வரிசையில் நிற்பது...சென்னையில் (தமிழ் நாட்டில்)வாழ பழக..(பாகம்/5)

ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நின்று காரியம் சாதிப்பது என்பது சென்னையில், தமிழ்நாட்டில்,இந்தியாவில் நடக்காத காரியம்..இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடிக்கு மேல் ....அதனால் இங்கு நாகரிகம் எனபதை எதிர்பார்க்க முடியாது... ஒரு காலத்தில் நீங்கள், நான் எல்லோரும் இந்த அநாகரிக செயலை செய்துதான் வந்து இருப்போம்... அல்லது கடந்து வந்து இருப்போம்...





பொதுவாக கிராமபுற பேருந்துகளில் இந்த காட்சியை காணலாம்.. நகரத்தில் இருந்து கிராமத்துக்கு செல்லும் பேருந்துகளில் பேருந்தின் ஜன்னல் வழியாக தலையில் கட்டி இருக்கும் அல்லது தோளில் இருக்கும் துண்டை எடுத்து பேருந்து உள்ளே வீசி... இடம் பிடிப்பதை நாம் பார்த்து இருக்கலாம்...



இப்போதும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பேருந்தில் இடம் பிடிக்க இந்த தள்ளு முள்ளுககளை பார்க்கலாம்....இதில் குடும்பத்தோடு வருபவர்கள் பாடு திண்டாட்டம்... அதுவும் கைக்குழந்தையோடு வரும் தாய்மார்கள் பாடு அதை விட திண்டாட்டம்...500 கீலோமீட்டர் பயண தூரம் இருக்கும் ஊர்களுக்கு... கைக்குழ்ந்தையோடு வந்தாலும் வராவிட்டாலும்...,. யாரும் நின்று கொண்டு பயணம் செய்ய முடியாது....

மக்களை குறை சொல்லி தப்பு இல்லை...52 பேர் பயணம் செய்யும் ஒரு பேருந்துக்கு 200பேர் பயணம் செய்ய அடித்துகொள்ளும் நிலை ஏற்பட்டால் நாகரிகமாவது மயிராவது.....

எல்லோருக்கும் அவர்தம் குடும்பமும் சுயநலமும் முக்கியமாகி விடுகின்றது.... சரி இதெல்லாம் விட்டு தள்ளுங்கள்..... அடுத்தநாள் காலை தீபாவளிக்கு குடும்பத்தினரை பார்க்க போகும் ஆவல்...... அதனால் வேறு வழியில்லை...மக்கள் தொகை பெருக்கம் எதையும் காரணமாக சொல்ல முடியாது..... அதனால் அடித்துக்கொள்கின்றார்கள்...

அவசரமே இல்லாமல் பொறுமையாக ரொம்ப கூட்டமே இல்லாத இடத்திலும் வரிசையில் வருபவர்களை பைத்தியமாகிவிட்டு நடுவில் போவது... இங்கு சர்வசாதாரணம்...... இதுதான் எனக்கு கோபம் கொடுக்கும் விஷயம்.......உதாரணத்துக்கு மன்னன் படத்தில் சின்னத்தம்பி படத்துக்கு டிக்கெட் எடுக்க....அத்தனை பேர் வரிசையில் இருக்க... குறுக்கு வழியில் போய் கவுண்டமணி டிக்கெட் எடுத்து வருவதும்... அதே போல் சுப்ரமணியபுரத்தில் முரட்டுகாளை படத்துக்கு கஞ்சா கருப்பு இரண்டு முறை டிக்கெட் எடுத்து விட்டு டான்ஸ் ஆடியபடி வருவதும் மிகச்சிறந்த சான்றுகள்.......எந்த ஊரிலும் சினிமா டிக்கெட்டுக்கு வரிசையில் நின்றால் அந்த வரிசையை உடைப்பதற்கு என்று ஒரு அராத்தல் கூட்டம் ஒன்றுவந்து தொலைக்கும்......

ரேஷன் கடைகளில் இருந்து, அரசு மருத்துவமைணைகளில் ஓபி சீட்டு கொடுக்கும் இடத்தில் இருந்து, மாத மாதம் ஈபியில் பணம் கட்டுவதில் இருந்து, இந்த வரிசையில் நிற்காமல் எல்லோருக்கும் முன் செல்ல துடிக்கும் அந்த பண்பாளர்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம்.... முன்பெல்லாம் வடபழனியில் நான் வசித்த போது, இரவில் லாரியில் வரும் தண்ணீரை பிடிக்கும் போது கூட இந்த வரிசை சண்டை நடக்கும்... கார்பரேஷன் பைப்பில் தண்ணி பிடிக்கும் சண்டையில் பல வெட்டு கூத்துகளை பார்த்தது நம் தமிழ் இனம்...


சென்னை புறநகர் ரெயிலில் டிக்கெட் எடுக்க ஒரு பெரிய லைன் நின்று கொண்டு இருக்கும்... விசாரனை செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு கவுண்டர் இருகில் போய் டிக்கெட் எடுத்து விட்டு வரும் பல குடும்பங்களை காணலாம்....

பெட்ரோல் பங்குகளில் நாம் தினமும் பார்க்கும் காட்சி இது...நாம் மிகச்சரியாக வரிசையில் நின்று இருப்போம்.... நமக்கு பின் ஒரு 5 பேர் வரிசையில் நின்று கொண்டு இருப்பார்கள்... நம்மை எல்லாம் பைத்தியக்கார கூ.........விட்டு வேகமாக பெட்ரோல் போடுபவர் முன்னால் போய் நிற்கும், ஜென்மங்கள் தமிழ்நாட்டில் அதிகம்.... இதுக்கெல்லாம் டென்சன் ஆனால் தமிழ்நாட்டில் வாழவே முடியாது...

திருமணத்துக்கு போய் கையில் ஒரு கிப்டை வைத்துக்கொண்டு கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டு இருப்போம்....எல்லோரும் ஒரு பக்கம் போய் மறு பக்கம் இறங்கி கொண்டு இருப்பார்கள்... சில நாதாரிகள் ஆப்போசிட் சைடில் ஏறுவார்கள்.. அவர்களை பார்த்து விட்டு இன்னும் நாலு பேர் அந்த பக்கம் போய் நிற்க்க... இதுவரை கடைபிடுத்து வந்த அந்த ஒழுங்கு கெட்டு ,வரிசையில் நிற்பதும், நேர்மையாக இருப்பதும் பைத்தியக்கரதனமானதாக தோன்ற வைக்கும்.....

சரி இதுக்கெல்லாம் தீர்வு என்ன என்று சொல்லுங்க ?என்று சொன்னால் அல்லது கேட்டால்? இந்த வரிசையில் நிற்கும் பழக்கம் எல்லாம் தொட்டில் பழக்கமாக சிறுவயதில் இருந்தே வர வேண்டும்.. குழந்தையாக இருக்கும் போதே பெற்றோர்கள் வரிசை நாகரீகத்தை கற்று தர வேண்டும்... அதுவரை நீங்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஊரோடு ஒத்து வாழ்வதே நல்லது...இல்லையென்றால் இந்த சமுகத்தால் உங்களுக்கு கேனை என்ற இலவசபட்டமளிப்பு விழா நடக்கும்...அது உங்கள் மகனால், உங்கள் மகளால், அல்லது உங்கள் மனைவியால் கூட அந்த பட்ட்ம் கொடுக்கபடலாம்....

பிரியங்களுடன் ஜாக்கிசேகர்....

குறிப்பு..

பிடித்தால் ஓட்டு போட மறக்காதீர்கள்....

25 comments:

  1. /// இந்த சமுகத்தால் உங்களுக்கு கேனை என்ற இலவசபட்டமளிப்பு விழா நடக்கும்... ///

    நான் வாங்கி ரொம்ப நாளாச்சு அண்ணா!

    ReplyDelete
  2. இதில் மகா கொடுமை என்ன என்றால், வரிசையில் நின்று கொண்டு இருக்கும் போது எவனாவது ஒருவன் வரிசையே மீறி முன்னே சென்று நிற்ப்பான். நாம், சார், QUE FOLLOW பன்னுங்க என்று சொன்னால் நம்மை எதோ அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்து விட்டு காதில் விழாதது போல நிற்ப்பார்கள். இதற்க்காக ரயில் நிலையங்களில், சினிமா தியேட்டர்களில் பல முறை சண்டை இட்ட சம்பவங்கள் ஏராளம். ஆன் லைன் புக்கிங் மூலம் இந்த தொந்தரவுகள் இல்லை என்றாலும் கம்ப்யூட்டர் இல்லாதவர் படும் பாடு பரிதாபமே.

    மனோ

    ReplyDelete
  3. மிகச் சரியாக சொன்னீர்கள் ஜாக்கி. அதனால் தான் இங்கே உள்ள கவர்மென்ட் இந்தியன்ஸ் எல்லாருக்கும் வரிசையில் நிற்பது எப்படின்னு சொல்லி தர போறாங்கலாம்.

    ReplyDelete
  4. Very nice article from Jackie.Greeting to U.Keep it up.

    ReplyDelete
  5. நீங்க சொல்றது சரி தான் சார்.

    ஆனா, கேரளவில, பிராண்டி ஷாப் முன்னாடி பாருங்களேன்
    எவ்ளோ அமைதியா கியூ - வில நிக்குறாங்கன்னு.
    அதே மாதிரி பஸ் ஸ்டாப் லயும் கியூ தான்.

    இந்த மாதிரி நல்ல காரியம் இங்கையாவது நடக்குதே.

    ReplyDelete
  6. சரவணன் மாஸ்....
    நான் வாங்கினதாலே இப்படி எழுதுகின்றேன்...
    நன்றி சரவணன்..

    ReplyDelete
  7. உண்மைதான்.. நம்மளை ஙே என்று பார்த்து தொலைப்பார்கள்...

    கம்யூட்டர் இல்லாதவர்கள் நிலை கொடுமைதான்...

    ReplyDelete
  8. கருத்துக்கு நன்றி குரு... நீங்க எந்த உர்னு சொல்லவேயில்லையே...

    ReplyDelete
  9. நன்றி காந்தி உங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  10. ஆனா, கேரளவில, பிராண்டி ஷாப் முன்னாடி பாருங்களேன்
    எவ்ளோ அமைதியா கியூ - வில நிக்குறாங்கன்னு.
    அதே மாதிரி பஸ் ஸ்டாப் லயும் கியூ தான். //

    எனக்கு ஆச்சர்யம் நானும் அது போல் போய் நின்று வாங்கி இருக்கின்றன்... அந்த ஒழுங்கு எனக்கு சேட்டனக்ளிடம் பிடித்தமான ஒன்று...

    எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அந்த ஒழுங்கு தவறுவதில்லை...

    ReplyDelete
  11. நன்றி உஜாலாதேவி..

    ReplyDelete
  12. உங்களுக்கு பின்னுட்டம் போடவும் வரிசைலத்தான் வரவேண்டிருக்கு

    ReplyDelete
  13. ஆமாங்க நானும் வரிசையல் நிக்கிற முட்டாள்.. தில்லியில் பள்ளிக்கூடத்துல டோக்க்ன் குடுத்திருப்பாங்க டீச்சர்ஸை மீட் செய்வதற்கென்று..ஆனால் அதெல்லாம் பாக்காம கருப்பு கண்னாடியால் கண்ணை மறைச்சிக்கிட்டு ஃபேசன் ஷோ ட்ரஸ் போட்டுக்கிட்டு நேரா போய் டீச்சரிடம் பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க.. அப்ப பிள்ளைங்க் முன்னாடி ஙே ந்னு நிப்போம். ஆனா இதுல கத்துக்குடுக்கவெண்டியது எது? எப்பவும் குழப்பம் தான் வரிசையில் நிக்கறதுக்கா..?

    ReplyDelete
  14. க்யூ இந்த விஷயத்தை கண்டுபிடிக்கவே ஆங்கிலேயனுக்கு முப்பது ஆண்டுகள் பிடித்ததாம்.. நம் ஆட்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் போனபின் யாதைக் கடை பிடிப்பார்கள்...

    ReplyDelete
  15. மன்னியுங்கள் ஜாக்கி. தற்போது வசிப்பது லண்டனுக்கு அருகில் வெல்வின் கார்டன் சிட்டி என்ற ஊர். அருமையான மற்றும் மிக அழகான இடம்.

    ReplyDelete
  16. //
    சென்னை புறநகர் ரெயிலில் டிக்கெட் எடுக்க ஒரு பெரிய லைன் நின்று கொண்டு இருக்கும்... விசாரனை செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு கவுண்டர் இருகில் போய் டிக்கெட் எடுத்து விட்டு வரும் பல குடும்பங்களை காணலாம்....//

    நான் பலமுரை இந்தக் கொடுமையை அனுபவித்திருக்கிறேன். வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்து தங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து த்ரச் சொல்பவர்களைக் கூட சில சமயங்களில் மண்ணித்துவிடலாம், வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு எனக்கு ஒரு நுங்கம்பாக்கம் ப்ளீஸ் என்று சொல்பவர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சல் வரும், அந்த சமயங்களில் "இந்த வரிசையில் கடைசியில் நிற்பவர் உங்களுக்கு உதவலாம், அவரிடம் கேளுங்கள்" என்பேன். இது எனக்குள் பதிவு செய்யப்பட்ட குரலாகவே அடிக்கடி ஒலித்திருக்கிறது.

    ReplyDelete
  17. //மக்களை குறை சொல்லி தப்பு இல்லை...52 பேர் பயணம் செய்யும் ஒரு பேருந்துக்கு 200பேர் பயணம் செய்ய அடித்துகொள்ளும் நிலை ஏற்பட்டால் நாகரிகமாவது மயிராவது.....//

    இதை ஒத்துகொள்ள முடியாது ஜாக்கி. மும்பையில் அவ்வளவு கூட்டத்திலும் பஸ் ஏறுகையில் வரிசை நின்று ஏறுவதை பார்த்திருக்கிறேன்.

    இந்தியா வந்த போது கவுண்ட்டரில் வரிசையில் நிற்கையில் கொஞ்சம் கூட ஒருவன் இருக்கிறானே என்ற உணர்வு இல்லாமல் உள்ளே நுழைவார்கள் - தெய்வங்கள் இவர்கள்.

    மற்ற விசயங்களை கண்டபடி வழிமொழிகிறேன். சாமன்யன்களின் ஆதங்கங்களை கண்ணாடியாக பிரதிபலிக்கிறீர்கள்

    ReplyDelete
  18. மிகச் சரியாக சொன்னீர்கள் ஜாக்கி.

    ReplyDelete
  19. Boss! இங்கே இந்த கமெண்ட் கடைசில் போடாமல் நடுவில் சொருக எதாவுது வழி இருக்க?
    இங்கேயும் இந்த Q தானே...ப்ச்...

    ReplyDelete
  20. Fully agreed within Tamilnadu. But
    I don't know about other states..
    ///மும்பையில் அவ்வளவு கூட்டத்திலும் பஸ் ஏறுகையில் வரிசை நின்று ஏறுவதை பார்த்திருக்கிறேன்./// This is true.

    ReplyDelete
  21. Mr. jack.. i am interstd to read ur blogspot. But some time you are doing over reaction.
    For example, the title.. அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகு...Y. like this.
    this seems some negative face abt u..
    also.. pls try to avoid.. jnkootha..
    regards
    Balaji

    ReplyDelete
  22. சூப்பரா சொன்னீங்க!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner