(NAKED FEAR-2007)18+உடம்பில் ஒட்டு துணியில்லாமல் ஓட விட்டு ஒரு கொலை..


நீங்கள் ஒரு பெண்...தூங்கி விடியலில் எழுந்துருக்கின்றீர்கள்... எழுந்த இடம் மண் தரை..சட்டென உடலில் புது வித உணர்வு என்னவென்று பார்த்தால் உங்கள் உடம்பில் ஒட்டு துணியில்லை...

தலைவேறு வலிக்கின்றது... தலை தூக்கி எந்த இடத்தில் பார்த்தாலும் கண்ணுக்கு தெரியும் தூரம் வரை முட்டிக்கால் வரை வளர்ந்த கோரை புற்க்கள்தான்... மறைவான இடம் என்று பார்த்தால் சின்ன சின்ன செடிகள்தான் இருக்கின்றன....

தைரியத்தை வர வைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து நடக்கலாம் என்று நினைக்கும் போது கால் விரல்களில் வலி.. என்னவென்று காலை பார்த்தால் கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் கட்டிங் பிளேயரால் பக்கத்தில் உள்ள சதையை கிழித்து இருக்கின்றார்கள்...அதனால் எடுத்து இரண்டு அடி வைத்து நடப்பது எனும் சாத்தியம் குறைவு...


இருப்பினும் மானம் காக்க எதாவது துணியை உடுத்த வேண்டுமே அதுவரைக்குமாவது கால் வலியை பொறுத்துக்கொண்டு நடக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்...

கஷ்டபட்டு எழுந்து நிற்க்கின்றீர்கள்...காற்று பயங்கரமாக வீசுவதால் அந்த இடத்தின் அமானுஷ்ய சக்தியும்... ஆள்ஆராவரமற்ற அந்த இடத்தின் தனிமையும்.... உங்கள் முதுகு தண்டினை சில்லிட வைக்கின்றது...அழுகின்றீர்கள்... பயத்தில் கத்துகின்றீர்கள் கதறுகின்றீர்கள்...யாரும் உதவிக்கு வரவில்லை...


தூரத்தில் ஒரு டேலஸ்கோப் பொறுத்தபட்ட வில்லில் அம்பு..... உங்கள் வெற்று முதுவை குறி பார்க்கின்றது... அது உங்களுக்கு தெரியாது... இரண்டு அடி எடுத்து வைக்கும் போது உங்கள் பின் பக்க வெற்று முதுகு பக்கம் அம்பு தொலைத்து உங்கள் மார்பை கிழித்து வந்தால் எப்படி இருக்கும்....???

சரி மீறி உயிர் ஆசையில் தப்பிக்க நினைக்கும் போது ஒருவன் கிட்ட வந்து உங்கள் தலைக்கு பின்பக்கம் சுட்டு உங்கள் தலை சிதற வைத்து இறக்க வைத்தால் எப்படி இருக்கும்??? படிக்கும் போதே பேஜாரா இருக்கு இல்லை எனக்கும் அப்படித்தான்.... அப்ப அந்த பொண்ணுக்கு எப்படி இருந்து இருக்கும்....

(NAKED FEAR-2007) படத்தின் கதை என்ன?


டயானா (luca) குடும்ப கஷ்டத்தில் மெக்சிக்கோவுக்கு வேலை தேடிவருகின்றாள்... கயவன் ஒருவன் அவளை ஏமாற்றி பாரில் ஆடை அவிழ்த்து ஆடும் வேலையை அவளுக்கு கொடுக்கின்றான்...

வந்து இருக்கும் குடிமகன்களை குஷி படுத்தும் வேலை... அவளுக்கு அந்த வேலையில் உடன்பாடு இல்லை இருப்பினும் எஜென்டிடம் தன் பாஸ்போர்ட் மற்றும்தஸ்தாவேஜ்களை மீட்க அவள் அந்த வேலையை செய்கின்றாள்...

எப்படி பணம் சேர்த்தாலும் எஜென்டிடம் பாஸ்போர்ட் மீட்கும் அளவுக்கு பணம் கிடைக்கவில்லை... சரி பணத்துக்கு வேறு வழி என்ன என்று கேட்கும் போது அவள் ரூம்மெட் பகுதி நேரமாக விபச்சாரம் செய்தால்.... சீக்கிரம் பணம் சேர்த்து இந்த இடத்தில் இருந்து வெளியே போகலாம் என சொல்ல... அப்போதுதான் முதல் கஸ்டமரிடம் டயானா போக முடிவெடுக்கின்றாள் அதுவும் வேண்டா வெறுப்பாக...ஆனால் நடுவில் மனம் மாறி காரில் இருந்து இறங்கும் நேரம் அவளை வலுகட்டாயமாக அவளை கடுத்துகின்றான் ஒருவன்...அவ நேரம் அந்த சனியன் ஒரு சைக்கோ...


அந்த சைக்கோ டயனாவை ஊருக்கு ஒதுக்குபுறமான வீட்டில்...அழைத்து போய் மயக்க மருந்து கொடுத்து... காலில் உள்ள சதைகளை பிய்த்து விட்டு... உடம்பில் ஒட்டு துணியில்லாமல் பக்கத்தில் உள்ள பாலைவனத்தில் போட்டு விடுவான்....

மயக்கம் தெளியும் நேரத்துக்கு 5 நிமிடத்துக்கு முன் அந்த இடத்துக்கு போய் அந்த பெண்ணை வேட்டையாடுவதுதான் அவனுடைய ஹாபி... சாவடித்து அங்கேயே புதைத்து விடுவான்...அந்த பாலைவனம் அந்த சைக்கோவுக்கு அத்துபடி... எங்கு ஓடினாலும் தப்பிக்க முடியாது....

போலிஸ் ஸ்டேஷனில் மிஸ்சிங் கேஸ் எண்ணிக்கை அதிகம் ஆகின்றது... டயனா உடையில்லாமல் காலில் சதை பிய்ந்த வலியோடு அவள் தப்பித்தாளா என்பது மீதி கதை... திரையில் மிச்சத்தை பாருங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதல் காட்சியிலேயே முழு நிர்வாணம்.... கொலை எனும் போதே இது வேறுமாதிரி சைக்கோ படம் என்று முடிவு கட்டி விடுவோம்....

இந்த படம் வழக்கமான சைக்கோ படம் போல் இல்லாமல் இது சேசிங் படம்...

காலில் காயம் , உடம்பில் துணி இல்லை ஆனால் அந்த பெண் தன்னம்பிக்கையுடன் எப்படி தப்பிக்கின்றாள் என்பது படத்தின் அடிநாத சுவாரஸ்யம்....

என்னதான் பணம் பேர் புகழ் என்றாலும்... முழு நிர்வாணமாய் நடிக்க அதாவது ஓடவும் விழுந்து புரளவும்... பெரிய தைரியம் வேண்டும்....அந்த பெண்ணை எப்படி சம்மதிக்கவைத்து இருப்பார்கள் என்று தெரியவில்லை...

அந்த பாலைவனத்தில் காலில் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டும் ஓட வேண்டும்....என்றால் அது பெரிய விசயம்..

முதல் இரண்டு ஷாட்டுகளில் அந்த பெண்ணின் மார்பில் கவனம் பார்வையாளனுக்கு சென்றாலும்... அடுத்து ஷாட்டுகளில் பார்வையாளன் அந்த பெண்ணின் மீது காமம் இல்லாமல் பரிதாபத்தை ஏற்படுத்துவது லுக்காவின் நடிப்பையும் இயக்குனரின் கற்பனை திறனையே சாரும்....

வில்லன வில்லோடு துரத்த நிர்வாணமாய் அந்த பெண் ஓட எந்த நேரத்தில் அந்த பெண்ணின் மீது அம்பு தைக்குமோ என்ற பயம் உங்களுக்கு ஏற்படுத்தி இருப்பது இயக்குனரின் வெற்றி....இந்த படத்தின் வெற்றி..

இந்த படத்தின் போட்டோகிராபியை நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்... இவ்வளவு அழகாக அவுட்டோர் ஷாட்ஸ் எடுக்க முடியுமா? என்பது போலான காட்சிகள் அற்புதம்...

முதல் காட்சி பேர் போடும் போதே பிரேம் என்டிரியில் அமைதியான சமவெளியில் ஒரு பெண் நிர்வாண ஒடி வருவது நிமிர்ந்து உட்காரவைத்து விடும்...

பெரிய செலவு இந்த படத்துக்கு இல்லை இருந்தாலும் கவிதையாக காட்சிபடுத்தி இருக்கின்றார் ஒளிபதிவாளர்..


இந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம் அல்ல....

படத்தின் கிளைமாக்ஸ்ம் அந்த டுவிஸ்ட்டும் எற்கனவே நிறைய படங்களில் பார்த்தது என்றாலும் இந்த டுவிஸ்ட் இந்த படத்துக்கு பண்டிப்பாக பொறுந்தும்...

இந்த படத்தை தனியாக ஹோம் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்து நீங்கள் நிச்சயம் பயந்தே பார்ப்பீர்கள்

படத்தின் 18+ சென்சார் புகைபடத்துக்கு..
கிளிக்... 1
கிளிக்..2

படத்தின் டிரைலர்...





படக்குழுவினர் விபரம்..

Directed by Thom Eberhardt
Starring Joe Montegna
Release date(s) April 1, 2007
Running time 104 min.
Country United States
Language English

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

14 comments:

  1. thanks thala!
    its downloading now.

    ReplyDelete
  2. இதெல்லாம் எங்க இருந்து டவுன்லோட் பண்றீங்க....அந்த முகவரியப் போட்டா புண்ணியமாப் போகும்....

    ReplyDelete
  3. இதெல்லாம் எங்க இருந்து டவுன்லோட் பண்றீங்க....அந்த முகவரியப் போட்டா புண்ணியமாப் போகும்....

    ReplyDelete
  4. http://isohunt.com/torrents/?ihq=naked+fear

    try this link :)

    ReplyDelete
  5. ஜாக்கி @ நோ டவுன்லோடு விஜய் ஆனந்த்.

    வழக்கம் போல நல்லா எழுதீருகீங்க ஜாக்கி. மிச்சத படம் பார்துட்டு சொல்றேன் :-).

    ReplyDelete
  6. veetla yaarum illathappathaan intha padaththa paarkka mudiyumnu ninaikkiren

    ReplyDelete
  7. படம் எப்படி வேண்ணாலும் இருக்கட்டும்..!

    தலைப்பு இப்படித்தான் வைக்குறதா..? டூ மச்சு..!

    ReplyDelete
  8. ஒரு முழு படத்த படத்த பார்த்த feel கொண்டாந்திடிங்க....சூப்பர்

    ReplyDelete
  9. தலைப்பை பார்த்து கொஞ்சம் ஜெர்க் ஆகி போனேன் அண்ணே

    ReplyDelete
  10. படம் எப்படி வேண்ணாலும் இருக்கட்டும்..!

    தலைப்பு இப்படித்தான் வைக்குறதா..? three மச்சு..!

    ReplyDelete
  11. //http://isohunt.com/torrents/?ihq=naked+பியர்//
    Ji, this link contains more link, which link for this movie. Kindly assist, thanks

    ReplyDelete
  12. idhu pondra sirandha padangal(films) patri enaku auppungal... miga arumai.... nandri... my mail id- asathalram@gmail.com

    ReplyDelete
  13. பாக்யா மேட்டரால இப்படி படத்தை பத்தி தெரிஞ்சுது... இன்னிக்கே டோரன்ட்ல படத்தை வேட்டையாடிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner