Beyond the Clouds-1995 (Par-Dela les Nuages)18+ நான்கு கதைகள்...


இந்த படத்தோட டைரக்டர் 3 வருஷத்துக்கு முந்திஅதாவது 2007 ல தனது 94 வது வயசுல இறந்து போனவர்...இவரது படைப்புகளை உலகம் கொண்டாடுது....இவர் ஒரு இத்தாலி டைரக்டர்....இத்தாலியோட பிதாமகர் அப்படின்னு சொன்ன எந்த பயலும் ஒரு கேள்வி கேட்க முடியாது....

நிறைய உலகலாவிய விருதுகள் இவரோட படத்துக்கு கிடைச்சி இருக்கு....

படம் எடுக்கும் போது எந்த காம்பரமைசும் செய்து கொள்ளாத புண்ணியவான்..இவருடைய நிறைய படங்கள் விஷவல் டீரீட்தான்...அதே போல் பிரைக்தரூல்ஸ் பாணிதான்.....

நம்ம ஊர்ல இந்த வயசுல படம் எடுத்த கிழவன் அவனுக்கு என்ன தெரியும்னு சொல்லிடுவாங்க... இப்ப நாம பாலசந்தரை அப்படித்தான் தள்ளி வச்சி இருக்கோம்...இந்த படம் இவரோடு 83வது வயசுல எடுத்ததுன்னு சொன்னா யாரும் நம்ப போறது இல்லை...

சங்கர் ஜீன்ஸ் படம் ஷுட்டிங்க்கு அமெரிக்கா போய் இருந்தப்ப...அங்க நம்ம தமிழ் படத்து ஷுட்டிங் பார்த்துட்டு எங்க டைரக்டர் என்று கேட்க நம்ம இயக்குனர் சங்கரை காண்பிக்க... யாரும் நம்பவில்லையாம்...இவ்வளவு சின்ன பையனா இருக்காறேன்னு ஆச்சர்யபட்டு போயிட்டாங்களாம்...அங்க வயசு ஆக ஆக தான் மரியாதை... இங்க வயசான இத்தனை வருடம் எல்லாம் ஒரு வார்த்தையில் நம்மவர்கள் சொல்லிவிடுவார்கள்...
அது என்ன வார்த்தை என்று கேட்கின்றீர்களா?

பூட்டகேஸ்.....



இந்த படத்துல பிஹைன்ட் த சீன் இருக்கும் டிவிடி கிடைத்தால் பாருங்கள்...இந்த வயசுல எப்படி டைரக்ட் பண்ணி இருக்கார் அப்படிங்கறது தெரியும்...

Beyond the Clouds (Par-Dela les Nuages) படத்தின் கதை என்ன??

ஒரு நான்கு சின்ன காதல் கதைகள் அந்த நான்கு காதலையும் டைரக்டர் எப்படி காட்சி படுத்தி இருக்கின்றார் என்பதுதான் கதை...இதன் பின் புலத்தில் பிரான்ஸ் நகரமும் இத்தாலியும் எவ்வளவு அழகா மெனெக்கெட்டு ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்கள் என்பதை பார்த்து மகிழுங்கள்....
எந்த கதையும் சொல்ல முடியாது...எல்லாம் விஷுவல் டிரிட்தான்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படத்தின் இயக்குனர்.Michelangelo Antonioni இத்தாலியோடு சினிமா சொத்து

இந்த படத்தில் இவரின் டெடிகேஷன்...தள்ளாடும் வயதில் அந்த பனியில் குளிர் காற்றில் படம் எடுக்க கம்பளி போர்த்திக்கொண்டு வந்து உட்காரும் டைரக்டர்....

நான்கு கதைகள்... ஆனால் அதை காட்சி படுத்தி சொல்லும் விதத்தில் கொஞ்சம் அயற்சியாக இருக்கும்....இந்த பார்வை இந்திய பார்வை...

இந்த படம் 3 விருதுகைளை பெற்றது..

இந்த டைரக்டர் எடுத்த புளோ அப் படம் இன்னமும் சினிமா ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டு இருக்கின்றார்கள்...அந்த படம் அடுத்த வரும் பதிவுகளில் எழுதுகின்றேன்...

படத்தில் நிர்வாணகாட்சிகள் அதிகம்.....

நான்கு கதையில் முதல் கதையில் வரும் பெண் நீண்ட நாட்களுக்கு உங்கள் மனதில் நிற்பார்... படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும்

இந்த படத்தை ஒளிப்பதிவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும்...

உலக பார்வையில் இந்த படம் ஓகே... இந்திய பார்வையில் இந்த படம் ஸ்லோ.. அதனால் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் இந்த படம்....


இந்த படம் பெற்ற விருதுகள் விபரம்..

Premiered internationally at the Venice Film Festival in September 3, 1995 winning the International Critics Prize.

Premiered in US at the AFI/L.A. Film Festival in November 1995

Featured at the New York Film Festival in September 1996

18+சென்சார் படம்...1


படத்தின் டிரைலர்..(18+ மட்டும்)



படக்குழுவினர் விபரம்...

Directed by.....................Michelangelo Antonioni
Screenplay by................Michelangelo Antonioni, Tonino Guerra and Wim Wenders
Based on Antonioni's That Bowling Alley on the Tiber
Cinematography by........Alfio Contini
Music by.............Van Morrison, Lucio Dalla and Laurent Petitgand

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்.. எனக்க சத்தியமா எனக்கு கள்ள ஓட்டு போட தெரியாதுங்கன்னா...



6 comments:

  1. krpsenthil kumar சொன்னது..

    எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் இதுவும்...

    பகிர்தலுக்கு நன்றி ...

    அண்ணே உங்க போஸ்ட்ல கமெண்ட்ஸ் ஆப்சன காணும்...

    ReplyDelete
  2. என்ன ஆச்சு ,வழக்கமா பிரிச்சி மேஞ்சுடுவீங்க,இந்த டைம் மேம்போக்கான விமர்சனமா இருக்கே,உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.ஒரே ஆறுதல் படம் பக்கா சாமி படம்னு சொன்னது,

    ReplyDelete
  3. இங்கு வயதானவர்கள் சம்மந்தப்பட்ட கதையையே படம் எடுக்க முடியல,பின்ன எங்க வயதானவர் படமெடுத்தால் மட்டும் அங்கீகாரம் கிடைத்து விடுமா? நல்ல விமர்சனம் . நன்றி!

    ReplyDelete
  4. உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner