்லி தறும் உங்கள் நண்பிக்கு பூங்கொத்து.
    //

    valimoligiraen..vaalthukkal

    ReplyDelete
  22. இங்கே சண்டிகரிலும் ட்யூஷன் டீச்சர்கள் ஏராளம். நல்ல வருமானமும்கூட. மத்திய அரசு வேலையை விட்டுட்டு முழுநேர ட்யூஷன் வாத்தியாரா ஒருத்தர் இருக்கார்ன்னா நம்புவீங்களா?

    பள்ளிக்கூட வகுப்பறை போல 30 பேர் ஒரு ட்யூஷன் வகுப்பில் ஒரு பாடத்துக்கு.

    அவர் மனைவியும் ட்யூஷன் டீச்சர்!!!!

    ReplyDelete
  23. ஆங்......... சொல்லவிட்டுப்போனது......... இவுங்க தமிழர்கள்!!!!!

    ReplyDelete
  24. நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க, கீழுள்ள இணைப்பைப் பின்தொடர்க:

    http://www.periyarl.com/

    பல மேம்பட்ட வசதிகளுடன் ஒரு தமிழ் திரட்டி - http://www.periyarl.com/

    உங்கள் கருத்துக்களை இன்னும் வேகமாக முன்னிருத்தவும் உங்கள் எழுத்துக்களை மேலும் விரிவடைய செய்யவும் நமது குழுமத்தில் இருந்து ஒரு திரட்டியை உருவாக்கி உள்ளோம்.உங்களிடம் blog இருக்குமே ஆனால் பகலவன் திரட்டியின் vote button யை உங்கள் blog யில் பின்வரும் இணைப்பை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள்.

    vote button இணைப்பு - http://periyarl.com/page.php?page=vote



    நன்றி
    பகலவன் திரட்டி
    http://www.periyarl.com/
    பகலவன் குழுமம்

    ReplyDelete
  25. எல்.கே.ஜிக்கு 2000 ரூபாய் ஃபீஸ் சென்னையில் எந்த ஏரியாவில் என்று சொன்னால் வசதியாக இருக்கும்..

    ReplyDelete
  26. முக்கியமான பதிவு...
    தொடரட்டும்...

    ReplyDelete
  27. மிக முக்கிய ,மற்றும் நல்ல பதிவு.

    ReplyDelete
  28. Mr.Muthukumaraswamy is a great maths teacher in St.Joseph High School during 1970s and one more teacher with equivalent greatness was Mr.Veera Raghavan. I also studied in the same school from 3rd standard to 11th standard i.e. from 1969 to 1975 (approx) I do not remember exactly the years.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner